Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிடம் இராணுவ உதவி கோரிய ஜெயவர்த்தன‌

 

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோர்ஜ் சுல்ட்ஸ் கூறியதன்படி இஸ்ரேலிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரத்தினை தனது மகன் ரவி ஜயவர்த்தனவுக்கு வழங்கினார் ஜெயார். இதன்படி அமைச்சரவை உறுப்பினரான சமரசிங்க இரகசியப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இஸ்ரேல் பயணமானார்.  அமெரிக்க அதிபர் ரீகனின் ஆலோசகர்களில் ஒருவரான  வேர்னன் வோட்டர்ஸின் மத்தியஸ்த்தத்துடன் ஆயுதப் பேரம்பேசலில் இஸ்ரேலும் இலங்கையும் ஈடுபட்டன. ரீகனின் அரசாங்கத்தில் மிக முக்கியவராக இருந்த வோல்ட்டர்ஸே இந்தியாவுக்கெதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வந்தார் என்று இந்திய அதிகாரிகள் உறுதியாக நம்பிவந்தனர். 

ஜெயார் எதிர்பார்த்த இராணுவ இயந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவருக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது. இந்திரா காந்தியின் இருவழிப்பாதையில் ஒன்றான பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை தனது இராணுவ இயந்திரத்தைக் கட்டியமைக்கக் கால அவகாசம் தரும் ஒரு சந்தர்ப்பமாக ஜெயார்  பாவிக்க விரும்பினார் . அதனால்த்தான் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று அன்று இந்தியாவால் கருதப்பட்ட மிதவாதிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று இந்திரா ஜெயாரை அழுத்தியபோது, அவரும் முழுமனதுடன் ஒத்துக்கொண்டார். 
அத்தருணத்தில் இலங்கை இராணுவம் "சிங்கள இராணுவம்" என்கிற முழுமையான மாற்றத்தைக் கண்டிருந்தது. அதன் ஒரே குறிக்கோள் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மட்டும்தான் என்பது எழுதாத சட்டமாக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் அடைந்த காலம்தொட்டு சிங்கள அரசுத்தலைவர்கள் இலங்கையின் நலன்கள் என்பது சிங்களவர்களின் நலன்களே என்று தொடர்ச்சியாகக் கருதிச் செயற்பட்டு வந்தனர். பேரினவாதச் சிந்தனையினால் ஆட்கொள்ளப்பட்ட அவர்கள் இலங்கை பெரும்பான்மையினருக்கு மட்டுமே சொந்தமானது எனும் நிலைப்பாட்டிலிருந்தே ஆட்சிசெய்துவந்தனர். 

இலங்கை இராணுவம் என்பது சிங்கள இராணுவமே எனும் நிலைமாற்றம் ஏற்பட்டது 1961 இல்த்தான். தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைதிவழியிலான சத்தியாக்கிரக ஆர்ப்பட்டத்தினை கொடூரமாக அடக்கியதன் மூலம் தமிழ் இளைஞர்களுடன் நேரடியான கைகலப்பில் இறங்கியிருந்தனர் இராணுவத்தினர். அவசரகாலச் சட்டம் எனும் போர்வையில் சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு அமைதிவழி ஆர்ப்பாட்டத்தை கடுமையான கரம் கொண்டு அடக்கியதுடன், சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர்களையும் கைதுசெய்திருந்தனர். இரவுநேர இராணுவ ரோந்தணி மீது இளைஞர்கள் கற்களை வீசியபோது துப்பாக்கிகளால்த் திருப்பித் தாக்கி இளைஞர்கள் சிலரை இராணுவத்தினர் அப்போது கொன்றிருந்தனர். அன்றிலிருந்து இராணுவத்திற்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையிலான கைகலப்பென்பது வழமையான நிகழ்வாக ஆகிப்போயிற்று. ஒருவர் மீதான மற்றையவரின் வன்மம் வளர்ந்துவரலாயிற்று. 

Link to comment
Share on other sites

  • Replies 580
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயாருடன் பேரம்பேசலில் ஈடுபட்ட அமெரிக்கா

ஜெயவர்த்தனவின் ஆட்சியின் கீழ் தமிழர் மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்க இராணுவத்தினரைத் தமிழ் இளைஞர்கள் இலக்குவைக்கத் தொடங்கினர். திருநெல்வேலித் தாக்குதலுலுக்குப் பழிவாங்கவென்று அரங்கேற்றப்பட்ட ஜூலைப் படுகொலைகளுட‌ன்  இலங்கை இராணுவம் என்பது சிங்கள இராணுவமே எனும் நிலைமாற்றம் பூரணப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், சிங்கள இராணுவம் எனும் நிலையிலிருந்து தமிழர்களுக்கு எதிரான இராணுவம் எனும் நிலையினை அது அடைந்தது. தமிழர்கள் இந்த இராணுவத்தை சிங்கள இராணுவம் என்பதையும் தம்மை ஆக்கிரமிக்க வந்த இராணுவம் என்பதையும் முழுமையாக உணர்ந்துகொண்டனர். இந்த இராணுவம் அந்நிய இராணுவம் என்று அவர்களால் அழைக்கப்பட்டும், நடத்தப்பட்டும் வந்தது.

ஜூலை இனக்கொலை நடந்த சில நாட்களின் பின்னர் பிரபல ஊடகவியலாளரான மேர்வின் டி சில்வா இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வாவிடம் ஜூலை இனக்கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் விளைவுகளில் எதனை நீங்கள் முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, "இராணுவம் அரசியலில் செலுத்தும் தாக்கமே" என்று அவர் பதிலளித்தார்.
இனப்பிரச்சினையில் சிங்கள மக்கள் சர்பாக இராணுவத்தைக் களமிறக்கிய‌ ஜெயார் , அதனை விரிவுபடுத்தி, நவீனமயமாக்கி தமிழர்களை முற்றாக வெல்லும் நிலைக்கு அதனை உயர்த்தவேண்டும் என்று உறுதிபூண்டார். அதற்கு அவருக்கு ஆயுதங்களும், பயிற்சிகளும் தேவைப்பட்டன. ஆகவே, அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் இதுகுறித்து தொடர்ச்சியாக அவர் அழுத்தி வந்தார்.

ஜெயவர்த்தனவுக்கு உதவ விரும்பிய அமெரிக்கா, சிங்கள மக்களை உற்சாகப்படுத்த உடனடியாக எதனையாவது செய்யவேண்டும் என்று கருதியது. இந்தியாவின் அழுத்தங்களையடுத்து சிங்களவர்கள் தமக்குத் தோழமையாக எவரும் இல்லையே எனும் மனநிலைக்கு வந்திருந்தனர். ஆகவேதான் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரான கஸ்பர் 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 1 ஆம் திகதி சிநேகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்தார். இந்த விஜயத்தின் நோக்கமே, "கலங்கவேண்டாம், அமெரிக்கா உங்களுடன் நிற்கிறது" எனும் செய்தியை சிங்களவர்களுக்குச் சொல்வதே. வோஷிங்க்டன்,  கஸ்பரின் விஜயத்தை பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்பாதபோதும் அவரது விஜயத்தின்போது இராணுவ உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில முடிவுகளும் எடுக்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்திருந்தனர். அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்தின் ஊடாக இஸ்ரேலினை இலங்கையினுள் கொண்டுவர அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. 
 
ஐப்பசியின் இறுதிப்பகுதியில் அமெரிக்க ராணுவ ஜெனராலன வேர்னன் வோல்ட்டர்ஸ் கொழும்பிற்கு  விஜயம் செய்திருந்தார். ரீகனின் பிரத்தியேகச் செய்தியுடன் இலங்கை வந்திருந்த அவர் ஜெயாருடன் முக்கியமான பேச்சுக்களில் ஈடுபட்டார். ஜெயாரின் வாழ்க்கைச் சரிதையை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹவார்ட் ஹிக்கின்ஸ் ஆகியோர் வோல்ட்டர்ஸின் இந்த விஜயம் குறித்து பின்னாட்களில் அவரை வினவியிருந்தனர். அபோது பேசிய வோல்ட்டர்ஸ், "நான் ஜெயாரை தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனும் இந்தியாவுடனும்  தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்படி கோரினேன். மேலும் இலங்கையின் இனப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்தால், இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம், இதில் இராணுவ‌த் தலையீடும் சாத்தியமாகலாம் என்ற அச்சத்தையும் அவரிடம் தெரிவித்தேன்" என்று கூறினார். 

ஆனால், வோல்ட்டர்ஸுக்கும் ஜெயாருக்கும் இடையே நடந்த கலந்துரையாடல்கள் குறித்து சில்வாவும், ஹிக்கின்ஸும் வேண்டுமென்றே குறிப்பிடத் தவறிய சில விடயங்களும் இருக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களின் முக்கிய கருப்பொருளே இஸ்ரேலிடமிருந்து இலங்கை இராணுவத்திற்கு எவ்வாறு ஆயுதங்களைத் தருவித்துக் கொள்வது என்பதும், இதற்கு கைமாறாக இலங்கை என்ன செய்யவேண்டும் என்பதும்தான். பேரம்பேசலில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவரான வோல்ட்டார்ஸ் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்தே இஸ்ரேலிடமிருந்தான ஆயுதக் கொள்வனவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார்,

1. இஸ்ரேலுக்கு இராஜதந்திர அந்தஸ்த்தினை வழங்குவதும் அதனை அங்கீகரிப்பதும்
2. வொயிஸ் ஒப் அமெரிக்காவுக்கான புதிய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்வது
3. அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளுக்கு திருகோணமலைத் துறைமுக எண்ணெய்க் குதங்களை குத்தகைக்குக் கொடுப்பதன் மூலம் துறைமுகத்தை அமெரிக்கச் செல்வாக்கின் கீழ் கொண்டுவருவது.
4. அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் பாவனைக்கு திருகோணமலைத் துறைமுகத்தினை வழங்குவது
என்பனவே அவையாகும். 
 

Edited by ரஞ்சித்
ளை
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது அமைச்சரவைப் பதவிகளைத் தக்கவைக்க இஸ்ரேல் தூதரகத் திறப்பினை அமைதியாக ஏற்றுக்கொண்ட முஸ்லீம் அமைச்சர்கள்

Sri Lanka-Israel

இரு அமெரிக்க உயர் அதிகாரிகளின் இலங்கைக்கான‌ அடுத்தடுத்த வருகை இந்தியாவுக்குச் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டவரான வோல்ட்டர்ஸின் வருகை இந்தியாவை ஒரே நேரத்தின் ஆத்திரப்படவும் கவலைப்படவும் வைத்திருந்தது. வோஷிங்டனின் இந்தியாவுக்கெதிரான கொள்கையின் பிதாமகனே அவர்தான் என்று இந்தியா நம்பியது. இந்தியாவுக்கெதிரான சதியொன்றில் இறங்குவதற்காகவே வோல்ட்டர்ஸ், ஜெயவர்த்தனவைச் சந்தித்திருக்கலாம் என்று அது கருதியது. ஆகவே, வோல்ட்டர்ஸின் விஜயம் தமக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யாது தவிர்த்துவிட்டது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றும் வோஷிங்கடனுக்கு தனது அதிருப்தியை அறிவித்தது. 

வோல்ட்டர்ஸின் வருகையின் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மிகுந்த செயற்றிரனுடன் காணப்பட்டது. அமெரிக்காவில் இருந்த இலங்கைத் தூதுவருக்கும் வோல்ட்டர்ஸுக்கும் இடையே முக்கியமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகத்தில் இஸ்ரேலுக்கான அலுவலகம் ஒன்றினை அமைத்தல், சிலாபம் மாவட்டத்தின் இரணவில பகுதியில் வொயிஸ் ஒப் அமெரிக்காவுக்கான அஞ்சல் நிலையம் ஒன்றினை உருவாக்குவது, திருகோணமலை எண்ணெய்க்குதங்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவது, திருகோணமலை துறைமுகப்பகுதியில், அப்பகுதியினால் வலம்வரும் அமெரிக்கக் கடற்படை வீரர்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற பல விடயங்கள் இப்பேச்சுகளின்போது கலந்துரையாடப்பட்டன. 

வோல்ட்டர்ஸ் மீண்டும் 1983  மார்கழியில் கொழும்பிற்கு விஜயம் செய்தார். தனது ஐப்பசி மாத விஜயத்தின்போது தான் கேட்டுக்கொண்ட விடயங்கள் தொடர்பாக ஜெயவர்த்தனவின் நிலைப்பாட்டினை அறிவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தினை வழங்குவதற்கு ஜெயார் இணங்கியிருந்தார். இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தை அரசு வழங்கினால்,  முஸ்லீம்களை அரசுக்கெதிராகத் திருப்பிவிட சிறிமா த‌லைமையிலான எதிர்க்கட்சிகள் முயல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டன.   1970 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிறிமாவின் அரசு உள்ளூர் முஸ்லீம்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவும், மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளின் ஆதரவினைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இஸ்ரேலுடனான சகல தொடர்புகளையும் அறுத்தெறிந்திருந்தது. 

இஸ்ரேலின் உளவு அமைப்புக்களில் ஒன்றான ஷின் பெத்தின் அதிகாரிகளை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இயங்கச் செய்வதனூடாக அவர்களின் உதவியினை இலங்கை இராணுவத்திற்குப் பெற்றுக்கொள்வதென்று ஒத்துக்கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தினை உருவாக்குவதில் வோல்ட்டர்ஸ் பெரும் பங்காற்றியிருந்தார். மேலும் இரணவில வொயிஸ் ஒப் அமெரிக்கா அஞ்சல் நிலையம், திருகோணமலை துறைமுக எண்ணெய்க்கிணறுகளின் குத்தகை, திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைக்கான பொழுதுபோக்கு அனுமதி  தொடர்பாகவும் சாதகாமன இணக்கப்பாடுகள் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எட்டப்பட்டிருந்தன. 

இலங்கையுடனான பேச்சுக்களில் பங்குபற்றியிருந்த இஸ்ரேலின் ஆசியாவுக்கான வெளிவிவகார அமைச்சின் உதவித் தலைவர் டேவிட் மதானி 1984 ஆம் ஆண்டு சித்திரையில் கொழும்பில் தமது அலுவலகம் ஒன்றினைத் திறக்கும் விடயமாக கொழும்பு வந்திருந்தார். சபை ஒத்திவைக்கப்படும் வேளை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை சபையில் போட்டுடைத்தார். அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி அவ்வுறுப்பினரின் கேள்விக்கான பதிலை வழங்கினார்.ஆனால், மழுப்பலாகவும், விடயத்தைத் திசைதிருப்பும் வகையிலுமே அவரது பதில் அமைந்திருந்தது. இஸ்ரேலின் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவரான லலித்தும் இஸ்ரேல் அலுவலகத்தை கொழும்பில் திறக்கும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

வைகாசி 3 ஆம் திகதி ஒப்பந்தத்தின் வரைபினை ஜெயவர்த்தன பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அமைச்சரவையில் இருந்த இரு முஸ்லீம்களான போக்குவரத்து அமைச்சர் எம்.எச். மொஹம்மட் மற்றும் வெளிவிவகார அமைச்சர் .சி.எஸ் ஹமீத் ஆகியோர் இதனை எதிர்த்தனர். இஸ்ரேலுடன் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்வதன் மூலம் உள்ளூர் முஸ்லீம்களுக்கு அரசு துரோகம் இழைத்திருப்பதாகவும் இலங்கைக்கு நட்பான மத்தியகிழக்கு முஸ்லீம் நாடுகளை அரசு அவமதித்திருப்பதாகவும் அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். 

Image57.gif 

எம்.எச். மொஹம்மட்

 

முஸ்லீம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதைக் காட்டிலும் தமிழ்ப் பிரிவினைவாதத்தினை அழிப்பதே தனது முக்கிய நோக்கம் என்று கூறிய ஜெயார், இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தினை எதிர்க்கும் எவரும் தாராளமாக அரசிலிருந்து வெளியேறலாம் என்றும் அறிவித்தார். ஆனால், தமது அமைச்சரவைப் பதவிகளை விட்டுக் கொடுக்க விரும்பாத இரு முஸ்லீம் அமைச்சர்களும் அதன்பின்னர் அமைதியாக இருந்துவிட்டனர்.

undefined

.சி.எஸ் ஹமீத்

ஜெயாரின் நெருங்கிய சகாக்களான லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் ஆகியோர் இவ்வொப்பந்தத்தினை முழுமையாக ஆதரித்து நின்றனர். 

கொழும்பில் இஸ்ரேலின் அலுவலகம் ஒன்றினைத் திறப்பதற்கு தமது எதிர்ப்பினைக் காட்ட சில முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர், ஆனால் ஜெயார் இவை எதையுமே சட்டை செய்யும் மனநிலையில் இருக்கவில்லை. "எனது உடனடித் தேவை தமிழ்ப் பயங்கரவாதத்தினை அழிப்பதே. ஆகவே, இஸ்ரேலின் தொடர்புகளை எதிர்க்கும் எவரும் பயங்கரவாதத்தினை ஆதரிப்பவர்களாகக் கருதப்படுவர்" என்று ஜெயார்  ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலளித்தார். இதனையடுத்து முஸ்லீம்கள் மெளனமாகிவிட்டனர்.

 மேலும், எதிர்க்கட்சிகளினால் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்திற்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பையும் ஜெயார் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து இவ்வொப்பந்தத்தினை எதிர்த்து கடுந்தொணியிலான அறிக்கை ஒன்றினை சிறிமா வெளியிட்டார்.

சிறிமாவின் அறிக்கை பின்வருமாறு கூறியது, 

"எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், இஸ்ரேலின் அலுவலகத்தை இந்த நாட்டிலிருந்து அகற்றிய முதலாவது அரசுத் தலைவர் என்கிற வகையிலும் இந்த அரசு செய்துகொண்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தினை நான் முற்றாக நிராகரிக்கிறேன். மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் அரபு - இஸ்ரேல் பிரச்சினையினை எமது நாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதன் மூலம் ஏற்கனவே இங்கு நடந்துவரும் வன்முறைகளுக்கு மேலதிகமாக மேலும் வன்முறைகள் உருவாகவே இது வழிவகுக்கும்".  

"இலங்கையின் நலன்கள் மீதும் அதன் மக்கள் மீதும் நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பட்டமான தாக்குதலை இன, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கையை நேசிக்கும் அனைவரும் எதிர்க்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

 

லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வாவும் இதனை எதிர்த்து அறிக்கையொன்றினை வெளியிட்டார். இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்திருப்பதன் மூலம் இலங்கையின் அணிசேராக் கொள்கையினை மீறி அமெரிக்க முகாம் நோக்கி இலங்கை சாய்ந்துவருவததாக அவர் குற்றஞ்சாட்டினார்.

"இராணுவ ரீதியில், இஸ்ரேலின் பலம் என்பது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பலமேயன்றி வேறில்லை" என்று அவர் கூறினார். 

ஆனால், இந்த எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி இஸ்ரேலின் அலுவலகம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 1984 ஆம் ஆண்டு வைகாசி 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. டேவிட் மதானி இந்த அலுவலகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இஸ்ரேல் அதன்  இலங்கைக்கான தூதுவராக மூத்த இராஜதந்திரி அக்ரெயில் கார்னியை ஐப்பசி 24 ஆம் திகதி நியமித்தது.  

பெரும்பாலான முஸ்லீம் நாடுகளின் இலங்கையின் இந்தச் செயலைக் கண்டித்தன. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டம் ஒன்றிற்கான தனது நிதியுதவியினை சவுதி அரேபியா நிறுத்தியது. மேலும் லிபியா, சிரியா, ஈரான், ஜோர்தான் ஆகிய நாடுகளும் தமது கடுமையான எதிர்ப்பினை ஜெயவர்த்தனவுக்குத் தெரிவித்திருந்தன.

முன்னணிப் பிரெஞ்சுப் பத்திரிக்கை ஒன்றிற்குப் பேட்டியளித்த இந்திரா காந்தி, இலங்கையின் இந்த முடிவிற்கான தனது ஆட்சேபணையினைத் தெரிவித்திருந்தார். தனது தென்கோடியில் இருக்கும் அயல்நாடு ஒன்று வெளிநாட்டுச் சக்திகளை உள்ளே கொண்டுவருவது தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலான விடயம் என்று அவர் கூறினார். "பயங்கரவாதத்தை ஒழிக்கவே வெளிச்சக்திகளை கொண்டுவருவதாக ஜனாதிபதி ஜயவர்த்தன கூறுகிறார். ஆனால், பயங்கரவாதத்தினை அழிக்கிறேன் என்கிற பெயரில் அவர் தமிழ் மக்களைப் படுகொலை செய்யாமலிருப்பார் என்று நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இலங்கைக்காக இந்தியாவை மிரட்டிய அமெரிக்க அதிகாரி வோல்ட்டர்ஸ்

Ambassador_Vernon_A._Walters.jpg

வொயிஸ் ஒப் அமெரிக்கா மற்றும் திருகோணமலைத் துறைமுகப் பாவனை தொடர்பான விடயங்களில் ஜெயாருக்கு அழுத்தம் கொடுத்த வோல்ட்டர்ஸ் அமெரிக்காவுக்குச் சார்பான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இரணவிலைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வொயிஸ் ஒப் அமெரிக்காவின் அஞ்சல் நிலையத்திற்காக ஜெயாரை அழுத்திப் பெற்றுக்கொண்ட வோல்ட்டர்ஸ், இதற்கான ஒப்பந்தத்தினை ஆவணி 1983 இல் கைச்சாத்திட்டார்நிலங்களை அமெரிக்காவின் பெயருக்கு மாற்றும் ஒப்பந்தம் 1983 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. இதன்படி 800 ஏக்கர்கள் நிலம் தொட்டுவ எனும் பகுதியில் இருந்தும் மீதி 200 ஏக்கர்கள் நாத்தாண்டிய பிரதேசத்தின் இரணவிலப் பகுதியில் இருந்தும் 1985 ஆம் ஆண்டு தை 15 ஆம் திகதி அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க வானொலி அஞ்சல் சேவையின் நிலையம் ஒன்றினை இரணவில பகுதியில் அமைப்பதனை இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் வெகுவாக எதிர்த்திருந்தன.

மேலும், திருகோணமலைத் துறைமுகப்பகுதியில் அமெரிக்க நலன்களை முன்னிறுத்திச் செயற்பட ஜெயவர்த்தனவுக்கு வோல்ட்டர்ஸ் மூலம் கடுமையான அழுத்தம் பிரியோகிக்கப்பட்டிருந்தது.


இலங்கை அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு மாசி மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு என்று அவற்றினை சர்வதேச அமைப்பொன்றிற்கு குத்தகைக்கு வழங்கியது. மூன்று தனியார் நிறுவனங்களான ஒரொலியம் சிங்கப்பூர், மேற்கு ஜேர்மனிய எண்ணெய்த் தாங்கி நிறுவனம் மற்றும் ட்ரேடின்பன்ட் எனப்படும் சுவிஸர்லாந்தை தலைமையமாகக் கொண்டியங்கும் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டே திருகோணமலை எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு எடுத்திருந்தது.

மேலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை ஜெயவர்த்தன அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்கிற ரொனால்ட் ரீகனின் கோரிக்கையினையும் வொல்ல்ட்டார்ஸ் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்திருந்தார். ஆனால், வோல்ட்டர்ஸின் இராணுவ திட்டத்தை மூடி மறைப்பதற்காக ரீகன் வெளியிட்ட செய்தியே அரசியல் தீர்வு வழங்கக் கோரும் நாடகம் என்பதனை எல்லோரும் அறிந்தே இருந்தனர். இந்தியாவின் உணர்வுகளை அமைதிப்படுத்தும் முகமாகவே ரீகன் அரசியல்த் தீர்வு குறித்த கோரிக்கையினை விடுத்திருந்தார். மேலும், இதே கருத்தினை இந்தியாவுக்குத் தெரிவிக்க வோல்ட்டர்ஸ் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு  சென்று வந்தார்.

அனால் வோல்ட்டர்ஸின் தேவைக்கதிகமான அழுத்தத்தினால் இந்தியா அமைதியடைவதற்குப் பதிலாக எரிச்சலடைந்தது என்றுதான் கூறவேண்டும். இந்தியாவின் தில்லியை வோல்ட்டர்ஸ் சென்று அடைவதற்கு முன்னரே அவரும் ஜெயவர்த்தனவும் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான முழுத் தகவல்களையும் இந்தியா அறிந்தே வைத்திருந்தது. தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆயுத மற்றும் பயிற்சி உதவிகள் குறித்த பல தகவல்களை அமெரிக்கா வோல்ட்டர்ஸ் ஊடாக‌ இலங்கைக்கு வழங்கியிருந்தது என்பதனை இந்தியா அறிந்துகொண்டது. மேலும் லலித் அதுலத் முதலியுடன் வோல்ட்டர்ஸ் பேசும்போது தமிழ்நாட்டிலும், உத்தர்பிரதேசத்திலும் இயங்கும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாமகள் தொடர்பான செய்மதிப்படங்களைத் தாம் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதுவும் இந்தியாவுக்குத் தெரியவந்திருந்தது. இந்தியா செல்லும் வோல்ட்டர்ஸ் அங்கே அவர்களை நன்றாக ஏமாற்றப்போகிறார் என்று லலித் அதுலத் முதலி தனது நண்பர்களுடன் பெருமையாகப் பேசிக்கொண்ட விடயமும் இந்தியாவுக்குத் தெரிந்திருந்தது. இந்த விடயங்களையெல்லாம் தில்லியின் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பிவைத்தவர் கொழும்பிலிருந்த இந்தியத் தூதுவர் சத்வால் என்பது குறிப்பிடத் தக்கது.

தில்லிக்கான தனது விஜயத்தின் நோக்கத்தினை எப்படியாவது அடைந்துவிட வோல்ட்டர்ஸ் முயன்றார். அங்கு வெளிவிவகாத்துறை அதிகாரிகளுடன் பேசிய அவர், ஜெயவர்த்தன எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து இந்தியா கரிசணை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜெயவர்த்தனவை நேர்மையான மனிதர் என்று காட்ட முயன்ற வோல்ட்டர்ஸ், ஒருபுறம் சிங்கள இனவாதிகளை எதிர்கொள்ளும் ஜெயார் இன்னொருபுறம் தமிழ் தீவிரவாதத்தினை எதிர்கொண்டு நிற்பதாகக் கூறினார். ஆனால், வோல்ட்டர்ஸினால் வெல்லம் தடவப்பட்டுக் கொடுக்கப்படும் குளிசையை இந்திய அதிகாரிகள் உட்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. இதனையடுத்து தனது வழமையான வெருட்டும் தொனியைக் கையாண்டார் வோல்ட்டர்ஸ். 

இந்திய அதிகாரிகளிடம் பேசிய வோல்ட்டர்ஸ், தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு பயிற்சியளிப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரினார். அதற்குப் பதிலளித்த இந்திய அதிகாரிகள் தாம் தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சிகள் எதனையும் வழங்கவில்லை என்று மறுத்தனர். அதற்குப் பதிலளித்த வோல்ட்டர்ஸ் இந்தியாவில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கான பயிற்சி முகாம்கள் இயங்குவதைத் தாம் செய்மதிகள் மூலம் படம் பிடித்துவைத்திருப்பதாகவும், இந்தியா உடனேயே இவற்றினை மூடாவிட்டால் சர்வதேச செய்திச் சேவைகளுக்கு தாம் அவற்றினை வெளியிடப்போவதாகவும், இது இந்தியாவை சர்வதேசத்தின்முன்னால் தர்மசங்கட‌மான நிலைக்குக் கொண்டுசெல்லும் என்றும்  மிரட்டினார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பாதகமான சூழ்நிலையினையே இலங்கைக்கு அது ஏற்படுத்தியது.

Image58.gif

அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஜோசப் அடெபோ, நியு யோர்க் மேயர் எட் கொச் மற்றும் சபாநாயகர் டிப் நீல்.

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளும், காங்கிரஸ் உறுப்பினர்களும் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்வது ஜெயவர்த்தனவைப் பலப்படுத்தவே என்று இந்தியா சந்தேகம் கொள்ளத் தொடங்கியது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை கமிஷனின் தலைவர் ஜோசப் அடெபோ தலைமையில் ஆறு அமெரிக்க செனட்டர்கள் 1984 ஆம் ஆண்டு தை மாதம் 12 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தத் தூதுக்குழு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென்று இலங்கைக்கு உடனடியாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு அமெரிக்க அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. மேலும் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் சகல வசதிகளுடனும் கூடிய தாக்குதல்க் கடற்படைக் கப்பல் ஒன்றினைத் தமக்குத் தருமாறு இலங்கை வேண்டிக்கொண்டபோது, அதனைச் சாதமான முறையில் பரிசீலிக்கவும் அத் தூதுக்குழு ஒத்துக்கொண்டது. இக்குழுவிற்கு மேலதிகமாக ஆசிய ‍- தென்னாசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் மேர்பியும் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் அவர்களே உங்கள் தொடர் செயற்பாட்டிற்கு நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பாதுகாப்பு அமைச்சினை உருவாக்கிய ஜெயவர்த்தன‌

lalith-in-hk.jpg

தமிழ் இனக்கொலையில் முன்னின்று செயற்பட்ட லலித் அதுலத் முதலி

 

ஜெயவர்த்தனவின் இராணுவ முஸ்த்தீபுகளுக்கு நிகராக தமிழ்ப்போராளிகளும் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டு வந்தனர். 1983 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியளவில் வட இந்தியாவுக்குச் சென்ற முதலாவது தொகுதிப் போராளிகள் தமது மூன்றுமாத காலப் பயிற்சியை நிறைவுசெய்திருந்தனர். இரண்டாவது தொகுதியினருக்கான பயிற்சிமுகாம்கள் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அமைக்கப்பட்டன. இந்திய உளவுத்துறை ரோ அதிகாரிகளை பயிற்சியாளர்களாகக் கொண்டு தமிழ்நாட்டு முகாம்களை போராளிகளே இயக்கிவந்தனர். பங்களூரில் இயங்கிய புலிகளின் முகாமினை  ரோ அதிகாரிகள் கவனித்துக்கொண்டனர்.

காத்தான்குடி மக்கள் வங்கிக் கொள்ளை

இந்தியாவில் பயிற்சியினை முடித்துக்கொண்ட போராளிகள் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வந்து சேர்ந்துகொண்டிருந்த தறுவாயில், சிறிய அமைப்பாக பனாகொடை மகேஸ்வரனின் தலலைமையில் இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவம் 1984 ஆம் ஆண்டு தை மாதத்தில் தாக்குதல் ஒன்றினை நடத்தியது. காத்தான்குடியில் இயங்கிவந்த மக்கள் வங்கியின் அலுவல்கள் ஆரம்பித்த காலை 9 மணிக்கு ஆறு போராளிகள் உள்நுழைந்தனர். முஸ்லீம் முகாமையாளரைப் பணயக் கைதியாகப் பிடித்துக்கொண்ட அவர்கள், ஏனைய பணியாளர்களை வங்கியின் அறையொன்றினுள் அடைத்துவிட்டு வங்கியில் இருந்த இரண்டரை லட்சம் பணம் மற்றும் 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். இதுவரை வடக்கில் மட்டுமே இயங்கிவந்த போராளி அமைப்புக்கள் இச்சம்பவத்தின் மூலம் கிழ்க்கிற்கும் தமது நடவடிக்கைகளை விஸ்த்தரித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த அரசு கலவரமடைந்தது. . அதுவரை இலங்கையில் இடம்பெற்றிருந்த வங்கிக்கொள்ளைகளில் இந்த கொள்ளைச்சம்பவத்திலேயே அதிகளவான பணமும் நகைகளும் திருடப்பட்டிருந்தன. காத்தான்குடி பல பணக்கார முஸ்லீம் வியாபாரிகளின் வாழிடமாகத் திகழ்ந்தது.

வங்கிக் கொள்ளையினையடுத்து தேடுதலில் இறங்கிய பொலீஸாரும், இராணுவத்தினரும் திருடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியினை பிளாத்திக்குப் பைகளில் சுற்றியபடி வீடொன்றில் இருந்து மீட்டனர். ஆனாலும், மீதி நகைகளோடு யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற பனாகொடை மகேஸ்வரனும் அவரது சகாக்களும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். தன்னிடம் இருந்த பணத்தினைக் கொண்டு பனாகொடை மகேஸ்வரன் தமிழ்நாடு - கேரளா எல்லையில் தனது அமைப்பிற்கென்று பயிற்சி முகாம் ஒன்றினைத் திறந்தார். விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னர் வரை இங்கிலாந்தில் பொறியியலாளராகக் கல்விகற்று வந்த மகேஸ்வரன், தொழிநுட்பத்தில் சிறந்த அறிவைப் பெற்றிருந்தவர். தனது கல்வியறிவைப் பயன்படுத்தி சில கைத்துப்பாக்கிகளை தனது முகாமில் செய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். 

சமூக விரோதிகளுக்குப் புலிகளால் வழங்கப்பட்ட மரண தண்டனைகள்

மகேஸ்வரனின் தமிழ்த் தேசிய இராணுவம் வங்கிக்கொள்ளையினைப் பயன்படுத்தி மக்களிடம் தம்மைக் காட்டிலும் பிரபலமாவதை புலிகள் விரும்பவில்லை. ஆகவே, மக்களின் காவலர்கள் தாமே என்று காட்டுவதற்காக காத்தான்குடி வங்கிக்கொள்ளை இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட ஆறுபேருக்குப் புலிகள் மரண தண்டனை நிறைவேற்றினர்.

இவர்களுள் ஐவர் மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க ஆறாமவரின் தலை வெட்டப்பட்டிருந்தது. மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுடப்பட்டவர்களின் தலைகளில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருந்தது. அவர்களின் உடல்களுக்கருகில் கையால் எழுதப்பட்ட அறிவித்தல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. "நீங்கள் ஒரு துரோகி. துரோகிகளுக்கான எமது தண்டனை இதுதான்" என்று அது கூறியது.

மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்ட ஐவரும் குற்றவாளிகள். ஆறாமவர் பாலியல்ப் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பலமுறை தம்மைத் திருத்திக்கொள்ளுமாறு புலிகளால் எச்சரிக்கை விடப்பட்டே வந்தது. ஆனால், இவர்கள் அறுவரும் அதனைச் சட்டை செய்யவில்லை. புலிகள் குற்றவாளிகளுக்குப் பொதுவான எச்சரிக்கை ஒன்றினை முன்னர் வெளியிட்டிருந்தனர். பலர் அதனை கிண்டலடித்து உதாசீனம் செய்திருந்தனர். 

புலிகள் வெளியிட்ட துண்டுப் பிரசுரம், "சமூக விரோதச் சக்திகளை துடைத்தெறிவோம்" என்கிற தலைப்பில் வெளியாகியிருந்தது. "விடுதலைப் போராட்டம் சமூக விரோதச் செயற்பாடுகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கக் கூடாது. விடுதலைப் போராளிகள் மக்களைக் குற்றங்களில் இருந்தும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும் காப்பவர்களாகத் திகழ வேண்டும்" என்று கூறியதுடன் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் அவற்றினைக் கைவிட்டுத் திருந்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது. இப்பிரசுரத்தின் இறுதிப்பகுதியில், "சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவோர் தம்மைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்" என்று கூறியிருந்தது.

சங்கிலியன் பஞ்சாயத்து முறையினை அறிமுகப்படுத்திய புலிகள்

1982 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுப் போயிருந்தது. ஆனைக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்களையடுத்து பொலீஸார் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்தனர். சுமார் 16 சிறிய பொலீஸ் நிலையங்கள் பொலீஸாரால் மூடப்பட்டன. வீதி ரோந்துக்களில் மட்டுமே தமது நடவடிக்கைகளைப் பொலீஸார் சுருக்கிக் கொண்டனர். இதுகூட இந்தியாவில் பயிற்றப்பட்ட போராளிகள் யாழ்க்குடாநாட்டில் நடமாடத் தொடங்கியடதையடுத்து குறைவடையத் தொடங்கியது. கண்ணிவெடி மற்றும் பதுங்கித் தாக்குதல்களால் பொலீஸார் மிகுந்த அச்சம் அடைந்து காணப்பட்டனர். ஆகவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருந்த இந்தச் சூழ்நிலையினை சமூக விரோதிகள் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். களவுகள், தெருச் சண்டியர்களின் அடாவடிகள், பாலியல் பலாத்காரங்கள் என்பன யாழ்க்குடாநாட்டில் பரவலாக ஆங்காங்கே  நடந்துவரலாயின. ஆகவே, இவற்றிலிருந்து மக்களைக் காப்பற்ற புலிகள் முடிவெடுத்தனர்.

புலிகளின் "மின்கம்பத் தண்டனை" யினை மாற்றியக்கங்கள், குறிப்பாக .பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் ஆகியவை கடுமையாக விமர்சித்திருந்தன. புலிகள் எல்லைமீறிச் செயற்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஒரு ஆணவம் கொண்ட அரசுபோல விடுதலைப் போராளிகள் நடந்துகொள்ளக் கூடாது என்று அவர்கள் கூறினர். ஜனநாயகமும், சட்டம் ஒழுங்கும் புனிதமானவை என்று அவை வாதிட்டன.

தம்மீதான விமர்சனங்களுக்கு புலிகள் ஒரு அறிக்கை மூலம் பதில் வழங்கியிருந்தனர்.

 "நாம் மிகவும் ஆபத்தான சமூக விரோதிகளையே களையெடுத்தோம். இவர்கள் குற்றவாளிகள் மட்டுமல்லாது துரோகிகளாகவும் செயற்பட்டு வந்தவர்கள். அரசின் முகவர்களாக செயற்பட்டு வந்த இவர்கள், மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பல இடைஞ்சல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். மிகவும் கொடூரமான இக்குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்களின் குற்றச் செயல்களுக்காக நீண்ட விசாரணைகளை மேற்கொண்டத‌ன் பின்னரே அவர்களின் குற்றங்களுக்கு ஏற்றவகையில் தண்டனை வழங்கினோம். கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கப்பட ஏனையவர்களைக் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்திருக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது.

சங்கிலியன் பஞ்சாயம் என்கிற பெயரில் மக்கள் தீர்ப்பாயங்களையும் புலிகள் உருவாக்கினர். இந்து நீதித்துறையின் பாரம்பரியத்தில் கிராம மட்டத்தில் நிலவிவந்த பஞ்சாயத்து முறையின் அடிப்படியிலேயே இவை உருவாக்கப்பட்டன. பொதுவான இடம் ஒன்றில் கூடும் கிராமத்தின் முதியவர்கள், வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்குவர். யாழ்ப்பாணத்தின் இறுதி மன்னனான சங்கிலியனின் பெயரினை புலிகள் இந்தக் கிராமப் பஞ்சாயத்து முறைக்குச் சூட்டினர். வடக்குக் கிழக்கில் புலிகள் இன்று ( 2005) நடைமுறைப்படுத்திவரும் நீதிமன்றங்களின் ஆரம்பப் படியே "சங்கிலியன் பஞ்சாயத்து" என்பது குறிப்பிடத் தக்கது.

புலிகளை தமது காவலர்களாகப் பார்க்கத் தலைப்பட்ட தமிழ் மக்கள்

எதிர்பார்த்ததைப் போன்றே சமூக விரோதிகளுக்கான மரண தண்டனை பலனைக் கொடுத்தது. புலிகளின் செயலினை மக்கள் வரவேற்றிருந்தனர். புலிகளின் போராளிகளைத் தமது காவலர்கள் என்னும் நிலைக்கு மக்கள் உயர்த்தியிருந்தனர். மக்கள் மனதில் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தினை மேலும் மேம்படுத்தும்படி பிரபாகரன் தனது போராளிகளிடம் கோரினார். "மக்கள் உங்களைத் தமது காவலர்களாக நினைக்கும் சூழ்நிலையினை உருவாக்குங்கள்" என்பதே பயிற்சி முகாம்களிலும், வகுப்புகளிலும். பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வுகளிலும் தனது போராளிகளுக்கு பிரபாகரன் கற்றுக்கொடுத்த மந்திரமாகிப் போனது.

இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குதல்

தமிழர் தாயகத்தில் இராணுவத்தினதும் பொலீஸாரினதும் நடமாட்டத்தினை மட்டுப்படுத்துவதும், தமிழ் மண்ணை அரசின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதுமே விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக போராளிகளால் கருதப்பட்டது. இதனை அவர்கள் மண்மீட்புப் போர் என்றே அழைத்தனர். இந்த இலக்கினை அடைவதில் அனைத்துப் போராளிக் குழுக்களும் இணைந்து செயற்படுவதென்று முடிவெடுத்தனர். அதன்படி புலிகளே முதலாவது நடவடிக்கையில் இறங்கினர். 1984 ஆம் ஆண்டு மாசியில் குருநகர் பகுதியில் இருந்த இராணுவ முகாம் கட்டடம் மீது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதோடு அதேவருடம் பங்குனி 20 ஆம் திகதி இரு விமானப்படை வீரர்களையும் கொன்றனர்.

குருநகர் முகாமில் தங்கியிருந்த இராணுவத்தினர், ஆள்ப்பற்றாகுறையினால் 1983 ஆம் ஆண்டு ஜூலைப் படுகொலைகளின் பின்னர் பலாலி முகாமுக்குத் தம்மை மாற்றியிருந்தனர். அவர்கள் வெளியேறிச் சென்றபின்னர் இக்கட்டடங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. ஆனால், 1984 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் இராணுவத்தினர் மீண்டும் குருநகர் முகாமிற்குள் நுழையப்போகிறார்கள் என்கிற வதந்தி பரவத் தொடங்கியது. ஆகவே, இதனைத் தடுக்கும் முகமாக இக்கட்டடங்களைப் புலிகள் தகர்த்திருந்தனர்.

விமானப்படையைச் சேர்ந்த இரு வீரர்களான ரொகான் ஜயசேகரவும், சரத் அனுரசிறியும் யாழ்ப்பாணத்திலிருந்து கோண்டாவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த  இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் பயணமாகிக்கொண்டிருந்தனர். இவர்கள் பேரூந்தில் பயணமாவதை அறிந்துகொண்ட புலிகள் கோண்டாவிலுக்கு அண்மித்த பகுதியில் பேரூந்து வரும்போது அதனை மறித்து உள்ளிருந்த ஏனைய பயணிகளை கீழே இறங்கச் சொல்லிவிட்டு இரு விமானப்படை வீரர்களையும் சுட்டுக் கொன்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை இனப்படுகொலைக்குப் பின்னர் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மேல் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத் தக்கது. 

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தறுவாயில் கோண்டாவிலில் விமானப்படையினர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்த செய்தி வந்திருந்தது. இக்கூட்டத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராக அமைச்சர் அதுலத் முதலியே செயலாற்றினார். கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் இத் தாக்குதல் சம்பவம் குறித்து லலித் அதுலத் முதலி குறிப்பிட்டார். "புலிப் பயங்கரவாதிகள் அனைத்துக் கட்சி மநாட்டைக் குழப்ப முயல்கின்றனர். இனப்பிரச்சினைக்குச் ச‌மாதானமான முறையில் தீர்வொன்று காணப்படுவதை அவர்கள் எதிர்க்கின்றனர். இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்று காணப்பட வேண்டுமானால் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

527.ht2_.jpg

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் 2004

டெயிலி நியூஸ் பத்திரிக்கை சார்பாக சர்வகட்சிக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். மாநாடு முடிந்ததன் பின்னர் என்னுடன் பேசிய லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவே புலிப் பயங்கரவாதிகள் குறித்துப் பேசுமாறு தன்னிடம் கூறியதாகவும், அவர்கள் அழிக்கப்படுவது குறித்த அறிவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அவர் தன்னைக் கோரியதாகவும் கூறினார். நான் லலித்தின் வேண்டுகோளினை ஆசிரியர் மணிக் சில்வாவிடம் கூறினேன். அவர் அதனை பக்கச் செய்தியாக பத்திரிக்கையில் வெளியிட்டார்.

அன்றைய தலைப்புச் செய்தியும் நான் எழுதியது தான். அது ஜெயவர்த்தனவினால் அமைக்கப்படப் போவதாகக் கூறப்பட்ட இரு குழுக்கள் பற்றியது. அதுகுறித்து பின்னர் பார்க்கலாம்.

தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பாதுகாப்பு அமைச்சராகவும் ஜெயாரினால் முடிசூடப்பட்ட லலித் அதுலத் முதலி

மூன்று நாட்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு, பங்குனி 23 ஆம் திகதி, வர்த்தகம் மற்றும் கப்பற்றுறைக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் லலித் அதுலத் முதலிக்கு தேசியப் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பதவியும், உதவிப் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பதவியும் மேலதிகமாக ஜெயாரினால் வழங்கப்பட்டது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரஞ்சித் said:

குருநகர் முகாமில் தங்கியிருந்த இராணுவத்தினர், ஆள்ப்பற்றாகுறையினால் 1983 ஆம் ஆண்டு ஜூலைப் படுகொலைகளின் பின்னர் பலாலி முகாமுக்குத் தம்மை மாற்றியிருந்தனர். அவர்கள் வெளியேறிச் சென்றபின்னர் இக்கட்டடங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. ஆனால், 1984 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் இராணுவத்தினர் மீண்டும் குருநகர் முகாமிற்குள் நுழையப்போகிறார்கள் என்கிற வதந்தி பரவத் தொடங்கியது. ஆகவே, இதனைத் தடுக்கும் முகமாக இக்கட்டடங்களைப் புலிகள் தகர்த்திருந்தனர்.

ரோந்து வந்த ராணுவத்தினர் மீசாலையில் வைத்து எனது அண்ணனை கைது செய்து குருநகர் முகாம் கொண்டு போய் எதுவித துன்புறுத்தல்களும் இன்றி அன்றிரவே விடுவித்துவிட்டனர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன துட்டகைமுனுவாக தன்னை வரிந்துகொண்ட லலித் அதுலத் முதலி

539.ht1_.jpg

தமிழ் மன்னனான எல்லாளனைக் கொல்லும் சிங்கள மன்னன் துட்டகைமுனுமகாவம்சக் கதை

 1984 ஆம் ஆண்டு பங்குனி 23 ஆம் திகதி வர்த்தகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சராகவிருந்த லலித் அதுலத் முதலி, தேசியப் பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பாதுகாப்பு அமைச்சராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்டார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியும், சட்டத்தரணியுமாகவிருந்த லலித், ஜெயவர்த்தனவுக்குப் பின்னர்  ஜனாதிபதியாகும்ம் கனவிலும் இருந்தவர். ஆகவே, தேசியப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஆகிய பதவிகள் அவரைத் தேடி வந்தபோது, தனது கனவினை அடையும் பாதையில் ஒரு மைல்க்கல் என்று அதனை இருகரங்களாலும் ஏற்றுக்கொண்டார். பதவியேற்றவுடன் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்த அவர், தமிழ்ப் பிரிவினைவாதத்தினை முற்றாக அழிப்பேன் என்று சிங்களவர் முன் சபதம் எடுத்ததோடு மகாவம்சம் எனும் சிங்களவர்களின் சரித்திரக் கதையில் தமிழ் மன்னனான எல்லாளனை சூழ்ச்சியால் வீழ்த்தி, இலங்கை முழுவதையும் சிங்கள ஆதிக்கத்தினுள் கொண்டுவந்த மன்னனான துட்ட கைமுனிவின் புதிய‌ அவதாரம் தானே என்றும் எண்ணிச் செயற்பட்டு வந்தார். 

தமிழர்களுக்கு எதிரான ஜெயவர்த்தனவின் அரசியல் செயற்பாடுகளை சரியான முறையில் அறிந்துகொள்வதற்கு 80 களில் சிங்கள அரசியல் பயணித்த வழி பற்றி புரிந்துகொள்வது அவசியமானது.

1988 ஆம் ஆண்டு நிறைவிற்கு வரவிருந்த ஜெயவர்த்தனவின் இரண்டாவது பதவிக்காலத்தின் பின்னர் ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றுவதற்கு ஜெயாரின் சகாக்களான லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ரணசிங்க பிரேமதாச ஆகியோர் தனித்தனியே முயற்சித்துக்கொண்டிருந்தனர். ஆகவே, தெற்கில் சிங்கள மக்கள் முன்னிலையில் தாமே சிறந்த சிங்களத் தேசியவாதத் தலைவர் என்று காட்டவேண்டிய தேவை அவர்கள் மூவருக்கும் இருந்தது. இது, அவர்களுக்கிடையே போட்டியினை உருவாக்கியிருந்தது.  

தமிழர்களின் கனவான தமிழீழத் தனிநாட்டினை உடைக்கவும், தாயகக் கோட்பாட்டிற்கான சாத்தியப்பாட்டினை திட்டமிட்ட நில அபகரிப்புக்கள் மூலம் இல்லாதொழிக்கவும் ஜெயார் மேற்கொண்டுவந்த மூன்றாவது வழித் திட்டத்தின் நடத்துனராக காமிணி திசாநாயக்க செயற்பட்டு வந்திருந்தார். பிரேமதாச தமிழ் மக்களுக்கான சமஷ்ட்டி அடிப்படையிலான சுயாட்சிப் பிராந்தியக் கோரிக்கையினைச் சிங்களத் தரப்பில் முற்றாக எதிர்க்கும் தலைவராக தன்னை முன்னிறுத்து வந்தார். ஜெயவர்த்தவினால் தமிழ்ப் பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை இராணுவ ரீதியில் அழிக்கும் செயல்வீரனாக லலித் அதுலத் முதலி தனது புதிய பதவிமூலம் சிங்களவர்கள் முன் வலம்வரத் தொடங்கினார்.

யாழ்ப்பாணத்தில் லலித் நடத்திய பாதுகாப்புக் கூட்டமும் அவருக்கு அதிர்ச்சி வைத்தியமளித்த புலிகளும் 

பாதுகாப்பு அமைச்சகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவுடன், முப்படைப் பிரதானிகளையும், பொலீஸ் மாதிபரையும் சந்திக்க முக்கிய பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டினார் லலித். அக்கூட்டத்தினை செய்தியாளர் என்கிற முறையில் பதிவுசெய்ய என்னையும் அவர் அழைத்திருந்தார். கூட்டம் முடியும் தறுவாயில் பேசிய லலித், "நாளை நாம் யாழ்ப்பாணம் போகிறோம். ஜனாதிபதி எனக்கு இரண்டு வேலைகளைத் தந்திருக்கிறார். முதலாவது, பயங்கரவாதத்தினை முற்றாகத் தோற்கடிப்பது. இரண்டாவது, சம்பிரதாய இராணுவமாக இயங்கும் எமது இராணுவத்தை போரிடும் சக்தியாக உருமாற்றுவது. கொழும்பில் குந்தியிருந்துகொண்டு இவற்றினை எம்மால் சாதிக்க முடியாது. நாம் போர்க்களத்திற்குச் சென்றாக வேண்டும். நாளை காலை யாழ்ப்பாணத்திலிருந்து, பயங்கரவாதத்தினை முறியடிக்கும் திட்டத்தினை நாம் வகுக்கப்போகிறோம்" என்று கூறினார். 

யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அதுலத் முதலியுடன் செல்லும் பத்திரிக்கையாளர் குழாமில் இருந்து நான் விலக்கிக்கொள்ள  முடிவெடுத்தேன். லலித் அதுலத் முதலியின் மற்றைய அமைச்சான வர்த்தகம் மற்றும் கப்பற்றுறை பற்றிய செய்திகளையும், கொழும்பில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்சி மாநாட்டின் செய்திகளையும் நான் கவனித்துக்கொள்கிறேன் என்று அவரிடம் கூறினேன். தமிழ்ச் செய்தியாளன் என்கிற வகையில் இராணுவத்தினரால் நான் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கட வாய்ப்பிருக்கிறது என்றும், குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்கிற வகையில் எனக்கு உயிர் அச்சுருத்தலும் ஏற்படலாம் என்றும் நான் அவரிடம் கூறினேன். நான் கூறிய காரணங்களை அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். "சபா, நீங்கள் கூறுவது சரிதான்" என்று என்னிடம் கூறினார் அவர். அவர் மீதான மரியாதை எனக்கு இன்னும் அதிகமானது.

ஜெயவர்த்தன ஜெனரல் சேபால ஆட்டிகலவை பாதுகாப்புச் செயலாளராகவும் தனது புத்திரன் ரவி ஜயவர்த்தனவை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்திருந்தார்.

1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி காலை யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார் லலித் அதுலத் முதலி. சேபால ஆட்டிகல, ரவி ஜயவர்த்தன, முப்படைகளின் பிரதானிகள் மற்றும் பொலீஸ் மாதிபர் ஆகியோர் லலித்துடன் யாழ்ப்பாணம் சென்றனர். யாழ்ப்பாண மாவட்ட‌த்தில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த உயர் இராணுவ மற்றும் பொலீஸ் அதிகாரிகள் அங்கு நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டனர். மாநாடு ஆரம்பித்த 30 நிமிடங்களில் பொலீஸ் மாதிபரிடம் இரகசியமாகப் பேசிய யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர், பருத்தித்துறையில் ஒரு பொலீஸ் சார்ஜண்ட்டும் இரு கொன்ஸ்டபிள்களும் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறினார். அதனை லலித்திடம் தெரிவித்தார் பொலீஸ் மாதிபர். செய்தியைக் கேட்டதும் லலித் அதிர்ச்சியடைந்தார்.

புலிகள் இந்தத் தாக்குதலை மிகக் கவனமாகத் திட்டமிட்டிருந்தனர். லலித் அதுலத் முதலிக்கு செய்தியொன்றினைச் சொல்வதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. புலிகளின் தாக்குதல்ப் பிரிவைச் சேர்ந்த சில போராளிகள் பொலீஸார் வரும்வரையில் காத்திருந்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். தாக்குதலில் ஒரு சார்ஜண்ட்டும், இரு கொன்ஸ்டபிள்களும் அவ்விடத்திலேயே கொல்லப்பட இன்னும் இரு கொன்ஸ்டபிள்களும் பொலீஸ் சாரதியும் காயப்பட்டனர். தாக்குதலின் பின்னர் பொலீஸாரின் ஆயுதங்களைப் புலிகள் எடுத்துச் சென்றிருந்தனர். 

சுண்ணாகம் சந்தைப் படுகொலை

chunnakam.jpg

இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதாவது பங்குனி 26 ஆம் திகதி விமானப்படை வீரர் ஒருவர் சுன்னாகத்தில் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பங்குனி 28 ஆம் திகதி தமது சகாவின் கொலைக்கு விமானப்படையினர் பழிவாங்கும் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரிய மரக்கறிச் சந்தையான சுண்ணாகம் சந்தைக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ட்ரக்கிலும் வந்த விமானப்படையினர் சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு சுன்னாகம் பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றனர். சற்று நேரத்தின் பின்னர் அங்கு திரும்பிவந்த அவர்கள் சந்தைப்பகுதியில் குழுமியிருந்த மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். 

விமானப்படையினர் துப்பாக்கிச் சூட்டில் 9 அப்பாவிகள் கொல்லப்பட மேலும் 50 பேர்வரை காயப்பட்டனர். சந்தையின் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த மணியம் என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணியம் அவர்கள் அவ்விடத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.

 539.ht3_.gif

யாழ்க்குடாநாடும் அயலில் உள்ள தீவுகளும்

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கஜபா படைப்பிரிவு மீது யாழ்ப்பாணம் ஆஸ்ப்பத்திரி வீதியில்  நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதல்


 புலிகளும் ஏனைய போராளி அமைப்புக்களும் பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் நிலையினை அடைந்திருந்தனர். சுன்னாகத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்குப் பதிலடி கொடுக்க புலிகள் முடிவெடுத்தனர். ஆகவே, கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இயங்கும் புகையிரதச் சேவைக்குப் பாதுகாப்பு அளிக்கவென புதிதாக ஆரம்பிக்கப்பட்ட க‌ஜபா படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு பிளட்டூன் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. யாழ்தேவி புகையிரதத்திற்குப் பாதுகாப்பளிக்கும் இராணுவத்தினர், புகையிரதம் யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் தரித்து நின்ற பின்னர்,  அங்கிருந்து இராணுவ வாகனத் தொடரணியொன்றிலேயே பலாலி நோக்கிச் செல்வது வழமையாக இருந்து வந்தது.  யாழ்தேவி யாழ்ப்பாணத்தை இரவு 9:30 மணிக்கு வழமையாக வந்தடையும். அதிலிருந்து இறங்கும் ராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு இராணுவ வாகனத் தொடரணி ஆஸ்ப்பத்திரி வீதி வழியாக யாழ்நகரப் பகுதி நோக்கிச் சென்று பின்னர் பலாலி நோக்கித் திரும்பிப் பயணிப்பதே வழமையானது.

சித்திரை 9 ஆம் திகதி இரவு, யாழ்தேவி சற்றுத் தாமதமாகவே யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கிய இராணுவத்தினரை ஏற்றிக்கொண்ட மூன்று வாகனங்கள் அடங்கிய தொடரணி, இரவு 9:45 மணிக்கு யாழ் புகையிரத நிலையத்திலிருந்து கிளம்பி பலாலி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. தொடரணி ஆஸ்ப்பத்திரி வீதியூடாக சென்று கொண்டிருக்கும்போது அடைக்கலமாதா கோயிலுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் மறைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் இராணுவத்தினர் பயணித்த ட்ரக் வண்டி அகப்பட்டு சுமார் 20 மீட்டர்கள் தூக்கி வீசப்பட்டது. அருகிலிருந்த கழிவுநீர் வாய்காலுக்குள் ட்ரக் வண்டி வீழ்ந்திருந்தது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினரில் குறைந்தது 10 இராணுவத்தினர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். பின்னால் வந்த இராணுவத்தினர் நடப்பதை உணர்ந்துகொள்வதற்கு சில‌ நிமிடங்கள் எடுத்தன. 

சித்திரை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல், புலிகளினது முதலாவது கார்க்குண்டுத் தாக்குதல் என்பதோடு, இலங்கையின் சரித்திரத்தில் இடம்பெற்ற முதலாவது அத்தகைய தாக்குதல் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதற்கு முன்னர் பலஸ்த்தீனப் போராளிகளாலும், அய‌ர்லாந்துப் போராளிகளினாலுமே இவ்வகையான கார்க்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இராணுவம் உடனடியாகப் பழிவாங்கும் தாக்குதல்களில் இறங்கியது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியின் அருகில் இருந்த பொதுமக்களின் வீடுகள், கடைகள் போன்றவற்றிற்கு இராணுவத்தினர் தீமூட்டினர். அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற பொதுமக்கள் பலரைச் சுட்டுக் கொன்றனர். அருகில் இருந்த நாகவிகாரையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவத்தினர் கவச வாகனங்களில் அப்பகுதிக்கு வந்து கனரக இயந்திரத் துப்பாக்கிகளைப் பாவித்து அடைக்கலமாதா ஆலயத்தின்மீதும், அங்கிருந்த யேசுநாதரின் சொரூபத்தின்மீதும் தாக்குதல் நடத்தினர்.

யாழ்ப்பாண சிங்கள மகாவித்தியாலய எரிப்பும், நாகவிகாரை அழிப்பும்

No photo description available.

கத்தோலிக்க ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அதிருப்தியடைந்த யாழ்ப்பாணக் கத்தோலிக்கர்கள் மறுநாள், சித்திரை 10 ஆம் திகதி யாழ்க்குடாநாட்டின் கரையோரப்பகுதியெங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு அடைக்கலமாதா ஆலயப் பகுதிக்கு வந்த மக்கள் கூட்டமொன்று அருகில் இருந்த, இராணுவத்தினர் தங்குமிடமாகப் பாவிக்கும் சிங்கள மகாவித்தியாலயத்திற்குத் தீமூட்டினர். இராணுவத்தினரின் தாக்குதலினால் கோபமடைந்திருந்த இன்னொரு மக்கள் கூட்டம் அருகிலிருந்த நாகவிகாரைக்குச் சென்று அங்கிருந்த கட்டடங்களை அலவாங்குகளாலும், இரும்புக் கம்பிகளாலும் அடித்து நொறுக்கினர். பலர் தமது கைகளாலேயே அவற்றினை உடைத்தனர்.

இச்சம்பவம் நடைபெற்று இருவாரங்களின் பின்னர் நாகவிகாரையின் பிரதான பிக்குவை யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்தேன். தனது விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் அது நிலைகுலைந்து போயிருக்கும் புகைப்படங்களை அவர் என்னிடம் காண்பித்தார். புலிகளே இத்தாக்குதலைச் செய்தார்கள் என்று அவர் என்னிடம் கூறினார்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தின் நடமாட்ட முடக்கமும், யாழ்ப்பாணப் படுகொலைகளும்

யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக் கிளை காலை 9 மணிக்கு தனது வேலைகளை ஆரம்பித்ததும் எட்டு ஆயுதம் தரித்த‌ இளைஞர்கள் திடு திடுப்பென்று உள்நுழைந்தார்கள். பின்னர்  அங்கிருந்த 12 லட்சம் ரூபாய்களை எடுத்துக்கொண்டு வங்கியின் முகாமையாளரின் காரிலேயே ஏறித் தப்பிச் சென்றனர். 

அரசாங்கம் சித்திரை 10 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் 18 மணித்தியாலய ஊரடங்கு உத்தரவை இட்டது. அன்றிரவு பெருமளவு இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கும் அருகிலிருந்த தனியார் கட்டடங்களுக்கும்  தீயிட்ட இராணுவத்தினர் அங்கு கண்ணில் பட்ட பல பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர்.

What was the LTTE doing when the Jaffna library was burning? - Quora

யாழ்நகரின் தென்கிழக்குப் புறமாக அமைந்திருந்த‌ கத்தோலிக்கர்களை அதிகமாகக் கொண்டதும் சனநெரிசல் மிக்க பகுதியாகவும் விளங்கிய‌ குருநகர் நோக்கி இராணுவத்தினர் நகர முற்பட்டனர். இராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் தடுக்க பொதுமக்களும் சில பாதிரியார்களும் இணைந்து வீதித்தடைகளை ஏற்படுத்தினர். வாகனங்கள் வீதிக்குக் குறுக்காக நிறுத்திவைக்கப்பட்டன. வீதிகளில் ஆங்காங்கே டயர்களும், மரக்குற்றிகளும் எரிக்கப்பட்டன. மக்களை அணிதிரட்டும் வேலைகளில் புலிகள் இறங்கியிருந்தனர். புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டுவும் அவரது போராளிகளும் அப்பகுதியில் நின்றதோடு பெற்றொல் எறிகுண்டுகளையும் சில கைய்யெறிகுண்டுகளையும் மக்களுக்குப் பகிர்ந்தளித்தனர்.

புலிகளும் ஏனைய அமைப்புக்களும் இராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டனர்.  தமது இராணுவத்தை போராளிகளும் பொதுமக்களும் இணைந்து தடுத்ததமையானது இராணுவ உயர்பீடத்தில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி விட்டதுடன் கொழும்புப் பத்திரிக்கைகள் இதனைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். டெயிலி நியூஸ் பத்திரிகைக்குச் செவ்வியளித்த இராணுவ அதிகாரியொருவர் இப்படி ஒருபோதும் நடந்ததில்லை என்று ஆத்திரத்துடன் கூறினார், "பயங்கரவாதிகள் புதிய உத்திகளைக் கைக்கொள்கிறார்கள். நாம் இதனை எதிர்பார்க்கவில்லை. எமது இராணுவத்தின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதென்பது முன்னர் நடவாதது" என்று கூறினார். 

அரச தகவல்த் திணைக்களம் விடுத்த அறிக்கையில், "சித்திரை 10 ஆம் நாள் இரவு எமது இராணுவ ரோந்து அணிகள் வீதித் தடைகளை எதிர்கொண்டன. அவர்கள் முன்னேறிச்சென்ற பலவிடங்களில் எரியூட்டப்பட்ட டயர்கள் வீதிகளில் தூக்கி வீசப்பட்டன. பலவிடங்களில் ஆயுதம் தரித்த இளைஞர்கள் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டார்கள். பயிற்றப்பட்ட இராணுவத்தினருக்கு ஒப்பாக அவர்களின் தாக்குதல்கள் அமைந்திருந்தன" என்று கூறுகிறது.

 Dr. Devanesan Nesiah

கலாநிதி தேவநேசன் நேசைய்யா

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தேவநேசன் நேசைய்யா கூறுகையில் குறைந்தது 50 தமிழர்களையாவது அன்றிரவு இராணுவத்தினர் சுட்டுக் கொன்ற‌தாகக் கூறினார். ஆனால், யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி சித்திரை 9 ஆம் திகதி முதல் நடைபெற்ற இராணுவத்தினரின் தாக்குதல்களில் குறைந்தது 234 தமிழர்கள் கொல்லப்பட்டிருய்ப்பதாகக் கூறியது.  அரசாங்கத்தின் வாராந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய அமைச்சின் செயலாளர் டக்ளஸ், "கொல்லப்பட்ட அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று என்னால் கூறமுடியாது. எமது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படும்போது அவர்கள் எல்லாத்திசைகளிலும் எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள். அவர்கள் வேறு என்னதான் செய்ய முடியும்? அதைவிடவும், ஒருவர் பயங்கரவாதியா இல்லையா என்று வேறுபடுத்திப் பார்ப்பது எப்படிச் சாத்தியம்?" என்றும் கூறினார்.

 அந்த நாள் இரவு புலிகளின் போராளிகள் நாம் எவ்வளவு நேர்த்தியானவர்கள் என்பதனையும், தாம் கற்றுக்கொண்ட பயிற்சிகள் எவ்வளவு நுணுக்கமானவை என்பதனையும் செயலில் காட்டியிருந்தார்கள்.  அன்று 8:15 மணிக்கு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்குள் இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்கிக்கொண்டே உள்நுழைந்தார்கள். அங்கிருந்த பொலீஸார் தாம் வைத்திருந்த ஒற்றைச் சூட்டுத் துப்பாக்கிகளை எறிந்துவிட்டு ஓட்டமெடுத்தார்கள். பொலீஸ்நிலையக் கட்டடத்திற்கு குண்டுகளை வைத்துத் தகர்த்த புலிகள் பொலீஸாரின் வாகனங்கள் இரண்டிற்கும் தீமூட்டினார்கள். பின்னர் அங்கிருந்த தொலைத் தொடர்புச் சாதனம் ஒன்றினை எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள்.

ஆவணி 9 ஆம் நாள் புலிகள் தலைமையில் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல் விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. புலிகள் முதன்முதலாக கார்வெடிகுண்டினை வெற்றிகரமாகச் செயற்படுத்தியிருந்தனர். மக்களை இராணுவத்திற்கெதிராக அணிதிரட்டியிருந்தனர். இராணுவத்தின் முன்னேற்றத்தை வெற்றிகரமாகத் தடுத்திருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல் விடுதலைப் போராட்டம் தீவிரமடைவதனையும், புதிய நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதையும் எடுத்துக் காட்டியது. 

 

 வெளிநாட்டுக் கூலிப்படையினரை அமர்த்திக்கொண்ட பேரினவாதிகள்

இராணுவத்தினர் எதிர்பார்த்திராத இத்தாக்குதல் லலித் அதுலத் முதலிக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியிருந்தது. 1983 ஆம் ஆண்டு மார்கழியளவில் தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துவருவதை அவர் அறிந்திருந்தார். 1984 ஆம் ஆண்டி சித்திரை மாதத்தின் முதல்ப் 10 நாட்களும் தமிழ்ப் போராளி அமைப்புக்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளில் திறனுடன் செயற்பட்டு வருவதைக் காட்டியிருந்தது. சித்திரை 11 ஆம் திகதி கூடிய தேசிய பாதுகாப்புச் சபை பாக்கு நீரினையினைக் கடந்துசென்று வரும் போராளிகளின் படகுகளை தடுப்பதற்கான வழிவகைகள், நடவடிக்கைகள் பற்றித் தீவிரமாக ஆராய்ந்தது. கூட்டத்தின் முடிவில் இலங்கையின் கடற்பரப்பிற்குள் கட்டுப்படுத்தப்பட்ட கடற்பிரதேசம் ஒன்றினை உருவாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. 

அன்று மாலை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லலித் அதுலத் முதலி கடற்படைத் தளபதியின் அனுமதியின்றி இந்தக் கட்டுப்பாட்டுக் கடற்பிரதேசத்திற்குள் எந்தக் கப்பலோ அல்லது படகோ உள்நுழைய முடியாது என்று கூறினார். கடற்படைத் தளபதியின் அனுமதியினைப் பெற்றுக்கொண்ட கடற்கலங்களுக்குப் பாதுகாப்பாக இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகொன்று கூடவே வரும் என்றும் அவர் கூறினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் போதைவஸ்த்துக் கடத்தல்களைத் தடுப்பதற்கும், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினைத் தடுப்பதற்காகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

539.ht4_.gif 

ஷின் பெட் கூலிப்படையினர்

 இஸ்ரேலிய உள்ளக புலநாய்வுத்துறையான ஷின் பெட்டின் வருகை குறித்து லலித் அதுலத் முதலியிடம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது. அத்தருணத்தில் இலங்கை ராணுவத்திற்கு ஷின் பெட்டின் அதிகாரிகள் பயிற்சியளித்துவருவதை லலித் ஒத்துக்கொண்டார். மேலும், பல இஸ்ரேலிய அதிகாரிகளும் இலங்கை இராணுவத்திற்கு கொழும்பில் பயிற்சிகளை வழங்கிவருவதாகவும் அவர் கூறினார். 

தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து பின்வருமாறு வினவினார் லலித், "பயங்கரவாதிகளே பயிற்சிகளை எடுக்கும்போது எமது இராணுவத்தினர் பயிற்சிகளை மேற்கொள்வதில் என்ன குற்றமிருக்கிறது?".  "அண்மைய நாட்களில் எமது இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களைப் பார்க்கும்போது பயங்கரவாதிகள் கரந்தடிப் போர்முறையில் நேர்த்தியாகப் பயிற்றப்பட்டிருப்பது தெரிகிறது" என்றும் அவர் கூறினார். 

 undefined

இதற்கு மேலதிகமாக, ரவி ஜயவர்த்தனவின் கீழ் இயங்கிய பொலீஸாரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை படையான விசேட அதிரடிப்படைக்கான பயிற்சிகளுக்காக இங்கிலாந்து கூலிப்படையான கீனி மீனியின் பயிற்சிகளையும் இலங்கை அரசாங்கம் அடுத்துவந்த சில மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டது. பிரித்தானியாவின் விசேட படைப்பிரிவான ஸ்பெஷல் எயர் சேர்விசஸ் என்றழைக்கப்படும் படையின் முன்னாள்  வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இலங்கைப் பொலீஸாருக்கு பயிற்சியளித்து வந்தனர். மேலும், இங்கிலாந்தின் முன்னாள் படைவீரர்களும், அதிகாரிகளும் நேரடியாகாவே யுத்ததில் ஈடுபட்டதோடு, சிலர் குண்டுவீச்சு விமானமோட்டிகளாகவும், தாக்குதல் உலங்குவானூர்திகளைச் செலுத்துபவர்களாகவும்  செயற்பட்டுவந்தனர்.

 The Reluctant Mercenary: Amazon.co.uk: Smith, Tim A.: 9781857766974: Books

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீதான குண்டுவீச்சில் இங்கிலாந்தின் விமானமோட்டிகள் நேரடியாகவே ஈடுபட்டனர். ஒரு பிரித்தானிய வீரருக்கு மாதாந்தச் சம்பளமாக 2500 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸினை இலங்கை அரசாங்கம் வழங்கியது. இங்கிலாந்துப் பிரதமர் மாக்ரட் தச்சரின் பூரண அனுமதியுடனும், ஆசீர்வாதத்துடனும் இங்கிலாந்தின் முன்னாள் படைவீரர்கள் தமிழின அழிப்பில் ஈடுபட்டு வந்தனர். 1984 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் பிரித்தானியாவின் பல ஆயுத உற்பத்தியாளர்கள் இலங்கைக்கு பலவிதமான ஆயுதங்களை விற்றிருந்தனர். அவற்றுள் 20 இராணுவக் கவச வாகனங்கள், இரவுநேரப் பார்வை உபகரணங்கள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், கனர இயந்திரத் துப்பாக்கிகள் என்பனவும் அடங்கும்.

Shorland Mk 3 Armored Patrol Car 6

பாக்கிஸ்த்தானும் இலங்கைக்கு இராணுவ பயிற்சிகளையும் பெருமளவு ஆயுதங்களையும் கொடுத்துதவியது. குறிப்பாக சியா உல் ஹக் ஆட்சிக் காலத்திலேயே இது அதிகரித்துக் காணப்பட்டது. இலங்கை இராணுவத்தில் சுமார் 8,000 வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகளில் வெளிநாட்டுக் கூலிப்படையினரால் பயிற்றுவிக்கப்பட்டனர். பாக்கிஸ்த்தானிய இராணுவத்தால் பயிற்றப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் தம்மை அடையாளப்படுத்த கறுப்பு நிற சீருடைகளை அணிந்திருந்தனர். அக்காலத்தில் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான படுகொலைகளைப் புரிந்தவர்களில் இந்தப் படைப்பிரிவே முன்னிலை வகுத்திருந்தது.

undefined

சம்பிரதாய இராணுவத்தை தமிழர்களை ஒடுக்கும் பாரிய இயந்திரமாகக் கட்டியமைத்த லலித்

இராணுவத்தின் போரிடும் திறனை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டிய லலித் அதுலத் முதலி, அதன் எண்ணிக்கையினையும் அதிகரிக்கத் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு அமைச்சராக அவர் பதவியேற்றபோது வெறும் 15,000 வீரர்களை மட்டுமே இலங்கை இராணுவம் கொண்டிருந்தது. இவர்களுள் 11,000 வீரர்களைத் தவிர மீதி 4,000 பேரும் தன்னார்வ வீரர்களாகச் செயற்பட்டுவந்தவர்கள். ஆகவே, இராணுவத்தில் இணைந்துகொள்வதற்கான மிகக்குறைந்த கல்வித்தகமமை மற்றும் உடற்கட்டுமானம் ஆகியவற்றினை வெகுவாகக் குறைத்த லலித் அதுலத் முதலி, இராணுவத்திற்கான பாரிய ஆட்சேர்ர்பொன்றினை முடுக்கிவிட்டார்.

கடற்பாதுகாப்புப் பிரதேசம் நடைமுறைக்கு வந்த முதல் வாரத்தில் தமது கட்டளையினை மீறிச் சென்றதாக ஒரு கடற்கலத்தை இலங்கை கடற்படையினர் தடுத்து வைத்திருந்தனர். 25 குதிரைவலுக்கொண்ட இரு வெளியக இயந்திரங்களைக் கொண்டிருந்த அந்தப் படகில் தமிழ்நாட்டிற்குப் பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட சில இளைஞர்கள் இருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 13 பேரில் ஒருவரது வயது வெறும் 16 என்பது குறிப்பிடத் தக்கது. அந்தச் சிறுவனை விசாரிக்க லலித் அதுலத் முதலி பலாலிக்குச் சென்றார். தன்னைப் பலவந்தமாக இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வதாக அந்தச் சிறுவன் லலித்திடம் கூறினான். தான் பயிற்சிக்காக வராவிட்டால் தனது பெற்றோரைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினார்கள், ஆகவேதான் மிகவும் கொடூரமான இப்பயங்கரவாதிகளுடன் இந்தியாவுக்குப் பயிற்சிக்குச் செல்லச் சம்மதித்தேன் என்றும் அவன் கூறினான். லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை இச்சிறுவன் பெரும் பிரச்சாரப் பொருளாகக் கருதப்பட்டான்.

தமிழ் பொலீஸ் உளவாளிகளைக் களையெடுத்தல்

1984 ஆம் ஆண்டு வைகாசி 1 ஆம் திகதி கல்முனையில் வைத்து தமிழ் பொலீஸார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்ப் பொலீஸ் விசாரணையாளர்கள் மற்றும் பொலீஸ் உளவாளிகள் ஆகியோரை அழிப்பதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமாக இச்சம்பவம் நடத்தப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்ட முதலாவது பொலீஸாரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மறுநாள், வைகாசி 2 ஆம் திகதி பருத்தித்துறை பேரூந்துத் தரிப்பிடத்தில் இன்னொரு தமிழ்ப் பொலீஸாரான நவரட்ணமும் சுட்டுக் கொல்லப்பட்டார். போராளிகளை தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட பொலீஸ் பிரிவில் இயங்கிவந்த நவரட்ணம், பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேரூந்துகளில் பயணிக்கும் இளைஞர்களை விசாரிப்பதற்கென்று அன்று பணியில் அமர்த்தப்பட்டிருந்தவர்.  நவரட்ணத்தைச் சுட்டுவிட்டு போராளிகள் இருவரும் உந்துருளியில் தப்பிச் சென்றிருந்தனர். இருநாட்களுக்குப் பின்னர், வைகாசி 4 ஆம் திகதி சாவகச்சேரியின் மீசாலைப் பகுதியில் பொலீஸாரின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணையாளர் சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டார். 1983 ஆம் ஆண்டு ஆனி 15 ஆம் திகதி சீலனன் மறைவிடம் பற்றிய தகவல்களை குருநகர் இராணுவ முகாமில் இயங்கிய இராணுவப் புலநாய்வுத் துறைக்கு அறியத் தந்து சீலனின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததற்காகவே சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

யாழ்க்குடாநாட்டின் சிவில் நிர்வாகத்தைக் கையக‌ப்படுத்திக்கொண்ட இராணுவம்

undefined

போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே அதிகரித்துவந்த மோதல்ச் சம்பவங்களால் தமிழ்மக்களின் அபிமானத்தைப் போராளிகள் பெற்றுக்கொள்ளும்  நிலைமை உருவானது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சிவில் நிர்வாகம் முற்றாக முடக்கப்பட்டு இராணுவம் நிர்வாகத்தினை முழுமையாகப் பொறுப்பெடுத்துக் கொண்டது. பலாலி கூட்டுப்படைத் தளமும், ஆனையிறவுத் தடைமுகாமும் யாழ்க்குடாநாட்டின் நிர்வாகத்தின் தலைமைச் செயலகங்களாக மாற்றம் பெற்றன. இவ்விரு முகாம்களினதும் பொறுப்பதிகாரிகளே யாழ்க்குடாநாட்டின் நிர்வாகக் கொள்கைகளை வகுத்ததோடு, நிர்வாக நடைமுறைகளையும் முற்றான இராணுவ நலன்கள் சார்ந்து செயற்படுத்தி வந்தனர். 

இராணுவ தளபதிகளின் தாந்தோன்றித்தனமான அடக்குமுறை - நிர்வாகச் செயற்பாடுகள் சிவில் நிர்வாக அதிகாரிகளை முடக்கிப் போட்டிருந்தது. நிர்வாகத்துறையில் மிகுந்த கல்வித்தகமையினையும், அனுபவத்தினையும் பெற்றிருந்தபோதிலும், மிகக் குறைவான பாடசாலைக் கல்வியினைக் கூட பூர்த்திசெய்திராத‌ இராணுவ அதிகாரிகளின் கட்டளைப்படி, அவர்கள் கூறுவதை காத்திருந்து செவிமடுத்து , நடைமுறைப்படுத்தும் நிலையினை அன்றைய இராணுவ அடக்குமுறை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்சிங்கள இனங்களுக்கிடையே பிளவை அதிகரிக்கவைத்த விடயங்களில் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத் தக்கது.

 

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலன் தம்பதிகளைக் கடத்திச்சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு
 

இலங்கையில் தமிழர் மீதான யுத்தத்தில் இஸ்ரேலிய உளவுத்துறையினரின் பங்களிப்பு மற்றும் இஸ்ரேலிய இராணுவ வல்லுனர்களின் பயிற்சிகள், இவற்றினை இலங்கைக்கு ஒழுங்குசெய்து கொடுத்ததில் அமெரிக்கா ஆற்றிய பங்கு ஆகியன தமிழ் மக்களைப் பொறுத்தவரை அமெரிக்காவின் உண்மையான நோக்கம் குறித்த பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்ததுடன் அமெரிக்கா மீதும் அதன் வெளியக உளவுத்துறையான சி.. மீதும் கடுமையான வெறுப்பினையும் ஏற்படுத்தியிருந்தது.  அமெரிக்காவின் நிதி உதவியோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் கடுமையாக விமர்சித்து வந்ததுடன் இத்திட்டங்களில் பணியாற்றிவந்த அமெரிக்கர்கள் குறித்தும் கேள்வியெழுப்பி வந்தனர். இலங்கையில் பணிபுரியும் அமெரிக்கர்கள் அனைவரும் அதன் உளவுத்துறையான சி.. யின் முகவர்கள்தான் என்று அவர்கள் வாதிட்டு வந்தனர். 

ரூலிங் கம்பெனி ஒப் ஒஹையோ எனும் அமெரிக்கக் கம்பெனி ஒன்று நீர்வழங்கும் திட்டம் ஒன்றினை பருத்தித்துறையிலும், சாவகச்சேரியிலும் முன்னெடுத்து வந்தது. இத்திட்டத்தில் புதிதாகத் திருமணம் முடித்திருந்த இளவயதுத் தம்பதியினரான 30 வயது நிரம்பிய ஸ்டான்லி ப்றைசன் அலன் மற்றும் அவரது மனைவியான 28 வயது நிரம்பிய மேரி எலிசபேத் அலன் ஆகியோர் 1983 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து பணிபுரிந்து வந்தனர். குருநகர், கடற்கரை வீதியில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்கியிருந்தனர்.

தமது அமைப்பின் பெயரை சர்வதேசத்தில் அறியச் செய்ய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு கடத்தலில் இறங்கியது

.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் உளவுப்பிரிவிவான மக்கள் ஆய்வுப் பிரிவு, அலன் தம்பதிகள் குறித்து சில சந்தேகங்களைக் கொண்டிருந்தது. அலன் தம்பதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த இந்தப் பிரிவு இவர்கள் சி.. யின் உளவாளிகளே என்று சென்னையில் தங்கியிருந்த .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைமைப்பிரிவிற்கு அறிவித்தது. தமது அமைப்பிற்கு சர்வதேச கீர்த்தியை ஏற்படுத்தும் பொருட்டு அவ்வமைப்பின் தலைவர்களான பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மணி மற்றும் ரமேஷ் ஆகியோர் திட்டம் ஒன்றினை வகுத்தனர். அதன்படி அலன் தம்பதிகளைக் கடத்துவதென்றும், அவர்களை விடுவிக்கவேண்டுமானால் பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகக் கோருவதென்றும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுதலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிப்பதென்றும் முடிவெடுத்தனர்.

கடத்தலுக்கான உத்தரவை இட்ட டக்ளஸ் தேவானந்தா

திட்டத்தினைச் செயற்படுத்தும் பொறுப்பு .பி.ஆர். எல்.எப் அமைப்பின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்திடம் (பி.எல்.) ஒப்படைக்கப்பட்டது. இராணுவப் பிரிவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த தனது உறுப்பினர்களிடம் இத்திட்டத்தினைச் செயற்படுத்துமாறு பணித்தார். யாழ்ப்பாணப் பிரிவும் இதனை நேர்த்தியாகச் செய்தது. வைகாசி 10 ஆம் திகதியன்று இரவு 7 மணிக்கு சில இளையவர்களை அலன் தம்பதிகள் தனியாக இருக்கின்றார்களா என்று பார்த்துவர அனுப்பியது .பி.அர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு. அலன் தம்பதிகளின் வீட்டுக் கதவினைத் தட்டிய இளையவர்கள் தாம் நூலகத்திற்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். நிதியுதவி செய்ய முன்வந்த அலன், அவர்களை மறுநாள் வருமாறு கேட்டுக்கொண்டார்.

இளையவர்கள் அங்குஇருந்து அகன்ற இரு மணித்தியாலங்களின் பின்னர் அலன் தம்பதிகள் படுக்கைக்குச் சென்றுவிட்டனர். அவர்களது வீட்டில் பணிபுரிந்தோர் இரவுணவை அருந்திக்கொண்டிருக்க, .பி.ஆர்.எல்.எப் இராணுவப்பிரிவின் உறுப்பினர்களான ரெக்ஸ், மோகன், குமார், இந்திரன் மற்றும் ரோகன் ஆகிய ஐவரும் அலன் தம்பதிகள் தங்கியிருந்த விடுதியின் பின்கதவினால் உள்நுழைந்து பணியாளர்கள் இருவரையும் அருகிலிருந்த அறை ஒன்றினுள் கட்டிப்போட்டனர். பணியாளர்களை சத்தம் எழுப்பவேண்டாம் என்று மிரட்டிய ஆயுததாரிகள், மறுநாள் காலை விடிந்தபின்னர் அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட விடயம் குறித்து பொலீஸாரிடம் தெரியப்படுத்துமாறு கூறினர். பின்னர், அலன் தம்பதிகள் படுத்திருந்த அறையினருகில் சென்ற அவர்கள் கதவைத் தட்டவும் ஸ்டான்லி கதவினைத் திறந்தார். மேரியும் அவரின் பின்னால் கதவினருகில் வந்து நின்றார். தாம் வைத்திருந்த ஆயுதங்களை அலன் தம்பதிகளுக்கு நேரே பிடித்த .பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், உடனடியாக ஆடைகளை அணிந்துகொள்ளுமாறு மிரட்டினர். பின்னர் அவர்களின் கைகளையும் கண்களையும் கட்டிப்போட்டனர்.

கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் அலன் தம்பதிகளை வீட்டின் முன்வாசலால் இழுத்துச் சென்ற அவர்கள், பிக்கப்  ரக வாகனம் ஒன்றின் பின்னிருக்கையில் அவர்களை அடைந்தபடி மறைவிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர்.

இச்செய்தி குறித்து டெயிலி நியூஸ் பத்திரிகையில் எழுதுமாறு நான் பணிக்கப்பட்டேன். லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கென்று தரமான நிருபர்களும், புகைப்பிடிப்பாளர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். ஆனால், ஆங்கிலத்தில் அவர்கள் புலமை வாய்ந்தவர்களாக இருக்கவில்லை. ஆகவே, அவசரமான செய்திகளை தொலைபேசியில் அவர்கள் என்னிடம் கூற நான் அதனை ஆங்கிலத்தில் எழுதிக் கொள்வதென்பதே வழக்கமாக இருந்து வந்தது. அத்துடன், கொழும்பிலிருந்து எனக்குக் கிடைக்கும் தகவல்களையும் செய்தியுடன் இணைத்துக்கொள்வேன்.

ஜெயவர்த்தனவுக்கு கடிதத்தில் நிபந்தனைகளை அனுப்பிய ஈ.பி.ஆர்.எல்.எப்

வைகாசி 10 ஆம் திகதி, வியாழக்கிழமை அன்று அலன் தம்பதிகள் கடத்தப்பட்டிருந்தனர். வைகாசி 11 ஆம் திகதி, வெள்ளி காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் அரசாங்க அதிபரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியைச் சந்தித்த சிறுவன் ஒருவன் அவரிடத்தில் காகித உறை ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அதில் மிக அவசரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த உறையினுள் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருப்பதை அரசாங்க அதிபர் தேவநேசன் நேசைய்யா கண்ணுற்றார்.

அக்கடிதத்தில் மூன்று செய்திகள் அடக்கப்பட்டிருந்தன. முதலாவது செய்தி அலன் தம்பதிகளை மக்கள் விடுதலை இராணுவம் கடத்திச் சென்றிருக்கிறது என்பது. அவர்கள் சி.. யின் முகவர்கள் என்பதாலேயே கடத்தப்பட்டுள்ளதாக அது கூறியது.

இரண்டாவது, அவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமானால் அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளை கூறியிருந்தது.

முதலாவது நிபந்தனை, அரசால் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருக்கும் 20 போராளிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது. இந்த 20 பேரின் பெயர்களையும் அது குறிப்பிட்டிருந்தது. முதலாவது பெயர் வண பிதா சிங்கராயர். இரண்டாவது பெயர் நிர்மலா நித்தியானந்தன். ஏனையவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த .பி.ஆர்.எல்.எப் செயற்ப்பாட்டாளர்கள்.

இர்ண்டாவது நிபந்தனை 50 மில்லியன் பெறுமதியான தங்கம் கப்பமாகத் தரப்பட வேண்டும் என்பது.

மூன்றாவது செய்தி யாதெனில் தமது நிபந்தனைகளை முழுவதுமாக இலங்கையரசாங்கம் நிறைவேற்றத் தவறுமிடத்து அலன் தம்பதிகளுக்கு என்ன நடக்கும் என்பது. அதாவது, தமது நிபந்தனைகள் வெள்ளி பிற்பகல் 12 மணியிலிருந்து  72 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்படாது போனால் அலன் தம்பதிகள் ஆறு மணித்தியால இடைவெளிக்குள் தம்மால் கொல்லப்படுவார்கள் என்பது.

தனது கடத்தலுக்குள் தமிழ்நாட்டு அரசாங்கத்தை இழுத்துவிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு

இந்த நிபந்தனைகளுள் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது விடுவிக்கப்படும் 20 கைதிகளும், 50 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கமும் தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் மக்கள் விடுதலைப் படை அவர்களையும் தங்கத்தையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்பதும் தான்.

அலன் தம்பதிகளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட பிக்கப் வாகனம் காங்கேசந்துறை சேத்தான்குளம் பகுதியில் அநாதரவான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தப்பட்ட தம்பதிகள் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பதனையே இது காட்டியது.

இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கத்தை இணைத்து .பி.ஆர்.எல்.எப் அமைப்பு நிபந்தனை வெளியிட்டிருந்தது முதலமைச்சர் ராமச்சத்திரனை சினங்கொள்ள வைத்தது. மேலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் இக்கடத்தல் சம்பவம் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. ஜெயவர்த்தன, பிரேமதாச, லலித் ஆகியோர் அமெரிக்காவுக்கு நிலைமையினை விளங்கப்படுத்தியிருந்தனர். அலன் தம்பதிகளின் நிலைமை குறித்து அமெரிக்கா கவலைப்படத் தொடங்கியது.

லலித் அதுலத் முதலியைச் சந்தித்த அமெரிக்க தூதர், அலன் தம்பதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்தையும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பயங்கரவாதச் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் வன்முறைகளை தனது அரசாங்கம் கண்டிப்பதாகவும் அமெரிக்கத் தூதரிடம் லலித் கூறினார். மேலும், அப்பாவி இளம் தம்பதிகளை பாதுகாப்பாக விடுவிக்கத் தேவையான அனைத்தையும் தமது அரசாங்கம் செய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவையும் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும் அவமானப்படுத்த அலன் தம்பதிகளின் கடத்தலினைப் பாவித்த இலங்கையரசு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சத்வாலை தனது அலுவலகத்திற்கு அழைத்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் .சி.எஸ் .ஹமீத், அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு ஏதேனும் தொடர்பிருக்கின்றதா என்று வினவினார்.  ஜெயவர்த்தன மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவரான சத்வால் பின்னாட்களில் என்னுடன் பேசும்போது, ஹமீத் தன்னிடம் கடத்தலுடன் தமிழ்நாட்டிற்குத் தொடர்பிருக்கிறதா என்று வினவியபோது தாம் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகக் கூறினார். தமிழ்ப் போராளிகளால் தாம் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

சத்வாலை அவமானப்படுத்தியதுடன் ஹமீத் நின்றுவிடவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சரான நரசிம்ம ராவைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், அலன் தம்பதிகளின் கடத்தலில் தமிழ்நாட்டு அரசாங்கம் செய்திருக்கும் பங்களிப்புக் குறித்து தமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ராவ், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு இக்கடத்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறினார். ராவிடம் பேசும்போது ஹமீத் பின்வருமாறு வினவினார், "தமிழ்நாட்டில் அதிகாரத்தில் உள்ள சிலருடன் பேசாது, தாம் கேட்கும் கைதிகளையும், தங்கத்தையும் தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் கையளியுங்கள் என்று கடத்தல்க்காரர்கள் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.

கடத்தலில் தமிழ்நாட்டு அரசாங்கம் வகித்திருக்கும் பாகம் குறித்து இலங்கையரசாங்கம் இந்தியாவிடம் வினவியது பற்றி அறிந்துகொண்டபோது எம்.ஜி.ஆர் கொதித்துப் போனார். முட்டாள்கள், முட்டாள்கள் என்று அவர் வைதுகொண்டார். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்காவின் கொடியினை எரித்ததற்காக .பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் சிலர் கைதுசெய்யப்பட்டிருந்தபோது, அவர்களை எம்.ஜி.ஆர் தலையிட்டு விடுவித்திருந்தார்.

சர்வதேசத்தின் கவனம் தம்மீது விழவேண்டும் என்பதற்காக எதையாவது செய்தாக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அமெரிக்க தூதரகத்திற்கு மூன்று முச்சக்கர வண்டிகளில் .பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் வந்திறங்கினர். தூதரக வாசலில் காவலுக்கிருந்த உத்தியோகத்தர்கள் நோக்கி ஓடிச்சென்ற ரமேஷ் அவர்களை நோக்கி தான் கொண்டுவந்திருந்த கமெராவை உயர்த்திக் காண்பித்தார். ஆரம்பத்தில் அதனை ஒரு துப்பாக்கியென்று எண்ணிய காவலாளிகள் அங்கிருந்து ஓடத் தொடங்கினர். அதனையடுத்து அமெரிக்கக் கொடியை கீழே இழுத்து வீழ்த்திய அவர்கள் அதற்குத் தீமூட்டினர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தபோதும் எம்.ஜி.ஆர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்திருந்தார்.

எம்.ஜி.ஆரின் பணிப்பில் கைதுசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள்

 அலன் தம்பதிகள் கடத்தப்பட்டத்தைக் கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் கடத்தப்பட்டதற்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் தெரிவித்தார். மேலும், அனைத்து .பி.ஆர்.எல்.எப் தலைவர்களையும் உடனடியாகக் கைதுசெய்யும்படி தமிழ்நாடு பொலீஸ் அதிபரை எம்.ஜி.ஆர் பணிக்க, அவரும் அவர்கள் அனைவரையும் கைதுசெய்தார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அலன் தம்பதிகளைக் கடத்திச்சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு

இது சம்பந்தமாக முதலெழுதிய பதிப்புகளிலும் பதிவிட்டிருந்தீர்களா?

பல செய்திகளை பார்ப்பதால் எங்கு எதை பார்த்தோம் என்று தெளிவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

இது சம்பந்தமாக முதலெழுதிய பதிப்புகளிலும் பதிவிட்டிருந்தீர்களா?

பல செய்திகளை பார்ப்பதால் எங்கு எதை பார்த்தோம் என்று தெளிவில்லை.

இல்லையண்ணா, இதற்கு முதல் இதுகுறித்து எழுதவில்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலன் தம்பதிகளை விடுவிக்க நேரடியாக செயலில் இறங்கிய இந்திரா

 

வெள்ளியன்று அதுலத் முதலி கொழும்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டியிருந்தார். அந்த மாநாட்டிற்கு நானும் சென்றிருந்தேன். அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தன்னால் நீண்ட மெளனத்தைத் தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை என்று கூறினார் அவர். தொடர்ந்து பேசிய அவர், இக்கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இரு அவதானிப்பு நிலையங்களைத் தாம் நிறுவியிருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்கன்டிநேவிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மக்களை வடக்கிற்குச் செல்லவேண்டாம் என்று அறிவுருத்தினார்.

 "இந்த நாடுகளில் வாழுகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த நாட்டில் பயங்கரவாதாம் செயற்பட பணம் வழங்கி வருகிறார்கள்" என்று அவர் கூறினார். "தாம் வாழும் நாடுகளின் பிரஜைகளைக் கடத்துவதற்கு பயங்கரவாதிகளுக்கு அவர்களே பணம் கொடுத்து உதவுகிறார்கள்" என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கை இக்கடத்தல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார். 

"இக்கடத்தைல்ச் சம்பவம் இரு விடயங்களை இலங்கைக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சென்றிருக்கிறது. முதலாவது, அமெரிக்கா இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தழிக்க இலங்கைக்கு உதவ வேண்டும் என்பது. இரண்டாவது,  இலங்கையில் செயாற்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு தமிழ்நாடே அடைக்கலம் கொடுத்து வருகிறது என்பது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கருத்துக்கள் இந்தியாவை அவமானப்பட வைத்தன. அமெரிக்க உதவி ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவுக்கான உத்தியோக பூர்வப் பயணத்தை வைகாசி 12 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் இரு அமெரிக்கர்களின் உயிர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகியிருந்தன. ஆகவே, இந்திரா காந்தி தனிப்பட்ட ரீதியில் இவ்விடயம் தொடர்பாகச் செயற்பட எண்ணினார். உடனேயே தொலைபேசியூடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்ட இந்திரா "அலன் தம்பதிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு .பி.ஆர்.எல்.எப் இனரைப் பார்க்கச் சொல்லுங்கள்" என்று பணித்தார். எம்.ஜி.ஆரு உம் உடனடியாகவே இந்தச் செய்தியை பத்மநாபாவிடம் தெரிவித்தார்.

539.ht7_.jpg

கே.பத்மநாபா

 றோ செயலில் இறங்கியது. அமெரிக்க தம்பதிகள் விடுவிக்கப்படவில்லையென்றால் .பி.ஆர்.எல். எப் இன் தலைவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்று அவர்களை மிரட்டியது. 

சனிக்கிழமை அன்று .பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் மீதான றோவின் அழுத்தம் மேலும் அதிகரித்தது. அகில இந்திய வானொலிச் சேவையின் சென்னை நிலையத்திலிருந்து "மனிதாபிமான ரீதியில் அலன் தம்பதிகளை விடுவியுங்கள்" என்கிற இந்திரா காந்தியின் கோரிக்கை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறையென்று தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது. அன்று மாலை இந்திய உளவுத்துறையினரிடமிருந்து பத்மநாபாவுக்கு வந்த கையொப்பம் இடப்படாத கடிதத்தில், "அலன் தம்பதிகளை விடுவியுங்கள், உங்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் நான் செய்து தருகிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இக்கடத்தல்ச் சம்பவம் நடைபெற்று பல வருடங்களுக்குப் பின்னர் என்னுடன் பேசிய டக்கிளஸ் தேவானந்தாவும், ரமேஷும், இந்திரா காந்தியிடமிருந்து வந்த கடிதத்தின் பின்னரே அலன் தம்பதிகளை விடுவிப்பதற்கான முடிவினைத் தாம் எடுத்ததாகக் கூறினர். இந்திரா காந்தியைப் பலதடவைகள் சந்தித்திருந்த பத்மநாபா அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். 

சனிக்கிழமை பின்னிரவு வேளையில் அலன் தம்பதிகள் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண ஆயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் அங்கு வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் அலன் தம்பதிகளை 13 ஆம் திகதி கொழும்பிற்கு அழைத்துவந்ததுடன், மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். அமெரிக்கத் தகவல் தினைக்களக் கேட்போர் கூடத்தில் பல பத்திரிக்கையாளர் சமூகமளித்திருக்க அந்தக் கூட்டம் நடைபெற்றது. செய்திகளைச் சேகரிப்பதற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.

மிகச் சரளமாகப் பேசிய ஸ்டான்லி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் தயக்கமின்றி, வெளிப்படையாகப் பதிலளித்தார். பிக்கப் வாகனத்தின் பின்னிருக்கையில் முகத்தைத் தரையில் அழுத்தியபடி தம்மைப் படுக்கவைத்து அரைமணிநேரம் ஓட்டிச் சென்றதாக அவர் கூறினார். ஆனால், சிறிது நேரத்தின்பின்னர் தாம் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிவந்துகொண்டிருப்பது தமக்குப் புலப்பட்டதாகவும், நீண்டதூரம் தம்மைக் கடத்திச் செல்வது போன்ற பிரமையினை ஏற்படுத்தவே அவ்வாறு அவர்கள் நடப்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் கூறினார். "உண்மையயைகச் சொல்லப்போனால், நாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு மிக அருகிலிருந்த வீடொன்றிலேயே நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.

 தம்மை மிகவும் கண்ணியமாக அவர்கள் நடத்தினார்கள் என்று மேரி கூறினார். "நாம் ஒருபோதும் துன்புறுத்தபடவில்லை" என்று அவர் மேலும் கூறினார். தமிழ்ப் பிரிவினைவாதிகள் கொடூரமானவர்கள் என்பதனைக் காட்ட அவர்களிடமிருந்து ஏதாவதொரு செய்தியை எடுத்துவிடலாம் என்கிற நோக்கில் கொழும்பு ஊடகங்கள் துருவித் துருவி கேள்விகளைத் தொடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.  

நாம் பயங்கரவாதிகள் இல்லையென்று தம்மிடம் அவர்கள் தெரிவித்ததாக மேரி கூறினார். "நாங்கள் விடுதலைப் போராளிகள், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் போராடுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள் என்று மேலும் அவர் தெரிவித்தார். "நாங்கள் பயங்கரவாதிகளாக இருந்திருந்தால் உங்களை கொன்றிருப்போம், மரியாதையாக நடத்தவேண்டிய தேவை எமக்கு இருந்திருக்காது" என்றும் அவர்கள் கூறியதாக அவர் தொடர்ந்தார்.

அலன் தம்பதிகளின் கடத்தல்ச் சம்பவம் இறுதியில் சுபமாக முடிந்தது. சில நாட்களின் பின்னர் அவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பியிருந்தார்கள். ஆனால், இந்தக் கடத்தல்ச் சம்பவம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கசப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தது. 

அதுலத் முதலியும் பிரேமதாசவும் இதுகுறித்து இந்தியாவைத் தொடர்ச்சியாக விமர்சித்தே வந்தனர். மேலும் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்களைக் கொடுத்து இலங்கையைத் துண்டாட இந்தியா உதவிவருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். பிரேமதாசாவோ ஒருபடி மேலே சென்று பஞ்சாப்பில் பிரிவினை கோரிப் போராடும் சீக்கியர்களை அடக்கி ஒடுக்கும் இந்திய அரசு, இலங்கையில் பிரிவினை கோரிப் போராடும் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு உதவிவருவது நயவஞ்சகம் என்றும் தெரிவித்தார். இது இந்தியாவின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. மேலும், சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கும் இந்தியா தமிழ்ப் பிரிவினைவாதிகளை விடுதலைப் போராளிகள் என்று அழைப்பது நகைப்பிற்கிடமானது என்று அவர் தெரிவித்தார். 

பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாச, "அவர்கள் கொலைகாரர்கள், கடத்தல்க்காரர்கள், திருடர்கள் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்" என்று கூறினார். இப்பேச்சு இந்தியாவை ஆத்திரங்கொள்ள வைத்திருந்தது. "இலங்கையின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்கிவரும் நட்புநாடான இந்தியா மீது இலங்கையின் அரசியற்பிரமுகர்கள் மிகவும் அபாண்டமான முறையில் பழிசுமத்துவது அதிர்ச்சியையும் வேதனையினையும் அளிக்கிறது" என்று இந்தியா பிரேமதாசாவின் பேச்சுக் குறித்து கருத்துத் தெரிவித்தது.

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயார் மேற்கொண்ட பயணங்கள்

 

அலன் தம்பதிகளின் கடத்தல் நாடகத்தின் சூடு ஆறுமுன்னமே ஜெயார் தனது இராணுவத்திற்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயணங்களை மேற்கொண்டார். பீஜிங்கிலும், வோஷிங்டனிலும் வெளிப்படையாகவும் தனிப்பட்ட ரீதியிலும் ஆயுதங்களைத் தந்து உதவ வேண்டும் என்கிற கோரிக்கையினை அந்தந்த நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்தார் ஜெயார். தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும் வழங்குவதன் மூலம் இலங்கையினைத் துண்டாட இந்தியா முயல்வதாகவும், இலங்கை மீது முற்றான ஆக்கிரமிப்பொன்றினை மேற்கொள்வதே இந்தியாவின் திட்டமென்றும் முறையிட்ட ஜெயார், இந்தியாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து இலங்கையின் இறையாண்மையினைக் காத்திட தனது இராணுவத்திற்கு ஆயுத உதவிகளை கட்டாயம் சீனாவும் அமெரிக்காவும் வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

வைகாசி 20 ஆம் திகதி சீன ஜனாதிபதி லி சியான் நானுடன் பேசிய ஜெயார் இலங்கை மக்கள் முற்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றதாகவும், இனிமேலும் எந்த ஆக்கிரமிப்பையும் எதிர்த்துப் போராடப்போவதாகவும் கூறினார். "15 மில்லியன் மக்களை இந்திய ஆக்கிரமிப்பு கொன்றுவிடும்" என்று ஜெயார் பேசினார். "சில மூளை பிசகியவர்கள் ஆக்கிரமிப்புக் குறித்துப் பேசலாம், ஆனால் இலங்கை தனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை சீனா நம்புகிறது" என்று சீன ஜனாதிபதி பதிலளித்தார். சீன அதிபரின் கூற்றிற்கு நன்றி தெரிவித்த ஜெயார், "இலங்கை போன்ற நாடுகளுக்கு சீனாவின் கொள்கை உற்சாகத்தைத் தருகிறது" என்று கூறினார். 

இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க சம்மதம் தெரிவித்தமைக்காக சீன ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜெயார் பின்னர் சீனப் பிரதமருடன் பேசும்போது தமக்குத் தேவையான ஆயுதங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டார். உள்நாட்டுப் பிரச்சியினைச் சமாளிக்க தமக்கு உதவி தேவைப்படுவதாகக் கூறிய ஜெயார், சீனாவினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 6 கரையோர ரோந்துப் படகுகளுக்காக தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், வடக்குக் கடற்பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் போக்குவரத்தையும், பயங்கரவாதிகளின் கடல் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கு தமக்கு மேலும் பல கரையோர ரோந்துப் படகுகள் தேவைப்படுவதாக அவர் கோரினார்.  ஜெயார் கேட்டுக்கொண்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தாம் வழங்கிவைப்பதாக சீனப் பிரதமர் சாஓ உறுதியளித்தார்.

அதன் பின்னர் சீன கம்மியூனிஸ்ட் கட்சியின் இராணுவ ஆணைக்குழுவின் தலைவரான டெங் சியாவோபிங் ஐச் சந்தித்தார் ஜெயார். அவரிடம் மேலும் ரோந்துப் படகுகளைத் தருமாறு கேட்டுக்கொண்டார். "பயங்கரவாதிகளிடமிருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ள பீரங்கிப் படகுகளைத் தாருங்கள். எமது வடக்குக் கரையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்தியாவிலிருந்து எமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்தியர்களையும், பயங்கரவாதிகளையும் தடுப்பதற்கு முன்னர் நீங்கள் எமக்குத் தந்து உதவிய பீரங்கிப் படகுகள் போன்று இன்னும் பல எமக்குத் தேவைப்படுகிறது" என்று அவர் கூறினார். 

 புரட்டாதி 1983 இல் ஜெயார் சீனாவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட காலத்திலிருந்து இலங்கைக்கான ஆயுத உதவிகளை சீனா தொடர்ச்சியாக வழங்கியே வந்திருந்தது. ஆகவே, இம்முறை செல்லும்போது  தனது இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களின் பட்டியல் ஒன்றினைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த ஜெயார் அதனை டெங்கிடம் கையளித்து , ஆயுதங்களுக்கான பணத்தினை இலகுக் கடன் அடிப்படியில் செலுத்தும் வசதிகளைச் செய்து தருமாறும் வேண்டிக்கொண்டார். ஜெயாரின் இந்த ஆயுதக் கொள்வனவுப் பயணத்தின் பின்னர் 1984 ஆடியில் சீன விமானப்படை உயர் அதிகாரிகளின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்தது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ஆடியில் லலித் அதுலத் முதலியும் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு சீனா பயணமாகியிருந்தார்.

இதே காலப்பகுதியில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஜெயார் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இதன்மூலம் பொருளாதார ரீதியில் பெருமளவு உதவிகளை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்திருந்தது. 

ஆனியில் அமெரிக்காவுக்கு ஜெயார் மேற்கொண்ட பயணத்தின் மூலம் பெருமளவு ஆயுதங்களையும், இராணுவத் தளபாடங்களையும் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனி 18 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரீகனை வெள்ளை மாளிகையில் ஜெயார் சந்தித்தார். தமிழ்ப் போராளிகளை அடக்குவதற்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் தமக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஜெயாரின் கோரிக்கையினைச் செவிமடுத்த ரீகன், ஜெயாரை அமெரிக்க உப ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோர்ஜ் ஷுட்ஸ், நிதிச் செயலாளர் மற்றும் அமெரிக்க உதவித்திட்டப் பணிப்பாளர் பீட்டர் மக்பேர்சன் ஆகியோருடன் பேசுமாறு கோரினார். 

ரீகன் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் பேசிய ஜெயார், புத்தளத்தில் அமைக்கப்பட்டுவந்த அமெரிக்க வானொலிச் சேவையின் அஞ்சல் நிலையக் கட்டுமாணப் பணிகள் குறித்தும், திருகோணமலைத் துறைமுகத்தினை அமெரிக்க கடற்படையின் பாவனைக்கு வழங்குவது குறித்தும் பேசினார். இப்பேச்சுக்களின்போது தாக்குதல் உலங்குவானூர்திகள் உள்ளிட்ட பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல், தென்னாபிரிக்கா, பாக்கிஸ்த்தான் ஊடாக இலங்கைக்கு வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான தனது விஜயங்களை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் இந்தியாவின் தலைநகர் தில்லியில் இந்திய அதிகாரிகளையும் ஜெயார் சந்திக்கத் தவறவில்லை. அங்கு இந்திய அதிகாரிகளிடம் பேசிய ஜெயார், தனது இராணுவத்திற்கான ஆயுத தளபாடங்களையும் பயிற்சிகளையும் இந்தியா விரிவாக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதே காலத்தில் லலித் அதுலத் முதலியும் உள்நாட்டில் முப்படைகளுக்குமான ஆட்சேர்ப்பினை பரந்தளவில் முடுக்கிவிட்டிருந்தார். 

தனது இராணுவ இயந்திரத்தை பெருப்பித்துப் பலப்படுத்த ஜெயாருக்கு அவகாசம் தேவைப்பட்டது. அதனை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியுடனான பேச்சுவார்த்தைகள் ஊடாகவும், உள்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைத் தொடர்ச்சியாக நடத்துவதனூடாகவும் பெற்றுக்கொள்ள அவர் முனைந்தார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழுத்தடிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் 

ஜெயார் திட்டமிட்ட இருவழிக் கொள்கையில் இந்திராவின் இலங்கை தொடர்பான கொள்கையும் ஒத்துப் போகலாயிற்று. தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பலப்படுத்துவதன் மூலம் தனது இந்திரா தனது முதலாவது திட்டத்தினை பூர்த்திசெய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அதாவது, பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய அரசியல் முறை ஒன்றினை உருவாக்குவது என்பது. இதனை அடைவதற்காக ஜெயாரின் புதிய பாதையான அணிசேராக் கொள்கையினை உதறிவிட்டு இந்தியாவின் எதிரிகளுடன் பயணிப்பதை தடுக்கவேண்டும் என்பதே இந்திராவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்திராவின் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை அடைந்து கொள்ளுதல் எனும் முதலாவது வழியினை ஜெயார் தனக்கான நேர அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளும் வழியாகப் பார்த்தார். இந்த அவகாசத்தினூடாக தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்திக்கொண்டு தமிழர்களின் தனிநாட்டிற்கான கனவினை முற்றாக அழித்துவிடுவதுடன் அதற்கான அடிப்படையினையும் முற்றாக இல்லாமல்ச் செய்ய அவர் எத்தனித்தார்.

ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது முறையாக ஜெயாருடன் தொலைபேசியில் பேசியபோது இந்திரா தனது விசேட தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை பேச்சுவார்த்தைகள் ஊடாக அடைய விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனை உடனடியாகவே ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவரது இராணுவத்தைக் கட்டியெழுப்ப அவருக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. ஆகவே, பேச்சுவார்த்தைக்கான இழுத்தடிப்புக்களைச் செய்வதூடாக அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தீர்மானித்தார்.

ஆவணி 25 முதல் 29 வரையான நாட்களின் பார்த்தசாரதியுடனான தனது பேச்சுக்களில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் அதிகாரம் அற்ற நிர்வாக நடைமுறையினை,  மீளவும் பிரதான தீர்வாக முன்வைத்தார். இவ்வாறு செய்வதன் மூலம் பேச்சுக்கள் காலவரையின்றி இழுபட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபையூடான தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை என்று பார்த்தசாரதி திட்டவட்டமாக ஜெயாரிடம் கூறினார்.  

ஆகவே, பேச்சுக்களில் சமாதானத் தூதராகச் செயற்பட்ட பார்த்தசாரதியின நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான காரியங்களில் ஜெயார் ஈடுபலானார். நான் பணிபுரிந்து வந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பத்திரிக்கைகள் ஜெயாரின் இந்த சேறுபூசும் வேலைக்கான பிரச்சார முன்னோடிகளாக செயற்பட ஆரம்பித்தன. இதன் நோக்கம் பாரத்தசாரதி உண்மையான சமாதானத் தரகர் அல்ல என்று சர்வதேசத்தின் முன்னால் காட்டுவதுதான்.

இந்த பிரச்சார நடவடிக்கையின் ஊடாக இரண்டு மாதங்களை ஜெயாரினால் இழுக்க முடிந்தது. ஆனால், இந்த இரு மாத காலத்தில் தமிழர்களும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டார்கள். துணிகரமான மட்டக்களப்பு சிறைச்சாலையுடைப்பு மற்றும் அமிர்தலிங்கத்தின் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கான வெற்றிகரமான சுற்றுப்பயணங்கள் ஆகியனவே தமிழர் தரப்பால் இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் என்று கூறலாம். அமிர்தலிங்கம் தனது சுற்றுப்பயணங்கள் ஊடாக பெற்றுக்கொண்ட சர்வதேச விழிப்புணர்வினை அவர் பயங்கரவாதிகளை ஆதரித்து வருகிறார் என்று சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்துவதன் மூலம் மழுங்கப்பண்ணலாம் என்று ஜெயார் எண்ணினார்.

பகீரதன் அமிர்தலிங்கம் ஆரம்பித்த ஆயுதக் குழு

சந்தர்ப்ப‌வசத்தால் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 19 வயது நிரம்பிய பல்கலைக்கழக மாணவனான வள்ளுவன் இராஜலிங்கத்தை தனது பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜெயார் பாவிக்க முனைந்தார்.  1983 ஆம் ஆண்டு ஐப்பசி 7 ஆம் திகதி தலைமன்னாரில் வைத்து வள்ளுவன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அமிர்தலிங்கத்தின் இரண்டாவது புதல்வனான பகீரதனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த‌ தனது சகோதரியான மலர்வள்ளியை சென்னையில் இறக்கிவிட்டு மீண்டு தலைமன்னார் வழியாக இலங்கை திரும்பிக்கொண்டிருந்தார் வள்ளுவன். பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட மூன்று கடிதங்களையும் வள்ளுவன் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அவை தமிழில் எழுதப்பட்ட கடிதங்கள். அன்று இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை தமிழில் இருக்கும் எந்த ஆவண‌மும் வைத்திருப்பவரைக் கைதுசெய்யப் போதுமானதாக இருந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையின் தலைவரான மாவை சேனாதிராஜாவிற்கு பகீரதனால் எழுதப்பட்ட கடிதங்கள் பொலீஸாரின் கவனத்தை ஈர்ந்திருந்தன. பகீரதனால் அமைக்கப்பட்டு வந்த இராணுவக் குழு ஒன்று பற்றி அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும்,  இந்த இராணுவ அமைப்பைனை உருவாக்க லிபிய அதிகாரிகளுடன் அமிர்தலிங்கம் நடத்திய பேச்சுக்கள் , பிரபாகரனுடன் அமிர்தலிங்கம் நடத்தியதாகக் கூறப்படும் சந்திப்புக்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இக்கடிதங்களை அமிர்தலிங்கத்தின் மீது அவதூறு பரப்பும் பிரச்சாரங்களுக்காக அரசு பாவித்தது. தேசிய தொலைக்காட்சியில் பேட்டி காணப்பட்ட வள்ளுவன், பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட கடிதங்களைப் படித்துக் காட்டுமாறு பணிக்கப்பட்டார். இப்பிரச்சாரங்களின் நோக்கம் அமிர்தலிங்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தின் பின்னால் நிற்கிறார் என்பதைக் காட்டுவதே. ஒருபுறம் அகிம்சை, காந்தீயம் என்று இடையறாது பேசிவரும் அமிர்தலிங்கம் இன்னொரு பக்கத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, ஆதரிக்கிறார் என்று அரசு பிரச்சாரகர்கள் பேசத் தொடங்கினர். 

மேலும், பகீரதனால் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆயுதக் குழுவே வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புலேந்திரனைப் படுகொலை செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது. வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தெவேளை புலேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பகீரதனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், "புலேந்திரனின் கொலையினை தமது அமைப்பு உரிமை கோருவதாக " எழுதப்பட்டிருந்தது.ஆகவே, தனது பிரச்சாரத்திற்காக அரசு இதனைப் பாவித்துக்கொண்டது. 

ஆனால், புலேந்திரன் .பி.ஆர்.எல்.எப் அமைப்பினராலேயே கொல்லப்பட்டிருந்தார். ஆனால், இதனைத் தெரிந்துகொண்டும் பகீரதனின் ஆயுத அமைப்பின் மீதே பொலீஸார் கொலைக்கான பழியினைப் போட விரும்பினர். அதற்கு பகீரதனைன் கடிதம் அவர்களுக்கு உதவியது.

வள்ளுவன் கைதுசெய்யப்பட்டு, தன்மீதான வன்மப் பிரச்சாரங்கள் அரசினால் முடுக்கிவிடப்பட்டிருந்தவேளை அமிர்தலிங்கம் லண்டனில் தங்கியிருந்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்ததோடு, பகீரதனால் எழுதப்பட்டதாக அரசால் கூறப்படும் கடிதங்கள் போலியானவை என்றும் அவர் கூறினார். "புலிகளுடனோ அல்லது வேறு எந்த ஆயுதக் குழுவினருடனோ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதுவிதமான தொடர்புகளையும் பேணவில்லை" என்று லண்டன் பி.பி.ஸி இற்கு அவர் பேட்டியளித்தார்.

அவரது கட்சியும் அமிர்தலிங்கத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியது. ஐப்பசி 17 ஆம் திகதி சென்னையில் கூடிய அதன் அரசியற்குழு அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டது. "எமது கட்சி வன்முறைகள் அற்ற அரசியல் பாதையினையே பின்பற்றுகிறது என்பதனை மீளவும் உறுதிப்படுத்துகிறோம். ஆகவே, எமது கட்சியினை எந்தவொரு வன்முறைச் சமபவத்துனுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைத்துப் பேசுவதையோ, அல்லது எந்தவொரு வன்முறை அமைப்புக்களுடனும் இணைத்து பரப்பப்பட்டுவரும் வன்மப் பிரச்சாரங்களையோ முற்றாக நிராகரிக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது. 

ஆகவே, அமிர்தலிங்கத்தின் மறுப்பையும், அக்கட்சியினரின் அரசியற்குழு வெளியிட்ட அறிக்கையினையும் பொய்யென்று நிரூபிக்க அரசாங்கம் மறுநாள் தகவல்த் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை நடத்தியது. பகீரதனால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் மற்றைய இரு கடிதங்களையும் அரசு அங்கு காண்பித்தது. இவற்றுள் ஒரு கடிதம் ஜெயராஜா என்பவருக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டிருந்தது. அதில் பகீரதனின் ஆயுதக் குழுவினரின் பயிற்சிக்காக மன்னாரில் கொள்வனவு செய்யப்பட்ட 13 ஏக்கர் காணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பிரேம்குமார் என்பவருக்கு எழுதப்பட்ட மூன்றாவது கடிதத்தில், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த தனது அமைப்பின் போராளிகளுக்கு எயர் ரைபிள்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக பகீரதனால் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான இந்தியாவின் பயிற்சியினால் கலவரமடைந்த அமிர்தலிங்கம்

இவற்றுள் உண்மை இல்லாமலும் இல்லை. பிரபாகரனை அமிர்தலிங்கம் சந்தித்ததும், அமிர்தலிங்கத்தின் மகனான பகீரதன் ஆயுத அமைப்பொன்றினை உருவாக்க முனைந்ததும் உண்மைதான். தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதமும் வழங்க முடிவெடுத்திருப்பதை அறிந்த போது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். ஏற்கனவே ஆயுத அமைப்புகளோடு அவருக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. 1982 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்திருந்த முடிவினை அனைத்து ஆயுதக் குழுக்களும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தன. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் அமிரின் கட்சியினர் பங்குபற்றியது ஆயுதக் குழுக்களுடன் நேரடி மோதலுக்கான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருந்தது. 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு வழங்கப்பட்ட தனிநாட்டிற்கான ஆணையினை அவர்கள் இழந்துவிட்டதாகவும், ஆகவே தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை தற்போது ஆயுத அமைப்புகளிடமே வந்திருப்பதாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்நோக்கியிருந்த சவால்கள், அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடனான தனது பேச்சுக்களின் பின்னர், இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசலில் ஈடுபடப்போவதாக தில்லியில் அறிவித்தபோது இன்னும் அதிகமானது. மன்னாரில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட விடயமான அரசுடன் பேச்சுக்களில் இனிமேல் ஈடுபடப்போவதில்லை எனும் தீர்மானத்தை தனது கட்சி கைவிடுவதாக அமிர்தலிங்கம் அறிவித்தார். "நிலைமை இப்போது மாற்றம் கண்டிருக்கிறது. பார்த்தசாரதியின் சமாதான முயற்சிகள் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டும் சாதகமான சூழ்நிலையொன்றினை ஏற்படுத்தியிருக்கிறது" என்று அமிர்தலிங்கம் அறிவித்தார்.

 

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

பகீரதன் அமிர்தலிங்கம் ஆரம்பித்த ஆயுதக் குழு

இது ஒரு புதிய செய்தியாக இருக்கிறதே?

தகவலுக்கு நன்றி ரஞ்சித்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

@ரஞ்சித் இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்து வருகிறோம்... மேலும் தொடருங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2023 at 02:50, நிழலி said:

@ரஞ்சித் இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்து வருகிறோம்... மேலும் தொடருங்கள்.

நன்றி

ஊரில் நிற்கிறேன்  நிழலி, ஒரு சில நாட்களில் எழுதத் தொடங்குவேன். நீங்களும் திரியைப் பூட்டி விடாதீர்கள்.

நன்றி!

Edited by ரஞ்சித்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2023 at 14:19, ரஞ்சித் said:

இழுத்தடிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் 

ஜெயார் திட்டமிட்ட இருவழிக் கொள்கையில் இந்திராவின் இலங்கை தொடர்பான கொள்கையும் ஒத்துப் போகலாயிற்று. தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பலப்படுத்துவதன் மூலம் தனது இந்திரா தனது முதலாவது திட்டத்தினை பூர்த்திசெய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அதாவது, பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய அரசியல் முறை ஒன்றினை உருவாக்குவது என்பது. இதனை அடைவதற்காக ஜெயாரின் புதிய பாதையான அணிசேராக் கொள்கையினை உதறிவிட்டு இந்தியாவின் எதிரிகளுடன் பயணிப்பதை தடுக்கவேண்டும் என்பதே இந்திராவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்திராவின் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை அடைந்து கொள்ளுதல் எனும் முதலாவது வழியினை ஜெயார் தனக்கான நேர அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளும் வழியாகப் பார்த்தார். இந்த அவகாசத்தினூடாக தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்திக்கொண்டு தமிழர்களின் தனிநாட்டிற்கான கனவினை முற்றாக அழித்துவிடுவதுடன் அதற்கான அடிப்படையினையும் முற்றாக இல்லாமல்ச் செய்ய அவர் எத்தனித்தார்.

ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது முறையாக ஜெயாருடன் தொலைபேசியில் பேசியபோது இந்திரா தனது விசேட தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை பேச்சுவார்த்தைகள் ஊடாக அடைய விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனை உடனடியாகவே ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவரது இராணுவத்தைக் கட்டியெழுப்ப அவருக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. ஆகவே, பேச்சுவார்த்தைக்கான இழுத்தடிப்புக்களைச் செய்வதூடாக அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தீர்மானித்தார்.

ஆவணி 25 முதல் 29 வரையான நாட்களின் பார்த்தசாரதியுடனான தனது பேச்சுக்களில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் அதிகாரம் அற்ற நிர்வாக நடைமுறையினை,  மீளவும் பிரதான தீர்வாக முன்வைத்தார். இவ்வாறு செய்வதன் மூலம் பேச்சுக்கள் காலவரையின்றி இழுபட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபையூடான தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை என்று பார்த்தசாரதி திட்டவட்டமாக ஜெயாரிடம் கூறினார்.  

ஆகவே, பேச்சுக்களில் சமாதானத் தூதராகச் செயற்பட்ட பார்த்தசாரதியின நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான காரியங்களில் ஜெயார் ஈடுபலானார். நான் பணிபுரிந்து வந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பத்திரிக்கைகள் ஜெயாரின் இந்த சேறுபூசும் வேலைக்கான பிரச்சார முன்னோடிகளாக செயற்பட ஆரம்பித்தன. இதன் நோக்கம் பாரத்தசாரதி உண்மையான சமாதானத் தரகர் அல்ல என்று சர்வதேசத்தின் முன்னால் காட்டுவதுதான்.

இந்த பிரச்சார நடவடிக்கையின் ஊடாக இரண்டு மாதங்களை ஜெயாரினால் இழுக்க முடிந்தது. ஆனால், இந்த இரு மாத காலத்தில் தமிழர்களும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டார்கள். துணிகரமான மட்டக்களப்பு சிறைச்சாலையுடைப்பு மற்றும் அமிர்தலிங்கத்தின் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கான வெற்றிகரமான சுற்றுப்பயணங்கள் ஆகியனவே தமிழர் தரப்பால் இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் என்று கூறலாம். அமிர்தலிங்கம் தனது சுற்றுப்பயணங்கள் ஊடாக பெற்றுக்கொண்ட சர்வதேச விழிப்புணர்வினை அவர் பயங்கரவாதிகளை ஆதரித்து வருகிறார் என்று சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்துவதன் மூலம் மழுங்கப்பண்ணலாம் என்று ஜெயார் எண்ணினார்.

பகீரதன் அமிர்தலிங்கம் ஆரம்பித்த ஆயுதக் குழு

சந்தர்ப்ப‌வசத்தால் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 19 வயது நிரம்பிய பல்கலைக்கழக மாணவனான வள்ளுவன் இராஜலிங்கத்தை தனது பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜெயார் பாவிக்க முனைந்தார்.  1983 ஆம் ஆண்டு ஐப்பசி 7 ஆம் திகதி தலைமன்னாரில் வைத்து வள்ளுவன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அமிர்தலிங்கத்தின் இரண்டாவது புதல்வனான பகீரதனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த‌ தனது சகோதரியான மலர்வள்ளியை சென்னையில் இறக்கிவிட்டு மீண்டு தலைமன்னார் வழியாக இலங்கை திரும்பிக்கொண்டிருந்தார் வள்ளுவன். பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட மூன்று கடிதங்களையும் வள்ளுவன் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அவை தமிழில் எழுதப்பட்ட கடிதங்கள். அன்று இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை தமிழில் இருக்கும் எந்த ஆவண‌மும் வைத்திருப்பவரைக் கைதுசெய்யப் போதுமானதாக இருந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையின் தலைவரான மாவை சேனாதிராஜாவிற்கு பகீரதனால் எழுதப்பட்ட கடிதங்கள் பொலீஸாரின் கவனத்தை ஈர்ந்திருந்தன. பகீரதனால் அமைக்கப்பட்டு வந்த இராணுவக் குழு ஒன்று பற்றி அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும்,  இந்த இராணுவ அமைப்பைனை உருவாக்க லிபிய அதிகாரிகளுடன் அமிர்தலிங்கம் நடத்திய பேச்சுக்கள் , பிரபாகரனுடன் அமிர்தலிங்கம் நடத்தியதாகக் கூறப்படும் சந்திப்புக்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இக்கடிதங்களை அமிர்தலிங்கத்தின் மீது அவதூறு பரப்பும் பிரச்சாரங்களுக்காக அரசு பாவித்தது. தேசிய தொலைக்காட்சியில் பேட்டி காணப்பட்ட வள்ளுவன், பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட கடிதங்களைப் படித்துக் காட்டுமாறு பணிக்கப்பட்டார். இப்பிரச்சாரங்களின் நோக்கம் அமிர்தலிங்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தின் பின்னால் நிற்கிறார் என்பதைக் காட்டுவதே. ஒருபுறம் அகிம்சை, காந்தீயம் என்று இடையறாது பேசிவரும் அமிர்தலிங்கம் இன்னொரு பக்கத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, ஆதரிக்கிறார் என்று அரசு பிரச்சாரகர்கள் பேசத் தொடங்கினர். 

மேலும், பகீரதனால் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆயுதக் குழுவே வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புலேந்திரனைப் படுகொலை செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது. வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தெவேளை புலேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பகீரதனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், "புலேந்திரனின் கொலையினை தமது அமைப்பு உரிமை கோருவதாக " எழுதப்பட்டிருந்தது.ஆகவே, தனது பிரச்சாரத்திற்காக அரசு இதனைப் பாவித்துக்கொண்டது. 

ஆனால், புலேந்திரன் .பி.ஆர்.எல்.எப் அமைப்பினராலேயே கொல்லப்பட்டிருந்தார். ஆனால், இதனைத் தெரிந்துகொண்டும் பகீரதனின் ஆயுத அமைப்பின் மீதே பொலீஸார் கொலைக்கான பழியினைப் போட விரும்பினர். அதற்கு பகீரதனைன் கடிதம் அவர்களுக்கு உதவியது.

வள்ளுவன் கைதுசெய்யப்பட்டு, தன்மீதான வன்மப் பிரச்சாரங்கள் அரசினால் முடுக்கிவிடப்பட்டிருந்தவேளை அமிர்தலிங்கம் லண்டனில் தங்கியிருந்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்ததோடு, பகீரதனால் எழுதப்பட்டதாக அரசால் கூறப்படும் கடிதங்கள் போலியானவை என்றும் அவர் கூறினார். "புலிகளுடனோ அல்லது வேறு எந்த ஆயுதக் குழுவினருடனோ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதுவிதமான தொடர்புகளையும் பேணவில்லை" என்று லண்டன் பி.பி.ஸி இற்கு அவர் பேட்டியளித்தார்.

அவரது கட்சியும் அமிர்தலிங்கத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியது. ஐப்பசி 17 ஆம் திகதி சென்னையில் கூடிய அதன் அரசியற்குழு அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டது. "எமது கட்சி வன்முறைகள் அற்ற அரசியல் பாதையினையே பின்பற்றுகிறது என்பதனை மீளவும் உறுதிப்படுத்துகிறோம். ஆகவே, எமது கட்சியினை எந்தவொரு வன்முறைச் சமபவத்துனுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைத்துப் பேசுவதையோ, அல்லது எந்தவொரு வன்முறை அமைப்புக்களுடனும் இணைத்து பரப்பப்பட்டுவரும் வன்மப் பிரச்சாரங்களையோ முற்றாக நிராகரிக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது. 

ஆகவே, அமிர்தலிங்கத்தின் மறுப்பையும், அக்கட்சியினரின் அரசியற்குழு வெளியிட்ட அறிக்கையினையும் பொய்யென்று நிரூபிக்க அரசாங்கம் மறுநாள் தகவல்த் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை நடத்தியது. பகீரதனால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் மற்றைய இரு கடிதங்களையும் அரசு அங்கு காண்பித்தது. இவற்றுள் ஒரு கடிதம் ஜெயராஜா என்பவருக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டிருந்தது. அதில் பகீரதனின் ஆயுதக் குழுவினரின் பயிற்சிக்காக மன்னாரில் கொள்வனவு செய்யப்பட்ட 13 ஏக்கர் காணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பிரேம்குமார் என்பவருக்கு எழுதப்பட்ட மூன்றாவது கடிதத்தில், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த தனது அமைப்பின் போராளிகளுக்கு எயர் ரைபிள்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக பகீரதனால் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான இந்தியாவின் பயிற்சியினால் கலவரமடைந்த அமிர்தலிங்கம்

இவற்றுள் உண்மை இல்லாமலும் இல்லை. பிரபாகரனை அமிர்தலிங்கம் சந்தித்ததும், அமிர்தலிங்கத்தின் மகனான பகீரதன் ஆயுத அமைப்பொன்றினை உருவாக்க முனைந்ததும் உண்மைதான். தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதமும் வழங்க முடிவெடுத்திருப்பதை அறிந்த போது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். ஏற்கனவே ஆயுத அமைப்புகளோடு அவருக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. 1982 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்திருந்த முடிவினை அனைத்து ஆயுதக் குழுக்களும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தன. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் அமிரின் கட்சியினர் பங்குபற்றியது ஆயுதக் குழுக்களுடன் நேரடி மோதலுக்கான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருந்தது. 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு வழங்கப்பட்ட தனிநாட்டிற்கான ஆணையினை அவர்கள் இழந்துவிட்டதாகவும், ஆகவே தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை தற்போது ஆயுத அமைப்புகளிடமே வந்திருப்பதாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்நோக்கியிருந்த சவால்கள், அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடனான தனது பேச்சுக்களின் பின்னர், இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசலில் ஈடுபடப்போவதாக தில்லியில் அறிவித்தபோது இன்னும் அதிகமானது. மன்னாரில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட விடயமான அரசுடன் பேச்சுக்களில் இனிமேல் ஈடுபடப்போவதில்லை எனும் தீர்மானத்தை தனது கட்சி கைவிடுவதாக அமிர்தலிங்கம் அறிவித்தார். "நிலைமை இப்போது மாற்றம் கண்டிருக்கிறது. பார்த்தசாரதியின் சமாதான முயற்சிகள் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டும் சாதகமான சூழ்நிலையொன்றினை ஏற்படுத்தியிருக்கிறது" என்று அமிர்தலிங்கம் அறிவித்தார்.

 

டெலோ இயக்கத்திலிருந்து இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட போராளி (செட்டி) ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டதாக அவரை இலங்கை தொலைக்காட்சியில் நேர்முகம் கண்டிருந்தார்கள் அதில் அமிருக்கும் போராளி குழுக்களுக்கும் தொடர்புள்ளது என்பதனை நிறுவவே  இலங்கையரசு முயன்றது.

ஐரிஸ் போராளி அமைப்பு கொண்டிருந்த இராணுவம் அமைப்பு தனிப்பட இயங்கியிருக்க அரசியல் அமைப்பு எந்த வித தொடர்புமில்லாமல் இயங்கியதனை போல ஒரு நிலை உருவாகாமல் அமிரின் அரசியல் கட்சியினையும் பயங்கரவாத தடைசட்டத்தினூடே எதிர்கொள்ளும் ஒரு முயற்சி என கருதவைக்கிறது.

அல்லது தனது அரசியல் எதிரிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியா என தெரியவில்லை ( சிறிமாவின் குடியுருமையினை பறித்தது போல ஒரு செயல்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

ஊரில் நிற்கிறேன்  நிழலி, ஒரு சில நாட்களில் எழுதத் தொடங்குவேன். நீங்களும் திரியைப் பூட்டி விடாதீர்கள்.

நன்றி!

ஆளைக் காணோமே என்று பார்த்தேன்.

சரி சரி விடுமுறையை அனுபவியுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அமீரின் திடீர் முடிவினை விமர்சித்த இயக்கங்கள் 

பேச்சுவார்த்தைகளில் மீளவும் ஈடுபடப்போவதாக அமிர்தலிங்கம் அறிவித்ததையடுத்து ஆயுத அமைப்புக்கள் அவர் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வெளியிடத் தொடங்கின. தமிழ் மக்களின் இலட்சியத்திற்கெதிரான துரோகி என்று அவரை அழைக்கத் தலைப்பட்டன. தமிழர்களை ஏமாற்றவே ஜெயார் முயல்கிறார் என்று கூறிய இயக்கங்கள், அமிர்தலிங்கம், ஜெயாருடன் பேச்சுக்களில் ஈடுபடக் கூடாதென்று வற்புறுத்தின. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை முற்றாக நசுக்கிவிடும் நோக்கத்திற்காக தனது இராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைக்கு கால அவகாசம் தேடவே ஜெயார் பேச்சுக்களை பயன்படுத்தப்போகிறார் என்று புலிகள் இயக்கம் சென்னையிலிருந்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. ஆகவே இச்சதிக்குத் துணைபோக வேண்டாம் என்றும் அமிர்தலிங்கத்தை புலிகளின் அறிக்கை கோரியிருந்தது.

பிரபாகரனைச் சந்தித்த அமிர்தலிங்கம்

ஆகவே, தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காக அமிர்தலிங்கம் பிரபாகரனைச் சந்தித்தார். ஒரு திட்டத்திற்கு அமையவே இந்திரா காந்தி செயற்பட்டுவருவதாக பிரபாகரனிடம் தெரிவித்தார் அமிர். அத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே ஜெயாருடனான பேச்சுக்களில் ஈடுபடுமாறு தன்னை இந்திரா கேட்டுக்கொண்டதாக அமிர் கூறினார். தனது நெறிப்படுத்தல்களுக்கு அமைவாகச் செயற்படுமாறு இந்திரா தன்னைக் கேட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். தனது இக்கட்டான நிலையினைப் புரிந்துகொள்ளுமாறு அமிர் பிரபாகரனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், அமிர் மீதான விமர்சனங்களை புலிகளோ அல்லது வேறு இயக்கங்களோ கைவிடவில்லை. பிரபாகரனைச் சென்று சந்தித்தமைக்காக அமிர்தலிங்கத்தைக் கடுமையாகச் சாடத் தொடங்கினார் ஜெயார்.

ஆயுத அமைப்பொன்றினை உருவாக்கிய அமிர்தலிங்கமும் அவரது புதல்வன் பகீரதனும்

தமிழ் ஈழத் தேசிய இராணுவம் எனும் ஆயுத அமைப்பினை அமிரின் மகனான பகீரதன் ஆரம்பித்திருந்ததும் உண்மைதான். இந்தியாவின் ஆயுத மற்றும் பயிற்சி உதவிகளினூடாக ஆயுத அமைப்புக்கள் பலம் பெற்று விடும் என்றும், இதனால் தமிழர்களின் தலைமைக்கான போட்டியில் தாம் தோற்றுவிடக் கூடும் என்கிற அமிரின் அச்சத்தினாலேயே பகீரதனின் ஆயுத அமைப்பு உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை. மேலும், ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடலாம் என்கிற அமீரின் அச்சமும் அவரது புதல்வனின் ஆயுத அமைப்பின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கென்று தனியான ஆயுத அமைப்பொன்றினை உருவாக்குவதே தமிழ் மக்கள் மீதான செல்வாக்கினைத் தக்கவைத்துக்கொள்ளவும், தலைமைப்பதவிக்கான போட்டியினை சமாளிக்கவும் ஒரே வழியென்று அமிர் நம்பினார். ஆகவேதான்  தமது கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுத அமைப்பொன்று இயங்கவேண்டும் என்று அமிர்தலிங்கமும், பகீரதனும் முடிவெடுத்தார்கள். இதன் அடிப்படையிலேயே பகீரதனால் தமிழ் ஈழத் தேசிய இராணுவம் என்கிற ஆயுத அமைப்பு உருவாக்கப்பட்டது. லண்டனில் உள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் கிளை மூலம் சேர்க்கப்பட்ட நிதியினைக் கொண்டு மதுரையில் 13 ஏக்கர்கள் நிலம் பகீரதனால் தனது ஆயுத அமைப்பின் பயிற்சி நடவடிக்கைகளுக்கென்று வாங்கப்பட்டது. இந்த அமைப்பினர் அக்காலத்தில் ஆயுதங்கள் எவற்றையும் கொண்டிருக்காமையினால் அவர்களுக்கான பயிற்சித் திட்டம் ஒன்று அப்போது இருந்திருக்கவில்லை. ஆகவே, இவ்வமைப்பில் ஆரம்பத்தில் சேர்ந்துகொண்ட இளைஞர்களும் பிற்காலத்தில் விரக்தியடைந்து அவ்வியக்கத்திலிருந்து விலக ஆரம்பித்தார்கள். அமிர்தலிங்கத்தினாலும், பகீரதனாலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுத அமைப்பின் மிகச்சிறிய ஆயுட்காலத்தின் சரித்திரம் இதுதான். 

இந்த ஆயுத அமைப்பினை ஏனைய அமைப்புக்கள் எள்ளி நகையாட ஆரம்பித்தன. "அகிம்சையே எமது மூச்சு, ஆயுதங்களைத் தூர எறியுங்கள் என்று கோஷமிடும் தலைவர்கள் தமக்கென்று ஆயுத அமைப்பொன்றினை உருவாக்குவது ஏன்?" என்று அவர்கள் கேள்வியெழுப்பினர். ஆகவே. பகீரதனால் எழுதப்பட்ட அக்கடிதங்களை அமிர்தலிங்கத்தை அரசியலில் ஓரங்கட்டும் நடவடிக்கைகளுக்கு ஜெயார் பாவித்தார்.

இரு தினங்களுக்குப் பின்னர், அதாவது புரட்டாதி 19 ஆம் திகதியன்று அதுவரையில் அமிர்தலிங்கத்தின்மீது முன்வைக்கப்பட்டு வந்த பிரச்சாரங்கள் திடீரென்று நிறுத்தப்பட்டன. புரட்டாதி 18 ஆம் திகதி தில்லியில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் இந்திரா காந்தி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் அவர் வெளியிட்ட மிகவும் காட்டமான அறிக்கையே விமர்சனங்கள் நிறுத்தப்படக் காரணமாகியது என்று எமக்கு சொல்லப்பட்டது.

அந்த அறிக்கையில் இலங்கையில் மிகவும் அபாயகரமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாக அவர் கூறியிருந்தார். அதற்கான காரணங்களாக பின்வருவனவற்றை அவர் முன்வைத்திருந்தார்,

1. மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரியளவிலான சிங்களக் குடியேற்றம் ஒன்று முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

2. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பாராளுமன்றத்தில் தமது ஆசனங்களை இழந்து வருகின்றார்கள்.

3. பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே இலங்கையரசு இழுத்தடித்து வருகிறது.

 

ஆகவே, பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க தனது விசேட தூதுவர் பார்த்தசாரதியை கொழும்பிற்கு அனுப்பவிருப்பதாக இந்திரா தெரிவித்தார்.

பாராளுமன்ற ஆசனங்களை இழந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர்

ஆறாம் திருத்தச் சட்டத்திற்கமைய, இலங்கையின் ஒற்றையாட்சி நடைமுறையினை முழுதாக ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது பதவிகளை அவர்கள் இழக்க நேரிடும் என்கிற அரசின் கட்டளையின்படி கார்த்திகை 4 ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழந்தார்கள். அதுவரை அமிர்தலிங்க்கம் வகித்துவந்த எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவியும் இதன்மூலம் காலியாகியது. 34 வயதே நிரம்பியிருந்த அநுர பண்டாரநாயக்க அமிர்தலிங்கம் வகித்துவந்த எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவிக்குத் தெரிவானார்.

1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஆறில் ஐந்து பெரும்பான்மையினைப் பாவித்து ஆட்சி செய்துவந்த ஜெயார், அனுபவம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர ஒருவரை எதிர்கொண்டதன்மூலம் பாராளுமன்றத்தின்மீதான தனது செல்வாக்கினை முழுமையாக்கிக் கொண்டார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தகாலத்தில் தனக்கு அஞ்சி அடிபணிந்து நடக்கவேண்டும் என்று ஜெயார் எதிர்பார்த்தார். ஆனால், அது நடவாது போகவே அமிரின் அரசியல் இருப்பை எப்படியாவது அழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டு வந்தார் ஜெயார்.

நான் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் கூறியவாறு, ஜெயார் தனது பிரதான அரசியல் எதிரியான சிறிமாவை அவரது சிவில் உரிமைகளைப் பறித்தும், அவரது மூன்று பிள்ளைகளுக்குள் பிரிவினையினை ஏற்படுத்தியும், சிறிமாவின் 8 பேர் அடங்கிய கட்சியை உடைத்தும் அரசியல் ரீதியில் அவரைத் தோற்கடித்திருந்தார். சிறிமாவின் புதல்விகளில் ஒருவரும், பிரபல சிங்களத் திரைப்பட நடிகரான விஜயவைத் திருமணம் முடித்திருந்தவருமான சந்திரிக்காவுக்கும், சிறிமாவின் ஒரே ஆண் மகனும், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை எதிர்காலத்தில் ஏற்கும் கனவில் இருந்தவருமான அநுரவுக்கும் இடையில் பிரிவினையினை உருவாக்குவதில் ஜெயார் வெற்றி கண்டார்.

 

சந்திரிக்காவுக்கும் அநுரவுக்கும் இடையிலான பிரிவினை சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிற்குள்ளும்  பிரிவினையினை உருவாக்கியது. 1981 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான மைத்திரிபால சேனநாயக்கவுடன் கட்சியில் இருந்து வெளியேறிய அநுர பண்டாரநாயக்க, தனது புதிய கட்சிக்கு சுதந்திரக் கட்சி ‍- எம் என்று பெயரிட்டார். வெறும் மூன்றே உறுப்பினர்களை அவரது கட்சி கொண்டிருந்தபோதும்கூட அக்கட்சி உடனடியாக பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதுடன், அக்கட்சியின் வரவினை வெகுவாகப் பாராட்டிய ஜெயார், அக்கட்சியினை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியென்றும் அறிவித்தார். ஜெயாரின் இந்தச் சதியே அமிர்தலிங்கத்தின் எதிர்கட்சித் தலைவர் எனும் பதவி அநுரவுக்குக் கிடைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டது மகிழ்ச்சி ரஞ்சித்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தசாரதியின் வருகை

பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கிறார் என்றும் தன்னை ஏமாற்றப்பார்க்கிறார் என்றும் இந்திரா காந்தி தன்னைப்பற்றிக் காட்டமாக வெளியிட்ட கருத்துக்கள் ஜெயாரைக் கலவரமடையச் செய்யவில்லை. அவரது திட்டமே அதுதான். அத்திட்டத்தின்படி பாரத்தசாரதியை மீண்டும் கொழும்பிற்கு வந்து இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு ஜெயார் அழைத்தார்.

கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த பார்த்தசாரதி, ஜெயார், காமிணி திசாநாயக்கா மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோருடன் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தினார். இவர்களுடனான பார்த்தசாரதியின் பேச்சுக்கள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தங்களைத் தாமே ஆளக்கூடிய,  அதிகாரம் மிக்க பிராந்தியங்களை உருவாக்குவது தொடர்பாகவே அமைந்திருந்தது. தமிழர்கள் தனிநாடு ஒன்றே தீர்வு எனும் நிலைக்கு வந்திருப்பதால் அரசு முன்வைக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வினை தமிழர்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு தீர்வாக  ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஜெயாரிடமும் அவரது அமைச்சர்களிடம் தெரிவித்தார் பார்த்தசாரதி.

கார்த்திகை 10 ஆம் திகதி நிறைவுபெற்றிருந்த பார்த்தசாரதியின் இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களின் நோக்கமே  மாகாணம் ஒன்றிற்குள் இரண்டு அல்லது அதற்கு மேலதிகமான மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உள்ளடக்குவதற்கான ஜெயாரின் சம்மதத்தினைப் பெற்றுக்கொள்வதுதான். ஆனால், இப்பேச்சுக்களை கால அவகாசம் எடுக்கும் நோக்கத்திற்காகவே பாவிக்க நினைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் இணைப்பை அம்மாவட்டங்களில் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதன் மூலமாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் உறுப்பினர்களின் சம்மதத்தின் மூலமாகவும் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று கூறினார்.

 ஜெயாரின் பரிந்துரைகளை கார்த்திகை 10 ஆம் திகதி ஜனாதிபதிச் செயலகப் பிரிவு அறிக்கை வடிவில் வெளியிட்டது. இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாட்டில் நிலவும் வன்முறைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று ஜனாதிபதி கருதுவதாகவும் அவ்வறிக்கை கூறியது. மேலும், தமிழர்கள் இப்பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு பிரிவினைவாதத்தினைக் கைவிட்டு விடவேண்டும் என்றும், திருகோணமலைத் துறைமுகத்தை இலங்கையின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விட்டுவிடவேண்டும்  என்றும் ஜெயார் எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கை கூறியது.

இரண்டிற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மாகாணம் ஒன்றிற்குள் இணைப்பதற்கு ஜெயார் இணங்கியிருப்பதாக நினைத்த பார்த்தசாரதி, அது ஒரு சாதகமான விளைவு என்று கருத்துப்பட பிராந்திய அதிகாரசபைகளுக்கான தனது விருப்பத்தினை வெளிப்படுத்தி தனியான அறிக்கையொன்றினை வெளியிட்டார்.  "ஒன்றுபட்ட இலங்கைக்குள், தகுந்த அதிகாரங்களைக் கொண்ட பிராந்திய அலகுகளை உருவாக்குவது குறித்தே இப்பேச்சுக்கள் அமைந்திருந்தன" என்று அவரது அறிக்கை கூறியது.

ஆனால், ஜெயாரின் திட்டத்தினை போராளி அமைப்புக்கள் தெளிவாகப் புரிந்திருந்தன. "ஜெயாரின் காலம் கடத்தும் தந்திரமே இந்தப் பரிந்துரைகள்" என்று புலிகள் அமைப்பு இதனைச் சாடியிருந்தது. மேலும், ஜெயாரின் பொறிக்குள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அகப்பட்டு விடக்கூடாதென்று எச்சரித்திருந்ததுடன், தனிநாடு எனும் தமது கோரிக்கை பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டது என்றும் கூறியது.

இந்திராவைச் சந்தித்த ஜெயார்

பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள் இந்தியா சென்றிருந்த ஜெயாரை தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டிருந்தார் இந்திரா. தனது சகோதரருடன் கார்த்திகை 21 ஆம் திகதி தில்லி பயணமானார் ஜெயார். வெளிவிவகார அமைச்சர் ஹமீதும் ஏனைய அதிகாரிகளும் இருநாட்களுக்கு முன்பாகவே தில்லிக்குப் பயணமாகியிருந்தனர். இவர்களுடன், பார்த்தசாரதியின் அழைப்பினை ஏற்று தொண்டைமானும் தில்லிக்குப் பயணமாகியிருந்தார்.

அதே காலப்பகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தில்லிக்கு அழைத்திருந்த இந்திரா, இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்தும், தமிழர்களின் அப்போதைய நிலைப்பாடு குறித்தும் தனக்கு விளக்கமளிக்குமாறு கோரியிருந்தார். ஆகவே, அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் சென்னையிலிருந்து தில்லிக்குப் பயண்மாகியிருந்தனர். இவர்களுடன் இணைந்துகொள்ள கொழும்பிலிருந்து கலாநிதி நீலன் திருச்செல்வமும் சென்றிருந்தார். முன்னணியினருக்கான அழைப்பு ஜெயாரை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன், போராளி அமைப்புக்களை அசெளகரியத்திற்கும் உள்ளாக்கியிருந்தது. ஆகவே, வழமைபோலவே இந்தியா மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார் ஜெயார். அமிர்தலிங்கத்திற்கு அரசுத் தலைவர் ஒருவருக்கு நிகரான அந்தஸ்த்தை இந்தியா கொடுத்திருப்பது குறித்து இலங்கையின் அரச ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைதிருந்தன. மேலும், இந்திரா காந்தி தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருவதாகவும் அவை குற்றம் சுமத்தின. 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அரசியல் நிலைப்பாட்டினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் பார்த்தசாரதி அவர்களுடன்  கார்த்திகை 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தினார். அவருடன் பேசிய முன்னணியின் தலைவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பது, தமிழ்பேசும் காவல்த்துறையினை அமைப்பது ஆகிய இருவிடயங்களில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாரில்லை என்று தெரிவித்தனர். பார்த்தசாரதி பின்னர் தொண்டைமானையும் சந்தித்துப் பேசினார்.

அரசுத்தலைவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தில்லியின் அசோகா விடுதியில் ஜெயாரைச் சந்தித்தார் பார்த்தசாரதி. ஜெயாரின் பரிந்துரைகளுக்கான முன்னணியின் பதிலை ஜெயாரிடம் அவர் விளக்கினார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைத்து மாகாணங்கள் ஒன்றிற்குள் உள்வாங்குவதான ஜெயாரின் பரிந்துரையினை முன்னணியினர் ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் ஜெயாரிடம் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் இணைப்பென்பது மாகாணம் ஒன்றிற்கு வெளியேயும் பரவுவதற்கான சம்மதத்தினையும் முன்னணியினர்  கோரியிருந்தனர். மேலும், திருகோணமலைத் துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை முன்னணியினர் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், ஆனால் துறைமுகப் பகுதியின் எல்லைகள் சரியான முறையில் நிர்ணயிக்கப்படவேண்டும் என்று கோரியிருப்பதாகவும் பார்த்தசாரதி ஜெயாரிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர், முன்னணியினர் ஜெயாரின் பரிந்துரைகளுடன் முரண்படும் விடயங்கள் குறித்து பார்த்தசாரதி அவரிடம் விளக்கினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதை முன்னணியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், தமிழ் பொலீஸ் படையொன்றினை உருவாக்குவது குறித்த முன்னணியின் கோரிக்கையினையும் அவர் ஜெயாரிடம் முன்வைத்தார். அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொறுப்பினை அம்மக்களிடமே விட்டுவிடுவதாக முன்னணி கூறியிருப்பதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார்.

முன்னணியினரின் நிலைப்பாட்டிற்கு ஜெயவர்த்தன வழங்கிய பதில்

1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான இணைப்பினை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நடத்தலாம், ஆனால் மாகாணங்களுக்கு வெளியே இணைப்பு பரவுவதனை அனுமதிக்க முடியாது.

2. வடக்குக் கிழக்கு மகாணங்களை ஒருபோதுமே இணைக்க அனுமதிக்க முடியாது.

3. தமிழ் பொலீஸ் படையினை அமைக்க அனுமதிக்க முடியாது. ஆனால், குறிப்பிடத் தக்க சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு தரப்பட முடியும்.

 

தமது வேண்டுகோள்களுக்கு ஜெயார் வழங்கிய பதிலை பார்த்தசாரதியூடாக அறிந்தபோது அமிர்தலிங்கம் கோபமடைந்தார். "வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பிலோ, தமிழ் பொலீஸ் படையின் உருவாக்கத்திலோ எம்மால் எதனையும் விட்டுக் கொடுக்க முடியாது" என்று பார்த்தசாரதியிடம் தெரிவித்தார் அமிர். "இவற்றில் விட்டுக்கொடுப்புக்களை நான் மேற்கொண்டால், சென்னைக்குத் திரும்பிச் செல்வதே எனக்கு இயலாது போய்விடும்" என்று அவர் கூறினார். கொதித்துப்போயிருந்த அமிர்தலிங்கத்தை ஆசுவாசப்படுத்த பார்த்தசாரதிக்கு அதிக நேரம் தேவைப்பட்டிருந்தது.

பேச்சுக்களின் பலவீனமான நிலையினை உணர்ந்துகொள்ளத் தலைப்பட்ட பார்த்தசாரதி, தனது நடைமுறையினை மாற்றத் தலைப்பட்டார். அதன்படி, இந்திரா காந்திக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்றை அவர் ஏற்படுத்தினார். பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மாநாடு நடக்கும் நாளுக்கு ஒருநாள் முன்னதாக, கார்த்திகை 23 ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெற்றது.

ஜெயாரிடம் பேசிய இந்திரா, ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், இலங்கையைப் பிரிக்கும் எந்த முயற்சியினையும் தான் முற்றாக எதிர்ப்பதாகவும் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு ஒன்றினைப் பற்றிச் சிந்திக்குமாறு அவர் ஜெயாரைக் கேட்டுக்கொண்டார். தமிழ் அகதிகளால் இந்தியா எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வு தொடர்பாகவும் ஜெயாரிடம் அவர் விளக்கினார்.

இந்திராவுக்குப் பதிலளித்த ஜெயார், தன்பக்க நியாயங்களைக் கூறினார்.

தமிழர்களை இலங்கையினை கட்டுப்படுத்திவிடுவார்கள் என்று சிங்களவர்கள் பயப்படுவதாக அவர் கூறினார். தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்க சிறிமா முயல்வதால், தனது அரசியல் பலம் ஆட்டங்கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுநலவாய மாநாடு கார்த்திகை 24 ஆம் திகதி ஆரம்பமானது. மாநாட்டில் பேசிய ஜெயார், இந்திராவை வேண்டுமென்றே சீண்டிப் பேசினார். மகாத்மா கந்தியுடனும், நேருவுடனும் தான் மேற்கொண்ட பேச்சுக்களை நினைவுகூர்ந்த ஜெயார், அவர்களை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். காந்தியின் அகிம்சையினையும் நேருவின் பக்கச்சார்பின்மையினையும் தாம் விருப்பத்துடன் கடைக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

"நீண்டகாலம் வாழும் வரம் எனக்குக் கிடைத்தால், எமது மக்கள் எவருக்கும் அடிபணியாது வாழும் நிலையினை உருவாக்குவேன். இலங்கையில் அனுக்குண்டு ஒன்று வெடித்தால் அங்கிருக்கும் 15 மில்லியன் மக்களும் இறக்கலாம். இலங்கையினை ஆக்கிரமிக்க எவர் நினைத்தாலும், அங்குவாழும் 15 மில்லியன் மக்களும் போரிட்டுச் சாவார்களே அன்றி, அடிமைகளாக வாழ மாட்டார்கள்" என்று இந்தியா தனது நாட்டை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது எனும் தொனிப்பட பேசி முடித்தார்.

தொண்டைமான் மறுநாள் இந்திரா காந்தியைச் சென்று சந்தித்தார். ஜெயவர்த்தனவின் பேச்சினை மேற்கோள் காட்டிப் பேசிய தொண்டைமான், "ஜெயார் உங்களின் தகப்பனாரை வெகுவாகப் பாராட்டிப் பேசினார், உங்களுக்கு அது பூரண திருப்தியைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

தொண்டைமானின் பேச்சைக் கேட்ட இந்திரா கோபத்தில் வெடித்தார். "அந்த வயோதிபர் எனது தந்தையைப் புகழவில்லை. நான் எனது தகப்பனாரைப் போழ ஆட்சிசெய்யவில்லை என்று முழு உலகிற்கும் கூறி எள்ளி நகையாடுகிறார்" என்று கூறினார்.

மார்கழியில் அமெரிக்கா சென்றிருந்த இந்திரா, நியு யோர்க் நகரில் வாழும் இலங்கைத் தமிழர்களுடன் பேசிய இந்திரா ஜெயாரின் பேச்சுக் குறித்து பிரஸ்த்தாபித்தார். "நான் விரும்பினால் உடனடியாகவே இலங்கை மீதான ஆக்கிரமிப்பை நடத்த முடியும், ஆனால் சிங்களவர்கள் மத்தியில் பாதுகாப்பின்றி வாழும் மலையகத் தமிழர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதனாலேயே தயக்கமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கை இணைப்பதை மறுத்த ஜெயாரும், அதனைத் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த அமிர்தலிங்கமும்

இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்குப் பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த கோவாவிற்கு தலைவர்கள் விடுமுறையினைக் களிக்கச் சென்றனர். ஜெயவர்த்தனவுடனானான தனது சம்பாஷணைகளைத் தொடர்வதற்காக பார்த்தசாரதியும் கோவாவிற்குச் சென்றிருந்தார். இச்சம்பாஷ்ணைகளில் அதிகாரம் மிக்க அலகுகள் குறித்தும், இவ்வலகுகளுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய அதிகாரங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

ஆனால், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் அலகுகள் எனும் கருத்தினை எதிர்த்த ஜெயார், அலகுகளுக்காக அதிகாரங்களை மேம்படுத்துவது குறித்துச் சிந்திக்கலாம் என்று தெரிவித்தார். எப்படியிருந்தாலும், பேச்சுக்களை மேலும் இழுத்தடிப்பதற்கான இன்னொரு வழிமுறையினை அவர் முன்வைத்தார். அதுதான் சர்வகட்சி மாநாடு. பார்த்தசாரதியினால் முன்வைக்கப்படும் அதிகாரம் மிக்க அலகுகள் எனும் தீர்வினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையில் அனைத்துப் பகுதிகளில் இருக்கும் அரசியற்கட்சிகளையும் ஒரு மேடைக்கு அழைத்து, அவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்கள் அனைவரினதும் சம்மதத்தினைப் பெறுவது அவசியம் எனத் தெரிவித்தார். இதனை பார்த்தசாரதியும் ஏற்றுக்கொண்டார்.

தனது முயற்சி வெற்றியளிப்பதாகக் கருதிய பார்த்தசாரதியும், ஜெயாரை மேலும் சில தினங்கள் தில்லியில் தங்கிச் செல்லுமாறு வேண்டிக்கொண்டார். மேலும், இந்திராவைச் சந்திப்பதற்கான ஜெயாரின் சம்மதத்தையும் பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார்.

கார்த்திகை 29 ஆம் திகதி பொதுநலவாய அமைப்பு நாடுகளின் கூட்டம் நிறைவுபெற்றது. அன்றிரவு தனது இறுதி முயற்சியை செய்ய எண்ணினார் பார்த்தசாரதி. ஜெயவர்த்தன தங்கியிருந்த விடுதிக்கு நீலன் திருச்செல்வத்தையும், தொண்டைமானையும் அழைத்துச் சென்றார் . அங்கு பரந்துபட்ட அதிகாரப் பரவலாக்கலுக்கான தனது திட்டத்தை முன்வைத்தார். மகாணசபை அதிகாரப் பரவலாக்கம் அல்லது பிராந்திய அதிகாரப் பரவலாக்கம் என்பன ஜெயார் முன்வைக்க விரும்பும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் காட்டிலும் தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய உகந்தவை என்று அவர் கூறினார். "அதிகாரத்தையும் வளங்களையும் மேம்படுத்துவதற்கு இவ்வகையான தீர்வே உகந்ததாக இருக்கும். தனிநாடு எனும் தீர்வை முன்வைக்கும் தமிழருக்கு அதற்கு மாற்றான, உகந்த தீர்வொன்றினை முன்வைப்பது அவசியமாகும்" என்று அவர் வாதிட்டார்.

 லங்கா கார்டியன் பத்திரிக்கையில் பின்னாட்களில் எழுதிய நீலன் அன்று ஜெயவர்த்தனவின் விடுதியில் நடந்த சம்பாஷணை குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.

"ஜெயவர்த்தன களைத்துப் போய் சோர்வாகக் காணப்பட்டார். பார்த்தசாரதி முன்வைத்த அதிகாரம் மிக்க அலகுக்கான மாதிரியினை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு நடப்பவை குறித்து அக்கறையற்றுக் காணப்பட்ட ஜெயார், தனக்கு விளக்கமளிக்கப்பட்டுக்கொண்டிருந்த விடயங்கள் குறித்து தெளிவான சிந்தனையினைக் கொண்டிருந்தவர் போன்று எனக்குத் தெப்படவில்லை. அன்றைய சம்பாஷணைகள் முடிந்து பார்த்தசாரதியுடன் நாம் அங்கிருந்து மீளும்போது, "எனக்கு 73 வயதாகிறது, தொண்டைமானுக்கு 70 வயது. அந்த மனிதருக்கோ 80 ஐத் தாண்டிவிட்டது. அவரது வயது அவர்மீது கடுமையான அழுத்தத்தினைக் கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று எம்மிடம் அவர் தெரிவித்தார். ஆனால், ஜெயவர்த்தனா எவராலும் மதிப்பிப்பட முடியாத, புதிராகவே தெரிந்தார். நாம் அன்றிரவு பேசிய விடயங்கள் குறித்து அவர் தொடர்ச்சியாக சிந்த்தித்து வந்ததோடு மறுநாளே மாகாணசபைகளை உருவாக்குவது குறித்து சம்மதமும் தெரிவித்திருந்தார்". 

கார்த்திகை 30 ஆம் திகதி மீண்டும் ஜெயாரைச் சந்தித்த பார்த்தசாரதி, நீலன், மற்றும் தொண்டைமான் ஆகியோர் முன்னிரவு தம்மால் பிரஸ்த்தாபிக்கப்பட்ட மாகாணசபை அலகுகள் குறித்து வினவினர். அன்று காலை ஜெயார் உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்பட்டதாக நீலன் என்னிடம் தெரிவித்தார். பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த சிபாரிசுகள் குறித்து தான் நீண்டநேரம் சிந்தித்ததாக ஜெயார் கூறியிருக்கிறார். "உள்நாட்டில் இதற்குக் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பலாம். ஆனாலும், மாகாணசபைகளை அமைக்க நான் தீர்மானித்துவிட்டேன்" என்று ஜெயார் அவர்களிடம் கூறினார்.  "மிகத் துணிவான இந்த முடிவினை எடுத்ததற்காக நான் ஜனாதிபதியைப் பாராட்டினேன்" என்று தொண்டைமான் என்னிடம் தெரிவித்தார்.

அப்போது, சர்வகட்சி மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பங்குபற்றுவதில் இருக்கும் சிக்கல் குறித்து பாரத்தசாரதி தனது கரிசணையை முன்வைத்தார். முன்னணியினரையும் ஜெயார் சர்வகட்சி மாநாட்டிற்கு அழைக்கவேண்டும் என்று அவர் கோரினார். அதற்குப் பதிலளித்த ஜெயார், பிரிவினைவாதத்தைக் கைவிடும்வரைக்கும் முன்னணியினருடன் பேசுவதில்லை என்பது அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். அதன்பின்னர் பேசிய பார்த்தசாரதி, முன்னணியினரும் அரசாங்கத்துடன் பேசுவதில்லை எனும் முடிவில் இருப்பதாகக் கூறினார். "அரசாங்கமும் முன்னணியினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே அவசியமானது" என்று பார்த்தசாரதி கூறவும், தான் இவ்விடயத்தை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்போவதாக ஜெயார் பதிலளித்தார்

தமக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட மாகாணசபைகள் முறையிலான தீர்வுகுறித்த நகலை ஜெயாரிடம் அவர்கள் மூவரும் முன்வைத்தனர். அதனை வாங்கிக் கவனமாகப் படித்தார் ஜெயார். அதனைப் படித்துவிட்டு பார்த்தசாரதியைப் பார்த்து பின்வருமாறு வினவினார் ஜெயார், "இதில் நான் எங்கே கைய்யொப்பம் இடுவது?".  அதற்குப் பதிலளித்த பார்த்தசார்தி, "இது ஒரு ஒப்பந்தம் அல்ல, நகல் மட்டுமே. ஆகவே, இங்கு கைய்யொப்பங்கள் தேவையில்லை" என்று கூறினார்.

கார்த்திகை 30 ஆம் திகதி மாலை இந்திராவைச் சென்று சந்தித்தார் ஜெயார். பேசப்பட்டு வந்த மாகாணசபை முறைபற்றி அவர்கள் கலந்துரையாடினர். பேசுவார்த்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த இந்திரா, வடக்கும் கிழக்கும் இணைந்த ஒற்றையலகு ஒன்று உருவாவதே சரியானது என்று கூறினார். இதனை ஆட்சேபித்த ஜெயார், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் பெரும்பான்மையாக வாழ்வதாகவும், கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்படும் பட்சத்தில் இச்சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் எதிர்காலம் அச்சுருத்தலுக்கு உள்ளாகும் என்றும் கூறினார். மேலும், தனது ஆதரவாளர்களின் நம்பிக்கையினை தான் இழப்பது ஆபத்தானது என்றும் கூறினார். ஆகவே, தன்னால் மாகாணசபைகளை மட்டுமே அமைக்க முடியும் என்றும், தேவையேற்படின் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழ்த் தலைமை விரும்பினால் வடக்குக் கிழக்கு இணைப்பினை சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்து தமக்கான ஆதரவினைத் திரட்டிக்கொள்ளட்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

  ஜெயார் கொடுத்த வாக்குறுதியினால் இந்திரா திருப்தியடைந்தார். "இறுதித் தீர்விற்கான முதற்படியாக இது அமையட்டும்" என்று அவர் கூறினார். மாகாணசபை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தினை இந்திராவுக்கு ஜெயார் வழங்கினார். வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவது குறித்த ஜெயாரின் கருத்து அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரையில் உவப்பானதாக இருக்கப்போவதில்லை என்று இந்திரா தெரிவித்தார். ஆனாலும், அமிர்தலிங்கத்தையும் இத்திட்டத்தினுள் உள்வாங்க தான் முயலப்போவதாகத் தெரிவித்த இந்திரா, இலங்கையினை எக்கட்டத்திலும் பிரிக்க இந்தியா அனுமதிக்கப்போவதில்லை என்றும், இலங்கையின் இறையாண்மை, பூகோளஉறுதிப்பாடு, சுதந்திரம் ஆகியவற்றை இந்தியா வெகுவாக மதிப்பதாகவும் ஜெயாரிடம் உறுதிபடத் தெரிவித்தார்.

பின்னர் முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், நீலன் திருச்செல்வம் ஆகியோரையும் தொண்டைமானையும் இந்திரா சந்தித்தார். தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் உத்தேச தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களை வேண்டிக்கொண்டார் அவர். இதனையடுத்து இத்திட்டத்தினை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதம் தெரிவித்த அமிர்தலிங்கம், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது போகுமிடத்து தமிழர்களின் ஏகோபித்த எதிர்ப்பினை தாம் சந்திக்க நேரும் என்றும் இந்திராவிடம் தெரிவித்தார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தைப் பலப்படுத்த சர்வகட்சி மாநாடு நடத்திய ஜெயாரும், தமிழ் ஈழத்தைக் கைவிட்ட அமிர்தலிங்கமும்


அமிர்தலிங்கம் எதிர்பார்த்ததைப் போலவே அவர் தில்லியில் இருந்து சென்னை திரும்பும் போது கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேர்ந்தது. வடக்குக் கிழக்கினை இணைப்பதை ஜெயாரின் திட்டம் முற்றாக நிராகரித்திருந்தமையினால் ஆயுத அமைப்புக்கள் அதனை கடுமையான எதிர்த்திருந்தன. தமிழ் மக்களையும், அவர்களின் ஒரே கோரிக்கையான தமிழ் ஈழத்தையும் அமிர்தலிங்கம் பலிகொடுத்துவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். 


இதற்குப் பதிலளித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், ஜெயார் முன்வைத்திருக்கும் யோசனைகள் வடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசத்தை தனி அலகாக ஜெயார் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், வடக்குக் கிழக்கில் நீதிமன்ற மொழியாக தமிழ் மொழியினை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் வாதாடத் தொடங்கினர். 


1983 ஆம் ஆண்டு மார்கழி 1 ஆம் திகதி கொழும்பு திரும்பிய ஜெயவர்த்தன பின்வரும் பத்திரிகை அறிக்கையினை வெளியிட்டார்,


பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்காக நான் புது தில்லி சென்றிருந்தபோது தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசினேன். 
தில்லியிலிருந்து நாடு திரும்புவதற்கு முன்னர் இப்பிரச்சினை குறித்து இலங்கையைச் சேர்ந்த பல  அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டேன்.  இந்திரா காந்தியின் விசேட தூதுவரான பார்த்தசராதியும் இலங்கைக்குத் தான் மேற்கொண்ட‌ பல விஜயங்களின்போது இதுகுறித்து என்னுடன் பேசியிருந்தார். 


தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் மீளவும் பேச்சுவார்த்தைகளை எனது அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு நிபந்தனையாக அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையினை முற்றாக கைவிட்டு விடவேண்டும் என்கிற கோரிக்கையினை எனது அரசாங்கம் முன்வைத்திருந்ததது என்பதை நான் தொடர்ச்சியாகக் கூறிவந்திருப்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 
ஆகவே, எனது நிபந்தனையை ஏற்று, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை எட்டுவதற்காக தம‌து தனிநாட்டுக் கோரிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கைவிட்டு விட்டனர் என்பதனை மகிழ்வுடன் இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 


மேலும், இலங்கையின் ஒருமைப்பாட்டினையும், இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் இந்தியா முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என்பதையும், இலங்கை பிளவுபடுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் இவ்விஜயத்தின்போது இந்தியாவின் பிரதமர் என்னிடம் உறுதயளித்தார் எனும் செய்தியையும் இத்தருணத்தில் மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 


கடந்த கார்த்திகை மாதம் கொழும்பில் என்னுடன் திரு பார்த்தசாரதி அவர்கள் மேற்கொண்ட பல பேச்சுவார்த்தைகளில் கலந்துரையாடப்பட்ட பல விடயங்கள் குறித்து தில்லியில் அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசினார். அப்பேச்சுக்களின்போது முன்னணியினர் தெரிவித்த பதில்களையும் அவர் பெற்றுக்கொண்டார். 


நான் முதலாவதாக இப்பிரச்சினை குறித்து அனைத்து அரசியல்க் கட்சிகளினதும் தலைவர்களிடமும் கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்யவிருக்கிறேன். அதன் பின்னர், பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் பல ஆலோசனைகளை இக்கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பிவைத்து அவைகுறித்து அவர்கள் தெளிவான விளக்கத்தினை அடைந்துகொள்ள கால அவகாசம் ஒன்றினை வழங்கி, தக்க தருணத்தில் சர்வகட்சி மாநாட்டினை அழைத்து இதுகுறித்து அனைவரும் பேசக் கூடிய களம் ஒன்றினை உருவாக்கவிருக்கிறேன். 

என்று அவ்வறிக்கையில் கூறியிருந்தார்.


இதன் பின்னர், தனது இராணுவத்தினருக்கான ஆயுத தளபாடக் கொள்வனவுகளை முடுக்கிவிட்ட ஜெயவர்த்தன, அதற்கான கால அவகாசத்தைக் கணக்கிட்டு, சர்வகட்சி மாநாட்டினை ஒழுங்குசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கினார். சர்வகட்சி மாநாடு எனும் போர்வைக்குள் கால அவகாசத்தை எடுத்துக்கொண்ட ஜெயார், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடும் கைங்கரியங்களில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார்.

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.