Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

இது யாழ். பல்கலைக்கழகக் கட்டடம் என நம்புகிறேன். 

உண்மைதான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். சங்கம் இணையத்திலிருந்ததை இங்கும் இணைத்துவிட்டேன். 

Link to comment
Share on other sites

  • Replies 603
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாவின் துண்டுப்பிரசுரம்

துரோகிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் பின்னால் வழங்கப்பட்ட தண்டனையும்

f225656.jpg

தமிழரின் அரசியல்த் தலைமைத்துவத்தை தான் ஏற்கவேண்டிய தருணம் வந்துவிட்டதை பிரபாகரன் உணர்ந்தார். 1983 ஆம் ஆண்டு சித்திரை மூன்றாம் வாரத்தில் தான் கைப்பட எழுதிய துண்டுப்பிரசுரத்தை அவர் மக்களிடையே வெளியிட்டார். அந்த துண்டுப்பிரசுரத்தில் தமிழர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் "துரோகிகள்" என்றும் விளித்திருந்தார்.

பிரபாகரன் அன்று வெளியிட்ட துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது,

"அரச பயங்கரவாத ஓநாய்ககளின் வாய்களில்  இருந்து ஈழத்தமிழ் இனத்தின் குருதி இன்னமும் வழிந்துகொண்டிருக்கும் இந்தவேளையிலும், சிங்கள இனவாத அரசு தனது பயங்கரவாதத்தை சர்வதேசத்தின் முன்னால் நியாயப்படுத்த இந்த உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முயற்சித்து வருகிறது. சிங்கள இனவாதிகளின் இந்த சதிக்குத் துணைபோகும் தமிழினத் துரோகிகளை நாம் அனுமதிக்கப்போவதில்லை".

"சிறிலங்கா தேர்தல் மாயையிலிருந்து ஈழத் தமிழினம் தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். எமது மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரள வேண்டும்".

ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரோ அல்லது ஏனைய தமிழ்க் கட்சிகளோ இந்தத் துண்டுப்பிரசுரத்தின் தீவிரத் தன்மையினை உணர்ந்துகொள்ளத் தவறின. ஆகவே, அவர்கள் வழமைபோல தமது தேர்தல்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்ததுடன், பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி வந்தனர். தனது முடிவுகளை செயலாக்குவதில் எப்போதுமே பின்னின்றிராத பிரபாகரன் தனது திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார். ஆகவே, சித்திரை மாதத்தின் நான்காம் வாரத்தில் தேர்தலில் பங்கெடுக்கும் வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்ற புலிகள், அவர்களை தேர்தல்களில் இருந்து விலகிக்கொள்ளுமாறு  பணிவுடன் கேட்கத் தொடங்கினர். தமது வேண்டுகோளின் முடிவில் ஒரு எச்சரிக்கையினையும் அவர்கள் முன்வைக்கத் தவறவில்லை, "எமது கோரிக்கையினை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், அதனால் வரக்கூடிய பின்விளைவுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்" என்பதே அந்த எச்சரிக்கை.

புலிகளின் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மறுநாளில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிக்கையில் தொடர்ச்சியாக சில விளம்பரங்கள் வெளிவரத் தொடங்கின. அந்த விளம்பரங்களின் சாராம்சம் இதுதான், " ....இந்தக் கட்சியைச் சேர்ந்த ... ஆகிய நான் இத்தாள் தமிழ் மக்களுக்கு அறியத் தருவது என்னவெனில், நடக்கவிருக்கும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் .... தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பாடியலில் இருந்து நானாக விலக்கிக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல சுயேட்சைக் கட்சிகள் இத்தேர்தலில் இருந்து விலகிக்கொண்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலில் தொடர்ந்தும் போட்டியிடுவதில் உறுதியாக நின்றன.

இவ்விரு கட்சிகளினதும் தேர்தலில் பங்கெடுப்பதான நிலைப்பாடு தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக புலிகள் எடுத்துக்கொண்டனர். ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக செயலில் இறங்க முடிவெடுத்தனர் புலிகள். ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று வேட்பாளர்களை குறிவைத்து புலிகளின் மூன்று அணிகள் சித்திரை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வலம் வந்தன. இவர்களுள் முதலாமவரான பருத்தித்துறைத் தொகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான 43 வயது நிரம்பிய வைரமுத்து ரத்திணசிங்கம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை சைக்கிளில் வந்த இரு புலிப்போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சன்னங்கள் அவரது தலையினைத் துளைத்துச் செல்ல அந்தவிடத்திலேயே அவர் இறந்து வீழ்ந்தார். அதேநாள், மாலை 4:30 மணிக்கு, சாவகச்சேரி தொகுதியைச் சேர்ந்த 83 வயதான எஸ் முத்தையா தனது நண்பர்களின் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருக்கையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே மாலை 5:30 மணிக்கு வல்வெட்டித்துறை உள்ளூராட்சிச் சபையின் வேட்பாளரான   எஸ் ராஜரட்ணத்தின் வாகனத்தை வழிமறித்த புலிகள் அவரது மெய்ப்பாதுகாவலரை வெளியே இழுத்து விட்டு ராஜரட்ணத்தைச் சுட்டுக் கொன்றனர். ராஜரட்ணத்தைக் கொல்வதற்கான காரணம் அவர் யாழ்ப்பாணத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும், சிங்கள இனவாதியான சிறில் மத்தியூவின் நெருங்கிய சகாவும், யாழ்ப்பாணத்தில் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கெடுக்கவேண்டும் என்று உறுதியாக செயற்பட்டுவந்தவருமான கே கணேசலிங்கத்தின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்ததனால் ஆகும்.

துரோகிகள் என்று தம்மால் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களின் உடல்களின் அருகில் அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணத்தைப் புலிகள் குறிப்பிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன்படி, கொல்லப்பட்டவரின் உடலின் அருகில் அவரது பெயரும், உள்ளுராட்சித் தேர்தலில் பங்கெடுக்க வேண்டாம் என்கிற தமது எச்சரிக்கையினையும் மீறிச் செயற்பட்டு வந்ததினாலேயே இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்திடமிருந்து புலிகள் முதன்முதலாகக் கைப்பற்றிய டி - 56 ரக தானியங்கி ரைபிள்

image019.jpg?resize=340%2C480

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களையடுத்து பீதியான சூழ்நிலையொன்று தோன்றியது. மீதமாகவிருந்த வேட்பாளர்களும் தமது விலகலை அறிவிக்கும் கடிதங்களுடன் ஈழநாடு பத்திரிக்கைக் காரியாலயத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி தான் தேர்தலில் இருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்திருந்தபோதிலும், அக்கட்சியின் பெரும்பான்மையான வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டனர். வேட்பாளர்களின் பின்வாங்கலும், விலகிச் செல்லலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் வெகுவாகப் பாதித்திருந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளரான நாகராஜா உட்பட அச்சபையில் போட்டியிட விண்ணப்பித்திருந்த 35 வேட்பாளர்களும் விலக்கொண்டனர். ஆனால், அமிர்தலிங்கமோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். சில வேட்பாளர்கள் விலகிக்கொண்ட போதிலும் தனது கட்சி இத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.

தேர்தல் நடைமுறையில் இருந்த தவறுகளைத் தனக்குச் சாதகமாகப் பாவித்த அமிர்தலிங்கம், வேட்பாளர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்கள் விலகுவது சட்டத்திற்கு முரணானது என்று அவர் அறிவித்தார். சட்டத்தின்படி, வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து பின்வாங்கினாலும், இறுதியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் தொடர்ந்தும் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

Amirthalingam14.jpg

அமிர்தலிங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாடு தமக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக புலிகளின் தலைமையினால் கருதப்பட்டது. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை வெளிப்படையாக எதிர்கொள்வதென்று பிரபாகரன் முடிவெடுத்தார். அதன்படி வைகாசி 8 ஆம் திகதி யாழ்ப்பாணத்த்ம் ஓட்டுமடம் பகுதியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூட்டமொன்றினை அமிர்தலிங்கம் நடத்திக்கொண்டிருந்தவேளை, சீலன் தலைமையில் ஆறு போராளிகள் அங்கு சென்றனர். புலிகளின் தடையினை உதாசீனம் செய்யுங்கள், பயப்படாது தேர்தலில் போட்டியிடுங்கள் என்று அமிர் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட புலிகளின் போராளி ஒருவர், "கடந்த 30 வருடங்களாக நீங்கள் சாதித்தது என்னவென்று கூறுங்கள் பார்க்கலாம்?" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார். இன்னுமொரு போராளி, "ஜெயாருடன் தொங்கிக் கொண்டிருப்பதால் எதனைச் சாதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று அமிரைப் பார்த்துக் கோபமாகக் கேட்டார். அமிர்தலிங்கம் திகைத்துப் போனார்.

தன்னை நோக்கிக் கேள்விகேட்ட புலிகளுக்கு அமிர் பதிலளிக்கும் முன்னமே வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்கள் புலிகளால் தீர்க்கப்பட்ட அங்கிருந்த கூட்டம் கலைந்து ஓடத் தொடங்கியது. மேடையில் வீற்றிருந்த பேச்சாளர்களும் ஓடத் தொடங்கினர். தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் தன்னை விட்டு ஓடிச்சென்ற நிலையில் அமிர் மட்டும் கையில் ஒலிபெருக்கியுடன் அங்கே நின்றிருந்தார். பின்னர் அமிரின் காரினை ஓட்டிச் சென்ற புலிகள், அதனைச் சேதப்படுத்திவிட்டு மயானம் ஒன்றின் முன்னால் கைவிட்டுச் சென்றனர்.

நிலைமையினை ஆராய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழு வைகாசி 11 ஆம் திகதி கூடியது. ஆனால், அமிர்தலிங்கம் தேர்தலில் பங்கெடுக்கும் தனது முடிவில் பிடிவாதமாக நின்றார். "நாங்கள் துவக்கைக் கண்டு பயப்படத் தேவையில்லை. மரணம் எங்களுக்கு ஒருமுறை தான் வரப்போகிறது, அது இப்போது வந்தால்த்தான் என்ன? நான் தம்பிமாரிடம் ஒரு சவாலினை முன்வைக்கிறேன், முடிந்தால் அவர்கள் மக்களிடம் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுப் பார்க்கட்டும். மக்கள் அதனை முடிவெடுக்கட்டும். மக்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்று பேசினார்.

வைகாசி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்துமடம் சந்தியில் நடந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போதும் அமிர்தலிங்கம் இதனையே குறிப்பிட்டார். புலிகளின் புறக்கணிப்புக் கோரிக்கையினை நிராகரித்த அமிர்தலிங்கம், மக்கள் தனது கட்சிக்கு வழங்கிய ஆணையினை புலிகள் மதிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அப்பகுதிக்கு வந்திருந்த புலிகள் வானை நோக்கிச் சில வேட்டுக்களைத் தீர்க்கவே அக்கூட்டமும் பாதியில் கலைந்து போனது.

தேர்தல் நாள் அமைதியாக இருந்தது. கடைகள் பூட்டப்பட்டிருந்தன. வீதிகளில் போக்குவரத்து மிகவும் அரிதாகவே காணப்பட்டது. தேர்தலில் அதிக சிரத்தையெடுத்துக்கொண்டிராத பொலீஸாரும் வேண்டாவெறுப்பாகவே வீதிகளில் ரோந்துவந்து சென்றனர். தேர்தல்ச் சாவடிகளில் கடமையிலிருந்த அதிகாரிகள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டு அந்த பிற்பகல்ப் பொழுதைக் களித்துக்கொண்டிருந்தனர். காலையில் காணப்பட்ட ஒரு சில வாக்களர்களின் உற்சாகமும் பிற்பகலில் முற்றாகக் காணாமற் போயிருந்தது.

Lt_sellakili.jpg?resize=1400%2C9999&ssl=1

செல்லக்கிளி

 

தேர்தல் சாவடி இலக்கம் 25 இல் நான்கு மணியென்று கடிகாரம் ஒலிக்க, தேர்தல் முடிவடைவதற்கு இன்னமும் ஒரு மணிநேரமே இருக்கிறதென்று அனைவருக்கும் அது கூறியது. யாழ்ப்பாணம் அரசடி வீதியில் அமைந்திருந்த சிவப்பிரகாசர் வித்தியாலயத்திலேயே அந்த தேர்தல் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. தாம் வந்த சைக்கிள்களில் எட்டத்தில் விட்டுவிட்டு நிலையம் நோக்கி சீலனும் செல்லக்கிளியும் இன்னும் இரு போராளிகளும் நிதானமாக வந்துகொண்டிருந்தனர். நிலையத்தின் முற்பகுதிக்குச் சென்ற செல்லக்கிளி தான் கொண்டு வந்த கைக்குண்டை விட்டெறிய, வாயிலில் காவலுக்கு நின்ற ரஜரட்ட ரபிள் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜயவர்தன கொல்லப்பட்டார். மீதியாக காவலுக்கு நின்ற இரு ராணுவ வீரர்களும் பாடசாலையின் உட்பகுதிக்கு ஓடிச்சென்று நிலையெடுத்துத் தாக்கத் தொடங்கினர். அவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன.

கொல்லப்பட்ட ராணுவ வீரரை நோக்கி ஓடிச்சென்ற செல்லக்கிளி அவர் அருகில்க் கிடந்த டி 56 ரக ரைபிளை எடுத்துக்கொண்டார். ராணுவத்தினர் புலிகளிடம் பறிகொடுத்த முதலாவது தானியங்கித் துப்பாக்கி இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதலை முடித்துக்கொள்ளுமாறு கட்டளையிட்ட சீலன், தனது போராளிகளை அழைத்துக்கொண்டு தாம் வந்த சைக்கிள்களிலேயே தப்பிச் சென்றார். நிதானமாகவும், துணிவாகவும் செயற்பட்ட சீலனையும் போராளிகளையும் பிரபாகரன் பாராட்டியதோடு, புலிகளால் அன்று ராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டி 56 ரக ரபிளையும் போராளிகளுக்குக் காண்பித்து விளங்கப்படுத்தினார்.

Type 56 mod02 noBG.png

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஆணையினை இழந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலிகளின் கைகளுக்குள் அடைக்கலமாகிய தமிழ் மக்களும்

LTTE leader Prabhakaran's birthday special article

குழந்தைகளுடன் தலைவர் பிரபாகரன்
 

தேர்தல் முடிவுகள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு முற்றான தோல்வியினைக் கொடுத்திருந்தன. 1977 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கு மக்கள் இக்கட்சிக்கு வழங்கிய ஆணையினை 1983 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி அது முற்றாகவே தொலைத்திருந்தது. 1977 இல் முன்னணிக்கு தமது ஆணையினை வழங்கியிருந்த தமிழ் மக்கள், 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் தமது ஆணையினை மீளவும் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால், 1983 ஆம் ஆண்டு வைகாசி உள்ளூராட்சித் தேர்தல்களில் புலிகளின் வேண்டுகோளினை முற்றாக ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை முற்றாகப் புறந்தள்ளியிருந்தனர்.

தேர்தல் முடிவுகள் முன்னணியினை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணித்திருந்ததைக் காட்டியது. இரு வருடங்களுக்கு முன்னர் 80 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னனி, 1983 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் பத்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. வடமாகாணத்தின் ஒற்றை மாநகராட்சிச் சபையாகத் திக்ழந்த யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் 13 வீதமானோர் முன்னணிக்கு வாக்களித்திருந்தவேளை 87 வீதமானோர் புலிகளின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு தேர்தலினைப் புறக்கணித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்த மூன்று உள்ளூராட்சிச் சபைகளில் சாவகச்சேரியில் 14 வீதமானோர் முன்னணிக்கு வாக்களித்திருக்க 86 வீதமானோர் தேர்தலினை நிராகரித்திருந்தனர். பிரபாகரனின் செல்வாக்கிற்கு உடபட்ட இரு சபைகளான வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைச் சபைகளுக்கான தேர்தல்களில் வெறும் 2 வீதமான வாக்குகளையே முன்னணி பெற்றிருந்தது. இச்சபைகளில் முன்னணி பெற்ற வாக்குகள், வல்வெட்டித்துறை - 2 %, பருத்தித்துறை - 0.75%  என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னணியின் தோல்வி போராளிகளுக்கு மகிழ்வினைக் கொடுத்திருந்தது. 1977 ஆம் ஆண்டு முன்னணிக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையினை அது இழந்துவிட்டது என்று அவர்கள் கூறினர். "தம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இழந்துவிட்டனர். மக்களுக்கு தாம் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட முன்னணியினர் ஜயவர்த்தன வீசியெறியும் அற்பச் சலுகைகளுக்காக அவர் பின்னால் ஓடுகிறார்கள்" என்று சுதந்திரன் பத்திரிக்கையில் எழுதிய கோவை மகேசன், "மக்களால் முன்னணிக்கு வழங்கப்பட்ட தனிநாட்டினை உருவாக்குவதற்கான ஆணை தற்போது அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு போராளிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது" என்றும் எழுதினார்.

தமிழ் ஈழம் விடுதலை முன்னணியின் உப தலைவரான ஈழவேந்தன் கூறும்போது, "தேர்தல்களுக்கு முன்னர் மக்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதியை அண்ணை அமிர்தலிங்கம் நிறைவேற்ற வேண்டும்" என்று கேட்டிருந்தார்.  "இத்தேர்தலில் மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பினை அவர் ஏற்றுக்கொண்டு, போராளிகள் தமது கடமையினை முன்னெடுக்க வழிவிட்டு விட்டு அரசியலில் இருந்து அவர் விலகிச் செல்லவேண்டும்" என்றும் அவர் கூறினார். மக்களிடையே இருந்த பொதுவான உணர்வும் இதனையே வெளிப்படுத்தியிருந்தது. மக்களிடம் கருத்துக்களை வெளியிட்டு வந்த ஈழநாடு பத்திரிக்கையும் இதே வகையான உணர்வுகளையே வெளியிட்டு வந்தது. 1977 ஆம் ஆண்டு மக்கள் அமிருக்கு வழங்கிய ஆணையின் ஊடாக சுதந்திரத் தமிழீழ நாட்டை உருவாக்குவதற்கான செயற்பாடுகளிலும், அதற்கான அரசியலமைப்பினை உருவாக்குவதிலும் ஈடுபடப் போவதாக உறுதியளித்த அமிர் தலைமையிலான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைச் செய்ய முற்றாகத் தவறியுள்ளதையடுத்து தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆணையினை இன்று அவர்கள் இழந்துவிட்டார்கள் என்பதே சாதாரண தமிழனின் உணர்வாக இருந்தது. "மக்கள் தமக்கு வழங்கிய ஆணையின்படி நடக்க அவர்கள் தவறிவிட்டார்கள்" என்பதே அனைவரினதும் கருத்தாக இருந்தது. நான் இதுதொடர்பாக அமிர்தலிங்கத்தை டெயிலிநியூஸ் பத்திரிகைக்காகப் பேடி கண்டிருந்தேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தோல்விக்கான முக்கிய காரணங்களை அலசுமாறு அவரிடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த அமிர், தனக்கு ஜெயவர்த்த அளித்த வாக்குறுதிகளைச் செயற்படுத்த மறுத்தமையே தமது தோல்விக்கான காரணம் என்று  கூறினார். " மாவட்ட அபிவிருத்திச் சபைகளைச் செயற்படுத்தப் போவதாக அவர் என்னிடம் உறுதியளித்தார், ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அவர் விரும்பவில்லை. இச்சபைகளை நடத்துவதற்கான நிதியினை வழங்க அவர் மறுத்துவிட்டார். அவர் எங்களுக்குத் தந்ததெல்லாம் வெற்றுக் கோது ஒன்றே அன்றி வேறில்லை. மக்களிடம் சென்று காட்டுவதற்கு எம்மிடம் எதுவும் இருக்கவில்லை. புலிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவும் எம்மிடம் எதுவும் இருக்கவில்லை" என்று அவர் கூறினார். பிரபாகரனின் துண்டுப்பிரசுரத்தில் இருந்த, "தமிழரின் குருதி குடித்து, வாயில் அந்தக் குருதி இன்னமும் சிந்திக்கொண்டிருக்கும் அரச பயங்கரவாத ஓநாய்" எனும் வாக்கியத்தின் பொருளினைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அமைர், "ராணுவத்தினரின் பதில்த் தாக்குதல்களால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் போராளிகளின் கைகளுக்குள்ளேயே அடைக்கலம் தேடுவார்கள் என்று ஜெயவர்த்தனவை நான் எச்சரித்திருந்தேன்" என்று அவர் கூறினார்.

 

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடத்தில் வெறியாட்டம் ஆடிய ராணுவம் 
 

tt14.jpg

 

யாழ்ப்பாணத்தில் வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் செயலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, தமது சகாவான ராணுவ வீரர் ஜயவர்த்தனவின் மரணத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியது. ரஜரட்ட ரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினர் தாக்குதல் நடைபெற்ற கந்தர்மடம் பகுதிக்கு வந்து அங்கிருந்த வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். அன்று ராணுவத்தினரால் 64 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மூன்று மினிவான்கள், ஒன்பது கார்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள், 36 துவிச்சக்கர வண்டிகள் என்று பல வாகனங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இப்பழிவாங்கல் நடத்தப்பட்ட விதத்தினைப் பார்க்கும்போது முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. மாலை 5 மணிக்கு அவசரகாலச் சட்டத்தை அரசு பிரகடணம் செய்தபோதும், இராணுவத்தினரின் அட்டகாசம் நள்ளிரவு வரை தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் ஓய்வுக்கு வந்தபின்னர், தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அணியை அநுராதபுரத் தளத்திற்குத் திரும்புமாறு ராணுவத் தலைமை உத்தரவிட்டது. இதன்பின்னர் இந்த வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவின.

வைகாசி 21 ஆம் திகதி ரஜரட்ட படைப்பிரிவு அநுராதபுரத்திற்குத் திருப்பியழைக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தபால்த் தொடர்வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த தமிழர்களை அநுராதபுரத்தில் ஏறிக்கொண்ட பொலீஸார் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். தமிழ் ரயில் பயணிகள் மீதான தாக்குதல்கள் குறைந்தது ஒரு வார காலம் வரை தொடர்ந்து நடந்தன. தமிழர்களுக்கெதிரான சுலோகங்களும், சுவரொட்டிகளும் அநுராதபுரம் நகரில் பரவலாக ஒட்டப்பட்டன. இவ்வாறே, நாட்டின் ஏனைய இடங்களிலும் ஆங்காங்கே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்தினர். தமது ராணுவ வீரர் ஒவ்வொருவரினதும் இழப்பிற்கு தமிழர்களை மொத்தமாகப் பழிவாங்கவேண்டும் என்கிற வெறி சாதாரண சிங்கள மக்களுக்குள்ளும், பொலீஸார் மற்றும் இராணுவத்தினர் மத்தியிலும் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தது.

இக்காலப்பகுதியில் பல வதந்திகள் வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் அரசில் உள்ளவர்களால் ஊடகங்கள் மூலம் கசியவிடப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் புலிகளின் இராணுவ வலிமையினை அடக்குவதற்கான ஒரே வழி தமிழ் மக்கள் மீது பாரிய அளவிலான வன்முறைகளை நிகழ்த்துவதுதான் என்கிற முடிவு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கசிய விடப்பட்ட வதந்தி. ஜெயாரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான அதுலத் முதலியே இந்த யோசனையினை அமைச்சரவையில் முன்வைத்ததாகவும் இந்த வதந்திகள் மேலும் கூறின. இஸ்ரேலிய பல்கலைக் கழகம் ஒன்றில் பட்டப்படிப்பினை மேற்கொண்டிருந்த லலித் அதுலத் முதலி, கிளர்ச்சிகளை அடக்குவதற்கான ஒரேவழி மக்கள் கூட்டத்தின் மீது மிகவும் கடுமையான அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஏவிவிடுவதுதான் என்று உறுதியாக நம்பிவந்தார். பாலஸ்த்தீனர்களுக்கெதிரான இஸ்ரேலிய ராணுவத்தினரின் கடும்போக்கினை தமிழர்களுக்கெதிராக தாமும் பாவிக்கவேண்டும் என்கிற கருத்தினை அதுலத் முதலி வெளிப்படையாகவே அமைச்சரவையில்  முன்வைத்து வரலானார். மிகக் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலாக்கப்படுவதன் சூத்திரதாரியே அதுலத் முதலிதான் என்பது குறிப்பிடத் தக்கது.

200727%20Athulathmudali.jpg

அச்சுலக்கை - லலித் அதுலத் முதலி

 

ஆனி 12 முதல் 27 வரையான காலப்பகுதியில் எகிப்து மற்றும் ரோம் ஆகிய இடங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை ஜெயார் மேற்கொள்ளவேண்டியிருந்தது. ஆகவே, வழமை போல சர்வதேசத்தில் தனக்கு நற்பெயரை உருவாக்க சில கண்துடைப்பு நடவடிக்கைகளை தான் வெளிநாடு பயணமாகுமுன் செய்யவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. தன்னை தூய ஜனநாயகவாதியென்றும், முழுமையான ஒழுக்க சீலன் என்றும் சர்வதேசத்தில் காண்பிக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. ஆகவே, வைகாசி 18 ஆம் திகதி கந்தர்மடத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்தினரை விசாரிக்கவேண்டும் என்கிற நாடகத்தை ஜெயார் அரங்கேற்றினார். ஜெயாரின் கட்டளைக்கிணங்க ரஜரட்ட ரபிள் படைப்பிரிவைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களை வன்முறைகளைத் தூண்டினார்கள் என்கிற பெயரில் ராணுவத் தலைமை  பதவிநீக்கம் செய்தது. 

General_L_D_C_E_Waidyaratne.jpg

1994 இல் புலிகளால் காலிமுகத்திடலில் ராணுவ தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட அன்றைய ராணுவத் தளபதி சிசில் வைத்தியரட்ண

தமது சகாக்கள் நால்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அப்படைப்பிரிவைச் சேர்ந்த சில ராணுவ வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறினர். ரஜரட்ட ரபிள் படைப்பிரிவின் தலைமை அதிகாரியான லெப்டினன்ட் கேணல் கே.எம்.எஸ் பெரேராவைப் பதவிநீக்கம் செய்த ராணுவத் தலைமை அவரின் இடத்திற்கு இன்னொரு லெப்டினன்ட் கேணலான சிசில் வைத்தியரட்ணவை நியமித்தது. ராணுவத் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்தார்கள் என்கிற பெயரில் பின்னாட்களில் ஐந்து அதிகாரிகளும் 96 ராணுவ வீரர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

அரசியல் சித்து விளையாட்டுக்களில் கைதேர்ந்தவரான ஜெயார், சர்வதேசத்தில் தன்னை சிறந்த ஜனநாயகவாதியாகக் காட்டக் கடுமையாக உழைத்து வந்தார். 1977 ஆம் ஆண்டில் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டிய பாராளுமன்றத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் நீட்டித்துக் கொண்டதையடுத்து சர்வதேசத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. தனது செயலை பொய்யான காரணங்களைக் காட்டி அவர் நியாயப்படுத்த முனைந்தபோதும், சர்வதேசத்தில் அவருக்கு ஏற்பட்ட மாற்றமுடியாத அவமானம் குறித்து அவர் நன்கு உணர்ந்தே இருந்தார். சர்வஜன வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினால் வெற்றிகொள்ளப்பட்ட 18 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்த ஜெயார், அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களையும் நடத்தியிருந்தார். மேலும், இவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள் எல்லாவற்றிலும் தனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிபெற்றது என்று அவர் கூறிவந்தார்.

Sirimavo-RD-Bandaranaike-1960.jpg

சிங்கள பெளத்த இனவாதப் பெண்மணி - சிறிமாவோ பண்டாரநாயக்க

இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 18 தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி 14 இடங்களில் வெற்றிபெற்றது. சுதந்திரக் கட்சி மூன்று தொகுதிகளிலும், மகஜன எக்சத் பெரமுனக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. இந்த முடிவுகளையடுத்து ஜெயவர்த்தன தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிற்குச் சென்றது நியாயமானதுதான் என்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பேசிவந்தார். இது பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்குச் சினத்தை ஏற்படுத்தியிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க, அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்ததுடன், தேர்தலுக்கு முன்னர்வரை வாக்களர்கள் மீது ஜெயாரின் காடையர்கள் நடத்திவந்த வன்முறைகள் பற்றி தொடர்ச்சியாகப் பேசிவந்தார். பல சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் மீது விடுக்கப்பட்ட மரண அச்சுருத்தலினையடுத்து அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சுதந்திரக் கட்சியின் தேர்தல்ச் சாவடிக்கான பிரதிநிதிகள் அரச குண்டர்களால் வாக்குச் சாவடிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.

வன்முறைச் சூழ்நிலையொன்று வடக்குக் கிழக்கிலும், தெற்கிலும் அரச ஆதரவுடன் உருவாக்கப்பட்டு வந்தது.வடக்குக் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஈழம் புரட்சிகர மாணவர் முன்னணி (EROS) மற்றும் ஈழ புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி (EPRLF) ஆகிய ஐந்து போராளி அமைப்புக்களும் சுயாதீனமாக இயங்க ஆரம்பித்திருந்தன.

அதைவிடவும் வேறு மூன்று அமைப்புக்கள் சிறியளவிலான வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. டெலோ அமைப்பிலிருந்து வெளியேறிச் சென்ற ஓபரோய் தேவனால் வழிநடத்தப்பட்ட டெலா (TELA) அமைப்பு, மட்டக்களப்பில் இயங்கிவந்த தமிழ் ஈழ விடுதலை நாகங்கள் (TELC) மற்றும் கெஸ் (GUES) என்று அழைக்கப்பட்ட மூன்று அமைப்புக்களுமே அவையாகும். கெஸ் அமைப்பு வாக்காளர் அட்டைகளைப் பலவந்தமாகப் பறித்துச் செல்ல, டெலா அமைப்பும் விடுதலை நாகங்கள் அமைப்பும் பொதி வெடிகுண்டுகளை மக்கள் நடமாடும் பகுதிகளில் வைப்பது, பேரூந்துகளை எரிப்பது மற்றும் பொதுச்சொத்துக்களை அழிப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. இவ்வகையான வன்முறை நடவடிக்கைகள் பற்றி கொழும்பின் ஊடகங்கள் அதிகளவு பிரச்சாரத்துடன் செய்தி வெளியிட்டு வந்ததுடன், சிங்கள மக்கள் மத்தியில் தமிழரின் போராட்டத்திற்கு எதிராக படிப்படியாக வளர்ந்துவந்த  காழ்ப்புணர்ச்சியினை மேலும் கூர்மையாக்குவதிலும் ஈடுபடலாயின.

 

.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராதனையில் இடம்பெற்ற தாக்குதல்கள்

Image

ஜெயவர்த்தன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான அமைச்சர்கள் மத்தியில் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழர் மீதான முழு அளவிலான தாக்குதல்கள் குறித்த வதந்திகளை அரசே தனது தொழிற்சங்கக் காடையர்களுக்கும், மாணவர் அமைப்புகளுக்குள்ளும் வேண்டுமென்று கசியவிட்டது. ஜெயார் தான் பதவிக்கு வந்த நாளிலிருந்து இரு தொழிற்சங்கங்களை தனது அரசியல்ப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக வளர்த்து வந்தார். சிறில் மத்தியுவினால் வழிநடத்தப்பட்ட ஜாதிக சேவ சங்கமய மற்றும்  காமிணி திஸாநாயக்கவினால் வழிநடத்தப்பட்ட லங்கா ஜாதிக எஸ்டேட் தொழிலாளர் சங்கம் ஆகியவையே அவை இரண்டு தொழிற்சங்கங்களும் ஆகும். ஆனால், பல்கலைக்கழக மாணவர்களிடம் அதிகம் செல்வாக்கினைக் கொண்டிருக்காத ஐக்கிய தேசியக் கட்சி பல்கலைக்கழகங்களில் பலமாக வேரூன்றியிருந்த இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராக தனது சொந்த மாணவர் அமைப்பு ஒன்றினை உருவாக்கியது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட காலம் முதல் அரச படைகளின் ஆதரவுடனான ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பிற்கும், இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கும் இடையே பல்கலைக் கழகங்களில் மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பு பேராதனைப் பல்கலைக் கழகத்தில்  உருவாக்கப்பட்டதையடுத்து அதுவரையிருந்த இனச் சமத்துவம் பாதிக்கபடலாயிற்று. சுமார் 25 வீதம் தமிழ் மாணவர்களைக் கொண்ட பேராதனைப் பல்கலைக் கழகம் இடதுசாரி மாணவர் அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் தமிழ் மாணவர்கள் பெருமளவில் இனவன்முறைகளுக்கு உள்ளாவதிலிருந்து தப்பி வந்தனர்.

ஆனால் வடக்குக் கிழக்கில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தினுள் தமிழ் மாணவர்களுக்கெதிரான உணர்வு சிங்கள மாணவர்களிடையே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பினரிடையே அதிகரித்து வரலாயிற்று. சில சிங்கள மாணவர்கள் வெளிப்படையாகவே தமிழ் மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்? உங்களின் ஈழத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களுக்கு ஈழமும் கிடைக்கப்போவதில்லை, பல்கலைகழகத்திலும் இடமில்லை, விலைமாதருக்குப் பிறந்த தமிழர்களே" என்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கினர். அக்காலப்பகுதியில் தமிழ் மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட நிழல் இல்லாத மனிதர் எனும் மேடை நாடகத்தினையடுத்து சிங்கள மாணவர்கள் கடும் சினமடைந்திருந்தார்கள். ஜேர்மனிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய பிரெஞ்சுப் போராளிகள் மீது நாஜிகள் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளையே இந்த மேடை நாடகம் பேசியது. இந்த நாடகத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது தமது ராணுவம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதைக் காட்டவே தமிழ் மாணவர்கள் முயல்கிறார்கள் என்று சிங்கள் மாணவர்கள் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். ஆகவே, பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ் மாணவர்களை அடித்து விரட்டும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளின் அறிக்கை குறித்து ராஜன் ஹூல் தனது புத்தகமான "அதிகாரத்தின் மமதை" இல் குறிப்பிட்டிருக்கிறார்.

"தாக்குதல்களின் நோக்கமே தமிழ் மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து துரத்துவதுதான். சட்டத்தினை அப்பட்டமாக மீறிய வகையிலும், கடுமையான வன்முறைகளைப் பாவித்தும் தாக்குதலாளிகள் தமது நோக்கத்தினை நிறைவேற்றினார்கள்" என்று ராஜன் ஹூல் எழுதுகிறார். தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலை கென்னத் டி லனரோலே, டொரை கல்னைடொ மற்றும் திருமதி எகநாயக்க ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது. பல்கலைக் கழக வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட சின்னத்தில் இருந்த சிங்கள எழுத்துக்களை தமிழ் மாணவர்கள் அழித்தார்கள் என்று குற்றஞ்சாட்டியே அவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டார்கள். ஆனால், சின்னத்திலிருந்த சிங்கள எழுத்துக்களை பட்டப்பகலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடனான மாணவர் அமைப்பே அழித்தது. ஆனால், இதனைச் செய்தது தமிழ் மாணவர்களே என்கிற வதந்தி சிங்கள மாணவர்களால் பரப்பப்பட்டதுடன், தமிழ் மாணவர்கள் தங்களது அறைகளில் புலிகளின் கொடியினையும், தமிழ்த்தேசியத்தினை ஆதரிக்கும் சுலோகங்களையும் மறைத்து வைத்திருந்தனர் என்கிற இன்னொரு வதந்தியும் திட்டமிட்டே பரப்பப்பட்டது.

பல்கலைக் கழகத்திற்கு வெளியில் இருந்த சில சிங்களவர்கள் அன்று மாலை பல்கலைக் கழகத்தினுள் நுழைந்து தமிழ் மாணவர்களை அச்சுருத்தியிருக்கின்றனர். "மிக விரைவில் நாங்களும், மாணவர் அமைப்பினரும் சேர்ந்து உங்களுக்கு ஒரு பாடத்தினைப் புகட்டவிருக்கிறோம்" என்று அவர்களை எச்சரித்திருக்கின்றது அந்தக் கும்பல். அன்றிரவு, அருணாச்சலம் மண்டபத்தில் தமிழ்த் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து கொண்ட விஞ்ஞானப் பிரிவில் நான்காம் ஆண்டில் பயிலும் துள்சி விக்கிரமசிங்க மற்றும் . எகநாயக்க ஆகிய சிங்கள மாணவர்கள் அம்மண்டபத்திற்குச் சென்றிருக்கின்றனர். அங்கு திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த சில தமிழ் மாணவர்களை வெளியே இழுத்துவந்த அவர்கள், பல்கலைக் கழக வாயிலில் சின்னத்திலிலிருந்த சிங்கள எழுத்துக்களை தமிழ் மாணவர்களே அழித்தார்கள் என்றும், ஆகவே மொத்தத் தமிழ் மாணவர்களும் இதற்குப் பொறுப்பாளிகள் என்று குற்றஞ்சாட்டிக்கொண்டே மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.  பின்னர் தமிழ் மாணவர்களை கலகா சந்தியிலிருந்து கலைப்பீடம் வரையான வீதியில் இருந்த அனைத்துத் தமிழ் எழுத்துக்களையும் தார் கொண்டு அழிக்க வைத்திருக்கிறார்கள். 

.

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்முடன் பல்கலையில் ஒன்றாகப் படித்த சிங்கள மாணவர்களாலேயே தாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் 

Peredeniyalogo.jpg

 

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் ஏனைய விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மாணவர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பித்தன. தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்துமே ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால், இவை நன்கு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. முதலில் முதலாம் ஆண்டில் பொறியியல் பயிலும் மாணவனான பி. பாலசூரியனைச் சுற்றிவளைத்துக்கொண்டது சிங்கள மாணவர் காடையர்குழு. அவரைப் புலி என்று கூறிக்கொண்டே அவர்கள் தாக்க ஆரம்பிக்கும் போது அவர் முதலாவது மாடியிலிருந்த தனது அறை யன்னலை உடைத்துக்கொண்டு வெளியே பாய்ந்து தப்பித்துக்கொண்டார். ஆனால், அவரை மீளவும் பிடித்துக்கொண்ட சிங்கள மாணவர்கள் , அவரைக்  கைகளை மேலே தூக்கி வணங்கும் நிலையில் வைத்திருக்கும்படி வற்புறுத்தித்  தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரை புலியென்று கூறிக்கொண்டே பல்கலைக்கழக உப பீடாதிபதியின் அறைக்கு அந்தக் கும்பல் இழுத்துச் சென்றது. மறுநாள் உப் பீடாதிபதி தனது கட்டுப்பாட்டில் இருந்த "புலி மாணவனை" பொலீஸாரிடம்  ஒப்படைத்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் பாலசூரியனின் அறையிலிருந்து தாம் கைப்பற்றியதாக பை ஒன்றினை உப-பீடாதிபதியிடம் காட்டினார்கள். அதற்குள் சில புத்தகங்களும், இறப்பர் முத்திரைகளும், தமிழ்ச் சஞ்சிகை ஒன்றும் காணப்பட்டன. இத் தமிழ்ச் சஞ்சிகையே அவர் புலிகள் அமைப்பில் இருந்தார் என்பதற்குச் சாட்சியாக பொலீஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால், விசாரணைகளின்பொழுது, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவனான பாலசூரியன், தான் பாடசாலையில் படித்த நாட்களில் தயாரித்து வந்த சஞ்சிகையான "புதுசு" என்பதே அது என்பதை அறிந்துகொண்டனர். அது ஒரு இடதுசாரிச் சஞ்சிகையாகும். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பாலசூரியன் பின்னாட்களில் விஸ்வனந்ததேவன் என்பவரால் நடத்தப்பட்ட புலிகளுக்கு எதிரான அமைப்பான தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். சில வருடங்களுக்குப் பின்னர் அவர் இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டார்.

பெரும்பாலான தமிழ் மாணவர்களும், தமிழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வைகாசி 12 ஆம் திகதி காலையே அங்கிருந்து சென்றுவிட்டனர். மீதமாக இருந்தோர் மீது வைகாசி 13 ஆம் திகதி மீளவும் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தால் பாதுகாப்புத் தரப்படும் என்கிற வாக்குறுதியை நம்பி தமது அறைகளுக்குச் சென்ற தமிழர்கள் மீது வெளிப்படையாகவே சிங்கள மாணவர்கள் தாக்குதல்களை மீளவும் மேற்கொண்டனர். தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களை பல்கலைக்கழக காவலர்களோ அதிகாரிகளோ தடுக்க முயலவில்லை. இத்தாக்குதல்கள் முடிவடைந்த பின்னரே விக்கிரமசிங்க மற்றும் எகநாயக்க ஆகிய மாணவர்கள் இருவரையும் வேண்டா வெறுப்பாக பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிகமாக நிர்வாகம் இடைநிறுத்தம் செய்தது. 

தனது ராணுவத்தைக் கொண்டும், சிங்கள மாண்வர் அமைப்புகளைக் கொண்டும் ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும் தண்டனையொன்றினை வழங்கலாம் என்று நினைத்த ஜெயாரின் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, தமிழர்களை அடக்குமுறைக்கெதிராக மீண்டெழும் உத்வேகத்தை கொடுத்திருந்துடன் அரசிடமிருந்தும், சிங்கள இனத்திடமிருந்தும் அவை அந்நியப்பட வைத்தன. நான் அந்நாட்களில் திருகோணமலையில் தங்கியிருந்தேன். தமது இனம் மீதான தாக்குதல்களையடுத்து கடுமையான வலிகளையும், கடுஞ்சினத்தையும் ஒருங்கே தமிழினம் உணரத் தலைப்பட்டது. ஆங்காங்கே தனித்திருந்த தமிழர்கள் ஒன்றுபடத் தொடங்கினர். இதுவே ஜெயவர்த்தனவின் அரசு பிரபாகரனுக்குக் கொடுத்த பரிசாக மாறியது.

 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

தம்முடன் பல்கலையில் ஒன்றாகப் படித்த சிங்கள மாணவர்களாலேயே தாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் 

நீங்கள் பல்கலையில் இருந்த போது இப்படியான அனுபவங்களை அனுபவித்திருக்கிறீர்களா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் பல்கலையில் இருந்த போது இப்படியான அனுபவங்களை அனுபவித்திருக்கிறீர்களா?

ஓம் அண்ணை. 2000 ஆம் ஆண்டில் சி வி குணரத்ண சொய்ஸா தொடர்மாடிக்கருகில் கொல்லப்பட்டபோது எம்முடன் படித்த சிங்கள மாணவர்களே எம்மை அடித்து புலிகள் என்று பொலீஸில் பிடித்துக் கொடுத்தார்கள். எமது அறைகள் உடைக்கப்பட்டு அனைத்து உடமைகளும் தெருவில் வீசப்பட்டிருந்தன. சுவர்களில் எம்மைப் புலிகள் என்று விளித்து எழுதினார்கள். எனது நண்பன் ஒருவன் 250 சி சி மோட்டார் சைக்கிள் ஒன்று வைத்திருந்தான். அவனைப் புலிகளின் உளவுத்துறை என்று படத்துடன் செய்தி போட்டது திவயின. காலம்தான் வேறு, ஆனால் அவர்களின் செயலோ ஒரேவகையானவை.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தலைநகரான திருகோணமலையினை சிங்கள பெளத்த மாவட்டமாக மாற்றிய சிங்கள பெளத்த இனவாதிகள்

colonisation.gif

 

திருகோணமலை நகருக்கு அருகில் அமைக்கப்பட்ட மிட்சுவி சீமேந்துத் தொழிற்சாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வினை செய்தியாக்கும் நோக்கத்தில் நானும், ஜனாதிபதிச் செய்தி நிருபர் நோர்ட்டன் வீரசிங்கவும், புகைப்பிடிப்பாளர் சேன விதானகமவும் 1982 ஆம் ஆண்டு, கார்த்திகை 27 ஆம் திகதி திருகோணமலைக்குச் சென்றிருந்தோம். மறுநாள் 28 ஆம் திகதி திருகோணமலை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராஜவரோதயம் சம்பந்தன் வீட்டிற்கு அவரது தொலைபேசி இணைப்பினைப் பயன்படுத்தி கொழும்பு அலுவலகத்திற்கு செய்தியனுப்புவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றோம்.

timeline-bg.jpg

மிட்சுவி சீமேந்துத் தொழிற்சாலை - திருகோணமலை

 

பிராந்திய நகரங்களிலிருந்து கொழும்பிற்கு தொலைபேசி இணைப்புக்களை ஏற்படுத்துவதென்பது அக்காலத்தில் மிகவும் கடிணமானதொன்றாக இருந்தது. உயர் அரச அதிகாரிகள், பொலீஸார், ராணுவத்தின் கட்டளையிடும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டுமே அந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. ஏனையவர்கள் தொலைத்தொடர்பு நிலையங்கள் ஊடாகவே அழைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அவைகூட பல மணிநேரக் காத்திருப்பின் பின்னர்தான் பலருக்குக் கிடைத்தன. தி ஐலண்ட பத்திரிக்கையின் செய்தியாளர் பீட்டர் பாலசூரிய திருகோணமலை அரசாங்க அதிபரான ஜயதிஸ்ஸ பண்டாரகொடவிற்கு நெருங்கிய நண்பர் ஆதலால் அவரது தொலைபேசியினை பீட்டர் பாவித்திருந்தார். எமக்கோ தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த வேறு இடம் ஒன்றினைத் தேடவேண்டியதாயிற்று.

சீமேந்துத் தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு வந்திருந்த ஜெயாரைச் சந்தித்துவிட்டு அப்போதுதான் சம்பந்தன் தனது வீட்டிற்கு வந்திருந்தார். "மரமுந்திரிகைத் திட்டக் குடியேற்றத்தினை நிறுத்தியதற்காக நான் ஜெயாருக்கு நன்றி கூறினேன். மேலும், காந்தியம் அமைப்பினால் வவுனியா, திருகோணமலை , மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ள ஏழை மலையக மக்களை அங்கிருந்து அகற்ற சிலர் முயல்வதுபற்றியும் அவரிடம் எடுத்துக் கூறினேன். நான் சொல்வதை ஜனாதிபதி கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்" என்று சம்பந்தன் என்னிடம் கூறினார்.

மேலும், சிரில் மத்தியூவும், காமிணி திசாநாயக்கவும் திருகோணமலை மாவட்டத்தை சிங்களப் பெரும்பான்மை மாவட்டமாக மாற்ற எத்தனித்து வருவது குறித்து தனது கவலையினை என்னிடம் தெரிவித்தார். சிரில் மத்தியூவுக்கு வழங்கப்பட்ட பணி திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுவதாக சிலர் கூறும் புராதன பெளத்த விகாரைகளைக் கண்டுபிடித்துப் புனருத்தாரனம் செய்து, அவற்றினைச் சுற்றிச் சிங்கள விவசாயக் குடியேற்றங்களை உருவாக்குவதுதான் என்று அவர் கூறினார். அவ்வாறே, திருகோணமலை மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான பெருமளவு நிலங்களில் அரச கூட்டுத்தாபனங்களை உருவாக்கி அவற்றினைச் சுற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதுதான் காமிணி திசாநாயகவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி என்றும் அவர் கூறினார். "இவர்கள் இருவரும் அரசாங்கத்தின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி திருகோணமலையில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கி வருகிறார்கள்" என்று சம்பந்தன் எம்மிடம் கூறினார்.

Sampanthan_R2004.jpg

தேர்தல் பிரச்சார நடவடிக்கை ஒன்றில் சம்பந்தன் - 2004

தமிழ்ப் பெரும்பான்மை மாவட்டமாக இருந்த திருகோணமலை மாவட்டத்தினை சிங்கள பெளத்த மாவட்டமாக மாற்றும் சிங்களவர்களின் போராட்டம் சேனநாயக்கவின் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. அவர் காலத்திலேயே திருகோணமலை நகரை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் வீதிகளின் இருமருங்கிலும் பெளத்த விகாரைகளும் குடியேற்றங்களும் உருவாக்கப்பட்டன. தமது தாயகத்தின் தலைநகராக திருகோணமலையை தமிழர்கள் உரிமை கோரியதற்கு சிங்கள பெளத்த அரசாங்கங்கள் கொடுத்த பதில் இந்த பெளத்த சிங்களக் குடியேற்றங்கள்தான் என்றால் அது மிகையில்லை.

திருகோணமலை நகரில் பிரெட்ரிக் கோட்டை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இருக்கும் கோணேஸ்வரம் ஆலயத்தை மீளக் கட்டவேண்டும் என்ற சமஷ்ட்டிக் கட்சியின் கோரிக்கையினை அடுத்தே திருகோணமலை மாவட்டத்தினை சிங்கள பெளத்த மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு உத்வேகம் கொடுக்க ஆரம்பித்தது. 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசிடம் தேவாலயத்தினைப்  புனருத்தாரனம் செய்யப்படவேண்டியதன் அவசியம் பற்றி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு திருச்செல்வம் கேட்டிருந்தார். இதன் பின்னரே தமது சிங்கள பெளத்த மயமாக்கலினை துரித கதியில் செயற்படுத்தவேண்டும் என்று சிங்கள அரசுகள் எண்ணிச் செயற்பட்டு வரலாயின.  

mmmmm

தமிழர் தாயகத்தினை சிங்கள மயமாக்கும் கைங்கரியத்திற்குத் துணைபோன சிங்களக் கல்விமான்களில் ஒருவர் - பேராசிரியர் பரணவிதாரண

தமது இதிகாசப் புத்தகமான மகாவம்சத்தில் திருகோணமலையில் பிரெட்ரிக் கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் கோகண்ண என்கிற விகாரை இருந்ததாகவும், ஆகவே அவ்விடத்தில் சைவக் கோயில் ஒன்றினை மீள நிறுவுவதை தாம் அனுமதிக்கப்போவதில்லையென்றும் பெளத்த பிக்குகளும், சிங்கள மக்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களினால் எழுதப்பட்ட கதையான மகாவம்சத்தின்படி கிறீஸ்த்துவுக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அவர்கள் கூறும் மகாசேனன் எனும் மன்னன் வட - கிழக்குக் கடற்கரை ஓரம் ஒன்றில் கோகண்ண விகாரை என்று அழைக்கப்படும் பெளத்த கோயிலைக் கட்டினான் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கான வரலாற்றுச் சாட்சியங்கள் எவையும் எவராலும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. முன்னாள் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் பேராசிரியர் பரணவித்தாரண, கோணேஸ்வரம் ஆலயத்தின் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட 12 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஓலைச்சுவடிகளில் விவரிக்கப்பட்ட விடயங்களை தனக்குத் தெரிந்த வகையில் மொழிபெயர்ப்புச் செய்து அப்பகுதியில் பெளத்த விகாரை ஒன்று இருந்திருக்கலாம் என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார்.

அந்த ஓலைச் சுவடிகளில் இந்தியாவில் இருந்து இப்பகுதிக்கு விஜயம் செய்த இளவரசனான கொடகங்க தேவாவின் வருகையினை மட்டுமே குறிப்பிட்டிருந்தது. ஆனால் நுனிப்புல் மேய்ந்து முடிவுகளை எடுத்தும், சிங்கள பெளத்த அரசின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் சேவகம் செய்துவரும் சிங்களக் கல்விமான்கள் இந்திய இளவரசன் ஒருவனின் விஜயத்தினை விகாரை ஒன்று இப்பகுதியில் இருந்ததாக நிறுவும் தமது சதிக்குத் துணையாகப் பாவித்திருந்தனர். 

திருகோணமலை மாவட்டத்தில் பெளத்த புராதனச் சின்னங்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் செயற்பட்டு வந்த சிறில் மத்தியூவின் வலதுகரமான பியசேனவும் அவனது சகாக்களும் தாம் தேடுவது சிங்கள பெளத்த புராதனச் சின்னங்களையா அல்லது தமிழர்கள் பின்பற்றி வந்த மகாயான பெளத்தத்தினையா என்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர். மேலும், கோணேஸ்வர ஆலயப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் இந்து மொழியான சமஸ்கிருதத்தில் இருக்கின்றனவா இல்லையா என்பதுபற்றிக் கூட அவர்கள் அறிந்துகொள்ள விரும்பியிருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தாம் கண்டெடுக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே சிங்கள பெளத்தர்கள் பின்பற்றும் தேவராத பெளத்தத்திற்குச் சொந்தமானவைதான் என்கிற நிலைப்பாடே இருந்தது.

Sinhalization of North East – Nakkeran

 

 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியத்தை அழிக்கத் திட்டம் போட்ட ஜெயாரும், ஏமாற்றப்பட்ட சம்பந்தனும்
 

ThirukoneeswaramTemple-1.jpg

திருக்கோணேஸ்வரர் ஆலயம்

60 களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபர்களாக சிங்களவர்களையே நியமித்து வருகின்றன. தமிழ் மாவட்டமான திருகோணமலையினைச் சிங்களமயமாக்குவதற்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவது அவசியம் என்று அரசுகள் கருதிவந்தன. இவ்வாறான அரச அதிபர்களில் ஒரு சிலர் நேர்மையான, பாகுபாடற்ற மனிதர்களாக இருந்தனர். ஆனால், பெரும்பாலான அரச அதிபர்கள் அரசாங்கத்தின் கருவியாகச் செயற்பட்டு திருகோணமலையினைச் சிங்கள மயமாக்கும் அரசின் திட்டத்தினை தமது தலையாய கடமையாகக் கொண்டு நிறைவேற்றி வந்தனர். இந்த இரண்டாம் வகை அரசாங்க அதிபர்களே ஜெயாரின் காலத்தில் திருகோணமலையினை நிர்வகித்து வந்தனர்.

1978 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஜயதிஸ்ஸ பண்டாரகொட கடமையாற்றினார்.இவரது காலத்திலேயே திருகோணமலையில் சிங்களமயமாக்கல் துரித கதியில் இடம்பெற்று வந்தது. அரச திணைக்களங்களுக்கென்று மிகப்பெரியளவில் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதோடு, இக்காணிகள் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தார்கள். சுமார் 5000 ஏக்கர்கள் கொண்ட கொழும்பு வீதியுடன் அமைந்திருந்த நீண்ட நிலப்பரப்பு துறைமுக அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டது. இதைவிட மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் உல்லாசப் பயணத்துறைக்கென்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கென்றும் இன்னும் பிற அரச திணைக்கங்களுக்கென்றும் அரசால் கையகப்படுத்தப்பட்டு வந்தன.

view-from-thiriyai-hill-900_orig.jpg

தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னம் ஒன்றின் பின்னணியில் தெரியும் நீலப்பனிக்கைக் குளம்

திருகோணமலைக்கு வடக்காக இருந்த திரியாய் பகுதியில் அரசு திட்டமிட்டிருந்த மரமுந்திரிகைத் திட்டத்தினை ஜெயார் இரத்துச் செய்தமைக்காக தான் அவருக்கு நன்றிகூறியதாக சம்பந்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். திரியாய்க் கிராமம் மிகத் தொன்மையான தமிழ்க் கிராமம் ஆகும். நீலப்பனிக்கைக்குளம், 1940 ஆம் ஆண்டு புனருத்தாரனம் செய்யப்பட்டபின்னர் இக்குளத்திற்கு அண்மையாக உள்ள கிராமங்களில் நெற்பயிர்ச்செய்கை நடைபெற்று வந்தது. நிர்வாகக் கோளாறு ஒன்றின் காரணமாக இக்காணிகளில் விவசாயம் செய்துவந்த தமிழர்களுக்கான காணி உரிமைப் பத்திரத்தினை அன்றைய நிர்வாகம் வழங்கத் தவறியிருந்தது. 1980 ஆம் ஆண்டு, இப்பகுதிக்கு வந்த திருகோணமலை அரச அதிபர் ஜயதிஸ்ஸ பண்டாரகொட, தமிழ் விவசாயிகளுக்கு இக்காணிகளுக்கான உரிமையாளர் பத்திரம் இன்மையினால் அவர்கள் உடனடியாக இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டதுடன், இப்பகுதியில் 2000 ஏக்கரில் மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.

திரியாயில் தமிழ் விவசாயிகளை விரட்டிவிட்டு மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை அரசாங்க அதிபர் நடைமுறைப்படுத்தவுள்ளதை அறிந்த சம்பந்தன்  உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று தோட்டப் பயிர்ச்செய்கை கைத்தொழில் அமைச்சர் ஜயவர்தனவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். நெற்பயிற்செய்கை நடக்கும் காணிகளில் மரமுந்திரிகை செய்ய அரச அதிபர் முயற்சிப்பது குறித்து அமைச்சர் அறிந்தபோது திகைப்படைந்தார். மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கைக்கு அதிக நீர் தேவைப்பாடதென்பதுடன் சாதாரண தரையமைப்பே அதற்கு உகந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

"இந்தத் திட்டத்திற்கான உத்தரவைனை வழங்கியது யார்?" என்று சம்பந்தர் அமைச்சரைக் கேட்டார்.

தன்னை மன்னித்துவிடும்படி கேட்டுக்கொண்ட அமைச்சர், மரமுந்திரிகைத் திட்டத்திற்கான உத்தரவு அதிமேலிடத்திலிருந்தே தனக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். அதிமேலிடம் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் குறிப்பிடுவது ஜனாதிபதி ஜெயாரைத்தான் என்பதை சம்பந்தன் அறிந்தே வைத்திருந்தார்.

"என்னால் எதுவும் செய்யமுடியாது, நீங்கள் பெரிய மனிதரிடம் தான் இதுகுறித்துப் பேச வேண்டும்" என்று அமைச்சர் கைவிரித்து விட்டார்.

ஆகவே, சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்துப் பேசினார். ஜெயாரின் சிந்தனையில் ஏறும்வகையில் சம்பந்தன் அவரிடம் இவ்விடயத்தைப் பற்றி வினவினார், "இப்பகுதியில் வாழ்ந்துவருவது தமிழர்களா சிங்களவர்களா என்பதை விட்டு விடலாம், ஆனால், நெற்பயிர்ச்செய்கைக்காக கிராமக் குளத்திலிருந்து நீர்ப்பாசணம் செய்யப்பட்ட காணிகளில் மரமுந்திரிகையினை பயிர்செய்த முதலாவது ஜனாதிபதி என்கிற பெயர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் சம்பந்தன்.

இதனையடுத்து மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் உத்தரவினை ஜெயார் வழங்கினார். தனது ஆட்சிக்காலத்தின் ஆரம்பப்பகுதியில் தன்னை ஒரு நீதியான அதிபராகக் காட்ட முனைந்திருந்தார் ஜெயார்.

ஜெயாரிடமிருந்து டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு உத்தரவு ஒன்று வந்திருந்தது. தான் வழங்கும் ஒவ்வொரு பேச்சும் தான் பேசியதுபோல, அதே ஒழுங்கில் அச்சிடப்படவேண்டும் என்பதே அந்த உத்தரவு. இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பத்திரிக்கை ஆசிரியர், "நாம் ஒரு பத்திரிக்கை தான் நடத்துகிறோம், பாராளுமன்றப் பதிவேடு அல்ல" என்று கூறினார். "நீங்கள் பேசிய ஒழுங்கிலேயே நாம் அதனைப் பிரசுரித்தால் உங்கள் பேச்சின் கருப்பொருள் பத்திரிக்கைச் செய்தியின் அடித்தளத்திற்கல்லவா போய்விடும்?" என்று அவர் ஜெயாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "எனக்கு செய்தி முக்கியமில்லை, எனது பேச்சு சரித்திரத்தில் இடம்பெறவேண்டும், அவ்வளவுதான்" என்று தீர்க்கமாகக் கூறினார்.

இவ்வாறே எனது நண்பரும், பிரபல நீதிமன்ற செய்தியாளருமான நோர்ட்டன் வீரசிங்க ஜெயாரினால் ஒரு ஜனாதிபதியின் பேச்சினை சேகரிக்கும் நிருபராக ஆக்கப்பட்டார்.  அவரது வேலையெல்லாம் ஜெயாரின் பேச்சினை அப்படியே எழுதிக்கொள்வது. பின்னர் அதனை ஜெயாரிடம் காட்டி பிரசுரிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்வது என்பதாகவே இருந்தது. பெரும்பாலான நேரங்களில் ஜெயாரின் பேச்சு பத்திரிக்கையின் அதிகாலை நேர வெளியீட்டில் உள்ளடக்க முடியாது போய்விடும். சிலவேளைகளின் அவரின் பேச்சு மறுநாள் வெளியீட்டிலேயே வந்திருந்தது.

Thiriyai_news_26.12.jpg

மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் ஜெயாரின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். காமிணி திசாநாயக்கவுடனான சம்பந்தனின் அனுபவம் வித்தியாசமானது. தமிழரின் பூர்வீக கிராமமான பெரியவிளாங்குளம் பகுதியில் ஐரோப்பிய நாடுகளின் பண உதவியோடு காமிணி திசாநாயக்க மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் "மகாடிவுளுவெவ" என்று சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஒன்று நடைபெற ஆரம்பித்திருந்தது. இதனை அறிந்த சம்பந்தன் உடனடியாக இந்தக் குடியேற்றத்தை நிறுத்துமாறு காமிணியிடம் கோரியிருந்தார். சபந்தனின் முன்னால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய காமிணி அவர் முன்னாலேயே அத்திட்டத்தினை இரத்துச் செய்யும் உத்தரவினை மகாவலி அபிவிருத்திச் சபைக்கு வழங்கினார். ஆனால், சம்பந்தனை ஏமாற்றிய காமிணி, உடனடியாக திருகோணமலை அரச அதிபரான ஜயதிஸ்ஸ பண்டாரகொடவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ,  பெரியவிளாங்குளம் பகுதியை முற்றான சிங்களக் குடியேற்றமாக்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி, தான் அனுப்பிய இரத்துச் செய்யும் உத்தரவு அரச அதிபருக்குக் கிடைப்பதற்கு முன்னர், திட்டம் பூர்த்தியாக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். பின்னாட்களில் தான் எமாற்றப்பட்டதை சம்பந்தன் அறிந்துகொண்டபோது மனமுடைந்துபோனார். எப்படியான சிங்கள இனவாதிகளுடன் தாம் அரசியல் நடத்தவேண்டி இருக்கிறது என்று என்னிடமும் சலித்துக்கொண்டார்.

ஜெயாருடன் இன்னொரு விடயம் குறித்தும் சம்பந்தன் பேசியிருந்தார். அதுதான் காந்தியம் செயற்பாடுகள் குறித்து சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டு. சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்த அதே காலையில் சண்டே ஐலண்ட் பத்திரிக்கையும், தி வீக்கெண்ட் பத்திரிக்கையும் காந்தியம் மீது கடுமையான பிரிவினைவாதக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செய்திகளைக் காவிவந்திருந்தன. சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் எழுதிய பீட்டர் பாலசூரிய காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீது விசாரணை என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தார்.

"மட்டக்களப்பில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனமான ரெட்பாணாவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நம்பகமாகத் தெரியவந்திருக்கிறது. அமைச்சர் K. W. தேவநாயகத்தின் குற்றச்சாட்டொன்றினை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி இந்த விசாரணையினை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பில் ரெட்பாணாவும், வடக்கில் காந்தியமும் செய்துவரும் பல நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சந்தேகம் கொண்டிருப்பதாகவும், இதனாலேயே அரசாங்கத்தை அவர் எச்சரித்தார் என்றும் தெரியவருகிறது. காந்தியத்தின் செயற்பாடுகளை அமைச்சர் தேவநாயகம் சந்தேகிப்பதால்,  அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினை அவரது சமூக நலன் அமைச்சு ஜனாதிபதிக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது" என்பதே ஐலண்ட் பத்திரிக்கையின் செய்தியாகும்.

இதேவகையான செய்தியையே தி வீக்கெண்ட் பத்திரிக்கையில் ரனில் வீரசிங்கவும் ஜெனிபர் ஹென்றிக்ஸும் எழுதியிருந்தார்கள்.

"காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் தேவநாயகம் உயர் மட்ட அமைச்சர் கூட்டத்தில் எழுப்பிய சந்தேகங்களையடுத்து இவ்விரு அமைப்புக்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பமாகவிருப்பதாக நம்பகமாகத் தெரியவருகிறது. ஸ்கண்டிநேவிய நாடுகளின் பண உதவியுடன் செயற்பட்டுவரும் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சும், சமூக சேவைகள் அமைச்சும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன" என்பதே அந்தச் செய்தியாகும்.

DevanayagamKW.jpg

சிங்கள அரசில் அமைச்சராகவிருந்த தேவநாயகம்

என்னிடம் மேலும் பேசிய சம்பந்தன், காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீதான விசாரணைபற்றி தான் அறிந்துகொண்டவுடன் அமைச்சர் தேவநாயகத்துடன் தான் உடனடியாகத் தொடர்புகொண்டு ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று வினவியதாகவும், அதற்குப் பதிலளித்த அமைச்சர் தேவநாயகம், இந்த அமைப்புக்கள் குறித்து தான் எந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் பேசியதில்லையென்றும், ஆனால் தனது பெயரைப் பாவிப்பதன்மூலம் இச்செய்திக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்த்தினைக் கொடுக்க சிலர் முயல்வதாகவும் கூறியதோடு இச்செய்தி உண்மையாக இருக்கலாம், ஏனென்றால் ஜனாதிபதி ஜெயவர்த்தனவே இந்த விசாரணைகள் நடக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினாராம்.

"நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் பேசும்போது காந்தியத்தை முற்றாக நசுக்கிவிடும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது என்று கூறினேன். பட்டிணியினாலும், ஏழ்மையினாலும் வாடும் மக்களுக்கு காந்தியம் சிறப்பான தொண்டினை ஆற்றி, அவர்களை கெளரவத்துடன் வாழ வழி வகுத்து வருகிறது. என்னுடன் வந்து காந்தியம் செய்துவரும் தொண்டினை ஜெயார் பார்க்கவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த ஜெயார், நீங்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நான் வந்து பார்க்கவேண்டிய தேவையில்லை என்று கூறி எனது கோரிக்கையினை அவர் மறுத்துவிட்டார்" என்று சம்பந்தன் என்னிடம் கூறினார். 

காந்தியத்தின் செயற்பாடுகளைத் தன்னுடன் வந்து பார்வையிடுமாறு தான் கேட்டுக்கொண்ட கோரிக்கையினை  ஜெயார் நிராகரித்தபோதே காந்தியத்தை அழிக்க அவர் உறுதிபூண்டுவிட்டார் என்பதை தான் அறிந்துகொண்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். பின்னாட்களில் நடந்த சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்தின என்றும் சம்பந்தன் கூறினார்.

 

 

Edited by ரஞ்சித்
spelling
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மீதான கூட்டுத் தண்டனைக்கான விதைகளை விதைக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம்

Black July 1983

தமிழ் மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் நன்கு ஒருங்கமைக்கப்பட்ட முறையில் தாக்குதல் ஒன்றினை நடத்திய நாளான 1983 ஆனி 2 ஆம் திகதி நான் திருகோணமலையில் இருந்தேன். அந்நேரம், மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவினால் சிங்களக் குடியேற்றப்பகுதியான சமுத்திரபுரவில்  பாடசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் நான் கலந்துகொண்டிருந்தபோது திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகி எம். செல்வராஜா என்னைப் பார்க்க அவசரமாக வந்திருந்தார். "சபா, பிரச்சினை தொடங்கீட்டுது. தமிழர்களின் படகுகளை கடந்த இரவு அவர்கள் எரித்து விட்டார்கள்" என்று கூறிவிட்டு மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவிடம் இதுகுறித்துப் பேசியதுடன் பிரச்சினை மேலும் பெரிதாகாது பார்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

திருகோணமலையில் அதிகரித்து வந்துகொண்டிருந்த பதற்றத்தை என்னால் அன்று காலையில் இலகுவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிநின்று கடந்த நாள் நடைபெற்ற அசம்பாவிதங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே, "தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவேண்டும், அவர்களின் தலைகளை நொறுக்க வேண்டும்" என்று பேசினார்கள். லலித் அதுலத் முதலி மற்றும் ஜெயார் அடிக்கடி பாவித்த இவ்வார்த்தைகள் சாதாரண சிங்களவர்களின் நாவிலும் அப்போது தவழ்ந்துகொண்டிருந்தன.

மீன்வளத்துறை அமைச்சுபற்றி நான் செய்தி சேகரிப்பதில்லை, ஆனால் அமைச்சர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். கத்தோலிக்கரான அமைச்சர் பெஸ் டஸ் பெரேராவை யாழ்ப்பாண மீனவ சமூகத்துடனும், யாழ்ப்பாண கத்தோலிக்கத் திருச்சபையுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஜெயார் பணித்திருந்தார். ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் பெஸ்டஸ் பெரேராவும் ஒருவர். 1972 ஆம் டட்லி சேனநாயக்கவுடன் ஜெயார் முரண்பட்டபோது பெஸ்டஸ் பெரேரா ஜெயாருக்கு ஆதரவாக நின்றார். ஆபத்தான வேளைகளில் தனக்கு ஆதரவாக நின்றவர்களை பின்னர் தான் அதிகாரத்திற்கு வந்ததும்  அரவணைத்துக்கொள்ளும் நற்பண்பு ஜெயாருக்கு இருந்தது. ஆகவே, 1977 ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கைப்பற்றியபோது பெஸ்டஸ் பெரேராவுக்கு மீன்பிடித்தித்துறை அமைச்சினை வழங்கினார் ஜெயார். இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான், பெஸ்டஸ் பெரேராவுடன் நெருங்கிப்பழகும் பல சந்தர்ப்பங்களைப் பெற்றிருந்தேன்.

2544.jpg

பெஸ்டஸ் பெரேரா

1983 ஆம் ஆண்டு ஆனி 1 ஆம் திகதி திருகோணமலைக்குப் பயணமான ஊடக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். நாம் பயணம் செய்துகொண்டிருந்த வான் குருநாகல் நகர் மத்தியை அடைந்தபோது கறுப்புச்சட்டை அணிந்த இளைஞர்கள் சிலர் வீதியின் குறுக்கே, எமது வாகனத்தின் முன்னால் பாய்ந்து சாரதியை வாகனத்தை நிறுத்துமாறு பணித்தனர். ஆனால், சாரதியோ அவர்களை நோக்கி வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தவே அந்த இளைஞர்கள் விதியின் ஓரத்திற்குப் பாய்ந்து விலகிக்கொண்டார்கள். நகரில் இருந்த பல தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு சிங்களவர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்ததை வாகனத்தில் இருந்த அனைவரும் கண்ணுற்றோம். தமிழ் ஆண்கள் வீதிகளுக்கு இழுத்துவரப்பட்டு சிங்களவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழர்களைத் தேடித் தேடி வேட்டையாடிக்கொண்டிருந்த அந்தச் சிங்களக் காடையர் கூட்டத்தின் கண்களிலிருந்து என்னை, என்னுடன் வந்த சிங்களப் பத்திரிக்கையாளர்கள் காத்துக்கொண்டார்கள். எமது வாகனம் நகரின் எல்லையினைத் தாண்டிச் சென்றபோது, "நாம் சபாவைக் காப்பற்றிவிட்டோம்" என்று எனது சிங்கள நண்பர்கள் தமக்குள் குதூகலித்துக்கொண்டார்கள். 

Image

அன்று காலை, வவுனியா நகரில் கொல்லப்பட்ட இரு விமானப்படை வீரர்களின் இழப்பிற்குப் பழிவாங்க நாடு முழுவதிலும், சுமார் 50 இடங்களில் தமிழ் மக்கள் மீது ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் "கூட்டுத் தண்டனை" ஒன்று   சிங்களவர்களால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறான தண்டனை வழங்கப்பட்ட இடங்களில் ஒன்றான குருநாகல் நகரில் வாழ்ந்து வந்த  தமிழர்களும் தண்டிக்கப்பட்டார்கள். அன்று காலை வவுனியால் பணியாற்றி வந்த நான்கு விமானப்படை வீரர்கள் நகருக்கு மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வந்திருக்கிறார்கள்.  பெரேரா, குணசேகர ஆகிய வீரர்கள் தமது ஜீப் வண்டிக்கு அருகே காவல் நிற்க ஏனைய இருவரும் சந்தையின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். இவர்களின் வருகைக்காகக் காத்திருந்த நான்கு புளொட் போராளிகள் இவர்கள் இருவர் மீதும் கைக்குண்டுகளை எறிந்துவிட்டு, அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினார்கள். அந்த வீரர்கள் இருவரும் இறந்து விழ, அவர்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு புளொட் போராளிகள் தலைமறைவானார்கள்.

Image

தமது விமானப்படையினர் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியது. வவுனியா நகரில் இருந்து இரு கிலோமீட்டர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் கோவில்குளத்திற்குச் சிவில் உடைகளில் சென்ற ராணுவத்தினர் அப்பகுதியில் காந்தியம் அமைப்பினால் பராமரிக்கப்பட்டுவந்த பண்ணை மீது தாக்குதல் நடத்தி, அப்பண்ணையில் இருந்த பயிர்களையும், சேமிப்பிடங்களையும், கொட்டகைகளையும் எரித்தார்கள். மேலும், பண்ணையில் பாவிக்கப்பட்டு வந்த உழவு இயந்திரங்கள், போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வான்கள் என்பனவும் ராணுவத்தால் எரிக்கப்பட்டன. தாக்குதல் ஆரம்பித்த வேளையில் பண்ணையிலிருந்து தப்பியோடிய தமிழ் விவசாயிகள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொண்டார்கள்.

திருகோணமலையில் தமிழரின் மீன்பிடிப் படகுகள் எரிக்கப்பட்டதன் பின்னால் இருந்தது இராணுவத்தினர்தான் என்று செல்வராஜா என்னிடம் தெரிவித்தார். "தம்மை பின்புலத்தில் வைத்துக்கொண்டு, சிங்களக் காடையர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அவர்கள் ஊக்குவித்து வருகிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். 

ஆனி 3 ஆம் திகதி இரவு இவ்வாறான, ராணுவத்தினரின் பின்னணியில் நடந்த தாக்குதல் ஒன்றினை திருகோணமலை நகரில் நான் கண்டேன். திருகோணமலை பிரதான வீதியில் அமைந்திருந்த மன்ஷன் விடுதியில் வெடிபொருட்கள மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக தமக்குக் கிடைத்த தகவல்களையடுத்து ராணுவம் அங்கு தேடுதல் நடத்துவதற்குச் சென்றிருப்பதாக எமக்குச் செய்தி கிடைத்திருந்தது. ஆகவே, இதுபற்றிச் செய்தி சேகரிக்க எமது ஊடக் குழு அங்கு சென்றிருந்தது. நாம் அங்கு சென்றபொழுது ராணுவம் தனது தேடுதலை முடித்துவிட்டிருந்தது. அந்த விடுதியில் வெடிபொருட்கள் எவையும் இருக்கவில்லை. செய்தி சேகரிக்கச் சென்ற எமக்கு அது ஏமாற்றத்தைத் தந்திருந்தது.

ஆனால், சற்று நேரத்தின் பின்னர் எமக்கு இன்னொரு திகைப்பூட்டும் செய்தி கிடைத்தது. அப்பகுதியில் அமைந்திருந்த இன்னொரு கட்டடத்திற்கு ராணுவம் தேடுதல் நடத்தச் சென்றிருந்தது. மன்ஷன் விடுதியில் காவலுக்கு நின்றிருந்த இரு பொலீஸாரையும் கூட்டிக்கொண்டு இந்தக் கட்டடத்திற்கு ராணுவம் சென்றது. அப்போது, சந்தைப்பகுதியிலிருந்து காடையர் கூட்டமொன்று வெளியே வந்துகொண்டிருந்ததை நாம் கண்டோம். மன்ஷன் விடுதிக்குள் நுழைந்த அந்தக் காடையர் குழு அவ்விடுதியில் இருந்த அனைத்தையும் அடித்து உடைக்கத் தொடங்கியது. பின்னர், தாம் கொண்டுவந்திருந்த பெற்றொலினை விடுதி மீது ஊற்றி அதற்குத் தீவைத்தது. அந்த விடுதிக்குச் சொந்தக்காரர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெமினாதன் என்பதை நாம் பின்னர் அறிந்துகொண்டோம்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, திருகோணமலை நகரில் தமிழர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஒருங்கமைக்கப்பட்ட வலையமைப்பும், தாக்குதல் நடத்தப்படுவதற்கான சூழ்நிலையும் அங்கு மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் உணர்ந்துகொண்டோம். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளம் வாகனச் சாரதியான சபாரட்ணம் பழணிவேலின் படுகொலை குறித்து நான் இங்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன். வைகாசி 30 ஆம் திகதி அதிகாலை திருகோணமலை நோக்கிச் செல்லும் பஸ் வண்டியில் தனது உறவினர்களை ஏற்றிவிடுவதற்காக பழனிவேல் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை பஸ்நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பழனிவேலின் வாகனம் மீது அதிகாலை 4:30 மணிக்கு வல்வெட்டித்துறை ராணுவக் காவலரணில் கடமையில் நின்ற கோப்ரல் எம் விமலரட்ண கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். கொல்லப்பட்ட பழனிவேலின் உடலை வீதியில் இழுத்துவிட்ட ராணுவத்தினர் அதன் மீது தமது ராணுவ ட்ரக் வண்டியை ஏற்றிச் சிதைத்தனர்.

3.png

பழனிவேலின் கொலைக்காக கோப்ரல் விமலரட்ண கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். தமிழர் மீதான கொலைகளுக்கு இறுதியாகத் தண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் விமலரட்ணதான் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்வும், இதற்கு முதல் நடத்தப்பட்ட நவரட்ணராஜா மீதான படுகொலை தொடர்பான நீதிவிசாரணையும் ராணுவத்தையும், அரசாங்கத்தையும் ஆத்திரப்பட வைத்திருந்தது. ஆகவே, இவ்வாறான நீதிவிசாரணைகளிலிருந்து தனது ராணுவத்தினரைப் பாதுகாக்க ஜெயார் தனது வழமையான சதிகளை அரங்கேற்றத் தொடங்கினார். தனது ஏவலாளிகளில் ஒருவரின் ஊடாக இப்பிரச்சினையினை பாராளுமன்றத்திலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலோ விவாதிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயார் விரும்பினார். இவ்வாறு செய்வதன் மூலம் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தான் அழுத்தம் காரணமாகவே சில விடயங்களைச் செய்யவேண்டி ஏற்ப்பட்டதாகக் காட்டுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தருணத்தில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து சரத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தை அழிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என்கிற தீர்மானத்தை தனது கட்சியின் செயற்குழு நிறைவேற்றுவதை ஜெயார் உறுதிப்படுத்திக்கொண்டார். மிகவும் கொடூரமான இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பொதுமக்கள் ஆதரவினை இனவாதம் கக்கும் பத்திரிக்கைகளான தி சண், தி ஐலண்ட் மற்றும் இவற்றின் சிங்கள மொழிப் பத்திரிக்கைகள் உருவாக்கிவந்தன. 

ஜெயாரின் ஆட்சிக் காலம் முழுவதும் லலித் அதுலத் முதலியே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராகச் செயற்பட்டு வந்தார். ஊடகங்களுக்குத் தேவையான தகவல்களை அவரே வழங்கியும் வந்தார். அவரை ஊடகவியலாளர்கள் "செய்தியாளன்" என்றே அழைத்து வந்தார்கள். அவருக்கு எவற்றினைச் செய்தியாக்கவேண்டும், எவற்றினைச் செய்தியாக்கல் ஆகாது என்கிற அறிவு இருந்தது. அரசாங்கத்தின் நலன்களுக்காக ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர் ஊடகங்களுடன் நட்புப் பாராட்டி வந்தார். அனைத்துப் பத்திரிக்கை ஆசிரியர்களுடனும் சிநேகபூர்வமான உறவை ஏற்படுத்திக்கொண்ட லலித், திறமைவாய்ந்த நிருபர்களுடனும் தொடர்புகளைப் பேணிவந்தார். நோர்ட்டன் வீரசிங்கவும் நானும் டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் அவரது நண்பர்களாக இருந்தோம். அவருக்குத் தெரிந்தவர்களுக்கு தனது பிரத்தியே தொலைபேசி தொடர்பெண்ணை அவர் வழங்கியிருந்தார். அந்த தொலைபேசி எண்ணுடன் காலை 5:30 மணியிலிருந்து நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள முடியும். ஒவ்வொரு செவ்வாய் காலை உணவின்போதும் நாம் அவருடன் தொடர்புகொள்வது வழக்கம். ஒவ்வொரு புதன் நாளிலும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவிருக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பான தகவல்களை அவர் செவ்வாயன்றே எம்முடன் பகிர்ந்துகொள்வார்.

From left: Lalith Athulathmudali, J.R. Jayewardene, Gamini Dissanayake and Ranasinghe Premadasa at the  funeral of Actor-politician Vijaya Kumaratunga

ஜெயாருடன் அவரது ஏவலாளிகள்

இவ்வாறான நாள் ஒன்றில், தி சண் பத்திரிக்கையின் நிருபர் ஜெனிபருக்கு செய்தியொன்றினை காலையுணவை அருந்தியவாறே லலித் வழங்கியிருந்தார். செய்தியை வழங்கிய பின்னர் ஜெனிபரைப் பார்த்து, "இது உங்களுக்கான செய்தியல்ல, டெயிலி நியூஸுக்கானது. ஏனென்றால், டெயிலி நியூஸில் வரும் செய்திகளை மக்கள் அப்படியே நம்பப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களுக்கு தகவல்களையும் உங்களுக்குப் பிரச்சாரச் செய்திகளையும் நான் தர விரும்புகிறேன்" என்று கூறினார். பொதுமக்கள் கருத்தறியும் வல்லமை அதுலத் முதலிக்குக் கைவந்த கலை. தனியார் ஊடகங்களைப் பாவித்து அரசுக்குச் சார்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் அவர் கைதேர்ந்து விளங்கினார்.

 

 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் தண்டனைகளில் இருந்து விலக்களிக்கும் அரசின் சட்டம்

4.png

1983 ஆம் ஆண்டு ஆனி 3 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது

வடக்கில் நிலைகொண்டிருக்கும் பொலீஸாரும், ராணுவத்தினரும் தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கான முழு அதிகாரத்தினையும் இனிமேல் கொண்டிருப்பார்கள். இதன் நிமித்தம் ஏற்படும் அனைத்துக் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்தும் அவர்களுக்கு பூரண விலக்களிக்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட முழு அறிக்கையின் வடிவமும் கீழே,

அரச படைகளையோ பொதுமக்களையோ கொல்வது குறித்து எந்த தயக்கமும் காட்டாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச படையினருக்கும் பொலீஸாருக்கும், நவடிக்கைகளின்போது ஏற்படும் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து முற்றான விலக்கு அளிக்கப்படும். பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் அரச படையினர் மனிதநேயத்தையும், நீதிவிசாரணைகள் பற்றிய அச்சத்தையும் பற்றிச் சிந்திக்காது தமது கடமையில் கவனம் செலுத்துவதற்காக இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு போர்க்காலச் சூழ்நிலையென்பதனால், இச்சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினரையும் பொலீஸாரியும் பாதுகாக்கவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

இந்த தண்டனை விலக்கு 1983 ஆம் ஆண்டு ஆனி 3 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம்     15 A இன் மூலம் சட்டமாக்கப்பட்டது. இதன்படி ராணுவத்தினராலும், பொலீஸாரினாலும் சுட்டுக் கொல்லப்படும் எவரினதும் உடல்களை ராணுவத்தினரே எரித்துவிடவும், இக்கொலைகளில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவதைத் தவிர்க்கவும், இக்கொலைகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கவும் இந்தச் சட்டம் அனுமதியளிக்கிறது.

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கான அரசின் அங்கீகாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் போராளிகள் அரசிற்கொரு செய்தியினை வழங்கினர். தேர்தல்களில் பங்குபற்றக் கூடாது என்கிற புலிகளின் தடையினையும் மீறி உள்ளூராட்சித் தேர்தலில் பங்குகொள்ள முடிவெடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் திலகரை புலிகள் சுட்டுக் கொன்றனர். யாழ்ப்பாண வைத்தியசாலை ஊழியரான திலகர் ஆனி 4 ஆம் திகதி காலை 6:15 மணியளவில் சுடப்பட்டார். ராணுவத்திற்கும் பொலீசாருக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து பூரண விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்த 24 மணிநேரத்திற்குள் திலகர் கொல்லப்பட்டமையானது, போராளிகள் ஆயுதப் போராட்டம் மூலம் தமது இலக்கினை அடைவதில்  உறுதியாக இருக்கிறார்கள் என்பதனையே காட்டியிருந்தது. 

பொதுமக்கள் உரிமைகள் அமைப்பு ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பியிருந்த தந்தியில் அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் அரச படைகளுக்கான தண்டனைகளிலிருந்தான விலக்கிற்கெதிராக தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தது. இவ்வமைப்பின் தலைவரான குருநாகல் மாவட்ட கத்தோலிக்க ஆயர் லக்ஷ்மண் விக்கிரமசிங்கவும் செயலாளர் டெஸ்மன் பெர்ணான்டோவும் இத் தந்தியில் கையொப்பமிட்டிருந்தார்கள். நீதித்துறையின் அடிப்படை உரிமைகளை அனைத்து மக்களுக்கும் சமமாகப் பாவித்து குற்றமிழைப்பவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.  இல்லாதுவிடில் ஜனநாயகத்தின் அடிப்படையான நீதித்துறையின் இலக்கணங்களை அரசு காற்றில் பறக்கவிட்டதாகிவிடும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தார்கள்.

இப்புதிய சட்டம் அரச ராணுவத்தினருக்கு மட்டுமல்லாமல், அரச ஆதரவுடனான சிங்கள தீவிரவாதிகளுக்கும் அனுகூலமாக அமைந்தது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து தமிழரின் வீடுகள், கடைகள், கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. வடக்குக் கிழக்கில், குறிப்பாக திருகோணமலையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டபோதும் தமிழர் மீதான கொடூரங்கள் தொடர்ச்சியாக நடந்தே வந்தன. பல குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இவற்றில்  ஒருவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்திருந்தனர்.

ஊரடங்கு நேரத்தில் ஒருங்கமைக்கப்பட்ட சிங்களப் பயங்கரவாதிகளால் தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் அகோரத்தினை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. தமிழர் மீதான தாக்குதலில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய அதேவேளை, தாக்குதல்களிலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த தமிழர்களை. "ஊரடங்கை மீறினார்கள்" என்று சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது.

பகல் வேளைகளில் தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்த ராணுவத்தினர் அங்கிருந்த ஆண்களை விசாரணைக்கென்று வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல, இக்கிராமங்களுக்குள் இரவு வேளையில் நுழைந்த சிங்களக் காடையர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், தமிழர்களின் விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்தபின்  வீடுகளையும், உடைமகளையும் எரியூட்டினர். பல தமிழ்ப் பெண்கள் சிங்களக் காடையர்களால் கூடாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டனர்.

ஆனிமாதத்தின் பிற்பகுதியில் வடக்கிலும், திருகோணமலையிலும் சூழ்நிலை மோசமடைந்து வந்தது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து மீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சாரதி கொல்லப்பட்டதுடன் பல தமிழர்கள் படுகாயமடைந்தனர். காயப்பட்ட பயணிகளை அடித்துவிரட்டிய ராணுவத்தினர் பேரூந்திற்கு தீமூட்டினர். ஆனால் மறுநாள் செய்தித்தாள்களில் பேரூந்தினை தமிழ்ப் போராளிகளே தாக்கிவிட்டு சாரதியைக் கொன்று பேரூந்திற்கும் தீவைத்ததாக ராணுவம் கூறியிருந்தது. பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம், இத்தாக்குதலில் காயப்பட்டு உயிர்தப்பிய பயணிகளுடன் தான் பேசியதாகவும், இப்பேரூந்துமீது தாக்குதலை நடத்தி சாரதியைக் கொன்றது ராணுவத்தினரே என்றும், காயப்பட்ட பயணிகளை அடித்து விரட்டி பஸ்ஸிற்குத் தீவைத்தது ராணுவத்தினரே என்றும் கூறியிருந்தார். மேலும், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஆறு தமிழர்களைப் பாதுகாப்புப் படையினர் கொன்றிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

திருகோணமலையில் தமிழர்களின் நிலைமை மிகவும் பாரதூரமாக இருந்தது. இது இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த தமிழர்களுக்கு மிகுந்த வருத்தத்தினை அளித்திருந்தது. கலாநிதி எஸ்.. தர்மலிங்கமும் கோவை மகேசனும் திருகோணமலையின் நிலவரம் குறித்து தந்தி ஒன்றினை கொழும்பில் இருந்த சில வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பியிருந்தனர்.

திருகோணமலையில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் பாரதூரமான நிலையொன்றிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். அரசு அறிவித்த ஊரடங்கு வேளையிலும் படுகொலைகள், கடையுடைப்புக்கள், வீடெரிப்புக்கள் என்று தமிழருக்கெதிரான வன்முறைகள் தங்குதடையின்றி நடந்துவருகின்றன. இனவாதம் கொண்ட இலங்கையின் பாதுகாப்புப் படைகளே இந்த நாசச் செயல்களின் பின்னால் இருக்கின்றன. தமிழர் மீது நடந்துகொண்டிருக்கும் திட்டமிட்ட இனவழிப்பினை சிநேகபூர்வமான நாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்பதே அந்தத் தந்தி கூறிய செய்தியாகும்.

Trincomalee2004.jpg

திருகோணமலை

தமிழ் ஈழ விடுதலை முன்னணி திருகோணமலையில் நடைபெற்றுவந்த தமிழர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணம் யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. திருகோணமலையில் தமது சகோதர்கள் மீது சிங்கள அரசு , அரச ஆதரவிலான சிங்களக் காடையர் கும்பல்களும் புரிந்துவரும் கொடூரங்கள் குறித்த செய்திகளை அறிந்தபோது மனதிற்குள் பொங்கிக்கொண்டிருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது உணர்வுகளை வெளியிட இந்த ஹர்த்தால் வடிகால் அமைத்துக் கொடுத்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஹர்த்தால் பூரண வெற்றி அடைந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டன். வாகனப் போக்குவரத்து முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. யாழ்ப்பாணமெங்கும் சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மக்கள் வீதிகளுக்கு இறங்குவதையே முற்றாகத் தவிர்த்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தை ஸ்த்தம்பிக்கச் செய்த ஹர்த்தாலினால் ராணுவத்தினரும் பொலீஸாரும் கொதித்துப் போயினர். அரசு ஆத்திரத்தில் கறுவிக்கொண்டிருந்தது. ஜெயார் தனது பாணியிலேயே யாழ்ப்பாணத் தமிழரின் ஹர்த்தாலுக்குப் பதிலளித்தார். ஆடி 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சுதந்திரன் மற்றும் சட்டர்டே ரிவியூ பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. கலாநிதி தர்மலிங்கமும் கோவை மகேசனும் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்கள். அரசு சார்பாகப் பேசிய அதிகாரி டக்கிளஸ் லியனகே ஹர்த்தாலின்போது அரச உடமைகள் மீது சேதம் விளைவிக்கப்பட்டதாலேயே பத்திரிக்கைகள் மீதான தடையும், பலரின் கைதுகளும் இடம்பெற்றதாகக் கூறி அவற்றினை நியாயபடுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக அரசு கூறிய வன்முறைகளுக்கும் தமிழ் ஈழ விடுதலை முன்னணிக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. டெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற டெலா அமைப்பே இந்த வன்முறைகளில் ஈடுபட்டிருந்தது. ஓபரோய் தேவனால் இயக்கப்பட்ட டெலா இயக்கம் பஸ்வண்டிகளை எரித்து தபால் அலுவலகங்கள் உட்பட சில அரச கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தது. மேலும் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே சேவையில் ஈடுபட்டு வந்த யாழ்தேவி கடுகதி புகையிரதத்தையும் டெலா அமைப்பு பகல்ப்பொழுதில் எரித்தது.

z_p06-Yal-02.jpg

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாருக்கு அமிர்தலிங்கம் அனுப்பிய திருகோணமலை நிலவரம் தொடர்பான தந்தி

Black-July-book-by-E-Thornton.jpg

திருகோணமலையின் நிலவரம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வந்தது. ஆடி முதலாம் திகதி அந்த நகருக்கு பயணம் செய்த அமிர்தலிங்கம், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்திருந்தார். மறுநாள் கொழும்பு திரும்பிய அவர் ஜெயவர்த்தனவுக்கு பின்வருமாறு ஒரு தந்தியினை அனுப்பியிருந்தார். 

"திருகோணமலையில் இன்று இருக்கும் நிலைமையினை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு இன்றுதான் கொழும்பு திரும்பினேன். இரு தரப்பினராலும் வன்முறைகள் நடைபெறுவதாகக் கூறப்படுபவை தவறான செய்திகளாகும். இதுவரை 16 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும், வெட்டுக்காயங்களுடனும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 40 பேரில் 35 பேர் தமிழர்கள். இதுவரை எரிக்கப்பட்டுள்ள 150 வீடுகளில் 95 வீதமானவை தமிழருக்குச் சொந்தமான வீடுகளாகும். குறைந்தது ஆயிரம் பொதுமக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர், இவர்களுள் ஒருவர் கூட சிங்களவர் கிடையாது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் ராணுவத்தினர் மக்களை அச்சுருத்திவிட்டுச் செல்ல, சிங்களக் காடையர்கள் அவர்களின் பின்னால் சென்று தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்திவருவதுடன் தமிழர்களின் வீடுகளையும் எரியூட்டுகின்றனர். தமிழர்கள் மீது பாரிய அளவில் வன்முறைகளும், தாக்குதல்களும், படுகொலைகளும் நடத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில்க் கூட ஓரிரு சிங்களவர்களை மட்டுமே பொலீஸார் இதுவரையில் கைதுசெய்திருக்கின்றனர். ஆனால், கைதுசெய்யப்பட்டவர்களில் குறைந்தது 80 வீதமானவர்கள் தமிழர்கள். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும்வேளையில் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சிங்களவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். பொலீஸாரும், இராணுவத்தினரும் இனரீதியாகச் செயற்பட்டு, வன்முறைகளை ஊக்குவித்து வருகின்றனர். ராணுவத்தினரும் பொலீஸாரும் இப்பகுதிகளில் இருந்து வெளியேறினால் தமிழர்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் நிலைமை உருவாகும். தமிழர்கள் தம்மை தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்துவரும் பொலீஸாரும், ராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வரும் சிங்களக் காடையர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் தமிழ் பொலீஸாரின் எண்ணிக்கை நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவர எந்தவிதத்திலும் போதுமானது அல்ல. தமிழர்களின் நம்பிக்கையினை வளர்ப்தற்கு தயவுசெய்து தமிழ் பேசும் அதிகாரிகளையும், பொலீஸாரையும் இப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். சிங்கள ராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் துணையுடன் அப்பாவித் தமிழ்மக்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்படுவதைத் தயவுசெய்து தடுத்து நிறுத்துங்கள்" என்று அத் தந்தி கோரியிருந்தது. 

 
 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மீதான வன்முறைகளில் விருப்பத்துடன் பங்கேற்ற சிங்கள் குடியேற்றவாசிகள் 

012_web312-Black-July-3.jpg

தான் அனுப்பிய தந்தியைத் தொடர்ந்து ஆடி 5 ஆம் திகதி கடிதம் ஒன்றினையும் அமிர்தலிங்கம் ஜெயாருக்கு அனுப்பியிருந்தார். வன்முறைகளின் அளவு குறைந்திருந்தபோதும், பதட்ட நிலை அங்கு தொடர்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். " கடந்த இரவு கூட தமிழரான சுந்தரன் சிங்களக் காடையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்" என்று கூறியதோடு தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்துவருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் இக்கடிதத்தில் இராணுவத்தினரின் இனக்குரோத மனோநிலையினை வெளிப்படுத்தும் சம்பவங்கள் பற்றியும் அவர் குறிப்பிடத் தவரவில்லை. 

"திருகோணமலையில் நடைபெற்ற வன்முறைகளின்போது ராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் கவனத்திற் கொள்ளத் தக்கது. அபயபுர பகுதியில் இரண்டு தமிழர்களை வெட்டிக் கொன்றுவிட்டு, இன்னும் பலரை வாட்களால் வெட்டிக் காயப்படுத்திய சிங்களக் காடையர்கள் கூட்டத்தின்மீது தமிழ் கடற்படை அதிகாரியொருவர் நடவடிக்கை எடுத்தவேளை அவர்மீது மிகக்கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் அவருடன் கூடவே அப்பகுதியில் கடமைக்கு நின்ற‌ சிங்கள கடற்படை வீரர்கள். அரச படைகளுக்குள் இனவாதம் எவ்வளவு ஆளமாக ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்" என்று அமிர் கூறியிருந்தார். 
"பொலீஸாரும், ராணுவத்தினரும், சாதாரண சிங்களப் பொதுமக்களும் இனவாதம் தலைக்கேறிய நிலையில் திருகோணமலையில் தமிழர்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் மீதான வன்முறையென்பது வைரஸ் கிருமி போல சிங்களவர்களிடையே பரவி வருவதுடன், இந்த அபாயகரமான வைரஸின் தோற்றிடம் சிங்கள அரசியல்வாதிகள் தான் என்பதில் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை"என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  

இனவாதத்திற்கும் பாஸிஸத்திற்கும் எதிரான அமைப்பின் பிரதிநிதியான நான்ஸி மரே திருகோணமலையில் நடைபெற்ற தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் குறித்து தான் எழுதிய  "இனவாதம் கொண்ட சர்வாதிகார அரசு" எனும் புத்தகத்தின் "தமிழர்களுக்கு எதிரான அரசாங்கம்" எனும் அத்தியாயத்தில்   பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். 
"இரண்டு மாதகாலமாக நடைபெற்ற தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகளால் திருகோணமலை நகரம் பாழடைந்துபோய்க் காணப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் எரிக்கப்பட்டு, ஆடி மாத இறுதியில் குறைந்தது 30 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதலை அவதானிக்கும் எவருக்கும் அவை மிகவும் திட்டமிட்ட ரீதியில் ஒரே பாணியில் நிகழ்த்தப்பட்டிருப்பது தெரியவரும். அண்மைய வருடங்களில், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சிங்களவர்கள் மட்டுமே பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயற்பட்டு வரும் அரசு, தமிழரின் பிரதேசங்களான கிழக்கு மாவட்டங்களில் அதிகளவில் சிங்களவர்களைக் குடியேற்றி வருகிறது. 1983 ஆம் ஆண்டளவில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இக்குடியேற்றங்களுக்கு வந்துசேரும் சிங்களவர்கள் தமது குடியேற்றங்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் விருப்பத்துடன் பங்கேற்று வருவது தெரிகிறது. இப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னத்தை தமிழர்கள் எதிர்ப்பதனால், சிங்களவர்களிடம் அமெரிக்காவின் இருப்பென்பது அவசியமானது எனும் தோற்றப்பட்டை உருவாக்குவதிலும் அரசு முயன்று வருகிறது" என்று குறிப்பிடுகிறார்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களையும் பார்த்து செய்திகளையும் வாசிக்க பிபி எகிறிக் கொண்டு போகுது.

தொடருங்கள் ரஞ்சித்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த துறவிகளின் கைகளில் தவழும் தானியங்கித் துப்பாக்கிகள் ‍ இங்கிலாந்துச் செய்தியாளர்

David_Selbourne_%282%29.jpg

டேவிட் செல்போர்ன் எனும் இங்கிலாந்துச் செய்தியாளர் மஞ்செஸ்டர் கார்டியன் எனும் பத்திரிகைக்கும் ஏனைய வேறு பத்திரிகைகளுக்கும் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தவர். லலித் அதுலத் முதலியுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர். 1982 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு பயணம் செய்தபோது ஜெயவர்த்தனவுக்கும், காமிணி திஸாநாயக்கவுக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். ஒருநாள் பொதுக்கூட்டம் ஒன்றிற்காகச் சென்றுகொண்டிருந்த ஜெயவர்த்தன, காரில் தன்னுடன் அந்தச் செய்தியாளரையும் அழைத்துப் போனார். செய்தியாளர்களை தன்பக்கம் இழுத்துக்கொள்வதற்கு ஜெயார் பாவித்த வழிமுறைகளில் இதுவும் ஒன்று. காரில் பயணித்துக்கொண்டிருந்த ஜெயாருக்கும் டேவிட் செல்போர்னுக்கும் இடையிலான சம்பாஷணை தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் தடம் மாறியது.

தனது அறிக்கையில் லலித் அதுலத் முதலி கூறியவற்றை செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.

"நாங்கள் சிலரின் தலைகளை நொறுக்கப் போகிறோம்" என்பதுதான் லலித் அதுலத் முதலி செபோர்னிடம் கூறிய வார்த்தை.

ஆனால் பின்னாட்களில் தான் அப்படிச் சொல்லவில்லை என்பதனை மறுத்திருந்த லலித் அதுலத் முதலி, செல்போர்னை தனது எதிரியாகவும் பார்க்கத் தலைப்பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு செல்போர்ன் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தபோது உளவாளிகள் அவரைப் பின் தொடர்ந்திருந்தார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

தேர்தல் கடமையில் இருந்த ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கலாக இராணுவம் வெறியாட்டம் ஆடிய கந்தர்மடம் பகுதிக்கு செல்போர்ன் சென்றிருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்போர்ன் பேசியபோது, கந்தர்மடத்திற்கு வந்திறங்கிய இராணுவத்தினர் தமது அதிகாரி அங்கு வரும்வரையில் காத்திருந்ததாகவும், அவர் வந்து உத்தரவு பிறப்பித்த பின்னரே தாக்குதலை ஆரம்பித்ததாகவும் அவரிடம் கூறியிருக்கின்றனர். 


 செல்போர்ன் அமிர்தலிங்கத்தையும் செவ்வி கண்டிருந்தார். அமிர்தலிங்கம் அவருடன் பேசும்போது "புலிகளின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் ஆதரிப்பதாகவும், அதனாலேயே அவர்களை பாதுகாப்பதாகவும்" கூறியிருக்கின்றார். மேலும், "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் திக‌ழ்பவர்கள் புலிகள் தான்" என்றும் அமிர் செல்போர்னிடம் தெரிவித்திருக்கிறார்.


பின்னர், செல்போர்ன் பிரதம நீதியரசரர் நெவில் சமரக்கோனையும் செவ்வி காண  ஒழுங்கு செய்திருந்தார். . ஆனி 11 ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ரத்வத்தை, பேர்சி சொலிம் தோமே, சொய்சா ஆகியவர்களுக்கெதிராக ஜெயார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதையடுத்து நீதியரசர் ஜெயாருடன் முரண்பட்டிருந்த வேளை அது. கம்யூனிசக் கட்சியின் உறுப்பினரான விவியேன் குணவர்த்தண மீது கொள்ளுப்பிட்டிய பொலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அவர் தொடர்ந்திருந்த வழக்கில் நீதி வழங்கியவர்களே இந்த மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் ஆகும். அதற்குப் பழிவாங்கலாகவே அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை ஜெயார் தூண்டிவிட்டிருந்தார். செல்போர்னுடனான செவ்வியின் போது ஜெயார் குறித்து கடுமையான விமர்சனங்களை பிரதம நீதியரசர் முன்வைக்கலாம் என்று அஞ்சிய அரசு, ஆனி 25 ஆம் நாள் இரவு, செல்போர்னைக் கைது செய்து நாடு கடத்தியிருந்தது.

Exterior view of Dambulla rock temple

 தம்புள்ளை குகை விகாரை

நன்கு அறியப்பட்ட செய்தியாளரைக் கைது செய்து நாடு கடத்தியமை இலங்கை அரசுக்கு சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையில் செல்போர்ன் எழுதிய "வன்முறைகளை தடுக்கத் தவறிய இலங்கை ராணுவம்" எனும் தலைப்பிலான செய்தி அதிகம் பகிரப்பட்டதோடு வேறு பல செய்தித்தாள்களிலும் மேற்கோள் காட்டப்பட்டு வெளிவந்திருந்தது. ஆடி 6 ஆம் திகதி வெளிவந்த இச்செய்தியை இந்தியாவின் முக்கிய பத்திரிக்கைகளும் மீள் பிரசுரித்திருந்தன. தான் எழுதிய செய்தியாக்கத்தில் செல்போர்ன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், "காவி உடை தரித்த பெளத்த பிக்குகளின் கைகளில் இன்று தானியங்கித் துப்பாக்கிகள் பளபளக்கின்றன". மேலும், இலங்கை அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் புரட்டாதி மாதத்தில் சத்தியாக்கிரக நிகழ்வொன்றினை நடத்துவதற்கும் உத்தேசித்திருக்கிறார்கள் என்று அவர் எழுதியிருந்தார். 

Anisa-Holmes_-monks-e1439768100314.jpg
 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

செல்போர்ன் அமிர்தலிங்கத்தையும் செவ்வி கண்டிருந்தார். அமிர்தலிங்கம் அவருடன் பேசும்போது "புலிகளின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் ஆதரிப்பதாகவும், அதனாலேயே அவர்களை பாதுகாப்பதாகவும்" கூறியிருக்கின்றார். மேலும், "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் திக‌ழ்பவர்கள் புலிகள் தான்" என்றும் அமிர் செல்போர்னிடம் தெரிவித்திருக்கிறார்.

இதை இன்றும் பல தமிழர்கள் மறுக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2023 at 02:29, ஈழப்பிரியன் said:

படங்களையும் பார்த்து செய்திகளையும் வாசிக்க பிபி எகிறிக் கொண்டு போகுது.

அண்ணா, அப்படி கோபம் வரவில்லையென்றால்த்தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். தலைவரின் சரித்திரத்தை எழுதுவதாலேயே பல விடயங்களை என்னால் அறியவும் உணரவும் முடிகிறது. தலைவர் ஏன் ஆயுதப் போராட்டமே சரியான வழியென்று தீர்மானித்தார் என்பதை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அன்றிருந்த நிலையினைக் காட்டிலும் தமிழினம் இன்று கையறு நிலையில் இருக்கிறது. அன்று ஆயுதப் போராட்டம் ஒன்று உருவாவதற்குக் காரணமாக இருந்தவற்றைக் காட்டிலும் பன்மடங்கு காரணங்கள் எமக்கு இன்று இருக்கின்றன. எல்லாவற்றிற்கும்  மேலாக எம்மீது திட்டமிட்ட இனக்கொலையொன்று அரங்கேற்றப்பட்டிருப்பதோடு, எமது தாயகம் முற்றான ராணுவ ஆக்கிரமிப்பில் அமிழ்ந்து கிடக்கிறது. எமக்கான வழியினை அவர் காட்டிச் சென்றிருக்கிறார், வழிதொடர்வதே எமது கடன் !

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வாழ்வுபற்றியோ அல்லது அவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றியோ நான் கவலைப்படவில்லை -  ‍ ஜே ஆர் ஜெயவர்த்தன‌

Image

 

டேவிட் செல்போர்னினால் சர்வதேசத்தில் தெரிவிக்கப்பட்ட திருகோணமலை வன்முறைகள் தொடர்பான செய்திகளை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்ய ஜெயார் விரும்பினார். அதற்காக அமிர்தலிங்கம் தனக்கு ஆடி 6 ஆம் திகதி எழுதிய கடிதத்தினை பிரச்சாரப் பொருளாக்கினார் ஜெயார். ஆகவே சனடாவில் வசித்துவந்த தனது ஆலோசகரான ஜெயரட்ணத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜெயார், அரச ராணுவத்தினரினுள்ளும் பொலீஸாரினுள்ளும் வேரூன்றிப் போயிருக்கும் தமிழ் மக்கள் மீதான வெறுப்புப் பற்றி அமிர்தலிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகப் பேசினார். அரசாங்கத்திற்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்படுவதன் மூலம்  இனங்களுக்கிடையிலான பகைமையுணர்வினைக் குறைக்கலாம் என்று அவர் கூறினார். "உங்கள் நண்பரிடம் நான் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்று கூறுங்கள். இப்பேச்சுவார்த்தைகளை ஆடி 9 ஆம் திகதி நாம் ஆரம்பிக்கலாம்" என்று வில்சனூடாக அமிர்தலிங்கத்திற்குச் செய்தியனுப்பினார் ஜெயார்.

Alfred Jeyaratnam Wilson.jpg

ஜெயரட்ணம் வில்சன் தன்னிடம் கொண்டுவந்த செய்தி குறித்து அமிர்தலிங்கம் திருப்தியடையவில்லை. அவர் வில்சனிடம் இவ்வாறு கூறினார், "முன்னர் நடந்த கூட்டங்களில் அவர் ஏற்றுக்கொண்ட விடயங்களை முதலில் செய்து முடிக்கச் சொல்லுங்கள், பின்னர் புதிய கூட்டங்கள் குறித்துப் பேசலாம்" என்று கூறினார்.பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதத்தில் செய்வதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏழு விடயங்கள் குறித்து எழுதியிருந்தார். மேலும் எட்டு புதிய விடயங்கள் குறித்து தான் ஜனாதிபதியுடன் பேச விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

அமிர்தலிங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் வருமாறு,

"நாம் கலந்துகொண்ட முன்னைய கூட்டங்களில் செய்வதாக உறுதியளித்த கீழ்வரும் விடயங்கள் குறித்து இதுவரை எதுவித நடவடிக்கைகளும் உங்கள் தரப்பிலிருந்து எடுக்கப்படமை குறித்து நான் வருத்தம் அடைகிறேன்".

1. வவுனியா தொல்பொருள் திணைக்கள வளாகத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் எழுப்பப்பட்டிருக்கும் புத்தர் சிலையினை அகற்றுவது தொடர்பான இணக்கப்பாடு.

2. வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சன்குளத்தில் புகையிலைக் கூட்டுத்தாபனத்திலன் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தினை அகற்றுவது தொடர்பான இணக்கப்பாடு.

3.உப பொலீஸ் மா அதிபர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வைகாசி 31 ஆம் திகதி முதல் ஆனி 3 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் படுகொலைகளிலும், தமிழ் மக்கள் மீதான வன்முறைகளிலும் ஈடுபட்டவர்கள் என்று கண்டறியப்பட்ட பொலீஸ் அதிகாரிகள் மீது இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பிரதம நீதியரசருக்கு குற்றவாளிகள் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரையில் அதுகுறித்த மேலதிக நடவடிக்கைகளை எடுக்க அரசு மறுத்து வருகிறது.

4. மாவட்ட அதிகார சபைகளுக்கூடாக அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட ஊர்லகாவல்ப் படையினை இதுவரை அரசு அமைக்க முன்வரவில்லை.

5. தமிழ் மற்றும் முஸ்லீம் பொலீஸ் அதிகாரிகளை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்தல். வட மகாணத்திற்கு தமிழ் அதிகாரிகளை அனுப்பியதன் மூலம் அங்கு நிலைமை ஓரளவிற்கு சுமூகமாக்கப்பட்டிருந்தாலும் கூட ஏனைய தமிழ் பேசும் மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்து வருகிறது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடமையில் இருந்த தமிழ் பொலீஸ் அதிகாரிகளை அகற்றிவிட்டு அங்கு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் அமர்த்தி வருகிறது. எம்முடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக இந்த மாவட்டங்களில் அதிகளவு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் பதவியில் அமர்த்தி வருகிறது.

6. தமிழ் பொலீஸ் அதிகாரிகளை கடமைக்குச் சேர்த்துக்கொள்வது  என்கிற தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

7. திஸ்ஸமாராமைப் பகுதிகளில் நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றப்பாடுவார்கள் என்கிற உறுதிப்பாடு இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை.

Thissa_tank.jpg

 

திஸ்ஸமாராமக் குளம்

 

மேலும், ஜெயவர்த்தனா பிரஸ்த்தாபித்த ஆடி 9 ஆம் திகதி கூட்டத்தில் தான் எட்டு விடயங்கள் குறித்து பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலாவதாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை மேம்படுத்துவது மற்றும் அவற்றினை இயங்கச் செய்வது தொடர்பான விடயம். இரண்டாவது, மகாவலி அபிவிருத்தித் தட்டத்தின் மூலம் வீடுகளையும் நிலங்களையும் தமிழ் மக்களுக்கு ஒதுக்குவது, வன்முறைகளினால் அழிக்கப்பட்ட வீடுகளை மீளக் கட்டிக் கொடுப்பது மற்றும் பலகலைக் கழக அனுமதியில் திருத்தங்களை மேற்கொள்வது.

தனது பொறிக்குள் அமிர்தலிங்கம் விழாது சாதுரியமாகத் தப்பிக்கொண்டது ஜெயாருக்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. எந்த விடயங்களை பேச்சுவார்த்தையில் இருந்து விலக்குவது என்று அவர் நினைத்திருந்தாரோ, அதே விடயங்களை அமிர்தலிங்கம் மீண்டும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கக் கேட்டுக்கொண்டது அவரது சினத்தை இரட்டிப்பாக்கியிருந்தது. மேலும், ஆடி 6 ஆம் திகதி காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து கண்ணிவெடிகளை இயக்கும் கருவிகளை புலிகள் எடுத்துச் சென்றிருந்ததும் அவரது சினத்திற்கு இன்னொரு காரணம்.

சீலன் தலைமையில்  சீருடைகளை அணிந்து சென்ற  புலிகளின் அணியொன்று அதிகாலை இரண்டரை மணிக்கு காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் வாயிலை அடைந்தது. தனது வாகனத்திலிருந்து கீழிறங்கிய சீலன் வாயிலில் காவலுக்கு நின்றிருந்த இராணுவ வீரரை தனக்கருகில் வருமாறு அழைத்தார். வந்திருப்பது ராணுவ அதிகாரியொருவர் என்று நினைத்த ராணுவ வீரர்கள் அவரருகில் சென்று அவருக்கு சல்யூட் செய்தனர்.

SLAN1-300x204.jpg

அவர்களுடன் சிங்களத்தில் பேசிய சீலன், "தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிகளை இயக்கும் கருவிகளை புலிப் பயங்கரவாதிகள் எடுத்துச் செல்ல திட்டமிட்டு வருவதாக எமக்குச் செய்தி வந்திருக்கிறது. மேலதிக பாதுகாப்பிற்காக நாம் வந்திருக்கிறோம். எவரையும் உள்ளே வரவிடாதீர்கள். எவராவது இங்கு வந்தால் அவர்களை இங்கேயே மறித்து வைத்துக்கொண்டு எம்மை அழையுங்கள், நாம் வந்து அவர்கள் பற்றி விசாரிக்கிறோம்" என்று கூறினார்.

அதன் பின்னர் வெடிக்கும் கருவிகள் சேமித்துவைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் சேமிப்புக் கிடங்கிற்கு நேரடியாக தமது வாகனத்தை புலிகள் செலுத்திச் சென்றனர். தொழிற்சாலை ஊழியர் ஒருவரூடாக தாம் பெற்றுக்கொண்டிருந்த திறப்பினைக் கொண்டு சேமிப்புக் கிடங்கினைத் திறந்தனர். அங்கிருந்த ஐந்து வெடிக்கவைக்கும் கருவிகளையும் எடுத்துக்கொண்டு, சேமிப்புக் கிடங்கினை மீளவும் பூட்டிவிட்டு அங்கிருந்து அகன்ற புலிகள், வாயிலுக்கு வரும்போது வாகனத்த்தை மெதுவாகச் செலுத்தி வாயிலில் காவலுக்கு நின்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறிவிட்டு தப்பிச் சென்றனர்

காங்கேசந்துறைத் தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிக் கருவிகள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டமை மற்றும் யாழ்தேவி ரயில் டெலா இயக்கத்தால் எரிக்கப்பட்டமை ஆகிய விடயங்களுக்காகப் பழிவாங்கவேண்டும் என்று அரசு நினைத்தது. ஆகவே, யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை உட்பட அத்தியாவசிய சேவைகள் அனைத்தையும் அது நிறுத்தியது. தனியார் போக்குவரத்தையும் முடக்கிப் போட்டது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஆறு தனியார் பஸ் வண்டிகள் ஈரப்பெரிய குளத்தில் வழிமறித்து எரிக்கப்பட்டன. பருத்தித்துறையிலிருந்து கொழும்புநோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிமீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சிங்களச் சாரதி காயமடைந்தார். யாழ்ப்பாணத்தின் பிரதான போக்குவரத்துச் சாதனமான துவிச்சக்கர வண்டிகளைத் தடைசெய்யவது தொடர்பாகவும் அமைச்சரவை ஆலோசனைகளை நடத்தியது.

தெற்கில் ஜெயாருக்கான ஆதரவு வளரத் தொடங்கியிருந்த காலமது. சுதந்திரக் கட்சிக்குள் பிளவொன்றினை அவரால் உருவாக்க முடிந்திருந்தது. தனது 40 வருட அரசியல் வாழ்க்கையின் நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் சுதந்திரக் க‌ட்சியைச் சேர்ந்த அநுர பண்டாரநாயக்கவை அவரால்  கலந்துகொள்ள வைக்க முடிந்திருந்தது. அநுரவின் இந்தச் செயலினையடுத்து சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான விஜய குமாரதுங்க மற்றும் அவரது மனைவி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியிருந்தனர். மிகப் பிரபலமான நடிகரும், கவர்ச்சியான அரசியல்வாதியுமான விஜய குமரதுங்கவின் வெளியேற்றத்தினையடுத்து ஏற்கனவே பலவீனமடைந்திருந்த சுதந்திரக் கட்சி மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. விஜயகுமரதுங்கவை நக்சலைட்டுக்களுக்கு ஆதரவு வழங்கினார் என்று பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தண்டிக்க முயன்றபோதும் ஜெயாரினால் விஜயகுமாரதுங்க உட்பட்ட சுதந்திரக் கட்சியின் பலத்தினை சிதைக்க முடிந்திருக்கவில்லை. ஆனால், அநுரவை தனது அரசியல் நிக‌ழ்விற்கு வரவழைத்த சிறிய நடவடிக்கை மூலம் விஜயவை கட்சியிலிருந்து வெளியேறவும், சுதந்திரக் க‌ட்சியைப்  பிளவுபடுத்தவும்  ஜெயாரினால் முடிந்திருந்ததுடன் தெற்கில் தனது செல்வாக்கினையும் அதிகரிக்க முடிந்திருந்தது.

ஆனால், தனது செல்வாக்கினை வடக்குக் கிழக்கில் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஜெயாருக்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியது. ஆகவே, தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் நடத்தப்போவதாகத் தெரிவித்திருந்த ஆடி 9 ஆம் திகதிய கூட்டத்தை இரத்துச் செய்த ஜெயார், ஆடி 12 ஆம் திகதி டெயிலி டெலிகிராப் பத்திரிகையாளர் கிரகம் வோர்ட்டிற்கு வழங்கிய செவ்வியில் தமிழருக்கும், முன்னணியினருக்கும் கடுமையான செய்தியொன்றினை வழங்கியிருந்தார். "ஒன்றில் வழிக்கு வாருங்கள் அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதுதான் அவரது செய்தியின் சாரம்."தமிழர்கள்  என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட எனக்கு தற்போது நேரமில்லை. அவர்களைப்பற்றி என்னால் இப்போது நினைக்க முடியாது. அவர்களது வாழ்வு பற்றியோ அல்லது எம்மைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றியோ நான் கவலைப்படவில்லை. பயங்கரவாதிகள் முற்றாக அழிக்கப்படும்வரை நாம் விரும்புவது நடக்கப்போவதில்லை. ஒரு நோயை அழிக்கும்வரை அந்த நோயாளியை எப்படிக் குணப்படுத்தமுடியாதோ அதுபோலத்தான் இதுவும்" என்று ஜெயார் தெரிவித்தார். மேலும் முன்னணியினரின் வாயை அடக்க ஒரு விடயத்தைக் கூறினார் ஜெயார், "இதுவரை காலமும் பயங்கரவாதிகளின் சார்பாக முன்னணியினர் பேசிவந்தனர், ஆனால் அது இனிமேல் நடக்கப்போவதில்லை".

VijayaKumaratunge.jpg

விஜய குமாரதுங்க, மாலினி பொன்சேக்கா, லக்கி டயஸ் மற்றும் ரஞ்சித் குமார‌

அரசியல் யாப்பில் ஆறாம் சட்டத் திருத்தத்தை ஜெயார் முன்வைத்ததும் அந்தச் சந்தர்ப்பத்தில்த்தான். முன்னணியினருடனான உயர் மட்டக் கூட்டத்தை இரத்துச் செய்திருந்த ஜெயார், உடனடியாக  அமைச்சரவையின் உள்க்கூட்டத்தினைக் கூட்டி காமிணி திசாநாயக்க மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோருடன் முன்னணியினரை மெளனிக்கவைக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தார். ஜெயாருடன் நெருக்கத்தினை ஏற்படுத்த நினைத்திருந்த லலித் அதுலத் முதலி இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து பிரிவினைவாதத்தினை ஆதரித்து எவரும் பிரச்சாரம் செய்வதனைத் தடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யவேண்டும் என்கிற ஆலோசனையினை ஜெயாரிடம் முன்வைத்தார்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மன்னிப்புச் சபையுடன் முரண்பட்ட ஜெயார், ஜனாதிபதியாகத் துடித்த லலித்

Lalith-Athulathmudali-Gamini-Dissanayake-and-J.R.Jayewardene.jpg

ஜெயவர்த்தன தனது இரண்டாவது தவணைக்காலத்தை 1988 ஆம் ஆண்டு நிறைவுசெய்யும்போது ஜனாதிபதிப் பதவிக்கு வரும் தனது விருப்பத்தை லலித் அதுலத் முதலி வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். ஆனால், ஜெயாருடன் காமிணி திசாநாயக்க கொண்டிருந்த நெருக்கம் அவருக்கு கவலையைக் கொடுத்திருந்தது. அத்துடன் காமிணியின் கட்டுப்பாட்டிலிருந்த பல அமைச்சுக்களும், குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டமும் அதனுடன் இணைந்த பாரியளவிலான காணிகள் மீதான அதிகாரமும் லலித்திற்கு சங்கடத்தைக் கொடுத்திருந்தன. லலித்தின் கவலைகளை அவருடன் நெருங்கிப் பழகிய செய்தியாளன் என்கிற வகையில் நான் நன்கு அறிந்தே இருந்தேன். அவரின் கீழிருந்த வணிகம் மற்றும் கப்பற்றுரை அமைச்சுக்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து வந்த அதே காலத்தில் காமிணியின் கீழான அமைச்சுகக்கள் பற்றிய செய்திகளையும் சேகரித்து வந்திருந்தேன். ஜெயாரினதும், மக்களினதும் நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல நிதியுதவித் திட்டத்தினை லலித் பரிந்துரை செய்திருந்தார். ஜெயவர்த்தனவின் அரசியலின் அடிநாதமே "வடக்குப் பயங்கரவாதத்தை அழித்தல்" என்றாகியபோது, லலித்தும் அதனை இறுகப் பற்றிக்கொண்டார். ஆகவேதான் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பிரேரித்ததுடன் நின்றுவிடாமல், அதனைச் சட்டமாக்கவும், நிறைவேற்றவும் கடுமையாக உழைத்து ஜெயாரின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான "தீர்வினை" சிரம் மேல் ஏற்று முன்னின்று உழைத்தார். மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஜெயார் கொண்டிருந்த நிலைப்பாட்டினை நாட்டினுள்ளும், வெளியிலும் நியாயப்படுத்தி, முன்கொண்டு செல்வதிலும் தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்தி வந்தார். லலித்தின் செயற்பாடுகள் பற்றி நான் தொடர்ந்து இங்கு பதிவிடுவேன்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அடக்குவது குறித்து கிரகம் வோர்ட்டிடம் பேசிய ஜெயார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தான் கூட்ட விரும்புவதாகவும் கூறியிருந்தார். இக்கூட்டத்திற்கு முன்னாள் பிரதமரான சிறிமா உட்பட பல அரசியல்த் தலைவர்களையும் அழைக்கப்போவதாகக் கூறிய ஜெயார், தனது திட்டத்தினை எவர் ஏற்றுக்கொண்டால் என்ன, இல்லாதுவிட்டால் என்ன தான் நிச்சயமாக பயங்கரவாதத்திற்கெதிரான தனது நடவடிக்கைகளை எடுத்தே தீருவேன் என்று தீர்க்கமாகக் கூறினார். 

இச்செவ்வியின்போது சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கிரகம் வோர்ட் வினவியபோது, அது இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டு வரும் பிரச்சாரம் என்று எள்ளி நகையாடினார் ஜெயார். இலங்கையின் கம்மியூனிசக் கட்சியின் ஸ்த்தாபகரான கலாநிதி விக்கிரமசிங்கவின் மகனான டெஸ்மண்ட் பெர்ணான்டோவே சர்வதேச மன்னிப்புச் சபையின் கொழும்புக் கிளைக்குப் பொறுப்பாக அக்காலத்தில் பணிபுரிந்து வந்தார். ஆகவே, அவரை மனதில் இருத்தியே "கம்மியூனிசஸ்ட்டுக்களின் பொய்ப் பிரச்சாரம்" என்று தனது ராணுவம் மற்றும்  பொலீஸார் மீதான விமர்சனங்களை அவர் நிராகரித்திருந்தார். 

1983 ஆம் ஆண்டு ஆடி 6 ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து தமிழர்களை கைதுசெய்து, தடுத்துவைத்து, கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மேல் புரிந்து, நீதிமன்ற வழ்க்குகளின்றி கலவரையின்றி அடைத்துவைத்தல் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தடுத்துவைத்தல் ஆகிய செயற்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சட்டியிருந்தது. அத்துடன், இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை எழுந்தமானமாகக் கைதுசெய்து , சித்திரவதைகளின்பின்னர் அவர்களைக் கொன்று வீதிகளில் எறிந்துவருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது.

https://www.amnesty.org/fr/wp-content/uploads/2021/06/asa370051984en.pdf

 

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாகக் கைதுசெய்யப்படும் அரசியல்ச் செயற்பாட்டாளர்களை வெளித்தொடர்புகள் அனைத்திலுமிருந்து இலங்கையரசு தடுத்துவைத்திருக்கிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பலர் சுமார் எட்டு மாத காலம்வரை ராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் கடுமையான சித்திரவதைகளை சந்தித்து வருகின்றனர். இச்சித்திரவதைகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு, இரும்புக் கம்பிகளால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு, அவர்களின் நக இடுக்குகளில் ஊசிகள் ஏற்றப்பட்டு, கண்கள் உட்பட உடலின் பல இடங்களில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தது சர்வதேச மன்னிப்புச்சபை.

மேலும், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ அல்லது அவர்களுக்கான வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வதையோ இலங்கையரசாங்கம் தொடர்ந்தும் மறுத்தே வருவதாகவும் மன்னிப்புச்சபை கூறியது. இவ்வறிக்கையின் தொடர்ச்சியாக 12 பரிந்துரைகளை மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது,

1. கைதுசெய்யப்படுவதற்கான காரணத்தினை அக்கைதிகளுக்கு தெரியப்படுத்துவது.

2. கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது.

3. கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தல்.

4. கைதிகள் மேல் நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சுதந்திரமான கட்டமைப்பொன்றினை உருவாக்குவது.

5. ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாக சாட்சியங்களை தயாரித்தல் அல்லது சேகரித்தல்.

6. நீதிமன்றில், நீதிபதிகளின் முன்னால் அன்றி, வேறு எவ்விடத்திலும் பொலீஸாரினால் தயாரிக்கப்படும் கைதிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை முற்றிலுமாகத் தடை செய்வது. 

ஆகியவை இவற்றுள் முக்கியமானவையாகும்.

 

தனது அறிக்கைக்குப் பதிலாக இலங்கையரசாங்கம் வெளியிட்ட விமர்சனத்தை வெளியிடப்போவதாக மன்னிப்புச்சபை தெரிவித்தபோது ஜெயார் கடுமையாகக் கோபமடைந்திருந்தார். மன்னிப்புச்சபையின் அறிக்கைக்குப் பதிலளித்த அரசாங்கம், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மன்னிப்புச்சபை வெளியிட்டிருந்த விடயங்களில் ஒன்பது விடயங்களை முற்றாக நிராகரித்திருந்ததுடன் சில கைதிகள் வெளித்தொடர்பின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தது. இதுகுறித்த முற்றான அறிக்கையினை அரசு ஆடி 22 ஆம் திகதி வெளியிட்டது.

V_N_Navaratnam.jpg

வி.என். நவரட்ணம்

இதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது மூன்றாவது வருடாந்த மாநாட்டினை மன்னாரில் ஆடி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதாகத் தீர்மானித்திருக்க, சாவகச்சேரி தேர்தல்த் தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி.என். நவரட்ணம் தான் பதவி விலகுவதாக ஆடி 21 ஆம் திகதி அறிவித்தார். தனது விலகலுக்கான காரணத்தை அறிக்கை வடிவில் வெளியிட்ட நவரட்ணம், கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததுடன்  1977 ஆம் ஆண்டு தன்னைத்  தெரிவுசெய்து ஆறு ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திற்கு அனுப்பிய வாக்காளர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். அவரின் அறிக்கை முன்னணியின் ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான அவமானத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ஜெயாருக்கும் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

 மேலும், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபபையின் தலைவர் எஸ்.நடராஜா தனது பதவி விலகல் அறிவிப்பினை ஆடி 15 இல் வெளியிட்டது ஜெயாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. தனது பதவி விலகல் குறித்து யாழ்ப்பாணத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடராஜா, மாவட்ட அபிவிருத்திச் சபைக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட அதிகாரங்கள் எவற்றினையும் அரசு தரமறுத்து வருவதாகவும், சபை இயங்குவதற்கான நிதியினை தடுத்துவைத்திருப்பதாகவும் கூறியதோடு, இச்சபைகளை அரசு உருவாக்கியதன் உண்மையான நோக்கம் தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கேயன்றி வேறு எதற்கும் அல்ல என்று கூறியதோடு, வெற்றுக்கோது என்றும் இச்சபையினை அவர் விளித்திருந்தார். "பொடியள் கேட்கும் கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லை. சபையினை இயக்குவதற்காக நான் முன்வைத்த நிதிக் கோரல்களை நிதியமைச்சு தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது" என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் இப்பத்திரிக்கையாளர் மாநாட்டில் இரு விடயங்கள் குறித்து நடராஜா பேசியிருந்தார். முதலாவது, காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு பை சீமேந்திற்கும் தலா ஒரு ரூபாய் வீதம் வரியினை அறவிடுதல். இரண்டாவது, காங்கேசந்துறைக்கும் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பற்சேவையினை ஆரம்பிப்பது. இவ்விரு கோரிக்கைகளையும் உடனடியாக நிராகரித்த அரசு, மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு வரிவிதிக்கும் அதிகாரம் இல்லையென்று முதலாவது கோரிக்கையினை உதாசீனம் செய்ததுடன், நாட்டில் நிலவும் பாதுகாப்புக் காரணங்களால் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பற்சேவையினை ஆரம்பிக்க முடியாது என்றும் கூறியிருந்தது.

SriLankamap6.gif

 

ஆடி 17 ஆம் திகதி வெளிவந்த பத்திரிக்கைகள் அனைத்திற்கும் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய சர்வகட்சி மாநாட்டினை அரசு கூட்டவிருப்பதான செய்தியினை ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்தது. அச்செய்தியில் பயங்கரவாதத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான வழிகள் பற்றி இந்த மாநாடு ஆராயும் என்றும் கூறியது. சுதந்திரக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதாகவும் இச்செய்தி கூறியது. தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்காது பயங்கரவாதத்தினை முறியடிக்க நடத்தப்படும் இந்த மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பங்கேற்காது என்று அமிர்தலிங்கம் கூறினார். உடனடியாக இதற்குப் பதிலளித்த ஜெயார், இம்மாநாட்டில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயலாம் என்று மாநாட்டின் நோக்கத்தில் சிறிய மாற்றத்தினைச் செய்தார்.

 

 

 

 

Edited by ரஞ்சித்
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆட்சேபம்

K Shankar Bajpai: The scholar diplomat who defied easy labels

பயங்கரவாதத்தினை அழித்தே தீருவேன் என்றும், அதனால் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி தான் கவலைப்படப்போவதில்லை என்றும் டெயிலி டெலிகிராப் பத்திரிக்கைக்கு ஜெயார் கொடுத்திருந்த செவ்வி இந்திய வெளியுறவுத்துறையில் சிறிய சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இந்தவிடயத்தை பிரதமர் இந்திரா காந்தியிடம் அவர்கள் கொண்டுசென்றபோது, இந்தியாவின் இது தொடர்பான கரிசணையினை இலங்கைத் தூதுவரான பேர்ணாட் திலகரத்ணவை அழைத்துத் தெரிவிக்கும்படி வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளரான சங்கர் பாஜ்பாயை இந்திரா பணித்தார்.

HameedACS.jpg

.சி.எஸ்.ஹமீட்

அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்படுவோர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களை எரித்துவிடும் அதிகாரம் ராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இக்கொலைகளுக்கான தண்டனைகளில் இருந்து ராணுவத்தினருக்கும், பொலீஸாருக்கும் முற்றான விலக்கும், மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீது பரேதப் பரிசோதனை செய்யவோ தேவையில்லை என்ற விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா கரிசணை கொண்டிருந்தது. மிகக் கொடுமையான இந்தச் சட்டங்கள் குறித்து இந்தியப் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாக எழுதி வ‌ந்ததையடுத்து, கொழும்பிலிருந்து இந்திய உயர்ஸ்த்தானிகர் எஸ்.ஜே.ஜே. சாட்வாலை தனது வெளியுறவுத்துறை அமைச்சின் அலுவலகத்திற்கு அழைத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை அமுலாக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் .சி.எஸ். ஹமீட் விளக்கவேண்டியதாயிற்று. ஹமீடின் விளக்கத்தினை ஷட்வால் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எதிர்த்து அறிக்கையொன்றினை அவர் இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பிவைத்தார்.

bt.jpg

பேர்ணாட் திலகரட்ண 

அன்று மாலையே தில்லியில் தங்கியிருந்த பேர்ணாட் திலகரட்ணவை தனது அலுவலகத்திற்கு அழைத்த இந்திய வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளர் பாஜ்பாய், பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த இந்தியாவின் கரிசணையினைத் தெரிவித்தார். இச்சட்டங்கள் தமிழர்களுக்கான அடிப்படை மனிதவுரிமைகளை மீறுவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மக்கள் கொந்தளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியா இச்சட்டம் தொடர்பான தனது கருத்தினையே முன்வைக்கிறது, அழுத்தங்களையல்ல என்றும் மிகவும் பவ்வியமாக அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த திகரட்ண, "கடவுளே, இது எமது நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் அல்லவா?" என்று பாஜ்பாயைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார். பின்னர், அவரைப் பார்த்து, "இது தமிழ்நாட்டு அரசின் கருத்தா அல்லது மத்திய அரசின் கருத்தா?" என்று கேட்டர் திலகர‌ட்ண.

அதற்குப் பதிலளித்த பாஜ்பாய், "இது மத்திய அரசின் அதிமேலிடத்தில் உள்ளவரின் கருத்து" என்று கூறினார். 

உடனடியாக கொழும்புடன் தொடர்புகொண்ட திலகரட்ண, "இது எனக்கு அதிர்ச்சிதரும் ஒரு அறிக்கை" என்கிற தலைப்பில் இந்தியாவின் கரிசணையினை அனுப்பிவைத்தார்.

இந்தியாவின் கரிசணை பற்றி தனது தூதுவர் மூலம் அறிந்துகொண்டபோது கொழும்பு அரசாங்கம் கடும் எரிச்சலடைந்தது. டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் இதனைச் செய்தியாகப் போடுமாறு பணிக்கப்பட்டதுடன், ஆசிரியர்த் தலையங்கத்திலும் இந்தியாவின் கரிசணை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. செய்தியின் தலைப்பு இப்படிச் சொல்லியது, "எமது விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை இலங்கை வெறுப்புடன் நோக்குகிறது".  மேலும் அதன் ஆசிரியர் தலையங்கத்தில், "இதனை எப்படிச் செய்தாய் பெரியண்ணா?" என்கிற கருத்தில் விமர்சித்திருந்தது. இனவாதப் பத்திரிக்கையான சண் ஒருபடி மேலே சென்று, "பெரிய சண்டியன் இந்தியா" என்று தலைப்பிட்டிருந்தது.

சர்வகட்சி மாநாடு

ஆடி 20 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடக்கவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத்தினை ஒழிக்கும் சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும், தோழமைக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மட்டுமே சமூகமளித்திருந்ததனால், அம்மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சமசமாஜக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் புதிய சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தனர்.

பயங்கரவாதத்தினை அழிக்கும் தனது திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை வெளியிடாததனால் தாம் இந்த மாநாட்டில் பங்குபெற்ற விரும்பவில்லை என்று சுதந்திரக் கட்சி கூறியது. அக்கட்சியின் பேச்சாளாரான லக்ஷ்மண் ஜயக்கொடி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது "ஜெயவர்த்தனா சதியில் இறங்கியிருக்கிறார், பயங்கரவாதத்தினை அழிப்பதற்கான எமது திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு, பின்னர் ஏதும் தவறுகள் நடக்குமிடத்து சுதந்திரக் கட்சியே இவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டது என்று பழியினை எம்மீது போட்டுவிடுவார்" என்று கூறினார். "இந்த சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுவதை விடுத்து தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு முதலில் வெளிப்படையாகச் சொல்லட்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சி ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு அமிர்தலிங்கம் இரு காரணங்களை முன்வைத்தார். முதலாவதாக, பிரச்சினைக்கான மூல காரணத்தை அறியாமலும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை முன்வைக்காமலும் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக மட்டுமே இந்த மாநாடு கூட்டப்படுவதால் தனது கடசி அதில் கலந்துகொள்ளாது என்று கூறினார். மேலும், இம்மாநாட்டில் சுதந்திரக் கட்சி கலந்துகொள்ளாமையினால், தமிழருக்கான தீர்வினைத் தருவதில் இக்கட்சிகள் இரண்டினதும் ஒருமித்த கொள்கை ஒன்று இல்லாமல்ப் போயிருயிப்பதாகவும், இதுவே தனது கட்சி இம்மாநாட்டில் கலந்துகொள்ளாமைக்கான மற்றைய காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

"இம்மாநாட்டில் மேசைகள் எவ்வாறு அடுக்கப்பட்டிருக்கின்றன, வட்டமாகவா அல்லது சதுரமாகவா?" என்று லலித்திடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "1977 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டமேசை மாநாடு என்றே நாம் பேசி வந்தோம், ஆகவே வட்டவடிவில்த்தான் அவை ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று கூறினார்.

ஆனால், தேர்தல் முடிந்த கையோடு அவர் எனக்கு அளித்த பதில் குறித்து அவருக்கு நான் நினைவுபடுத்தினேன். அன்று நான் அவரிடம் "தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு என்னவாயிற்று?" என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்திருந்த லலித், "வட்டமேசையா, அது என்ன? மக்களின் ஆணையுடன் பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினைக் கொண்டிருக்கிறோம். நாங்களே மேசையைச் சுற்றி அமர்ந்துகொள்வோம். இனப்பிரச்சினையாக இருந்தாலென்ன, அல்லது வேறு எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன, நாமே என்ன செய்யவேண்டும் என்பதை முடிவெடுப்போம்" என்று கர்வத்துடன் கூறியிருந்தார்.

ஆகவே, நான் இன்று கேட்டபோது, "இன்றைக்கும் எமது முடிவு அப்படியே இருக்கிறது, நாமே முடிவுகளை எடுப்போம்" என்று மீண்டும் அத‌னை உறுதிப்படுத்தினார்.

மறுநாள், ஆடி 21 ஆம் திகதி, தனது கருத்தினை பாராளுமன்றத்தில் முன்வைத்தது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து பெளத்த சிங்களக் கட்சிகளுக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தமது போருக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இவ்வாறு கோரிக்கை விடுக்கும்போது ஜெயாரின் உணர்வுகளை அச்சொட்டாக அவர் விரும்புவதுபோலவே வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் அதுலத் முதலி கூறியது இதைத்தான்,

"அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சினையினை எப்படித் தீர்க்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்தவகையில் நாம் தீர்த்துவைப்போம். நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டாலென்ன, விட்டாலென்ன அல்லது அதனை ஆதரித்தலேன்ன இல்லாவிட்டாலென்ன, நாம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை  எமது திட்டத்தின்படி கொடுப்போம். பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட எது சரியான தீர்வென்று எமது அரசாங்கம் நினைக்கின்றதோ, அந்தவைழியில் சென்று நிச்சயம் அதனை முற்றாக நடத்தி முடிப்போம்".

"பயங்கரவாதத்தை அழிக்கும் இந்த செயற்பாட்டில் அப்பாவிகள் பாதிக்கப்படலாம்.  அப்பாவிகளின் அழிவுகளை குறைக்க நாம் முயற்சி எடுப்போம். சுதந்திரக் கட்சிக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும், ஆனால் தற்போது எதற்காகப் பின்வாங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிங்கள பெளத்த கட்சியாக இருந்துகொண்டு பயங்கரவாதத்தை அழிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எப்படிக் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? பயங்கரவாதத்தை அழிக்க முன்வராது இருந்துவிட்டு எப்படி மக்களையும் தேர்தல்களையும் எதிர்கொள்ளப்போகிறீர்கள்? பாஸிஸப் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான போரில் உங்களை இணைந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

Asiaweek Feb 8 1987 Athulathmudali & British mercenary in Jaffna : Direct talks with militants

இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் கொலைஞன் ஒருவனுடன் உலங்குவானூர்தியில் இருந்துகொண்டு உரையாடும் சிங்கள பெளத்த கொலைஞன் லலித் அதுலத் முதலி

ஜெயவர்த்தனவைத் திருப்திப்படுத்துவதன் மூலம் காமிணியை ஓரங்கட்டிவிட்டு ஜெயாருக்கு நெருக்கமாகலாம் என்று லலித் எண்ணினார். அவர் பிரேமதாசாவால் ஒதுக்கப்படும்வரைக்கும் அதுவே அவரது அரசியலாக இருந்தது. ஏனென்றால், பிரேமதாசா கூட ஜெயாரின் இனவாதத்தைத்தான் கைக்கொண்டு வந்தார்.

 

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

மன்னிப்புச்சபை கூறியது. இவ்வறிக்கையின் தொடர்ச்சியாக 12 பரிந்துரைகளை மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது,

1. கைதுசெய்யப்படுவதற்கான காரணத்தினை அக்கைதிகளுக்கு தெரியப்படுத்துவது.

2. கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது.

3. கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தல்.

4. கைதிகள் மேல் நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சுதந்திரமான கட்டமைப்பொன்றினை உருவாக்குவது.

5. ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாக சாட்சியங்களை தயாரித்தல் அல்லது சேகரித்தல்.

6. நீதிமன்றில், நீதிபதிகளின் முன்னால் அன்றி, வேறு எவ்விடத்திலும் பொலீஸாரினால் தயாரிக்கப்படும் கைதிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை முற்றிலுமாகத் தடை செய்வது. 

ஆட்சிகளும் கட்சிகளும் காட்சிகளும் மாறினாலும் தமிழின அழிப்புத்தொடர, 40ஆண்டுகளாக  மன்னிப்புச்சபையும் மற்றும் ஐ.நா.ம.உரிமைச் சபை போன்றனவும் இன்றுவரை அறிக்கையோடு மட்டுமே நிற்கின்றன. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீலனின் வீரமரணம்

lep-seelan.jpg 

காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து கண்ணிவெடிகளை வெடிக்கவைக்கும் கருவிகள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து ராணுவத்தினர், குறிப்பாக அதன் புலநாய்வுத்துறையினர் உசார் நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். வெடிக்கவைக்கும் கருவிகளை எடுத்துச் செல்லும் திட்டத்திற்குப் பொறுப்பாக சீலனே இருந்தார் என்பதை இராணுவத்தினை அறிந்துகொண்டனர். பாரிய தாக்குதல் ஒன்றிற்குப் புலிகள் தயாராகிறார்கள் என்பதை இராணுவத்தினர் அனுமானித்திருந்தனர். ஆகவே, புலிகள் தாக்குவதற்கு முன்னர் தாம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று தீர்மானித்த யாழ்ப்பாண ராணுவ ‍- பொலீஸ் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளர் மேஜர் சரத் முனசிங்க யாழ்க்குடாநாட்டில் புலிகளின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

CharlesAnthonySeelan.jpg

சீலன் நினைவேந்தல் - ‍ 2003

 "மீசாலைப்பகுதியில் புலிகளின் மறைவிடம் ஒன்று இருப்பதாக எமக்குச் செய்தி வந்திருந்தது. மீசாலை ‍- கச்சாய் வீதியில் இருக்கும் அடர்ந்த தென்னந்தோப்பொன்றினுள் இந்த மறைவிடம் இருப்பதாக எமக்குச் சொல்லியிருந்தார்கள். ஆகவே இதுகுறித்த துல்லியமான தகவல்கள் எமக்குத் தேவைப்பட்டன" என்று சரத் முனசிங்க என்னிடம் கூறினார். கொடிகாமம் பொலீஸ் நிலையத்திற்கு ஒருவரால் வழங்கப்பட்ட இந்தத் தகவல், குருநகர் ராணுவ முகாமில் இயங்கி வந்த ராணுவபொலீஸ் கூட்டு புலநாய்வுத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆடி 15 ஆம் திகதி காலை 10 மணியளவில் பொலீஸ் அதிகாரி ஒருவரால் இந்தத் தகவல் முனசிங்கவிடம் வழங்கப்பட்டது. இத்துடன் மேலதிகமாக இன்னொரு தகவலையும் அந்தப் பொலீஸ் அதிகாரி வழங்கியிருந்தார். அதுதான் அந்த மறைவிடத்திற்கு மிக அருகாக மலசல கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது என்கிற அடையாளம். 

ஆனாலும், இந்த தகவல்கள் தெளிவானதாக இருக்கவில்லை. துல்லியமாக புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதென்பது சவாலாகவே இருக்கப்போகிறதென்று ராணுவத்தினர் கருதினர். ஆனாலும் அப்பகுதியில் தேடுதல் நடத்துவதென்று முனசிங்க முடிவெடுத்தார். "புலிகளின் தாக்குதல் ஒன்றினை முறியடிப்பது மிக மிக அவசியமானது என்று நாம் நினைத்தோம்" என்று முனசிங்க கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்திற்கான கட்டளை அதிகாரி, பிரிகேடியர் லைல் பல்த்தசாரைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார் முனசிங்க. தனக்குக் கிடைக்கப்பெற்ற புலநாய்வுத்தகவல்கள் பற்றி பல்த்தசாரிடம் விளக்கிய முனசிங்க, மீசாலைப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் புலிகளின் மறைவிடத்தை தேடிப் பார்ப்பது அவசியம் என்று தான் கருதுவதாகக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பல்த்தசார், இந்த தேடுதல் நடவடிக்கைக்கு 12 பேர் அடங்கிய கொமாண்டோ அணியையும், மேலதிகமாக ஒரு இளநிலை அதிகாரியுடன் 5 சாதாரண சிப்பாய்களையும் அனுப்பி வைத்தார். 

ராணுவ வண்டிகளில் புலிகளின் மறைவிடம் நோக்கிப் போகும்போது புலிகளின் ஆதரவாளர்களால் தமது பிரசன்னம் புலிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, புலிகள் தப்பிச் சென்றுவிட வாய்ப்பிருப்பதாக முனசிங்க கருதினார். ஆகவே, பொதுமக்கள் பாவிக்கும் மினிபஸ் ஒன்றினை மடக்கிப் பிடிப்பதென்று அவர் முடிவெடுத்தார். புலிகளின் சீருடையணிந்த இரு ராணுவ வீரர்களை மணிக்கூட்டுச் சந்திக்கு அருகிலிருக்கும் நீண்ட ஆளரவம் அற்ற சாலையில் மதியவேளை அனுப்பி வைத்தார். அப்பகுதியால் வந்துகொண்டிருந்த மினிபஸ் ஒன்றினை மறித்து, அதிலிருந்த சாரதியையும், நடத்துனரையும் கட்டிப்போட்டு விட்டு வாகனத்தை முகாமிற்கு ஓட்டிச் சென்றனர் ராணுவ வீரர்கள். முகாமை அடைந்ததும் சாரதியும், நடத்துனரும் முகாமின் அறை ஒன்றினுள் அடைத்துவைக்கப்பட்டனர்.

 ClockTowerJaffna2004.jpg

யாழ்ப்பாணம் மணிக்கூடுக் கோபுரம் ‍ 2003

 ஆனால், வாகனத்தை ஓட்டுவதற்கு சாரதி எவரும் முகாமில் இருக்கவில்லை. இருந்தவர்கள் எல்லாம் வேறு நடவடிக்கைகளுக்காகச் சென்றுவிட்டிருந்தனர். ஆகவே, தானே வாகனத்தை ஓட்டுவதென்று முனசிங்க முடிவெடுத்தார். நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தனர்.

"நாம் குருநகர் முகாமிலிருந்து பிற்பகல் 3:30 மணிக்குக் கிளம்பினோம். தேவையேற்படின் வாகனத்தை ஓட்டுவதற்கு வசதியாக இளநிலை அதிகாரி எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். எவருமே பேசிக்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கையின் பாரதூரம் பற்றி எல்லோரும் நன்கு அறிந்தே இருந்தோம். யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் நான் சற்று வேகமாகவே ஓட்டிச்சென்றேன். பின்னல் சீருடை தரித்த ராணுவத்தினர் ஜீப் ஒன்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் எம்மைப் பிந்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.மீசாலைச் சந்தியை அடைந்ததும், வாகனத்தை கச்சாய் நோக்கித் திருப்பினேன். அவ்வீதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் இருவரை எமக்கு வழிகாட்ட ஏற்றிக்கொண்டோம். தென்னந்தோப்பின் நடுவே புதிதாகக் கட்டப்பட்டு வரும் மலசல கூடம் குறித்து அவர்களிடம் கேட்பதே எமது நோக்கம். ஆனால், எங்களால் புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது போய்விட்டது" என்று முனசிங்க என்னிடம் கூறினார். ஆகவே, மினிபஸ்ஸை கடற்கரை நோக்கிச் செலுத்தினார் முனசிங்க. பின்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி அவ்விடத்தை அடையுமட்டும் முனசிங்கவும் கொமாண்டோக்களும் அங்கு காத்து நின்றனர். மாலை 6 மணியாகிக்கொண்டிருந்தது, சூரியன் மெது மெதுவாக பட்டுக்கொண்டிருந்தான்.  மாலை நேரச் செவ்வானத்தின் அழகினை ரசிக்கும் நிலையின் முனசிங்கவோ படையினரோ அப்போது இருக்கவில்லை. முகாமிற்குத் திரும்புவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். முகாமிலிருந்து வந்தது போலவே, சாதாரண உடையணிந்த கொமாண்டோக்களுடன் மினிபஸ்ஸை முனசிங்க ஓட்டிச் செல்ல, சீருடையில் வந்த ராணுவத்தினர் பின்னால் ஜீப் வண்டியில் இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்தனர்.

"கொண்டமூலாய் முடக்கினூடாக நான் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு செல்லும்போது, எமது வாகனத்தின் முன்னால் மூன்று இளைஞர்கள் சைக்கிளில் செல்வதை நாம் கண்டோம். மூன்று சைக்கிள்களும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக ஓட்டிச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. வீதியின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்த சைக்கிளில் இன்னொருவர் அமர்ந்துவரக்கூடியதாக இருக்கை பூட்டப்பட்டிருந்தது. மற்றைய இருவரும் ராணுவ சீருடையினை ஒத்த மேலாடைகளை அணிந்திருந்தனர். சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து சென்ற இளைஞனிடம் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை அவதானித்ததும் நான் மினிபஸ்ஸை உடனடியாக நிறுத்தினேன். பஸ்ஸும் கிரீச்சிட்ட சத்தத்துடன் அவர்களின் அருகில்ப் போய் நின்றது. வாகனத்தில் இருந்த இரு கொமாண்ட்டஓக்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே வெளியில்க் குதித்தனர். இதனைக் கண்டதும் தாம் பயணித்த சைக்கிள்களை வீதியின் முன்னே விட்டெறிந்த அந்த மூன்று இளைஞர்களும் வேலியின் மீது பாய்ந்து ஏறித் தப்பியோடத் தொடங்கினர். பின்னர், பற்றை ஒன்றிற்குள் நிலையெடுத்து எம்மீது தாக்கத் தொடங்கினர். அவர்களைப் பிந்தொடர்ந்து துரத்தும் கொமாண்டோக்களைத் தாமதிக்க வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது" என்று இந்தச் சம்பவம் குறித்த நினைவுகளை முனசிங்க என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

தமக்கு முன்னால்த் தெரிந்த நெல்வயலினூடாக மூன்று இளைஞர்களும் ஓடிக்கொண்டிருந்தனர். "என்னுடன் வந்த கொமாண்டோக்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். கொமாண்டோக்கள் நிலையெடுத்துத் தாக்கிக் கொண்டிருந்த பற்றையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் அந்த இளைஞர்களில் ஒருவர் சூடுபட்டு விழுந்தார். மற்றையவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர் சுமார் 200 மீட்டர்கள் தொலைவில் சூடுபட்டு விழுந்தார். மூன்றாமவர்,  கீழே வீழ்ந்தவரை இழுத்துக்கொண்டு ஓட முயல்வதை நான் அவதானித்தேன். ஆனால், அம்முயற்சி சாத்தியமாகாது போகவே, அவரை அங்கேயே விட்டுவிட்டு அவர் மீண்டும் ஓடத் தொடங்கினார். அவருக்கும் சூடு பட்டிருந்தது, ஆனாலும் ஓடித் தப்பிவிட்டார்" என்று முனசிங்க கூறினார்.

அப்பகுதியை இருள் சூழத் தொடங்கியிருந்தது. தனது வீரர்களை அப்பகுதியில் இருட்டில் தேடுதல் நடத்தவேண்டாம் என்று முனசிங்க கூறிவிட்டு குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு மேலதிக படையினரை அனுப்புமாறு கேட்டார். மேஜர் அசோக ஜயவர்த்தனவின் தலைமையில் ராணுவ அணியொன்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வந்திறங்கியது. அவருடன் சில மூத்த பொலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

 

 

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.