Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையால் பற்றி எரியும் ஈரான் : அமெரிக்கா வரை எதிரொலித்த 'ஹிஜாப்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடையால் பற்றி எரியும்  ஈரான் அமெரிக்கா வரை எதிரொலித்த 'ஹிஜாப்'

By VISHNU

29 SEP, 2022 | 01:18 PM
image

குமார் சுகுணா

மதம் சார்ந்த விடயங்கள் குறித்த மதங்களை பின்தொடர்பவர்களின் நம்பிக்கைகளுக்கு உரியது அதனை யாரும் விமர்சிக்க முடியாது. ஆயினும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கட்டி காப்பாற்றப்படும் சில நம்பிக்கைகள் கால மாற்றத்துக்கு ஏற்ப மாற்றம் அடையதான் செய்கின்றன.

image.png

நமது மதங்கள் கலாசாரங்கள் மரபுகள் எல்லாமே பெண்களை விட ஆண்களை ஒரு படி மேல் வைக்கின்றனவாகவே உள்ளன. இவற்றிலும் பல விஞ்ஞான உண்மைகள் மறைந்து கிடப்பதனை நாம் மறுக்க முடியாது.

image__6_.png

அதனால்தான் சில விடயங்களை ஏற்றுக்கொள்கின்றோம். ஆயினும் ஒரு பெண் எந்த உடை அணிய வேண்டும்.. என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதனை தீர்மானிப்பவர்களாக இன்றும் பல சமூகங்களில் ஆண்களே உள்ளமை வேதனையே.  

image__3_.png

அதுமட்டும் அல்ல கடவுளாக பெண் தெய்வங்களை வழிபடுகின்றவர்களே  சிறுமி, குமரி, குழந்தை என வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிரான கொடுமையான வன்முறைகளில் ஈடுபடுவதனை பார்க்கின்றோம்.

image__4_.png

ஒரு பெண் துஷ்பிரயோகப்படுத்தப்படும் போது பலர் கூறுகின்ற குற்றச்சாட்டு பெண்கள் ஆபாசமாக உடை அணிகின்றனர் என்பதே. ஆம், சில பெண்கள் அப்படிதான் என வைத்துக்கொள்வோம்.

image__2_.png

 ஆனால்  கலாசார உடை அணியும் பெண்கள் துஷ்பிரயோத்துக்கு உள்ளாவது இல்லையா–?. குழந்தை முதல் கிழவியான பின்னும்  எல்லா பெண் பிள்ளைகளும் ஏதோ ஒரு வகையில் வன்முறைக்கு உள்ளாகிக்கொண்டதானே இருக்கின்றனர். 

image__1_.png

குழந்தையும் சிறுமியரும் என்ன ஆபாச உடை அணிகின்றனர். பெற்ற தகப்பனே பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்வதனை கூட  பார்க்கின்றோம். 8௦ வயது மூதாட்டிகள் துஷபிரயோகத்துக்கு உள்ளான செய்திகளும் எத்தனையோ பார்த்து விட்டோம். என.வே நமது தவறுகளுக்கு சகமனிதர் அணியும்  ஆடைதான் காரணம் என யாரும்  குற்றம் சாற்ற முடியாது.

உடையால் வந்த ஒரு வன்முறை இன்று உலகம் ஈரான் பக்கம் திரும்புவதற்கு காரணமாகியருக்கின்றது. ஆனால் இங்கு பெண்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஆண்களும் களம் கண்டுள்ளனர். 

ஆண்களும் பெண்களுக்காக உயிர் தியாகம் செய்து.கொண்டிருக்கின்றனர்.  ஒரு உதாரணம்,  ஜாவத் ஹேதரி என்ற இளம் பெண்ணின் சகோதரர் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் ஜாவேத் ஹேதரி மற்றும் சில பெண்கள் திரண்டனர். அப்போது பெண்கள் அனைவரும் நினைவிடத்தில் ரோஜாப்பூக்களை வீசி ஒப்பாரிவைத்து துக்கத்தை வெளிப்படுத்தினர். 

ஜாவேத் மட்டும் ஒரு கத்தரிக்கோலை எடுத்து தனது கூந்தலை கத்தரித்து சகோதரன் நினைவிடத்தின் மீது வீசினார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஈரான் பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான மாஷி அலினேஜத் கூறுகையில், கூந்தலை வெட்டி எறிவதால் ஈரான் பெண்கள் தங்களின் சோகத்தையும், கோபத்தையும் அரசுக்கு தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மறுபுறம், போராட்டங்களை ஒடுக்க ஈரான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஈரானின் முக்கிய  வீதிகளில் இளம் பெண்கள் பலரும், பெண்களின் வாழ்க்கையை விடுதலை செய்யுங்கள் என்று முழங்கி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர். 1000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு காரணமான சம்பவம் இதுதான். ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என பொலிஸார் கடந்த 13 ஆம் திகதி  தாக்கியதில் இளம்பெண்  மஹ்சா அமினி  என்பவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

போராட்டங்களின்போது, ஈரானிய பெண்கள் தங்களது கேசத்தை வெட்டி போர்க்கொடி போல் கம்பங்களில் ஏற்றி, அரசுக்கு எதிரான கலகக் குரல்களை வலுவாக்கினர். தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்களை காற்றில் சுழற்றி, அவற்றுக்கு தீயிட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, உலக நாடுகளின் பார்வையை ஈரான் வசம் திருப்பி உள்ளது.

80-க்கும் மேற்பட்ட ஈரானிய நகரங்களில் நீடித்து வரும் போராட்டங்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. பெண்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஆண்களும் களம் கண்டுள்ளனர். அவர்களை ஒடுக்க, பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈரானிய அரசால் களமிறக்கப்பட்டுள்ளனர். 

தாக்குதலில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களில் ஐந்துக்கும் குறைவானரே பாதுகாப்பு படையினர் எனவும், ஈரான் மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த போராட்டத்தில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரானின் கராஜ் நகரில் போராட்டத்தில் பங்கேற்ற ஹதிஷ் நஜிபி என்ற 20 வயது இளம்பெண் பாதுகாப்பு படை பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். பொலிஸார் துப்பக்கியால் சுட்டத்தில் அவரது முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதனால் ஈரானில் மேலும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கனடா உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் தங்கள் நாட்டில் நடந்து வரும் போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப், பேஸ்புக், டுவிட்டர், டிக்-டாக் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், சீர்திருத்த ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அங்கு, இவரை பேட்டி எடுக்க, தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்யேக தயாரிப்புகளோடு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. ஆனால், இப்ராஹிம் ரெய்சி நெறியாளர் ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி அந்த நேர்காணலை தவிர்த்திருக்கிறார்.

இது தொடர்பக ஊடகவியலாளர் கிறிஸ்டியன் அமன்பூர் தனது டுவிட்டர் பதிவில், ``அமெரிக்க மண்ணில் ஈரானிய ஜனாதிபதியின் முதல் நேர்காணல் இதுவாகும். 

அதனால், வாரக்கணக்கில் திட்டமிட்டு, நேர்காணல் அன்று எட்டு மணிநேரமாக மொழிபெயர்ப்பு உபகரணங்கள், விளக்குகள் மற்றும் கேமராக்களை அமைத்து நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் ஜனாதிபதி ரெய்சி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜனாதிபதி நேர்காணலுக்கு வருவதற்காக 40 நிமிடங்கள் காத்திருந்தேன். ஆனால் அவர் நேர்காணலை இரத்து செய்துவிட்டார்.

நேர்காணல் தொடங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு ஈரான் ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் என்னிடம், ` ஜனாதிபதி இது முஹர்ரம் மற்றும் சபர் புனித மாதங்கள் என்பதால் நேர்காணலில் மட்டும் தலையில் முக்காடு அணியுங்கள்' என்று பரிந்துரைத்தார். 

ஆனால், நான் அதை பணிவுடன் மறுத்துவிட்டேன். நாங்கள் நியூயோர்க்கில் இருக்கிறோம், ஹிஜாப் தொடர்பான சட்டமோ பாரம்பர்யமோ இல்லாத இடத்தில், ஈரானுக்கு வெளியே நான் அவர்களை நேர்காணல் செய்வதாலும், இதற்கு முந்தைய எந்த ஈரான் ஜனாதிபதியும் ஹிஜாப் அணியக் கூறியதில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இவ்வாறு ஈரானில் இருந்து அமெரிக்கா வரை ஹிஜாப் பிரச்சினை இப்போது பற்றி எரிகிறது. உ.டை என்பது அவர் அவரது கலாசாரத்துடன் .தொடர்புடையது. ஆயினும் உ.டைகளுக்காக மனித உயிர்கள் .கொல்லப்படுவது,பெரும் வன்மு.றைகள் உருவாக்கப்படுவதெல்லாம் மனித குலத்துக்கு காலத்தால்அழியா .வேதனையான விடயங்கள்தான். உடையால் பற்றி எரியும் ஈராக் : அமெரிக்கா வரை எதிரொலித்த 'ஹிஜாப்' | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் அடக்முறைக்கு எதிராக முஸ்லிம்  பெண்கள் போராட தொடங்கிவிட்டார்கள் 👍
இந்தியா இலங்கையில் எப்படி என்றால் யுனிபோமுடன் சாதாரண மாணவிகள் போன்று கல்லூரிகளுக்கு சென்ற முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அபாயா பர்தாவால் மூடி அனுப்பிவைத்தார்கள் மதவாதிகள்.   வி வான்ட் ஹிஜாப் என்று அவர்களை கொண்டே  கோஷமிட  வைத்தார்கள். 

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nochchi said:

அப்போ ஈரானில் நடப்பது என்ன போராட்டம்? தலைப்பைத் திருத்தி விடுங்கள் நுணா !

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

இது நம்ம நாட்டிலை காத்தான்குடி கல்முனை முசுலிம்களுக்குத் தெரியுமா...கிசிபுல்லா...ரிசாத்து,கக்கிமின் அரசியல் அத்திவாரமே கிஜாப்புத்தானே....திருகோணமலை சண்முகா அதிபருக்கு...டிசம்பரில் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்று..அந்தநாட்டு முசுலிமுகள்  சிலாகிக்கினம்.....அப்ப இரான் முசுலிம் நாடில்லையா...இலங்கை மட்டும்..இசுலாமிய நாடோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

இலங்கை முஸ்லீம்கள்...  ஈராக் முஸ்லீம்களுக்காக, மயிரை வெட்டி போராடாமல்...
ஊரிலை... என்ன செய்து கொண்டு இருக்கிறாங்கள்?
மயிரை வெட்ட... அணிதிரண்டு வாருங்கள், முஸ்லீம்களே... 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை முஸ்லீம்கள்...  ஈராக் முஸ்லீம்களுக்காக, மயிரை வெட்டி போராடாமல்...
ஊரிலை... என்ன செய்து கொண்டு இருக்கிறாங்கள்?
மயிரை வெட்ட... அணிதிரண்டு வாருங்கள், முஸ்லீம்களே... 

இவை மயிரை வெட்டி போராட வெளிக்கிட்டால்......அவையோடை அரசியல் என்னவாகிறது....முட்டாக்குப்போட்டால்தான்  முசுலிம் என்கிறது....முசுலிம் தலைமகள்..

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை திருத்திவிடுங்கள்

  • நியானி changed the title to உடையால் பற்றி எரியும் ஈரான் : அமெரிக்கா வரை எதிரொலித்த 'ஹிஜாப்'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.