Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாடகைத்தாய் மூலம் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, alvayan said:

நான் இவன் விக்கியை..சிங்கன் என்றுயோசிச்சன்...இவன் பாவி ஊசியாலை விளையாட்டுக்காட்டி ..பேய்க்காட்டிப் போட்டான்..

எனக்கு பேரீச்சம்பழ பகிடிதான் ஞாபகத்துக்கு வருது....😂

Goundamani Images : Tamil Memes Creator | Comedian Goundamani Memes  Download | Goundamani comedy images with dialogues | Tamil Cinema Comedians  Images | Online Memes Generator for Goundamani - Memees.in

 

Soppana Sundari Car.Gif GIF - Soppana sundari car Goundamani Senthil -  Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2022 at 16:39, குமாரசாமி said:

வன்னியருக்கு நம்ம பவர் தெரியேல்ல......ஐயோ பாவம்😁

 

 

ஏட்டிக்கி போட்டியா இந்த பெரியவரோட(?) நடனத்தையும் பாருங்க, கு.சா..! 😉

 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2022 at 20:44, nedukkalapoovan said:

உங்க விருப்பம் எதை நோக்கி என்பது விளங்குது. ஆனால்.. அங்க பிசிக்கல் ரச் எல்லாம் கிடையாது. ஊசி தான் ரச் பண்ணும். எப்படி வசதி. 🤣

வடை போச்சா??😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடகைத்தாய் சர்ச்சை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் சட்டத்தை மீறினரா ? 

By NANTHINI

22 OCT, 2022 | 07:39 PM
image

 

(குமார் சுகுணா) 

டிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டனர். இந்த செய்தியை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

அதேவேளை வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றனரா? அப்படி செய்திருந்தால், அது சட்டப்படி சரியா? என்றெல்லாம் இணையம் முழுக்க கேள்விகள் வலம் வருகின்றன. காரணம், திருமணமான நான்கு மாதங்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் பெற்றோர் ஆகியுள்ளமையே ஆகும். 

கடந்த ஜூன் 9ஆம் திகதியன்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்டனர். அதற்கு முன்னர் இவர்கள் இருவரும் காதலித்துவந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி குழந்தைகள் பிறந்தமையை விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதன் பின்னர் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டதாக செய்திகள் வரத்தொடங்கின. 

unnamed__2_.png

வாடகைத்தாய் முறை என்பது கருப்பையில் குழந்தையை சுமக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை வேறொரு பெண் சுமந்து பெற்றுக் கொடுப்பார். அவ்வாறு சுமந்து பெறுபவரே வாடகைத்தாய் என்றழைக்கப்படுவார். 

இதில், வாடகைத்தாய் குழந்தையை சுமந்தாலும், அந்தக் குழந்தைக்கான முழுப் பொறுப்பும் பெற்றோருக்கே உண்டு. 

ஒரு பெண்ணின் கருப்பை குழந்தையை சுமக்க முடியாத நிலையில் இருந்தால், அவருடைய கருமுட்டையையும் அவருடைய துணையின் விந்தணுவையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை வாடகைத் தாய் சுமப்பார். அவ்வாறன்றி, கருப்பை குழந்தையை சுமக்க முடியாமலும், கருமுட்டையின் ஆரோக்கியமின்றியும் கருவை உருவாக்கும் நிலையில் இல்லாமலும் இருந்தால், தானமாக வழங்கப்படும் கருமுட்டையை பயன்படுத்தியும் கரு உருவாக்கப்பட்டு வாடகைத்தாயின் கருப்பையில் வைக்கப்படும்.

இதில், தந்தையின் விந்தணுவோடு தாயின் கருமுட்டை அல்லது தானமாக பெற்ற கருமுட்டை பயன்படுத்தப்படுவது, தானமளிப்பவரின் விந்தணு மற்றும் தானமளிப்பவரின் கருமுட்டை அல்லது தாயின் கருமுட்டை என்று பயன்படுத்தப்படும்.

ஹிந்தி நடிகர்களான ஷாரூக் கான் - கெளரி கான்,  நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா,  பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், சன்னி லியோன் - டேனியல் வெபர் என ஏராளமான திரை நட்சத்திரங்கள் இப்படி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளனர். 

தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் யாரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறாத நிலையில் முதல் முறையாக நயன்தாரா -  விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர்.

ஆயினும், ரசிகர்கள் வாடகைத்தாய் விதிமுறைகள் சரியா என்பது உள்ளிட்ட விவாதங்களை பேசி வருகின்றனர். அதேபோல் தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆண் - பெண் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு இருந்தால் மட்டுமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கும் நிறைய விதிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது இவர்கள் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

unnamed__1_.png

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையில் தற்போது பல கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ளன. 

2022ஆம் ஆண்டில் இருந்தே பெரியளவில் யாரும் இந்த முறையை நாடுவதில்லை.

இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவிக்கையில்,  21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். அதற்கு திருமணமாகி கணவரின் ஒப்புதல் இருக்கவேண்டும். இதனால் விதிமுறைகளை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என்பது பார்க்கப்படும். 

பொது சுகாதாரத்துறையின் மூலம் நயன்தாரா -  விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்டார்களா என்று விளக்கம் கோரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதியன்று வாடகைத்தாய் தொடர்பான சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. 

பிறகு 2021ஆம் ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் 2022 ஜனவரி மாதமளவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்டம் வாடகைத்தாய் முறையை சில கட்டுப்பாடுகளோடு வரையறுத்துள்ளது. ஒரு தம்பதிக்காக வாடகைத்தாயாக இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் பெண், குழந்தை பிறந்த பிறகு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

மகப்பேறின்மை பிரச்சினை ஒரு தம்பதிக்கு இருந்தாலோ அல்லது அது தொடர்பான ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வாடகைத்தாய் முறை அனுமதிக்கப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு நெருங்கியவர்களே வாடகைத்தாயாக இருக்க முடியும். அப்படி வாடகைத்தாயாக இருக்க முன்வருபவர் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், பெற்றோராக விரும்பும் தம்பதிக்கு நெருக்கமான உறவினராகவும் இருக்க வேண்டும். 

இதை வணிக நோக்கோடு செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்படி குழந்தை பிறந்தவுடன், முற்றிலும் உயிரியல் ரீதியாக தம்பதியின் குழந்தையாகவே அது கருதப்படும்.

இந்த வாடகை தாய்மை ஒழுங்குமுறை சட்டம் அமுலுக்கு வந்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகு சுகாதார அமைச்சகம் வாடகைத் தாய்மை குறித்த சில விதிகளை அறிவித்தது. அதன்படி, பெற்றோராக விரும்பும் தம்பதிகள் அவர்களுக்காக குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய்மார்களுக்கு மூன்றாண்டுகள் சுகாதார காப்பீடு வாங்க வேண்டும். இதற்கான முயற்சியை மேற்கொள்ளும்போது, வாடகைத் தாயாக முன்வந்த பெண்ணிடம் அதற்கான சிகிச்சை முயற்சிகளை மூன்று முறைக்கு மேல் செய்யக்கூடாது. 

மேலும், அந்த விதிகளின்படி கர்ப்பத்தில் ஏதேனும் மருத்துவ சிக்கல் ஏற்பட்டால், கருவை கலைப்பதற்கு அவர் அனுமதிக்கப்படுவார். இந்த சட்டத்தின் கீழ், கருமுட்டையை தானமளிக்கும் பெண்களுக்கு குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது இருக்க வேண்டும். 

ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அதுவும் ஏழு கருமுட்டைகள் வரை மட்டுமே தானமளிக்க முடியும். ஆண் ஒருவரின் விந்தணுவை ஒன்றுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு வழங்கக் கூடாது.

அத்தகைய நடைமுறைகளுக்கு தம்பதிகள், தானமளிப்பவர்கள் இருவரின் எழுத்துபூர்வ ஒப்புதல் தேவை. இந்த நடைமுறையை நாடும் தம்பதிகள், கருமுட்டையை தானமளிக்கும் பெண்களுக்கு இழப்பு, சேதம், மரணம் போன்றவற்றுக்கான காப்பீடு வழங்க வேண்டும்.

குழந்தைக்கான பாலினத்தைத் தெரிவு செய்து மகப்பேறுக்கு உதவுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால், அதற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்த நடைமுறையில் பிறக்கும் குழந்தை, பெற்றோராக விரும்பி இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதியின் உயிரியல் குழந்தையாகவே சட்டப்படி கருதப்படும். அதன் மூலம் கிடைக்கும் அனைத்து உரிமைகளும் குழந்தைக்கு உண்டு. தானமளிப்பவர் குழந்தை மீதான எந்த உரிமையையும் வைத்துக்கொள்ள முடியாது.

இப்படி சட்டங்கள் இருக்கின்ற நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணமாகி நான்கு மாதங்களுக்குள் வாடகைத்தாய் மூலமாக குழந்தைகளை பெற்றுள்ளமை விவாதமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ஜனாதிபதி குறித்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தார். இந்த சட்டத்தின் பிரிவு 53 ஒரு சலுகையை வழங்கியிருக்கிறது. அதாவது இந்த சட்டம் அமுலாகும் காலத்திலிருந்து 10 மாதங்களுக்கு (gestation period) என்ற விதிவிலக்கினை தந்திருக்கிறார்கள். 

இந்த சட்டம் வருவதற்கு முன்போ, அந்த நேரத்திலோ வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்திருந்தவர்கள் எந்த சட்ட சிக்கலும் இல்லாமல், உரிமையுடன் தங்கள் குழந்தையை பெற்று வளர்ப்பதற்கான சலுகைக்காலம் இது. 

இதன்படி பார்த்தாலும், ஒக்டோபர் 25ஆம் திகதி வரை குழந்தை பெற்றுக்கொள்பவர்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது. 

எனவே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இந்த சட்டத்தை மீறவில்லை என அவர்களுக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/138214

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை" - என்ன சொல்கிறது அறிக்கை?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நயன்தாரா விக்னேஷ் சிவன்

பட மூலாதாரம்,WIKKIOFFICIAL INSTAGRAM

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் விவகாரத்தில் அவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருப்பது தற்போது விசாரணை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

திரைப்பட நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி, இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படங்களை விக்னேஷ் சிவன் தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து தங்களுடைய குடும்பத்து புதிய வரவை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே குழந்தையுடன் படத்துக்கு போஸ் கொடுத்த இந்த தம்பதி, செயற்கையாக குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் வாடகைத்தாய் முறை மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றிருந்தால் அதற்கான விதிகளை அவர்கள் முறையாக கடைப்பிடித்தார்களா என்றும் சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்தது.

இது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறிய பிறகு இந்த விவகாரம் பேசுபொருளானது.

 

இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு விசாரித்த இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை குறித்த செய்திக்குறிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பெயரைக் குறிப்பிடாமல் வெளிவந்துள்ள அந்த அறிக்கையில் விசாரணைக்கு குழு கண்டறிந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

குழுவின் விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் சம்பந்தப்பட் ட தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வந்தது. மருத்துவமனை, சிகிச்சை அளித்த மருத்துவர், வாடகைத்தாய்க்கு பேறு கால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.

 

நயன்தாரா விக்னேஷ் சிவன்

பட மூலாதாரம்,WIKKIOFFICIAL INSTAGRAM

இந்த விசாரணையில் இத்தம்பதி மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ஐசிஎம்ஆர்) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டது என தெரிய வந்தது.

ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகள் பிரிவு 3.10.5இன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

இத்தம்பதிக்கு பதிவுத்திருமணம் 11.3.2016இல் நடைபெற்றதாக பதிவுச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவுத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.16.2இன்படி இந்த தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்த மருத்துவச் சான்று விசாரணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் தம்பதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020இல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை நடத்தியபோது அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும், விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்று விட்டதாக தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

சினை முட்டை சிகிச்சை தொடர்பான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சினை முட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கரு முட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு 2021, நவம்பர் மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. 2022, மார்ச் மாதத்தில் கரு முட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மருத்துவமனைக்கு நோட்டீஸ்

 

விக்னேஷ் சிவன்

பட மூலாதாரம்,WIKKIOFFICIAL INSTAGRAM

செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வாடகைத்தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆனால்,இச்சட்டத்துக்குமுந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைத்தாய் ஆக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கருக்கள் வளர்ந்த நிலையில், இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளனர். அக்குழந்தைகள் 2022, அக்டோபர் 9ஆம் தேதி தம்பதியிடம் வழங்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் கீழ்கண்ட குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது.

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி மருத்துவமனையில் தம்பதிக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இது குறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை.

எனவே, இந்த நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-63401520

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.