Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல்

“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல்

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில்  யாழ்.மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத் தலைவர் கரு ஜயசூரிய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை ஜனநாயகத்தையும் மக்களுக்கான நீதியையும் உறுதிப்படுத்தும் நோக்கில் குறித்த சிவில் சமூக அமைப்பு செயற்பட்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

https://athavannews.com/2022/1305108

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, people sitting, people standing and indoor

May be an image of 4 people, people standing and indoor

May be an image of 9 people, food and indoor

கரு ஜயசூரியவால... இப்ப ஒழுங்கா நடக்க கூட முடியாது.
அவ்வளவுத்துக்கு ஆளுக்கு உடம்பு முழுக்க வருத்தம் . 
இவரால தென்னிலங்கையில் தற்போதைய நிலையில்... 
ஆணியை கூட புடுங்கமுடியாது .  
இந் நிலையில் வயோதிபக்கோளாறு காரணமாக 
ஆள் ஜனாதிபதி வேட்பாளர் கனவில மிதக்குறார்.  

இந் நிலையில்... ஆப்ரஹாம் சுமந்திரன், இவரை இங்க  கூட்டிவந்து நாடகம் போடுது. 
நேற்று கூட்டத்தை பார்த்தா நல்லிணக்க கூட்டமா தெரியல, 
ஜெட்விங் ஹோட்டல்  சாப்பாட்டுக்கு போன கூட்டமாத்தான் தென்படுது.

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடயங்களை தென்னிலங்கையிலும் மேற்கொள்ள வேண்டும். 

வடக்கு கிழக்கில் மட்டும் நடாத்திப் பயன் இல்லை. 

7 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 6 people, people sitting, people standing and indoor

May be an image of 4 people, people standing and indoor

May be an image of 9 people, food and indoor

கரு ஜயசூரியவால... இப்ப ஒழுங்கா நடக்க கூட முடியாது.
அவ்வளவுத்துக்கு ஆளுக்கு உடம்பு முழுக்க வருத்தம் . 
இவரால தென்னிலங்கையில் தற்போதைய நிலையில்... 
ஆணியை கூட புடுங்கமுடியாது .  
இந் நிலையில் வயோதிபக்கோளாறு காரணமாக 
ஆள் ஜனாதிபதி வேட்பாளர் கனவில மிதக்குறார்.  

இந் நிலையில்... ஆப்ரஹாம் சுமந்திரன், இவரை இங்க  கூட்டிவந்து நாடகம் போடுது. 
நேற்று கூட்டத்தை பார்த்தா நல்லிணக்க கூட்டமா தெரியல, 
ஜெட்விங் ஹோட்டல்  சாப்பாட்டுக்கு போன கூட்டமாத்தான் தென்படுது.

Kunalan Karunagaran

குணாளன் கருணாகரன் என்ன சொல்ல வருகிறார்? இப்படியான முயற்சிகள் பயனற்றவை என்றா அல்லது கருவை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்றா? 

நாங்கள் எல்லாவற்றையும் குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்ல, எங்கள் பலத்தை மிகைப்படுத்தி அதனை நிஜம் என்று நம்புகின்றோம். எங்கள் பிரச்சனையே இதுதான். 

கடைசியாக இருந்த கோவணமும் காணாமல் போனதுதான் மிச்சம். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்ட ஆக்கள் காலம் காலமாக சிங்கள கொடுந்தேசிய பேரினவாத இனப்படுகொலையாளர்களுடனும் அவர்தம் அரசுகளுடனும்.. நல்லிணக்கமாகத்தானே இருக்கினம்.

நல்லிணக்கம் என்பது சாதாரண உரிமை இழந்து.. நிலமிழந்து.. உறவுகள் இழந்து.. உடமைகள் இழந்து வாழும் தமிழ் மக்களினது வாழ்வுரிமைகளும்.. எதிர்பார்ப்புக்களும்.. ஆளும் உரிமைகளும் அச்சத்துக்கு சந்தேகத்திற்கு அப்பால் வழங்கப்படுவதிலும் உறுதிப்படுத்தப்படுவதிலும் தான் இருக்கே தவிர.. இந்தக் கோமாளிகளை சந்திப்பதால்.. நல்லிணக்கம் ஒருபோதும் வராது. அதற்கான வாய்ப்பும் இல்லை. 

வடக்குக் கிழக்கு எங்கும் 30 ஆண்டுகளாக இனப்படுகொலையில் ஈடுபட்ட.. சிங்கள பெளத்த பேரினவாத இராணுவ இயந்திரத்தை முழுமையாக நிறுவி வைச்சுக் கொண்டு தமிழ் மக்களிடம் நல்லிணக்கம் தேடி வருவது.. மிகவும் முரணகையான.. எந்த சாத்தியப்பாட்டுக்கும் இட்டுச் செல்லாத போலி நகர்வுகளாக அமைவதோடு.. சர்வதேச சமூகத்தில் தமிழ் மக்கள் மீதிருக்கும் கொஞ்ச நெஞ்ச அனுதாபத்தையும் இல்லாமல் செய்யும் கபடமாகும்.

இது தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள்.. நில ஆக்கிரமிப்புக்கள்.. காணாமல் ஆக்கப்படுதல்கள்.. உரிமை பறிப்புக்கள்.. உடமை அழிப்புக்கள்.. உயிர் பறிப்புக்களை மறைக்கும்.. நீதிக்கு அப்பால் கொண்டு செல்லும் நோக்குடைய ஒன்றே தவிர.. உண்மையான தமிழ் மக்களின் பாதிப்புக்கும்.. கோரிக்கைகளுக்குமான தீர்வை தேடும் ஒன்றல்ல. 

ஏனெனில்.. இதில் கூடி இருப்பவர்கள்.. முழு வேடதாரிகள். கபடக்காரர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே”

சிங்களம் விழுந்த போதெல்லாம் இந்த நல்லிணக்கம்  தேவையேற்படுகிறது. நல்லிணக்கம் என்றால் என்ன வென்று தெரியாதவர்கள் எல்லாம் கூடிகூத்தடிப்பது என்பதை நல்லிணக்கம் என்று மொழிபெயர்க்கிறார்கள். சிங்களத்துக்கும், முஸ்லீம்களுக்குக்கும் முண்டு கொடுப்போர் இங்கு வந்து நல்லிணக்கமாம். பறித்ததை திருப்பி தரவில்லை, அடைத்தவர்களை விடுவிக்கவில்லை, காயம்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை, நடந்த அக்கிரமங்களுக்கு மன்னிப்பு கோரவில்லை நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? இது தமது தேவைக்கு தொட்டுக்க பாவிக்கும் ஊறுகாய். மக்களை விழுங்கும் கூட்டம் சேர்ந்து அமைக்கினமாமில்லே நல்லிணக்கம், மக்கள் வெறும் பார்வையாளர். தெருவில் அலையும் பெற்றோரை அணுகி ஆறுதல் படுத்தினார்களா? கோட்டலில் முண்டியடித்து சாப்பிட ஒரு கூட்டம் கூடுது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.