Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷி சூனக்: நிதியமைச்சர் முதல் 'பிரிட்டிஷ் ஆசியர்' பிரதமராவது வரை - படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி சூனக்: நிதியமைச்சர் முதல் 'பிரிட்டிஷ் ஆசியர்' பிரதமராவது வரை - படங்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பிரிட்டன் பிரதமராகும் முதலாவது 'பிரிட்டிஷ் ஆசியர்' என்ற வகையில் ரிஷி சூனக் வரலாறு படைத்திருக்கிறார்

பிரிட்டன் பிரதமராகும் முதலாவது பிரிட்டிஷ் ஆசியராக ரிஷி சூனக் வரலாறு படைத்துள்ளார். அவர் புதிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக வாக்களித்து தேர்வான பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த கோடை காலத்தில் கட்சிக்குழுவுக்கு தலைமை தாங்கும் போட்டியில் சூனக் தோல்வியுற்ற பிறகு, லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆனால், பதவிக்கு வந்த 45 நாட்களிலேயே அவர் தமது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்தபோதும் அவர் அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், ரிஷி சூனக், பென்னி மோர்டான்ட் களத்தில் இருந்தனர். இதில் ரிஷி சூனக்கிற்கு ஆதரவாளர்களின் பலம் பெருகி வந்த நிலையில், அவருக்கு எதிரான களத்தில் இருந்து விலகுவதாக பென்னி மோர்டான்ட் அறிவித்தார்.

இந்த ரிஷி சூனக் யார், அவரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

ஆரம்ப கால வாழ்க்கை

 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,RISHI SUNAK'S CAMPAIGN MATERIAL VIA PA

 

படக்குறிப்பு,

குடும்பப் புகைப்படத்தில் தமது தாயார் உஷா, அவரது சகோதரர் சஞ்சய், சகோதரி ராக்கி ஆகியோருடன் ரிஷி இருக்கிறார்.

ரிஷி சூனக் பிரிட்டனின் முதல் ஆசிய இந்து சமூகத்தைச் சேர்ந்த பிரதமராகிறார்.

 

1980ஆம் ஆண்டு பிரிட்டனின் செளத்ஹாம்டனில் ரிஷி சூனக் பிறந்தார். இவரது தந்தை பொது மருத்துவர் ஆக இருந்தார். இவரது தாயார் சொந்த மருந்தகத்தை நடத்தி வந்தார். சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு வந்தவர்கள். இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

 

Akshata Murthy, wife of Rishi Sunak, (L) and his parents (R) attend the final Tory leadership hustings at Wembley Arena on August 31, 2022 in London, England

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஷியின் தந்தை தற்போதைய கென்யாவில் பிறந்து வளர்ந்தார், அதே நேரத்தில் தாயார் தங்கனிகாவில் (பின்னர் தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது) பிறந்தார்.இவரது தாத்தாக்கள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து 1960களில் தங்கள் குடும்பங்களுடன் அவர்கள் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.

 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சூனக்கின் மனைவி வரி சேமிப்பு திட்டத்தின் மூலம் ஆதாயம் அடைந்ததாக குற்றச்சாட்டை எதிர்கொண்டார். இதையடுத்து தனது குடும்பத்தின் நிதி விவகாரங்களில் "தவறு செய்யவில்லை" என்பதை ரிஷி சூனக் நிரூபிக்குமாறு குரல்கள் ஒலித்தன. அதை அவர் எதிர்கொண்டார்.

2009ஆம் ஆண்டில், சூனக் இந்திய பெரும் கோடீஸ்வரரான என்.ஆர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்தார். நாராயண மூர்த்தி, தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர். மேலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் முதல் 10 இடங்களில் இருப்பவர்.

ரிஷி - அக்ஷதா தம்பதிக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர்.

 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சூனக், அக்ஷதா மூர்த்தியை மணந்தார், இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்

2001 முதல் 2004 வரை, சூனக் கோல்ட்மேன் சாச்ஸ் என்ற நிதி முதலீட்டு நிறுவனத்தின் நிதி ஆய்வாளராக இருந்தார். பின்னர் இரண்டு தனியார் முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். பிரிட்டன் எம்பிக்களில் பெரும் பணக்காரர் எம்பிக்களில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார். ஆனால் தமது சொத்து விவரங்களை அவர் ஒருபோதும் பொதுவெளியில் தெரிவித்தது இல்லை.

சூனக்கின் மனைவி வரி சேமிப்பு திட்டத்தின் மூலம் ஆதாயம் அடைந்ததாக குற்றச்சாட்டை எதிர்கொண்டார். இதையடுத்து தனது குடும்பத்தின் நிதி விவகாரங்களில் "தவறு செய்யவில்லை" என்பதை ரிஷி சூனக் நிரூபிக்குமாறு குரல்கள் ஒலித்தன. அதை அவர் எதிர்கொண்டார்.

2015 முதல் அவர் யார்க்ஷயரில் உள்ள ரிச்மண்டின் கன்சர்வேடிவ் எம்.பி ஆக இருந்து வருகிறார். மேலும் தெரீசா மே அரசாங்கத்தில் இளநிலை அமைச்சராகவும் இருந்தார். தெரீசாவுக்குப் பிறகு பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார் ரிஷி சூனக்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

கொரோனா காலத்தில் நிதியமைச்சர்

 

ரிஷி சூனக்

 

படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரிஷி சூனக் பிரிட்டன் நிதி அமைச்சராக்கப்பட்டார்.

ரிஷி சூனக் 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதியமைச்சரானார். அதன் சில வாரங்களுக்குள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரிட்டனில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அத்தகைய சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் பொறுப்பு ரிஷி சூனக்கிற்கு வந்தது.

 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,HM TREASURY

 

படக்குறிப்பு,

2020ஆம் ஆண்டில் பிரதமருடான மோதல் காரணமாக நிதியமைச்சராக இருந்த சாஜித் ஜாவித் பதவி விலகினார். இதையடுத்து ரிஷி சூனக், நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை மூட நாடு கட்டாயப்படுத்தப்பட்டது. அத்தகைய நிலையில் 11.6 மில்லியன் தொழிலாளர்களின் ஊதியத்தை வழங்க உதவிய அரசாங்கத் திட்டமான ஃபர்லோ திட்டத்தின் வெற்றிக்காக ரிஷி சூனக் வழங்கிய பங்களிப்புக்காக அவர் பாராட்டப்படுகிறார்.

 

ரிஷி சூனக்

 

படக்குறிப்பு,

கோவிட் தொற்று காலத்தில் ரிஷி சூனக் பிரிட்டிஷ் பொதுமக்களை 'உதவி செய்ய சாப்பிடுங்கள்' என்று ஊக்குவித்தார். இது ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு உதவும் பிரசார முழக்கமாக முன்னெடுக்கப்பட்டது.

"ஹெல்ப் அவுட் டு ஈட் அவுட்" திட்டத்தைப் பற்றி பின்வரும் நாளில் தாம் பெருமிதம் கொள்வதாக ரிஷி சூனக் கூறினார் - இது கோவிட் தொற்று விகிதங்களை அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவித்த போதிலும், பிரிட்டனில் பொதுமுடக்கம் நீக்கப்பட்ட பின்னர் உணவகங்கள் மற்றும் பார்களில் பணத்தைச் செலவிட மக்களை ஊக்குவித்தது.

இரண்டாம் முறையாக வாய்த்த அதிர்ஷ்டம்

 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரிஷி சூனக்கை தோற்கடித்து முதல் முறையாக பிரிட்டன் பிரதமரானார் லிஸ் டிரஸ். இந்த நிலையில், தனது கட்சிக்குழு தலைவர் பதவிக்கான இரண்டாவது பிரசாரத்திற்குப் பிறகு லிஸ் டிரஸ்ஸுக்கு பதிலாக பிரதமராகிறார் ரிஷி சூனக்.

கடந்த ஜூலை மாதம்,போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்த பிறகு, ரிஷி சூனக் பிரிட்டன் பிரதமராக தேர்வாவதற்கான போட்டியில் இருந்தார். ஆனால், அவர் தோல்வியுற்றார்.

அந்த நேரத்தில் அவர் முதன்மையாக ஒரு பிரச்னையில் கவனம் செலுத்தினார்: 'மோசமடைந்து வரும் பிரிட்டன் பொருளாதார நிலை மற்றும் அதை சீர்படுத்துவதற்கான திட்டம்' என்ற முழக்கத்தை அவர் முன்வைத்தார்.

 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பிரிட்டனின் முதலாவது பொதுமுடக்கத்தின்போது, ரிஷி சுனக் பிபிசி சில்ட்ரன் இன் நீட் மற்றும் காமிக் ரிலீஃப் 'பிக் நைட் இன்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தமது பழைய முதலாளிக்கு (போரிஸ் ஜான்சன்) பிறகு பிரதமராகும் வாய்ப்பு மிக்கவராக இருந்தாலும் டோரி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவை பெறுவதில் ரிஷி சூனக் தவறினார். கடைசியில் லிஸ் டிரஸ் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் பிரதமராக டெளனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தார்.

 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கடந்த ஜூன் மாதம் அரசி இரண்டாம் எலிசபெத்தின் பவள விழா கொண்டாட்டங்களுக்கான கிரேட் அய்டன் கிராம விழாவை சூனக் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

வெளிநாட்டில் நடக்கும் யுக்ரேன் போர் காரணமாக உள்நாட்டில் தங்களுடைய வாழ்க்கைச் செலவை சமாளிக்க பலர் போராடுகிறார்கள். இத்தகைய சூழலில் அரசாங்கத்தில் நிலவிய குழப்பமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, புதிய பிரதமர் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவார் என்று பலர் நம்புகிறார்கள்.

 

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரிஷி சூனக், கன்சர்வேட்டிவ் கட்சிக்குழு தலைமைக்கான பிரசாரத்தின் போது, தேல்ஸ் பாதுகாப்பு அமைப்பிற்குச் சென்றார் அங்கு யுக்ரேனுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற, டேங்க் எதிர்ப்பு லாஞ்சரைப் பார்வையிட்டார்.

புதிய பிரதமர்

இந்த முன்னேற்றங்களுக்குப் பிறகு ஏழு வாரங்களில் மூன்றாவது கன்சர்வேடிவ் பிரதமராகிறார் ரிஷி சூனக். அத்துடன் பிரிட்டனின் முதல் பிரதமராகும் பிரிட்டிஷ் ஆசிரியர் ஆகவும் அவர் வரலாறு படைத்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-63377083

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் ஒபாமாதான் அமெரிக்க அதிபர். போரின் இறுதிக்காலங்களில் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென்று அறிக்கை விட்டவர். ஒபமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டது போல் ரிஷியும் பிரிட்டனின் பிரதமராகத்தான் இருப்பார். ஆசியாவுக்கோ. இந்தியாவுக்கோ  பெரிசாய் செய்ய மாட்டார். அவரின் வேலை இங்கிலாந்தின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதாகவே இருக்கும்.அவர் எஞ்சிய  பதவிக்காலம் முடியும்வரை தேர்தலுக்கு போகக் கூடாது. போனால் தற்கொலை செய்வது போலத்தான்.இந்தப் பதவி அவருடன் போட்டியிட இருந்தவர்ளுக்கு 100 எம்பிக்களின் ஆதரவு கிடைக்காத காரனத்தால் வந்தது. இப்பவே பத்திரிகைகளுக்கும் வெள்ளைகளுக்கும் உள்ளுக்குள் பொங்கிக்கொண்ட இரப்பார்கள். இருந்தாலும் ரிஷிக்க வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

2009 இல் ஒபாமாதான் அமெரிக்க அதிபர். போரின் இறுதிக்காலங்களில் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென்று அறிக்கை விட்டவர். ஒபமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டது போல் ரிஷியும் பிரிட்டனின் பிரதமராகத்தான் இருப்பார். ஆசியாவுக்கோ. இந்தியாவுக்கோ  பெரிசாய் செய்ய மாட்டார்.

உண்மை, நான் நினைக்கின்றேன் தெற்காசியரிடம் குறிப்பாக இலங்கை - இந்தியப் பின்னணி கொண்டவர்களது உடம்பில் இன்னும் ஓடும் பிரித்தானிய அடிமை மனோபாவ அல்லது தாழ்வு மனோபாவக் குருதியின் வெளிப்பாடாகும். வந்த நாட்டிற்குப்புகழைத் தேடுவதொன்றும் தப்பல்ல. ஆனால் பிறந்த நாட்டை எட்டி உதைக்காதோ, ஏளனமாகப் பார்க்காதோ இருந்தாலே போதும். புதிய பிரதமர் ஒரு பிரித்தானியாவில் பிறந்த கிழக்காபிரிக்கர். தகப்பனோ கென்யாவில் பிறந்தவர். தாயாரோ தான்சானியாவில் பிறந்தவர். இவர் இந்திய வம்சாவழியின் நான்காம்; தலைமுறை. பெற்றோரது பிறப்பிடத்தின்படி இரண்டாந் தலைமுறைக் கிழக்காபிரிக்கர். 'சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு வந்தவர்கள்.' என்று பிபிசி கட்டுரையின் உள்ளே எழுதிவிட்டு, தலைப்பை இந்தியாவை மகிழ்விக்கப்போட்டுள்ளது. பிபிசி தமிழ் ஒரு ஊடகம் தன்மையை இழந்து பலகாலமாகிவிட்டது.

                 அமெரிக்க – பிரித்தானிய – ஐரோப்பிய – அயலக – தமிழக அரச மாற்றங்களோ, ஆட்சியாளரின் மாற்றங்களோ பெரிய அளவிலான மாற்றத்தை தமிழீழ விடுதலையில் ஏற்படுத்தப்போவதில்லை. கட்சிகளைக்கடந்த தமிழக மக்களது தார்மீக ஆதரவும், தமிழீழத் தமிழரது திரள்நிலையும், இடையறாத முயற்சியும், பூகோள மற்றும் உள்ள அரசியலை சிறப்பான திட்டமிடலுடன் கட்சியரசியலுக்கப்பாலான ஒரு மையத்தில் நின்று அணுகுவதன் ஊடாக மட்டுமே இலக்கை நோக்கி நகரமுடியும். எமக்குள் நாமே எழுதல் ஒன்றே விடியலுக்கு வழி.
நன்றி.  
 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்திரத்தன்மை- ஒற்றுமைக்கு புதிய பிரதமர் ரிஷி சுனக் அழைப்பு!

ஸ்திரத்தன்மை- ஒற்றுமைக்கு புதிய பிரதமர் ரிஷி சுனக் அழைப்பு!

ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போட்டியாளரான பென்னி மோர்டான்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறத் தவறியதால் ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் தலைமைப் போட்டியில் வென்றார்.

இந்தநிலையில் அவர் தனது முதல் உரையில், தனது கட்சியையும் பிரித்தானியாவையும் ஒன்றாகக் கொண்டுவருவது தனது முக்கிய முன்னுரிமை என்று கூறினார்.

42 வயதான ரிஷி சுனக், மன்னரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று (செவ்வாய்கிழமை) பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று 09:00 பிஎஸ்டிக்கு தனது இறுதி அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு, வெளியேறும் லிஸ் ட்ரஸ், மன்னருடன் தனது இறுதி பார்வையாளர்களுக்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்வதற்கு முன் எண்-10 அலுவலகத்துக்கு வெளியே ஒரு அறிக்கையை வெளியிடுவார்.

இதைத் தொடர்ந்து மன்னருடன் சுனக்கின் முதல் பார்வையாளர்களை சந்திப்பார். இதன் போது அவர் அரசாங்கத்தை அமைக்க அழைக்கப்படுவார்.

பின்னர் அவர் டவுனிங் வீதிக்குச் சென்று, எண்-10 அலுவலகத்துக்குள் நுழைவதற்கு முன், சுமார் 11:35 மணிக்கு ஒரு அறிக்கையை வெளியிடுவார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மன்னருடனான சந்திப்பிற்குப் பிறகு, சுனக்கை அழைப்பை ஏற்படுத்தி, அவரது வாழ்த்துக்களைத் தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகவும், 200 ஆண்டுகளுக்கும் மேலான இளையவராகவும் சுனக் இருப்பார்.

https://athavannews.com/2022/1306790

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.