Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

சூரியன் எப் எம் இல் வரும் சூரியக் குருவி போல.. குரல்.. வித்தியாசமான வெளிப்பாடு..!

அதெல்லாம் கேட்டு வருஷகணக்காச்சு :lol:

  • Replies 912
  • Views 67.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு பாராட்டுக்கள்! இருந்தாலும் எல்லோருக்கும் புரியத்தக்கதாக ஒலி இணைப்பு செய்திருக்கலாம்..

கடந்தகால நிகழ்வுகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால்...மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து..

இதை இந்தவார காலக்கண்ணாடியில் தூயவன் கவனத்தில் எடுப்பார் ......

புதுவிதமாக ஏதோ பண்ணப்போகின்றோம் என்பதிற்காக...விடயங்களில் கவனம் செலுத்த தவறாதீர்கள்...

அடுத்த வார தொகுப்பை வெண்ணிலா வழங்குவார் :lol:

:lol::lol::lol::lol::lol:

காக்க காக்க கடவுள் காக்க

காக்காவா? எங்கே?

காக்காவா? எங்கே?

தலைக்கு மேல :angry:

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்ததை விட அழகாகச் செய்திருக்கின்றீர்கள் சகி. உங்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து வருபவர்கள் ஏதும் புது வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அடுத்த வாரம் காலகண்ணாடி செய்ய தூயவனை அழைத்திருந்தேன்.

ஆனால் அவரால் இந்த வாரம் யாழுக்கு அடிக்கடி வர முடியாது. அதனால் எழுத கஷ்டம் என்று

சொல்லி இருக்கிறார். அதனால் நம் யாழ் உறவு இன்னொருவரை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அவருக்கும் டைம் இருக்கா..முடியுமா என்று கேட்டு விட்டு நாளை அறியத் தருகிறேன்.

நன்றி :lol:

இந்த வாரம் மட்டுமல்ல, சில மாதங்களுக்கு என்னால் ஒழுங்காக வரவோ, நேரத்தைச் செலவழிக்கவோ முடியமோ தெரியவில்லை. நிச்சயம் தொகுத்து வழங்குவேன். ஆனால் சிறிது காலம் விடுதலை கொடுங்கள்.

அடுத்து செய்யவிருக்கும் வெண்ணிலாவிற்குப் பாராட்டுக்கள். அவரின் திறமையிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா உங்க திறமையை வெளிக்கொணர்வதிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது....எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:huh::lol::o:o:o

காக்க காக்க கடவுள் காக்க

பிள்ளைக்கு இப்பவே குலைப்பன் காச்சல் புடிச்சுட்டுது போலை கிடக்கு ஏனெண்டால் கந்தசஷ்டி கவசம் ஞாபகத்துக்கு வர வெளிக்கிட்டுட்டுது :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவ் வவ் அட சா, வாவ் பிரியாசகி அக்காச்சி காலக்கண்ணாடி சூப்பருங்கோ , வெண்ணிலா அக்காச்சியும் வித்தியாசமா செய்யுங்க் :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு பிரியசகி உங்க காலக் கண்ணாடி. :o

என்னால எல்லாம் கேக்க முடியாமல் இருக்கு. எனது கணனியில் ஏதோ பிரைச்சனை என்று நினைக்கிறன்.

நல்லா இருக்கு பிரியசகி உங்க காலக் கண்ணாடி. :o

என்னால எல்லாம் கேக்க முடியாமல் இருக்கு. எனது கணனியில் ஏதோ பிரைச்சனை என்று நினைக்கிறன்.

அப்படி பட்ட கணணியை தூக்கி குப்பையில் போடுங்கோ ஜனனி அக்கா :P

கணணி ஏற்கனவே குப்பைக்குள்ளேதான் இருக்காமாம்..

ஜனனிக்கு நேரமே இல்லையாம்..

(யாரோ அடிக்க வாராப்போல ஒரு பிரமை) :o

. அடுத்து செய்யவிருக்கும் வெண்ணிலாவிற்குப் பாராட்டுக்கள். அவரின் திறமையிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.
:o என்ன இப்படி சொல்லிடீங்க? உங்கள் நம்பிக்கை ......................... :huh:
வெண்ணிலா உங்க திறமையை வெளிக்கொணர்வதிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது....எனது வாழ்த்துக்கள்.
மீண்டும்? அப்படியாயின் முதலில் எங்காவது என் திறமையை வெளிர்க்கொணர்ந்தேனா? திறமை என்பது என்னிடம் குறைவு பா. நீங்கள் வேறை :lol:

பிள்ளைக்கு இப்பவே குலைப்பன் காச்சல் புடிச்சுட்டுது போலை கிடக்கு ஏனெண்டால் கந்தசஷ்டி கவசம் ஞாபகத்துக்கு வர வெளிக்கிட்டுட்டுது :huh:

சரியாக கண்டுபிடிச்சிருக்கிறீங்க கு சா தாத்தா. ஆனால் இவங்க திரமை நம்பிக்கை னு சொல்லி நிறைய எதிர்பார்ப்போடு இருக்கிறாங்க போல.

ஹீஹீ நான் பாடியது கந்தகஷ்டி கவசமா? நான் நினைச்சேன் நான் அவன் இல்லை பட பாட்டு னு . ;)

காக்க காக்க கன்னம் காக்க கன்னம் காக்க

நோக்க நோக்க ..................................

தாக்க தாக்க........................................

பார்க்க பார்க்க மொத்தம் பார்க்க

யாழ்க்கண்ணாடி வரும். :o (என்ன வடிவில் என இன்னும் முடிவாகவில்லை)

, வெண்ணிலா அக்காச்சியும் வித்தியாசமா செய்யுங்க் :o

:o:huh::lol::o சரியுங்கோ

வெண்ணிலாவுக்கு ஜடியா வேணும்னா.. என்னைக் கேட்கலாம்... :o

ஒரு ஐடியா.. 50 டாலர்கள் மட்டுமே....

தொடர்ந்து வரும் காலக்கண்ணாடியை செய்யப்போவர்களிற்கு காலக்கண்ணாடியை எப்படி வித்தியாசமாக, நகைச்சுவையாக செய்யலாம் என்பதற்கு சில ஐடியாக்கள்...

* ஓர் நாடகம் போல தரலாம் + குரலும் தரலாம்..

* ஓர் கவிதையாக எழுதலாம் + படிக்கலாம்..

* ராணி காமிக்ஸ் இல் வருவது மாதிரி ஒரு சித்திரகதையாக - பல தொடர் படங்களாக கீறீ ஒட்டலாம்..

* ஓர் பாடலாக எழுதலாம் + இசையமைத்து பாடலாம்..

* எம்.எஸ்.என் இல் கள உறவுகளுடன் கடந்தவார நிகழ்வை உரையாடிவிட்டு - அரட்டை அடித்துவிட்டு - அந்த உரையாடலை இங்கு ஒட்டலாம் + ஓடியோ - ஒலிப்பதிவாகவும் அந்த உரையாடலை இணைக்கலாம்.. {இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் முதலில்}

* ஓர் யாழ் கள வாசகரை அல்லது யாழ் கள உறவை கடந்த வார யாழ்கள கருத்தாடல் சம்மந்தமாக நேர்முகம் செய்துவிட்டு அதை எழுத்திலோ அல்லது ஒலி வடிவத்திலோ இணைக்கலாம்..

* ஓர் கதையாக எழுதி ஒட்டலாம் அல்லது வாசிக்கலாம்..

* ஓர் கடிதமாக எழுதலாம்.. இந்த கடிதத்தை மட்டறுத்துனர் அல்லது நிருவாகிக்கு அல்லது கடவுளுக்கு அல்லது எமலோகத்துக்கு அனுப்புவது போலவும் எழுதலாம்..

* ஓர் நீதிமன்ற விசாரணை அல்லது FBI, CIA, போலீஸ் விசாரணை வடிவில் எழுதலாம்..

* கள உறவுகளிற்கு தனிமடல்கள் அனுப்பி அவர்களிடம் சில கேள்விகள் கேட்டபின், அவர்களின் விடைகளை ஒட்டலாம்.. {இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் முதலில்}

* ஓர் பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஓர் ஆசிரியர் அல்லது பேராசிரியர் படிப்பிப்பது போல் எழுதலாம் அல்லது வாசிக்கலாம்..

* ஆனந்தசங்கரி, டக்லஸ், கருணா போன்றோர் யாழ் இணையத்தை வாசித்து துன்பப்படுவதை - அவர்கள் படும் அவலங்கள் - உணர்வுகளை நகைச்சுவையுடன் - அவர்கள் தமக்குள் தாமே கதைப்பது போல் எழுதலாம்.

* அமெரிக்க ஜனாதிபதி/ பில்கேட்ஸ் அல்லது வேறு பிரபலங்கள் யாழ் இணையத்தை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் வாசித்து உணர்வலைகளை வெளிப்படுத்துவது போல் எழுதலாம்..

* ஓர் முற்றும் துறந்த, வெளி உலகத்துடன் தொடர்புகள் அற்ற ஓர் சாமியார் யாழ் இணையத்தை பார்வையிடும்போது ஏற்படும் உணர்வுவலைகளை நகைச்சுவையாக கூறலாம்..

* யாழ் கள நிருவாகி தனது இணையத்தை தானே பார்த்து தனது மனதில் அடையும் எண்ணங்களை, அதிர்ச்சிகளை நகைச்சுவையாக எழுதலாம்..

இவ்வளவுதான் இப்போதைக்கு என்ர மூளையில் தட்டுப்படுது.. மிச்சம் வேறு யோசனைகள் வரும்போது சொல்கின்றேன்..

குருநாதா உங்கள் ஐடியாக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வரும் காலக்கண்ணாடியை செய்யப்போவர்களிற்கு காலக்கண்ணாடியை எப்படி வித்தியாசமாக, நகைச்சுவையாக செய்யலாம் என்பதற்கு சில ஐடியாக்கள்...

* ஓர் நாடகம் போல தரலாம் + குரலும் தரலாம்..

* ஓர் கவிதையாக எழுதலாம் + படிக்கலாம்..

* ராணி காமிக்ஸ் இல் வருவது மாதிரி ஒரு சித்திரகதையாக - பல தொடர் படங்களாக கீறீ ஒட்டலாம்..

* ஓர் பாடலாக எழுதலாம் + இசையமைத்து பாடலாம்..

* எம்.எஸ்.என் இல் கள உறவுகளுடன் கடந்தவார நிகழ்வை உரையாடிவிட்டு - அரட்டை அடித்துவிட்டு - அந்த உரையாடலை இங்கு ஒட்டலாம் + ஓடியோ - ஒலிப்பதிவாகவும் அந்த உரையாடலை இணைக்கலாம்.. {இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் முதலில்}

* ஓர் யாழ் கள வாசகரை அல்லது யாழ் கள உறவை கடந்த வார யாழ்கள கருத்தாடல் சம்மந்தமாக நேர்முகம் செய்துவிட்டு அதை எழுத்திலோ அல்லது ஒலி வடிவத்திலோ இணைக்கலாம்..

* ஓர் கதையாக எழுதி ஒட்டலாம் அல்லது வாசிக்கலாம்..

* ஓர் கடிதமாக எழுதலாம்.. இந்த கடிதத்தை மட்டறுத்துனர் அல்லது நிருவாகிக்கு அல்லது கடவுளுக்கு அல்லது எமலோகத்துக்கு அனுப்புவது போலவும் எழுதலாம்..

* ஓர் நீதிமன்ற விசாரணை அல்லது FBI, CIA, போலீஸ் விசாரணை வடிவில் எழுதலாம்..

* கள உறவுகளிற்கு தனிமடல்கள் அனுப்பி அவர்களிடம் சில கேள்விகள் கேட்டபின், அவர்களின் விடைகளை ஒட்டலாம்.. {இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் முதலில்}

* ஓர் பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஓர் ஆசிரியர் அல்லது பேராசிரியர் படிப்பிப்பது போல் எழுதலாம் அல்லது வாசிக்கலாம்..

* ஆனந்தசங்கரி, டக்லஸ், கருணா போன்றோர் யாழ் இணையத்தை வாசித்து துன்பப்படுவதை - அவர்கள் படும் அவலங்கள் - உணர்வுகளை நகைச்சுவையுடன் - அவர்கள் தமக்குள் தாமே கதைப்பது போல் எழுதலாம்.

* அமெரிக்க ஜனாதிபதி/ பில்கேட்ஸ் அல்லது வேறு பிரபலங்கள் யாழ் இணையத்தை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் வாசித்து உணர்வலைகளை வெளிப்படுத்துவது போல் எழுதலாம்..

* ஓர் முற்றும் துறந்த, வெளி உலகத்துடன் தொடர்புகள் அற்ற ஓர் சாமியார் யாழ் இணையத்தை பார்வையிடும்போது ஏற்படும் உணர்வுவலைகளை நகைச்சுவையாக கூறலாம்..

* யாழ் கள நிருவாகி தனது இணையத்தை தானே பார்த்து தனது மனதில் அடையும் எண்ணங்களை, அதிர்ச்சிகளை நகைச்சுவையாக எழுதலாம்..

இவ்வளவுதான் இப்போதைக்கு என்ர மூளையில் தட்டுப்படுது.. மிச்சம் வேறு யோசனைகள் வரும்போது சொல்கின்றேன்..

ஐயா கலைஞரே சும்மா நீங்களே அலட்டிட்டு இருக்காம அடுத்தவர்களையும் சுயமா சிந்திக்க அனுமதியுங்கள்.

யாழ்ப்பாணத்துக்கு கொட்டகைப் படிப்புப் போல.. ஒப்பிப்பிறதைச் செய்யத் தூண்டாதீங்க..! யாழ்ப்பாணத்தில இருந்து வந்த எந்த இஞ்சினியராலும் சரி.. டாக்டராலும் சரி.. யாழ்ப்பாணம்.. உருப்பட்டதா சரித்திரமில்ல...! ஏதோ கடமையைச் செய் காசு உழை கலியாணம் கட்டு.. என்று வாழ்ந்து தற்பெருமை பேசினதுதான் மிச்சம்..!

தயவுசெய்து.. உங்களுக்க ஐடியாக்கள் இருந்தா அதை உங்களின் சந்தர்ப்பம் வரேக்க வெளிக்கொணருங்க..! அதேவேளை ஐடியான்னு அடுத்தவனை கிணற்றுக்க தள்ளி இதுதான் உலகம் என்று காட்டாம.. அவனை சுதந்திரமா பறக்கவிடுங்க. அவனும் உங்களை விடவும் நீங்கள் காட்டிறதை விடவும் வேறுபட்ட புதிய கோணத்தை கண்டறியலாம்.. கண்டறிய முற்படலாம்..!

பிளீஸ்... உந்த யாழ்ப்பாணத்து உப்புச்சப்பற்ற.. அட்வைஸ் என்று ஒரு குட்டைக்குள்ள மட்டைகளை ஊறவிடுற ஐடியாக்களை தயவு செய்து குப்பைக்க போட்டிட்டு.. அடுத்தவனை சுயமா சிந்திக்கவும் சிரிஸ்டிக்கவும் அனுமதியுங்க..! :lol:

Edited by nedukkalapoovan

ஓகோ நான் சொல்லிறது அலட்டிறது மாதிரி இருக்கு, தாங்கள் சொல்வது தத்துவமா இருக்கோ? இங்கு இப்படி நான் ஒன்றும் சொல்லக்கூடாது என்று விதிகள் ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்ததை கருத்துக்களத்தில் எழுதுகின்றார்கள். யாழ் காலக்கண்ணாடியில் இங்கு பீ.எச்.டீ பட்டம் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. நான் எனக்கு தோன்றியதை எழுதினேன். அது உப்புச்சப்பற்ற அலட்டலாக தங்களுக்கு தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. மேலும், நான் சொன்னதை வாசிப்பதால் ஒருவன் சுயமாக சிந்திக்க முடியாமல் போகின்றது என்று சொல்வது சுத்த முட்டாள்தனம். யாழ் கள உறவுகள் அவ்வளவு முட்டாள்தனமானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. இதைவிட, தாங்கள் யாழ்ப்பாணத்தை இங்கு இழுப்பதன் நோக்கம் புரியவில்லை. யாழ்ப்பாணம் என்றால் அவ்வளவு இளக்காரமாக தங்களுக்கு தெரிகின்றதோ? நானுங்க அடிப்படையில் திருகோணமலையாக்கும். தவற திருத்திக்கொள்ளுங்க. காலக்கண்ணாடியில் நான் வஞ்சகம் இல்லாமல் எழுதிய கருத்து தங்களுக்கு ஏன் இவ்வளவு குத்துகின்றது என எனக்கு தெரியவில்லை. இறுதியாக எனது ஐடியாக்களை யாழில் எப்படி வெளிக்கொணர்வது என்பது எனக்கு நன்கு தெரியும். தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி! அவனவன் யாழில ஏதோதோ வைத்து பிசைஞ்சு கொண்டு இருக்கிறாங்கள். இங்க என்னடாண்டா ஐடியா எண்டு நான் எதையோ எழுத, இவங்க வேற எதையோ மனதில வச்சு ஒப்பாரி செய்துகொண்டு ஓடிவாறாங்களப்பா! காலம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சு!

பி/கு: ஏதேனும் கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழும்பியபின் இதை எழுதினீங்களோ?

சகியின் டோல் குழந்தையை பார்க்க எனக்கு இந்த பிரபலமான பாடல் நினைவுக்கு வருகின்றது. எனவே இங்கே அதை இணைக்கின்றேன். பலருக்கு இது நன்கு பரீட்சயமான பாடலாக இருக்கலாம். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காலக்கண்ணாடி

வணக்கம் யாழ் கள உறவுகளே,

ஒவ்வொரு கிழமையும் ஞாயிற்றுகிழமைகளில் ஒரு கருத்துக்கள உறவு அந்தந்தக் கிழமைகளில் கருத்துக்களத்தில் இடம்பெற்ற விவாதங்கள், இணைக்கப்பட்ட புதிய ஆக்கங்கள், குறைகள், நிறைகள் போன்றவற்றைத் தொகுத்து எழுதவேண்டும்.

- இணைந்த புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம்

- இவ்வாரம் செயற்திறனோடு இயங்கிய உறுப்பினர் பற்றி

- இணைக்கப்பட்ட கருத்துக்கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் பற்றிய பார்வை

- குறைகள், நிறைகள்

- இவ்வாரம் நடந்த முக்கிய செய்திகளின் சிறு தொகுப்பு

- இவ்வாரம் நடந்த விவாதங்கள் பற்றிய பார்வை

இன்னும் அந்தந்த வாரத்தில் கருத்துக்களத்தில் நிகழ்ந்தவற்றை தொகுத்து ஒரு கட்டுரையாக இணைக்கவேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு உறுப்பினர். தமக்கே உரிய பாணியிலேயே எழுதலாம் (நகைச்சுவையாகவும் எழுதலாம்). கடினமான வேலை என்று எவருமே தயங்கவேண்டியதில்லை. உங்களால் இயன்றளவு எழுதுங்கள். ஒருவர் எழுதியதும் அடுத்த கிழமைக்கான கருத்துக்கள உறவை அழைக்கலாம். இப்படியாக ஒவ்வொரு கிழமையும் தொடரவேண்டும். இது சுயமாக எழுதும் ஆற்றலை வளர்க்கவும், நம்மை நாமே மீள்பார்வை செய்துகொள்ளவும் உதவும். எனவே அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவீர்கள் என நம்புகிறோம்.

முதலில் நாம் அழைப்பவர் "இனியவள்". அவர் எழுதி முடிந்ததும், அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கான உறுப்பினரை அவர் தெரிவுசெய்து அழைப்பார்.

நன்றி

வலைஞன் சாரின் தலைப்பு அறிமுகக் கருத்துடன்...

கலைஞன் சார்.. நீங்க ரென்சன் ஆகிறத்துக்காக அல்ல. இப்படியான இடங்களில் உங்களின் ஆலோசனைகளை எம் எஸ் என்னில இல்ல தனிமடலில் சம்பந்தப்பட்டவங்களுக்கு வழங்கினீங்க என்றால்.. அது ஒருவேளை புதுவடிவமாக இங்கு வந்து சேரலாம்.

இந்தத் தலைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்று சுயமாக எழுதும் ஆற்றலை ஊக்குவித்தலாகும்.

உங்களுக்கான அந்தச் சந்தர்ப்பம் போயிட்டுது. உங்களுக்கு முன்னரும் பின்னரும்.. அவரவர் தங்கள் தனித்துவங்களை காட்டினர். அதற்கான ஆலோசனைகளை அவர்கள் இங்கு அன்றி வேறு வழிமுறைகளில் பெற்று தங்கள் சுயதிறமைக்கு ஆலோசனைகளை உதவியாக்கி.. ஒரு வெளிப்பாட்டை வழங்கியுள்ளனர்.

இடையில்.. நீங்கள்.. இப்படி செய்யலாம்.. அப்படிச் செய்யலாம்.. என்று சொல்லும் போது.. இயல்பாக சுயசிந்தனைக்குப் பதில்.. உங்களின் சிந்தனையை அடியொற்றி சித்தரிப்புக்கள் சிறைப்பட வாய்ப்புண்டு.

இதுதான் யாழ்ப்பாணத்து கல்வி முறைமையும் கூட. யாழ்ப்பாணத்து முறைமைதான் தமிழர்கள் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும்.. அதில் செல்வாக்குச் செய்வது. திருமலையில் இருந்து கூட யாழ்ப்பாணத்துக் கொட்டகைகளை மகிமை என்று கருதி வந்து தவிழ்ந்த ஆயிரக்கணக்கானோரை நாம் கண்டுள்ளோம்.

உங்களின் வடிவங்கள் எவையும் புதுயவையல்ல. ஏலவே உள்ளவற்றின் தொகுப்பு என்பதால்.. சுயபடைப்பாற்றலை வேண்டி நிற்கும் இந்த இடத்தில் அவை உப்புச்சப்பற்றவையே..!

உங்கள் ஆலோசனைகளை வழங்க விரும்பின்.. தனி மடல் மூலம் இல்ல உங்களின் அபிமான எம் எஸ் என் மூலம் வழங்கலாமே. அது இங்கு சுயபடைப்பாற்றலாக இடப்படவாவது உதவும். இது கொப்பி பண்ணுறதா எல்லோ முடியப் போகுது..??!

இதில் நீங்க ஆத்திரப்பட எதுவும் இல்ல. எமது கருத்து அது. அதை நாம் சொல்லவும் உங்களுக்கு உள்ளது போல உரிமை உண்டு.

பளபளக்கும் காலக்கண்ணாடிக்குள்.. கிறுக்கல்கள்.. வேண்டாம்.. இத்தோடு.. முடித்துக் கொள்கின்றோம்..!

நன்றி. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ம்...பிரச்சினை வேண்டாம் இரண்டுபேரும் உங்கள் கருத்துக்களை முன்வைத்து விட்டீர்கள் தீர்மானிக்கப்போவது..மற்ற உறுப்பினர்கள் தானே...பொறுத்திருந்து பார்க்கலாம் தானே...நீங்கள் இந்த விடயத்தை விவாதமாக தொடர்ந்தால் காலக்கண்ணாடி என்ற தலைப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்...

யாழின்.... வளர்சிகளில்.... இதுவும் ஓர் உத்தி "காலக்கண்ணாடி" :icon_idea: ;)

ஆனால் .... காலத்துக்கு காலம்... முளைக்கும் களநண்பர்களை மேய்பது என்றுமே கஸ்ரம் தான்....

அதிலும் களநாயகர்களோடு என்பது.... :lol: இதில் யாழ் நீச்சலடிப்பது தவிர்க்கமுடியாதது. :):icon_idea::o:(

(காரணம் கருத்துகள உறவுகளை நன்கு அறிந்து அந்தந்த காலத்துக்கேற்ப களத்துக்காக பயன்படுத்துவதால் கூட இருக்கலாம் :icon_idea: B) :unsure: )

Edited by Netfriend

எல்லோருக்கும் வணக்கம்

இதோ இந்தவாரக் காலக்கண்ணாடி

">

Edited by அனிதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.