Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது

By SETHU

07 DEC, 2022 | 02:14 PM
image

ஜேர்மனியில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதி  செய்தனர் என்ற சந்தேகத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலதுசாரி குழுவொன்றையும், முன்னாள் இராணுவ அங்கத்தவர்களும், ஜேர்மனிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இவர்கள் திட்டமிட்டனர் எனக் கூறப்படுகிறது. 

13 ஆம் ஹெய்ன்றிக் இளவரசர்  (Prince  Heinrich XIII) எனக் கூறப்படும் 71 வயதான ஒரு நபர் இக்குழுவின் திட்டத்தில் முக்கிய நபராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜேர்மனியின் 11 மாநிலங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் இரு குழுத் தலைவர்களில் ஒருவராக மேற்படி நபர் இருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/142433

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது

ஜேர்மனியில் பெரிய சண்டித்தனம் விடும்  clan  கும்பலையே இவர்களால் அடக்க முடியவில்லை...நிலமை இப்படியிருக்க......?😁

Wer sind die Berliner Clans und wie funktioniert das Milieu? - B.Z. – Die  Stimme Berlins

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இயங்கு AfD தமிழர் பிரிவு உறுப்பினர்கள் யாரும் இதில் சம்பந்த படவில்லையா?🤣 

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் (தட்டுப்பாடால்) எழுந்த பிரச்சனையில் கவனத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை இதுவென ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு. 👇

Coup plot an example of government's diversionary tactics – German MP

AfD party's Eugen Schmidt said the arrest of alleged conspirators is a smokescreen amid the energy crisis. 
 
  • கருத்துக்கள உறவுகள்

AfD தமிழர் பிரிவு கனடா வரை விரிந்துள்ளது ஆச்சரியமான விடயம்🤣.

Trump + Putin =
AfD + RT =
புரிஞ்சவன் பிஸ்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, goshan_che said:

AfD தமிழர் பிரிவு கனடா வரை விரிந்துள்ளது ஆச்சரியமான விடயம்🤣.

அந்த கட்சியின் பக்கம் நியாயம் இருக்கின்றது. அவர்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கின்றது.

அகதியாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் 10 பிள்ளைகளை பெற்றெடுத்து விட்டு நாட்டுக்கு பாரமாக இருப்பவர்களை என்ன செய்யச்சொல்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அகதியாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் 10 பிள்ளைகளை பெற்றெடுத்து விட்டு நாட்டுக்கு பாரமாக இருப்பவர்களை என்ன செய்யச்சொல்கின்றீர்கள்.

அவர்கள் அகதி அந்தஸ்துக்கு உரியவர்கள் (பாதுகாப்பு தேவைபடுவோர்) என்று அரசு கருதி உள்ளே எடுத்தால் - அவர்கள் அகதிதான்.

அதன் பின் 1-முடிவிலி பிள்ளைகளை பெற, தொழிலுக்கு போக அல்லது போகாமல் விட ஏனைய ஜேர்மன் குடிகளுக்கு உள்ள அதே உரிமை அவர்களுக்கும் உண்டு.

ஜேர்மனியில் வாழும் ஏனைய மக்கள் 10 பிள்ளைகளை பெற்று வேலைக்கு போகாமல் இருப்பார்கள்தானே (சொற்பம் பேராவது) அவர்களுக்கு அரசு என்ன செய்கிறதோ அதையே இவர்களுக்கும் செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

இதுவும் இதை விட இன்னும் ஜேர்மன் மொழியில் எழுதித்தாருங்கள். Afd கட்சி தலைமையகத்திற்கு அனுப்பி விடுவோம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதுவும் இதை விட இன்னும் ஜேர்மன் மொழியில் எழுதித்தாருங்கள். Afd கட்சி தலைமையகத்திற்கு அனுப்பி விடுவோம்...

சும்மா இருங்கோ அண்ணை,

வாற வருடம் எப்படியும் கார் மாத்த வேணும், கொஞ்சம் புதியதாக ஒரு VW Camper எடுத்து கொண்டு ஜேர்மனிய ஸ்டட்-ஸ்டட் சுத்துற ஐடியா இருக்கு.

அந்த “குருவி” பார்ட்டியள்ட மாட்டினால் செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி போடுவாங்கள்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

அந்த “குருவி” பார்ட்டியள்ட மாட்டினால் செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி போடுவாங்கள்

குருவியள் இப்ப பிரச்சனையில்லை. அரபு,ஆபிரிக்க ஆக்களால் தான் இப்ப பெரிய பிரச்சனை. துவக்கு எல்லாம் தூக்க தேவையில்லை. பக்கத்து கடையிலை 5 ஈரோவுக்கு ஒரு சின்னக்கத்தியே போதும். சரித்திரத்தை மாற்ற........

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

குருவியள் இப்ப பிரச்சனையில்லை. அரபு,ஆபிரிக்க ஆக்களால் தான் இப்ப பெரிய பிரச்சனை. துவக்கு எல்லாம் தூக்க தேவையில்லை. பக்கத்து கடையிலை 5 ஈரோவுக்கு ஒரு சின்னக்கத்தியே போதும். சரித்திரத்தை மாற்ற........

இது உண்மைதான். 

ஆனால் உடனே சலாம் அலைக்கும், வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று ஐக்கியம் ஆகி விட்டால் உயிர் தப்பலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

அந்த கட்சியின் பக்கம் நியாயம் இருக்கின்றது. அவர்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கின்றது.

காமடி பீசீன் ஆட்களால் பிரச்சனை இல்லையோ அண்ணை. அவை அமெரிக்கா தொடக்கம் ஐரோப்பா வரை பரந்து இருக்கினம்.😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, kalyani said:

காமடி பீசீன் ஆட்களால் பிரச்சனை இல்லையோ அண்ணை. அவை அமெரிக்கா தொடக்கம் ஐரோப்பா வரை பரந்து இருக்கினம்.😀

அவையள் இப்ப ராஜ பரம்பரைக்கு சமம்.

10 மாதங்களுக்கு முன்னர்  புட்டின் அவர்கள் உக்ரேன் நாஷிகளுக்கு பாடம் புகட்டுவேன் என்று சொன்னதும்  முதலில் வெகுண்டு கோபப்பட்டது ஜேர்மனிய அரசு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அந்த கட்சியின் பக்கம் நியாயம் இருக்கின்றது. அவர்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கின்றது.

அகதியாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் 10 பிள்ளைகளை பெற்றெடுத்து விட்டு நாட்டுக்கு பாரமாக இருப்பவர்களை என்ன செய்யச்சொல்கின்றீர்கள்.

பிள்ளைகள் பெறுவதை எப்படி குறை சொல்ல முடியும்   ?...உயிரியல் விஞ்ஞானம் சொல்லுகிறது   ஒவ்வொரு உயிரினமும் தன் இனம் அழியாமல் காப்பாற்றும் கடமைபைபாடு உடையது. ... அதாவது இனவிருத்தி செய்யுங்கள் என்கிறது ...10உம் பெறலாம்..50 உம் பெறலாம்...புலிகள்...சிங்கங்கள்......டைனோசர்..அழிந்துவிட்டது என்று கவலைப்படுகிறார்கள்.     அதே மனிதர்கள்..ஒருவர் 4 பிள்ளைகள் பெற்றால் கிண்டலடிக்கிறார்கள்   பிள்ளைகள் பெற முடியாது மலடாகயிருந்தாலும். கிண்டலடிக்கிறார்கள்  ....உந்த. Afd.  என்ற கட்சிக்கு   இரண்டாவது உலகமகா யுத்ததின். பின்   இத்தாலி...துருக்கி...மக்கள் தான் ஜேர்மனி யை   கட்டியெழுப்பினார்கள்    என்பது தெரியாது   இன்றும் கூட  முற்றாக வெளிநாட்டு மக்கள் வெளியேற்றினால். தொழில்சாலைகள் மூடவேண்டிவரும்.   பணமும் வெளிநாட்டு மக்களிடம் நிறைய உண்டு”   பணத்தையும். கொண்டு போய் விடுவார்கள் 🤣😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kandiah57 said:

  Afd  வெளிநாட்டவர்களை வெளியேறச்சொல்கிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

  Afd  வெளிநாட்டவர்களை வெளியேறச்சொல்கிறார்களா? 

முதல்ல வாறவை வேண்டாம். போர்டர சீல் பண்ணுவம், ஜேர்மன் போர்டரில் மீளவும் செக் பண்ணுவம் என்பார்கள்….

அது முடிய ….கந்தையா, கு.சா அண்ணைமாரில் கை வைப்பார்கள்.

Zuerst kamen sie für die Kommunisten
Und ich habe mich nicht zu Wort gemeldet
Weil ich kein Kommunist war

Dann kamen sie für die Sozialisten
Und ich habe mich nicht zu Wort gemeldet
Weil ich kein Sozialist war

Dann kamen sie für die Gewerkschafter
Und ich habe mich nicht zu Wort gemeldet
Weil ich kein Gewerkschafter war

Dann kamen sie für die Juden
Und ich habe mich nicht zu Wort gemeldet
Weil ich kein Jude war

Dann kamen sie zu mir
Und es war niemand mehr da
Um für mich zu sprechen

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

  Afd  வெளிநாட்டவர்களை வெளியேறச்சொல்கிறார்களா? 

இல்லை...  வரவேற்கிறார்கள்.   😄😎. வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

முதல்ல வாறவை வேண்டாம். போர்டர சீல் பண்ணுவம், ஜேர்மன் போர்டரில் மீளவும் செக் பண்ணுவம் என்பார்கள்….

ஜேர்மனி ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பின் நீங்கள் சொல்வது நடக்கலாம்.. 😂

5 minutes ago, Kandiah57 said:

இல்லை...  வரவேற்கிறார்கள்.   😄😎. வணக்கம் 🙏

என்ன கந்தையர் என்ன இப்பிடி பொசுக்கெண்டு சொல்லிப்போட்டியள்.....வாருங்கோ இன்னும் கொஞ்சம் கதைப்பம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனி ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பின் நீங்கள் சொல்வது நடக்கலாம்.. 😂

என்ன கந்தையர் என்ன இப்பிடி பொசுக்கெண்டு சொல்லிப்போட்டியள்.....வாருங்கோ இன்னும் கொஞ்சம் கதைப்பம். 😁

ஒகே நாளைக்கு தொடர்ந்து கதைப்போம்.   இப்போ நித்திரை.  கொள்ள போகிறேன்   நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் விடிய வாசிக்கின்றேன் 😄👍. இன்றைக்கு என்ன குடித்தீர்கள்.?    எத்தனை கிளாஸ்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனி ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பின் நீங்கள் சொல்வது நடக்கலாம்.. 😂

ஐ…கள்ளன்🤣

AfD கட்சி ஆரம்பத்தில் ஒரு ஈயூ எதிர் நிலைப்பாட்டு கட்சியாகவே ஆரம்பித்தது, இப்ப அடக்கி வாசிக்கிறது, தருணம் பார்த்து டொச்சிட் ஐ அது நடத்த முனையும் என்பது எல்லாம் என் அண்ணனுக்கும் தெரியிம் ஆனால் சொல்லமாட்டார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

[இனவிருத்தி செய்யுங்கள் என்கிறது ...10உம் பெறலாம்..50 உம் பெறலாம்..]

கந்தையா அண்ணா இனவிருத்தி செய்யுங்கோ செய்யுங்கோ 10 ம் பெறலாம் 50 ம் பெறலாம் என்று பூமியை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளிவிடுவது என்று தான் நிற்கிறார் 😄

  • கருத்துக்கள உறவுகள்

நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்ரு கூறினால் பலருக்கு அது வேப்பங்காய். 

Sau tabloid + வாளி + சோப்  = புத்திசாலி டமிலன்

புரிந்துகொண்டவன் புத்திசாலி.

புரிந்துகொள்ள முடியாதவன் அதி புத்திசாலி. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்ரு கூறினால் பலருக்கு அது வேப்பங்காய். 

Sau tabloid + வாளி + சோப்  = புத்திசாலி டமிலன்

புரிந்துகொண்டவன் புத்திசாலி.

புரிந்துகொள்ள முடியாதவன் அதி புத்திசாலி. 

பாஸ்,

Sau tabloid ஆ? அது என்ன புதிய பத்திரிகையா? ஒரு வேளை நீங்கள் அதி புத்திசாலிதனமாக Time ஐயும் New York Times ஐயும் ஒன்றாக்கியது போல் இப்போ புதிய பத்திரிகை ஏதும் வெளியிடுகிறீர்களோ🤣.

Sun ஐயா சொல்றீங்க🤣

நான் Sun ஐ யாழில் இதுவரை ஒரே ஒரு தரம்தான் மேற்கோள் காட்டி உள்ளேன் என நினைக்கிறேன்.

உங்களை போல் RT மேட்டில் மேய்பவர் அல்ல பிறர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கோஸ், 

Times magazine க்கும் NYT க்கும் வேறுபாடு தெரியாத ஆளாக இன்னொருவரை எடைபோடுவதுதான் அறியாமையின் உச்சம். Typo error க்கூட வேறுபடுத்தி அறியமுடியாத நிலையில் தாங்கள்  இருப்பது துரதிஸ்ரவசமானது.

பெயரை வைத்துத்தானா எல்லாவற்றையும் எடை போடுவீர்கள? உள்ளடக்கத்தையோ அல்லது அதிலுள்ள உண்மைத்தன்மையின் அளவை வைத்தோ அல்ல? 

மேலே எனது இணைப்பில் கொடுக்கப்பட்டவற்றில் உள்ள தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல் மூலத்தை வைத்து செய்தியை எடை போடுவது முட்டாள்தனத்தின் உச்சம். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

கோஸ், 

Times magazine க்கும் NYT க்கும் வேறுபாடு தெரியாத ஆளாக இன்னொருவரை எடைபோடுவதுதான் அறியாமையின் உச்சம். Typo error க்கூட வேறுபடுத்தி அறியமுடியாத நிலையில் தாங்கள்  இருப்பது துரதிஸ்ரவசமானது.

பெயரை வைத்துத்தானா எல்லாவற்றையும் எடை போடுவீர்கள? உள்ளடக்கத்தையோ அல்லது அதிலுள்ள உண்மைத்தன்மையின் அளவை வைத்தோ அல்ல? 

மேலே எனது இணைப்பில் கொடுக்கப்பட்டவற்றில் உள்ள தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல் மூலத்தை வைத்து செய்தியை எடை போடுவது முட்டாள்தனத்தின் உச்சம். 

☹️

பாஸ் Sun, ஐ Sau என எழுதியது டைப்போதான். அதை பற்றி நான் எழுதியது நகைசுவையாக.

ஆனால் நீங்கள் Time Magazine ம், New York Times உம் ஒன்றென நினைத்து அடித்து விட்ட பீலா டைப்போ அல்ல.

உங்களை நான் அப்படி எடை போடவில்லை. நீங்கள்தான் அப்படி எழுதினீர்கள்.

குறைந்தபட்சம் “நான் பிழையாக விளங்கி கொண்டேன்” என பெருந்தன்மையாக சொல்வீர்கள் என நினைத்தேன். அது கூட இல்லை, செந்தில் வாழைபழ ஜோக் மாரி அதுதான் இது என சடைகிறீர்கள்.

உங்களுக்கு முதலிலேயே சொல்லிவிட்டேன் RT, Sun, Daily Mail, Fox, CNN போன்ற குப்பை மேட்டில் நான் மேய்வதில்லை. 

நீங்கள் இணைத்தாலும் இடதுகையால் விலக்கி விட்டுத்தான் போவேன்.

RT க்கு மட்டும் அல்ல, வெரித்தாஸ், CCTV, Sun, Daily Mail, etc…etc

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.