Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சம்பந்தன் போர் குற்றவாளியா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

சம்பந்தன் போர் குற்றவாளியா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

சம்பந்தன் போர் குற்றவாளியா? என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2126வது நாள் இன்று.

அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் சம்பந்தன் கூறியது யாழ்ப்பாணத்தில் ரணில் சொன்னதுதான்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சம்பந்தன் சர்வகட்சி கூட்டத்தில் அவர் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டது சம்பந்தனுக்கு எப்படி தெரியும்?அவர் அதை நம்பினால், ஆதாரம் மற்றும் நேரில் கண்ட சாட்சியைக் எமக்கு காட்டுங்கள்.

இலங்கை சிங்களத் தலைவர்களிடம் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்த அனைவரையும் கொல்லச் சொன்னதால் தான் , அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தைரியமாக வெளியே வந்து சொல்ல முடிகிறது.

இதனால்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு வன்னியை சிங்களவர்கள் கைப்பற்றும் வரை சம்பந்தனும் ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களும் சென்னையில் ஒளிந்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை விரும்பாததற்குக் காரணம், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் குற்றவாளியாக்கும் என்பதாலேயே என தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1315636

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்துவுக்கு சவுக்கடி....அறளை பெயர்ந்தால்...போர்த்துக்கிட்டு படுங்க..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று மார்பு தட்டுபவர், அந்த மக்கள்  வகை தொகையின்றி கொல்லப்படும்போது அந்த மக்களின் துன்பங்களில் கூட இல்லை, பங்கெடுக்கவும் இல்லை, அவர்களின் உடைந்த மனதுக்கு ஆறுதல் சொல்லவில்லை, தங்கள் உறவுகளை தேடி தெருத் தெருவாய் அலைபவர்களை கண்டு கொள்ளவுமில்லை, தான் தோன்றித்தனமாய் முடிவெடுக்க போய்விட்டார். கடமை செய்யாதவருக்கு அந்த மக்கள் சார்பாக முடிவெடுக்கும் உரிமையை யார் கொடுத்தது? பெரும்பான்மை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் என்று கர்சித்தவர், அந்த மக்களின் குரலுக்கு செவி கொடுக்காமல் அவர்களாலேயே  அவரை வீட்டுக்கு போகும்படி போராடும்போதும்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என்று அரைப்பைத்தியம்போல் உளறிவிட்டு தெரிந்தெடுத்த மக்களுக்கு தெரியாமலேயே நாட்டை விட்டோடியதை இவர் காதில் ஒருவரும் சொல்லவில்லையோ அன்றி சொன்னது இவர் காதில் சரியாக விழவில்லையோ? கெதியில் இவருக்கு அது நடந்தேறும் இவரால் ஓட முடியாது இறுக்கி மூடிக்கொண்டு இருக்க வேண்டியான்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.