Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கொலைகாரன் தினேஷ் வைத்தியசாலையில் இறக்கும்வரை கூடவே இருந்து தினேஷின் அலைபேசியை கையாளுமளவுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக இருந்திருக்கிறான். மரணத்தை நிறைவேற்றும் அவசரம், பதட்டம் காரணமாக கிறிக்கெற் பிரபலத்துக்கு செய்தி அனுப்பி அவரை சிக்க வைத்து தான்  தப்பிக்கொள்ளும் உத்தியை மறந்திருக்கலாம், அவர் இறந்தபின் நான் உனக்காக காத்திருக்கிறேன் என்கிற செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. தினேஷின் மனைவி  அவரது இருக்குமிடத்தை இணையவழி தேடி அவரது வாகனம் மயானத்துக்கு போகிறது எனக்கண்டறிந்து ஆளை அனுப்பியதன் காரணம் என்ன?  அப்படியென்றால் தினேஷ் தனது மனைவியிடம் தான் சந்திக்க போகும் நபரை சந்திக்கும் இடம், நேரத்தை அறிவித்து விட்டு சென்றிருக்கவேண்டும். அப்படியானால் அது எந்த இடம் என்ன நேரம்? அத அவர் ஏன் போலீசாரிடம் குறிப்பிடவில்லை? கார் பாதை மாறிப்போகிறது, கணவன் ஆபத்தில் இருக்கிறார், அவருக்கு உதவி தேவையென ஆள் அனுப்பியவர், போலீசாரை அணுகாமல் சம்பந்தப்பட்டவரை தனியாக அனுப்பியதன் நோக்கமென்ன? சும்மா நான் பணத்தை மீளப்பெறப்போகிறேன் என்று சொல்லி, அதுவும் பணிப்பாளருக்கும் அறிவித்து விபரம் தெரிவிக்காமல் செல்வது, மனைவி விபரம் அறியாமல் அனுப்பிவிட்டு அவர் போகும் இடத்தை தேடுவது நம்புவதுபோல் தெரியவில்லை. பெறப்போகும் தொகை சாதாரணமானதல்ல தனிய போய் கையில வாங்கிக்கொண்டு வருவதற்க்கு. அதற்கென்று நடைமுறைகள் உண்டு. அதுவும் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, தன்னிச்சையாக செயற்பட முடியாது. அவரது மனைவி ஒன்றும் நாட்டுக்கட்டையோ, வெகுளியோ கிடையாது இதை புரிந்து கொள்ளாமலிருப்பதற்கு. சாரதி இல்லாமல் அவசர காரணமாக மயானத்திலிருந்த ஒருவரை அழைத்து வர அனுப்பப்படிருக்கலாம். அப்பாவி மனிதன் துரோகத்தால் மாண்டிருக்கிறார். பக்கத்திலிருந்து அவர் எதிர்பாரா விதமாக கழுத்தை நெரித்திருக்கிறான். அவர் தன் கைக்கு எட்டிய வரையில் அவனது தலைமயிரை இழுத்திருக்கிறார். தினேஷ் தான் கிறிக்கெற் பிரபலத்தை சந்திக்க இருந்திருந்தால் தனியாக சந்திக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவரை சந்திப்பதற்காக சம்பந்தப்படவருடன் நடத்திய உரையாடலோ, செய்திப்பரிமாற்றமோ அலைபேசியில் கண்டறிந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே இது கொலைகாரர் கூறும் காரணமாக இருக்கலாம். தினேஷின் அலைபேசியில் பல சந்தேகங்களுக்கு விடை உண்டு. தினேஷின் மனைவி தினேஷுக்கு உண்மையில் அழைப்பெடுத்தாரா? எப்போ அழைப்பெடுத்தார்? இருப்பிடத்தை கண்டறிந்த பின்னா, முன்னா? இவர் இப்படி கணவர் வெளியில் போன பின் அழைப்பெடுத்து கண்டறியும் பழக்க முன்பு இருந்ததா? பொலிஸாருக்கு இது தெரியாமலில்லை, ஏதோ தடுக்கிறது. இது பணப்பரிமாற்றம் அல்லது கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட கொலையென  என விசாரணையை திசைதிருப்பவும் இடமுண்டு. இங்கு பணம் பாதாளம் மட்டும் பாய்ந்து கொலைகாரரும், காரணங்களும் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புமுண்டு.       

@தமிழ் சிறி அண்ணை எனக்கு கொலைகாரன் யார் எண்டு தெரிஞ்சிட்டு… நம்ம சாத்ஸ்தான்🤣

  • Replies 124
  • Views 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    தமிழன் என்றால்.... எவ்வளவு இளக்கமாக நினைத்து கொலையை கூட  கண்டு பிடிக்க திணறுவது மாதிரி நடிக்கின்றார்கள். 😒 இறந்தவர்... பல கோடிகளை கையாளும் ஒரு தொழிலதிபர். இதற்குள்... புலம் பெயர் தமிழர்களை...

  • அட... சிறியர் ஒரு துணிஞ்ச கட்டை என்றல்லவா இவ்வளவுநாளும் நான் நினைத்திருந்தேன்!

  • அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

@தமிழ் சிறி அண்ணை எனக்கு கொலைகாரன் யார் எண்டு தெரிஞ்சிட்டு… நம்ம சாத்ஸ்தான்🤣

இப்படித்தான் கொலைகாரன் தானாக வந்து நான்தான் இந்தக்கொலையை செய்தேன் என சரணடையும் வரை காத்திருப்பீர்களாக்கும்? இத்தனை துப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது கொலைகாரனை இனங்காண்பதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

இப்படித்தான் கொலைகாரன் தானாக வந்து நான்தான் இந்தக்கொலையை செய்தேன் என சரணடையும் வரை காத்திருப்பீர்களாக்கும்? இத்தனை துப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது கொலைகாரனை இனங்காண்பதற்கு. 

🤣

பழைய கிரிகெட்டர் சதாசிவம் மனைவி கொலை வழக்கு பற்றி அறிந்துள்ளீர்களா?

இதிலும் அதிலும் பல ஒற்றுமைகளை நான் காண்கிறேன்.

அத்தோடு, ஷாப்டரின் தந்தை இலங்கைக்கு கிரிகெட் விளையாடிவர், கிரிகெட் அட்மினிஸ்டிரேட்டராக இருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

🤣

பழைய கிரிகெட்டர் சதாசிவம் மனைவி கொலை வழக்கு பற்றி அறிந்துள்ளீர்களா?

இதிலும் அதிலும் பல ஒற்றுமைகளை நான் காண்கிறேன்.

அத்தோடு, ஷாப்டரின் தந்தை இலங்கைக்கு கிரிகெட் விளையாடிவர், கிரிகெட் அட்மினிஸ்டிரேட்டராக இருந்தவர்.

இல்லை,  நான் அறியவில்லை. திறமையும், கடின உழைப்பும் கொண்ட அநேகர் தங்களைச்சுற்றியுள்ள நயவஞ்சகர்களை இனங்காண தவறுவதோடு, அவர்களையே கண்மூடித்தனமாக நம்பியும் விடுவது அவர்களின் துர்ப்பாக்கியம்!        

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

இல்லை,  நான் அறியவில்லை. திறமையும், கடின உழைப்பும் கொண்ட அநேகர் தங்களைச்சுற்றியுள்ள நயவஞ்சகர்களை இனங்காண தவறுவதோடு, அவர்களையே கண்மூடித்தனமாக நம்பியும் விடுவது அவர்களின் துர்ப்பாக்கியம்!        

இங்கே இருக்கிறது. வாசித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இங்கே இருக்கிறது. வாசித்து பாருங்கள்.

இதை வாசித்தபின் சில சமயங்களில் விதி எழுதும் கதை விசித்திரமானது என்றே எண்ணத்தோன்றுகிறது. பணத்தாசை, தானும் வாழ்ந்து  மற்றவர்களையும் வாழ விடுவதில்லை. ஒரு பழமொழி "பாத்திரமறிந்து பிச்சையிடு, கோத்திரமறிந்து பெண் கொடு (எடு)." பொய்யல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

@தமிழ் சிறி அண்ணை எனக்கு கொலைகாரன் யார் எண்டு தெரிஞ்சிட்டு… நம்ம சாத்ஸ்தான்🤣

ஏன் சார், இலங்கை போலீஸ் இலாகா இந்த திரியை வாசிக்காதில்ல? நீங்கள் சொல்லி வைச்சிடாதீங்கோ. ஒரு பல்லியை கொல்லவே மனம் வராத ஆள் நான். அவ்வளவு பீச்சல் பயம் எனக்கு. நீங்கள் வேறை கொலை, அது இதென்று பீதியை கிளப்ப, வகையற்ற போலீசு வாசலில வந்து தட்ட எதுக்கு இந்த வில்லங்கத்தை?

அரைச்ச மாவையே அரைச்சு விறு விறுப்பை ஏற்படுத்த முயற்சிக்குது போலீசு, கணவன் மனைவி இருவரில் ஒருவரின் இங்கிலாந்து பயணத்தை தடுப்பதற்காக  கொலை நடந்திருக்கோ? ஒருவேளை தினேஷ் இங்கிலாந்தில் குடியேற திட்டமிட்டிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. நாங்களும் எங்கள் பங்குக்கு போலீசுக்கு துப்பு கொடுப்போம்! 

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் ஷாப்டர் மரணம்; கொலையா? தற்கொலையா?

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினேஷ் ஷாப்டர் இறுதியாக பயணித்த தனது காரில் வேறு யாரும் பயணிக்கவில்லை என்பது CCTV காட்சிகளில் தெளிவாக ஆதாரங்கள் இருந்தாலும், காரில் இருந்தவை குறித்து நீண்ட விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தினேஷ் ஷாப்டர் தனது மனைவியுடன் இங்கிலாந்து செல்வதற்கு சில மணித்தியாலங்கள் இருந்த நிலையில், பொரளை மயானத்தில் காரில் அவரது கைகள் கட்டப்பட்டு மீட்கப்பட்டிருந்ததுடன், மயானத்தின் ஊழியர் ஒருவரின் உதவியுடன் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், ஐந்து மணித்தியால சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை தனது வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்தும், எதிர்பார்த்தபடி பணத்தை வசூலிக்க முடியாமல் போனதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால், நாளுக்கு நாள் தினேஷ் ஷாப்டர் நட்டமடைந்து வந்துள்ளார். தினேஷ் ஷாப்டர் சுமார் 2,000 கோடி ரூபாவை இழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் வசிக்கும் கறுவாத்தோட்டம் – ப்ளவர் வீதி வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்தமை தொடர்பிலும் தெரியவந்துள்ளது.

தினேஷ் ஷாப்னரின் உயிரிழப்பு தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் 70 CCTV காணொளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. R
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/தனஷ-ஷபடர-மரணம-கலய-தறகலய/175-309624

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா .... தனது தலைமுடியை தானே பிச்சுக்கொண்டார், பத்தாததுக்கு செத்த பிறகு கிரிகெற்க்காரனுக்கு செய்தி வேற அனுப்பியிருக்கிறாரு. இப்பிடி எத்தனையை போலீசு மாறி மாறி சோடிக்கும். களவு எடுக்குது, கஞ்சா கடத்துது, மதுபானம் கடனுக்கு கேட்டு கடைக்காரனை அடிக்குது போலீசு. இதையும் செய்துபோட்டு பழிப்போட ஆள்தேடுதாம். அட ... இவன்கள்தானே இத்தனை செய்தியையும் போட்டு குழப்பினவங்கள். கொலைகாரனை பிடிக்க முடியாவிட்டால் தற்கொலை என்று கதையை முடிச்சுவிடுவான்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

ஏன் சார், இலங்கை போலீஸ் இலாகா இந்த திரியை வாசிக்காதில்ல? நீங்கள் சொல்லி வைச்சிடாதீங்கோ. ஒரு பல்லியை கொல்லவே மனம் வராத ஆள் நான். அவ்வளவு பீச்சல் பயம் எனக்கு. நீங்கள் வேறை கொலை, அது இதென்று பீதியை கிளப்ப, வகையற்ற போலீசு வாசலில வந்து தட்ட எதுக்கு இந்த வில்லங்கத்தை?

அரைச்ச மாவையே அரைச்சு விறு விறுப்பை ஏற்படுத்த முயற்சிக்குது போலீசு, கணவன் மனைவி இருவரில் ஒருவரின் இங்கிலாந்து பயணத்தை தடுப்பதற்காக  கொலை நடந்திருக்கோ? ஒருவேளை தினேஷ் இங்கிலாந்தில் குடியேற திட்டமிட்டிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. நாங்களும் எங்கள் பங்குக்கு போலீசுக்கு துப்பு கொடுப்போம்! 

🤣 துப்பறியும் சிங்கமே நீங்களே இப்படி கலங்கலாமா? அப்படி ஒன்றும் நடக்காது.

ஆனால் உண்மையில் இந்த திரியில் தரவுகளை நீங்கள் அலசும் விதம் அருமை.

துப்பு கெட்ட இலங்கை போலிஸ் எந்த துப்பை கொடுத்தாலும், தும்பை விட்டு வாலைத்தான் பிடிக்கும்.

1 hour ago, satan said:

ஆமா .... தனது தலைமுடியை தானே பிச்சுக்கொண்டார், பத்தாததுக்கு செத்த பிறகு கிரிகெற்க்காரனுக்கு செய்தி வேற அனுப்பியிருக்கிறாரு. இப்பிடி எத்தனையை போலீசு மாறி மாறி சோடிக்கும். களவு எடுக்குது, கஞ்சா கடத்துது, மதுபானம் கடனுக்கு கேட்டு கடைக்காரனை அடிக்குது போலீசு. இதையும் செய்துபோட்டு பழிப்போட ஆள்தேடுதாம். அட ... இவன்கள்தானே இத்தனை செய்தியையும் போட்டு குழப்பினவங்கள். கொலைகாரனை பிடிக்க முடியாவிட்டால் தற்கொலை என்று கதையை முடிச்சுவிடுவான்கள்.

நல்ல இருக்கில்ல கதை🤣

On 21/12/2022 at 11:49, goshan_che said:

வழக்கை திசை திருப்புகிறார்கள்?

உடான்ஸ்சாமியின் ஞானதிருஸ்டியும் லேசுபட்டதல்ல🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

@தமிழ் சிறி அண்ணை எனக்கு கொலைகாரன் யார் எண்டு தெரிஞ்சிட்டு… நம்ம சாத்ஸ்தான்🤣

குற்றம் நடந்து முடிந்து இதுவரை இழுக்கினம் என்றால் முக்கியமான யாரையோ தப்ப வைக்கிறார்கள் போலிஸ் எனும் அடிமை துறை .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

குற்றம் நடந்து முடிந்து இதுவரை இழுக்கினம் என்றால் முக்கியமான யாரையோ தப்ப வைக்கிறார்கள் போலிஸ் எனும் அடிமை துறை .

இப்ப தற்கொலை எண்டுறாங்கள்🤣.

சாகிற மனுசன் கேக், பட்டீஸ் எல்லாம் சாப்பிட்டு விட்டு, மயானத்துக்கு போய், தன் கழுத்தை தானே வயரால் நெரித்ததாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இப்ப தற்கொலை எண்டுறாங்கள்🤣.

சாகிற மனுசன் கேக், பட்டீஸ் எல்லாம் சாப்பிட்டு விட்டு, மயானத்துக்கு போய், தன் கழுத்தை தானே வயரால் நெரித்ததாம்🤣.

அநேகமா குற்றவாளி இன்றுவரை மாட்டுபடவில்லை என்றால் இனி ஒரு போதும் மாட்டுபட போவதில்லை ஏனென்றால் சொறிலங்கா குற்றவியல் வரலாறு அப்படித்தான் .

சிலவேளை வேறு சில நெருக்குவாரான்கள் காரணமாக பணத்துக்கு ஜெயில் செல்லும் குருவி பேருக்கு மாட்டுப்படும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இப்ப தற்கொலை எண்டுறாங்கள்🤣.

சாகிற மனுசன் கேக், பட்டீஸ் எல்லாம் சாப்பிட்டு விட்டு, மயானத்துக்கு போய், தன் கழுத்தை தானே வயரால் நெரித்ததாம்🤣.

தமிழன் என்றால்.... எவ்வளவு இளக்கமாக நினைத்து கொலையை கூட 
கண்டு பிடிக்க திணறுவது மாதிரி நடிக்கின்றார்கள். 😒

இறந்தவர்... பல கோடிகளை கையாளும் ஒரு தொழிலதிபர்.
இதற்குள்... புலம் பெயர் தமிழர்களை... இலங்கையில் முதலிடச் சொல்லி...
ஜனாதிபதியில் இருந்து... சகல மட்டங்களில் இருந்தும் அழைப்பு. 🤔

இவங்களை நம்பி.... பிஞ்ச செருப்பைக் கூட, எப்படி  அங்கு வைப்பது. 😮

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

தமிழன் என்றால்.... எவ்வளவு இளக்கமாக நினைத்து கொலையை கூட 
கண்டு பிடிக்க திணறுவது மாதிரி நடிக்கின்றார்கள். 😒

இறந்தவர்... பல கோடிகளை கையாளும் ஒரு தொழிலதிபர்.
இதற்குள்... புலம் பெயர் தமிழர்களை... இலங்கையில் முதலிடச் சொல்லி...
ஜனாதிபதியில் இருந்து... சகல மட்டங்களில் இருந்தும் அழைப்பு. 🤔

இவங்களை நம்பி.... பிஞ்ச செருப்பைக் கூட, எப்படி  அங்கு வைப்பது. 😮

ரணில் ஐய்யா புலம்பெயர் தமிழரை இலங்கையில் முதலிட சொல்லி 😄அழைகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

அநேகமா குற்றவாளி இன்றுவரை மாட்டுபடவில்லை என்றால் இனி ஒரு போதும் மாட்டுபட போவதில்லை ஏனென்றால் சொறிலங்கா குற்றவியல் வரலாறு அப்படித்தான் .

சிலவேளை வேறு சில நெருக்குவாரான்கள் காரணமாக பணத்துக்கு ஜெயில் செல்லும் குருவி பேருக்கு மாட்டுப்படும் .

மனைவியை குற்றவாளி ஆக்க வாய்ப்பு இருக்கு. ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் தகவல்கள் கசிய விட படுகிறன.

7 minutes ago, தமிழ் சிறி said:

தமிழன் என்றால்.... எவ்வளவு இளக்கமாக நினைத்து கொலையை கூட 
கண்டு பிடிக்க திணறுவது மாதிரி நடிக்கின்றார்கள். 😒

இறந்தவர்... பல கோடிகளை கையாளும் ஒரு தொழிலதிபர்.
இதற்குள்... புலம் பெயர் தமிழர்களை... இலங்கையில் முதலிடச் சொல்லி...
ஜனாதிபதியில் இருந்து... சகல மட்டங்களில் இருந்தும் அழைப்பு. 🤔

இவங்களை நம்பி.... பிஞ்ச செருப்பைக் கூட, எப்படி  அங்கு வைப்பது. 😮

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

ரணில் ஐய்யா புலம்பெயர் தமிழரை இலங்கையில் முதலிட சொல்லி 😄அழைகிறார்

கொஞ்ச நாட்கள் முன் @குமார சாமி இணைத்த காணொளியில் இலங்கையில் முதலிடப் போன தமிழர் ஒருவர் 10 வீதம் கேக்கிறார்கள்.பணத்தை புடுங்குவதிலே குறியாக இருக்கிறார்கள்.வட்டிக்கு வட்டி குட்டி என்று மிகவும் மோசமாக செயல்படுவதாக அழாத குறையாக சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அநேகமா குற்றவாளி இன்றுவரை மாட்டுபடவில்லை என்றால் இனி ஒரு போதும் மாட்டுபட போவதில்லை ஏனென்றால் சொறிலங்கா குற்றவியல் வரலாறு அப்படித்தான் .

தினேஷின், அவர் சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள், உரையாடல்கள் ஆராயப்பட்டுள்ளன, குற்றவாளியை நெருங்கி விட்டோம், கைது செய்யத் தயங்கமாட்டோம் என்றெல்லாம் விறுவிறுப்பை ஏத்திப்போட்டு, இப்போ; மாமிக்கு செய்தி அனுப்பினார், தற்கொலை செய்தார் என்று புதுப்புது செய்திகளை வெளியிட்டு முக்கோணத்தில, ஐங்கோணத்தில விசாரிக்கினமாம். இவர்கள் வேண்டுமென்றே குற்றவாளியை காப்பாற்றுகிறார்கள் காரணம் பணம். இத்தனை கொலைகளை செய்தவர்களுக்கு விடுதலை, மரியாதை, பதவி கொடுத்து மகிழ்பவர்களுக்கு இது என்ன பெரிய கொலை என்று அவசரங்காட்டுவதற்கு? நாளாந்தம் அரசியல் கொலைகள், பழிவாங்கல்கள் நடக்கிற நாட்டில் இதெல்லாம் சாதாரணம்.

9 hours ago, goshan_che said:

உடான்ஸ்சாமியின் ஞானதிருஸ்டியும் லேசுபட்டதல்ல

இதனாலல்லவோ எல்லோரும் உங்கள் கடைக்கண் தங்கள் மேல் விழாதா என்று அழைக்கிறார்கள். நீங்கள்தான் அப்பப்போ ஓடி மறைந்து விடுவீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

இதனாலல்லவோ எல்லோரும் உங்கள் கடைக்கண் தங்கள் மேல் விழாதா என்று அழைக்கிறார்கள். நீங்கள்தான் அப்பப்போ ஓடி மறைந்து விடுவீர்கள்!

😂 எதுக்கும் நாள் நட்சத்திரம் கூடி வரவேண்டும்😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

😂 எதுக்கும் நாள் நட்சத்திரம் கூடி வரவேண்டும்😂

ஓ ....ஓ கூடி வருவதற்க்குத்தான் ஓடி மறைகிறனீர்களோ? இது எனக்குத் தெரியாமற் போச்சே போஸ்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 02:00, ஏராளன் said:

தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டரிடம்  விசாரணையாளர்கள் 3ஆவது தடவையாகவும் அவரது வீட்டில் வைத்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். 

கோஸான், சிறி! சந்தேகமேயில்லை, இலங்கை போலீஸ் குற்றபுலனாய்வாளர் எங்கள் செய்திகளை வாசிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. சந்தேகத்துக்கிடமான ஒருவரை பின்தொடர்கிறது குற்றப்புலனாய்வு,  விசாரணை தீர்க்கமான கட்டத்தை நெருங்கி விட்டது என்று அறிக்கை விட்டவர்கள் மீண்டும் விசாரணை  அவரின் மனைவியின் பக்கம் திரும்பியுள்ளது. நாங்கள் கொடுத்த துப்பு வேலை செய்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கோஸான், சிறி! சந்தேகமேயில்லை, இலங்கை போலீஸ் குற்றபுலனாய்வாளர் எங்கள் செய்திகளை வாசிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. சந்தேகத்துக்கிடமான ஒருவரை பின்தொடர்கிறது குற்றப்புலனாய்வு,  விசாரணை தீர்க்கமான கட்டத்தை நெருங்கி விட்டது என்று அறிக்கை விட்டவர்கள் மீண்டும் விசாரணை  அவரின் மனைவியின் பக்கம் திரும்பியுள்ளது. நாங்கள் கொடுத்த துப்பு வேலை செய்கிறது!

மூவரும் 4ம் மாடிக்கு போய் சன்மானம் ஏதும் கேட்டுப்பார்போமா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

மூவரும் 4ம் மாடிக்கு போய் சன்மானம் ஏதும் கேட்டுப்பார்போமா?🤣

நான் வரேல்லை உந்த சன்மானத்திற்கு. வேண்டுமென்றால் சிறியரை கேட்டுப்பாருங்கள். இருந்தாலும் சொல்லுறேன் 4ம் மாடிக்கு சன்மானம் கேட்டுப்போனால்; வெகு விரைவில் தினேஷிடமே யார் கொலையாளிகள் என்று நேரடியாக கேட்டு அறிந்து விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

நான் வரேல்லை உந்த சன்மானத்திற்கு. வேண்டுமென்றால் சிறியரை கேட்டுப்பாருங்கள். இருந்தாலும் சொல்லுறேன் 4ம் மாடிக்கு சன்மானம் கேட்டுப்போனால்; வெகு விரைவில் தினேஷிடமே யார் கொலையாளிகள் என்று நேரடியாக கேட்டு அறிந்து விடலாம்.

தினேசிடம் போவதென்றால் - எனக்கும் கொஞ்சம் அலுவல் இருக்கு. சிறி அண்ணாவே போய் வாங்கி வரட்டும்😂.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

நான் வரேல்லை உந்த சன்மானத்திற்கு. வேண்டுமென்றால் சிறியரை கேட்டுப்பாருங்கள். இருந்தாலும் சொல்லுறேன் 4ம் மாடிக்கு சன்மானம் கேட்டுப்போனால்; வெகு விரைவில் தினேஷிடமே யார் கொலையாளிகள் என்று நேரடியாக கேட்டு அறிந்து விடலாம்.

10 minutes ago, goshan_che said:

தினேசிடம் போவதென்றால் - எனக்கும் கொஞ்சம் அலுவல் இருக்கு. சிறி அண்ணாவே போய் வாங்கி வரட்டும்😂.

அட பாவிகளா…. கை கால் எல்லாம் உதறுது.
கடைசியாய் என்னை மாட்டி விட்டுவிட்டீர்களே.
எனக்கு சன்மானம் வேண்டாம். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.