Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஸ் சாப்டர் மரணம் - தகவல்கள் கசிவது குறித்து பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை

By Rajeeban

02 Jan, 2023 | 10:36 AM
image

வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த விபரங்களை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தவேண்டாம் என  பொலிஸ்மா அதிபர் விசாரணை அதிகாரிகளை  எச்சரித்துள்ளார்.

சாப்டர் மரணம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிகளை கடந்த வாரம் அழைத்த பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரட்ண முக்கிய குற்றவாளி குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக  கசியவிடப்படும் தகவல்கள் குறித்து எச்சரித்துள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை விசாரணையில் திருப்புமுனை எதுவும் ஏற்படாத போதிலும்  முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என்பது போல  தகவல்கள் கசியவிடப்படுகின்றன என பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலசாத்தியக்கூறுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன தற்கொலையும் அதில் ஒன்று ஆனால் நிரூபிப்பதற்கு எதுவுமில்லை என விசாரணை குறித்து அறிந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கைகளை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கேபிள்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமையால் இது தற்கொலை என உறுதி செய்ய முடியாது  கவனத்தை திசை திருப்புவதற்கான  நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த சாத்தியக்கூறுகளையும் நிராகரிக்கவில்லை தடயவியல்  அறிக்கைகளை எதிர்பார்த்திருக்கின்றோம் தொலைபேசி உரையாடல்கள் குறித்த விபரங்களை எதிர்பார்த்திருக்கின்றோம் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

https://www.virakesari.lk/article/144725

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/1/2023 at 00:42, நந்தன் said:

சரி பைல மூடுங்கப்பா 🤣

சீச்சீ ...அப்படி எல்லாம் மூட  கூடாது உங்கட கருத்தையும் சொல்லுங்கோ நந்தன்🤣 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இதுவரை 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலைகள் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட இரத்த மாதிரிகள் உள்ளிட்ட ஆதாரங்களை மரபணு பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று(திங்கட்கிழமை) அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரி, நகங்கள் உள்ளிட்ட உடற்கூறுகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் தொடர்பில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

https://athavannews.com/2023/1318534

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டர்  படுகொலை : இரத்தம், நகத் துண்டுகள் உள்ளிட்ட உடற்கூறுகள், ஸ்தல சாட்சியங்கள் பல டி.என்.ஏ. பரிசோதனைக்கு

By DIGITAL DESK 2

03 JAN, 2023 | 05:43 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், அவரின்  இரத்த மாதிரி, நகத் துண்டுகள் உள்ளிட்ட உடற்கூறுகள் மற்றும் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஸ்தல சான்றுப் பொருட்கள் பல தொடர்பில் இரசாயன,  டி.என்.ஏ. பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதற்காக செவ்வாய்க்கிழமை (டிச. 3) சி.ஐ.டி.யின் பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவு அதிகாரிகள்,  கொழும்பு நீதிவான் நீதிமன்றின் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 அதன்படி, சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொரளை பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடித்த வயர் துண்டு, இரத்தம் தோய்ந்த துணி, தினேஷ் ஷாப்டரின் நகம், இரத்த மாதிரி,  ஸ்தல பரிசோதகர்களும் சி.ஐ.டி. அதிகாரிகளும் கண்டுபிடித்த ஸ்தல சான்றுப் பொருட்கள் பலவற்றை அரச இரசாயன பகுப்பய்வாளருக்கு அனுப்பி பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ. அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள இந்த கட்டளை பெற்றுக்கொளப்பட்டுள்ளது. 

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய குற்றவியல் சட்டத்தின்  124ஆவது அத்தியாயத்துக்கு அமைய இதற்கான  கட்டளையை பிறப்பித்துள்ளார்.

இந் நிலையில், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றது. அதன்படி இதுவரை சுமார் 145 வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைத் தகவல்கள் வீரகேசரிக்கு வெளிப்படுத்தின. 

https://www.virakesari.lk/article/144875

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உத்தியோகபூர்வ அறையில் நடந்த தினேஷ் ஷாப்டர் படுகொலை தொடர்பான விசாரணை

By T. SARANYA

04 JAN, 2023 | 05:14 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் (மஜிஸ்ட்ரேட் விசாரணை) இன்று  (ஜன 04)  கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ஆரம்பமானது.   

நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியில்லாத சூழலில்  இரகசியமாக  இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டர், தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படும் அவரது நிறுவனமொன்றின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றும் கிரிஸ் பெரேரா ஆகியோரின்  சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன.

தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில், குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது, நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இந் நிலையில்  இன்று புதன்கிழமை சாட்சியமளிக்க  பொரளை கனத்தை ஊழியர்கள் இருவர் , நீதிமன்றுக்கு வந்திருந்த போதும் அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லை. அவர்களது சாட்சியங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி பதிவு செய்யப்படவுள்ளது.

 இன்றைய தினம் இந்த சாட்சிப் பதிவுகளின் போது, தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தாரின் நலனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர். 

https://www.virakesari.lk/article/144978

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!

தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மரணம் தொடர்பில் இதுவரை சுமார் 175 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1319518

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் மரணம் : தொடரும் விசாரணகள் ! சகோதரரிடம் சாட்சியங்கள் பதிவு 

By DIGITAL DESK 5

10 JAN, 2023 | 07:31 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலையா தற்கொலையா என விசாரணையாளர்கள் எந்த தீர்மானத்துக்கும் இதுவரை வரவில்லை எனவும், கொலையாக கருதிய குற்றவியல் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஷாப்டரின் மரணம் தற்கொலை என சமூக வலைத் தலங்களில் சி.ஐ.டி.யை மேற்கோள் காட்டி ஊடகமொன்று வெளியிட்ட செய்தியை மையப்படுத்தி  தகவல்கள்  வெளியாகியுள்ள நிலையில், விசாரணையாளர்கள் ஒரு போதும் , எங்கும் ஷாப்டரின் மரணத்தை இதுவரை தற்கொலை என அறிக்கை இடவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

அதன்படி இந்த விவகாரத்தில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய இதுவரை 175 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவர் இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படாத நிலையில், நேரடி சாட்சியங்களை தேடிய புலன் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ. ஆய்வு அறிக்கைகள்  இதுவரை கிடைக்காத நிலையில் சுமார் 14 தடயங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணையாளர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந் நிலையில், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதனிடையே, படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் ( மஜிஸ்ட்ரேட் விசாரணை) இன்று (10)  கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இடம்பெற்றது.

நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியில்லாத சூழலில் இரகசியமாக இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ரமேஷ் ஷாப்டரிடம் இன்றையதினம் சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன.

தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில், குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது, நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/145449

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஸ் ஸ்காப்டர் விவகாரம்- பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் பொலிஸ் பேச்சாளர்

By RAJEEBAN

12 JAN, 2023 | 03:57 PM
image

பிரபல வர்த்தகர் தினேஸ் ஸ்காப்டர் மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொலிஸ் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.

தொலைக்காட்சிநிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கையில் பிரபலவர்த்தகரின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்குமாறு மறைகரமொன்று பொலிஸாருக்கும் விசாரணையில் ஈடுபட்டுள்ளவர்களிற்கும் இலஞ்சம் வழங்குகின்றது என தெரிவிக்கப்படுவதை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ நிராகரித்துள்ளார்.

உண்மைiயை மறைப்பதற்கு எவராவது முயன்றால் அவருக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

தினேஸ் ஸ்காப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன பொலிஸார் மாத்திரம் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உண்மையை மறைப்பதற்காக பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் நாங்கள் விசாரணைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/145635

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டர் விவகாரம் : 14 மரணச் சடங்குகள் குறித்து அவதானம் ! இதுவரையான விசாரணையின் நிலை என்ன ?

By DIGITAL DESK 5

13 JAN, 2023 | 03:41 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், நேரடி சாட்சியம் ஒன்றினை வெளிப்படுத்திக் கொள்வதற்காக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருளப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்   ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த விசாரணைகள் தொடர்கின்றன.

51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார்.  மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர்,  ஜனசக்தி காப்புறுதி  குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார்.

பொரளை பொது மயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்  கடந்த 2022 டிசம்பர் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர்  பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.

இந் நிலையில், குறித்த தினம், பொரளை கனத்தையில் நடந்த அணைத்து மரணச் சடங்குகள் தொடர்பிலும் சி.ஐ.டி.யின் அவதானம் தற்போது திரும்பியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

 அதன்படி குறித்த தினம், பொரளை கனத்தையில் 14 மரணச் சடங்குகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, மேலதிக  விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ கூறினார்.

தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படும் நேரத்தில் அங்கு நடந்த மரணச் சடங்குகளுக்கு வந்த எவரேனும் சந்தேகத்துக்கு இடமான எவரையேனும் பார்த்திருக்கலாம் என்ற ஊகத்திலும், அவ்வாறு கண் கண்ட அல்லது நேரடி சாட்சியம் ஒன்று தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்வது  தற்போதைய இந்த விசாரணையின் நோக்கம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

எவ்வாறாயினும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், எந்த தீர்மானத்துக்கும் இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை என கூறும் பொலிஸ் பேச்சாளர், இதுவரை சுமார் 185 பேரின் வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக கூறினார்.

https://www.virakesari.lk/article/145731

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சயனைட்செலுத்தப்பட்டே தினேஸ் சாப்டர் கொலை-சிஐடி அதிர்ச்சி தகவல்

By Rajeeban

09 Feb, 2023 | 10:03 AM
image

பிரபல வர்த்தகர் தினேஸ்சாப்டர் சயனைட் செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றவேளை இந்த விபரம் வெளியாகியுள்ளது.

சிஐடியினர் மேலதிக நீதவான் ரஜீந்திரஜெயசூரிய முன்னிலையில் இந்த விடயங்களை சமர்;ப்பித்துள்ளனர்.

கழுத்துநெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியவை இல்லை என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

தினேஸ் சாப்டரின் ஐபோன் மற்றும் ஐபாட்டினை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியவேளை பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

தினேஸ்சாப்டர் தனது மனைவிக்கும்   மனைவியின் குடும்பத்தினருக்கும் எழுதிய பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன 

 

 

https://www.virakesari.lk/article/147753

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, கிருபன் said:

சயனைட்செலுத்தப்பட்டே தினேஸ் சாப்டர் கொலை-சிஐடி அதிர்ச்சி தகவல்

By Rajeeban

09 Feb, 2023 | 10:03 AM
image

பிரபல வர்த்தகர் தினேஸ்சாப்டர் சயனைட் செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றவேளை இந்த விபரம் வெளியாகியுள்ளது.

சிஐடியினர் மேலதிக நீதவான் ரஜீந்திரஜெயசூரிய முன்னிலையில் இந்த விடயங்களை சமர்;ப்பித்துள்ளனர்.

கழுத்துநெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியவை இல்லை என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

தினேஸ் சாப்டரின் ஐபோன் மற்றும் ஐபாட்டினை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியவேளை பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

தினேஸ்சாப்டர் தனது மனைவிக்கும்   மனைவியின் குடும்பத்தினருக்கும் எழுதிய பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன 

 

 

https://www.virakesari.lk/article/147753

சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்ட மரணம் என கண்டு பிடிக்க 2 மாதங்கள் எடுத்துள்ளதா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்ட மரணம் என கண்டு பிடிக்க 2 மாதங்கள் எடுத்துள்ளதா?

இவர்களை பெரிய புத்திசாலிகள் என்றா நினைத்துக்கொண்டிருந்தீர்கள்? அவர்களின் விசாரணை போன போக்கை பாக்கத்தெரியவில்லை அவர்களின் திறமை? நாட்டில் கோடீஸ்வரர் கொலை தொடர்ந்து வரும்போலுள்ளதே! முன்பு தமிழர், இப்போ பாகுபாடில்லாத கோடீஸ்வரருக்கு வந்த சோதனைக்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, தமிழ் சிறி said:

சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்ட மரணம் என கண்டு பிடிக்க 2 மாதங்கள் எடுத்துள்ளதா?

மரணம், சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்டிருந்தால் உடனே உண்மை மரண விசாரணையில் வெளிவந்திருக்கும். கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்ப்பட மரணம் என்றே அறிக்கை வெளிவந்தது. சுத்துமாத்து பண்ணி, விசாரணையை திசைதிருப்பி, பேரம்பேசி, வெள்ளையை கறுப்பாக்கி, உண்மை திரிய கால அவகாசம் வேண்டாமோ? பேரம் இரண்டு மாதத்தில் படிந்து விட்டதென்றால் தொகையை கற்பனை பண்ணிப்பாருங்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாஃப்டர் கொலை – காரணத்தை கண்டறிய 5 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழு

 

Dinesh-Shafter.jpg

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் நோக்கி 5 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார்.

அதன்பிறகு, வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://thinakkural.lk/article/240414

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீதிபதிக்கு சம்பளம் கொடுக்க நீதி அமைச்சிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் வழக்கு விசாரணை நூறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது ....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் மரணம்  தொடர்பில்  தீர்மானிக்க ஐவர் கொண்ட விசேட வைத்திய சபை!

Published By: VISHNU

27 FEB, 2023 | 03:22 PM
image

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐவர் கொண்ட விசேட வைத்திய சபையொன்றை கொழும்பு மேலதிக நீதிவான்  ரஜீந்திர ஜயசூரிய இன்று (27) நியமித்தார்.

தடயவியல் மருத்துவத்தில் நிபுணரான பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த ஐவர் கொண்ட விசேட வைத்திய சபையில் இரண்டு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். 

தினேஷ் ஷாப்டரின் மரணம்  தொடர்பான நீதிவான் விசாரணை நீதிமன்றில் மீண்டும் கூடிய போதே இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/149267

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு!

Published By: DIGITAL DESK 5

14 MAR, 2023 | 01:14 PM
image

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (14) உத்தரவிட்டார்.

இந்தச்  சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று நீதிமன்றில் இடம்பெற்றபோதே இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐந்து பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/150484

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாஃப்டரின் காரில் இருந்த இரத்த மாதிரி யாருடையது?

Dinesh-Brian-696x522-1-1.jpg

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஷாஃப்டரின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று (24) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தினேஷ் ஷாஃப்டரின் காரில் காணப்பட்ட பிறிதொரு நபரின் இரத்த மாதிரியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/250574

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாஃப்டரின் உடல் தோண்டி எடுக்கப்படுமா?

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, உயிரிழந்த ஷாஃப்டரின் சடலத்தை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரியுள்ளது. ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க அவரை தோண்டி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக, இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ராஜீந்திர ஜெயசூரிய
அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

இதன்படி, இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதியை நிர்ணயித்துள்ளது.

பெப்ரவரி 17ஆம் திகதி, கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, ஐவரடங்கிய விசேட வைத்திய குழுவொன்றை நியமிப்பதற்காக விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழு பெப்ரவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது.

https://thinakkural.lk/article/254547

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் கோரிக்கையின் பேரில், ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு, தினேஷ் ஷாஃப்டரின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

சடலம் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தினேஷ் ஷாஃப்டர் தனது காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

பின்னர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றிரவே உயிரிழந்துள்ளார்.

https://thinakkural.lk/article/254740

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சடலம் புதைக்கப்பட்ட பொரளை பொது மயானத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்திற்கு அருகில் வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது காரில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1332739

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது !

Published By: DIGITAL DESK 5

25 MAY, 2023 | 11:52 AM
image

மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய  அடக்கம் செய்யப்பட்ட அவரின் பூதவுடலை மீண்டும் தோண்டுவதற்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் வியாழக்கிழமை (25 ) கொழும்பு, பொரளை பொது மயானத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் அவரின் உடல்  தோண்டி எடுக்கப்பட்டது.

IMG_5682.jpg

IMG_5738.jpg

IMG_5752.jpg

IMG_5777.jpg

IMG_5783.jpg

 (படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்)

https://www.virakesari.lk/article/156118

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா புலஸ்தினி இறந்து விடடாள் என்பதை நிரூபிக்கும் வரைக்கும் எத்தனை தடவைகள் DNA பரிசோதனை செய்தார்களோ அதே வண்ணமாகத்தான் இங்கும். அவர்களின் முடிவு தீர்மானிக்கப்பட்ட்து. அது நிரூபிக்கப்படும்  வரைக்கும் இந்த வழக்கு தொடர்ந்துகொண்டே இருக்கும். கொலைக்காரர்களின் தேசத்தில் எதனை எதிர்பார்க்கலாம். இலங்கையில் இருந்து ஏதாவது நன்மை உண்டாகுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Cruso said:

உயர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா புலஸ்தினி இறந்து விடடாள் என்பதை நிரூபிக்கும் வரைக்கும் எத்தனை தடவைகள் DNA பரிசோதனை செய்தார்களோ அதே வண்ணமாகத்தான் இங்கும். அவர்களின் முடிவு தீர்மானிக்கப்பட்ட்து. அது நிரூபிக்கப்படும்  வரைக்கும் இந்த வழக்கு தொடர்ந்துகொண்டே இருக்கும். கொலைக்காரர்களின் தேசத்தில் எதனை எதிர்பார்க்கலாம். இலங்கையில் இருந்து ஏதாவது நன்மை உண்டாகுமோ?

தினேஷ் ஷாஃப்டரின்.. கைகள் கட்டப் பட்ட நிலையில்தான்... 
குற்றுயிராக அவரது வாகனத்தில் இருந்து மீட்கப் பட்டார். 

இப்படி இருக்க... அது, கொலையா... தற்கொலையா என 
இன்னும் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கைகளை... பிளாஸ்ரிக் வயரினால்  கட்டப் படுவதற்கு.. இன்னும் ஒருவரோ, சிலரோ தேவை.
அப்படி இருக்க.. அவர் எப்படி தற்கொலை செய்ய முடியும் என்பதை நீதிமன்றமும் சேர்ந்து,
வழக்கை இழுத்தடிக்கின்றது.    உருப்படாத நாடு.

###############    ################   ###############

 

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல மெண்டிஸின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ம் திகதி வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார்.

இவரின் உயிரிழப்பு கொலையா? அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.

இதேவேளை நேற்று நீதவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின்  சடலம் தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1332806

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாஃப்டரின் தாயாரின் மரபணு கோரப்பட்டுள்ளது

dinesh-1.jpg

தினேஷ் ஷரஃப்டரின் உடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது.

தாயாரின் இரத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.

அவரது தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இரத்த மாதிரிகளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று (26) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

5 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சட்ட வைத்திய சபையின் பரிந்துரையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய வழங்கிய உத்தரவின் பிரகாரம் நேற்று (26) தோண்டி எடுக்கப்பட்டது.

உடலம் தோண்டப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய தலைமையில் அவ்விடத்திலேயே வழக்கு ஒன்றும் இடம்பெற்றதுடன், வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/255605




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.