Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 18 டிசம்பர் 2022
முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி

36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா.

எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள்.

அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது.

ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே உள்ளது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது.

 

உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான்.

2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார்.

முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே.

எமிலியானோ மார்ட்டினெஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எமிலியானோ மார்ட்டினெஸ்

அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது.

எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது.

ஒரேயொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.

எம்பாப்பே ஏழாவது கோலுடன், கோல்டன் பூட் பெறுவதற்கான போட்டியில் முன்னிலைக்கு வந்துள்ளார்.

ஓர் அணி முதல் பாதியில் இருந்த அதே ஆக்ரோஷத்துடன் ஆடுவது சிரமம் தான். ஆனால், அர்ஜென்டினா இந்த முறை அதைச் செய்தது.

அர்ஜென்டினா செய்த சிறு தவறால், எம்பாப்பே பந்தை அவர்களுடைய எல்லைக்குள் கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார்.

 

டி மரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார்.

அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது.

ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார்.

பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார்.

அர்ஜென்டினாவின் முதல் கோல்

23வது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி போட்ட மெஸ்ஸி கோல் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸைவிட முன்னிலை பெற்றது.

இறுதிப்போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே லியோனெல் மெஸ்ஸி, ஹூலியன் ஆல்வாரெஸ், டி மரியா மூவரும் உருவாக்கிய கோல் வாய்ப்பு, அர்ஜென்டினா ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், அவர்களுடைய ஆட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதையும் காட்டியது. அதுமட்டுமின்றி, ஆல்வாரெஸின் பணி தாக்குதல் மட்டுமில்லை, பந்தை அர்ஜென்டினாவின் எல்லைக்குள் செல்லவிடாமல் பிரான்ஸின் பக்கமே தக்கவைக்க வேண்டிய பணியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்தது.

மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் ஐந்து கோல்களை அடித்துள்ளதோடு, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மெஸ்ஸி, ஆல்வாரெஸ் இருவரும், ஒருவித தீவிர தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கோல் முயற்சியில், கிறிஸ்டியன் ரொமேரோவால் எதிரணியின் கோல் கீப்பரும் கேப்டனுமான ஹ்யூகோ லோரிஸ் சற்று தடுமாறினார். முதலுதவிக்குப் பிறகு மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆல்வாரெஸ் செய்த கோல் முயற்சிகளை தியோ ஹெர்னான்டெஸ் தடுத்துக் கொண்டிருந்தார். மொலினாவும் எம்பாப்பே செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் நிழல் போலத் தொடர்ந்தார்.

ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினாவின் வசமே 38 சதவீதத்திற்கும் மேல் பந்து இருந்தது. பிரான்ஸ் மிகக் குறைவாகவே பந்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது.

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே

ஆட்டம் தொடங்கியதிலிருந்து முதல் 20 நிமிடங்களில் எம்பாப்பே தடுப்பாட்டத்திலும் சரி தாக்குதல் ஆட்டத்திலும் சரி அவ்வளவு வீரியமாகக் களமிறங்காமலே இருந்தார். அந்த நேரத்தில் 21வது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்கு டி மரியா மூலமாக பெனால்டி கிடைத்தது. டி மரியா களத்தில் இறங்கியது முதல் இடதுபுறத்திலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் அனைத்தும் இதை நோக்கியே இருந்ததைப் போல் இருந்தது.

டி மரியா ஏற்படுத்திக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை, மெஸ்ஸி தவறவிடாமல் கோலாக்கினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அவர் 6 கோல்களை அடித்துள்ளார். கோல் கீப்பரை வேறுபுறம் திசை திருப்பி, மிகவும் கூலாக தனது மெஸ்ஸி ஸ்பெஷல் ஷாட்டை அடித்தார்.

அந்த நேரத்தில், ஒருவேளை மைதானத்திற்குள் மாரடோனா இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்பது தான் முதலில் தோன்றியது. 2018ஆம் ஆண்டில் அவர் பெனால்டி ஷாட்டை மிஸ் செய்தபோது மாரடோனாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்திருக்கும் இந்த கோலை, மெஸ்ஸியை பொறுத்தவரை அவர் வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

டி மரியா அடித்த 2ஆம் கோல்

அர்ஜென்டினாவுக்கு இரண்டாவது கோல் 36வது நிமிடத்தில் கிடைத்தது. மெஸ்ஸி இடது காலில் அழகாக அடித்த ஒன் டச் பாஸை, மெக் ஆலிஸ்டர் பிரான்சின் எல்லைக்குள் கொண்டு சென்று, டி மரியாவுக்கு பாஸ் செய்தார். டி மரியா அந்த வாய்ப்பை கோலாக்கினார். கோபா அமெரிக்காவின் இறுதிப் போட்டியில் இதேபோல் டி மரியா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முறையும் அதேபோல், அர்ஜென்டினாவுக்காக இறுதிப் போட்டியில் அவரை இறக்கியதற்கு அவர் மிகப்பெரிய ஒன்றைச் சாத்தியமாக்கினார்.

மிகவும் திட்டமிடப்பட்ட கச்சிதமான கோல். ஒரு தோல்வியில் தொடங்கிய அர்ஜென்டினாவின் ஆட்டம், இறுதிப்போட்டியில் டி மரியாவின் இரண்டாவது கோல் வரை வந்து நின்றது.

அர்ஜென்டினாவின் தாக்குதலும் சரி மிட் ஃபீல்டும் சரி மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தது. ஆனால், வழக்கமாக மிகுந்த ஒருங்கிணைப்போடு இருக்கும் பிரான்ஸ் அணியின் திறமையான வெளிப்பாடு எங்கே சென்றது என்பதைப் போல் உள்ளது. டி மரியாவின் ஆட்டம் இன்று அணிக்கு மிகவும் உதவியது.

அர்ஜென்டினா வீரர்களைப் பார்த்தால், இறுதிப்போட்டி என்ற அழுத்தம் இருப்பதைப் போலவே தெரியவில்லை. அந்தளவுக்கு மிகவும் கூலாக விளையாடினார்கள்.

உப்பமெக்கானோ, மெஸ்ஸியை நிழல் போல் தொடர்ந்து அவர் காலுக்கு பந்து கிடைக்காமல் தடுக்கப் பலமுறை முயன்றாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எம்பாப்பே ஒருபுறம் பெரியளவில் தடுக்கப்பட்டார். அர்ஜென்டினா அவரைக் கட்டம் கட்டி தடுத்திருந்தது. பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பெ செய்ய வேண்டியதை, அர்ஜென்டினா அணிக்காக டி மரியா செய்துகொண்டிருந்தார்.

பிரான்ஸ் அணி பந்தைத் தங்கள் வசம் கொண்டு வந்து, கிலியன் எம்பாப்பே கொண்டு செல்லும்போது, அவரிடமிருந்து, மெஸ்ஸி, டிபால், ஃபெர்னாண்டெஸ் மூவரும் மிகச் சாதாரணமாகப் பறித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து எம்பாப்பே ஒரு ஃபௌலும் செய்தார். அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் டி மரியா கொண்டு சென்ற பந்தைப் பெற்று ஆல்வாரெஸ் கோல் வாய்ப்பை உருவாக்கிவிட்டார். முன்னிலையில் தாக்குதல் இடத்தில் மெஸ்ஸி, ஆல்வாரெஸ், டி மடியா மூவரையும் நிலைநிறுத்தியது, மிகச் சரியான முடிவாகவே தெரிந்தது.

இந்த இரு அணிகளுமே இதற்கு முன்பு தலா இரண்டு முறை ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றுள்ளன. அர்ஜென்டினா கடைசியாக 1986இல் உலகக்கோப்பையை வென்றது. அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கும் லியோனல் மெஸ்ஸி 1987இல் பிறந்தவர். 35 வயதுள்ள அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டி. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

fifa worldcup final
 
படக்குறிப்பு,

அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் கத்தார் உலகக்கோப்பை 2022ல் கடந்துவந்த பாதை

இறுதிப்போட்டிக்கு முன்னர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கத்தாரில் நடக்கும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களிலேயே மிகவும் அதிகமான பொருட்செலவில் நடத்தப்படும் தொடர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. பிரான்ஸ் 2006, 1998, 2018 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடியுள்ளது. இதில் 1998 மற்றும் 2018இல் வென்றுள்ளது.

இதுவரை இரு அணிகள் மட்டுமே அடுத்தடுத்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளன. 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதற்கு முன் 1934 மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை இத்தாலி வென்றது. இம்முறை பிரான்ஸ் வென்றால் இந்த சாதனையைச் செய்த மூன்றாம் அணி என்ற பெருமையை பெற்றிருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c0drerg3p4yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 மணி நேரங்களுக்கு முன்னர்

நீங்கள் அர்ஜென்டினா கால்பந்து அணிக்கும் மெஸ்ஸிக்கும் ரசிகராக இருந்தால் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின்போது உங்கள் இதயத்துடிப்பு ரோலர் கோஸ்டரில் பயணிப்பதைப் போன்று இருந்திருக்கும்.

சென்னை ராயபுரத்தில் அகலத் திரையில் பெருங்கூட்டத்துக்கு மத்தியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெஸ்ஸி ரசிகர், தாம் போட்டியின் இரண்டாம் பாதியில் விக்கித்து அழுது கொண்டிருந்ததாகச் சொன்னார். 

கத்தாரின் லூசாய்ல் மைதானத்தில் இருந்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அர்ஜென்டினா ரசிகர்கள் மாத்திரமல்ல, பிரான்ஸின் அதிபரே மைதானத்தில் சிறுபிள்ளையைப் போலக் குதிப்பதும் பின்னர் சோகத்தில் கலங்குவதுமாக இருப்பதைத் தொலைக்காட்சித் திரையில் காண முடிந்தது.

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்தார் எம்பாப்பே

அர்ஜென்டினாவின் 3 வெற்றிகளும் 2 தோல்விகளும்

அர்ஜென்டினா இந்தப் போட்டியில் மூன்று முறை வெற்றி பெற வேண்டியிருந்தது என்றே சொல்லலாம். போட்டியின் பாதியில் இனி தோல்விக்கு வழியில்லை என்றே அர்ஜென்டினா ரசிகர்கள் வந்திருப்பார்கள். 

 

ஆனால் இரண்டே நிமிடத்தில் எம்பாப்பே அந்தக் கனவைச் சிதைத்துவிட்டார். அடுத்தாக கூடுதல் நேரம் முடிய சில நிமிடங்களே இருந்தபோது மெஸ்ஸி கோல் அடித்ததும் கோப்பை கைக்கு வந்துவிட்டதாகவே அர்ஜென்டினா ரசிகர்கள் கருதியிருப்பார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி மூலம் கோல் அடித்த அதே எம்ப்பாப்பே மீண்டும் அர்ஜென்டினாவை தோல்வியை நோக்கித் தள்ளிச் சென்றார். 

கடைசியாக பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. இந்த முறை அர்ஜென்டினாவுக்கு நல்வாய்ப்பாக, எம்பாப்வே போன்று வேறு யாரும் கனவைக் கலைக்க வரவில்லை. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பையை கைகளில் ஏந்தும் வாய்ப்பு அர்ஜென்டினாவுக்குக் கிடைத்தது.

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

120 நிமிட ரோலர் கோஸ்டர் பயணம் எப்படி இருந்தது?

ஆட்ட நேரம் முடிந்து, கூடுதல் நேரமும் முடிந்த பிறகு, இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா.

எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள்.

அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது.

 

ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே இருந்தது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது.

உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான்.

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார்.

முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே.

அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது.

எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது.

மற்றொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். இரண்டே நிமிடங்களில் ஒட்டுமொத்த போட்டியின் நிலைமையை மாறிப்போனது. பிரான்ஸின் வசம் போட்டி வந்தது.

அத்தோடு நில்லாது கூடுதல் நேரத்தில் 1 கோல், பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோல் என ஆச்சரியப்படுத்தினார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் மூலம் கோல்டன் பூட் விருதையும் தட்டிச் சென்றார். பிரான்ஸ் தோல்வியைத் தழுவியிருந்தாலும் எம்பாப்வேவின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் எம்பாப்பே அர்ஜென்டினாவின் கோல் எல்லைக்கு அருகே கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார். அதையும் கோலாக்கி இருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

எம்பாப்பே

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி மரியாவின் அற்புத ஆட்டம்

அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது.

ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார்.

பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4nk1505d6vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம்

எம்பாப்பே

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி நாற்பது நிமிடங்களை ஆக்கிரமித்திருந்தவர் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே.

 

ஒரே பக்கமாகச் சென்று கொண்டிருந்த போட்டியை இழுத்துப் பிடித்து பிரான்ஸின் பக்கம் கொண்டுவந்தவர் அவர். போட்டியை மாற்றுவதற்கு அவருக்கு இரண்டே நிமிடங்கள்தான் தேவைப்பட்டன.

80-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் ஒரு கோலும், 81-ஆவது நிமிடத்தில் மற்றொரு மின்னல் வேக கோலும் அடித்து பிரான்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்தார்.

 

 

அந்த இரு நிமிடங்களில் 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி, அர்ஜென்டினா அணி ரசிகர்களின் மனங்களில் நினைவுக்கு வந்திருக்கும். அந்தத் தொடரின் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸும் அர்ஜென்டினாவும் மோதின.

19 வயது வீரராகக் களமிறங்கினார் எம்பாப்வே.  ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தபோது, அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றியைத் தேடித் தந்தார் எம்ப்பாப்வே.

 

கத்தார் இறுதிப் போட்டியிலும் எம்பாப்பேவை பொறுத்தவரை, இரண்டாவது பாதி ஆட்டம் அப்படித்தான் இருந்தது.  கடைசி நொடி வரை எம்பாப்வே பிரான்ஸுக்கு வெற்றியைத் தேடித் தருவதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

பிரான்ஸ் வீரர்களின் விட்டுவிடாத மன உறுதியையும் எம்பாப்பேயின் ஹாட்ரிக் கோல்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

மின்னல் வேகக் கோல்

80-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்த எம்பாப்பேக்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு வாய்ப்புக் கிடைத்தது. இந்த முறை எதிர்பாராத வகையில் மெஸ்ஸியிடம் இருந்து பந்தைப் பறித்து பிரான்ஸ் வீரர்கள் அதை கோலை நோக்கிக் கொண்டு வந்தார்கள். 

பெனால்ட்டி பாக்ஸுக்கு சற்று உள்ளேயிருந்து மிகத் துல்லியமாகவும் அதி வேகமாகவும் கோலுக்குள் அடித்தார் எம்பாப்பே. ஓடியபடியே சாய்ந்த நிலையிலும் அவரது தாக்குதல் மிகவும் வலிமையாக இருந்தது.

சுமார் 90 நொடிகள் இடைவெளியில் அவர் அடித்த இரண்டு கோல்களும்தான் பிரான்ஸ் அணி போட்டியில் புத்துயிர் பெறக் காரணமாக அமைந்தன. போட்டியை பெனால்ட்டி ஷூட் அவுட் வரைக்கும் அவர்தான் எடுத்துச் சென்றார். 

எம்பாப்பேயின் சாதனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எம்பாப்பேயின் சாதனைகள்

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4. 

 

அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது.

 

போட்டி தொடங்கியபோது மெஸ்ஸியும், எம்பாப்பேயும் இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்த சமநிலையில் இருந்தார்கள். மெஸ்ஸி முதல் கோலை பெனால்ட்டி முறையில் அடித்து தங்கக் காலணிக்கான போட்டியில் முந்தினார். ஆனால் 80 மற்றும் 81-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து தனது எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார்.

 

போட்டி அப்போதும் முடியவில்லை கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்து மீண்டும் இருவருக்குமான போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். அப்போது தங்கக் காலணி மெஸ்ஸிக்கே கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மற்றொரு கோலை அடித்து மெஸ்ஸியை முந்தினார். இப்போது தங்கக் காலணி விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.

 

எம்பாப்பேயின் சாதனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

23 வயதில் ஜாம்பவான்களை முந்தியவர்

23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார். 

 

இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13. 

https://www.bbc.com/tamil/articles/cl4g0zd425eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜென்டினாவின் அதிசய வெற்றிக்குக் காரணமான கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ்

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையே நடந்த நம்பமுடியாத உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய அனைத்து விவாதங்களும் லியோனெல் மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பேவுக்கு இடையிலான போட்டியாக இருக்குமென்றே கூறப்பட்டது. அது ஒருவகையில் உண்மைதான் என்றாலும், நேற்றைய போட்டிக்குப் பிறகு, அர்ஜென்டினா அணியிலிருந்த மற்றொருவரின் பெயரும் பேசுபொருளானது.

120 நிமிடங்களில், 3-3 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது. அதைத் தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றியடைந்தது.

திருப்புமுனை, கண்ணீர், உணர்ச்சிமிகுதி ஆகியவை நிரம்பிய இந்தப் போட்டியில், அர்ஜென்டினாவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தார், கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ். அவருக்கு 'கோல்டன் கிளவுஸ்' விருது கிடைத்துள்ளது.

அர்ஜென்டினாவின் வீரர்கள் தங்கள் நான்கு முயற்சிகளையும் நிதானமாக கோலாக்கினார்கள். அவர்கள் தங்களுடைய பணியைக் கச்சிதமாகச் செய்திருந்தாலும், மார்ட்டிஎன்ஸ் பிரெஞ்சு ரசிகர்களின் இதயங்களை உடைத்துவிட்டார்.

 

அவ்வளவுக்கும் அதை அவர் கூலாக செய்தார் என்பதுதான் சுவாரஸ்யமானது. இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டின்போது, அவர்மீது தான் அதிக அழுத்தம் இருந்தது. சொல்லப் போனால், அவர் கைகளில் தான் அர்ஜென்டினாவுக்கு வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கும் தருணமே இருந்தது.

ஆனால், அவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதிரணி வீரர்கள் ஒவ்வொரு முறை பெனால்டி ஷாட் அடிக்க வந்தபோதும் அவர் ஆடிய ஆட்டம் பிரான்ஸை அச்சுறுத்தியது. எம்பாப்பே போட்டியின் நடுவிலேயே மார்ட்டினெஸுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்திருந்தார். ஆகவே கடைசியிலும் ஷூட் அவுட்டை தொடக்கி வைத்த எம்பாப்பே, அதை கோலாக்கியதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

வெற்றிக் கனியை நெருங்க உதவிய மார்ட்டினெஸ்

அந்த கோலையும் கூட கைக்கு எட்டும் தூரத்தில், மார்ட்டினெஸின் தடுப்பு முயற்சியின்போது அவர் கைகளில் பட்டு உள்ளே சென்றது. அவர் எடுத்த அந்த முயற்சியே பிரான்ஸ் அணியினரைக் கலங்க வைத்திருக்க வேண்டும். எம்பாப்பே கோல் அடித்திருந்தாலும், அதைத் தடுக்க அவர் எடுத்த முயற்சியிலேயே போட்டியின் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து அடுத்ததாக கிங்ஸ்லி கோமன், ஷாட் அடிக்க வந்தபோது, அவருடைய அமைதியை மார்ட்டினெஸின் கூலான ஆட்டமும் அமைதியான அணுகுமுறையும் குலைத்தன.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரேலியன் சூயிமென்னி, அடுத்ததாக அவருடைய கோல் வாய்ப்பை எடுக்கச் சென்றபோது, அதையும் தவிடுபொடியாக்கினார் அர்ஜென்டினாவின் அந்த உயரமான கோல் கீப்பர். இந்த இடத்தில், மார்ட்டினெஸின் உடல் அமைப்பும் அவருக்கு நன்றாகவே உதவியது. அவரால் கோல் போஸ்டுக்குள் நன்கு இடதும் புறமும் வேகமாக நகர்ந்து, பெரிதாகத் தன்னை அலட்டிக் கொள்ளாமல் செயல்பட முடிந்தது.

மார்ட்டினெஸ் பெனால்டி ஷூட் அவுட் கோல்களை தடுக்கும்போது, ஒரு நடனம் ஆடுவார். அந்த நடனம் ரசிகர்களுக்கு வெற்றிக் களிப்பைக் கொடுக்கும் அதேநேரத்தில், எதிரணிக்கு கலக்கத்தையும் கொடுக்கக்கூடியது. ஏனெனில், அந்த நடனத்தில், “யாராக இருந்தாலும் நான் எதிர்கொள்வேன்” என்ற நம்பிக்கை பிரதிபலிக்கும்.

கோமன், சூயிமென்னி ஆகியோரின் கோல்களை அவர் தடுத்தது, அதுவரை சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டு போல் இருந்த அர்ஜென்டினாவின் வெற்றியை, உண்மையாகவே மிக அருகில் கொண்டு சென்றது.

அவர்களைத் தொடர்ந்து கோலோ முவானி அடுத்த பெனால்டியை கோல் அடித்திருந்தாலும்கூட, அதற்கு அடுத்ததாக அர்ஜென்டினா தரப்பில் கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டி கோலின் மூலம் அவர்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்தார்கள்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரவணைத்த மெஸ்ஸி

இங்கிலாந்தின் முன்னாள் மிட்ஃபீல்டர் ஜெர்மைன் ஜெனாஸ், “பிரான்ஸ் ஷூட் அவுட்டில் ஷாட் அடிக்க முயன்ற போதெல்லாம், அவர்களுடைய முயற்சியின்மீது மார்ட்டினெஸ் உளரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

“எமிலியானோ மார்ட்டினெஸ், மிகவும் நேர்மறையான நபர். அவர் தமது அணியிடம் சில பெனால்டிகளை தடுக்கப் போவதாகக் கூறியிருந்தார்” என்று கூறினார் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி.

இந்த இடத்தில் நெதர்லாந்துக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டை நினைவுகூறியாக வேண்டியது அவசியம். அன்றிரவு, காலிறுதிப் போட்டியில் ஷூட் அவுட் வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த லௌடாரோ மார்ட்டினெஸ் கடைசியாக வெற்றிக்கான கோலை அடித்தார்.

அப்போது அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக லௌடாரோவை நோக்கி ஓடினார்கள். ஆனால், மெஸ்ஸி மட்டும் வலது பக்கமாக, கோல் போஸ்டை நோக்கி ஓடினார். அங்கு, லுசைல் மைதானத்தின் ஒரு முனையில், டை-பிரேக்கரில் நெதர்லாந்தின் இரண்டு கோல்களை, இடதும் வலதுமாகப் பறந்து பறந்து தடுத்த கோல் கீப்பர் மார்ட்டினெஸ் அங்கு தரையில் கிடந்தார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெஸ்ஸி ஓடிச் சென்று அவரைத் தூக்கி அரவணைத்து, தனது பாராட்டுகளையும் பாசத்தையும் பகிர்ந்துகொண்டார். அவருடைய பெயர் அன்றே எதிரணிகளின் காதுகளுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இது மெஸ்ஸியின் கனவு. மார்ட்டினெஸின் கனவு. மார்ட்டினெஸை பொறுத்தவரை, இறுதிப்போட்டிக்கான இந்த ஓட்டம் மிகவும் எதார்த்தமானது.

ரஷ்யாவில் நடந்த கடைசி தொடரில், பிரான்ஸ் அர்ஜென்டினாவை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நாக் அவுட் செய்து வெளியேற்றியது. அப்போதே மார்ட்டினெஸ் தனது சகோதரரிடம் 2022 உலகக் கோப்பையில் நான் இதற்கு பதிலடி கொடுப்பேன் என்று உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார்.

நேற்று 'கோல்டன் கிளவுஸ்' விருது பெற்றவுடன் அதை வைத்து எமிலியானோ மார்ட்டினெஸ் காட்டிய சைகையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அது மரியாதைக்குறைவான செயல் என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்துள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

யார் இந்த எமிலியானோ மார்ட்டினெஸ்

2010ஆம் ஆண்டில், மார்ர்டினெஸுக்கு ஆர்சனலில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது, அவருடைய குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு இருந்தது. அப்போது தொடங்கி அவருடைய வாழ்வில் பல தடைகளைத் தகர்த்து அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

எமிலியானோ மார்ட்டினெஸ், ஜூன் 2021இல் தான் முதன்முதலாக அர்ஜென்டினாவுக்காக விளையாடினார். முந்தைய இரண்டு சீசன்களில் ஆர்சனல், ஆஸ்டன் வில்லா ஆகிய கிளப்புகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த கோபா அமெரிக்கா தொடரிலும் அர்ஜென்டினாவின் வெற்றியில் அவருக்குப் பெரும் பங்குண்டு.

2020ஆம் ஆண்டில், எமிரேட்ஸின் எஃப்.ஏ கோப்பையை ஆர்சனல் அணி வென்றபோது, அவர் கோல் கீப்பராக அணிக்கு அளித்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.

17 வயது இளைஞராக கிளப்பில் சேர்ந்து, அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021-22 சீசன் தொடங்கவிருந்த நேரத்தில் அவர் ஆஸ்டன் வில்லா அணிக்குச் சென்றார். அங்கு அவர் தனது இடத்திற்காக யாருடனும் சண்டையிடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல வகைகளில் தனது திறமையைக் காட்டியவர், அங்கு மிக முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.

ஷூட் அவுட்களில் அவர் மிகவும் திறமையாக இருக்க ஒரு காரணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் தொடர்ந்து பெனால்டி ஷாட் அடிக்க வைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, பல ஷாட்களை எதிர்கொள்வார்.

மேலும் 2021 கோபா அமெரிக்கா அவரை ஒரு ஹீரோவாக மாற்றியது. கொலம்பியாவுக்கு எதிரான அரையிறுதி ஷூட் அவுட்டில் மூன்று முறை கோல் முயற்சியைத் தடுத்து, அணியைக் காப்பாற்றினார். அவருடைய நுணுக்கங்கள் இந்த முறையும் அர்ஜென்டினா அணிக்குப் பேருதவி புரிந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c84pz5jq5yzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பையை உச்சி முகர்ந்த மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும் பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள்.

முஷ்டிகளை மடக்கி, கை முட்டிகளை உந்தி, அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் காற்றில் பறந்தனர். இறுதியாக அனைத்தும் முடிந்தது. வெற்றி கிடைத்தது. உலகக்கோப்பையைச் சுமக்கும் பாக்கியம் அர்ஜென்டினாவுக்குக் கிடைத்துவிட்டது.

இறுதிப்போட்டி, இரு அணிகளுக்கும் இடையிலானது, எனச் சொல்வதைவிட, மெஸ்ஸிக்கும் எம்பாப்பேவுக்கும் இடையிலானது என விவரிப்பது சரியாக இருக்கும். ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் இருந்த நிலையில், ஒரு பெனால்டி ஷாட் மூலம் கோல் அடித்து, அணியினருக்கு உயிர் கொடுத்தார் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே.

பிரான்சுக்கு 19 வயதில் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்த, 23 வயதான அந்த வீரர் அதோடு நிறுத்திவிடவில்லை. அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றுமொரு கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

 
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

75வது நிமிடம் வரை வீறுகொண்டு தாக்கிக் கொண்டிருந்த அர்ஜென்டினா, அதற்குப் பிறகு கொஞ்சம் சாவகாசமாக விளையாடத் தொடங்கியது. ஆனால், கடைசி பத்து நிமிடங்கள் வரையல்ல, கடைசி நொடி வரை தனக்கு எதிராகப் போராடியாக வேண்டும் என்று எம்பாப்பே, அந்த இரண்டு கோல்களின் மூலம் எதிரணிக்கு உணர்த்தினார்.

அவருடைய அனைத்து ஆட்டத்தில் கொஞ்சம் திணறிய எதிரணி, மீண்டும் தங்களுடைய தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கி, போராடி வெற்றியைப் பெற்றது.

1986ஆம் ஆண்டு கோப்பையை மாரடோனா வென்றுகொடுத்தபோது, அவர் கோப்பையைச் சுமந்தார். அணியின் வீரர்களும் ரசிகர்களும் அவரைச் சுமந்தார்கள்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, அதேபோல் மெஸ்ஸி அணிக்கு வெற்றியைப் பரிசளித்து கோப்பையைச் சுமந்தார். அணி வீரர்களும் ரசிகர்களும் அவரைச் சுமந்தார்கள். வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தாரில் நடந்த உலகக்கோப்பையின் வியத்தகு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து, தங்களது 36 ஆண்டுக்கால கனவை அவர்கள் சாத்தியமாக்கியுள்ளார்கள். கடைசியாக மெக்சிகோவில் மாரடோனா கோப்பையைச் சுமந்தபோது ருசித்த மகிழ்ச்சியை, இப்போது மீண்டும் ருசிக்கிறார்கள்.

பெனால்டி ஷூட் அவுட் வரை சென்ற இந்த ஆட்டத்தில், இறுதியாக கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டியில் பந்து கோல் போஸ்டுக்குள் போனபோது, அங்கிருந்த ஒருவராலும் நிலைகொள்ள முடியவில்லை. அளவில்லா மகிழ்ச்சி அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

லுசைல் மைதான அரங்கில், முழுவதும் வெள்ளையும் நீலமும் ஆட்கொண்டிருந்தது. அனைவர் மனதிலும் ஓர் ஆறுதல். மகிழ்ச்சி வெடிப்பில் கத்திக் கொண்டிருந்தனர். 120 நிமிடங்களுக்கு நடந்த இறுதிப்போட்டியில், அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது என நினைத்த போதெல்லாம், இல்லை நாங்கள் விட்டுவிட மாட்டோம் என்று, எம்பாப்பே சவால் விட்டுக் கொண்டேயிருந்தார்.

இறுதியில் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டாக சென்றது. நிகோலஸ் ஒட்டமெண்டி, கொன்சாலோ மோன்டியெல் இருவரும் இரண்டு தருணங்களில் செய்த சிறுபிழை, பிரான்ஸ் அணிக்குச் சாதகமாகவே, ஆட்டம் மிகவும் சூடு பிடித்தது.

போட்டியின் 80வது நிமிடம் வரை பிரான்ஸ் அணியை ஆட விடவே இல்லை அர்ஜென்டினா.

ஆனால், ஒட்டமெண்டியின் பிழையால் கிடைத்த பெனால்டியை எம்பாப்பே கோலாக்கியதும் பிரான்ஸ் அணிக்குக் கிடைத்த வீரியம் கொஞ்ச நஞ்சமல்ல.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முதல் பாதியில் ஏஞ்சல் டி மரியா வெளிப்படுத்திய ஆட்டம், அவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போல் இருந்தது.

பிறகு, அடுத்தடுத்து அவர்கள் களமிறக்கிய வீரர்களான கோமன், கிங்ஸ்லி கோமன், இப்ராஹிம் கொனாடே, எட்வர்டோ காமவிங்கா ஆகியோர், ஆட்டத்தின் பாதையையே மாற்றிவிட்டார்கள்.

மார்கஸ் துரம், யெல்லோ கார்ட் வாங்கினாலும் சரி என்ற நிலையில் இறங்கி ஆடினார். ஆனால், அர்ஜென்டினா அணி முதன்முதலாக மாற்றாக களமிறக்கிய மார்கோஸ் அகுனா, கொஞ்சமும் சளைக்காமல் பிரான்ஸ் அணியின் பலவீனமான இடது பக்கத்திலிருந்து தாக்குதலைத் தொடர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து, மெஸ்ஸி, டி பால், ஆல்வாரெஸ் ஆகியோர் கொஞ்சம் விடாது வாய்ப்பை மூர்க்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் பாதியில் டி மரியாவின் பங்களிப்பைச் சொல்லியே ஆக வேண்டும். களத்தில் சற்று இடைவெளி விழுந்திருந்த அவரை ஸ்கலோனி ஏன் இறுதிப்போட்டியில் இறக்கினார் என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுந்தது.

ஆனால், “அவரை இதற்காகத்தான் நான் ஒளித்து வைத்திருந்தேன்” என்னும் அளவுக்கு இருந்தது டி மரியாவின் அதிரடி. ஆம், அர்ஜென்டினா அணியின் இறுதிக்கோப்பைக்கான துருப்புச்சீட்டாக திகழ்ந்தார் டி மரியா.

பெனால்டி மூலம் முதல் கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, சாகசம் நிரம்பிய இரண்டாவது கோலை தானே அடித்துவிட்டு அவர் மைதானத்தில் துள்ளிக் குதித்தபோது, அவரால் அழாமல் இருக்க முடியவில்லை.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

120 நிமிடங்களுக்கு நடந்த அந்தப் போரில் வெற்றியைச் சுவைத்து, அணியின் கேப்டன் லியோனெல் மெஸ்ஸி கோப்பையை உயர்த்திய சிறிது நேரத்திலேயே அரங்கம் முழுவதும் ஆனந்தக் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

நான்கு வாரங்கள், 64 போட்டிகள், 172 கோல்களுக்கு பிறகு கத்தார் உலகக்கோப்பை போட்டி சாகசங்களையும் திருப்புமுனைகளையும் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் ஒருங்கே அளித்து முடிவுக்கு வந்துள்ளது.

பிரான்ஸ் அணியின் முதல் 60 நிமிடங்கள் சற்று தடுமாற்றங்களுடன் தான் இருந்தது. முதல் 70 நிமிடங்கள் வரையிலுமே, அங்கு ஆடிக்கொண்டிருப்பது பிரான்ஸ் அணி தானா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அவர்களுடைய செயல்பாடு இருந்தது.

அது அவர்களுடைய தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் எனக் கூறலாம். “நாங்கள் முதல் 60 நிமிடங்களில் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. அளவுக்கு அதிகமான ஆற்றலோடு இருந்த எதிரணிக்கு ஈடுகொடுக்கவில்லை.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிலியன் எம்பாப்பே என்ற தனியொரு வீரன் அர்ஜென்டினாவுக்கு சவாலாக இருந்தார்.

ஆனால், நாங்கள் மீண்டு வந்தோம். ஆட்டத்தை மிகவும் கடினமான சூழலுக்குத் திசை திருப்பினோம். இந்தப் போட்டி, நிறைய உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைந்தது. இறுதியில் மிகவும் கடுமையாகத் தோற்றுவிட்டோம்,” எனக் கூறியுள்ளார் பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியெர் டெஸ்ஷாம்ப்ஸ்.

அவர் கூறியதைப் போலவே, 80, 81வது நிமிடங்களில் இரண்டாம் பாதியில் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில், வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய வகையில் இந்த இறுதிப்போட்டியை மாற்றிய தருணம் அது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடும் கால்பந்து ரசிகர்கள்

இரண்டாவது கூடுதல் நேரத்தின் இறுதியில் எம்பாப்பே உருவாக்கிய கோல் வாய்ப்பு மூலம், அங்கேயே ஆட்டம் முடிந்திருக்க வேண்டியது. கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் அதைத் தடுத்து காப்பாற்றினார். அங்கு மட்டுமின்றி, அவருடைய செயல்பாடு பெனால்டி ஷூட் அவுட்டிலும் அபாரமாக இருந்தது.

அர்ஜென்டினா விடவில்லை. இறுதிவரை அவர்களுடைய அனைத்து திறனையும் செலுத்தினார்கள்.

இந்த வெற்றி அவர்களுடைய 36 ஆண்டுக்கால கனவு, அதைத் தவறவிட மாட்டோம் என்ற உறுதியை, அணியிலிருந்த ஒவ்வொருவரின் ஆட்டமும் காட்டியது. அதற்கான பரிசுதான் இந்தக் கோப்பை.

https://www.bbc.com/tamil/articles/c4ne1qz8n1qo

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில அருமையான இறுதிப்போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படியான  ஒரு உலககோப்பை போட்டியை பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Penalty Shootout Argentina vs. France 2022 FIFA World Cup Final in Qatar EXCLUSIVE VIEW

 

Argentine VS France Final Penalties Worldcup 2022

 

FIFA World Cup 2022 Qatar 🏆 trophy ceremony 💘🇦🇷🇨🇵

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டத்தின் முதல் பாதியிலிருந்தே ஆர்ஜென்ரினாதான் உலக கிண்ணத்தை தூக்கப்போகின்றது என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்......
யாருமே எதிர்பாக்காத ஆட்டம் முடிய 11 நிமிடங்களே இருந்த அந்த 79வது நிமிடம் உலக கால்பந்தை ரசிகர்களுக்கு ஒரு மறக்கவே இயலாத ஒரு அனுபவத்தையும், வரலாற்றின் நினைவுகளில் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படும் போட்டியாக மாறப்போகிறது என எவருமே, ஏன் பிரான்சின் பயிற்சியாளருமே கூட அறியவில்லை. 
மெர்சி கூட தோல்வியின் விளிம்பிற்கே சென்றிருப்பார். அந்தளவிற்கு போட்டியின் நிலைமைகள் கடைசி நிமிடங்களில் தலைகீழாக மாறி விட்டிருந்தது. பிரான்ஸ் வீரர் கிலியன் போட்டியின் கதாநாயனாக மாற்றப்பட்டார். போட்டியில் பிரான்ஸ் தான் வெற்றியீட்டும் என பலர் மாற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அந்தளவிற்கு விளையாட்டு நிலவரம் மாறியிருந்தது.
எனினும் சூதாட்டம் போலவே விளையாட்டு முடிவுகளும் அமைந்து இருந்தது.

ஆர்ஜென்ரினா வெற்றியடைய வேண்டியவர்கள் தான். நாட்டு பொருளாதார நெருக்கடியிலும் மக்கள்  இந்த வெற்றியை கொண்டாடிய மகிழ்சியை பார்க்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல்  தன் வாழ்நாளை உதைபந்தாட்டத்திற்காக அர்ப்பணித்து ஓய்வு நிலைக்கு வரும் மெர்சி உலக விருதை தூக்குவதற்கும் உரித்துடையவர் தான். வாழ்த்துக்கள் ஆர்ஜென்ரினா.


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு எவ்வளவு பரிசு?

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் அர்ஜென்டினா வீரர்கள்.

4 மணி நேரங்களுக்கு முன்னர்

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.

கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இறுதிப்போட்டியில் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸ் அணியை வென்று கோப்பையைத் தனதாக்கியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.

உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்களும் மெஸ்ஸி ரசிகர்களும் இந்த வெற்றியைச் சிலாகித்துக் கொண்டாடி வருகின்றனர்.

சுமார் ஒருமாத காலம் நடந்து நேற்று முடிவுக்கு வந்துள்ள இந்த விளையாட்டு திருவிழாவானது மக்களுக்கான பொழுதுபோக்கு என்பதைக் கடந்து கோடிகளில் பணம் புரளும் ஒரு வணிகமும் ஆகும்.

 

பல நூறு கோடிகள் வணிகத்தைக் கொண்ட இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு அவர்கள் பெறும் இடத்தை பொறுத்து பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் கணிசமாக உயர்த்தப்பட்டுவரும் இந்த பரிசுத்தொகையானது இவ்வருடம் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் அலுவல்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை பிபிசி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது.

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உலகக்கோப்பையை மெஸ்ஸி கைகளில் ஏந்திய தருணம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 358 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த பரிசுத்தொகை 2018ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் 400 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இந்த தொகையுடன் மேலும் 40 மில்லியன் டாலரைச் சேர்த்து இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை பரிசாக வழங்கியுள்ளது ஃபிஃபா. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3,640 கோடி ரூபாய் ஆகும். இந்த மொத்த பரிசுத்தொகையில், கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு சுமார் 347 கோடி ரூபாய் (42 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் அணிக்கு சுமார் 248 கோடி ரூபாய் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும், இத்தொடரில் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் முறையே 27 மில்லியன் மற்றும் 25 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறுகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவை மட்டுமல்லாமல், ஐந்து முதல் எட்டாம் இடம் வரை பிடித்த ஒவ்வொரு அணிக்கும் தலா 17 மில்லியன் அமெரிக்க டாலரும், ஒன்பதாவது முதல் பதினாறாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா 13 மில்லியன் அமெரிக்க டாலரும் வழங்கப்படும்.

பதினேழாவது இடம் முதல் முப்பத்திரண்டாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி ரூபாய்) வழங்கப்படுகின்றன. கூடுதலாக, ஒவ்வொரு தகுதி பெற்ற அணியும் போட்டிக்கு முன்னதாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலரை தயாரிப்பு செலவுகளுக்காகப் பெறுகின்றன. கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை நான்கு மில்லியன் டாலராக இருந்தது. 28 ஆண்டுகள் இடைவெளியில் இது 42 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, கோப்பையை வென்ற அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. இப்பரிசுத் தொகை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முறையே 38 மில்லியன் டாலர் மற்றும் 28 மில்லியன் டாலராக உயர்ந்தது.

ஆடவருக்கான கால்பந்து உலகக் கோப்பை பரிசுத்தொகை ஒருபுறம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருந்தாலும், மகளிர் கால்பந்துக்கான பரிசுத்தொகையிலோ வணிகத்திலோ இதே அளவு வளர்ச்சி இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே. 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற உள்ள மகளிர் கால்பந்து உலகக் கோப்பையில் மொத்தம் 60 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது. 2022 கத்தார் உலகக்கோப்பையில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட இது சுமார் ஏழு மடங்கு குறைவு. 2019ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் மொத்த பரிசுத்தொகை 30 மில்லியன் டாலர் மட்டுமே இருந்த நிலையில், 2023 உலகக்கோப்பையில் இது 60 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c9e1zl95dk8o

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person
 
~~~எம்பாப்பே எனும் எரிமலை~~~
 
மெஸ்ஸி,நெய்மர்,ரொனால்டோ,மோட்ரிச் போன்ற சமகால ஜாம்பவான்களுக்கு மத்தியில் கால்பந்து உலகம் உரக்க உச்சரிக்கும் ஒரு பெயர் கிலியன் எம்பாப்பே.பிரான்ஸ் நட்சத்திர வீரராக கடந்த 4 வருடங்களில் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறார் எம்பாப்பே.23 வயதே ஆன ஒரு இளைஞன் எதிரணி வீரர்களிடமிருந்து பந்தை லாவகமாக தட்டிச் சென்று கோல் வலைக்குள் தள்ளுவதில் கில்லாடி இவர்.💫
 
ஆட்டம் முடிய பத்தோ,பதினைந்தோ நிமிடங்கள்.எல்லாம் முடிந்து விட்டது விட்டது என நினைத்த நேரத்தில் சில நிமிட இடைவெளியில்பேக் டூ பேக் கோல் அடித்து உலககோப்பை இறுதி போட்டியில்
அர்ஜெண்டினாவிற்கு மிகவும்நெருக்கடி கொடுத்தவர் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே.ஒரு ஆபத்துபாந்தவனாக அணியை 2-2 சமநிலைக்கு கொண்டு வந்து இறுதிப்போட்டிக்கான விறுவிறுப்பை கூட்டினார்  எம்பாப்பே.💥
 
'பிரான்ஸ் நிச்சயம் கோப்பையை வெல்லும் 'என்ற பிரான்ஸ் ரசிகர்களின் நம்பிக்கைக்கு பின்னால் எம்பாப்பே இருந்தார்.அவரது துறுதுறுப்பான ஆட்டமும்,கோல் கம்பத்தை நோக்கி விறு,விறுவென முன்னேறி கோலாக்குவதுமான அவரது ஆட்ட நுணுக்கங்கள் சுவாரஸ்யமானது.50
வருடங்களுக்கு பிறகு அழுத்தம் நிறைந்த ஒரு இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து இருக்கிறார்.💖
 
கத்தார் உலககோப்பையை பிரான்ஸ் வெல்ல முடியாமல் போனாலும்,இந்த தொடர் முழுவதுமான எம்பாப்பே ஆட்டம் அதிசயிக்கத்தக்கது.எத்தனை வீரர்கள் சுற்றி நின்றாலும் அத்தனை பேரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு எம்பாப்பே கால்கள் பந்தை கடத்தி முன்னேறும்.அதற்கு திறமையும்,விடா முயற்சியும் தேவை அது எம்பாப்பேவிடம் அதிகம் இருக்கிறது. அது நேற்றைய போட்டியில் வெளிப்படையாக தெரிந்தது.!🎨
 
நூலிழையில் நழுவி போன கால்பந்து கோப்பைக்கு பதில் அவருக்கு தங்க ஷீ பரிசாக கிடைத்திருக்கிறது.
 
சொல்லப்போனால் கோப்பையை வெல்ல 100% வாய்ப்புள்ள அணியாக தான்
பிரான்ஸ் இருந்திருக்கிறது.
ஆனால் விளையாட்டில் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கை கொடுப்பதில்லையே.
'எம்பாப்பே என்ற தனிமனிதனை வீழ்த்தி தான்
அர்ஜெண்டினா கூட்டு முயற்சியாக கோப்பையை வென்று இருக்கிறது'
அது தான் உண்மையும் கூட....!♻️
 
-மகாலிங்கம் கணபதி.-

 

#############   ############   ###############

 

May be an image of 6 people and people playing sports

சக்கரவியூகத்தில் சிக்கிய அபிமன்யூ அல்ல இவன் அர்ஜுனன்...  
MBAPPE  கால்பந்து யுகத்தின், அடுத்த கதாநாயகன்...
❤️

சுப்ரமணிய பிரபா

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:
May be an image of 1 person
 
~~~எம்பாப்பே எனும் எரிமலை~~~
 
மெஸ்ஸி,நெய்மர்,ரொனால்டோ,மோட்ரிச் போன்ற சமகால ஜாம்பவான்களுக்கு மத்தியில் கால்பந்து உலகம் உரக்க உச்சரிக்கும் ஒரு பெயர் கிலியன் எம்பாப்பே.பிரான்ஸ் நட்சத்திர வீரராக கடந்த 4 வருடங்களில் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறார் எம்பாப்பே.23 வயதே ஆன ஒரு இளைஞன் எதிரணி வீரர்களிடமிருந்து பந்தை லாவகமாக தட்டிச் சென்று கோல் வலைக்குள் தள்ளுவதில் கில்லாடி இவர்.💫
 
ஆட்டம் முடிய பத்தோ,பதினைந்தோ நிமிடங்கள்.எல்லாம் முடிந்து விட்டது விட்டது என நினைத்த நேரத்தில் சில நிமிட இடைவெளியில்பேக் டூ பேக் கோல் அடித்து உலககோப்பை இறுதி போட்டியில்
அர்ஜெண்டினாவிற்கு மிகவும்நெருக்கடி கொடுத்தவர் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே.ஒரு ஆபத்துபாந்தவனாக அணியை 2-2 சமநிலைக்கு கொண்டு வந்து இறுதிப்போட்டிக்கான விறுவிறுப்பை கூட்டினார்  எம்பாப்பே.💥
 
'பிரான்ஸ் நிச்சயம் கோப்பையை வெல்லும் 'என்ற பிரான்ஸ் ரசிகர்களின் நம்பிக்கைக்கு பின்னால் எம்பாப்பே இருந்தார்.அவரது துறுதுறுப்பான ஆட்டமும்,கோல் கம்பத்தை நோக்கி விறு,விறுவென முன்னேறி கோலாக்குவதுமான அவரது ஆட்ட நுணுக்கங்கள் சுவாரஸ்யமானது.50
வருடங்களுக்கு பிறகு அழுத்தம் நிறைந்த ஒரு இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து இருக்கிறார்.💖
 
கத்தார் உலககோப்பையை பிரான்ஸ் வெல்ல முடியாமல் போனாலும்,இந்த தொடர் முழுவதுமான எம்பாப்பே ஆட்டம் அதிசயிக்கத்தக்கது.எத்தனை வீரர்கள் சுற்றி நின்றாலும் அத்தனை பேரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு எம்பாப்பே கால்கள் பந்தை கடத்தி முன்னேறும்.அதற்கு திறமையும்,விடா முயற்சியும் தேவை அது எம்பாப்பேவிடம் அதிகம் இருக்கிறது. அது நேற்றைய போட்டியில் வெளிப்படையாக தெரிந்தது.!🎨
 
நூலிழையில் நழுவி போன கால்பந்து கோப்பைக்கு பதில் அவருக்கு தங்க ஷீ பரிசாக கிடைத்திருக்கிறது.
 
சொல்லப்போனால் கோப்பையை வெல்ல 100% வாய்ப்புள்ள அணியாக தான்
பிரான்ஸ் இருந்திருக்கிறது.
ஆனால் விளையாட்டில் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கை கொடுப்பதில்லையே.
'எம்பாப்பே என்ற தனிமனிதனை வீழ்த்தி தான்
அர்ஜெண்டினா கூட்டு முயற்சியாக கோப்பையை வென்று இருக்கிறது'
அது தான் உண்மையும் கூட....!♻️
 
-மகாலிங்கம் கணபதி.-

 

#############   ############   ###############

 

May be an image of 6 people and people playing sports

சக்கரவியூகத்தில் சிக்கிய அபிமன்யூ அல்ல இவன் அர்ஜுனன்...  
MBAPPE  கால்பந்து யுகத்தின், அடுத்த கதாநாயகன்...
❤️

சுப்ரமணிய பிரபா

நல்ல ஒப்பீடு! நன்றி அண்ணா இணைப்பிற்கு.
கொஞ்ச நாளைக்கு உதைபந்தாட்டக் கதை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் சென்றடைந்தனர் உலக சம்பியன்கள்: ஆர்ஜென்டீனாவில் இன்று விடுமுறை தினமாகப் பிரகடனம்

By SETHU

20 DEC, 2022 | 01:21 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஆர்ஜென்டீன அணி தாயகம் சென்றடைந்துள்ளது. 

கத்தாரில் கடந்த ஞாயிறு இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸை பெனல்டி முறையில் 4:2 கோல்கள் விகிதத்தில், தோற்கடித்து ஆர்ஜென்டீனா சம்பியனாகியது.

இந்நிலையில், லயனல் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணியினர் ஆர்ஜென்டீனாவை சென்றடைந்தனர். 

தலைநகர் புவனேர்ஸ் அயர்ஸஸிலுள்ள எஸேய்ஸா விமான நிலைத்தில் இன்று அதிகாலை ஆர்ஜென்டின அணியினர் வந்திறங்கினர். 

World-Cup-winners-Argentina-return-ahead

அதன்பின் திறந்த பஸ் மூலம், விமான நிலையத்திலிருந்து ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்கத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்க கட்டடத்தொகுதியில் தங்கவைக்கப்பட்ட அணியினர் தலைநகரில் திறந்த பஸ்ஸில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இன்று நண்பகல் இந்த ஊர்வலம் ஆரம்பமாகும்.

Argentina-vs-Saudi-Arabia-FIFA-2022-6.jp

உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடுவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ஜென்டீனாவில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் இன்று வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/143629

  • கருத்துக்கள உறவுகள்

ஆஜன்டீனாவின் பயிற்சியாளார் 2006ல் மெசியுடன் ஆஜன்டீனாவுக்காக விளையாடியவர்.


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழி எங்கும் ரசிகர்கள்...அர்ஜென்டினாவின் சாலையில் கோப்பையுடன் ஊர்வலமாக சென்ற அணியினர் | Messi | FIFA

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஆர்ஜென்ரினா 18ல் தோற்று நாடு திரும்பிய போது அவர்கள் போன பேரூந்துக்கு கல்லெறிந்து அடித்துடைத்ததாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே ஆர்ஜென்ரினா 18ல் தோற்று நாடு திரும்பிய போது அவர்கள் போன பேரூந்துக்கு கல்லெறிந்து அடித்துடைத்ததாக ஞாபகம்.

ஓம். எனக்கும் ஞாபகம் இருக்கு. 😁
கல்லெறிக்கு பயந்துதான்… “கப்” எடுத்தவர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 3 people, people standing, outdoors and text that says 'THANK'
 
இவர்கள் ஏன் உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றனர்.
சோதித்தாலும் இறுதி வெற்றியை இறைவன் ஏன் இவரது தலைமை அணிக்கு வழங்கினான்.
மெஸ்ஸி...  அர்ஜென்டினாவின் மட்டுமல்ல உலகின் தலை சிறந்த
கால்பந்து வீரர் மெஸ்ஸியின்உன்னத மனித நேய இதயம்
Real Hero
......................
இந்த ஆண்டின் இறுதியில் மெஸ்ஸி 900 மில்லியன் யூரோக்களை சம்பாதிருக்கிறார்.
யுனெஸ்கோவின் அறக்கட்டளையின் வருவாயில்
48 சதவீதம் மெஸ்ஸியின் நன்கொடையில் இருந்து வருகிறது.
 
மெஸ்ஸி 189 நாடுகளில் 9847 பள்ளிகளை தனியாளாக உருவாக்கியுள்ளார்.
உலகில் உள்ள 40 மில்லியன் குழந்தைகளின் பள்ளிச் செலவுகள் அனைத்தையும்
அவரே ஏற்றிருக்கிறார்.
 
அவர் தனது தொண்டு அறக்கட்டளை மூலம் உலகின் 15 மில்லியன்
தெருக் குழந்தைகளுக்கு உதவுகிறார்.
 
மெஸ்ஸி ஆரம்பத்தில் அர்ஜென்டினா அணியில் இருந்தபோது
அர்ஜென்டினா உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இரண்டாம் இடத்துக்கான முழுப் பணத்தையும் அர்ஜென்டினாவில் உள்ள
மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கினார
 
ஃபோர்ப்ஸ் கணக்கெடுப்பின்படி உலகில் உள்ள
50 நன்கொடையாளர்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

சோதித்தாலும் இறுதி வெற்றியை இறைவன் ஏன் இவரது தலைமை அணிக்கு வழங்கினான்.

மெஸ்ஸி என்கின்ற கால்பந்து விளையாட்டு வீரர் UNICEFவின் நல்லெண்ண தூதராக இருந்து ஏழைநாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கு உதவி வருபவர் என்பது எற்கனவே தெரிந்த தகவல். அவர் செய்கின்ற உதவிகளின் மேலும் விபரங்களை கொடுப்பது அவரின் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.  ஆனால் பரா நந்தகுமார் அதற்குள்  எந்தவிதத்திலும் தொடர்பற்ற உடான்ஸ் சாமி இறைவனை கொண்டு வந்து முடிச்சுபோட்டு செய்கின்ற உதவிகள் காரணமாக அவரை சோதித்தாலும் இறுதி வெற்றியை   உடான்ஸ் சாமி  இவரது தலைமை அணிக்கு வழங்கினான் என்று சொல்லி உடான்ஸ் சாமியிக்கு விளம்பரம் தேடுகிறார் 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி மற்றும் நுனா இணைப்பிற்க்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் தொட முடியும்? ஃபிஃபா விதிகள் என்ன கூறுகின்றன?

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த பதினெட்டாம் தேதி நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 36 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி.

பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல்கள் அடித்தன. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நடைபெற்றது. இதில் பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜென்டினா.

 

எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள்.

 

அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு அன்றிரவு சாத்தியமானது. அதன் பிறகு மைதானத்திலும், அர்ஜென்டினா தேசத்திலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

இதில் மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டங்களின் போது, சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞரான சால்ட் பே என அழைக்கப்படும் நுஸ்ரெட் கோக்சே கால்பந்து உலகக்கோப்பையைக் கையில் ஏந்தியபடி புகைப்படங்களில் காட்சியளித்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவ தொடங்கியதும், அவரின் இந்த செயல் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனத்திற்கு உள்ளானது.

 

இதற்கான மிக முக்கிய காரணம், கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் கைகளில் ஏந்த முடியும் என்ற நீண்ட கால பாரம்பரியம் ஒன்று கால்பந்து உலகில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நுஸ்ரெட் கோக்சே உலகக்கோப்பையை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்தது பல்வேறு கால்பந்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

இந்த புகைப்படம் இவ்வளவு விமர்சனங்களைப் பெறக் காரணமாக இருந்த அந்த விதிகள் என்னென்ன? கோப்பையை யாரெல்லாம் ஏந்தலாம் என்பது குறித்து என்ன சொல்கிறது ஃபிஃபா?

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

யாரெல்லாம் உலகக்கோப்பையை தொடலாம்?

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு தொடரின் அடையாளமாக பல ஆண்டுகளாகத் திகழும் இந்த கோப்பையை யாரெல்லாம் கைகளில் ஏந்தலாம் என்று ஃபிஃபா சில விதிமுறைகளை வைத்துள்ளது.

இதுகுறித்து ஃபிஃபா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களில், "இந்த உலகக் கோப்பையானது ஃபிஃபா உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகிறது.

6.142 கிலோ எடையுள்ள திடமான தங்கத்தால் ஆன இந்த கோப்பையானது, உச்சியில் உலகத்தைத் தாங்கியிருக்கும் இரண்டு மனித உருவங்களைச் சித்தரிக்கிறது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சின்னங்களில் ஒன்றாகவும், விலைமதிப்பற்ற அடையாளமாகவும் இருக்கக்கூடிய இந்த உலகக் கோப்பையை மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே தொட முடியும். இதற்கு முன்பு கோப்பையைக் கைப்பற்றிய வீரர்கள் மற்றும் அரசு தலைவர்கள் ஆகியோரே இதனை ஏந்த முடியும்.

 

(தற்போதைய விதிகளின்படி) அசல் கோப்பை ஃபிஃபா வசம் இருக்கும். ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இந்த உண்மையான கோப்பை தற்காலிகமாகவே வழங்கப்படுகிறது.

பின்னர், அந்தந்த தொடருக்கான பிரத்தியேக கோப்பைகள் வழங்கப்படுகின்றன. தங்கத்தால் ஆன அசல் கோப்பைக்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட கோப்பை வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எவ்வளவு பணம் பரிசு?

பல நூறு கோடிகள் வணிகத்தைக் கொண்ட கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு அவர்கள் பெறும் இடத்தை பொறுத்து பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

ஒவ்வோர் உலகக்கோப்பையிலும் கணிசமாக உயர்த்தப்பட்டு வரும் இந்த பரிசுத் தொகையானது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் அலுவல்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை பிபிசி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 358 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த பரிசுத்தொகை 2018ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் 400 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த தொகையுடன் மேலும் 40 மில்லியன் டாலரைச் சேர்த்து இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை பரிசாக வழங்கியுள்ளது ஃபிஃபா. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3,640 கோடி ரூபாய் ஆகும்.

இந்த மொத்த பரிசுத்தொகையில், கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு சுமார் 347 கோடி ரூபாய் (42 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் அணிக்கு சுமார் 248 கோடி ரூபாய் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை நான்கு மில்லியன் டாலராக இருந்தது. 28 ஆண்டுகள் இடைவெளியில் இது 42 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, கோப்பையை வென்ற அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. இப்பரிசுத் தொகை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முறையே 38 மில்லியன் டாலர் மற்றும் 28 மில்லியன் டாலராக உயர்ந்தது.

https://www.bbc.com/tamil/articles/c9wgvr3z34ro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்பு விழாவில் பஸ் நகர முடியாததால் ஹெலியில் பறந்த ஆர்ஜென்டீன வீரர்கள்

By SETHU

22 DEC, 2022 | 01:36 PM
image

உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன வீரர்களுக்கு, ஆர்ஜென்டீனாவில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின்போது, திறந்த பஸ் பயணத்தை இடையில் கைவிட்ட வீரர்கள் ஹெலிகொப்டர் மூலம் பறந்தனர்.

வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் நகர முடியாத அளவுக்கு வீதியில் மக்கள் திரண்டமையே இதற்குக் காரணம்.

உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆர்ஜென்டீனாவை சென்றடைந்தனர்.

அன்றைய தினம் ஆர்ஜென்டீனாவில் விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டு, வீரர்களை வரவேற்பதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தலைநகர் புவனோஸ் அய்ரிஸின் புறநகர் பகுதியிலிருந்து, தலைநகரின் மத்திய பகுதிவரை 30 கிலோமீற்றர் தூரம் திறந்த பஸ்ஸில் வீரர்கள் பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் புவனோஸ் அய்ரிஸில் திரண்டிருந்தனர். சுமார் 40 லட்சம் பேர் பஸ் பயணம் செய்யவிருந்த வீதிகளில் திரண்டிருந்தனர் என ஆர்ஜென்டீன பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். 

வீரர்கள் பயணம் செய்த பஸ் நகர முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் வீதிகளில் நிறைந்திருந்தது. 

மேம்பாலம் ஒன்;றின் கீழ் சென்றபோது அதன் மீது பாய்வதற்கும் ரசிகர்கள் சிலர் முயன்றனர்.

எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக மெதுவாக பஸ் நகர முடிந்தது.

இதையடுத்து, வீரர்களின் பஸ் பயணம் இடையில் கைவிடப்பட்டு, ஹொலிகொப்டர் மூலம் வீரர்கள் ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்கத்தின் பயிற்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினர்.

இதனால் புனோஸ் அய்ரிஸில்  விளையாட்டுக் கொண்டாட்டங்களுக்கான மத்தியநிலையமாக விளங்கும் நினைவுச்சின்னத்துக்கு அருகில் காத்திழருந்த ரசிகர்கள், தமது நாயகர்களை காண முடியாதநிலை ஏற்பட்டது.

https://www.virakesari.lk/article/143849

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்பாப்பேயை கேலி செய்த அர்ஜென்டினா கோல் கீப்பருக்கு சிக்கல்

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

23 டிசம்பர் 2022

இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பேயை கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்ட்டினஸ் மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு பியூனோஸ் அயர்ஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது ஒரு குழந்தை பொம்மையில் எம்பாப்பேயின் முகத்தை பொருத்தி கொண்டு வந்தார் மார்ட்டினஸ்.

இந்தப் புகைப்படமும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது. இதற்கு முன்பும் மார்ட்டினஸ் பல முறை எம்பாப்பேயே கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

கத்தார் லூசாய்ல் மைதானத்தில் உலகக் கோப்பையை வென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓய்வு அறையில் எம்பாப்பேக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்க வேண்டும் என்று கூறிய காணொளியும் இதேபோன்ற விமர்சனத்தைப் பெற்றது.

 

என்ன நடந்தது?

கத்தாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸும் அர்ஜென்டினாவும் மோதின. முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து உறுதியான முன்னிலையை அர்ஜென்டினா அணி பெற்றிருந்தது. 

ஆனால் ஆட்டம் முடிவதற்கு பத்துப் பன்னிரெண்டு நிமிடங்களே இருந்த நிலையில், 80 மற்றும் 81-ஆவது நிமிடங்களில் கிலியன் எம்பாப்பே இரு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கை பிரான்ஸ் வசம் திருப்பினார். அதன் பிறகும் ஆவேசமான ஆட்டத்தால் அர்ஜென்டினா அணி திணறிப்போயிருந்தது.

கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தபோதும் அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு கோலை அடித்த எம்பாப்பே சமநிலைக்குக் கொண்டுவந்தார். கடைசியா பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில்தான் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வெற்றிகொள்ள முடிந்தது. 

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றதுடன், இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்களை அடித்து தங்கக் காலணி விருதையும் பெற்றார் எம்பாப்பே. 

அர்ஜென்டினா - பிரான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜென்டினா அணிக்காக கடைசி நேரத்தில் பிரான்ஸின் கோல் வாய்ப்பு ஒன்றை அற்புதமாகத் தடுத்ததுடன், பெனால்ட்டி ஷூட் அவுட்டிலும் இரு முறை பிரான்ஸ் வீரர்களின் தாக்குதலைத் தடுத்தார் எமி மார்ட்டினஸ். அவருக்கு தங்கக் கையுறை விருது கிடைத்தது.

ஒருபுறம் அர்ஜென்டினா அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மறுபுறம் சோகமாக இருந்த எம்பாப்பேயை பிரான்ஸ் அதிபர் தேற்றும் காட்சிகளையும் காண முடிந்தது.

இந்தக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை வைத்து ஓய்வு அறையில் அர்ஜென்டினா வீரர்கள் உற்சாகமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் எம்பாப்பேக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்கும்படி எமி மார்ட்டினஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அர்ஜென்டினா - பிரான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிப் பேரணியில் மீண்டும் கேலி

அர்ஜென்டினாவில், உலகக்கோப்பையை வென்று வீடு திரும்பிய மெஸ்ஸி மற்றும் அணியின் வீரர்களை வரவேற்பதற்கு சுமார் 40 லட்சம் மக்கள் சாலையில் கூடியிருந்தனர்.  இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமையும் அர்ஜென்டினா அரசு விடுமுறை அறிவித்திருந்தது. 

மக்கள் கூட்டத்திற்கு நடுவே மெஸ்ஸியும் அணியின் வீரர்களும் கோப்பையுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அப்போது ஒரு குழந்தைப் பொம்மையில் எம்பாப்பேயின் முகத்தை ஒட்டி எமி மார்ட்டினஸ் எடுத்துவந்தார். அவருக்கு அருகே மெஸ்ஸி நின்று கொண்டிருந்தார்.

இதை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்துள்ளனர். பிரிட்டிஷ் தொலைக்காட்சி பிரபலமான பியர்ஸ் மோர்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் மெஸ்ஸியை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அர்ஜென்டினா - பிரான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எம்பாப்பேயின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக தென்னமெரிக்க கால்பந்துத் திறமை குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார் கிலியன் எம்பாப்பே. “ஐரோப்பிய நாடுகளைப் போல தென் அமெரிக்க நாடுகளில் கால்பந்து முன்னேறவில்லை” என்று எம்பாப்பே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

“ஐரோப்பாவில் எப்போதும் உயர்ந்த நிலையிலான போட்டிகளில் நாங்கள் ஆடுகிறோம். அதனால் உலகக் கோப்பைக்கு நாங்கள் தயாராக வருகிறோம். ஆனால் தென் அமெரிக்காவில் பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை. ஐரோப்பா அளவுக்கு அங்கு கால்பந்து முன்னேறவில்லை. அதனால் ஐரோப்பிய அணிகள் வெல்கின்றன” என்று கூறியிருந்தார்.

அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டனர். 

கடந்த உலகக் கோப்பை போட்டியில் 19 வயதேயான எம்பாப்பே அர்ஜென்டினா அணியை நாக் அவுட் சுற்றில் வெளியேற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அர்ஜென்டினா - பிரான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் புகார்

எம்பாப்பேயை கேலி செய்தது தொடர்பாக பிரான்ஸ் கால்பந்து சம்மேளத்தின் தலைவர் நோயல் கிரேட், அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திடமே புகார் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து எமி மார்ட்டினஸ் மீது விசாரணை நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c1rp7jw8782o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.