Jump to content

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்தது என்ஐஏ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்தது என்ஐஏ

By RAJEEBAN

20 DEC, 2022 | 09:25 AM
image

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் நேற்று கைது செய்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக என்ஐஏ(தேசிய புலனாய்வு முகமை) ஜூலை 8-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களான குணசேகரன், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா மற்றும் ஆயுதங்கள், போதைப் பொருள் விற்பனையாளரான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால், தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20-ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி சிறப்பு முகாமில், என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கமாண்டோ படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். அப்போது, சிறப்பு முகாமிலிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லேப்டாப், வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டன. அவற்றை கேரளா கொண்டு சென்ற என்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

என்ஐஏ எஸ்.பி. தலைமையில்..: இந்நிலையில், எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் 8 பேர் நேற்று காலை மீண்டும் திருச்சி சிறப்பு முகாமுக்கு வந்து, அங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் (எ) பிரேம்குமார், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா (எ) கோட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ (எ) பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் (எ) வெள்ள சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஏற்கெனவே தொடரப்பட்ட ஆயுதக் கடத்தல் வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதால், 9 பேரையும் கைது செய்ய வந்திருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் என்ஐஏ எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியர் மா.பிரதீப்குமாருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, 9 பேர் மீதுள்ள வழக்கு விவரங்கள், கைது செய்வதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்கும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில், என்ஐஏ அதிகாரிகள் அளித்த ஆவணங்களை ஏற்று, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து சிறப்பு முகாமிலிருந்து அழைத்துச் செல்ல ஆட்சியர் அனுமதியளித்தார்.

இதையடுத்து, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/143583

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

முகமது ஆஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா (எ) கோட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ (எ) பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் (எ) வெள்ள சுரங்கா

இம்முறை சிங்களவர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து புலிகளுக்கு புத்துயிர் ஊட்ட முக்கோ முக்கு என்று முக்குறினம். தம்பிகளா புலிகள் எல்லாம் நீங்கள் எழுப்பும் போது எழும்பும் நினைக்கும் போது தூங்கும் டம்மி பீஸ்கள் இல்லை. விசாரிச்சு பாருங்கோ ஒருவேளை அந்த சிங்களவர்களும், முஸ்லிமும் இலங்கை இராணுவ புலநாய்வு வால்களாக இருக்கலாம்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி' - 9 பேரை கைது செய்த என்.ஐ.ஏ

ltte

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப்படம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்துள்ளது.

சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை நடத்திவந்ததாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.

இவர்களுக்கான போதைப் பொருளை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பிவந்துள்ளார். இந்த போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும் இரு நாடுகளிலும் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது.

இது தொடர்பான ஒரு வழக்கை கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. பதிவுசெய்தது.

இது தொடர்பாக என்ஐஏவின் டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அணி ஒன்று  திருச்சி சிறப்பு முகாமில், கடந்த ஜூலை 20ஆம் தேதி சோதனைகளை நடத்தியது.

இந்த சோதனைகளின்போது, மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதற்குப் பிறகு நேற்று, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி. குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்செக, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுக்க ரோஷன், வெள்ளசுரங்க்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ltte sri lanka tamil nadu

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

கைதுசெய்யப்பட்டவர்களில் முகமது அஸ்மின் மட்டும் ராமநாதபுரம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் வேறு சில குற்றங்களுக்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

2021ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவர் கொச்சிக்கு அருகில் உள்ள அங்கமாலியில் கைதுசெய்யப்பட்டார். ஹாஜி சலீமுடன் இருந்த தொடர்புக்காக கைதுசெய்யப்பட்ட அவரை விசாரித்ததில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் கொடுக்கல் - வாங்கள் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.  

இந்தியாவைத் தளமாகப் பயன்படுத்தி, இலங்கைக்கு போதைப் பொருட்களையும் ஆயுதங்களையும் கடத்துவதில் முக்கியப் புள்ளியாக சுரேஷ் ராஜன் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகில் படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் இடை மறித்த பாதுகாப்புப் படையினர், அதனைச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் படகிலிருந்து 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாகவே கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், இந்த ஒன்பது பேரையும் கைதுசெய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/ce707000rk7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கிம்புலா எல குணா, பாகிஸ்தானின் ஹாஜி சலீம் ஆகியோரும் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது!

By DIGITAL DESK 5

20 DEC, 2022 | 12:37 PM
image

இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான கிம்புலா எல குணா, புகுடு கண்ணா உள்ளிட்டவர்களும்  அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இவர்கள் தவிர, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி வரும் ஹாஜி சலீம் என்ற பாகிஸ்தானியரும்  உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் சிறப்பு முகாமில் இருந்தபோதே  இந்திய உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்களில்  போதைப்பொருள் மற்றும்  ஆயுதக்  கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும்  மொஹமட் அஸ்மின், அழகப்பெருமகே சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுஷ்க ரொஷான், வெல்ல சுரங்க மற்றும் திலீபன் ஆகியோரும்  அடங்குவர்.

https://www.virakesari.lk/article/143628

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 9 பேருக்கு ஜன.3 வரை நீதிமன்ற காவல்: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

By Rajeeban

21 Dec, 2022 | 12:06 PM
image

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 9 பேரை, ஜன.3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களைத் தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கை தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

tiruchi_spec_camp.jpg

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்தஜூலை 8-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20-ம் தேதி சோதனை நடத்தினர். திருச்சி சிறப்புமுகாமிலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்கிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லேப்டாப், வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கேரளா கொண்டு சென்றஎன்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் என்ற பிரேம்குமார், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா என்ற கோட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னான்டோ என்ற பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் என்ற வெள்ள சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களை ஆயுதக் கடத்தல் வழக்கில் கைது செய்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரும்,சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 3 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

https://www.virakesari.lk/article/143727

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கோ முடிச்சு போடுறானுகள் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்க கைதுகளை சிறிலங்காவுக்கு அறிவிக்காத இந்தியா

7-24.jpg

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களில் 7 பேருக்கு ஏற்கனவே இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

திருச்சிராப்பள்ளியில் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையென்றாலும், கைது செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா காவல்துறையினருக்கு இதுவரை இந்திய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் குணா என்ற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என்ற புஸ்பராஜா ஆகியோர் அடங்குகின்றனர்.

அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகத்தரான ஹாஜி சலீமுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றினர் என்பது தெரியவந்துள்ளதுடன், இவர்கள், இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்பட்டனர் என்று இந்திய புலனாய்வுப்பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் தவறுகளை செய்திருந்தால், இந்திய நீதிமன்றத்திலேயே அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதுடன், இலங்கைக்கு அவர்களை அழைத்து வரவேண்டுமானால், இராஜதந்திர ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனவே, இது தொடர்பில் சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=233303

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கு பாக்கிஸ்தான் முயற்சி - இந்திய ஊடகம்

By RAJEEBAN

27 DEC, 2022 | 10:54 AM
image

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயுர் அளிக்கும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐ ஈடுபட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயுர் அளிக்கும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவு ஈடுபட்டுள்ளது என ரிப்பப்ளிக் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிக்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பு 9 பேரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த குணசேகரன் புஸ்பராஜா என்ற இருவர் பாக்கிஸ்தானை சேர்ந்த ஆயுத போதைப்பொருள் விற்பனையாளர் ஹாஜி சலீம் என்பவருடன் இணைந்து செயற்பட்டனர் என இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் செயற்பட்டுள்ளனர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்காக போதைப்பொருள் ஆயுதங்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என ரிப்பப்ளிக் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

இந்திய அமைப்பு இவர்களை கைதுசெய்துள்ள அதேவேளை பிராந்தியத்தில் அமைதி பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக பாக்கிஸ்தான் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயுர் அளிக்க முயல்கின்றது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/144205

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.