Jump to content

மட்டக்களப்பில் மழை ; குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், மழைநீர் வழிந்தோட முடியாமல் வடிகான்களில் தேங்கியுள்ளதனால் நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 7அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 9அங்குலமும், இக்குளத்தில் ஒரு அங்குலம் அளவில் மேலதிக நீர் வெளியேறுகின்றது. வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 15அடி 2அங்குலமும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலமும், இக்குளத்தில் 2அங்கு மேலதிக நீர் வெளியேறுகின்றது, கித்துள்வெவகுளத்தின் நீர்மட்டம் 7அடி ஒரு அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலமும், அக்குளத்தில் 12 அங்குல மேலதிக நீர் வெளியேறுகின்றது, வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 10அடி ஒரு அங்குலமும், புணாணை அணைக்கட்டு 3அடி 3அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 27அடியும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலமுமதக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை (20) காலை 8.30 மணிவரையில் மட்டக்களப்பில் 33 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிலஇடங்களில் 50மிமீ. க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு தென்வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகநிலை கொண்டுள்ள குறைந்த தாழமுக்கம்  இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்குத் திசையில் மெதுவாக சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் தென் விரிகுடா ஆழம்கூடிய கடற்பரப்புகளில் காற்றின்  வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50கிலோ மீற்றர் 60 வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் தொடர்பாக ஈடுபடும் போது இவ்விடயம் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

காங்கேசந்துறையிலிருந்து கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில்வரையான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30- 40கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50- 55கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பலமான நேரங்களில் கடற்பகுதிகளில் காற்று வீசுவதுடன் அவ்வப்போது அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காண காணப்படும். என மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மழை ; குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பை விட அம்பாறையில் கடும் மழை ஐந்து நாட்களாக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பை விட அம்பாறையில் கடும் மழை ஐந்து நாட்களாக

வடக்கிற்கும் கிழக்கிற்கும் வாய்க்கால் வெட்டவேணும்!
வடக்கில் குளங்கள் 70% நிரம்பியிருக்காம், சிறுபோகம் செய்வது கடினமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2022 at 17:33, ஏராளன் said:

வடக்கிற்கும் கிழக்கிற்கும் வாய்க்கால் வெட்டவேணும்!
வடக்கில் குளங்கள் 70% நிரம்பியிருக்காம், சிறுபோகம் செய்வது கடினமாம்.

இஞ்ச கடலிலே போய் சேருகிறது நீர் மேலதிக நீர்

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.