Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளர்ப்பு நாயிடம் தகாத உறவு - ஜனாதிபதியின் ஆலோசகர் மீது குற்றச்சாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2022 at 09:24, கிருபன் said:

இப்படி எல்லாம் மொக்குத்தனமாக பாண்டவர்கள் இருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் நெறி இருந்தது!

பாஞ்சாலத்தில் ஒரு பெண் பல ஆண்களை மணம் செய்ய முறைமை இருந்தது. அதன்படி வருடத்தின் பருவங்களின்படி யார் எப்போது திரெளபதியுடன் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. செருப்பு வைத்துத் தீர்மானித்திருந்தால் எல்லா நாளும் அர்ஜுனன் செருப்புத்தான் இருந்திருக்கும்😁

விறலி தன் கருமுலைகள் அசைய கண்களும் புன்னகையும் ஒளிர தன் குழல்கற்றையை மேலே தூக்கி கட்டினாள். ”முறைமையை நான் சொல்கிறேன் இளவரசர்களே. நானும் பெண் என்பதனால் இதுவே அன்னைக்கும் உகந்ததாக அமையுமென எண்ணுங்கள்” என்றாள். “வசந்தத்தை இளையவர் சகதேவனுக்கு அளியுங்கள். ஒவ்வொரு மலரும் இதழ்விட்டெழும் பருவம். தளிர்களும் சிறகுகளும் கூழாங்கற்களும் மாதர் விழிகளும் மலர்களாகும் மாதம். கந்தர்வர்களின் காலம். இளையோன் இருக்கும் முதிரா இளமைக்குரியது அது.”

“கிரீஷ்மம் நகுலனுக்குரியது. ஏனென்றால் கோடையில் இளையோர் ஆற்றல் கொள்கிறார்கள். கோடைச்சூரியனும் இளையோனே. நிழல்களை எல்லாம் உறிஞ்சி உண்டு அவன் ஆற்றல் கொள்கிறான். வேம்பும் புங்கமும் ஆலும் அரசும் தளிர்விடும் காலம். இளந்தென்றல் வீசும் இனிய இரவுகளினாலான பருவம். அந்தியில் முல்லையும் காலையில் பாரிஜாதமும் மலரும் பொழுதுகளை வாழ்த்துவோம்.”

“வர்ஷம் கார்முகில்களுக்குமேல் இந்திரனின் வஜ்ராயுதம் எழும் பருவம். உச்சிமலைப் பாறைகள் வானருவியிலாடிக் குளிர்ந்து கருக்கொண்ட முலைமேல் காம்புகள் என கருமை கொள்கின்றன. சாளரங்கள் தோறும் மழை வீசியடிக்கிறது. இருண்ட இரவுகளின் இனிய பூடகங்களை கிழித்து எடுத்து நோக்கி நகைக்கிறது மின்னல். மழைக்காலத்தை அர்ஜுனனுக்கு அளியுங்கள். இடியோசையால் வாழ்த்தப்பட்டவன் அவளுடன் அதை பகிரட்டும்” என்றாள் விறலி.

“சரத்காலம் பெருங்காற்றுகளால் ஆளப்படுகிறது. ஆலமரங்களை நடனமிடச்செய்யும் ஆற்றல் மிக்க கரங்களை வாழ்த்துவோம். அதை பீமனுக்கு அளியுங்கள்” என்று தொடர்ந்தாள். “பெரும்புயங்களால் வெல்லப்படமுடியாதவள் அவள் என அவள் உணரவேண்டுமல்லவா? காற்று கரும்பாறையை தழுவ மட்டுமே முடியுமென்று நிறுவப்படவேண்டுமல்லவா?” வெண்பற்கள் தெரிய நகைத்து “வெல்லும் கணம்போல பெண்ணை காமநிறைவடையச் செய்வது எது?” என்றாள்.

“ஹேமந்தம் இனியது. இருண்ட அந்திகள். மெல்லிய குளிர்காற்றுகளால் வாழ்த்தப்பட்ட இரவுகள். இனிய மென்சொற்களுக்குரிய பருவம் அது. சொல்லப்படும் ஒவ்வொன்றும் சிந்தையில் முளைக்கும். மூத்தவர் தருமனுடன் அவளிருக்கட்டும்” என்றாள் விறலி. “அச்சிரம் அவளை அறிதலில் அமரச்செய்யட்டும். புவியாளும் மைந்தர் அவள் கருவில் முளைக்கட்டும். தன் குலமறிந்த பெருங்கற்பையெல்லாம் அவள் அவர்களுக்கு அளிக்கட்டும்.”

“எஞ்சியிருப்பது சிசிரம். இருண்டது. குளிர்ந்து உறைந்தது. தனிமைக்குரிய அந்தப் பருவத்தை அவளிடமே விட்டுவிடுங்கள். பெண் மட்டுமே அறியும் காமம் என்பது அவளுள் எழுந்து அவளுள் அடங்குவது. அப்பருவத்தில் அவளை விண்ணளக்கும் தெய்வங்கள் அறியட்டும். யாழ்மீட்டிவரும் கந்தர்வர்கள் அறியட்டும். சொல்மீட்டி வரும் கின்னரர் அறியட்டும்” விறலி தெய்வமெழுந்ததென மெல்ல ஆடியபடி சொன்னாள்.

அவள் குரல் எழுந்தது “அந்நாளில் அவளில் விழியொளிரும் பாதாளநாகங்கள் அணையட்டும். நாபறக்க அவளுடைய இருளுக்குள் அவை சுருண்டு படமெடுக்கட்டும். பற்றி எரியும் அதலவிதலங்களில் இருந்து கரியபேருருவங்களுடன் ஆழுலகத்து தெய்வங்கள் எழுந்து வந்து அவளுக்கு அருளட்டும். அவர்களின் ஆற்றல்களால் அவள் வெல்லமுடியாதவளாக ஆகட்டும்.”

அணங்கெழுந்தவள் போல சொல்லிச்சொல்லி முன்குனிந்த விறலியின் குழல்கட்டு அவிழ்ந்து விழுந்து அவள் முகம் முழுமையாக மறைந்தது. அவர்கள் அவளை நோக்கியபடி அசையாமல் அமர்ந்திருந்தனர். எழுந்தாடிய தீயில் விறகு வெடித்த ஒலி கேட்டு அவள் அதிர்ந்தாள். குழலை அள்ளி பின்னால் தள்ளிவிட்டு நிமிர்ந்து வெண்பல்நிரை ஒளிர புன்னகைத்தாள்.

“ஆம், நீ சொல்லும் நெறியை பேணுகிறோம். அது ஒன்றே வழி” என தருமன் மெல்லிய குரலில் சொன்னான். ”மெல்லிய குரலில் சொல்பவை அனைவருக்கும் கேட்கின்றன” என்றாள் விறலி நகைத்தபடி. “ஆண்மகன் அகத்தை அறிந்த விறலி நான். உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இப்போது ஓடுவது பிறநால்வரே” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று தருமன் சீறியதும் கை நீட்டித் தடுத்து “ஆம்” என்றாள் விறலி. அவன் விழிதிருப்பி தலைகுனிந்தான்.

“பிறரை எண்ணலாகாதென்று எண்ணுகிறீர்கள். அது மடமை. எண்ணாதிருக்க இயலாது. எண்ணுவதை கட்டுப்படுத்தினால் ஏதும் அடையவும் இயலாது” என்று விறலி தொடர்ந்தாள். “எண்ணுக! ஒவ்வொருவரும் பிற நான்கு உடல்களிலும் புகுந்தாடுக! ஏனென்றால் நீங்கள் பிற அனைத்திலும் இதுவரை அவ்வண்ணமே இருந்தீர்கள். அர்ஜுனனுடன் வில் குலைத்தீர்கள். பீமனுடன் கதை சுழற்றினீர்கள். தருமன் அறிந்த மெய்மையெல்லாம் நீங்கள் ஐவரும் கொண்டதுதான். இளையோர் துள்ளித்திரிந்த தொலைவெல்லாம் பிறரும் சென்றீர்கள்.”

பருவங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பருவத்திலும் வாழுங்கள். எப்போதும் ஒரு பருவம் எஞ்சியிருக்கிறது என்பதை உணருங்கள். அந்த இருண்ட கருவறைக்குள் ஒருபோதும் காலடி வைக்காதீர்கள். அங்கு போரிட்டுக்கொண்டிருக்கும் விண்தெய்வங்களும் இருளுலக தெய்வங்களும் எளிய மானுடரை விரும்புவதில்லை.”

“ஐந்தெனப் பிரிந்து அவளுடனிருங்கள். அவளோ ஐந்தையும் ஒன்றென ஆக்கி உங்களை அறிவாள்” என்று விறலி தொடர்ந்தாள். “பெண்ணென ஆகி வந்துள்ளது பெருவிழைவென்று அறிக! உண்ணவும் கொள்ளவும் முகிழ்க்கவும் நிறைக்கவும் எழுந்த பேரவா. ஐந்து முகம் கொண்டு எழுக அனல். ஐவருடனும் கூடியாடும் ஐந்து தேவியரை வணங்குகிறேன். ஐவரில் உறைந்து அனைத்தையும் நோக்கி அகன்றிருக்கும் அன்னை சண்டிகையை வணங்குகிறேன்.”

கைகூப்பியபின் விறலி எழுந்தாள். தலையைச் சொடுக்கி குழல்கற்றையை கையால் அள்ளிச் சுருட்டி கட்டிக்கொண்டாள். முலைமுகைகள் நடுவே அசைந்த கல்மணிமாலையில் செந்தழல் பட்டு கனலெனக் காட்டியது. எழுந்து நின்றபோது அவள் முகம் இருண்ட விண்ணில் இருந்து குனிந்து நோக்குவதுபோலிருந்தது.

பெருமூச்சுடன் எழுந்த தருமன் “உன் சொற்கள் இன்னும் நெடுநாட்கள் எங்கள் நெஞ்சில் முளைத்தெழுந்துகொண்டிருக்கும் விறலியே” என்றான். 

https://venmurasu.in/venmugil-nagaram/chapter-3/

சாட்டோட சாட்டா, புமோ வுக்கு ஒரு புரமோ (promo) 🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

சாட்டோட சாட்டா, புமோ வுக்கு ஒரு புரமோ (promo) 🤣

நாய் “லொக்” பண்ணுவதற்கு தருமரின் சாபம் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை மறுப்பது கடமை!

சிங்களவன் நாயுடன் செக்ஸ் வைத்தது கனடாவிலும் நடந்திருக்கு. அது யாழிலும் வந்திருக்கு!

அந்தப் பழைய திரியில் நெடுக்ஸ் நாயின் “லொக்”கிற்கு விளக்கம் வேற தந்திருக்கின்றார்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

நாய் “லொக்” பண்ணுவதற்கு தருமரின் சாபம் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை மறுப்பது கடமை!

சிங்களவன் நாயுடன் செக்ஸ் வைத்தது கனடாவிலும் நடந்திருக்கு. அது யாழிலும் வந்திருக்கு!

அந்தப் பழைய திரியில் நெடுக்ஸ் நாயின் “லொக்”கிற்கு விளக்கம் வேற தந்திருக்கின்றார்!

 

ஆராய வேண்டிய விடயம்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிங்களவன் நாயுடன் செக்ஸ் வைத்தது கனடாவிலும் நடந்திருக்கு. அது யாழிலும் வந்திருக்கு!

அந்தப் பழைய திரியில் நெடுக்ஸ் நாயின் “லொக்”கிற்கு விளக்கம் வேற தந்திருக்கின்றார்!

அங்கே சென்று படித்தேன்.  நிழலியின் கருத்து 💯

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2022 at 10:48, தமிழ் சிறி said:

May be a Twitter screenshot of 3 people, beard and text that says 'VijaySethupathi @VijaySethuOffl #Stop sending me this shit KKA AFIA President's Advisor Caught In a Storm For Allegedly Sexually Abusing Pet Dog � Magt Pasanga'

ஆஷு மாரசிங்க.... விஜய் சேதுபதி மாதிரி இருக்கிறார் என்று,
 "விஜய் சேதுபதி சார்... நீங்களுமா?🤣" என்று கேட்டு, 
கடுப்பேத்திக் கொண்டு இருக்கிறார்கள். 
😂

 

On 25/12/2022 at 15:53, தமிழ் சிறி said:

May be a meme of 3 people and text that says 'ராஜபக்சேங்க நாட்டை கொள்ளை அடிக்க, நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து ராஜபக்சேங்களுக்கு அடிக்க, Lankans Asia Cupல நாங்க Paksnக்கு அடிக்க, World Cupல குணதிலக Australia பொண்ணுக்கு அடிக்க, MEME SIYA ஆஷ மாரசிங்க நாய்க்கு அடிக்க, அகுரணயில வெள்ளம் தலைக்கு மேலால அடிக்க, இந்த வருஷம் பூரா மாரி, மாரி அடிச்சதுலயே போயிட்டு எங்களுக்கு...'

எனக்கு இதை வாசித்து, சிரித்து ... பிரக்கடிக்க... ஒரே தமாசு தான். 😂

உண்மை.சிரி சிரி என்று சிரித்து வயிறு நோகுது ஐயா.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கப்பம் கேட்டு ஆபாச வீடியோவை பரப்பியதாக கூறி ஆஷு மாரசிங்கவின் முன்னாள் காதலி ஆதர்ஷா கரடான கைது

 

image

(எம்.எப்.எம்.பஸீர்)

பேராசிரியர் ஆஷு மாரசிங்கவிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரி அச்சுறுத்துவதற்காக, ஆபாச வீடியோ ஒன்றினை பொது வெளியியில் வெளியிட்டதாக கூறி, அவரின் முன்னாள் காதலியான ஆதர்ஷா கரடான என அறியப்படும் கரடான மமராலலாகே வகீஷா ஆதர்ஷா சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று  ( 11) மாலை அவரை சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  விசாரணைகளுக்காக ஆதர்ஷா இன்று நண்பகல் 12 மணியளவில் கணினி குற்றப் பிரிவுக்கு வந்ததாகவும், சம்பவம் தொடர்பில் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை மாலை 5.00 மணியளவில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக திகழ்ந்து இராஜினாமா செய்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்  ஆஷு மாரசிங்க சி.ஐ.டி.யில் கடந்த 2022 டிசம்பரில் முறைப்பாடொன்றினை செய்திருந்தார்.

 அதில்  தான் சம்பந்தப்பட்டதாக தெரிவித்து வீடியோ ஒன்றினை வெளியிடப் போவதாகவும் அவ்வாறு செய்யாமல் இருக்க 10 கோடி ரூபா வழங்க வேண்டும் எனவும் ஆதர்ஷா அச்சுறுத்தியதாக, ஆஷு மாரசிங்க குறிப்பிட்டிருந்தார்.

 அது தொடர்பில் விசாரணை செய்த சி.ஐ.டி.யின்  கணணி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லகீ ரந்தெனியவின் கீழான குழு, ஆதர்ஷாவை இன்று கைது செய்தது. இந்நிலையில் நாளையதினம் அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

முன்னதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க, அவரது காதலியின் செல்லப் பிராணியான நாய்க் குட்டியை பாலில் ரீதியாக துன்புறுத்தியதாக,  கடந்த 2022 டிசம்பர் 23 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றூடாக அது குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.

 ஆஷு மாரசிங்கவுடன் கடந்த 2 வருடங்களாக திருமணம் முடிக்காமல் ஒன்றாக வாழ்ந்த  அவரது காதலி எனக் கூறப்படும்  ஆதர்ஷா கரடான , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி இதனை வெளிப்படுத்தியிருந்தார்.

கப்பம் கேட்டு ஆபாச வீடியோவை பரப்பியதாக கூறி ஆஷு மாரசிங்கவின் முன்னாள் காதலி ஆதர்ஷா கரடான கைது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாய்க்கும் ஏதாவது நஷ்டஈடு கிடைக்குமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.