Jump to content

ஒரே பெண்: ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அழகு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பெண்: ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அழகு!

spacer.png
 
ஒரே பெண்ணின் புகைப்படத்தை வைத்து இந்தியாவின் அனைத்து மாநில கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (artificial intelligence) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டுத்தபட்ட ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் அனைத்து வகையான படங்களையும் உருவாக்க முடியும்.

டெல்லியைச் சேர்ந்த மாதவ் கோஹ்லி என்ற கலைஞர் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப அவர்களின் முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை சித்தரிப்பதாக உள்ளது.

அதில், டெல்லி, மும்பை, அசாம், கோவா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, காஷ்மீர் உள்ளிட்ட 31 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் முக அமைப்பானது கலைஞர் மாதவ் கோஹ்லியின் கற்பனை திறனில் வியக்க வைப்பதாக உள்ளது.

இதுகுறித்து மாதவ் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண்களின் தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்கியிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

https://minnambalam.com/archives-trending-news-in-tamil/ai-generated-images-depicting-indian-women-from-different-states/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டுப் பெண் எங்கே?
தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லாம் இருக்கு.
வேண்டுமென்றே தமிழ் நாட்டை தவிர்த்தார்களா?
நாங்கள், திராவிடம் பேசிக் கொண்டிருந்தால்  இதுதான் நிலைமை.
தமிழனை எவனும் கணக்கெடுக்க மாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டுப் பெண் எங்கே?
தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லாம் இருக்கு.
வேண்டுமென்றே தமிழ் நாட்டை தவிர்த்தார்களா?
நாங்கள், திராவிடம் பேசிக் கொண்டிருந்தால்  இதுதான் நிலைமை.
தமிழனை எவனும் கணக்கெடுக்க மாட்டான்.

நீங்கள் சமந்தா ரேஞ்சில எதிர்பார்த்ததால் மிஸ் பண்ணிட்டீங்கள்!😂

ஐந்தாவதாக இருக்கா!

Edited by கிருபன்
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு நல்லாய் வேணும். 
போய்... "டாஸ்மார்க்"கிலை குடிச்சுப் போட்டு, 
சினிமா நடிகனுக்கு பால் ஊத்திப் போட்டு, குப்புற கவுண்டு கிட. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

நீங்கள் சமந்தா ரேஞ்சில எதிர்பார்த்ததால் மிஸ் பண்ணிட்டீங்கள்!😂

ஐந்தாவதாக இருக்கா!

Cat Mouse GIF - Cat Mouse Computer - Discover & Share GIFs   Gato Computadora GIFs | Tenor

ஆர்வக் கோளாறில்... "மவுசை" வேகமாக உருட்டிக் கொண்டு போனதில் தமிழ்நாடு போயிட்டுது.  🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டுப் பெண் எங்கே?
தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லாம் இருக்கு.
வேண்டுமென்றே தமிழ் நாட்டை தவிர்த்தார்களா?
நாங்கள், திராவிடம் பேசிக் கொண்டிருந்தால்  இதுதான் நிலைமை.
தமிழனை எவனும் கணக்கெடுக்க மாட்டான்.

தமிழ்நாடு 5 வதாக அம்சமாய் இருக்காவு ......இனி உங்களுக்கு எந்த மாநிலம் பிடிக்கும் என்று கேட்பதற்குள் எஸ்கேப் ஆயிடனும்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Cat Mouse GIF - Cat Mouse Computer - Discover & Share GIFs   Gato Computadora GIFs | Tenor

ஆர்வக் கோளாறில்... "மவுசை" வேகமாக உருட்டிக் கொண்டு போனதில் தமிழ்நாடு போயிட்டுது.  🤣

உங்களுக்கு தோதான கோவாக்காரியை பார்க்க மெதுவாகவே போயிருக்கலாம்🤪

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.