Jump to content

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி!

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளரும், கிழக்கு பிராந்திய அமைப்பாளருமான ஸ்ராலினின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையிலான வேலைத் திட்டத்துடன் செயற்பட முன்வருகின்ற பல்வேறு தரப்புக்களையும் இணைத்து கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1319060

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில்... தமிழ் கட்சிகள், பிரிந்து நின்று போட்டியிட்டு 
முஸ்லீம்களை  வெல்ல வைக்கப் போகின்றார்கள்.
போன முறை கருணா போட்டியிட்டு.. வாக்குகள் பிரிந்து, அம்பாறை தொகுதி கைவிட்டுப் போனது.
இம்முறை... தமிழ்த் தேசிய முன்னணி, தமிழ் காங்கிரஸ், பிள்ளையான், கருணா, டக்ளஸ்... என்று 
ஐந்து முனை போட்டியில்... வாக்குகளை பிரிப்பதை தவிர, 
தமிழர் வெல்வது கடினம் என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ராலினின்

@அக்னியஷ்த்ரா@தனிக்காட்டு ராஜா

என்ன வாப்பா நடக்குது ஊர்ல? ஸ்டாலின் ஞானம் இப்ப டிஎம்வி பில இல்லையா?

மங்களா அன்ரி? கோபாலகிரிஸ்ணன் அங்கிள் ? எந்த பக்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் இன்னும் சுக்கு நூறாய் பிரிந்து சிதறுங்களேயொழிய, இதுகளை ஒன்றாய் கூட்டிச்சேர்த்து ஒரு இடத்தில குவிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2023 at 01:19, goshan_che said:

@அக்னியஷ்த்ரா@தனிக்காட்டு ராஜா

என்ன வாப்பா நடக்குது ஊர்ல? ஸ்டாலின் ஞானம் இப்ப டிஎம்வி பில இல்லையா?

மங்களா அன்ரி? கோபாலகிரிஸ்ணன் அங்கிள் ? எந்த பக்கம்?

மங்களா அக்கா கொஞ்சம் வெளிநாட்டுல இருக்கிற ஆட்கள் கதை கேட்டிருப்பா போல இழுத்துட்டு நிற்கிறா மற்றபடி ஸ்ராலின் அண்ண வந்து போனவர் பிரச்சினை இல்லை அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மங்களா அக்கா கொஞ்சம் வெளிநாட்டுல இருக்கிற ஆட்கள் கதை கேட்டிருப்பா போல இழுத்துட்டு நிற்கிறா மற்றபடி ஸ்ராலின் அண்ண வந்து போனவர் பிரச்சினை இல்லை அவ்வளவுதான்

நன்றி. ஸ்டாலின் இப்பவும் டிம்விபி தானா?

செய்தியில் சொல்லபடுவது வேற ஆளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நன்றி. ஸ்டாலின் இப்பவும் டிம்விபி தானா?

செய்தியில் சொல்லபடுவது வேற ஆளா?

ஸ்டாலின் இப்பவும் ரீ எம் வீ பிதான் நீங்க சொல்வது வேற ஆளாக இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஸ்டாலின் இப்பவும் ரீ எம் வீ பிதான் நீங்க சொல்வது வேற ஆளாக இருக்கலாம் 

நன்றி தனி.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.