Jump to content

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவற்கு சிங்கப்பூர் சட்டங்களை பயன்படுத்த திட்டம் - ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவற்கு சிங்கப்பூர் சட்டங்களை பயன்படுத்த திட்டம் - ஜனாதிபதி

By RAJEEBAN

07 JAN, 2023 | 04:04 PM
image

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்  எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளபோதிலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/145213

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நான் சொல்லேல.... புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதும் பிறகு அது நமக்கு சரிப்பட்டு வாராது என்று மாற்றுவதும் பேய்க்காட்டல் நேரத்தையும் சக்தியையும் வீணாக்கல். 

9 hours ago, ஏராளன் said:

சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ம்ம் .... சும்மா இருந்த நாட்டை சிங்கப்பூராக்கப்போறோம் எண்டு வெளிக்கிட்டு பிச்சை எடுக்குது நாடு, இதில இது வேற! "கான மயிலாட பாத்திருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச் சிறகை விரித்தாடியதாம்." பயங்கரவாதச் சட்டத்தை நீக்க சொன்னால் இன்னும் முடிவெடுக்கவில்லை, இதில சிங்கப்பூரை பின்பற்றப்போகினமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவற்கு சிங்கப்பூர் சட்டங்களை பயன்படுத்த திட்டம் - ஜனாதிபதி

இனவாதமும் உரிமை மறுப்பும் இருக்கும் வரை எதற்குமே லாயக்கில்லாத நாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த,  சிங்கப்பூரில் என்ன சட்டங்களை உருவாக்கியுள்ளார்கள் என்பதைத் தெரிந்தவர்கள் யாரேனும்  அதை இங்கு பதிவிடலாமே!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த,  சிங்கப்பூரில் என்ன சட்டங்களை உருவாக்கியுள்ளார்கள் என்பதைத் தெரிந்தவர்கள் யாரேனும்  அதை இங்கு பதிவிடலாமே!  

@goshan_che

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, island said:

தெரியவில்லை @island. நான் போன சமயங்களில் - சாதாரணமாகத்தான் சமூகவலைத்தள பாவனை இருந்தது. ஆனால் நான் சிங்கபூர் அரசியல் பேசுவதில்லைதானே.

ஒருக்கா நேரம் கிடைக்கும் போது தேடிப்பார்க்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டின் சட்டங்களையும் கொண்டு வரலாம் நல்லது நடந்தால் சரி

ஆனால் அவை ஒரு இனம் மீதோ ஒரு பகுதி மக்கள் மீதோ மட்டுமே பாவிக்கும் நிலை வரவே கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் இயற்றுகிற சட்டத்தை ஒழுங்காக கடைபிடிக்க அல்லது நிலைத்து இருக்க விடுவதில்லை அதில அடுத்த நாட்டு சட்டத்தை நிறைவேற்றின மாதிரித்தான். சட்டத்தை ஒழுங்கமைக்கமுன் அந்தச் சட்டத்தைப்பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும். தாங்கள் நினைத்ததும் இயற்றுவதும் மாற்றுவதும் இதில அறிக்கை வேற. அந்தச்சட்டத்தை பற்றிய தெளிவான விளக்கம் இவர்களுக்கு தெரியுமோ என்னவோ, சும்மா எடுத்து விடுறது. அவர்களது  சட்டம் மனித உரிமையை மதிக்கும், எல்லோரையும் சமமாக மதிக்கும் அவர்களுக்கு பொருந்துகிறது. இந்த பயங்கரவாதிகளுக்கு பொருந்துமோ? 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.