Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக பிரேஸில் ஜனாதிபதி லுலா சபதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக பிரேஸில் ஜனாதிபதி லுலா சபதம்!

போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக பிரேஸில் ஜனாதிபதி லுலா சபதம்!

தலைநகரை உலுக்கிய வன்முறையைத் தொடர்ந்து, பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வன்முறையில் ஈடுபட்ட நாட்டின் ஜனாதிபதி தலைவர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக சபதம் செய்துள்ளார்.

வெளியேற்றப்பட்ட தீவிர வலதுசாரி தலைவரின் ஆதரவாளர்களும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.

ஆனால், பல மணி நேர மோதல்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை தலைநகர் பிரேசிலியாவில் உள்ள கட்டடங்களின் கட்டுப்பாடு பொலிஸாருக்;கு கீழ் வந்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்ற கட்டட சேதத்தை லூலா நேரில் பார்வையிட்டார்.

சுமார் 200 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் ஃபிளவியோ டினோ உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். தலைநகருக்கு எதிர்ப்பாளர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட சுமார் 40 பேருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லூலா பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு வந்த மோதலை, கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தலைநகருக்கு தேசிய காவலரை அனுப்புவதற்கு முன்பு, மூத்த இடதுசாரி தலைவர் பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, அவசரகால அதிகாரங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும், அரசு கட்டடங்கள் இருக்கும் பிரதான அவென்யூ உட்பட தலைநகரின் மையப்பகுதியை 24 மணி நேரத்திற்கு மூடவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்க மறுத்துவிட்ட 67 வயதான போல்சனாரோ, கடந்த வாரம் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொள்ளாமல் புளோரிடாவுக்கு சென்றார். தாக்குதலைக் கண்டித்து, வன்முறை வெடித்த ஆறு மணி நேரத்திற்குப் பிறகு ட்விட்டரில் ஒரு பதிவில் கலவரக்காரர்களை ஊக்குவித்ததற்கான பொறுப்பை அவர் மறுத்தார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில், பிரேஸிலின் உச்ச நீதிமன்றம் பிரேஸிலியாவின் கூட்டாட்சி மாவட்ட ஆளுநரான இபானிஸ் ரோச்சாவை நீக்கியது.

https://athavannews.com/2023/1319289

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் நாடாளுமன்றத்தில் வன்முறை: கவலை தெரிவித்த பிரதமர் மோதி; என்ன நடக்கிறது?

பிரேசில் நாடாளுமன்றத்தில் வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபடும் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் லூலா சூளுரைத்துள்ளார். பிரேசில் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட உலகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலில் என்ன நடக்கிறது?

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இடதுசாரி கட்சியை சேர்ந்த லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி ஆதரவாளரான ஜேர் போல்சனாரோவுக்கு எதிராக 50.9% வாக்குகள் பெற்று அவர் பிரேசில் நாட்டின் அதிபராக பதவியேற்றார். அதிபர் தேர்தலில் லூலா வெற்றி பெற்றது முதல், அவருக்கு எதிராக முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அதிபர் மாளிகை, உச்சநீதிமன்றம் மற்றும் நாடாளுமன்ற கட்டடங்களின் முன்பாக வலதுசாரி போராட்டகாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் தீவிரமடைந்ததை ஒட்டி, கடந்த ஞாயிறன்று தலைநகர் பிரேசிலியா முழுவதும் பிரேசில் தேசிய கால்பந்து அணியின் மஞ்சள் நிற டி ஷர்ட்டை அணிந்துள்ள போராட்டகாரர்கள், தடைகளை மீறி பிரேசிலின் உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகையினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

 

 
அதிபர் மாளிகையில் வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக பிரேசிலியாவின் கவர்னர், ஐபனிஸ் ரோச்சைவை 90 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து பிரேசிலின் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மொரயீஸ் உத்தரவிட்டுள்ளார். போராட்டகாரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகை உள்ளிட்ட இடங்கள் ஞாயிறு மாலையன்று மீட்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. தலைநகர் பிரேசிலியாவில் உள்ள முக்கிய அரசுக் கட்டடங்களையும், எல்லைகளையும் 24 மணி நேரத்திற்கு மூட அதிபர் உத்தரவிட்டுள்ளார். அதிபர் லூலா, உச்சநீதிமன்றத்தை நேரில் பார்வையிட்டு கலவரத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கலவரம் தொடர்பாக இதுவரை 200 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களிடம் சட்டத்துறை அமைச்சர் ஃபிளாவ்யோ டினோ தெரிவித்துள்ளார். பிரேசில் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி, பேரணியில் கலந்து கொள்ள பிரேசில் நாட்டின் இடதுசாரி அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கலவரத்தை தடுக்க தவறியதா காவல்துறை?

அதிபர் மாளிகையில் வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கலவரம் தொடர்பாக பேசிய அதிபர் லூலா, "பிரேசிலின் வரலாற்றில் இது போல நடந்தது கிடையாது," என்று தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையை "நாசக்கரார்கள் மற்றும் பாசிஸ்டுகளின் செயல்" என அதிபர் குறிப்பிட்டார். மேலும் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டகாரர்களை தடுக்க தவறிய பாதுகாப்பு படையினரை, "திறமையற்ற, நம்பிக்கை இழக்க செய்யும் நபர்கள்" என்று அதிபர் கடுமையாக சாடினார். "போராட்டகாரர்களுக்கு தலைநகருக்கு செல்ல காவல்துறையினர் வழி காட்டும் புகைப்படங்களை நான் பார்த்தேன். இந்த வன்முறைக்கு நிதி பங்களிப்பு செய்த நபர்கள் யார் என்று கண்டறியப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்று அதிபர் லூலா கூறியுள்ளார். பிரேலிசியா நகரத்திற்குள் போராட்டகாரர்கள் நுழைய பயன்படுத்திய 40 பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளதாக, பிரேசில் நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ஃபிளாவ்யோ டினோ தெரிவித்தார். பிரேசில் நிறுவனமான ஓ குளோபோ வெளியிட்ட வீடியோவில், நாடாளுமன்ற கட்டடத்தின் பின்னணியில் கலவரத்தில் ஈடுப்பட்டவர்களுடன் காவல்துறையினர் சிரித்து பேசி, புகைப்படங்கள் எடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

முன்னாள் அதிபர் மறுப்பு

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனாரோ, பிரேசிலில் நடைபெற்றுள்ள வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வன்முறைக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் லூலாவின் பதவியேற்புக்கு பிறகு, போல்சனாரோ பிரேசிலில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

பிரேசிலில் நடக்கும் போராட்டத்தின் காரணம்

அதிபர் மாளிகையில் வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தையும் காவல்துறையினர் மூடி வைத்துள்ளனர். பிரேசிலியா நகரத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையன்று, 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாடாளுமன்ற சாலையை நோக்கி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பியதை பிபிசி நேரில் பார்த்தது. அந்த வழியாக நடந்து வந்த நபர்களின் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. "மோசடியாக நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். நான் வரலாறு படைக்க இங்கு வந்துள்ளேன். எனது மகள்களுக்காக நான் இங்கு வந்துள்ளேன்," என்று ஏ.எஃப்.பி செய்தி முகைமையிடம் பேசிய 27 வயது பொறியாளரான லிமா தெரிவித்தார். பிரேலியாவில் வசிக்கும் பலரும் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பிரேசில் நாட்டின் வரலாற்றில் சோகமான நாளாக பதிவாகும் என தெரித்தனர். பிபிசியிடம் பேசிய 21 வயதான டேனியல் லசெர்டா, "நானும் போல்சனாரோவுக்கு தான் வாக்களித்தேன். இந்த வன்முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. புதிய அதிபரை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், ஆனால் அதை வன்முறையின் மூலம் வெளிப்படுத்தக்கூடாது," என்று தெரிவித்தார். அமெரிக்க தலைநகரில் 2021ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட கலவரத்துடன் பிரேசிலில் நடைபெற்ற வன்முறையை ஓப்பிட்டு விமர்சினங்களை முன்வைத்தனர்.

பிரதமர் மோதி கண்டனம்

பிரேசிலில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர். பிரேசில் வன்முறை தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோதி, "பிரேசில் அரசுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் கவலை அளிப்பதாகவும், ஜனநாயக மாண்புகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்."

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பிரேசிலில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறையை கண்டிப்பதாகவும், புதிய அதிபர் லூலாவுக்கு உறுதுணையாக அமெரிக்க துணை நிற்கும்," என பதிவிட்டுள்ளார். ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், பிரேசில் மக்களின் முடிவுக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சில லத்தீன் அமெரிக்க நாடுகளும் அதிபர் லூலாவுக்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிந்துள்ளன.

https://www.bbc.com/tamil/articles/clj26y9r187o

  • கருத்துக்கள உறவுகள்

தான் தேர்தலில் தோற்றதை நேரடியாக பொதுவெளியில் ஏற்றுக் கொள்ளாமல், புது ஜனாதிபதியின் பதவியேற்பிலும் கலந்து கொள்ளாமல் புளோரிடா வந்து தங்கியிருக்கும் பொல்சனாரோ "வயித்துக் குத்து" என்று மருத்துவ மனையில் போய் இருக்கிறாராம்!😂

விசாரணை கோரியிருக்கும் ஒரு பிறேசில் செனட்டர் கூறிய வார்த்தைகள், இங்கே குறிப்பிடத்தக்கவை:

"Democracy is sacred, many realize it only after they lose it"

"ஜனநாயகம் புனிதமான ஒன்று, அது இழக்கப்பட்ட பின்னர் தான் பலர்  இதைப் புரிந்து கொள்கின்றனர்"

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒரு பிறேசில் செனட்டர் கூறிய வார்த்தைகள், இங்கே குறிப்பிடத்தக்கவை:

"Democracy is sacred, many realize it only after they lose it"

"ஜனநாயகம் புனிதமான ஒன்று, அது இழக்கப்பட்ட பின்னர் தான் பலர்  இதைப் புரிந்து கொள்கின்றனர்

உண்மை. ஜனநாயகத்தை அனுபவித்து கொண்டு சர்வாதிகார ஆட்சியாளர்களை ஆதரிப்பதும் அதே மாதிரியானது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!

பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!

பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவிப் பிரமாணம் செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தை ஜனாதிபதி லுலா பயங்கரவாத செயல்கள் என கண்டனம் செய்தார். அத்துடன் குற்றவாளிகளை தண்டிப்பதாகவும் உறுதியளித்தார்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, வயிற்று வலி காரணமாக புளோரிடாவில் ஆர்லாண்டோவுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி 2018ஆம் ஆண்டு கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானதற்கு பிறகு அவ்வப்போது வயிற்று வலியுடன் போராடி வருகிறார். எனினும், தற்போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 10 நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு அவர் பதவியேற்க தயாராக இருந்த போது, போல்சனாரோ பிரேஸிலில் இருந்து அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1319497

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலில் இடம்பெற்ற சம்பவங்கள் கடந்த வருடம் அமெரிக்காவில் இடம்பெற்ற சம்பவங்களை நினைவூட்டுகின்றன - அவுஸ்திரேலிய பிரதமர்

By RAJEEBAN

09 JAN, 2023 | 12:45 PM
image

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் பிரேசிலில் இடம்பெற்ற சம்பவங்களை 2021 இல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிட்டுள்ளார்.

பிரேசிலில் ஜனநாயக தேர்தல்கள் இடம்பெற்று ஜனாதிபதியாக லுலா தெரிவு செய்யப்பட்ட பின்னர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என  அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம்ஜனநாயகத்திற்கு ஆதரவாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் தேர்தல் முடிவுகளை மக்கள் வரவேற்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய எண்ணிக்கையிலான மக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் கண்டிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நெருக்கடியான தருணத்தில் பிரேசில் அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடுகள் தேர்தல்களை நடத்தும்போது நாங்கள் அதனை மதிக்கவேண்டும் ஆனால் துரதிஸ்டவசமாக கடந்த வருடம் அமெரிக்க தேர்தலின் பின்னர் ஜனவரி ஆறாம் திகதிஅமெரிக்க காங்கிரசை இலக்காக வைத்து  மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் போன்ற சம்பவங்களை நாங்கள் மீண்டும் பார்த்துள்ளோம் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

பிரேசில் நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றார். 

 

இதையடுத்து, பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

https://www.virakesari.lk/article/145316

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலில் நடப்பது என்ன? போல்சனாரோ வன்முறை குறித்து என்ன கூறினார்?

பிரேசிலில் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் தலைநகரில் கடந்த ஞாயிறன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் லூலா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப்படையினர் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தனக்கும் இந்த வன்முறை சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போல்சனாரோ மறுத்துள்ளார். பிரேசிலில் நடப்பது என்ன?

 

வன்முறைக்கான பின்னணி என்ன?

பிரேசிலின் முந்தைய அதிபராக இருந்த சயீர் போல்சனாரோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. கொரோனா தொற்றுக்கு எதிராக அவர் தீவிரமாக செயலாற்றவில்லை என்பது பிரதான குற்றச்சாட்டு. கடந்த 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரேசிலில் கொரோனா தொற்று கோரத்தாண்டவமாடி ஏராளமானோர் உயிரிழந்தனர். எனினும், கொரோனாவை வெறும் சாதாரண காய்ச்சல் என்று அதிபர் போல்சனாரோ கூறியிருந்தார்.

இதேபோல், கொரோனா தடுப்பு மருந்துக்கும் எய்ட்ஸ்க்கும் தொடர்பு உள்ளது என்று கூறி அவர் பதிவிட்டிருந்த வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோல், அமேசான் மழைக்காடுகளின் பெரும்பகுதி பிரேசிலில் உள்ள நிலையில், போல்சனாரோவின் ஆட்சிக் காலத்தில் அவை சட்டவிரோத சுரங்கத்திற்காக சுரண்டப்பட்டதாகவும் இதனை அப்போதைய பிரேசில் அரசு கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அவரது ஆட்சிக்காலத்தில் அமேசான் காடுகள் அதிகம் அழிவை சந்தித்தன. 

 

 

அவையெல்லாம் அந்நாட்டு மக்கள் இடையே மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்திய நிலையில்,  கடந்த ஆண்டு நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வலதுசாரியான சயீர் போல்சனாரோவை தோற்கடித்து ஆட்சியை தன்வசப்படுத்தினார். 

அதிபர் தேர்தலில் லூலா வெற்றி பெற்றது முதல், அவருக்கு எதிராக முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராணுவ தலையீடு வேண்டும் என்றும் லூலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறிவரும் அவர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அதிபர் மாளிகை, உச்சநீதிமன்றம் மற்றும் நாடாளுமன்ற கட்டடங்களின் முன்பாக வலதுசாரி போராட்டகாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

போல்சனாரோவின் ஆதரவாளர்கள் வேண்டுவது என்ன?

தனது ஆட்சிகாலம் முழுவதிலும் பிரேசிலின் அரசு அமைப்புகள் மீது போல்சனாரோ வைத்து வந்தார். உச்ச நீதிமன்றம் தனக்கு எதிராக செயல்படுவதாக கூறினார். வாக்குப்பதிவு முறைகளில் மோசடி செய்யப்படுவதாக கூறினார். எனினும், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்போது நிகழ்ந்துள்ள வன்முறைகளுக்கு அவர் காரணம் இல்லை என்றாலும் கூட, நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து அவரை பிரித்து பார்க்க முடியாது. ஏனெனில், போல்சனாரோவின் வார்த்தைகளை அவரது ஆதரவாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். 

 

பிரேசிலில் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்டோபரில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால்,  போல்சனாரோ மிகவும் அமைதியாகிவிட்டார். அவர் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை - லூலாவிடம் அதிபர் பதவியை ஒப்படைப்பதைத் தவிர்ப்பதற்காக புளோரிடாவுக்குப் பறந்தார் - மேலும், ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்ற தேர்தலில் தாம் அடைந்த தோல்வி குறித்து தனது ஆதரவாளர்கள் கோபம்கொள்ள அவர் அனுமதித்தார். 

 

மேலும், நாடு முழுவதும் ராணுவ தலைமை அலுவலகங்கள் முன்பு கூடாரங்கள் அமைத்த போல்சனாரோ ஆதரவாளரகள், ராணுவ தலையீடுக்கு அழைப்பு விடுத்தனர்.  கடந்த டிசம்பர் மாதத்தில் பிரேசிலியாவில் உள்ள காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதேபோல் லூலாவின் பதவியேற்பின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக போல்சனாரோ ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

 

2017ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவத்த லூலாவை அதிபராக ஏற்க மாட்டோம் என்றும் அவர் இருக்கவேண்டிய இடம் சிறையே தவிர அதிபர் மாளிகை அல்ல என்றும் போல்சனாரோ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். கியூபா அல்லது வெனிசூலாவில் உள்ளதை போன்ற ஆட்சியை அமைக்க அவர் முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். 

தலைநகர் பிரேசிலியாவின் நடந்தது என்ன?

தேர்தல் முடிந்ததும் போல்சனாரோவின் தோல்வியை ஏற்க மறுத்த அவரது ஆதரவாளர்கள், பிரேசிலியாவில் உள்ள ராணுவ முகாம் முன்பு ஆயிரக்கணக்கில் கூடினர். இவர்கள் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர். இந்த எதிர்ப்பாளர்களை அகற்றுமாறு உள்ளூர் பாதுகாப்புப் படைகளுக்கு அதிபர் லூலா உத்தரவிட்டார், ஆனால் போலீசார் பலத்தை பயன்படுத்த விரும்பவில்லை. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போல்சனாரோவின் ஆதரவாளர்கள் காவலர்கள் புடைசூழ பேரணியை தொடங்கினர்.  3 மணியளவில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை தகர்த்துவிட்டு நாடாளுமன்றத்தினுள் நுழைந்தனர். சிலர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அங்கிருந்த கலைபொருட்கள், மரச்சாமான்களை சேதப்படுத்தினர். உச்ச நீதிமன்றத்தின் கண்ணாடிகளைகளை அவர்கள் அடித்து நொறுக்கினர். 

 

பிரேசில் தேசிய கால்பந்து அணியின் மஞ்சள் நிற டி ஷர்ட்டை அணிந்திருந்த போராட்டக்காரர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களின் பிரதானமான ஆயுதமாக கற்கள் இருந்துள்ளன. போராட்டகாரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகை உள்ளிட்ட இடங்கள் ஞாயிறு மாலையன்று மீட்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதும் பிபிசி ஆய்வில் தெரியவந்துள்ளது. 

 

வன்முறையை தொடர்ந்து 40 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பேருந்தில் துப்பாக்கி இருந்ததாகவும் பிரேசிலின் நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஃபிளேவியோ டினோ,  செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார். மேலும் நேற்று 209 பேரும் இன்று 1200 பேரும் என  கிட்டத்தட்ட 1500 பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பிரேசிலில் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,@EIXOPOLITICO

காவலர்கள் போராட்டத்தை தடுக்க தவறியது எப்படி?

தலைநகர் பிரேசிலியாவில் நிகழ்ந்த வன்முறையை தடுக்க பாதுகாப்பு படையினர் போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று அதிபர் லூலா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முடிந்ததும் போல்சனாரோவின் தோல்வியை ஏற்க மறுத்த அவரது ஆதரவாளர்கள், பிரேசிலியாவில் உள்ள ராணுவ முகாம் முன்பு ஆயிரக்கணக்கில் கூடினர். இவர்கள் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர். இந்த எதிர்ப்பாளர்களை அகற்றுமாறு உள்ளூர் பாதுகாப்புப் படைகளுக்கு அதிபர் லூலா உத்தரவிட்டார், ஆனால் போலீசார் பலத்தை பயன்படுத்த விரும்பவில்லை.

 

போராட்டக்காரர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக அரசு கட்டிடங்களை நோக்கி பேரணி வந்துள்ளனர். எனினும் அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படவில்லை.  ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டதா என்று பிபிசி தரப்பில் தொடர்புகொண்டு கேட்டோம். இதுவரை எந்த பதிலும் நமக்கு கிடைக்கவில்லை .  மேலும், போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, காவலர்கள் சிலர் போராட்டக்காரகளுடன் புகைப்படம் எடுத்துகொண்ட இரு வீடியோக்களையும் பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.  மற்றொரு வீடியோவில் காவலர் ஒருவர் போராட்டக்காரர்களால் தள்ளிவிடப்படுவது பதிவாகியுள்ளது. 

 

போராட்டக்காரர்கள் கீழ் தளத்தின் வழியாக நாடாளுமன்ற மேல் தளத்திற்குள் நுழையும்போது காவலர்கள் அமைதியாக நிற்கும் வீடியோவையும் பிபிசி உறுதி செய்துள்ளது.  பாதுகாப்பு கவசங்களை கையில் வைத்திருந்த அவர்கள், பிரதான வாயிலை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். 

 

ஒரு காவலர் போராட்டக்காரர்களை கை அசைத்து அவர்களுக்கு கைவிரல் காட்டுகிறார். கூட்டம் கட்டடத்திற்குள் முன்னேறும்போது, அவர்களில் சிலர் பாதுகாப்புப் பணியாளர்களைப் பாராட்டினர்.

 

மருத்துவமனையில் போல்சனாரோ

பிரேசிலில் வரலாற்றில் ஒரு வடுவாக மாறியுள்ள இந்த தாக்குதலுக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முன்னாள் அதிபர் போல்சனாரோ அறிவித்திருந்தார். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் தான் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் டுவிட்டரில் கூறியுள்ளார். சட்டங்கள், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும்  புனிதமான சுதந்திரம் என நமது அரசியலமைப்பின் நான்கு கோடுகளையும் மதித்து பாதுகாத்து வருவதாகவும் தனது டிவிட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக தனது கணவர் கண்காணிப்பில் இருப்பதாக மிச்செல் போல்சனாரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018 இல் பிரச்சாரத்தின்போது போல்சனாரோ கத்தியால் குத்தப்பட்டார், பின்னர் அவ்வப்போது வயிற்று வலியுடன் அவர் அவதிப்பட்டு வருகிறார்.  கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே அவர் பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது நிலை கவலைப்படும் அளவுக்கு இல்லை என அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

 

பிரேசிலில் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

பிரேசிலின் தற்போதைய சூழல் என்ன?

இந்த வன்முறையை தீவிரவாத தாக்குதல் என்று விமர்சித்துள்ள அதிபர் லூலா நாடாளுமன்றத்தில் நுழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றூ எச்சரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, நாடாளுமன்றம், அதிபர்  மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றம் சூறையாடப்பட்டதை அடுத்து, முன்னாள் அதிபர் சயீர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசிலியாவின் ராணுவ தலைமையிடங்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களை பாதுகாப்புப் படையினர் அகற்றி வருகின்றனர். வலதுசாரி ஆதரவாளர்களின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக  ஸா பாலோவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். போல்சனாரோ சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். நீதி வேண்டி ஆடல், பாடல் ஆகியவற்றுடன் கூடிய போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c97jdn7v52jo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.