Jump to content

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எங்க தாய் மொழி தான் தமிழரின் அடையாளம் என்று சொன்னவரைக் காணோம்.
கொழும்பில் இருக்கும் தமிழ் மக்கள் பிறந்தவுடனேயே தமிழ் ,சிங்களம் கதைக்கினம். அவர்கள் தமிழர் இல்லையா?
இங்கு இருக்கும் எமது 2ம்,3ம் தலை முறைக்கு தமிழ் சுத்தமாவே கதைக்க தெரியாமல் இருக்கும் ..அவர்கள் தோல் எமது நிறத்தில் இருக்கும். அவர்கள் எந்த இனமாக பார்க்க படுவார்கள்?

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையை தமிழர் ஆங்கிலத்தில் பொதுவாகவே கதைக்கிறார்கள் ...அவர்கள் தமிழர்களா?

 

என்ன அக்கா இனிமேல் என்னை மென்சன் பண்ண வேண்டாம் என என் மேல் ஏரிஞ்சு விழுந்து போட்டு, இப்ப நான் சொன்னதுக்கு பதில் எழுதி, கேள்வியும் கேக்கிறியள் (என்னை கோட் பண்ணாமலே).

சரி நீங்கள் என்னை வெறுத்தாலும் நான் வெறுக்கவில்லை ஆகவே பதில் போடுகிறேன்.

———-

நீங்கள் கேட்ட கேள்விக்கு மேலதிகமாக இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கலாம்.

கிளிநொச்சியில் தமிழ் தாய், தந்தைக்கு பிறந்த வாய்பேச முடியாத, காதுகேளாதவரின் இனம் என்ன?

சரி இனி பதிலுக்கு வருவோம்.

நம் இன அடையாளம் என்ன என்பது பெரிதும் நாம் எம்மை பற்றி எவ்வாறு உணர்கிறோம் என்பதில் தங்கியுள்ளது.  அடுத்து சூழ உள்ளோர் எம்மை எப்படி உணருகிறார்கள் என்பதில் உள்ளது.

தாய்மொழி (mother tongue)  வேறு, முதன்மை மொழி (primary language) வேறு. பலசமயம் இவை இரெண்டும் ஒன்றாக இருந்தாலும், எப்போதும் அப்படி  இருக்க வேண்டியதில்லை.

2 hours ago, ரதி said:

கொழும்பில் இருக்கும் தமிழ் மக்கள் பிறந்தவுடனேயே தமிழ் ,சிங்களம் கதைக்கினம். அவர்கள் தமிழர் இல்லையா?

நீங்கள் யாரும் ஞான குழந்தைகளிடம் டீல் பண்ணினீர்களா?

நானறிய யாரும் பிறந்தவுடன் இரு மொழிகளையும் கதைப்பதில்லை. ஒரு மொழியை கூட கதைப்பதில்லை.

குழந்தை வளரும் வீட்டு சூழலை பொறுத்து அதன் தாய் மொழி அடையாளம் விருத்தி அடைகிறது. 

இதுக்கு கொழும்பு போக தேவையில்லை. இங்கே லண்டனில் பிறக்கும் குழந்தைகள் இப்போ, ஆங்கிலமும், தமிழும் புழங்கும் வீட்டில்தான் பிறக்கிறன. 4 வயதில் நேர்சரி போகும் வரை பல வீடுகளில் அவர்களுக்கு இரு மொழி பரிச்சயம் ஏற்படுகிறது. அதன் பின் வீட்டுக்கு வெளியான வாழ்க்கை ஆங்கில மயப்படுகிறது.

ஆனால் அப்படி வளர்ந்த பிள்ளைகளிடம் உன் இனம் என்ன (ethnicity) என்ன என கேட்டால் தமிழ் என பதில் சட் என வரும். எவ்வளவு கொச்சையாக தமிழ் கதைத்தாலும், திறமாக ஆங்கிலம் கதைத்தாலும், ethnicity என்ன என கேட்டாலும் யாரும் English என சொல்வதில்லை. தமிழ் என்றே சொல்லுவார்கள்.

இதுதான் இன அடையாளம்.

இது எப்படி வந்தது? வளரும் போது வீட்டில் நாம் தமிழர் எமது தாய் மொழி தமிழ் என வீட்டில் சொல்லி கொடுக்கப்பட்டதாலும், அதை இந்த பிள்ளைகள் தன்னிலைகொண்டு (subjective) உணர்வதாலும் வருகிறது.

நாளை இந்த பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்கு இது சொல்லப்படாவிடில், மொழி தொடர்பு அறுந்தே போய்விடின் - அவர்கள் தாம் தமிழர் என தன்னிலைகொண்டு உணர்வது குறைய தொடங்கும்.

அப்போ அவர்களின் தமிழ் அடையாளம் படிபடியாக இழக்கப்ப்டும் (ரியூனியன் தமிழர்). ஒரு கட்டத்தில் முழுமையாக இழக்கப்படும் (கயானா, சீ செல்ஸ், டிரினிடாட், தமிழர்).

ஆனால் வீட்டில் இந்த மொழி பேசப்பட்டால், நாம் தமிழர் என்பது சொல்லி வளர்க்கப்பட்டால் - தமிழர் அடையாளம் நூற்றாண்டுகள் தாண்டி நிலைக்கும். அம்மா, அப்பா மட்டும் தெரிந்திருந்தாலும் கூட இவர்கள் தம்மை தமிழராகவே உணர்வர் (மலேசியா, சிங்கபூர், மேற்கு). 

2 hours ago, ரதி said:

இங்கு இருக்கும் எமது 2ம்,3ம் தலை முறைக்கு தமிழ் சுத்தமாவே கதைக்க தெரியாமல் இருக்கும் ..அவர்கள் தோல் எமது நிறத்தில் இருக்கும். அவர்கள் எந்த இனமாக பார்க்க படுவார்கள்?

பிரஜா உரிமை (citizenship) : பிரிட்டிஷ்

தேசியம் (nationality) : பிரிடிஷ், இங்கிலிஷ்

பேரினம் (race): தெற்காசியர்.

இனம் (ethnicity) : தமிழர் 

தாய் மொழி (mother tongue) : தமிழ்

முதன்மை மொழி (primary language) :  ஆங்கிலம்.

சமயம் (religion): கீறிட்ட இடத்தை விரும்பிய படி நிரப்பவும்

இதுதான் இவர்களின் அடையாளங்கள்.

நாமாக வீட்டில் நீ தமிழன் என்பதை சொல்லி கொடுக்காமல் விட்டு, ஓரிரு வார்த்தை தன்னும் தமிழ் பேச முடியாமல் ஆக்கி, எமது வரலாற்று கடனை மறப்போம் ஆகில்….

அவர்கள் தன்னிலைபட்டு தம்மை தமிழராக உணர மாட்டார்கள் - ஆகவே அவர்கள் தமிழர் அல்ல.

2 hours ago, ரதி said:

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையை தமிழர் ஆங்கிலத்தில் பொதுவாகவே கதைக்கிறார்கள் ...அவர்கள் தமிழர்களா?

என்னது தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பெரும்பான்மை ஆங்கில கதைக்கிறார்களா? 🤣

ஆங்கிலம் கலந்து தமிழ் கதைத்தாலும், தாய்மொழி தமிழ், நான் தமிழன் என தன்னிலை கொண்டு உணர்ந்தால் தமிழன்.

அல்லாமல் என்னதான் மேடையில் தும்பு பறக்க தமிழ் பேசினாலும், வீட்டில் தெலுங்கை பேசி, உன் தாய் மொழி என்ன என கேட்டால் தமிழும், தெலுங்கும் என கூறினால் - அவர் தன்னிலைபட்டு தன்னை தமிழனாக உணரவில்லை என்பதே அர்த்தம் (காமாட்சி நாயுடு).

பிகு

மதம் ஒரு போதும் இன அடையாளத்தை நிறுவாது.

சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டதே சைவம்.

தம்மை சைவர் என அழைக்கும் பல மொழிமக்கள் இந்தியாவில் உள்ளர்.

ஆகவே மொழி, அதன் பால் வரும் தமிழன் என்ற தன்னிலை உணர்வு மட்டுமே எமக்கு மட்டும் உரித்தான, ஒரே அடையாளம். 

 

Edited by goshan_che
  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பிகு 2:

இன்னொரு திரியில் என்ன இருந்தாலும் நமது அடையாளம் சிறிலங்கன் என சொல்லி இருந்தீர்கள். 

சிறிலங்கன் என்பது பிரஜாவுரிமை, தேசியம்.

நீங்கள் வேறு நாட்டின் பிரஜாவுரிமை எடுத்த கணமே இலங்கை பிரஜாவுரிமை உங்களிடம் இருந்து தானியங்கியாக பறிக்கபடும் ( இரெட்டை குடியுரிமை கோராதவிடத்து).

நீங்கள் தன்னிலையாக விரும்பினால் சிறிலங்கனே எனது தேசியம் என நீங்கள் உணரலாம்.

ஆனால் இது கட்டாயம் இல்லை.

ஒரு புலம்பெயர் தமிழராக:

பிரஜா உரிமை : பிரிடிஷ்

தேசியம்: பிரிடிஷ், இங்கிலிஷ்

இனம்: தமிழ்

என்பதோடு நிறுத்தி கொள்ளலாம்.

அண்மையில் கூட குடிசன கணக்கெடுப்பில் சிறிலங்கன் என போடாமல், தமிழ் என போடவேண்டும் என்ற மிக நியாமான கோரிக்கை எழுந்தது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மதம் மாறுபவர்கள் பக்தி முத்தி வெடிக்கும் நிலையில் மதம் மாறவில்லை. எல்லாம் பொருளாதார/வேலை நிமித்தம் காரணமாக மட்டுமே.😎

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மதம் மாறுபவர்கள் பக்தி முத்தி வெடிக்கும் நிலையில் மதம் மாறவில்லை. எல்லாம் பொருளாதார/வேலை நிமித்தம் காரணமாக மட்டுமே.😎

 

எல்லரையும் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கு அவரவர் அளவில் காரணங்கள் இருக்கும்.

சிலருக்கு பொருளாதாரம்,

சிலருக்கு இப்போ இருக்கும் சமூக தளைகளில் இருந்து விடுதலை,

சிலருக்கு காதல்,

சிலருக்கு இப்போ இருக்கும் மதத்தில் நம்பிக்கை அற்று போதல்,

சிலருக்கு ஆற்றொணா துயரத்தில் இருந்து ஆறுதல்,

இப்படி ஒன்று அல்லது பல காரணங்களின் கூட்டாக இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.