Jump to content

யாழில் “கரப்பான்பூச்சி” வடையால் பரபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்தில், குறித்த உணவகத்திற்கு 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து,  யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு குறைப்பாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்றையதினம் (16) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000/= ரூபா அபராதமும், சமையற்கூடத்திற்கு 20,000/= அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடையினை மீள திறப்பதற்கான அனுமதியினையும் நீதிமன்றம் வழங்கியது.

இதையடுத்து சுமார் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த குறித்த உணவகமும், சமையற்கூடமும் நீதிமன்றின் கட்டளையினையடுத்து இன்று திறக்கப்பட்டன. R

image_539c9b35ca.jpg

Tamilmirror Online || யாழில் “கரப்பான்பூச்சி” வடையால் பரபரப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான் பூச்சி பால் குடிக்கலாம் எண்டு சொல்லீனம். அப்பிடியிருக்க கரப்பான் பூச்சி சத்தான சாப்பாடுதானே  :beaming_face_with_smiling_eyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அது "சைனா காரனுக்கு செய்த வடை போல ."...இவங்கள் மாறி தண்டம் கடட சொல்லியிருப்பார்கள். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1994/95 சந்திரிகாவின் தேர்தல் வாக்குறுதியில் ஒண்டு ஒரு இறாத்தல் பாணை ரூ 3.50க்கு கொடுப்பது.

ஆனால் மாவின் விலையை குறைக்கவில்லை.

எனவே பேக்கரிகாரர் எல்லாம் பாணை சின்னதாக்கி, இது பாணா, கேக்கா என யோசிக்கும் அளவுக்கு சின்ன சைஸ் பாண்களை வித்து கொண்டிருந்தனர்.

அப்போ இப்படி ஒரு பாணுக்குள் கரப்பான் பூச்சியை கண்டெடுத்த பெண் ஒருவர் பேக்கரி உரிமையாளரிடம் போய் நியாயம் கேட்க,

உரிமையாளர் வலு கூலாய் சொன்னாராம்,

”மா விக்கிற விலைக்கு, நீங்கள் தாற 3.50 த்துக்கு பாணுக்க சிக்கின் லெக் பீசையா எதிர்பார்கிறியள்”

என்று 🤣.

2 hours ago, குமாரசாமி said:

கரப்பான் பூச்சி பால் குடிக்கலாம் எண்டு சொல்லீனம். அப்பிடியிருக்க கரப்பான் பூச்சி சத்தான சாப்பாடுதானே  :beaming_face_with_smiling_eyes:

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் நம்ம சனத்துக்கு சின்ன சைனா என்று தெரியல🤭

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.