Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு - காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு - காரணம் என்ன?

ஜெசிந்தா ஆர்டெர்ன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

51 நிமிடங்களுக்கு முன்னர்

குறைந்த வயதில் தலைமை பொறுப்பை அடைந்த பெண் தலைவர் என்று அழைக்கப்படும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பணியில் இருந்த ஆறு சவாலான ஆண்டுகள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விவரிக்கும்போது ஜெசிந்தா சற்று தடுமாறினார். 

 

 

தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிப்ரவரி  7ஆம் தேதிக்கு முன்பாக அவர் விலகவுள்ளார். அவருக்கான மாற்றுத் தலைவரை தேர்ந்தெடுக்க வரும்நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும். 

நியூசிலாந்தில் அக்டோபர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

42 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன், கோடை விடுமுறையின் போது தனது எதிர்காலம் குறித்து யோசிக்க நேரம் எடுத்து கொண்டதாக தெரிவித்தார். "அந்த காலகட்டத்தில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வேன் என்று நம்பினேன், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நான் அதை செய்யவில்லை. எனவே, நான் பதவியில் மேலும் தொடர்ந்தால் அது நியூசிலாந்துக்கு செய்யும் அவமதிப்பு" என்று செய்தியாளர்களிடம் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார். 

 

ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017 ஆம் ஆண்டில் 37 வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது  உயரிய பதவியை பெற்ற உலகின் இளைய பெண்  தலைவர் என்று அறியப்பட்டார். 

ஒரு வருடம் கழித்து, அவர் குழந்தை பெற்றுகொண்டபோது, பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றுகொண்ட இரண்டாவது பெண் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும், அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் தனது குழந்தையுடன் அவர் பங்கேற்றார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் பின்னான மந்தநிலை, கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச் சூடு மற்றும் ஒயிட் ஐலேண்ட் எரிமலை வெடிப்பு என கடுமையான சூழல்களுக்கு மத்தியில் ஜெசிந்தா நியூசிலாந்தை வழிநடத்தினார். 

“அமைதியான சூழலுக்கு மத்தியில் உங்கள் நாட்டை வழிநடத்துவது என்று ஒன்று உண்டு. மற்றொன்று கடுமையான சூழலுக்கு மத்தியில் வழிநடத்துவது ” என்று அவர் கூறினார். 

இந்த நிகழ்வுகள் தனது பதவிக் காலத்தில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். 

ஜெசிந்தா ஆர்டெர்ன் தொழிலாளர் கட்சியை 2020 இல் மகத்தான தேர்தல் வெற்றிக்கு வழிநடத்தினார், ஆனால் அவரது உள்நாட்டுப் புகழ் சமீபத்திய மாதங்களில் பெருவாரியாக குறைந்துள்ளது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜெசிந்தா ஆர்டெர்ன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எவ்வாறாயினும், தொழிலாளர் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நம்பிக்கையில் தான் பதவி விலகவில்லை என்றும் அது வெற்றிபெரும் என்றே தான் நினைப்பதாகவும் ஜெசிந்தா குறிப்பிட்டார். 

“இந்த சவாலை தாங்க நமக்கு புதிய தோள்கள் தேவை” என அவர் தெரிவித்தார். 

 துணைத் தலைவர் கிராண்ட் ராபர்ட்சன், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தலைமைத்துவத்திற்கான வாக்கெடுப்பில் போட்டியிடப் போவதில்லை என்று கூறினார். ஒரு வேட்பாளரால்  மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற முடியாவிட்டால், வாக்குகள் தொழிலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்குச் செல்லும்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், புத்திசாலித்தனம், வலிமை மற்றும் இரக்க குணம் உடைய தலைவர் ஆர்டெர்ன் என்று பாராடியுள்ளார். 

"ஜெசிந்தா நியூசிலாந்திற்காக தீவிரமாக குரல் கொடுப்பவராகவும், பலருக்கு உத்வேகமாகவும், எனக்கு சிறந்த நண்பராகவும் இருந்து வருகிறார்" என்று அவர் ட்விட்டரில்  குறிப்பிட்டுள்ளார். 

ஜெசிந்தா ஆர்டெர்ன் காலநிலை மாற்றம், சமூக வீட்டுவசதி மற்றும் குழந்தைகளின் வறுமையைக் குறைத்தல் தொடர்பாக  தனது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை, தான் பெருமைப்படக்கூடிய சாதனைகளாக பட்டியலிட்டார். 

எனினும், நியூசிலாந்து மக்கள் தன்னை "எப்போதும் அன்பாக இருக்க முயற்சிக்கும் ஒருவராக" நினைவில் கொள்வார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார்.

“நீங்கள் கனிவாகவும், ஆனால் வலிமையாகவும், பச்சாதாபமாகவும், ஆனால் தீர்க்கமாகவும், நம்பிக்கையுடனும், ஆனால் கவனம் செலுத்தக்கூடியவராகவும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நியூசிலாந்தை விட்டுச் செல்கிறேன் என்று நம்புகிறேன். மேலும், எப்போது செல்ல வேண்டும் என்பதை அறிந்தவர், தனக்கான தலைவராக இருக்க முடியும்” என்றும் ஜெசிந்தா தெரிவித்தார். 

https://www.bbc.com/tamil/articles/ck5dx0z1yryo

  • கருத்துக்கள உறவுகள்

பைடன், புட்டின், டிரம்ப், சம்பந்தர் என அறளை பேந்தும் கதிரையை கட்டி பிடித்து கொண்டிருக்கும் ஆண் அரசியல்வாதிகள் மத்தியில்,

தனது நிகழ்சி நிரலில் பதவிக்கு வந்து தனது நிகழ்சி நிரலில் கெளரவமாக, அதுவும் என்னிடம் இந்த வேலைக்கான சக்தி இனியும் இல்லை என சொல்லி விலகும் ஜெசி…❤️❤️❤️

வேற லெவல், வேற லெவல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பிரதமர் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார் - முக்கிய பிரமுகர்கள் தகவல்

By Rajeeban

20 Jan, 2023 | 12:19 PM
image

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார் என நியுசிலாந்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தீவிரமடைந்த தடுப்பூசிக்கு எதிரான இயக்கத்திடமிருந்தே நியூசிலாந்து பிரதமர் கடும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டார் 2022 இல் பிரதமருக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகள்  மூன்று மடங்காக அதிகரித்தன என நியூசிலாந்தின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரை படுகொலை செய்யப்போவதாக எச்சரித்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் ஜெசிந்தா ஆர்டெனின் காரை துரத்தி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை பார்த்து நாஜி என சத்தமிட்டுள்ளனர் என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாராளுமன்றத்தின் முன்னால்  ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ஜெசின்டாவை கொலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமூக ஊடகங்களின் காலத்தில் ஜெசிந்தா வெறுப்பையும் கொடுமையையும் எதிர்கொண்டார் இது முன்னர் ஒருபோதும் நம்நாட்டில் இடம்பெறாதது என முன்னாள்  பிரதமர் ஹெலென் கிளார்க் தெரிவித்துள்ளார்.
 

 

https://www.virakesari.lk/article/146294

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

பைடன், புட்டின், டிரம்ப், சம்பந்தர் என அறளை பேந்தும் கதிரையை கட்டி பிடித்து கொண்டிருக்கும் ஆண் அரசியல்வாதிகள் மத்தியில்,

தனது நிகழ்சி நிரலில் பதவிக்கு வந்து தனது நிகழ்சி நிரலில் கெளரவமாக, அதுவும் என்னிடம் இந்த வேலைக்கான சக்தி இனியும் இல்லை என சொல்லி விலகும் ஜெசி…❤️❤️❤️

வேற லெவல், வேற லெவல்.

 

மிக திறமையான அரசியல்வாதி, நியூசிலாந்தில் கோவிட் காலத்தில் எடுக்கும் துணிச்சலான முடிவுகளை ஆரம்பத்தில் அவுஸ்ரேலியா அதன் சாதக பாதகங்களை கருத்தில் எடுத்து தனது கொள்கைகளை வகுப்பதற்கு உதவியாக இருந்தது, அத்துடன் அக்கால கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க அவர் எடுத்த தடாலடியான முடிவுகள், பின்னர் அதனால் ஏற்பட்ட பணவீக்கம், வீட்டு பிரச்சினைகள் என அனைத்து விடயங்களிலும் ஒப்பீட்டளவில் குறைந்த வளங்கள் கொண்ட ஆனால் மிக சிறந்த தலமை கொண்ட நாடாக அவுஸ்ரேலியாவிற்கு முன்னுதாரமாக திகழ்ந்தது.

வெளியுறவு கொள்கையில் அவர் கொண்டிருந்த தீர்க்கதரிசனம் எமது அப்போதய அவுஸ்ரேலிய பிரதமரிடம் இருக்கவில்லை, அதனை தற்போது திருத்தி கொள்ளும்முயற்சியில் புதிய அரசு முயல்கிறது ஆனால் ஏற்பட்ட பொருளாதார அரசியல் பின்னடைவினை ஈடுகட்ட முடியுமா தெரியவில்லை.

சிறந்தவர்கள் ஏன் இவ்வாறு ஒதுங்குகிறார்கள் என விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

சிறந்தவர்கள் ஏன் இவ்வாறு ஒதுங்குகிறார்கள் என விளங்கவில்லை

ஓரளவுக்கு மேல் பேராசை படாமால் ஒதுங்கிறார்கள் - அதனால்தான் அவர்கள் சிறந்தவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக தொடர்ந்தும் இருப்பேன் பதவியின் இறுதி நாளில் ஜெசிந்தா ஆர்டென் உருக்க உரை

By RAJEEBAN

24 JAN, 2023 | 03:19 PM
image

நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து ஜெசின்டா ஆர்டன் இன்று பிரியாவிடை பெற்றுள்ளார்.

பதவியின் இறுதி நாளான இன்று தனது மௌரி இன மக்கள் மத்தியில்  ஆற்றிய உரையில் நியூசிலாந்து மக்கள் தன்மீது செலுத்திய கருணை பச்சாதபம் குறித்து அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக இருப்பதற்கு தயார் என  ஜெசின்டா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியின் இறுதி நாளான இன்று அவர் மயோரி இனத்தை சேர்ந்த பெரியவர்கள் அரசியல்வாதிகள் சகிதம் ரட்டன என்ற நகரிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார் அங்கு அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.

எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியத்தை அளித்தமைக்காக  இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி என ஜெசிந்தா ஆர்டென் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

KVd8xGOC.jpg

கொரவெய் என  அழைக்கப்படும் மாவேரி இனமக்களின் உடையில் காணப்பட்ட அவர் பான்ட் வாத்தியங்கள் இசைக்க தனது கட்சியின் உறுப்பினர்களுடன் மைதானமொன்றிற்கு சென்றார் அங்கு அவரின் சமூகத்தை சேர்ந்தவர்கள் புகழாரம் சூட்டும் விதத்தில் உரையாற்றினார்கள்.

அன்பு செலுத்துவதற்கு இவ்வளவு விரைவாக கற்றுத்தந்தமைக்கு நன்றி என ஒருவர் தெரிவித்தார்.

நான் இங்கு உரையாற்றும் எண்ணத்துடன் வரவில்லை என ஆர்டென் தெரிவித்த போதிலும் அங்கு காணப்பட்டவர்கள் அவரை உரையாற்றுமாறு கேட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய ஜெசிந்தா ஆர்டென் நியுசிலாந்து மக்கள் நியுசிலாந்திற்கான எனது ஒட்டுமொத்த பணி அன்பு பச்சாதபம் கருணை ஆகியவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

நான் பல விடயங்களிற்கு தயார் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராகவும்  சகோதரியாகவும்   தாயாகவும் விளங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/146582

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசி இல்லாத அரசியல் உலகில் எனக்கு வாழப்பிடிக்கவில்லை🤣.

ஏதோ சனா விற்காக வாழ்கிறேன்🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20/1/2023 at 09:33, vasee said:

சிறந்தவர்கள் ஏன் இவ்வாறு ஒதுங்குகிறார்கள் என விளங்கவில்லை.

நல்லவர்கள்,சிறந்தவர்கள்,மனிதநேயமுள்ளவர்கள்,யதார்த்தமானவர்கள்,நீதி நியாயமானமானவர்கள் அரசியலுக்கு வந்தால் ஒரு சிறு காலத்துடன் ஒதுங்கி விடுவதே சிறந்தது.
இல்லையேல்.......
கொன்று விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.