Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இதே யூத இனம் இன்று பலஸ்தீனத்தில் என்ன செய்கின்றார்கள்? செய்வதெல்லாம் சரியா?

பலஸ்தீனம் என்ற சொல் உருவாக முன்னமே இஸ்ரேல் என்ற நாடு உருவாகி விட்டது.

ஒரு நாடற்ற தமிழனாக, தம் தேசத்தை ஆயிரமாண்டுகால ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட யூதர்களின் மன நிலையை நான் பூரணமாக புரிந்து கொள்கிறேன்.

ஆகவே நான் எப்போதும் இஸ்ரேஸ் என்ற நாட்டினை இல்லாமல் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தில்லை.

ஆனால் தொடர்சியான குடியேற்றங்கள் மூலம், ஐநா பிரகடனங்களை மீறி இஸ்ரேல் நிலத்தை அபகரிப்பதை, கண்மூடிதனமாக பொதுமக்களை குறிவைப்பதை, வெறுக்கிறேன்.

அதே சமயம் இஸ்ரேலும், அமரிக்காவும் இல்லாவிடில், இப்போ முகமட் குமாரசாமி, அகமட் கோசானுடன் உரையாடும்படி ஆகி இருக்கும் எனவும் புரிகிறேன்.

ஆகவே என் நிலைப்பாடு it’s complicated 🤣
ஆனால் Camp David உடன்படிக்கை அடிப்படையில் இரு அயல் தேசங்களாக, ஒட்டுமொத்த ஜுருசலேம் ஒரு உலக நகராக இருந்தால், அமைதி வந்தால் நல்லது என்பது என் நிலைப்பாடு.

பிகு

ரஸ்யா-உக்ரேன் பற்றிய கேள்விகளுக்கு பதில் வராது. மன்னிகவும்.

Edited by goshan_che

  • Replies 55
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

பிகு

ரஸ்யா-உக்ரேன் பற்றிய கேள்விகளுக்கு பதில் வராது. மன்னிகவும்.

நானும் உங்கள் கந்தல் படலையை அங்கும் இங்கும் ஆட்டப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2023 at 15:08, பையன்26 said:

இரு நாட்டு பிர‌ச்ச‌னைக‌ளில் த‌மிழ‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் இருந்தே மூக்கை நுழைக்காம‌ இருந்து இருந்தா ந‌ம‌க்குள் தேவை இல்லா க‌ருத்து மோத‌ல்க‌ள் வ‌ந்து இருக்காது

நன்றி!

இதனை நானுட்படப் பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால், இங்கே ரஸ்யா - உக்கிரேன் எனக் கருத்தாடல் நடைபெறுகிறது. அது தப்பில்லை. யாழினது அடைவே கருத்தாடல்தானே. அதேவேளை அந்தக் கருத்தாடல் ஊடாக தெளிவுபெறாவிடின் பயனற்றதே.  கருத்துகளின் தர்க்க நியாயம் எனக்கானதகாவா அல்லது முழு உலகுக்கானதாகவா அல்லது பொத்தாம் பொதுவானதாகவா என்பதே சிந்தனைக்குரியது. ஆக்கிரமிப்புக்கெதிரான போரிலே, ஆக்கிரமிப்பாளனை நியாயப்படுத்துவது நீண்டகாலமாக ஆக்கிரமிப்பிற்கும், இன  அழிப்பிற்கும் உள்ளாகும் இனமென்றவகையிற் பொருந்துமா? அமெரிக்க எதிர்நிலை என்பதற்காக ரஸ்யா செய்வதெல்லாம் சரியா, என்பதையும் சீர்தூக்கிபார்க்க வேண்டாமா?

எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் கவசமாக இருந்த ஆயுதபலத்தைச் சிறீலங்கா சிதைக்கக் கரணியமாக இருந்த இரு நாடுகளும் இன்று மோதுகின்றன. இவர்களை ஆதரிப்பதாலோ அன்றி எதிர்ப்பதாலோ என்ன மாற்றம் நிகழப்போகிறது. இது ஒரு தேவையற்ற அழிவு யுத்தம். உலகமே பெரும் பொருண்மியச் சுமையைத் தாங்கவேண்டிய நிலை. கொரோனாவிலிருந்து மெதுவாக உலகு மூச்செடுக்க முயற்சிக்க இந்த யுத்தம் தொடங்கி மீண்டும் உலகை வீழத்;தியுள்ளது. யேர்மனியிலே 50வீதமான சிறுவர்கள் உணவுப்பற்றாக்குறையோடு எனப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. யேர்மனிக்கே இந்தநிலையென்றால் மூன்றாம் உலக நாடுகளின் நிலை என்ன? 

மூன்றுவேளை அளவு உணவோடு கடந்து சென்ற காலம் போய் ஒரு நேர உணவே வினாவாகியுள்ளது. போரின் விளைவாக ஏற்பட்டுள்ள இந்தநிலைக்கு யார் பொறுப்புக்கூறுவது. அமெரிக்காவா? ரஸ்யாவா? உக்ரேனா? அல்லது உலகா? தோல்வியடைந்த ஐநாவும் வெறுமனே கையை பிசைந்துகொண்டு நிற்கிறது. சிறியதொரு சிறிலங்காவையே தட்டிக்கேட்டு பெரும் இன அழிப்பைத் தடுக்க முடியாது மூட்டை முடிச்சோடு வெளியேறி இன அழிப்புக்கு வழிவிட்ட நிலை. போர் நிற்பதற்கான எந்தவொரு சான்றையும் காணவில்லை. அமைதியை விரும்பும் உலக மக்கள் வீதிக்கிறங்காதவரை இது தொடரவே போகிறது. சிறுமதியோரிடம் சிக்குண்ட அரசுகளும், படைபலமும் அழிவுச் சக்திகளே என்பதை மனம்கொள்வோம். ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு நியாயம் இருக்கலாம் என்பது சரியானதா? சிந்திக்கவேண்டியோராகத் தமிழீழத்தவரும் உள்ளனர். 

அன்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nochchi said:

வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ ப‌திவு
மிக்க‌ ந‌ன்றி நொச்சி ஜ‌யா ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உக்ரைன் போர் பற்றி விவாதிப்பது ஈழத்தமிழர் அதனுள் மூக்கை நுழைக்கிறார்கள் என அர்த்தமாகாது! (நமக்கே மூக்கில்லாத போது எப்படித் தான் நுழைப்பது😂?).

ஆனால், இதையும், ஏனைய உலக விவகாரங்களையும் விவாதிப்பதில் நமக்கு அனுகூலங்கள் இருக்கின்றன - தீமைகள் எவையும் இல்லை.

1. இந்த விவாதங்களை உலக இராணுவ, அரசியல் வரலாற்றை அறியாதோருக்கு தெரியப் படுத்தப் பயன்படுத்தலாம். இதையே கோசான் பல உக்ரைன் ரஷ்ய போர் பற்றிய திரிகளில் செய்து வருகிறார், நேரம் அனுமதிக்கும் பட்சத்தில் தொடர்ந்து செய்ய வேண்டுமென்பது என் வேண்டுகோள்.

2. என்னைப் பொறுத்தவரை, உக்ரைன் ரஷ்ய பிரச்சினை பற்றிய விவாதங்கள் ஈழத்தமிழர்களின் உலக அரசியல் அறிவு, பார்வைகள் பற்றிய ஒரு நோயறியும் (diagnostic) கருவியாக இருக்கிறது.கடந்த ஐந்து வருடங்களாக, போலியான தகவல்கள், வரலாற்றுத் திரிப்புகள், தகவல்களின் தரக்கட்டுப்பாடு என்பன பற்றி யாழில் அடிக்கடி சுட்டிக் காட்டியிருக்கிறேன். எனவே,  ஹிற்லர் கூட "நல்லவராகக்" காட்டப்படுகிற இன்றைய  நிலை என்னுடைய எச்சரிக்கைக் குறிப்புகளை சரியென நிருபிக்கின்றன. போலி வரலாற்றின் பின்னால் எடுபட்டுப் போகும் இந்த அடிப்படை மனநிலையை எப்படி மாற்றுவது என்று யோசிக்கவும் இந்த விவாதங்கள் பயன்படும்!  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

1. இந்த விவாதங்களை உலக இராணுவ, அரசியல் வரலாற்றை அறியாதோருக்கு தெரியப் படுத்தப் பயன்படுத்தலாம். இதையே கோசான் பல உக்ரைன் ரஷ்ய போர் பற்றிய திரிகளில் செய்து வருகிறார், நேரம் அனுமதிக்கும் பட்சத்தில் தொடர்ந்து செய்ய வேண்டுமென்பது என் வேண்டுகோள்.

இது ஒரு மிகவும் தேவையான வேண்டுகோள். ரஷ்யா, புதினை பற்றி பொய்கள் புரட்டு கதைகளாலே இலங்கை தமிழர்கள் பலர் மூளை சலவை செய்யபட்டு  மேற்குலகத்தில் வாழ்கிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய போது கோஷான் சே ஆச்சிரமத்தில் இருந்த காரணத்தால் எழுத முடியவில்லை. ரஞ்சித் அண்ணா தான் அப்போது எழுதி விளங்கபடுத்தினர். பின்பு அவர் வந்து எழுத தொடங்கினார். விசுகு அய்யாவும்  இணையவன் அண்ணா நல்ல விளக்கங்களை தருகின்றனர். பலருக்கு உண்மைகளை தெரிந்து கொள்ளவும், சரியாக நேர்வழி சிந்திகவும் குழப்பமான தமிழ் உலகில் இவை உதவும்.

6 hours ago, Justin said:

என்னைப் பொறுத்தவரை, உக்ரைன் ரஷ்ய பிரச்சினை பற்றிய விவாதங்கள் ஈழத்தமிழர்களின் உலக அரசியல் அறிவு, பார்வைகள் பற்றிய ஒரு நோயறியும் (diagnostic) கருவியாக இருக்கிறது.கடந்த ஐந்து வருடங்களாக, போலியான தகவல்கள், வரலாற்றுத் திரிப்புகள், தகவல்களின் தரக்கட்டுப்பாடு என்பன பற்றி யாழில் அடிக்கடி சுட்டிக் காட்டியிருக்கிறேன். எனவே,  ஹிற்லர் கூட "நல்லவராகக்" காட்டப்படுகிற இன்றைய  நிலை என்னுடைய எச்சரிக்கைக் குறிப்புகளை சரியென நிருபிக்கின்றன. போலி வரலாற்றின் பின்னால் எடுபட்டுப் போகும் இந்த அடிப்படை மனநிலையை எப்படி மாற்றுவது என்று யோசிக்கவும் இந்த விவாதங்கள் பயன்படும்!  

💯

ஹிற்லர் நல்லவர், புதின் உத்தமர் என்பதால் உலகமே அவரை போற்றுகிறது, காந்தியை இந்தியர்களே மதிப்பதில்லை 😭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.