Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை இல்லாத பிரேரணை!!!!

தனி நபர்களின் விருப்பதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது!! 15 members have voted

  1. 1. உங்கள் அமோக ஆதரவை எதிர்பார்கிறேன்!!

    • தனி நபர்களின் விருப்பதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது சரி!!
      4
    • தனி நபர்களின் விருபதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது பிழை!!
      11

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கு வணக்கமுங்கோ அட நாமளே தான் நீண்ட நாளைக்கு பின் உங்கள் அனைவரையும் இந்த பக்கத்தில் புதிய தலைப்புடன் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி..........எல்லாரும் தலைப்பு தொடங்கீனம் என்னால முடியாம இருக்குது என்று சரியா பீல் பண்ணி கொண்டு இருந்தனான் கிடைத்து போட்டு ஒரு தலைப்பு.......... :P

இப்ப விசயதிற்கு வாரேன் அது தான் இந்த புத்துமாமா இருகிறார் அவர் சிட்னிகோசிப் என்று எழுதுவார் நானும் அதை விரும்பி வாசிகிறனான் கருத்தும் எழுதுறனான் நம்ம சுண்டல் அண்ணாவோட சேர்ந்து அவர் கடைசியா சிட்னி கோசிப் 29 (பிரிந்துவிட்டாங்க) என்று ஒரு தலைப்பு எழுதினவர் அதில நானும் சுண்டல் அண்ணாவும் நிறைய கருத்துகளை எழுதினாங்கள்..............அது கருத்து மாதிரி இருக்குதோ இல்லையோ வேற விசயம் ஆனா இன்றைக்கு பார்க்கும் போது அந்த பிரிவை காணவில்லை..........உடனே கருத்துகள் மாற்றங்களிற்கு சென்று பார்த்தா அங்கையும் மாற்றம் செய்யபட்டதாக கூறபடவில்லை :angry: ...........அப்ப அந்த பதிவை தூக்கி போட்டினம் என்று விளங்குது............

ஓ எழுதினவருக்கு நிர்வாகம் தனிமடலில விளக்கம் கொடுத்து இருக்கலாம் அதை பற்றி எனக்கு தெரியா ஆனா அதற்கு கீழே வேலைவட்டி இல்லாம பொன்னான கருத்துகளை இட்ட நாங்கள் எல்லாம் இதை எப்படி அறிந்து கொள்வது............. :blink:

பிரிந்து போயிட்டாங்க என்று தலையங்கம் எடுக்கபட்டதிற்கு காரணம் நீங்க ஏதாவது கொடுத்து இருபீங்க......இந்த விவாதம் தேவையற்றது என்று சிலர் கூறினார்கள் என்று சொல்லி இருக்கலாம்.............அப்படி சிலர் தேவையற்றது என்று சொன்னா தூக்கிவிடுவீங்க என்றா அந்த சிலர் நேராக வந்து விவாதித்திருக்கலாம் எது சரி பிழை என்பதை காட்டி இருக்கலாம்........அவ்வாறு கூறவோ அல்லது விவாதிக்க ஏலாதவர்கள் ஏதாச்சும் சொன்னால் கருத்தை தூக்குவது என்றா என்ன நியாயம்..... :angry: ........

இப்ப எக்சாம்பிளுக்கு யாழில உலக செய்தியில் காதலித்த கழுதைகள் இரண்டு பிரிந்து போய்விட்டன் என்று வருகிறது அதை சுண்டல் அண்ணா போடுறார் என்று வையுங்கோ நான் வந்து இந்த கழுதையை பற்றிய விவாதம் பிழை எடுத்துவிடுங்கோ என்றா எடுத்து போடுவீங்களா..........என்ன கொடுமை சார்!!!!!!! :lol:

ஆகவே கருத்துகளம் என்றால் கருத்துகளை விவாதிபதிற்கான தளம் அதில் பல்வேறுபட்ட கருத்துகளும் வரும் விவாதத்தில் பங்குபற்றாம.........விவாததிற்குரிய விடயம் இல்லை என ஒரு சிலரின் தனிபட்ட (தனிநபர் ஆசைக்கு) கருத்துகளிற்காக ஒரு நபரின் விடயத்தை தூக்குதல் அதையும் வெளிபடையாக கருத்துகள் மாற்றங்களிள் கூறாமை என்பது.........எதுவென்று இதை வேற என்ட வாயால சொல்ல வேண்டுமா..........என்ன கொடுமையப்பா.......... :angry: .

அப்ப இந்த விவாதம் தேவையில்லை என்று சொன்ன நபர் கருத்துகள் மாற்றங்களிளும் இதை போடவேண்டாம் என்று சொன்னவரோ...............என்ன எல்லாம் உலகத்தில வெறி சாறி யாழில நடக்குது!!

மு.கு -இப்ப நான் இதை எழுதிட்டேன் யாழில நான் என்ன ஒழுங்கா செய்தேன் அரட்டையை தவிர என்று எல்லாம் தேவையில்லாத விவாததிற்கு வருபவர்களுக்காக பேபியின் பதில் இது.........அட ஒன்றுமே உறுபடியா செய்யவில்லை தான் ஆனா இப்படியான அறிவுபூர்வமான கேள்விகளை நான் கேட்பேன் பாருங்கோ(அட இதில என்ன அறிவுபூர்வம் என்று நீங்க நினைகிறது விளங்குது).......

ஆகவே எனக்கு இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் தராட்டியும் மெஞ்ஞான விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...........

இத்தால் சகலருதும் அறிவது

எனக்கு மெஞ்ஞான விளக்கம் நிர்வாகம் தராதுவிடத்தில் நான் வாக்குகளை கேட்பேன் தவிர வெளியேற மாட்டேன் என்பதையும் சகல வாக்காள பெருமக்களிற்கும்........... அவுஸ்ரெலிய பிரதமர் ஜான்காவர்ட் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்............. :lol:

*மீண்டும் மற்றுமொரு இனிய தேர்தல் களத்தில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறும் நான் யாழ்கள் மக்கள் பிரதிநிதி ஜம்மு பேபி................. :P

ஜம்மு பேபி பஞ் -பிரியிறவன் பிரிய தான் செய்வான் மறைக்கிறவன் மறைக்க தான் செய்வான் தூக்குறவன் தூக்க தான் செய்வான் வாக்கெடுக்கிறவன் வாக்கெடுக்க தான் செய்வான்...........யாழ் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்................

அப்ப நான் வராட்டா.............. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யம்மு

உங்கட கேள்வி புரியல்ல. எந்தத் தனிநபற்ற விருப்பத்துக்கு அமைவாக நீங்கள் சொன்ன தலைப்பைத் தூக்கினவை என்று சொல்லுங்களேன். எமக்கும் பிரியோசமாக இருக்கும். இப்படி நீங்க எழுதக்க அந்தத் தலைப்பில் உள்ளது எல்லாம் மெத்தச் சரி போலவும், நிர்வாகத்தில் தான் ஏதோ பிழை மாதிரியும் சடைவது போலக் கிடக்கே.

புத்தர் உங்கட சொந்த மாமா என்று சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனா அதுக்காக அவர் செய்றது எல்லாம் நியாயம், எழுதுறது எல்லாம் நியாயம். நிர்வாகம் ஏதோ அடுத்தவர்களின் சொல்லைக் கேட்டு இயங்குது எண்ட கணக்கில் திசை மாத்தி அனுதாபம் தேடுவது போலத் தான் உங்கட கருத்துக் கிடக்கு.

சமூக நலன் கருதி சில ஆக்கங்களை நிர்வாகம் தூக்ககியிருந்தால் அதை தப்பெண்டு சொல்ல முடியாது

உங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறதுபோல் தெரிகிறது

ஆனால் நான் இங்கு வாக்களிக்கவில்லை

  • தொடங்கியவர்

மதனராசா மாமா !!

புத்து மாமா செய்தா என்ன மதனராசாமாமா செய்தா என்றால் என்ன பிழையா இருந்தா நிச்சயம் சொல்லுவன் பிழை என்று இப்ப பாருங்கோ அவர் சிட்னி கோசிப் என்று எழுதினவர் தான் அதில எழுதினதை இதில போடுறன் பாருங்கோ........அதை எடுத்தது சரி அதை கருத்துகள் மாற்றங்களிள் போடவில்லை அத்தோட அதை எடுத்துவிட்டு அவருக்கு மடல் போட்டினமோ தெரியாது ஆனா அதற்கு கீழே கருத்து வைத்த எங்களுக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது..........ஆனால் யாரோ சொன்னவையாம் அது தான் எடுத்தவை என்று அறியமுடிந்தது மாமோய்............இப்ப இந்த தலைப்பில் வந்த விடயம் பிழை என்றா அந்த ஆள் என்ன செய்திருக்க வேண்டும் தலைப்பில வந்து வாதாடி இருக்க வேண்டும் அதை விட்டு போட்டு நீக்க சொல்லி சொல்ல அதை நீக்குறது என்றா அத்தோட நீக்கினதை கூட கருத்துகளிள் மாற்றங்களிள் போடவில்லை.......அப்ப ஆக்கம் எழுதினருக்கு மட்டும் தான் விசயம் என்ன என்று சொல்லுவீனம் என்றா என்னை மாதிரி உங்களை மாதிரி சிறந்த கருத்துகளை எழுதுற ஆட்களிற்கு என்ன கொடுமை மாமா.............. :blink:

இந்தாங்கோ பதிவை உடனே பாருங்கோ நான் எடிட் பண்ணிடுவன் மாமா............ :lol:

Edited by Jamuna

  • தொடங்கியவர்

சமூக நலன் கருதி சில ஆக்கங்களை நிர்வாகம் தூக்ககியிருந்தால் அதை தப்பெண்டு சொல்ல முடியாது

உங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறதுபோல் தெரிகிறது

ஆனால் நான் இங்கு வாக்களிக்கவில்லை

சிவா அண்ணா சமூகநலன் கருதி தூக்கியிருந்தாலும் அதற்கான காரணத்தை வெளிபடையாக கூறி இருக்க வேண்டும்..........ஒரு கருத்தை தூக்கினால் கருத்துகள் மாற்றங்களில் பதியவேண்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை.........அது தான் எனக்கு கேள்வி அண்ணா மற்றம்படி சமூக நோக்கமாக இருந்தாலும் அண்ணா தனி ஒருவரின் கருதிற்கு முன்னுரிமை கொடுக்க கூடாது என்பது என் தாழ்மையான கருத்து..........அத்துடன் ஒரு சமூகத்தில் நடக்கும் பிழைகளை சுட்டி காட்டலாம் அதில் பிழை இருந்தா சம்மந்தபட்டவர்கள் அதை பற்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா அண்ணா.............. :blink:

அமோக ஆதரவா அது இருகட்டும்............சிவா அண்ணா வாக்களிக்கவில்லையா நீங்கள் நடுநிலைமை என்று எனக்கு நல்லா தெரியும் தானே......... ;)

நன்றி அண்ணா............

ஜெனரல்,

புத்து மாமாவின் ஆக்கத்தை நானும் பார்த்து இருந்தேன். பதில் கருத்தும் எழுதி இருந்தேன். நான் இறுதியாக பார்த்தவரைக்கும் அந்த கருத்தாடலில் பிழை அல்லது குற்றம் ஒன்றையும் காணவில்லை.

மேலும், உங்கள் கருத்துக்கணிப்பில் மொழி - பொருள் மயக்கம் இருக்கின்றது என்று நினைக்கின்றேன். நீங்கள் அதில் என்ன கேக்கிறீங்கள் எண்டு விளங்கவில்லை..

இப்படி இருக்கு..

தனி நபர்களின் விருப்பதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது சரி!!

தனி நபர்களின் விருபதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது பிழை!!

??

நிருவாகம் ஆக்கங்களை தூக்கும்போது தூக்குகின்றது. தனிநபர்களிடம் விருப்பம் கேட்பது இல்லையே? நீங்கள் என்ன சொல்லுறீங்கள்?

புத்துமாமா ஒரு சிறந்த படைப்பாளி. நான் அவர் எழுதுவது எல்லாவற்றையும் விரும்பி வாசிப்பேன். அவை எல்லாவற்றுக்கும் பதில் கருத்தும் எழுதுவேன். நீங்கள் சொல்வது போல் நிருவாகம் அவரது படைப்புக்களை ஏன் தூக்கியுள்ளது என்று தெரியவில்லை. எங்கு என்ன தவறு நடந்தது?

  • தொடங்கியவர்

ஜெனரல் அவர்களே!!

வணக்கம் நீண்ட நாட்களின் பின் உங்கள் வருகையிட்டு ஆனந்தம்.......... :lol:

தற்பொது எனக்கு விளங்குது கருத்து கணிப்பில் பொருள் மயக்கம் இருகிறது என்று எப்படி மாற்றுவது நல்லது குருவே...........அதாவது இந்த ஆக்கத்தை ஒரு தனிபட்ட நபரின் வேண்டுதலிற்கமைய யாழில் இருந்து அப்புறபடுத்தி இருக்கபட்டுள்ளது,அதை பற்றி பகிரங்கமாக கருத்துகள் மாற்றங்களிள் கொடுத்து இருக்கலாம்,அதன் கீழ் கருத்துகளை எழுதிய நாங்களும் அறிந்து இருக்கலாம் அவ்வாறு செய்யபடவில்லை............அவருக்கு மடல் அனுப்பினார்களோ அதை பற்றி எனக்கு தேவையில்லை...........ஏன் என்றா அதில் எல்லாரும் கருத்துகளை எழுதிகிறோம்............இப்படி கள உறவுகள் கருத்துகளை எழுதும் போது ஒரு தனி நபர் சொன்னார் என்ற காரணதிற்காக இதை அப்புறபடுத்துவது அவ்வளவு நல்லது இல்லை தானே ஜெனரலே எப்படி கணிபீட்டில் கேட்பது என்பதை என்க்கு கொஞ்சம் கூறமுடியுமா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் யாரோ சொன்னவையாம் அது தான் எடுத்தவை என்று அறியமுடிந்தது மாமோய்............இப்ப இந்த தலைப்பில் வந்த விடயம் பிழை என்றா அந்த ஆள் என்ன செய்திருக்க வேண்டும் தலைப்பில வந்து வாதாடி இருக்க வேண்டும் அதை விட்டு போட்டு நீக்க சொல்லி சொல்ல அதை நீக்குறது என்றா அத்தோட நீக்கினதை கூட கருத்துகளிள் மாற்றங்களிள் போடவில்லை.

இங்க வந்து நான் புத்தரைக் குறை சொல்லவில்லை. உங்கட தலைப்பில இருக்கின்ற பிரச்சனையைத் தான் சொல்லுறன். மற்ற ஆட்களின் சொல்லைக் கேட்டு நிர்வாகம் இயங்குற மாதிரி நிர்வாகம் மேல அவதூறை வீசுறியள்.

ஆனால் யாரோ சொன்னவையாம் அது தான் எடுத்தவை என்று அறியமுடிந்தது

என்று ஏதோ குறுட்டு நம்பிக்கையில் பந்தை வீசுவது சரி மாதிரி எனக்குத் தோணல்லை. உங்களிடம் யார் சொல்லித் தான் நிர்வாகம் தூக்கினது எண்டதற்கு ஆதாரம் இருக்குதோ?அப்படிச் சொன்ன ஆளிண்டை பெயரை வெளியிடுவதில் தப்பில்லை என்று தான் நான் நினைக்கின்றன். இப்படி இனம் தெரியாத ஒரு ஆளைக் குற்றம் சாட்டி நியாயப்படுத்துறதை விட, குறித்த ஆளைக் காட்டி இவர் தான் தூக்க வைச்சவர் என்று சொல்ல வைக்கின்றது சரியான வேலை.

யமுனா நிச்சயம் ஆதாரம் வைச்சிருப்பா என்று நினைக்கின்றன். நிர்வாகம் அதுக்கு இடமளித்து யமுனா சொல்லவாறது உண்மையா பொய்யா என்று சொல்ல விடவேணும். இது பலருக்கு பாடமாகவும் இருக்கும்.

  • தொடங்கியவர்

மதனராசாமாமா!!

மாமோய் தலைப்பில பிரச்சினை இல்லை என்று நினைகிறேன் என்னுடைய கேள்வி ஆக்கத்தை எடுத்தவை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் தானே தனிபட்ட ஒருவருக்கு மட்டும் சொல்லுறது அவ்வளவு நல்லது இல்லை தானே மாமா............. :lol:

பொருள் மயக்கம் ஏற்பட்டுள்ளதை தவிர்க்க வழி இந்தக் கருத்துக்கணிப்பை அழித்துவிட்டு மீண்டும் இன்னொரு கருத்துக்கணிப்பை தெளிவான விளக்கத்துடன் ஆரம்பிப்பது. நீங்கள் இங்கு பதிந்த ஆரம்ப கருத்தினை எடிட் செய்யபோனால், அதில் பொல் ஒப்சன்ஸ் எண்டு இருக்கும். அங்க போய் இத அழிப்பதற்கு வசதி இருக்கு. அழிச்சுப்போட்டு, பிறகு மீண்டும் கருத்துக்கணிப்பை அதில் தெளிவாக புதிதாக எழுதிவிட்டு பிறகு சப்மிட் மொடிபைட் போஸ்ட் ஐ கிளிக் பண்ண புதிய கருத்துக்கணிப்பு தோன்றும்.

அதாவது நீங்கள் சொல்லுறீங்கள், புத்துமாமா எழுதிய இந்த கருத்தாடலை யாரோ ஒரு கள உறவு நிருவாகத்திடம் முறைப்பாடு செய்து அகற்றிவிட்டார். இதைப்பற்றி புத்துமாமாவிற்கு நிருவாகத்தினால் அறிவித்தல் கொடுக்கப்படவில்லை என்று! அப்படித்தானே?

கருத்தாடலில் அல்லது தலைப்பில் பிழைகள் இருந்தால் எவரும் ரிப்போர்ட் பட்டனை அழுத்தி நிருவாகத்திடம் முறையீடு செய்யலாம். நானும் இவ்வாறு பல தடவைகள் முறைப்பாடு செய்து உள்ளேன். ஆனால் புத்துமாமாவின் இந்த கருத்தாடலை ஒருவர் நிருவாகத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு அதில் என்ன பாரதூரமான பிழை இருந்தது என்று தெரியவில்லை.

புத்துமாமா அவுஸ்திரேலியாவில் உள்ள பல பிரச்சனைகளை, சம்பவங்களை யாழின் ஒரநேரடிச் செய்தியாளராக இருந்து உலகில் வாழும் தமிழ் மக்களிற்கு அறிவித்துக்கொண்டு இருக்கின்றார். இது வரவேற்கப்படவேண்டிய ஒரு சுயபடைப்பு. ஏனென்றால் யாழில் இருப்பது எல்லாம் வெட்டி ஒட்டப்பட்டவை. இப்படியான ஆக்கங்கள் யாழில் வருவது அருமை. மேலும், எங்களுக்கு அவுஸ்திரேலியா பற்றி (அவுஸ்திரேலிய தமிழர்கள் பற்றி) நிறைய விசயங்ககளை அறியக்கூடியதாக உள்ளது.

புத்துமாமா தொடர்ந்து தனது படைப்புக்களை எமக்கு சுவையாகத் தருவதற்கு நிருவாகம் உதவிபுரியும் என நினைக்கின்றேன்.

எனினும், இப்படிப்பட்ட சிக்கல்களை பற்றிப்பேச தனித்தலைப்பை ஆரம்பிக்காமல், முதலில் நீங்கள் நிருவாகத்திற்கு தனிமடல் அனுப்பி என்ன பிரச்சனை நடந்தது என்று கேட்டுப்பார்த்து இருக்கலாம்.

  • தொடங்கியவர்

ஜெனரல் அவர்களே!!

தற்போது ஒரளவு விளங்கி கொள்ள கூடியதாக இருக்கு இதை வாசிப்பவர்களுக்கு என்பதால் கருத்து கணிப்பை அவ்வாறே வைகிறேன்.....யாரோ ஒரு கள உறவோ அல்லது வேறொருவரோ சொல்லி இந்த ஆக்கம் எடுக்கபட்டுள்ளது...........புத்து மாமாவிற்கு விளக்கம் கொடுத்திருகிறார்கள் என்று அறிந்தேன்.........அவ்வாறு விளக்கம் கொடுத்தவர்கள் ஏன் கருத்துகள் மாற்றங்களிள் விளக்கம் கொடுக்கவில்லை இந்த ஆக்கம் எடுக்கபட்டது என்பதிற்கு.......... :lol:

அத்தோடு கள உறவுகளை சீண்டும் வகையில் இருந்தால் ரிபோர்ட் பட்டனை அனுப்பி முறையிடலாம் ஆனால் அந்த கருத்தில் அவ்வாறான பிழைகள் இருப்பதாக தெரியவில்லை அப்படி இருக்கும் போது யாரோ சொன்னார் என்பதிற்காக அதை தூக்குவது அவ்வளவு நல்லது இல்லை தானே ஜெனரல் அவர்களே...... :)

குருவே நிர்வாகம் இதனை கருத்துகள் மாற்றங்களிள் நேரடியாக இட்டு அதற்கு தெளிவான காரணத்தை கூறி இருந்தால் இப்படி ஒரு தலைப்பை தொடங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை ஆகையால் அதற்கு என் விளக்கத்தை கேட்டேன்........ :D

நன்றி

யாரோ ஒரு கள உறவோ அல்லது வேறொருவரோ சொல்லி இந்த ஆக்கம் எடுக்கபட்டுள்ளது.........

யாரோ சொன்னதற்காக ஆக்கங்களை எடுப்பினமா? ஏன்? என்ன காரணமாம்? நிர்வாகம் சொல்லவில்லையா?

  • தொடங்கியவர்

யாரோ சொன்னதற்காக ஆக்கங்களை எடுப்பினமா? ஏன்? என்ன காரணமாம்? நிர்வாகம் சொல்லவில்லையா?

அது தான் அக்கா நானும் கேட்கிறேன் ஏன் கருத்துகளின் மாற்றங்களிள் போடவில்லை காரணம் மேலே புத்துமாமா கொடுத்து இருகிறார் பாருங்கோ............ :lol:

ஓ.. கருத்துக்களில் மாற்றம் பகுதியில் இந்த விசயம் அறிவிக்கப்படவில்லையா? அப்படியாயின் அது நிருவாகத்தின் தவறுதான். சிலவேளைகளில் அவர்கள் கருத்துக்களில் மாற்றம் செய்தபின் அதை அறிவிக்க மறந்துபோய் இருக்கலாம். அல்லது நேரம் இல்லாது போய் இருக்கலாம்.

உதாரணமாக, நீங்கள் எழுதிய இந்தக்கருத்தாடலை வலைஞன் அவர்கள் பார்த்துவிட்டு நிருவாகம் பகுதிக்கு இதை நகர்த்துகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு நகர்த்தியதும் வலைஞனுக்கு ஒரு போன் கோல் வருகின்றது என்று வைப்போம். அல்லது அவருக்கு நம்பர் வன் வருகிது என்று வைப்பம். அப்போது அவர் என்ன செய்வார்? கணனி மேசையால் எழும்பி தனது முக்கிய தனிப்பட்ட தேவையை கவனிப்பார் அப்படித்தானே? அதன்பிறகு, கருத்துக்களில் மாற்றம் பகுதியில் உங்கள் இந்த கருத்தாடலில் செய்யப்பட்ட மாற்றத்தை கள உறவுகளிற்கு அறிவிக்க அவர் மறந்துபோய் இருக்கலாம். அல்லது அறிவிப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கலாம்.

நிருவாகிகளும் தனிமனிதர்கள், யாழை தொழில் செய்வது போல் செய்யவில்லை. அவர்களிற்கு குடும்பம், தனிப்பட்ட வாழ்வு இருக்கின்றது. எனவே, சிலவேளைகளில் இவ்வாறு தவறுகள் நடைபெறுவது தவிர்க்கமுடியாது போய் இருக்கலாம். இங்கு என்ன நடந்தது, கருத்துக்கள் மாற்றம் பகுதியில் ஏன் இதுபற்றி அறிவிக்கப்படவில்லை நிருவாகம் பதில் சொல்லுமா? (நீங்கள் தந்த தகவல்கள் சரியாக இருந்தால்..)

உதுக்கு நிர்வாகம் தான் பதில் சொல்லணும். அதாவது ஏன் கருத்துக்களில் மாற்ரத்திற்குள் பதியப்படவில்லை என்பதற்கு

  • தொடங்கியவர்

ஜெனரல் அவர்களே!!

அவர்களும் தனிமனிதர்கள் தான் அவர்களுக்கும் தொழில் இருக்கும் அத்துடன் இதை செய்வது பாராட்டதக்கவிடயம் தான்....நீங்கள் சொல்வது மாதிரி வலைஞன் அண்ணாவிற்கு தொலைபேசி வந்க்டு சென்று இருந்தாலும்..........எல்லா கருத்துகளையும் பார்த்து வெட்டு அவரால இதை எழுத ஏலாம போய்விட்டது என்றா யாழில யாரும் நம்புவீனமா!! :lol:

சரி அப்படியேதான் வைச்சுக்கொள்ளுவமே.

ஆனால் இப்போது கூட யாரும் அபப்டி எழுதவில்லையே கருத்துக்கள் மாற்றத்துக்குள். அப்போ இப்போ அவ்வாக்கம் நீக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் நிர்வாக உறுப்பினர்கள் யாருமே வரவில்லையோ களத்துக்கு.

ஓ சிலவேளையில் ஆக்க்கத்தை தானே நீக்கினோம் எனவே ஆக்கங்களில் மாற்றங்கள் என்ற தலைப்பிட்டு தான் அதற்குள் பதியணும் என நிர்வாகம் இப்பவும் டிஸ்கஸ் பண்ணுறார்களோ?

  • தொடங்கியவர்

சரி அப்படியேதான் வைச்சுக்கொள்ளுவமே.

ஆனால் இப்போது கூட யாரும் அபப்டி எழுதவில்லையே கருத்துக்கள் மாற்றத்துக்குள். அப்போ இப்போ அவ்வாக்கம் நீக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் நிர்வாக உறுப்பினர்கள் யாருமே வரவில்லையோ களத்துக்கு.

ஓ சிலவேளையில் ஆக்க்கத்தை தானே நீக்கினோம் எனவே ஆக்கங்களில் மாற்றங்கள் என்ற தலைப்பிட்டு தான் அதற்குள் பதியணும் என நிர்வாகம் இப்பவும் டிஸ்கஸ் பண்ணுறார்களோ?

ஓ அப்படி வேற பிரச்சினை இருக்கா நிலா அக்கா.........நல்லா டிஸ்கஸ் பண்ணட்டு........... :lol:

தனி நபர்களின் விருபதிற்கு அமைய நிர்வாகம் ஆக்கங்களை தூக்குவது பிழை!! என்பதற்கே நானும் வாக்களித்துள்ளேன். :rolleyes:

குறிப்பிட்ட அந்த ஆக்கம் மோகனால் நீக்கப்பட்டது. அது தொடர்பாக அத்தலைப்பைத் தொடங்கிய புத்தனுக்கு தனிமடல் மூலமாக அறியக்கொடுக்கப்பட்டது. வேலைத் தளத்தில் நின்ற காரணத்தால் மோகனால் உடனடியாக கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் எழுதப்படவில்லை. வழமையாக இணைத்த/இணைக்கும் இடத்தில் ஒரு ஆக்கம் அல்லது கருத்து இல்லையென்றால் அது நீக்கப்பட்டுள்ளது அல்லது வேறு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது என்பது கருத்தக்களத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் தெரிந்தவிடயம். இருந்தாலும், கருத்துக்களில் மாற்றங்கள் என்கிற பகுதி நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டு அனைவருக்கும் கருத்துக்களில் செய்யப்படும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது (மேலதிக வேலையாக இருந்த போதும்). இருப்பினும் ஒரு முறை அறியத்தரப்படவில்லை என்றவுடன் எமது கருத்தக்கள உறவுகள் எவ்வளவு ஏமாற்றம் அடைந்துவிட்டார்கள் என்கிற போது எமக்கு மிகவும் கவலையளிக்கிறது. அதற்காக நாம் மிகவும் வருந்துகிறோம். உங்களின் இந்த பொறுப்புணர்வுக்கும், புரிந்துணர்வுக்கும், அக்கறைக்கும் நாம் தலைவணங்குகிறோம். பெருமைப்படுகிறோம்.

அடுத்து,

கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணான கருத்துக்கள் அல்லது ஆக்கங்கள் நீக்கப்படுகின்றன. அதேபோல, கருத்துக்கள விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது போல - தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இடம் பெறும் ஆக்கங்கள்/கருத்துக்கள் நீக்கப்படுகின்றன. கொச்சைப்படுத்துவது என்கிறபோது கொச்சைப்படுத்த எண்ணுபவர்களுக்கு தீனி போடும் வகையில் - குறிப்பாக, தேனீக்களுக்கு தீனி போடும் வகையில் - எழுதப்படும் ஆக்கங்களும்/கருத்துக்களும் நீக்கப்படும். யாழில் இணைக்கப்பட்ட இதேவகை ஆக்கங்கள் எத்தனை அச்சுப் பிரதி எடுக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன அல்லது பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதை அறிவீர்களா? அண்மைய உதாரணம் ஒன்று: இந்த மாதம் 1ம் திகதி வாழும் புலம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒரு ஆக்கம் நீக்கப்படுவதற்குள் அச்சுப்பிரதி எடுக்கப்பட்டு பாரிசில் la chappelle நகரில் தமிழர் கடைகளுக்கு கொடுக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கைக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஒரு தேசிய ஊடகம் தொடர்பாக யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்பட்ட ஆக்கம் வேறு ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான இணையத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படிச் செய்பவர்கள், யாழ் இணையத்தை ஆதாரம் காட்டியே செய்கிறார்கள். இதுபோன்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நீங்கள் துணை நிற்கப் போகிறீர்களா? அப்படியான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தீனி போடப் போகிறீர்களா? யாழ் இணையத்தை அதற்கு உடந்தையாக்கப் போகிறீர்களா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய நபர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் ஒரு கருத்தை முன்வைக்கும் போது அதில மிக மிக அவதானம் தேவை. பொறுப்புணர்வு தேவை.

யாழ் இணையத்தில் வரும் கருத்துக்கள் அல்லது ஆக்கங்கள் தொடர்பாக யாரும் எமக்கு முறைப்பாடுகளை அனுப்பலாம். சிலநேரம் அவை தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளால் வரலாம். அல்லது சமூக/தேச அக்கறையோடு வரலாம். அப்படி வரும் முறைப்பாட்டை உள்வாங்கி - அது தொடர்பான ஆக்கத்தையோ கருத்தையோ வாசித்து அந்த முறைப்பாட்டில் நியாயம் இருந்தால் - அதாவது அந்தக் கருத்து அல்லது ஆக்கம் கருத்துக்கள விதிமுறைகளை மீறியிருந்தால் நீக்கப்படும். அப்படியல்லாத பொழுதில் அந்த முறைப்பாட்டை செய்தவருக்கு ஏன் நீக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் தனிமடலில் கொடுக்கப்படும். யாருடைய தனிப்பட்ட கருத்தையும் வைத்து நிர்வாகம் முடிவெடுப்பதில்லை. ஏன் வலைஞனுக்கும், மோகனுக்கும் கூட தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். வலைஞனும், மோகனும் கூட தங்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு அமைய முரண்பாடான கருத்துக்களை நீக்கவோ, உடன்பாடான கருத்துக்களை தூக்கிவைக்கவோ முடியாது. கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமையவே செயற்படமுடியும். அத்தோடு, தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அதற்கேற்ப பொறுப்புணர்வுடனேயே நாமும் நடந்துகொள்ளமுடியும். :)

நன்றி.

வலைஞன் உங்கள் விளக்கத்திற்கு நன்றி!

புத்து மாமாவின் ஆக்கத்தில் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விசயம் ஏதாவது இருந்ததா? அவர் தனது ஆக்கத்தில் ஏதோ இளைஞர்கள் அணி இரண்டாக பிரிந்துவிட்டது என்பது போல் ஏதோ எழுதி இருந்தார்.

ஏதோ... புத்து மாமா இதனால் சோர்வு அடையாமல் இருந்தால் சரி. எங்களுக்கு பிரச்சனை இல்லை. நான் யமுனா இங்கு இவ்வாறு ஒரு விசயத்தை ஒட்டியதும் உடனடியாக விரிவாக பதில் கருத்து எழுதியதற்கான காரணம் புத்துமாமாவின் ஆக்கங்களை நான் விரும்பி வாசிப்பேன். அதிலிருந்து நம்மவர்கள் பற்றிய பல தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது. எனவே, இவர் சோர்வடையக்கூடாது என்பதால்தான். முன்பும் இப்படி புத்து மாமா எழுதிய ஆக்கங்களை தூக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.

புத்துமாமா இனி ஆக்கங்களை படைக்கும்போது வலைஞன் சொன்ன விசயங்களை கொஞ்சம் கூடுதல் கவனத்தில் எடுத்தால் இப்படி மனத்தாபங்கள் வராது.. நன்றி!

  • தொடங்கியவர்

அனைத்து வாக்காள பெருமக்களிற்கு ஜம்மு பேபியின் வந்தனங்கள்!!!

உங்களின் அமோக ஆதரவிற்கு மிக்க நன்றிகளை யாழ்களம் சார்பாகவும் அனைத்து அவுஸ்ரெலிய வாழ் தமிழ் மக்கள் சார்பாகவும் தெரிவித்து கொள்கிறேன்...........அத்துடன் கருத்துகளை எழுதிய அனைவருக்கும் மிக்க நன்றியுங்கோ...............அத்துடன் நான் கேட்டதிற்கு மெஞ்ஞான விளக்கத்தை தந்த வலைஞன் அண்ணாவிற்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்............அத்துடன் நிர்வாகமே வாக்களித்துள்ளது என்பதை கேட்டு மிக்க மகிழ்ச்சி....(அட நிர்வாகத்தையே வாக்களிக்க பண்ணிண ஜம்முபேபிக்கு எங்கே உங்கள் கரகோசம் :P )...........

புத்தனிற்கு தனிமடல் மூலம் விடைகொடுத்ததை ஏற்றுகொள்கிறேன் அத்துடன் அதன் கீழ் பொன்னான நேரத்தை மண்ணாக்கி கருத்துகளை எழுதிய எங்களுக்கும் அறியதரவேண்டுமல்லவா??மோகண அண்ணா வேலைதளத்தில் நின்றாரா அப்ப உங்கள் சொல்லில் நம்பிக்கை வைத்து செவிசாய்கிறேன் :) .........கருத்துகள மாற்றங்கள் என்ற தலைப்பு உங்களிற்கு மேலதிக நேரம் செலவழித்து செய்வதை இட்டு பெருமைபடுகிறேன் பாராட்டுகள் அதற்கும்......எல்லாம் வரும் கருத்துகள் மாற்றங்களில் இது வராதது பெரிதும் ஏமாற்றத்தை தந்தது :lol: ............நான் யாழிற்கு வந்தவுடன் வாசிப்பது இந்த பிரிவை தான் ஏன் எனின் என்னுடையது தான் பல அந்த பிரிவில் அகற்றபட்டிருக்கும் என்ற ஒரு நல்ல காரணத்தினால்..........இதற்காக தலைவணங்க தேவையில்லை என்பதையும் எம்மை நினைத்து பெருமைபடுவதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்......... :lol:

அடுத்து,

தேனீக்களிற்கு தீனி போடும் ஆக்கங்களை அப்புறபடுத்துவதில் எந்த வித பிழையும் நாம் கண்டுபிடிக்கவில்லை அவ்வாறான ஆக்கங்களை உடனுகுடன் அப்புறபடுத்து உங்கள் துரிதசேவைக்கு தலைவணங்குகிறேன் :D ..........ஆனால் இறுதியாக வந்த சிட்னி கோசிப்பில் நான் வாசித்தனான் என்ற ரீதியில் அதில தமிழிழத்தை கொச்சைபடுத்து விசயம் அதில் இருப்பதாக தெரியவில்லை..........சமூக அக்கறை கொண்ட ஒரு விசயமாக தான் நான் அதனை அவதானித்தேன்........சிட்னியில் பலருக் குறிபிட்ட அந்த அமைப்பு இரு பிரிவுகளாக பிரிந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறார்கள்.......உண்மைகாவே அவ்வாறு நடக்காவிடில் இங்கே உள்ள மக்களிற்கு அதன் உண்மை தெரிய வேண்டும் என்ற ஒரு தொனியிலும்.....எமது சமூகத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் என்ற தொனியில் தான் அந்த செய்தி எனது பார்வையில் இருந்தது.........குறிபிட்ட அமைப்பினர் அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்து இருந்தா அவுஸ்ரெலிய தமிழ் மக்களிற்கு அந்த செய்தி சரியா போய் சேர்ந்திருக்கும் இங்குள்ளவர்களும்...........பிரிவிற

??கு பல காரணங்களையும் சொல்லாமல் இருந்திருபார்கள் .......யாழில் இந்த செய்தியை அப்புறபடுத்தினாலும் இங்கேயுள்ளவர்கள் கொடுக்கும் பிரிவிற்கான விஞ்ஞான விளக்கத்தை எம்மால் நிற்பாட்டமுடியாது என்பது என் ஆதங்கம்.......... :)

நன்றி

வாக்கெடுப்பு மிக்க வெற்றியாக முடிவிற்றதை அடுத்து யாழ்கள மக்கள் சந்தோசம் அடைந்துள்ளார்கள் என்று சற்று முன் ராயிட்டஸ் செய்தி யாழை மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டு இருந்தது :P ..............மக்கள் சந்தோசம் தான்ன் என் சந்தோசம் என்று கூறி............வாக்கெடுப்பை யாழில் அறிமுகபடுத்திய ஜெனரல் அவர்களிற்கு நன்றி கூறி...............அட சிட்னி கோசிப் தொடர்ந்து நான் எழுதுவேன் :) என்று கூறியும் வெறி சாறி தங் சிலிப் ஆகிட்டு புத்தன் எழுதுவார் :rolleyes: ............அட நான் சொல்லிட்டன் யாழ்கள பிரதிநிதி அதற்கு பிறகும் எழுதாட்டி அடுத்த வாக்கெடுப்பை கேட்டிட மாட்டேன்.........

தொடர்ந்து அடுத்த முறை இனிய வாக்கெடுப்பில் யாழ்கள மெம்பர்சை யாழ்கள மக்கள் பிரதிநிதி ஜம்மு பேபி சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்..........நன்றி.............

ஜம்மு பேபி பஞ்-என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் முழுபூசனிக்காயை சோற்றுகுள்ள மறைக்க ஏலாது!!!

அப்ப நான் வரட்டா...........!! :P

(அது தானே நாம தீர்பு சொல்லியாச்சு எனி பக்கத்தை இழுத்து மூடுறது தானே.........அத்துடன் சிட்னி வாழ் உறவுகளே நாளை ஜோர்ஷ்புஷின் வருகையாலும் நாளை நடக்கு இருக்கும் (APEC)மாநாட்டாலும் உங்கள் எல்லாருக்கும் விடுமுறை........மற்ற நகரங்களிள் உள்ளவர்கள் ஆழ்ந்த அநுதாபங்கள்..........சிட்னியில் உள்ளவர்கள் விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துகள்.........)

அக்கறையுள்ளவர்கள் வதந்திகளையும், கேள்விப்பட்டதையும், ஒட்டுக்கேட்டதையும் வைத்து கருத்தெழுதுவது ஆபத்தானது. முதலில் அந்த விடயம் பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்த பின்னர் கருத்துக்களத்தில் இணைத்திருக்கலாம். நாம் எந்தத் தொனியில் கருத்துக்களை எழுதுகிறோம் என்பதும் முக்கியமான விடயம்.

இப்ப உதாரணத்துக்கு ஒரு விடயத்தை சொல்கிறேன்:

உண்மையில் நடந்தது இதுதான்: யமுனா விடுமுறை காரணமாக கருத்துக்களத்துக்கு 1 மாதம் வரவில்லை.

இந்த செய்தியை/ தகவலை யாழில் இணைக்கும் ஒருவர்: யமுனா கருத்துக்களத்தில் அரட்டை அடித்ததால், கருத்துக்கள நிர்வாகம் யமுனாவை தடைசெய்துவிட்டது.

இந்த செய்தியை/ தகவலை யாழில் இணைக்கும் இன்னும் ஒருவர்: யமுனாவை ஒஸ்ரேலிய அரசாங்கம் இலங்கைக்கு நாடுகடத்திவிட்டது.

என்று எழுதினால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?

இன்னோர் உதாரணம்:

உண்மையில் நடந்தது இதுதான்: யாழ் கருத்துக்களத்தில் ஆங்கிலம் தொடர்பான ஆக்கங்கள் நிறைய வருவதால், ஆங்கிலத்தில் சில வேலைத்திட்டங்களை செய்யவேண்டும் என்பதால், வேறு நாட்டவர்களுக்கு தமிழீழம் தொடர்பான கருத்துக்கள் ஆங்கிலத்தில் சென்றடையவேண்டும் என்பதால் தனியாக ஆங்கிலக் கருத்துக்களம் ஒன்று தொடங்கப்பட்டு அதனை நிர்வகிக்கும் பொறுப்பை வலைஞன் அண்ணாவிடம் மோகன் அண்ணா கொடுக்கிறார்.

இந்த செய்தியை/ தகவலை வெளியில் சொல்லும் ஒருவர்: யாழ் கருத்துக்களம் இரண்டாக பிரிந்தது/உடைந்தது.

என்று இந்தத் தொனியில் சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? மோகன் அண்ணாக்கும் வலைஞன் அண்ணாக்கும் முரண்பாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டார்கள். தனித்தனியான கருத்துக்களத்தை நடத்துகிறார்கள் என்றல்லவா நினைப்பார்கள். இதை பயன்படுத்த நினைக்கிற எதிரி என்ன செய்வான்? இந்த செய்தியை தன்ர தளத்தில் போட்டு இன்னும் பூசி மெழுகி சந்தோசப்பாடுவார்கள் தானே?

புத்தனின் ஆக்கங்களை நானும் வாசிப்பதுண்டு. நல்ல பல தகவல்களை, ஆக்கங்களை அவர் தருவதுண்டு. இந்தத் தகவலைத் தந்ததும் நல்ல விடயம் தான். நானும் அந்தப் பதிவை வாசித்தேன். ஆனால் தந்த விதம் தான் குழப்பகரமானது. அதனால் தான் கருத்துக்கள நிர்வாகம் அதனை நீக்கியிருக்கவேண்டும். :rolleyes:

உதாரணமும் விளக்கிய முறையும் நன்று.

  • தொடங்கியவர்

வணக்கம் இளைஞன் அண்ணா!!

அக்கறையுள்ளவர்கள் ஒரு போது வதந்தியை கேட்டு செய்திகளை பிரசுரிபதில்லை ஒரு முறைக்கு பல தடவை யோசித்து தான் இந்த சிட்னி கோசிப் எழுதபடுகிறது என்பதை முதல் உங்களுக்கு அறிய தருகிறேன்!!!அத்துடன் காதால் கேட்பதை வைத்து கருத்து களத்தில் செய்திகளையோ அல்லது தேடல்களையோப் பிரசுரிப்பதில்லை............

இப்ப உதாரணத்துக்கு ஒரு விடயத்தை சொல்கிறேன்:

உண்மையில் நடந்தது இதுதான்: யமுனா விடுமுறை காரணமாக கருத்துக்களத்துக்கு 1 மாதம் வரவில்லை.

இந்த செய்தியை/ தகவலை யாழில் இணைக்கும் ஒருவர்: யமுனா கருத்துக்களத்தில் அரட்டை அடித்ததால், கருத்துக்கள நிர்வாகம் யமுனாவை தடைசெய்துவிட்டது.

இந்த செய்தியை/ தகவலை யாழில் இணைக்கும் இன்னும் ஒருவர்: யமுனாவை ஒஸ்ரேலிய அரசாங்கம் இலங்கைக்கு நாடுகடத்திவிட்டது.

என்று எழுதினால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?

உங்களுடைய உதாரணம் நன்றாக இருந்தது இப்ப ஜமுனா விடுமுறை காரணமாக வரவில்லை யாரோ ஒருவர் இவ்வாறு கூற மற்றவர் அவ்வாறு கூறினா அதில் ஏதோ சில பிரச்சினைகள் இருக்குது என்று அவர்களை சார்ந்து உள்ளவர்கள் ஜமுனாவிடம் கூறுவார்கள் அப்ப ஜமுனா வந்து அது அப்படி இல்லை நான் இங்கே தான் இருகிறேன் என்பதை நிருபீப்பா அதை விட்டு ஜமுனா வரவில்லை என்ற தகவல் எல்லா இடமும் பரவ அதை நீங்கள் எடுத்துவிட்டீர்கள் என்றா பார்கிறவர்கள் என்ன நினைப்பார்கள் யமுனாவை நிர்வாகம் தடை செய்துள்ளது உண்மை என்று ஆகுமல்லவா........ஆகவே எல்லா நேரங்களிலும் உதாரணங்கள் சரியாக போகபோவதில்லை............

இவ்வாறு நேராக கூறுவதால் விளைவு நேர் விளையாவக் இருக்குமல்லவா

Edited by இணையவன்

புத்தன் எழுதியிருந்ததில் அவரே சொல்லியிருக்கிறார். வீதியில் செல்லும்போது கேள்விப்பட்டதாக என்று நினைக்கிறேன். அவர் கேள்விப்பட்ட விடயத்தையே அப்படி எழுதியிருக்கிறார்கள். உண்மையாக விசாரித்து எழுதிய தகவல் என்றால் உண்மையில் என்ன நடந்தது என்ற விடயம் புத்தனுக்கு தெரிந்தல்லவா இருக்கவேண்டும்? தெரிந்திருந்தால் இப்படியான ஒரு தொனியில் எழுதியிருக்கமாட்டாரல்லவா? உண்மை தெரிந்தும் தான் அவர் அப்படி எழுதியிருந்தார் என்றால், புத்தன் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவே தனது கருத்தை எழுதியிருக்கிறார் என்கிற தோற்றம் வரும். எனவே, புத்தனின் சார்பாக நீங்கள் கருத்து வைப்பது தவறான புரிதலையே ஏற்படுத்தும். :)

உதாரணங்கள் அப்படியே பொருந்தவேண்டும் என்பதில்லை. அவை சொல்லவருகிற விடயத்தை தெளிவுபடுத்துவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணங்களை வைத்து அவரவர் வசதிக்கேற்ப வாதாடலாம். அது வேறு விடயம். அதை விட்டுவிடுவோம்.

யமுனா கருத்துக்கள உறுப்பினர். எனவே கருத்துக்களத்தில் வந்து விளக்கம் சொல்வதில் அவருக்கு பிரச்சனையிருக்காது. அது நியாயமானதும் கூட. ஆனால் கருத்துக்களத்தோடு தொடர்பில்லாதவர் கருத்துக்களத்துக்கு வந்து விளக்கம் சொல்லவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது? நீங்கள் சொல்வது இன்னொரு வகையில் சரியானதே. அதாவது கருத்துக்களத்தில் ஒரு விடயம் இடப்படுகிறது என்றால் அதில் தவறிருந்தால் அதற்கான சரியான விளக்கத்தை உரியவர்கள் தருவதே நல்லது. சந்தேகங்களையும் தவறான கருத்துப்பரவலையும் தடுப்பதற்கு அதுவே சரியான வழி.

அதேநேரத்தில நாளைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றிய ஒரு தவறான கருத்து கருத்துக்களத்தில் பதியப்படுகிறது என்றால், அதற்கு தமிழ்ச்செல்வன் அண்ணாவும் இளந்திரையன் அண்ணாவும் வந்து விளக்கம் சொல்லவேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? :rolleyes:

ஆனால் புத்தன் பொறுப்புள்ள ஒரு கருத்தாளர் என்ற வகையில் இந்தவிடயத்தில் கவனமாக நடந்திருக்கலாம். மற்றும்படி இதில விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. நிர்வாகம் கருத்தை நீக்கிவிட்டது. புத்தனுக்கும் அதற்கு விளக்கம் கொடுத்திட்டினம். புத்தனும் புரிந்து கொண்டு அமைதியா இருக்கிறார். இதில புத்தனின் பிரதிநிதியாக யமுனாவும், நிர்வாகத்தின் பிரதிநிதியாக நானும் கதைத்துக்கொண்டிருப்பதில் பயனில்லை. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.