Jump to content

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை - சரத் வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது.கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன்,அரசியல் நெருக்கடி தீவிரமடையும்.

வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.பொருளாதார பாதிப்பை அரசாங்கத்தின் கூட்டணியின் உறுப்பினர்கள் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்து இறுதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தினார்கள்.

2022.04.12 ஆம் திகதி இலங்கை வங்குரோத்து என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

வங்குரோத்து நிலை என அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள்.

சீனா,இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தின மறுபுறம் அதுவரை முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. இவ்வாறான நிலையில் இலங்கைக்கு கிடைக்கப் பெறவிருந்த அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.

நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது.கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன்,அரசியல் நெருக்கடி தீவிரமடையும்.

வங்குரோத்து அடைந்து விட்டோம் என அறிவித்ததை தொடர்ந்து உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக நிதியுதவி மற்றும் அபிவிருத்தி சார் திட்டங்களில் மட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஆகவே உண்மையில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்ததா என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.https://www.virakesari.lk/article/147937

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல்.. இப்படியான சிங்கள பெளத்த பேரினவாத பொருளியலாளர்களிடம் நாட்டைக் கொடுத்தால்.. புத்த பிக்குகளுடன் சேர்ந்து மீண்டும் ருவன் வெலிசய போய் சபதம் எடுத்து கடனில் உள்ள சொறீலங்காவை மீட்டு.. புத்த பெரும் பணக்கார சேதமாக்கிவிடுவார்கள்.

ஏலவே இராணுவ திமிர் எடுத்த ஒருவர் சனாதிபதியாகி சாதித்துவிட்டார். எனி கடற்படை திமிர் எடுத்த இவரிடம் நாட்டைக் கையளியுங்கள். சொறீலங்கா உருப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.பொருளாதார பாதிப்பை அரசாங்கத்தின் கூட்டணியின் உறுப்பினர்கள் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்து இறுதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தினார்கள்

அதை தடுக்க தட்டிக்கேட்க வக்கில்லை.

6 hours ago, பிழம்பு said:

வங்குரோத்து நிலை என அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள்.

 

6 hours ago, பிழம்பு said:

சீனா,இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தின மறுபுறம் அதுவரை முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.

அதை தடுக்க துப்பில்லை.

 

6 hours ago, பிழம்பு said:

நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதை எதிர்த்தாட  திராணியில்லை. நலிந்துபோன தமிழரிடந்தான் உங்களது வாய்வீச்சு.

6 hours ago, பிழம்பு said:

உண்மையில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்ததா என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்

இந்தளவுக்கு தெரிந்தவருக்கு இது மட்டும் தெரியவில்லை. ஊழையிட்டது போதும் சுருண்டு படுங்கோ, இதுக்கு மேல உங்களால எதுவும் முடியாது. இனிமேல் ஊழையிடுவதற்கு பெலன் எங்கிருந்து வரும்? எல்லாம் வங்குரோத்து.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.