Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.

ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.

குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.

அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.

"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

தென்னாலிராமன் கதைகள்

  • Replies 1k
  • Views 155.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

:lol::)

ம்.. இன்னொரு கதை.

வெற்றித் திருநகரை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயரின் அரண்மனை விகடகவி தெனாலிராமன் மீது பிராமணர்களுக்கு கடுங்கோபம். அது ஏன் என பிறகு எழுதுகிறேன்.

ஒருமுறை கடும் வயிற்று நோவினால் தெனாலிராமன் அவஸ்த்தைப்பட்டு, ஊண் உறக்கம் இன்றி மெலிந்து துரும்பாக இளைத்துவிட்டான். அரண்மனை வைத்தியர் உட்பட பலரும் மருந்து செய்தும் ஆள் தேறியபாடில்லை. ராமன் மனைவிக்கோ பயம் தொற்றிக் கொண்டது. என்ன செய்வது என கடுமையாக யோசித்த போது, பட்டாபிஷேக சர்மா உடனே நினைவுக்கு வந்தார். அவரிடம் கேட்டால் ஏதாவது யாகம், மந்திரம் செய்து ராமனை பிளைக்க வைத்துவிடுவார் என பூரணமாக நம்பினாள்.

விடயத்தை கூர்ந்து கேட்ட பட்டாபிஷேக சர்மா, ஏற்கெனவே ராமன்மீதிருந்த குரோதத்தை நினைத்துக்கொண்டே, அவனை பழிக்குப் பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததடா சாமி என சந்தோஷப்பட்டு ராமன் வீட்டுக்கு வந்து பார்ப்பதாக கூறி அனுப்பினார். ராமன் மனைவியும் ஒருவாறு தேறி, வீடுசென்றாள். அடுத்த நல்ல முகூர்த்தத்தில் பட்டாபி சர்மா இராமனை பார்க்க வந்து, "அடே ராமா, பார்த்தாயா? பிராம்மணர்களை வதைத்த தோஷம் உன்னை பிடித்திருக்கிறது. இதற்கு ஒரு யாகம் செய்தால் சரியாக போய்விடும். ஆனாலும் நிறைய பொற்காசுகள் செலவாகுமே? என்ன செய்வது?" என ராமனுக்கு ஒரு போடு போட்டார். பட்டாபி சர்மாவின் வஞ்சனை ராமனுக்கு உடனே புரிந்தது. அவனும், "அய்யா பிராம்மணரே, சாவது விதியென்றால் யாரால் மாற்ற இயலும். போனால் போகட்டும். என்பாட்டில் இருக்கும்வரை இருந்துவிட்டு போகிறேன். இந்த யாகங்களுக்கெல்லாம் என்னிடம் பொற்காசுகள் இல்லை" என வேண்டா வெறுப்புடன் கூற, எங்கே தன் பணம்பண்ணும் வேலை பாழாய்ப் போய்விடுமோ என்று பயந்த பட்டாபி சர்மா, "அடப் பாவி. உயிரைவிடவா பொருள் பெரிது. நீ இப்பொழுது பணம் தரவேண்டாம். நீ பூரணகுணமானதும் உன் குதிரையை விற்று அந்த பணம் முழுவதையும் எனக்கே தந்துவிடவேண்டும்" இதுதான் நமக்குள் எழுதாத ஒப்பந்தம் என அடித்து சத்தியம் வாங்கிக்கொண்டு வீடுசென்றார்.

அடுத்த கிழமை, ராமனின் வீட்டில் ஒரே அமர்க்களம் போங்கள். தடல்புடலான யாகம், பல்வேறு பட்சணபலகாரங்களுடன் அமோகமாய் நடந்தேறியது. பட்டாபி சர்மாவும், மிகுந்த விநயத்டுடன், யாகத்தை முடித்து, இருந்த பல்வேறு பதார்த்தங்களையும் அள்ளிக் கொண்டு வீடு சென்றார். பிராம்மணர் செய்த யாகம் எப்படியும் கணவனை குணப்படுத்தி விடும் என்று ராமன் மனைவிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.

நம்பிக்கை வீண்போகவில்லை. ராமனும் நாளொரு மேனியாக தேறி, பழைய அலங்காரங்களுடன் கொலுவாக வீற்றிருந்தான். பணத்தை வசூல்செய்ய பட்டாபியும் ஒவ்வொரு நாளும் ராமன் வீட்டுக்கு நடையாய் நடந்து துரும்பாய் இளைத்துவிட்டார். ராமனோ பணத்தை தருவதாக இல்லை. இறுதியில், பொற்காசு பெறாமல் நான் வீடு ஏகேன் என பிராம்மணர் ஒரே முடிவாக ராமன் வீட்டில் இருந்துவிட்டார்.

ராமனுக்கும் மனசு பொறுக்கவில்லை. பிராம்மணரின் பேராசையை மட்டந்தட்ட எண்ணினான். பட்டாபியை பார்த்து, "பிராம்மணரே!! என்னுடன் வாரும். சந்தையில் குதிரையை விற்று உமக்கு பொற்காசுகளை தருகிறேன்" என்று கூற, அவரும் மிகுந்த சந்தோசத்துடன் "ராமா!! நமக்குள் இருக்கும் ஒப்பந்தம் நன்றாக ஞாபகம் இருக்கட்டும். குதிரைவிற்ற பொற்காசு அவ்வளவும் எனக்கே" என மீண்டும் ஞாபகமூட்டினார்.

சந்தைக்கு புறப்படும்போது ராமன் வீட்டில் நின்ற வெள்ளை பூனைக்குட்டியையும் கடாசுவதற்காக தன்னுடன் எடுத்து சென்றான். வீட்டில் பூனைக்குட்டியின் கொடுமை தாங்க முடியாது. அன்று சந்தையில் குதிரைகள் படு கலாதியாக, அதிக விலைக்கு விற்பனையாகிக் கொண்டு இருந்தன. பிராம்மணருக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை. ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் ராமனுக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தார்.

"ராமா, குதிரை 1000 பொன் பெறும். கவனம்" என அறிவுரையும் கூறிவைத்தார். உள்ளூர இதைக்கேட்டு நகைத்த ராமன், "இந்த பூனைக்குட்டியை 1000 பொன்னுக்கு வாங்குபவனுக்கு இந்தக் குதிரை 1 பொன்னுக்கு விற்கப்படும். இரண்டும் சேர்த்தே விற்கப்படும்" என பெருங்குரலில் கூவினான். இதைக்கேட்டு பலர் திகைத்தனர். பூனைக்கு 1000, குதிரைக்கு 1 பொன்னா? என்ன விசித்திரம்? பிராம்மணர் மூர்ச்சையாகிவிட்டார். கூட்டத்தில் நின்ற ஒருவன், "அண்ணே!! பூனையென்றால் என்ன, குதிரை என்றால் என்ன. வாங்கிவிடுங்கள்" என தன் தமயனுக்கு உற்சாகமூட்ட, குதிரை 1 பொன்னுக்கும், பூனை 1000 பொன்னுக்கும் விற்பனையானது. :D:D

மூர்ச்சை அடைந்திருந்த பிரம்மணரை தலையில் தண்ணீர் தெளித்து எழுப்பி, "அய்யா. நமது ஒப்பந்தப்படி குதிரை விற்ற பணம்." என 1 பொற்காசை அவர் உள்ளங்கையில் அழுத்தி வைத்தான் ராமன். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் கற்சிலையாய் நின்றார் பட்டாபி. :D:lol:

- ஈழத்திருமகன் -

Edited by Eelathirumagan

நல்ல கதைகள் நன்றி

ஹீஹீ தெனாலிராமனின் குதிரைக் கதை நல்லா இருந்திச்சு நன்றியுங்கோ பதிவுக்குஹாஹா பாவம் பட்டாபி. ஈழதிருமகன் நல்ல கதை சொன்னதுக்கு நன்றியுங்கோ

நல்லது ஈழவன், வெண்ணிலா.

சின்னப் பிள்ளைகள் நிறையக் கதை படியுங்கோ. :rolleyes::huh:

பேபியும் வந்துட்டு கதை கேட்க நுணாவில அண்ணா,ஈழதிருமுகன் மாமா கதை நல்லா இருக்கு இன்னும் சொல்லுங்கோ கேட்க போறேன்......... :P ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.

அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.

அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.

இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.

அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.

இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.

இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.

"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.

ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.

இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.

"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்

வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.

இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

தென்னாலிராமன் கதைகள்

ஹீஹீ பாவம் சேட்.

தெனாலிராமன் கதைகள் என்றாஅல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நன்றி நுனாவிளான்.

(உங்கள் பெயரின் அர்த்தம் என்ன நுனாவிளான்.)

தெனாலியும் பிராம்மணர்களும்: :rolleyes::)

மன்னர் கிருஷ்ணதேவராயரின் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபொது, தன் இறுதி மூச்சை விடுவதற்கு முன் தன் மகன் ராயரிடம் ஒரு மாங்கனி கேட்டார். சேடிகள் மாங்கனி வெட்டி எடுத்து வருவதற்குள் அவரின் உயிர் பிரிந்து விட்டது. ராயருக்கோ அடங்காத துன்பம். தாயின் ஆத்மா சாந்தியடையாதே என்று பெருங் கிலேசமடைந்தார். என்ன செய்வாது? தன் அரசவை பிராம்மணர்களை அழைத்து ஏதாவது வழி இருக்கிறதா என கேட்டு வைத்தார்.

பேராசைக்கார பிராம்மணர்களும் மிக்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென மகிழ்ந்து, "மன்னா!! ஒரு வெள்ளித் தட்டில் பசும்பொன்னால் செய்த இரட்டை மாங்கனிகளை வைத்து 108 பிராம்மணர்களுக்கு தானம் செய்தால் உங்கள் தாயார் ஆத்மா சாந்தியடையும்." என பெரிய பொய்யொன்றை வாய்கூசாமல் சொல்லிவைத்தார்கள். மன்னரும் சரியெனெ ஒப்புக் கொண்டு, 108 பிராம்மணர்களுக்கு பொன்னால் செய்த இரட்டை மாங்கனிகளும் வெள்ளித்தட்டும் தானமாக கொடுத்தார்.

இந்த வேடிக்கையை பார்த்த ராமன் மனம் மிக நொந்து, "இப்படி பகற்கொள்ளை அடிக்கிறார்களே. இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என மனதில் நினைத்துக்கொண்டு அரச சபை சென்றான். வழியில் கண்ட பிராம்மணர்களுக்கெல்லாம் "எனது தாயாரின் ஆத்மா சாந்தியடைய நானும் 108 பிராம்மணர்களுக்கு தானம் செய்ய போகிறேன். அவசியம் வரவேண்டும்" என அழைப்பு விடுத்தான். இந்த செய்தி பேராசைக்கார பிராம்மணரிடையே காட்டுத்தீயாக பரவியது.

108 பிராம்மணர்கள் ராமன் வீட்டில் சங்கற்பம் தரித்து உக்கார்ந்திருக்க, ராமன் அவர்கள் ஒவ்வொருவராக வந்து தானம் பெறுமாறு ஒரு இரகசிய அறைக்கு அழைத்துச் சென்றான். இருண்ட அந்த அறையில் ஒரு அடுப்பில் இரும்புக்கம்பி செக்கச் செவேல் என்று காய்ந்துகொண்டு இருந்தது. அதை எடுத்து பிராம்மணர்கள் கைகளிலும் கால்களிலும் சூடு வைத்து அடித்து துரத்திவிட்டான். சூடுவைத்த வெப்பு ரணமும், அடி உபாதையின் வலியும் தாங்கமாட்டாது "ஓவென" புலம்பியபடி மன்னர் ராயரின் அரண்மனை நோக்கி ஓட்டமெடுத்தனர் பிராம்மணர்.

வழக்கை விசாரித்த ராயர், "அடே ராமா!! ஏன் இந்த கொடிய பாதக செயலை செய்தாய்?" என்று கேட்க, ராமன் மிகவும் பவ்யமாக "மன்னா!! எனது தாயார் வலிப்பு நோயால் கடும் அவஸ்த்தைப்பட்டார். நோயில் இருந்து விடுபடுவதற்காக வைத்தியர் கூறியதுபோல் இரும்புக் கம்பியை காய்ச்சி சூடுவைக்குமாறு வருந்திக் கேட்டார். நான் அதை தயார்செய்து எடுத்துவருவதற்குள் பரலோகம் அடைந்துவிட்டார். என்ன செய்வது. இதுநாள் வரையில் அவர் ஆத்மா சாந்தியடைய எந்த வழியும் தெரியவில்லை. இந்த பிராம்மணர்கள் தங்க மாங்கனி பெற்று உங்கள் தாயாரின் ஆத்மாவை சாந்தியடைய வைத்தபோதுதான் எனக்கும் வழி தெரிந்தது" என கூறினான்.

இதைக் கேட்ட பிராம்மணர் சொல்வதற்கேதுமின்றி வாய்மூடி மௌனியாக தலைகுனிந்து நின்றனர். மன்னரும் மற்றையோரும் பிராம்மணரின் பேராசை நிமித்தம் அவர்கள் அடைந்த தண்டனை கண்டு சிரிப்பாய் சிரித்தனர். :(:D

ஹாஹா பாவம் பிராமணர்கள். ராமனின் புத்திசாலித்தனம் தெரியாமல் மாட்டிக்கிட்டாங்க.

எல்லா மாமாமாரும் நல்லா கதை சொல்லுறாங்க........... :P :P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல கதைகள். வாழ்த்துக்கள் எல்லோருக்கும். :rolleyes::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹீஹீ பாவம் சேட்.

தெனாலிராமன் கதைகள் என்றாஅல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நன்றி நுனாவிளான்.

(உங்கள் பெயரின் அர்த்தம் என்ன நுனாவிளான்.)

எனது ஊர் நுணாவில் அதனால் புனை பெயரை நுணாவிலான் என ஆக்கிக்கொண்டேன். நன்றி கேட்டமைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மாநகரத்திலிருந்து ஒரு மேஜிக் வித்தைக்காரன் விஜய நகரத்துக்கு வந்திருந்தான். அவன் மேஜிக் செய்வதில் வல்லவன்.

அவன் அரண்மனையில் மன்னர் கிருஷ்ண தேவராயர் முன்னிலையில் கல்லைப் பொன்னாக்கினான். மண்ணை சர்க்கரை ஆக்கினான். மேலும் வெறும் தாளை ரூபாய் நோட்டுக்கள் ஆக்கினான். மேலும் அவன் தலையையே வெட்டி அவன் கைகளில் ஏந்தினான். இந்நிகழ்ச்சியைப் பார்த்த மன்னர் மகிழ்ந்தார்.

அப்போது மன்னரிடத்தில் "என்னை வெல்ல உங்கள் நாட்டில் யாரேனம் உண்டா ......." என்று சவால் விட்டான். இது மன்னருக்கு பெருத்த வேதனை அளித்தது.

அறிஞர் பெருமக்கள் பலரையும் அழைத்து "டெல்லி மேஜிக் வித்தைக்காரனை உங்களில் யாரேனும் வெல்ல முடியுமா? அப்படி வென்றவருக்கு 1000 பொன்பரிசு" என்றான் மன்னர்.

"என்னால் அந்த மேஜிக வித்தைக்காரனை வெல்ல முடியும்" என்றான் தெனாலிராமன். அதைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார்.

மறுநாள் போட்டியைப் பார்க்கக் அரண்மனையில் கூட்டம் கூடிவிட்டது.

போட்டி ஆரம்பம் ஆகியது. மேஜிக் வித்தைக் காரனைப் பார்த்து தெனாலிராமன் "நான் கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்வேன். அதே காரியத்தைக் கண்ணைத் திறந்து கொண்டு உன்னால் செய்ய இயலுமா?" என்றான் தெனாலிராமன்

"இது என்ன பிரமாதம். நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் காரியத்தைக் கண்ணைத் திறந்துக்கொண்டே என்னால் செய்ய இயலும்" என்றான் மேஜிக் வித்தைக்காரன்

போட்டியை ஆரம்பி என்றான் மேஜிக் வித்தைக்காரன். உடனே தான் தயாராக வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்துக் கண்ணை மூடிக்கொண்டு கண்மேல் வைத்தான்.

"இதே வித்தையைத்தான் நான் உன்னைக் கண்ணை திறந்து கொண்டு செய்யச் சொன்னேன். செய் கார்க்கலாம்" என்றான். தன்னால் இயலாது என்றுணர்ந்த மேஜிக் வித்தைக்காரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

மன்னர் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி ஆயிரம் பொன் பரிசளித்தார்.

நான் தெனாலிராமன் கதைகள் தேடித்திரிந்தேன் இங்கு இணைத்தற்க்கு ரொம்ப நன்றி நுணாவிளான் மற்றும் ஈழதிருமுருகனுக்கு

தென்னாலி ராமனின் குதிரை சாப்பாடு இல்லாமல் தேய்ந்து போனபின்

இப்பிடியும் இருந்ததாம்!!!

nonamerc9.gif

எனது ஊர் நுணாவில் அதனால் புனை பெயரை நுணாவிலான் என ஆக்கிக்கொண்டேன். நன்றி கேட்டமைக்கு.

ஓ அந்த ஊருக்கு பெயர் நுணாவில்?

அட கடவுளே நான் இன்றுவரை அது "லுனாவில் என்று எல்லோ நினைச்சிருக்கிறன். நன்றியுங்கோ

ஆமா நீங்க சொல்லுற ஊர் தென்மராட்சி தானே. "வேரும் விழுதுகளும்" என்ற கண்காட்சி ஒருக்கா நடந்திச்சுதே அந்த ஊரா? அல்லது நுணாவில் & லுணாவில் இப்படி 2 ஊரும் இருக்குதா? :)

நுணாவிளான் இணைத்த தெனாலிராமனின் பரிசுக்கதையும் மஜிக் போட்டிக்கதையும் நன்று.

தமிழீனீ தெனாலிராமன் வளர்த்த குதிரை சாப்பாடு இல்லாமல் வளர்ந்தும் உப்படி ஓடுது எனில் அங்கை தான் தெனாலிராமனின் வளர்ப்பின் சாமர்த்தியம் பிரதிபலிக்குதுங்கோ. ஹீஹீ

காளிமகாதேவியின் அருள் கிடைத்தல்

அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. தண்ணீர்ப்பஞ்சமும் உணவுப்பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்தது. ஆறு, ஏரி, குளம் குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்தது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை புகழ்ந்து வணங்கி ஆசிப்பெற்றனர்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த தெனாலிராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து

"தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்?" வினவினார்.

அதற்கு தெனாலி ராமன் "மழை பெய்வதும், பெய்யாமல் போவதும், இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன், தங்கள் மகிமையால் தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது, ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். அப்போது பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதைப்பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததால்தான் பனம்பழம் கீழே விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலதான் இந்த ஊர் மக்கள் செயல் இருந்ததால் சிரித்தேன்" என்றாராம் தெனாலிராமன்.

இதைக்கேட்ட கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து "தம்பி, உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப்பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய்" என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன், காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தார். காளியின் திருஉருவத்தைக்காண பலவாறு வேண்டி தவம் இருந்தார். கடைசியில் தெனாலிராமன் முன் காளி தோன்றினாள். அவளது உருவத்தைப் பார்த்து பயப்படுவதற்கு பதிலாக பலமாக சிரித்தார்.

அவர் சிரிப்பதை பார்த்த காளி "என் உருவத்தை பார்த்து எல்லாரும் அஞ்சுவார்கள். நீயோ ஏன் சிரிக்கிறாய்?" என்று வினவினாள்.

அதற்கு தெனாலிராமன் "எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. உனக்கோ ஆயிரம் தலை உள்ளது, ஆனால் இரண்டு கைகளே உள்ளது. உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன், அதனால் எனக்கு சிரிப்பு வந்தது" என்றார்.

இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்துவிட்டாள். பின்னர் "மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுதிகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும்போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன்" எனக்கூறி மறைந்தாள்

நன்றி

கதைச் சங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நிலா "நுணாவில் "என்பது தென்மராட்சியில் தான் உள்ளது. லுணாவில் என்றொரு ஊர் நான் கேழ்விப்படவில்லை. வேரும் விழுதுகளும் நுணாவிலில் நடந்தது பற்றி நான் அறியவில்லை. தமிழினி, சாப்பாடு இல்லாத தென்னாலியின் குதிரை இந்த ஓட்டம் ஓடுகிறது?

இனியும் இருந்தால், மிச்ச சொச்சமாயிருக்கிறதும் போயிட்டால், தலையால மட்டும் தான் ஓடொனும்.

துரத்திப் பிடிக்கிறதுக்குள்ள இப்பவே ஓடித் தப்பீடுவம் எண்டு ஓடுது போல!!

ஆம் நிலா "நுணாவில் "என்பது தென்மராட்சியில் தான் உள்ளது. லுணாவில் என்றொரு ஊர் நான் கேழ்விப்படவில்லை. வேரும் விழுதுகளும் நுணாவிலில் நடந்தது பற்றி நான் அறியவில்லை.

தென்மராட்சியில் தான் "நுணாவில்" என்ற ஊர் இருப்பின் நான் சொல்லும் லுனாவில் என்ற பெயரில் ஊர் இல்லை

ம்ம் அதே ஊரில் தான் 95 ம் ஆண்டு "வேரும் விழுதுகளும்" என்ற மாபெரும் கண்காட்சி நடாத்தினார்கள். இன்றும் என் மனதில் அக்கண்காட்சி நினைவிருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியில் தான் "நுணாவில்" என்ற ஊர் இருப்பின் நான் சொல்லும் லுனாவில் என்ற பெயரில் ஊர் இல்லை

ம்ம் அதே ஊரில் தான் 95 ம் ஆண்டு "வேரும் விழுதுகளும்" என்ற மாபெரும் கண்காட்சி நடாத்தினார்கள். இன்றும் என் மனதில் அக்கண்காட்சி நினைவிருக்கு.

நன்றி நிலா அந்த தகவலுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்

அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.

அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன.

சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.

அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.

இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.

பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி.

தென்னாலிராமன் கதைகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.