Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

நுணாவிளான் நான் தான் உந்த காளிமகா தேவி கதையை ஏற்கனவே பதிஞ்சுட்டேனே

  • Replies 1k
  • Views 155.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.

மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர்.

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.

சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.

தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான்.

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.

அதை சோரிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டடை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்

மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.

தென்னாலிராமன் கதைகள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்.அத்தோடு 0க்கும் 300 பாகை செல்சியசிலும் எழுதக்கூடியதாக இருந்தது.

ஆனால் ரஸ்யர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பென்சிலை பாவித்தார்கள்.

கதை எல்லாம் நல்லா இருக்கு நுணாவிலன் அண்ணா!! :)

12 பில்லியன் செலவு செய்து பேனாவை கண்டுபிடிச்சும் பென்சிலை பாவித்தார்களா?

நல்ல விஞ்ஞானிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியா வாசியுங்கோ நிலா.12 பில்லியன் செல்வளித்தது அமெரிக்கன்.பென்சில் பாவித்தது ரஸ்யன்.தத்துவம் 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

அட தத்துவம் எல்லாம் நல்லா இருக்கே!! :P

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால்

1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது

நல்லாக இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல்

டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே.

ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே.

ஏன்டா அந்த கருமத்தை போட்டே.

ஒரு சந்தேகம் அண்ணே.

எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே.

இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே.

அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா.

சொல்லுங்கண்ணே.

அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா.

அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க.

அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தான்.

அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது.

டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒரு வேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க – 5 வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க. அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காசை 5 வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.

அதுக்கு என்ன பண்றது அண்ணே.

அதுக்கு நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன்.

கெடா வாங்கிட்டீங்களா.

டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி பேறிக்கா மண்டையனா.

அப்புறம்.

நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா.

--------------------

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தத்துவம் இவ்வளவுதாங்க

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

10. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

12 பில்லியன் செலவு செய்து பேனாவை கண்டுபிடிச்சும் பென்சிலை பாவித்தார்களா?

நல்ல விஞ்ஞானிகள்.

வெண்ணிலா என்னாச்சு உங்களுக்கு. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் முழுவதுமாக படிப்பதில்லையா??? இங்கு நாசா எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம். பென்சிலை பாவித்தது ரஸ்யர்கள்.

நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்.அத்தோடு 0க்கும் 300 பாகை செல்சியசிலும் எழுதக்கூடியதாக இருந்தது.

ஆனால் ரஸ்யர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பென்சிலை பாவித்தார்கள்.

வெண்ணிலா என்னாச்சு உங்களுக்கு. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் முழுவதுமாக படிப்பதில்லையா??? இங்கு நாசா எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம். பென்சிலை பாவித்தது ரஸ்யர்கள்.

இப்ப என்ன சொல்ல வாறியள் வெண்ணிலா நுனிப்புல் மேயுறா னு சொல்ல வாறியளா? :lol::lol:

நான் சொன்னது நாசா விஞ்ஞானிகள் உவ்வளவு செலவு செய்து கண்டுபிடித்த பேனா போல் ரஸ்யர்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லையெனிலும் பென்சிலைப் பாவித்தார்கள் ரஸ்ய விஞ்ஞானிகள். சோ நாசா விஞ்ஞானிகளை விட ரஸ்யர்கள் மேலானவர்கள் புத்திசாலிகள். நாசா விஞ்ஞானிகள் உவ்வளாவு செலவு செய்தும் அவர்கள் பாவம் என சொன்னேன். நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததைக் கூட பொருட்படுத்தாமல் ரஸ்யர் பென்சிலைப் பாவித்தனர் என சொன்னேன்.

இப்ப என்ன உங்களுக்கு புரியலை. நிலா மீது ஏதாவது தனிப்பட்ட பிரச்சினையா? எனக்கு எதுவுமே ஆகல்லை. நல்லாக தான் இருக்கிறேன் :lol:

நிலா அக்கா கூல்டவுன் என்ன குடிக்க போறீங்க நிலா அக்கா!! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரோபரி அல்லது வனிலா ஐஸ்கிறீம் கூலாக்குமென நினக்கிறேன்.so strawberry or vanala ice cream for Nila please.

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே. அமெரிக்கர்கள் அவசரப்பட்டு, வெட்கம் மானத்தை இழந்து, தன்மானத்தை விட்டு ரசியர்களிடம் கேட்டு விட்டார்கள். ரசியர்களும் இதுதான் சந்தர்பமென்று அமெரிக்கர்களைப் பழிவாங்குவதற்காக 'தயாரிப்புச் செலவு கூடிய " பென்சிலை அவர்களுக்குக் குடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் மடடும் நம்மிடம் கேட்டிருந்தால், கிணத்தடிக்குப் பக்கத்திலிருக்கிற சுடுதண்ணி அடுப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு நல்ல வீர விறகுக் கரிக்கட்டி நாலைப் பொறுக்கி அவர்களிடம் கொடுத்திருக்கலாம். 'தயாரிப்புச் செலவும் மிக மிக கம்மி". அவர்களும் வேண்டியமட்டும் ரொக்கட்டின் மேல்சுவர், பக்கச்சுவர் என்று எல்லா இடத்திலும் கிறுக்கித் தள்ளி கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

பி.கு: நம்ம அறிவு உலகஅளவுல பிரபலமாவதற்கு ஏதோவொன்டு தடையாகக் கிடக்கு. :lol::lol:

ச்சே. அமெரிக்கர்கள் அவசரப்பட்டு, வெட்கம் மானத்தை இழந்து, தன்மானத்தை விட்டு ரசியர்களிடம் கேட்டு விட்டார்கள். ரசியர்களும் இதுதான் சந்தர்பமென்று அமெரிக்கர்களைப் பழிவாங்குவதற்காக 'தயாரிப்புச் செலவு கூடிய " பென்சிலை அவர்களுக்குக் குடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் மடடும் நம்மிடம் கேட்டிருந்தால், கிணத்தடிக்குப் பக்கத்திலிருக்கிற சுடுதண்ணி அடுப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு நல்ல வீர விறகுக் கரிக்கட்டி நாலைப் பொறுக்கி அவர்களிடம் கொடுத்திருக்கலாம். 'தயாரிப்புச் செலவும் மிக மிக கம்மி". அவர்களும் வேண்டியமட்டும் ரொக்கட்டின் மேல்சுவர், பக்கச்சுவர் என்று எல்லா இடத்திலும் கிறுக்கித் தள்ளி கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

பி.கு: நம்ம அறிவு உலகஅளவுல பிரபலமாவதற்கு ஏதோவொன்டு தடையாகக் கிடக்கு. :):lol:

பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க. :lol::lol::lol::lol:

பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க. :lol::lol::lol::lol:

:):lol::) என்னமோ என்னை நக்கலடிக்கிற போல இருக்குது. நான் என்ன ஐடியா சொல்லிட்டா இருக்கிறேன் எல்லோருக்கும்? :)

ஸ்ரோபரி அல்லது வனிலா ஐஸ்கிறீம் கூலாக்குமென நினக்கிறேன்.so strawberry or vanala ice cream for Nila please.

இல்லை பரவாயில்லை. No Thanks Nunaa :lol:

:(:wub::wub: என்னமோ என்னை நக்கலடிக்கிற போல இருக்குது. நான் என்ன ஐடியா சொல்லிட்டா இருக்கிறேன் எல்லோருக்கும்? :lol:

நிலா அக்கா இதற்கு போய் அழுறிங்க அது தான் பேபி வந்துட்டுது தானே ஓ அதற்கு அழவில்லையா :icon_mrgreen: !!அப்ப என்னதிற்கு அழுறீங்க.......!! :(

நல்லாக கதைச்ச வசம்பண்ணாவுக்கு என்னமோ என் மேலை கோவம் வந்து என்னமோ போல கதைக்கிறார் அதுதான் அழுறேன் ஜம்மு

நல்லாக கதைச்ச வசம்பண்ணாவுக்கு என்னமோ என் மேலை கோவம் வந்து என்னமோ போல கதைக்கிறார் அதுதான் அழுறேன் ஜம்மு

அட வசபண்ணா சொன்னதிற்காக அழுறீங்க அட நம்ம வசபண்ணா இப்ப பேபியை பற்றியும் என்னவோ எல்லாம் சொல்லுவார் ஆனா ரொம்ப நல்லவர் :) எவ்வளவு தான் என்ன சொன்னாலும் கோவிக்கவே மாட்டார் என்ன வசபண்னா நான் சொல்லுறது சரி தானே :( !!இதுக்கு ஜம்முவின் அக்கா அழுறதா சா எதிர்கட்சி என்ன நினைப்பீனம் அழாம வாங்கோ பேபி ஜஸ்கீரிம் வாங்கி தாரேன் அக்காவிற்கு!! :lol:

அட வசபண்ணா சொன்னதிற்காக அழுறீங்க அட நம்ம வசபண்ணா இப்ப பேபியை பற்றியும் என்னவோ எல்லாம் சொல்லுவார் ஆனா ரொம்ப நல்லவர் :) எவ்வளவு தான் என்ன சொன்னாலும் கோவிக்கவே மாட்டார் என்ன வசபண்னா நான் சொல்லுறது சரி தானே :( !!இதுக்கு ஜம்முவின் அக்கா அழுறதா சா எதிர்கட்சி என்ன நினைப்பீனம் அழாம வாங்கோ பேபி ஜஸ்கீரிம் வாங்கி தாரேன் அக்காவிற்கு!! :lol:

வசம்பண்ணாக்கு என்னமோ ஆச்சு போல அதை நினைச்சு தான் அழுகிறேன் ஜம்மு

சா வசபண்ணா ரொம்ப நல்லவர் அக்கா...... :(

Edited by Jamuna

பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க. :lol::unsure::):unsure:

எங்கே போவேன் வசபண்ணா!! :(

Edited by Jamuna

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.