Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாணய மதிப்பு உயர்ந்திருந்தால் ஒருவகையில் நன்மை.

குறைந்தால் இன்னொரு வகையில் நன்மை.

ஆனால் roller coaster போல நிலையற்று ஆடினால் எல்லாருக்கும் பிரச்சனை.

ஸ்திரமற்றதன்மையே பொருளாதார வளர்சியின் பிரதான எதிரி.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367.39 ரூபாயாக பதிவு!

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மேலும் வலுவடைந்துள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றில் கொள்வனவு விலை 307 ரூபாய் 36 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும், டொலர் ஒன்றில் விற்பனை விலை 325 ரூபாய் 52 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1326935

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

 

 

May be a cartoon

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நீண்ட வரிசையில் டொலர்களுடன் காத்திருக்கும் மக்கள்

1-48.jpg

சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாய்க்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் முதலாம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 360 ரூபாவாகவே இருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக அமெரிக்க டொலரின் விலை வேகமாக சரிந்தது.

டொலரின் பெறுமதி மேலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்களது டொலர்களை மாற்றிக் கொள்ள வரிசையில் நின்று வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கடந்த மாதங்களில் கடவுச்சீட்டை சமர்ப்பித்தவர்களுக்கு மாத்திரமே,டொலர் பரிவர்த்தனை செய்யப்பட்டது.

பணப்பரிமாற்றம் செய்த பின்னர்,ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு கடவுச்சீட்டுக்கள் கோரப்பட்டன.

மேலும்,இதை விடவும் அதிக பெறுமானத்துக்கு டொலரை மாற்றிக் கொள்வதற்கு பலர் வெவ்வேறு பரிவர்த்தனை நிலையங்களை நாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=240506

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கி 500 மில்லியன் டொலர் கொள்வனவு

கடந்த சில நாட்களில், இலங்கை மத்திய வங்கி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று சந்தைகளில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்துள்ளது.

1665120858-cbsl-2-300x200.jpg
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி.ஹரிச்சந்திர இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பாரிய வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே டொலரைக் கொள்வனவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

தெரண சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/244328

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

 

May be an illustration

 

May be a cartoon

animiertes-hand-bild-0086.gif  அமெரிக்க டொலரை.... துடைப்பை கட்டையால்,
துண்டைக் காணோம் துணியை காணோம் என... 
ஓட, ஓட...   அடித்து விரட்டும்,  ஸ்ரீலங்கா ரூபாய். 💪 
animiertes-lachen-bild-0116

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

May be a cartoon

 

May be an illustration

 

May be a cartoon

animiertes-hand-bild-0086.gif  அமெரிக்க டொலரை.... துடைப்பை கட்டையால்,
துண்டைக் காணோம் துணியை காணோம் என... 
ஓட, ஓட...   அடித்து விரட்டும்,  ஸ்ரீலங்கா ரூபாய். 💪 
animiertes-lachen-bild-0116

சிங்களவன்…சிங்களவந்தான்….

தமிழனை ஓட…ஓட விரட்டினமாரி….இப்ப டொலரை விரட்டிறான்….🤣

தமிழன் சிங்களவனிட்ட உப்பு சோடா வாங்கி குடித்து தனது கெட்டிதனத்தை வளர்க்க வேணும்🤣.

ஜய வேவா, ஜய வேவா!

🇱🇰🇱🇰🇱🇰

 

இவ்வண் 

- இன்று முதல் இலங்கைக்கு(ம்)  கழுவுவோர் சம்மேளனம்-

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சிங்களவன்…சிங்களவந்தான்….

தமிழனை ஓட…ஓட விரட்டினமாரி….இப்ப டொலரை விரட்டிறான்….🤣

தமிழன் சிங்களவனிட்ட உப்பு சோடா வாங்கி குடித்து தனது கெட்டிதனத்தை வளர்க்க வேணும்🤣.

ஜய வேவா, ஜய வேவா!

🇱🇰🇱🇰🇱🇰

 

Elephant House Soda - The King of the ChaseBubble-drinks GIFs - Get the best GIF on GIPHY

உப்புச்  சோடா... காய்ச்ச்சலுக்கு பாவிக்கிறது எல்லோ... 😂
இதுக்கும் பாவிக்கலாமாண்ணே...  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

Elephant House Soda - The King of the ChaseBubble-drinks GIFs - Get the best GIF on GIPHY

உப்புச்  சோடா... காய்ச்ச்சலுக்கு பாவிக்கிறது எல்லோ... 😂
இதுக்கும் பாவிக்கலாமாண்ணே...  🤣

🤣🤣🤣

வெஸ்டோ-போபியா,

புட்ஸ்சோ-பீலியா,

இரெண்டுக்கும் சிங்களவனின் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உப்பு-சோடா போல் அருமருந்து இல்லை மகனே என்கிறார் உடான்ஸ்சாமியார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2023 at 07:15, கிருபன் said:

இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாய்க்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்திசாலி இப்படி பொய் ஊடகங்களால் ஊதி பெருப்பிக்க பட்ட கதையை நம்பி வரிசையில் நிக்க மாட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

புத்திசாலி இப்படி பொய் ஊடகங்களால் ஊதி பெருப்பிக்க பட்ட கதையை நம்பி வரிசையில் நிக்க மாட்டான் .

@தமிழ் சிறி அண்ணா @பெருமாள் உங்கட பர்னிச்சரை உடைக்கிறார். என்னெண்டு பாருங்கோ🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

@தமிழ் சிறி அண்ணா @பெருமாள் உங்கட பர்னிச்சரை உடைக்கிறார். என்னெண்டு பாருங்கோ🤣

பெருமாள்... இப்பிடி, சேம் சைட் கோல் போடாதீங்க. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று விகிதம் இதோ !

500 மில்லியன் டொலர்கள் கடந்த வாரம் சந்தைக்கு!

கடந்த ஏழு நாட்களுக்குள் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சந்தைக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கைவசம் வைத்திருக்கும் டொலர்களை ரூபாயாக மாற்றுவதற்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொது மன்னிப்புக் காலத்தின் போது டொலர் 365 மற்றும் 370 க்கு இடையில் வர்த்தகம் செய்யப்பட்ட போதிலும், 30 மில்லியன் டொலர்கள் மாத்திரமே சந்தைக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மத்திய வங்கியின் ஆலோசனைக்கு செவி சாய்த்திருந்தால், அவர்கள் தங்கள் டொலர்களுக்கு அதிக விலையைப் பெற்றிருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ரூபாயின் பெறுமதி உயர்வடைய ஆரம்பித்ததில் இருந்து,சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சந்தைக்கு வந்துள்ளதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1327295

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

‘ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை’

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும் இந்த கட்டுக்கதை பயப்படுவதாக கூறியுள்ளார்.

அத்தோடு நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்றது என்றும் தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூட கட்டுக்கதைகள் பயப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய வங்கி முடிவுகளை எடுப்பதில்லை என்றும் இதிலும் அரசாங்கத்தின் உந்துதல் காணப்படுவதாகவும் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1327378

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு குறைகிறது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் (LKR) மதிப்பு இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய அமெரிக்க டொலர் வாங்கும் விலை ரூ. 319.84 விற்பனை விலை ரூ. 335.68 ஆகும்

இந்த மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் பிற முக்கிய கரன்சிகளுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்தது, ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.

https://thinakkural.lk/article/244718

10/03/23 இல் இருந்து மெல்ல ரூபாய் மதிப்பு குறைகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எகிறியது அமெரிக்க டொலரின் பெறுமதி..!

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.8% அதிகரிப்பு !

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும், இந்திய ரூபாய்க்கு நிகரான மதிப்பு 7.6% ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜப்பானிய யென், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாயின் பெறுமதியும் முறையே 8.3%, 7% மற்றும் 8% ஆக அதிகரித்துள்ளது

https://athavannews.com/2023/1328079

  • கருத்துக்கள உறவுகள்

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி ஸ்திரமடையும் - ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை

Published By: T. SARANYA

20 MAR, 2023 | 05:22 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டவுடன், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக அதிகரித்துச்செல்லுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன்வழங்குனர்களின் நிதியியல் உத்தரவாதம், பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் இலங்கையால் பூர்த்திசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டத்துக்கான சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதி குறித்த இறுதி அறிவிப்பு செவ்வாய்கக்ிழமை (21) வெளியாகவுள்ளது.

இதுஇவ்வாறிருக்க கடந்த ஒருவாரகாலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்பயாக அதிகரித்துச்சென்றதுடன், மீண்டும் கடந்தவார இறுதியில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் படிப்படியாக அதிகரித்துச்செல்லுமெனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதனையொத்த கருத்தொன்றை வெளியிட்டிருந்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்ததன் பின்னர் வெளியகக்கடன்மறுசீரமைப்புச் செயன்முறையை ஆரம்பிக்கமுடியும் எனவும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 185 - 200 க்குள் பேணமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தளம்பல் நிலையில் காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இருப்பினும் தற்போது டொலர் நெருக்கடிக்குத் தீர்வுகாணப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் இலங்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலோங்கும் என்றும், அதனூடாகப் பெருமளவான முதலீடுகளை ஈர்த்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/150994

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து மீண்டும் உயர்வடைந்தது ரூபாவின் பெறுமதி

Published By: VISHNU

21 MAR, 2023 | 05:30 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து இன்று (21) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வடைந்துள்ளது. 

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது.

இருப்பினும் கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சடுதியான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டதுடன், ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்துச்சென்றது. 

ஆனால் நேற்று (20) திங்கட்கிழமை மீண்டும் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன்படி நேற்று (20) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 331.71 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 349.87 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்திருப்பதாக இன்று (21) உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து மீண்டும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. 

அதன்படி இன்று (21) செவ்வாய்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 316.84 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/151098

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் வர்த்தக வங்கிகளில் இன்றைய டொலர் நிலைவரம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் நிலைவரத்தின்படி இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

Dollar-Rupee.jpg
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை செவ்வாய்க்கிழமை ரூ.320.27ல் இருந்து ரூ.308.70 ஆகவும், விற்பனை விலை ரூ.343ல் இருந்து ரூ.330 ஆகவும் குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், வாங்கும் விகிதம் செவ்வாய்க்கிழமை ரூ.314-ல் இருந்து ரூ.311 ஆகவும் விற்பனை விலை ரூ.336ல் இருந்து ரூ.330 ஆகவும் குறைந்துள்ளது.

இதற்கிடையில், சம்பத் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 310 ஆகவும், விற்பனை விலை ரூ.325 ஆகவும் குறைந்துள்ளது.

https://thinakkural.lk/article/245861

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி மேலும் உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (23) மேலும் வலுவடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311 ரூபா 26 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபா 60 சதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்த போதிலும், கடந்த வாரம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. எவ்வாறாயினும், இந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மீண்டும் வலுவடைய ஆரம்பித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 312 ரூபா 61 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 330 ரூபா 16 சதமாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/246002

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

Published By: T. SARANYA

24 MAR, 2023 | 04:19 PM
image

(நா.தனுஜா)

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது.

இருப்பினும் கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் திடீர் முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டதுடன், பின்னர் மீண்டும் அது வீழ்ச்சியடைந்தது.

ஆனால் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்திருப்பதாகக் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து மீண்டும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தது.

அதன்படி கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 316.84 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இது தொடர்ச்சியாக அதிகரித்துவந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/151346

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கான அமெரிக்கா வங்கிகளே  சரிந்து விழுகையில் இவனுகளுக்கு மட்டும் பெறுமதி அதிகரிப்பு என்று பீலா .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும் விற்பனை விலை 330.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.75 ரூபாவாகவும், அதன் விற்பனை விலை 334.20 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

No description available.

https://thinakkural.lk/article/247906

 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2023 at 15:22, ஏராளன் said:

தங்கத்தின் விலை குறைந்தது

 

இன்று (03) தங்கத்தின் விலை வேகமாகக் குறைந்துள்ளது.

1627874685_gold1-1200x800-1-300x200.jpg
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்க அவுன்ஸ் – ரூ. 638,284.00

  • 24 கரட் 1 கிராம் – ரூ.22,520.00
  • 24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 180,150.00
  • 22 கரட் 1 கிராம் – ரூ. 20,650.00
  • 22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.165,150.00
  • 21 கரட் 1 கிராம் – ரூ. 19,710.00
  • 21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 157,650.00

https://thinakkural.lk/article/243239

No photo description available.

1961´ம் ஆண்டு மாசி மாதம் ஒரு பவுன் தங்கம், 94 ரூபாயாக.. கிடு கிடு என  உயர்வு.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

No photo description available.

1961´ம் ஆண்டு மாசி மாதம் ஒரு பவுன் தங்கம், 94 ரூபாயாக.. கிடு கிடு என  உயர்வு.  🤣

அண்ணை இது இந்தியாக் காசெல்லோ!
1978 இல் இலங்கையில் 900 ரூபாய் என அம்மா கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.