Jump to content

தாய்லாந்தில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் 6,000 அமெரிக்கப் படையினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் 6,000 அமெரிக்கப் படையினர்

Published By: SETHU

03 MAR, 2023 | 03:40 PM
image

தாய்லாந்தில் இன்று ஆரம்பமான கூட்டு இராணுவப் பயிற்சியில் 6000 இற்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் பங்குபற்றுகின்றனர். 

கோப்ரா கோல்ட் எனும் இப்பயிற்சியில் தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் படையின் பங்குபற்றுகின்றனர்.

42 ஆவது வருடமாக இப்பயிற்சி நடவடிக்கை நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாக இது விளங்குகிறது. 

 

 

Cobra-Gold---Thailand---AFP-1.jpg

கடற்படையினர், தரைப்படையினர், விமானப்படையினர் இப்பயிற்சிகளில் பங்குபற்றுகின்றனர் 

இப்பயிற்சிக்காக 6,000 படையினரை அமெரிக்கா அனுப்பியுள்ளது. 

இது, 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையைவிட 4 மடங்கு அதிகமாகும். 

Cobra-Gold---Thailand---AFP--3.jpg

 

Cobra-Gold---Thailand---AFP--4.jpg

Photos: AFP

https://www.virakesari.lk/article/149640

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கடற்பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்படுவது குறித்து குவாட் நாடுகள் கவலை

Published By: SETHU

03 MAR, 2023 | 02:56 PM
image

 

ஆசியாவின் கடற்பகுதிகள் இராணுவ மயப்பபடுத்தப்படுவது குறித்து குவாட் நாடுகள் இன்று வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

சர்ச்சைக்குரிய கடற்பகுதிகளில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் நிலையில் குவாட் அமைப்பின் இக்கரிசனை வெளியாகியுள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் அந்நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அதன்பின் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்கள் உட்பட கடற்பகுதிகளில் கடல்போக்குவரத்து விதிகள் அடிப்படையிலான ஒழுங்கின் சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச சட்டத்தை பின்பற்றிநடப்பது முக்கியமானதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடல்பகுதிகளில் ஒருதலைப்பட்சிமான நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சீனாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சீனாவை சுற்றிவளைப்பதற்காக குவாட்டை பயன்படுத்துவதாக அமெரிக்கா மீது சீனா குற்றம் சுமத்துகிறது. 

மேற்படி மாநாட்டின் பின்னர், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமசா ஹயாஷி கருத்துத் தெரிவிக்கையில், குவாட் குறித்து சீனா அச்சம் கொள்வதற்கு காரணம் இல்லை என்றார். 

https://www.virakesari.lk/article/149633

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து ஒரு கத்தி மேல் நிற்கும் நாடு.

 வட கொரியாவில் கிம்முக்கு இருப்பதை போல இறுக்கமான மரியாதை பொதுவெளியில் அரச குடும்பத்துக்கு கொடுக்கப்படும்.

கட்சி அரசியல் எப்போதும் ஸ்திரமற்றே இருக்கும். பல “புரட்சிகள்” அரசாங்கத்தை மாற்றியுள்ளன.

கட்டமைப்பின் மீதான வெறுப்பு நீறுபூத்திருக்கிறது.

ஆனா பல தனி மனித சுதந்திரங்கள் உண்டு. 

இதில் ஏதாவது ஒரு பக்கம் மேற்கோடு சாய, மறுபக்கத்தை சீனா ஆதரித்தால் - நாடு நாசமாக போக கூடும்.

பிகு

முந்திய காலனிய போட்டியில், சகல ஐரோப்பிய சக்திகளிடனும் நடப்பை பேணி, பல விட்டு கொழுப்புகளை அனைவருக்கும் செய்து (பாலியல் வியாபார கலாசார மாற்றம் உட்பட) நாட்டை காலனிய நாடாகாமல் காப்பாற்றினர் தாய் அரசர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தாய்லாந்து ஒரு கத்தி மேல் நிற்கும் நாடு.

 வட கொரியாவில் கிம்முக்கு இருப்பதை போல இறுக்கமான மரியாதை பொதுவெளியில் அரச குடும்பத்துக்கு கொடுக்கப்படும்.

கட்சி அரசியல் எப்போதும் ஸ்திரமற்றே இருக்கும். பல “புரட்சிகள்” அரசாங்கத்தை மாற்றியுள்ளன.

கட்டமைப்பின் மீதான வெறுப்பு நீறுபூத்திருக்கிறது.

ஆனா பல தனி மனித சுதந்திரங்கள் உண்டு. 

இதில் ஏதாவது ஒரு பக்கம் மேற்கோடு சாய, மறுபக்கத்தை சீனா ஆதரித்தால் - நாடு நாசமாக போக கூடும்.

பிகு

முந்திய காலனிய போட்டியில், சகல ஐரோப்பிய சக்திகளிடனும் நடப்பை பேணி, பல விட்டு கொழுப்புகளை அனைவருக்கும் செய்து (பாலியல் வியாபார கலாசார மாற்றம் உட்பட) நாட்டை காலனிய நாடாகாமல் காப்பாற்றினர் தாய் அரசர்கள். 

அமெரிக்கா அகல கால் வைத்து எங்கேயோ ஒரு இடத்தில் வைத்து யாராவது கசாயம் கொடுப்பார்கள் என நினைக்கின்றேன். :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா அகல கால் வைத்து எங்கேயோ ஒரு இடத்தில் வைத்து யாராவது கசாயம் கொடுப்பார்கள் என நினைக்கின்றேன். :rolling_on_the_floor_laughing:

ஒரு ஊர்ல ஒரு கிளி இருந்துச்சாம்….அது ஒரு இலவம் மரத்தில …..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஒரு ஊர்ல ஒரு கிளி இருந்துச்சாம்….அது ஒரு இலவம் மரத்தில …..🤣

தொடருங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம். 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

தொடருங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம். 😎

இருங்கோ…இரெண்டு கிளைமாக்ஸ் யோசிச்சுகொண்டு வாறன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இருங்கோ…இரெண்டு கிளைமாக்ஸ் யோசிச்சுகொண்டு வாறன்🤣

கவனமாய் மெல்லமாய்  கிளைமாக்ஸ் பெற்றோல் மாக்ஸ் எல்லாம் எடுங்கோ :hurra:
மேற்குலக அரசியல்லை  எட்டுத்திக்கும் ஒரே கிளைமாக்ஸ்தான்...:beaming_face_with_smiling_eyes:
கொலை கொள்ளை :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்தது போதும், மனோகரா…பொங்கி எழு!

பவேரியாவில் பல்துலக்கவா உன் கரங்கள்?

சக்சனியில் சரசம் ஆடாவா உன் கால்கள்?

போர்…போர்…

கியவை நோக்கி உன் படைகளை திருப்பு (உக்ரேன் காரன் டிராக்டரில் கட்டி இழுத்தால் கம்பெனி பொறுப்பல்ல). 

5 minutes ago, குமாரசாமி said:

கவனமாய் மெல்லமாய்  கிளைமாக்ஸ் பெற்றோல் மாக்ஸ் எல்லாம் எடுங்கோ :hurra:
மேற்குலக அரசியல்லை  எட்டுத்திக்கும் ஒரே கிளைமாக்ஸ்தான்...:beaming_face_with_smiling_eyes:
கொலை கொள்ளை :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

பொறுத்தது போதும், மனோகரா…பொங்கி எழு!

பவேரியாவில் பல்துலக்கவா உன் கரங்கள்?

சக்சனியில் சரசம் ஆடாவா உன் கால்கள்?

போர்…போர்…

கியவை நோக்கி உன் படைகளை திருப்பு (உக்ரேன் காரன் டிராக்டரில் கட்டி இழுத்தால் கம்பெனி பொறுப்பல்ல). 

மேற்குலகு உக்ரேன் விசயத்திலை உள்ள இடமெல்லாம் ஓடித்திரிஞ்சு தடக்குப்படுறதை பார்த்தாவது கருத்தெழுதலாம்....அதுவும் இல்லையெண்டால்.....நான் என்ன செய்ய?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்துக்கு பக்கத்தில் நின்று வேடிக்கை காட்டுகிறது என்றால் சும்மாவா?? கனக்க வேடிக்கைகள் பார்க்கலாம் போல😂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேசிய மட்டத்தில் 5 %  யில்லை. தேசிய மட்டத்தில் 29 பேரை தெரிவு செய்வார்கள்.  100%/29 = 3.45%  3.448% மேல் கிடைத்தால் ஒரு இடம் கிடைக்கும். சென்ற தேர்தலில் சைக்கிளுக்கு ஒரு இடம் கிடைத்தது. கொழும்பில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவதும் தேசிய மட்டத்தில் கிடைக்கலாம் என்பதினால் தான்.  வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களினால் ஜேவிபி உட்பட சிங்கள கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் தேசிய மட்டத்தில் சிங்களவர்களுக்கு இடம் கிடைக்க உதவபோகிறது. 
    • முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட டெல்லியை இலங்கை தமிழர் கடற்பரப்பில் கொள்ளை அடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கும் படி கொழும்பற்கு  அழுத்தம் கொடுக்கும் படி கமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் கட்சிகளினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைக்கபடுகின்றது. ஆனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்ற கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
    • ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.
    • நீங்க (Bar) பாரைத் தானே சொல்றீங்க.
    • ஓம்…கிறீம்..ஐஸ் கிரிறீம்… உடான்ஸ் சாமியாய நமஹ… மகனே….. நீ வட்டம் கீறியது தப்பல்ல மகனே… அந்த வட்டத்துள் கோஷானை நீ உள்ளடக்கியதுதான் பத்து பிராமணர்களை கொல்லும் தப்புக்கு நிகரானது…. அதனால்தான் முருகர்சாமியின் கோபத்துக்கு ஆளானாய்… எகத்தாளம், ஏகதாளம், ஆதி தாளம்…இவை எல்லாம் உனக்கானவை அல்ல மகனே…. பரம்பொருள் உடான்ஸ்சாமியை மனதில் நினைத்து உச்சாடனம் செய்த வார்த்தைகள் இவை. புரிந்தவன் பிஸ்தா…. புரியாதவன் பாதாம்…. ஓம்…கிரீம்…டோநட்….
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.