Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளின் ஆற்றலும், உறுதிப்பாடும் பாரிய நம்பிக்கை தந்துள்ளது: வடபோர்முனைத் தளபதி லெப்.கேணல் ஜெரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளின் ஆற்றலும், உறுதிப்பாடும் பாரிய நம்பிக்கை தந்துள்ளது: வடபோர்முனைத் தளபதி லெப்.கேணல் ஜெரி

[வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 14:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் புலி போராளிகளிடமுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடும் அவர்களிடம் காணப்படுகின்ற பன்முக ஆற்றல்களும் களமுனையில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று வடபோர் முனைக்களமுனைத் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ஜெரி தெரிவித்துள்ளார்.

வடபோர் முனையில் இருந்து அவர் கூறியுள்ளதாவது:

முன்னெப்போதைய கால கட்டங்களிலும் எமது விடுதலை இயக்கம் பெற்று வந்திராத பெரும் ஆளணிப் பலத்தை இப்போது பெற்றிருக்கின்றது.

களத்தில் எமது போராளிகளின் உறுதிப்பாடு மிகவும் நம்பிக்கை தருவதாக இருக்கின்றது. போராளிகள் ஒவ்வொருவரும் மிகவும் உறுதிப்பாடு மிக்கவர்களாகத் தமது பணிகளை ஆற்றி வருகின்றனர்.

எமது போராளிகளின் உறுதிப்பாடு எதிரியை சலிப்படைய வைத்திருக்கிறது. அவர்கள் எமது போராளிகளைத் தொடர்ச்சியாகத் தொந்தரவிற்கு உட்படுத்தி அவர்களைச் சலிப்படையச் செய்யும் தந்திரோபாயத்தடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அதனால் எதிரியின் தாக்குதல்கள் களத்தில் போராளிகளின் தாங்கு சக்தியை அதிகரித்துள்ளது. எதிரியின் முயற்சிக்கு மாறான வெளிப்பாடே இங்கு நிகழ்ந்திருக்கிறது.

போராளிகளின் தாங்கு சக்தி எதிரியைக் கலக்கமடையச் செய்திருக்கிறது. புதிய போராளிகள் கள நுணுக்கங்களை நன்கு கைவரப் பெற்றவர்களாக மாறியிருக்கிறார்கள்.

இது எதிரியின் தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்புக்களைப் பாரிய அளவில் குறைத்திருக்கிறது. களமுனைச் செயற்பாடுகளில் எமது போராளிகளின் இத்தகைய வளர்ச்சி நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது என்றார் அவர்.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வரும் களங்கள் இதற்கு சான்று பகரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் செய்யும் போது, அது பொங்கி வழியும் வரை விருந்திற்காகக் காத்திருக்க வேண்டும்.

பானையும் ஒட்டை ஆகாமல் பார்த்துக்கணும்

பானையில் இருந்து வழிவதெல்லாம் சரி தான் கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. விடுதலைப்புலிகள் போர் தொடங்கவேண்டும் என்பதற்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ சில காரியங்களில் ஈடுபட்டார்கள், அது இப்போது முழுப்போராக மாற்றம் கொண்டபின் சிங்களப்படைகள் மூர்க்கமாக இன அழிப்பில் ஈடுபடும் வேளையில் அதாவது பாரிய இராணுவ நகர்வுகளை செய்யும் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் தந்திரோபாய பின் நகர்வு என கூறிக்கொண்டு பின்செல்லுகின்றனர். இதுவரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகள் இன்னும் மெளனம் சாதிக்கிறார்கள் என்றால் ஏன் அவர்கள் அவசரப்பட்டு இந்த போரை தொடங்கினார்கள்? சிங்களப்படைகளே போரை வலிந்து தொடங்கினார்கள் இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனாலும் விடுதலைப்புலிகளும் அதற்கு தூண்டுகோளாக இருந்தது உண்மை தானே ?

இரண்டு தசாப்ப்தங்களுக்கும் மேலாக போரினால் எம்மக்கள் மிகப்பெரும் மனித அவலங்களை சந்தித்திருக்கும் வேளையில் இந்த போரானது ஒரு இனத்தையே முழுமையாக அழித்துவிடுகயில் போர் வெற்றிபெறும் நிலையில் அந்த வெற்றியைக் கொண்டாட எம்மக்களில் எத்தனை பேர் உயிரோடு இருப்பார்கள்? எம் இனமே அழிந்த பின் எதற்கு தனி நாடு? சிங்கள மக்களோடு ஒப்பிடுகையில் இந்த போரினால் எம் மக்களே மிகவும் மிகவும் பாதிப்படைகின்றனர், அழிக்கப்படுகின்றனர். என்னையும் உங்களையும் போன்ற ஒரு சிறிய ஆயுளைகொண்ட ஒருவனின் வாழ்க்கை இடையிலே பறிக்கப்படுகின்றது அந்த சம்பவத்தில் இறக்கும் ஒரு பொதுமகனின் இடத்தில் எம்மை நிறுத்திப்பார்த்தால் அந்த மரணம் எம்மை நோக்கி வரும் போது நாம் இரு கரம் நீட்டி வரவேற்போமா? அல்லது தப்பித்து ஓடப்பார்ப்போமா? இது இவாறு இருக்க போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எப்படி நாம் சொல்லிவிடமுடியும்?

சிங்கள அரசு தனியான ஒரு தேசத்தை எமக்கு கொடுத்திவிடமாட்டாது. தமிழீழவிடுதலைப்புலிகள் தாக்கி நாட்டை கைப்பற்றுவது என்பது அவ்வளவு இலகுவில் சாத்தியப்படாது. இவர் பிடிக்க அவர் அடிக்க பின் அவர் பிடிக்க இவர் அடிக்க என காலம் நீண்டுகொண்டே செல்லும் தவிர எமக்கு ஒரு விமோசம் கிடைப்பெதென்பது எம் சொந்த முயற்சியிலேயே தங்கியுள்ளது. இவரோ அவரோ ஒரு இடத்தை கைப்பற்றி தக்க வைக்க முடியாதென்பதை கடந்த 20 வருட போர் எமக்கு கற்றுத்தந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ரொம்ப குளப்புறீங்கள் நளன்.......

"இவர் பிடிக்க அவர் அடிக்க பின் அவர் பிடிக்க இவர் அடிக்க என காலம் நீண்டுகொண்டே செல்லும் தவிர எமக்கு ஒரு விமோசம் கிடைப்பெதென்பது எம் சொந்த முயற்சியிலேயே தங்கியுள்ளது"

இதன் அர்த்தம் என்ன??

சில நேரம் இவர்களை எல்லாம் விட்டு விட்டு டக்கிளஸ் ,கருணா, ஆனந்த(ம்)சங்கரி. சித்தார்த்,சிறிதரன் போன்றவர்களிடம் சேர்ந்தால் ஒரேடியாக இலங்கை முழுவதும் தமிழீழம் என்று பெயர்வைத்து வாங்கி தருவார்கள் என்று சொல்ல வருகிறாரோ? :D

எமக்கு ஒரு விமோசம் கிடைப்பெதென்பது எம் சொந்த முயற்சியிலேயே தங்கியுள்ளது. இவரோ அவரோ ஒரு இடத்தை கைப்பற்றி தக்க வைக்க முடியாதென்பதை கடந்த 20 வருட போர் எமக்கு கற்றுத்தந்துள்ளது.

எல்லாம் சரி, இந்த சொந்த முயற்சி என்று எதை சொல்லுறீங்கள்?

20 வருடப்போர் உங்களுக்கே இவ்வளவு கற்றுத்தந்திருக்குதெண்டால்..

..,தமிழீழத்தேசியத்தலைவர் தலைமையில் போராடும் விடுதலைப்புலிகளுக்கு எவ்வளவ சொல்லித்தந்திருக்கும்!

எல்லாரும் எல்லாம் இங்கிருந்து கதைக்கவும், எழுதவும் நல்லாத்தான் இருக்கும்.

அந்தந்த இடத்தில இருந்தால்தான் ஒவ்வொரு விசயத்தினதும் நடைமுறைச்சாத்தியம் விளங்கும்

மௌனம் என்பது பல வேளைகளில் வெற்றியைத்தரலாம். சில வேளைகளில் மரணத்தையும் தந்துவிட்டுச்செல்கின்றது.

மௌனம் என்பது பல வேளைகளில் வெற்றியைத்தரலாம். சில வேளைகளில் மரணத்தையும் தந்துவிட்டுச்செல்கின்றது.

பொறுமை என்பது மனிதனுக்கு அவசியம் அதைவிட பாதிக்கப்படவன் திரும்ப தாக்கும் பொது அவதானமும் அவசியம்.

களத்தில் உறுதியுடனும் இலட்சியத்தில் பற்றுடனும் செயற்படும் போராளிகளும் தளபதிகளும் எதில் நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றார்கள். கிடைக்கப்போகும் முடிவை வெற்றியாக்கவேண்டும் என்பதில்தான். நண்பர்களுடனான பல சந்திப்புகளில் நளன் சொல்வது போன்ற கருத்துக்கு நான் முகங்கொடுத்துள்ளேன். இவ்வாறான கருத்துகளுக்கு நான் கூறிய விடை இதுதான். " தோல்வி என்ற தளத்தின் மேல் நிற்பவர்களுக்கே இவ்வாறான கருத்துக்கள் வெளிப்படும். தோல்வியும் அதனாலேற்படும் தளர்ச்சியும் தீர்வினைத் தராது. நோக்குமிடத்து தற்போதைய காலம் தமிழருக்குப் பாதகமாகத் தோன்றுகிறது எனக் கருதினால், அதிலிருந்து தந்திரமாகத்தான் மீளவேண்டும். அந்த மீள்தலைக் களம்தான் தீர்மானிக்க வேண்டும். காத்திருப்புக்களினால் இழப்புக்கள் ஏற்படுவது உண்மைதான். அந்த இழப்புக்களைக் கண்ணுற்றதினால் இவ்வாறு கருத்துச் சொல்வதற்காகத் தள்ளப்படுகின்றேம். அவைகளை விட்டுவிட்டு எவ்வாறு இந்த நிலையிலிருந்து மீளலாம் என்ற கருத்துக்களை முன்வைத்தால் நன்றாகவிருக்கும்"

தோற்கும்போது நினைக்கவேண்டும். இன்னொ|ரு வெற்றிக்|கு அத்திவாரம்தான் இது என்று

துவங்கிற்றேங்க.... :lol:

மேல ஒண்டு... கடலில.... இரண்டு... தரையில ஐம்பது என்றால்....

உங்கால புலத்தாருக்கு காணும் கதைக்க... இப்ப ஒண்டையும் காணோம் அல்லோ...

அப்ப இனி வதந்திகளுக்கும் கருத்துகளுக்கும் கால் கை முக்குவைத்து நாமே வளத்திடமாட்டோமா என்ன... :D

பிடித்தவருக்கு இப்பதான் முடிகிறது பயிற்சி.... பொறுங்க பொறுங்க... :P

டக்கிளஸ் கருணா ஆனந்த(ம்)சங்கரி. சித்தார்த்சிறிதரன்

இவர்களை ஏன் இன்னும் உலவவிட்டுள்ளார்கள்....???

இவங்களை முதலில அழிக்க அல்லது பிடிக்கபாருங்கள் ஐயா... அல்லது இதில்தான் உள்ளதோ எல்லாபுதிரும். :D:) :angry: :angry:

Edited by Netfriend

பானையில் இருந்து வழிவதெல்லாம் சரி தான் கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. விடுதலைப்புலிகள் போர் தொடங்கவேண்டும் என்பதற்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ சில காரியங்களில் ஈடுபட்டார்கள்இ அது இப்போது முழுப்போராக மாற்றம் கொண்டபின் சிங்களப்படைகள் மூர்க்கமாக இன அழிப்பில் ஈடுபடும் வேளையில் அதாவது பாரிய இராணுவ நகர்வுகளை செய்யும் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் தந்திரோபாய பின் நகர்வு என கூறிக்கொண்டு பின்செல்லுகின்றனர். இதுவரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகள் இன்னும் மெளனம் சாதிக்கிறார்கள் என்றால் ஏன் அவர்கள் அவசரப்பட்டு இந்த போரை தொடங்கினார்கள்? சிங்களப்படைகளே போரை வலிந்து தொடங்கினார்கள் இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனாலும் விடுதலைப்புலிகளும் அதற்கு தூண்டுகோளாக இருந்தது உண்மை தானே ?

இரண்டு தசாப்ப்தங்களுக்கும் மேலாக போரினால் எம்மக்கள் மிகப்பெரும் மனித அவலங்களை சந்தித்திருக்கும் வேளையில் இந்த போரானது ஒரு இனத்தையே முழுமையாக அழித்துவிடுகயில் போர் வெற்றிபெறும் நிலையில் அந்த வெற்றியைக் கொண்டாட எம்மக்களில் எத்தனை பேர் உயிரோடு இருப்பார்கள்? எம் இனமே அழிந்த பின் எதற்கு தனி நாடு? சிங்கள மக்களோடு ஒப்பிடுகையில் இந்த போரினால் எம் மக்களே மிகவும் மிகவும் பாதிப்படைகின்றனர்இ அழிக்கப்படுகின்றனர். என்னையும் உங்களையும் போன்ற ஒரு சிறிய ஆயுளைகொண்ட ஒருவனின் வாழ்க்கை இடையிலே பறிக்கப்படுகின்றது அந்த சம்பவத்தில் இறக்கும் ஒரு பொதுமகனின் இடத்தில் எம்மை நிறுத்திப்பார்த்தால் அந்த மரணம் எம்மை நோக்கி வரும் போது நாம் இரு கரம் நீட்டி வரவேற்போமா? அல்லது தப்பித்து ஓடப்பார்ப்போமா? இது இவாறு இருக்க போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எப்படி நாம் சொல்லிவிடமுடியும்?

சிங்கள அரசு தனியான ஒரு தேசத்தை எமக்கு கொடுத்திவிடமாட்டாது. தமிழீழவிடுதலைப்புலிகள் தாக்கி நாட்டை கைப்பற்றுவது என்பது அவ்வளவு இலகுவில் சாத்தியப்படாது. இவர் பிடிக்க அவர் அடிக்க பின் அவர் பிடிக்க இவர் அடிக்க என காலம் நீண்டுகொண்டே செல்லும் தவிர எமக்கு ஒரு விமோசம் கிடைப்பெதென்பது எம் சொந்த முயற்சியிலேயே தங்கியுள்ளது. இவரோ அவரோ ஒரு இடத்தை கைப்பற்றி தக்க வைக்க முடியாதென்பதை கடந்த 20 வருட போர் எமக்கு கற்றுத்தந்துள்ளது.- நளன்

--------------------------------------------------------------------------------------------------------

நளன் அவர்கள் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும் சிங்களம் இன ஒடுக்கு முறையை செய்யத்தொடங்கிய பின்பே இந்த போராட்டம் தோற்றம் கண்டது. அன்னியராட்சிக்கு முற்பட்டகாலத்தில் இலங்கை என்ற நாட்டுக்குள் ஒன்றாக ஈழம் இருந்ததில்லை. இது வரை காலமும் சிங்களம் ஒரு சிறு தீர்வை கூட முன்வைக்கவோ தரவோ முன்வரவில்லை.

தமிழர் தரப்பில் அழிவுகள் அதிகமாக இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக போராட்டத்தை குறைகாண முடியாது. சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் வடகிழக்கு பகுதி இருக்கும் இந்த காலத்தில் மேலும் சர்வதேசத்தின் பார்வை முன்னெப்போதும் இல்லாதளவு இலங்கை மீதிருக்கும் இந்தக்காலத்தில் சிங்களத்தால் யாழுக்கான பாதையை மூட முடிகின்றது. தமிழ்க் கிராமங்களை சிங்களமயமாக்குகின்றது. புத்த விகாரைகளை நிறுவுகின்றது. தினம் கடத்தல்கள் காணமல் போகச்செய்தல் கொலை பாரிய இடப்பெயர்வு என சிங்களம் செய்கின்றது என்றால் போராட்டம் இல்லை எனில் இப்போது அங்கே தனி சிங்களத்தீவு தான் இருந்திருக்கும்.

புலிகள் இவ்வளவுகாலம் தாக்கு பிடிப்பதே பெரிய வெற்றி. புலிகள் இன்னும் பலத்துடன் இருப்பதே பெரிய வெற்றி. இனி தமிழீழ தனி அரசை நிறுவுவதற்கான முயற்சியும் வெற்றி பெறும். இவ்வாறு நான் சொல்ல காரணம் என்னவெனில் தமிழர்கள் சமூகம் கூறுபட்ட ஒரு சமூகம். சாதிய மத வர்க வாரியாக பிளவுபட்ட ஒரு சமூகத்தில் தற்போதைய போராட்டம் போல் ஒரு எழுச்சியை வரலாறு கண்டதில்லை.

சிங்களம் ஒரு அரசு தமிழர்கள் நூறு அரசுகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கருத்து. அவ்வாறான கருத்தின் கீழ் செயல்பாடுகள். பிரதேச வாதங்கள். ஒரு சிறிய இனமாக இருந்தாலும் உலகில் மற்ற எந்த இனத்தையும் விட பிளவுபட்ட ஒரு இனம் எமது ஈழத்தமிழினம். ஒரு முழுமையான போராட்டத்தை மக்கள் எழுச்சிளை இவ்வாறான முரண்பாடுகளில் கட்டி எழுப்புவது குதிரைக்கொம்பை விட மோசமானது.

கடசி தமிழனை சிங்களவன் கொன்றபின்னும் அதற்கு ஆயிரம் காரணம் கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கும் ஒரு விதண்டாவாத தளத்தை உருவாக்கும் வல்லமை எம்மினத்தில் உள்ள ஒரு பெரும் புலமை. இன்றும் எத்தனை தமிழர்கள் இருக்கின்றார்கள் சிங்களம் எப்படி கொன்று குவித்தாலும் அதற்கு போராட்டத்தை காரணமாக்குபவர்கள். ஏதோ சிங்களம் இந்த 50 வருடகாலத்தில் பல முறை தமிழர்களுக்கு பல முறை சுதந்திர வாழ்வழிக்க முன்வந்தது போல் கதைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் இறக்கும் வரை கதைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

அடுத்து இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கும் நாடுகள் 65 க்கு மேற்பட்டவை. படைத்துறை ஆலோசனையில் அனைத்து வல்லரசுகளும் உட்பட பல நாடுகள். தலைமாட்டில் இருந்து எப்போதும் எட்டி உதைக்கும் இந்திய உளவுப்படைகள். இப்படி மற்ற எந்த நாட்டின் போராட்டமும் சந்தித்திராத சிக்கல்கள். அதேநேரம் எந்த நாட்டின் உதவியும் அற்ற சூழலில் போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை.

இப்படி பிளவுபட்ட சமுகத்தை ஒருங்கிணைத்து உலகநாடுகளின் பின்புல உதவியுடன் இன அழிப்பை செய்யும் இலங்கை அரசுக்கு எதிராக 25 வருட காலமான போராட்டத்தை வளர்ச்சி பாதையில் நகர்த்துவதே பெரிய வெற்றி. இந்த வெற்றி ஒரு நம்பிக்கையை தருகின்றது அது வானது தமிழீழ தனி அரசை அமைப்பார்கள் என்பதே ஆகும். அந்த நம்பிக்கைக்கு அப்பால் வேறொரு நம்பிக்கை ஒளி எங்கும் இல்லை.

தமிழீழ அரசு நிழலரசாக வன்னி பெருநிலப்பரப்பில் இயங்குகின்றது. அங்கே சிங்கத்தின் விமானத்தால் கொல்லப்படுகின்றவர்கள் ஆழ ஊடுருவும் அணியால் கொல்லப்படுகின்ற மக்கள் தவிர மக்கள் எந்த வித அச்சுறுத்தலிலும் இல்லை. அரச ஆக்கிரமிப்பு பகுதிகளான யாழ் அல்லது தென் தமிழீழத்தில் நாள் தோறும் நடக்கும் அவலங்கள் சொல்லி மாளாது. இந்த அடிப்படையில் பிரச்சனையை அணுகுவதே நியாயமானது. ஆனால் கூறுபட்ட தமிழர்களின் கூறுகெட்ட சிந்தனைப்போக்கு எப்பேதும் தன்னினத்தையே குறைகாணும். பாடு பாத்து கதைக்கும். அது போராட்டத்தை சிதைத்து சிங்கள தரப்பை வலுப்படுத்தும். அப்படி வலுப்படுத்தும் போதும் அதற்கும் போராட்டம் தான் காரணம் என்று திரும்ப பாடுபாத்து கதைக்கும்.

தமிழீழ நிழலரசு நிஜ அரசாகும் அது கொஞ்சம் கொஞ்சமாக தனது எல்லைகளை விரிவாக்கி இறுதி எல்லையை அடையும். அதற்குள் சில உள்வாங்கல்களை அனுமதிக்கலாம்(ஜெயசிக்குறு) பின் தனது எல்லைகளை விரிவாக்கலாம்(ஓயாத அலைகள்) அவ்வாறான நடவடிக்கைகளில் நின்று மனதை குழப்ப முடியாது. நம்பிக்கையாக தேசியத்தில் பற்றுக்கொண்டு நிற்கவேண்டியது இனத்தின் மீதான பற்று மட்டுமில்லை வரலாறு தரும் பாடமும் ஆகும்.

உங்களது சொந்த முயற்சி என்பது என்ன? சிங்களவன் எதுவும் தர மாட்டான் என்றும் சொல்கின்றீர்கள். அது அனைவருக்கும் தெரியும் உலகத்துக்கும் இப்போது தெரிந்து கொண்டிருக்கின்றது. சொந்த முயற்சி என்பது என்ன நாட்டை விட்டு தப்பி ஓடுவதா? அல்லது சிங்களம் கொல்ல முதல் நாங்களாகவே சாவதா? என்ன சொந்த முயற்சி என்று சொல்ல வருகின்றீர்கள்?

Edited by sukan

எடுத்தோம் கவுத்தோம் என சண்டைபிடிக்க இது ஒன்றும் தெருச்சண்டை அல்ல ஒவ்வொரு கட்டத்தையும் நிதானமாக திட்டமிட்டு வைக்கவேன்டும் இல்லாவிட்டால் எமதுமுயற்சியே எமக்கு அழிவை உருவாக்கிவிடும் புலிகள் புரியாத புதிர்கள் அவர்களை புரிந்துகொள்ள எவராலும் முடியாது ஆனால் நிச்சயம் இந்த மவுனத்தின் ப்தில் சிங்களத்துக்கு மோசமான தோல்வியாகத்தான் இருக்கும் நாம் இங்கு இருந்து அலட்டுவதையும் புலம்புவதையும் நிப்பாட்டுவோம் அத்துடன் ஆய்வாளர்களும் உசுப்பேத்திறதையுய்ம் நிற்பாட்டுங்கள்

களத்தில் இருப்பவர்கட்கு மட்டுமல்ல இன்று களத்தின் வெளியே இருக்கும் அத்தனை ஈழத்தமிழருக்கும் கூட அதே ஆற்றலும் உறுதிப்பாடும் மிக மிக அவசியமாகிறது. களத்தின் நிலைமைகள் தெரியாது வெளியிலிருந்து பிதற்றித் திரிவதில் அர்த்தமில்லை. நாம் கொள்ளும் உறுதியும் ஆற்றலும் போராளிகளுக்கு மேலும் மேலும் பலம் சேர்க்கும்.

ஜானா

மக்களின் விடுதலைக்காகவே விடுதலைப்புலிகள் போராடுகின்றனர். கடந்த 20 வருடத்துக்கும் மேலாக போராடுகின்றனர். மறுபக்கத்தில் ஒரு சந்ததியே அழிக்கப்பட்டுள்ளது அதாவது எம் போன்றவர்களின் வாழ்வு. அடுத்து இன்றய இளைய சமுதாயத்தின் எதிர்காலம் போர் என்ற ஒன்றால் சிதைக்கப்படுகின்றது. இப்படி இரண்டு சந்ததியின் வாழ்வு சீரழிக்கப்படபின்னும் இந்த போராட்டமானது இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. 1995 இல் யாழ் குடாநாடு சிங்களமயமானது அன்றிலிருந்து இன்றுவரை அங்கு கொலைகள் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன. ஆயுதம் தாங்கியோர் தந்திரமாக பின்வாங்கினால் பின் அவர்களுக்கு உதவியோரின் நிலை என்ன? விடை இன்று நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இனி ஒரு தடவை அவர்கள் மீள கைப்பற்றினாலும் மீண்டும் யார் உதவ முன் வருவார்கள்? ஏன் என்றால் தந்திரமாக அவர்கள் பின் வாங்கினால் இவர்கள் நிலமை முன்னிலும் விட பின்னே மோசமடையும்.

அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழை மக்கள் இன்று சரியான ஒருநேர உணவுக்கே வழியில்லாது தவிக்கின்றனர். குழந்தைகள் போசாக்கின்றி இறக்கின்றனர் மக்களின் வாழ்வு மரங்களின் கீழும் காடுகளிலும். இன்றைய நிகழ்காலம் இப்படி இருக்கையில் மறு மணிநேரத்துக்கே உத்தரவாதமற்ற எமது மனிதவாழ்வில் எதிகால சந்ததி வாழவேண்டும் என்பத்தாக நிகழ்காலத்தை அழிப்பது எந்தவகையில் நியாயமானது? சரியான வாழ்வு இல்லை, சரியான கல்வி இல்லை காரணம் போர். எம் எதிகாலத்தை உலக அரங்கில் ஓப்பிட்டால் எம் நிலை பாமரரே! இதனிடையே வெளிநாடு என்ற மோகத்தில் எம் இளைய சமுதாயம் சரியான கல்வியற்ற ஒரு சமுதாயமாக மாறிவருகின்றது இதன் விளைவு எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? அன்று போர் காரணமாக சரியான கல்வியற்று புலம் பெயர்ந்து இன்று புலத்திலே சரியான தொழில் நிபுணத்துவம் அற்று வேலை செய்யும் ஒரு கூலித்தொழிலாளி படும் இன்னல்கள் தான் இவர்களின் எதிர்காலம். இதற்கெல்லாம் காரனம் என்ன? மறுமணிநேரம் உத்தவாதமில்லாத எம் வாழ்க்கையின் எதிர்காலத்துக்காக ஆடும் போராட்டமே!

நிகழ்காலத்தில் நாம் ஒருநேர உணவுக்கே மாரடிக்கும் போது இவர்கள் நிலையற்ற இந்த உலகில் உரிமைக்காக நிகழ்காலத்தை அழிப்பதென்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டம் பல காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஏற்பட்ட இழப்புக்களினால் உண்டான விரக்தியில் இருந்து நளனின் எழுத்துக்கள் வருகின்றன போலுள்ளது. :lol:

கிருபன்ஸ் அப்படி தப்புக் கணக்கொன்றும் போட்டு விடாதீர்கள்.

அவரது கருத்துக்களைப் பார்க்க அவருக்கு விரக்தி ஏற்பட்ட மாதரித் தெரியவில்லை. மாறாக மற்றவர்களிடம் விரக்தியை உருவாக்க வேண்டும் என்பதற்காக எழுதுற மாதிரித் தெரிகிறது.

மக்களின் விடுதலைக்காகவே விடுதலைப்புலிகள் போராடுகின்றனர். கடந்த 20 வருடத்துக்கும் மேலாக போராடுகின்றனர். மறுபக்கத்தில் ஒரு சந்ததியே அழிக்கப்பட்டுள்ளது அதாவது எம் போன்றவர்களின் வாழ்வு. அடுத்து இன்றய இளைய சமுதாயத்தின் எதிர்காலம் போர் என்ற ஒன்றால் சிதைக்கப்படுகின்றது. இப்படி இரண்டு சந்ததியின் வாழ்வு சீரழிக்கப்படபின்னும் இந்த போராட்டமானது இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. 1995 இல் யாழ் குடாநாடு சிங்களமயமானது அன்றிலிருந்து இன்றுவரை அங்கு கொலைகள் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன. ஆயுதம் தாங்கியோர் தந்திரமாக பின்வாங்கினால் பின் அவர்களுக்கு உதவியோரின் நிலை என்ன? விடை இன்று நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இனி ஒரு தடவை அவர்கள் மீள கைப்பற்றினாலும் மீண்டும் யார் உதவ முன் வருவார்கள்? ஏன் என்றால் தந்திரமாக அவர்கள் பின் வாங்கினால் இவர்கள் நிலமை முன்னிலும் விட பின்னே மோசமடையும்.

அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழை மக்கள் இன்று சரியான ஒருநேர உணவுக்கே வழியில்லாது தவிக்கின்றனர். குழந்தைகள் போசாக்கின்றி இறக்கின்றனர் மக்களின் வாழ்வு மரங்களின் கீழும் காடுகளிலும். இன்றைய நிகழ்காலம் இப்படி இருக்கையில் மறு மணிநேரத்துக்கே உத்தரவாதமற்ற எமது மனிதவாழ்வில் எதிகால சந்ததி வாழவேண்டும் என்பத்தாக நிகழ்காலத்தை அழிப்பது எந்தவகையில் நியாயமானது? சரியான வாழ்வு இல்லை, சரியான கல்வி இல்லை காரணம் போர். எம் எதிகாலத்தை உலக அரங்கில் ஓப்பிட்டால் எம் நிலை பாமரரே! இதனிடையே வெளிநாடு என்ற மோகத்தில் எம் இளைய சமுதாயம் சரியான கல்வியற்ற ஒரு சமுதாயமாக மாறிவருகின்றது இதன் விளைவு எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? அன்று போர் காரணமாக சரியான கல்வியற்று புலம் பெயர்ந்து இன்று புலத்திலே சரியான தொழில் நிபுணத்துவம் அற்று வேலை செய்யும் ஒரு கூலித்தொழிலாளி படும் இன்னல்கள் தான் இவர்களின் எதிர்காலம். இதற்கெல்லாம் காரனம் என்ன? மறுமணிநேரம் உத்தவாதமில்லாத எம் வாழ்க்கையின் எதிர்காலத்துக்காக ஆடும் போராட்டமே!

நிகழ்காலத்தில் நாம் ஒருநேர உணவுக்கே மாரடிக்கும் போது இவர்கள் நிலையற்ற இந்த உலகில் உரிமைக்காக நிகழ்காலத்தை அழிப்பதென்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

திரு. நளன் அவர்களே

தொடரும்போரால் ஏற்படும் அழிவுகள் பாதிப்புக்களை பற்றி நிறையச் சொல்லிக் கொண்டு செல்கிறீர்கள்.

இனி அழிவுகளை, பாதிப்புக்கள் குறித்து எழுதுவதை விடுத்து அவற்றுக்கான தீர்வு என்ன? தமிழ் மக்களிற்காக போராடும் விடுதலைப் புலிகள் இவற்றதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள்.

Edited by மின்னல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.