Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல்

960208-1024x635.jpg

ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் வகை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின்மீது ரஷ்ய Su-27 ஜெட் போர் விமானம் மோதியதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு இந்த மோதலை உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் வெளியிட்டுள்ள தகவலில், “எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது. இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளாகி முழுமையான இழப்பு ஏற்பட்டது. உண்மையில், ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற செயலால் கிட்டத்தட்ட இரண்டு விமானங்களும் பாதிப்புக்குள்ளாகின” என்று தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/244814

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய போர் விமானத்துடன் மோதிய அமெரிக்காவின் பாரிய ட்ரோன் கடலில் வீழ்ந்தது

Published By: SETHU

15 MAR, 2023 | 09:28 AM
image

ரஷ்ய போர் விமானம் ஒன்றுடன் மோதிய மோதிய அமெரிக்காவின் ஆளில்லா விமானம் (ட்ரோன்) கடலில் வீழ்ந்ததாக அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர். 

கருங்கடல் பகுதியில், சர்வதேச வான்பரப்பில்  நேற்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எம்.கியூ 9 றீப்பர் ரக ஆளில்லா விமானமே இவ்வாறு வீழ்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. இது 20 மீற்றர் (66 அடி) அகலமான விமானமாகும்.

இவ்விமானத்தை ரஷ்யாவின் இரு இடைமறித்ததாகவும் அவற்றில் ஒரு விமானம், அமெரிக்காவின் ட்ரோன் மீது எரிபொருளை கொட்டியதாகவும் அதன்பின் ரஷ்ய விமானத்துடன் ட்ரோன் மோதியதாகவும் அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த ட்ரோன் விமானம் அதன் தொடர்புசாதனங்களை நிறுத்திவிட்டு பயணித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதனுடன் ரஷ்ய விமானங்கள் நேரடியாக தொடர்புபடவில்லை என ரஷ்யா கூறியுள்ளது. 

இந்த ரக விமானங்கள் கண்காணிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு  பயன்படுத்தப்படக்கூடியவை ஆகும்.  15000 மீற்றர் (50,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய இவ்விமானங்கள், 1,770 கிலோமீற்றர்கள், (1,100 மைல்கள்) வரை செல்லக்கூடிவை.

இச்சம்பவம் குறித்து தனது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ரஷ்ய தூதுவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்விமானம் தவறான கைகளுக்கு செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் பேச்சாளர் ஜோன் கேர்பி கூறியுள்ளார். 

https://www.virakesari.lk/article/150531

  • கருத்துக்கள உறவுகள்

"அதேவேளை, இந்த ட்ரோன் விமானம் அதன் தொடர்புசாதனங்களை நிறுத்திவிட்டு பயணித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது."

 

Transponders 

 

 
What is a transponder used for?
 
Transponders are typically used for detecting, identifying and locating objects, but they can also be used in other technologies, such as in satellites to relay communications signals. Transponders are commonly found in both civilian and military aircraft and in objects, such as car keys.
  • கருத்துக்கள உறவுகள்

கருங்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடிக்க ரஷ்யா தீவிரம்!

கருங்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடிக்க ரஷ்யா தீவிரம்!

கருங்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.

குறித்த எச்சங்களை கண்டுபிடிக்க முடியுமா இல்லையா என்பது தனக்கு தெரியவில்லை என்றாலும் அதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.

மேலும், கருங்கடலில் ஆளில்லா விமானம் இருப்பது அமெரிக்கா நேரடியாக போரில் ஈடுபட்டது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவும் விமானத்தைத் தேடி வருவதாகவும் சிலவேளை ரஷ்யா ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடித்தால், பயனுள்ள நுண்ணறிவு பறிபோய்விடும் அபாயம் இருப்பதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரி ஜோன் கிர்பி தெரிவித்தார்.

ஆளில்லா விமானம் விழுந்த இடத்தில் தண்ணீர் 4,000 அடி முதல் 5,000 அடி (1,200 மீ முதல் 1,500 மீ) ஆழம் இருப்பதாகவும் ஆகவே, ஆளில்லா விமானத்தை கண்டுபிடிப்பது சவாலானது எனவும் அவர் குறிப்பிட்;டார்.

நேற்று முன் தினம் (செவ்வாய்கிழமை) காலை அமெரிக்காவின் எம்.க்யு-09 ரீப்பர் ஆளில்லா விமானம், கருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர், ரஷ்யாவின் இரண்டு எஸ்.யு-27 போர் விமானங்கள், மேலும் பின்னுமாக அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுமார் 30-40 நிமிடங்கள் பின்தொடர்ந்து, ஆளில்லா விமானம் பறக்க முடியாத அளவு மற்றும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எரிபொருளைக் கொட்டியதாகவும் இதனால், குறித்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து கருங்கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுமையாக மறுத்துள்ளது.

https://athavannews.com/2023/1327665

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆளில்லா விமானம் $50 மில்லியன் பெறுமதியானது என கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இந்த ஆளில்லா விமானம் $50 மில்லியன் பெறுமதியானது என கூறப்படுகிறது.

இந்த 50 மில்லியன் டொலரையும்… 
உக்ரைனின்ரை… கணக்கிலை எழுத சொல்லுங்கோ. 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.