Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கும் – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கும் – ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/246094

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு ரணில்தான் முதற்பலி 😀

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள்.
இவை எல்லாம் ஶ்ரீலங்காவுக்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்தாலும்… உலக வங்கியை பேய்க்காட்டுவதற்காக செய்யும் அறிவிப்புகள் என்று உள்ளூர் மக்களுக்கு நன்கு தெரியும்.

வெள்ளைகாரன் இதைக் கேட்டு, இன்னும் கடன் கொடுப்பான். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கடன் வாங்குவதற்கான படிமானங்களை ரனில்  போடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வெள்ளைகாரன் இதைக் கேட்டு, இன்னும் கடன் கொடுப்பான்

கடந்த காலத்தில் வாங்கிய கடனுமில்லை, வட்டியுமில்லை, திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகளுமில்லை, அதற்கான சூழலுமில்லை, அதை ஏற்படுத்துவதற்கு வற்புறுத்தவோ, ஈடுபாடோ, நிட்சயமோ இல்லை. இருந்தும் கடன் என்று கொடுத்து யாரை ஏமாற்றுகிறது இந்த நிறுவனங்கள்? கடந்த காலத்தில் வாங்கிய கடனெல்லாம் தமிழரை அழிக்கவே பயன்படுத்தப்பட்டது என்று தெரிந்தும் கொடுக்கிறார்கள் என்றால்; அவர்களது எதிர்பார்ப்பும் சிங்களத்தின் செயற்பாடும் ஒன்றே என எனக்குத் தோன்றுகிறது. உண்மையாகவே மக்களின் வரிப்பணத்தை கடனாக கொடுப்பவன் அதை மீளப்பெறும் வழிகளை கண்டறிந்தே கடன் கொடுப்பது வழமை. இல்லையேல் தானமாக கொடுப்பதென்றாலும் அது அந்த நாட்டின் மீட்சிக்கன்றி அந்த நாட்டின் சிறுபான்மையினரின் அழிவுக்கு பயன்படுவதை விரும்ப மாட்டார்கள் அதை தானமென்றும் கூற முடியாது.  ஒரு இனம் அழிக்கப்பட்டு மேலெழ முடியாமல் தவிக்குது, அழித்தவனுக்கு கேட்டுகேள்வியில்லாமல் உதவியென்று அள்ளி கொடுப்பது அவர்களின் உள்நோக்கத்தை கேள்வியெழுப்புகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 நரி நயவஞ்சகன் மட்டுமல்ல நல்ல நகைசுவையானனுங்கூட. ஊழலை மறைத்து அதை செய்வோரை காப்பாற்றிக்கொண்டு சிறந்த சட்டம் உருவாக்குவாராம். சுகம் வரும் ஆள் தப்பாது என்கிற நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. பேசுவது ஒன்று, செய்வது அதை மிதிப்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும் ஏற்பாடுகள் சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் - ஹக்கீம்

Published By: DIGITAL DESK 5

24 MAR, 2023 | 03:58 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை கொண்டுவந்தால் மாத்திரம் ஊழல்களை தடுத்து விட முடியாது ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும் ஏற்பாடுகளை ஊழல் ஒழிப்பு  சட்டமூலத்தில் உள்ளடக் வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தற்போது பிரதான பேசுபொருளாக உள்ளது.இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுழற்சியில் உள்வாங்கி 17 ஆவது தடவையாக சென்றுள்ளோம். முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று பின்னர் பின்வாங்கி நெருக்கடியென வரும் போது மீண்டும் போகின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக இருக்கின்றார். நாட்டில் வரிகளை அதிகரித்துள்ளதால் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. போராட்டங்களை பொலிஸார். இராணுவத்தை கொண்டு முடக்குகின்றார்.

 சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். அந்த சட்டத்தின்மூலம் மாத்திரம் ஊழலை தடுத்துவிட முடியாது. அதில் ஊழல்களால் பெற்றுக்கொண்ட சொத்துக்களை சுவீகரிக்கக்கூடிய ஏற்பாடுகளை உள்ளடக்க வேண்டியுள்ளது.

இதேவேளை புதிய மத்திய வங்கி சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் போதும், சில திருத்தங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. அரசியல் தலையீடுகள் இல்லாது செயற்படக்கூடிய வகையில் அமைய வேண்டும்.  மறுசீரமைப்பு பணிகளில் இருந்து விட்டுச் செல்லக்கூடாது என்றார்.

https://www.virakesari.lk/article/151321

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை கொண்டுவந்தால் மாத்திரம் ஊழல்களை தடுத்து விட முடியாது ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும் ஏற்பாடுகளை ஊழல் ஒழிப்பு  சட்டமூலத்தில் உள்ளடக் வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஆங்..... அது சரியான கருத்து! அது சரி .....என்ன இவர் இப்படிச் சொல்கிறார்? இவர் தனது இரண்டு கை பொக்கற் எல்லாம் கனமில்லாமல் வைத்திருக்கிறாரா?

 

19 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக இருக்கின்றார். நாட்டில் வரிகளை அதிகரித்துள்ளதால் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. போராட்டங்களை பொலிஸார். இராணுவத்தை கொண்டு முடக்குகின்றார்.

பாராட்டுக்கு பாராட்டு அதே நேரம் கோபப்படாமல் தாக்குகிறார் இதைத்தான் ஊமைக்குத்து என்பதோ? எதை ஆதரிக்கிறார் எதை நிராகரிக்கிறார் என்று விளங்குகிறதா?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது !

Published By: VISHNU

06 APR, 2023 | 03:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிகள், நியமங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (06) வியாழக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் விசேடமாக 'இலஞ்சம் அல்லது ஊழலுக்கு எதிரான விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு'என்ற பெயர் வடிவிலான சுயாதீன ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இடையறா வழியுரிமையையும், பொது இலட்சியையொன்றையும் கொண்டிருக்க வேண்டும்.

தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர்களை கொண்டதாக ஆணைக்குழுவின் அமைப்பு காணப்படும்.சட்டம் - மருத்துவ கணக்காய்வுசட்டம் - மருத்துவக் கணக்கியல், பொருளியல், சர்வதேச தொடர்புகளும் இராஜதந்திர சேவைகள், பகிரங்க அலுவலக முகாமைத்துவம் அல்லது பொது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஆகக்குறைந்தது 20 ஆண்டுகால சேவைகளை கொண்டிருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் ஒவ்வொர் உறுப்பினர்களும் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும், அறுபத்திரெண்டு வயதிற்கு மேற்பட்டவராக இருத்தலாகாது, உடல் ரீதியிலும், உளரீதியிலும் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். அத்துடன் தகுதி வாய்ந்தவராகவும், நேர்மையானவராகவும், உயர் ஒழுக்கமுடையவராகவும், நன்மதிப்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சம்பளம் பெறும் தொழில்களில் ஈடுபட்டிருப்பின் அவற்றை துறத்தல் வேண்டும். அத்துடன் ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கும் போது சம்பளம் பெறும் சேவைகள், உயர் தொழில்கள் ஆகியவற்றை தொடர கூடாது.

ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினராக பதவியேற்க முன்னர் அவர்கள் தங்களின் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும், பொறுப்புக்களையும் அரசியலமைப்பு பேரவைக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஆணைக்குழுவின் தவிசாளர் ஐந்தாண்டு காலத்திற்கும், ஏனைய உறுப்பினர்கள் நான்காண்டு காலத்திற்கும் பதவி வகிப்பார்கள். இவர்களின் சம்பளம் பாராளுமன்றத்தின் திரட்டு நிதியத்தின் மீது பொறுப்பாக்கப்பட்டுள்ளது, பதவி காலத்தின் போது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர குறைக்கப்பட கூடாது.

ஆணைக்குழுவானது 158 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் பொறுப்பு கூற வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 159 ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(1) பிரிவு 41 மற்றும் 65ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணைக்குழு அதன் தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கும் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்குமான கூட்ட நடப்பெண் இரண்டு உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் பொறுப்புக்களாக விதிகளை அழுத்திக் கூறுதல், வலியுறுத்தல் ஊடாக ஊழலை தடுத்தல் தொடர்பான கல்வி அல்லது பயிற்சியை உரிய தரப்பினருக்கு வழங்கல், ஊழல், அதற்கான காரணங்களும் அதன் பாரதூரத்தன்மை மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஊழலைத் தடுத்தல், ஊழலுக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபடல். ஆணைக்குழுவானது குடியியற் சமூகத்தினதும், அரச சார்பற்ற மற்றும் சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களினதும் முனைப்பான பங்குப்பற்றலை ஊக்குவித்தல் வேண்டும்.

https://www.virakesari.lk/article/152251

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலுள்ள சொத்துக்களை கையாள்வதை தடை செய்ய கட்டளை பிறப்பிக்க பரிந்துரை - ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்

Published By: DIGITAL DESK 5

06 APR, 2023 | 04:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

சட்டவிரோதமான முறையில்  வெளிநாடுகளில் உள்ள ஆதனம் மற்றும் வைப்பிலிடப்பட்டுள்ள நிதி ஆகியவற்றை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சந்தேக நபர் கையாள்வதை தடை செய்யும் வகையில் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்யும் அதிகாரம் இலஞ்சம், ஊழலுக்கு எதிரான விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு தொடர்பான சட்டமூல வர்த்தமானி வியாழக்கிழமை (06) வெளியிடப்பட்டது.

ஏதேனும் ஒரு ஆதனம் இந்த சட்டத்தின் கீழ் ஒரு தவறின் விடயப்பொருளாக காணப்படுமாயின் அல்லது அத்தகைய ஏதேனும் தவறைப் புரிவதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என ஆணைக்குழு  கருதுகின்ற அத்தகைய ஆதனம் இலங்கைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கின்றன அல்லது வைப்பிலிடப்படும் போது,ஆணைக்குழுவானது அந்த சந்தேக நபர் அந்த ஆதனத்தை அல்லது நிதியை கையாள்வதைத் தடைசெய்கின்ற கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு மேல் நீதிமன்றத்திற்கு ஆணைக்குழுவால் விண்ணப்பிக்க முடியும்.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒரு விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் போது வெளிநாட்டு அரசுகள், சர்வதேச புலனாய்வு அதிகாரிகள், சர்வதேச சட்டவியலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான பரிந்துரைகளில் 'ஊழல் ஒழிப்பு சட்டம் இயற்றல்' முக்கியமானதாக கருதப்படுகிறது.ஊழலுக்கு எதிரான சட்டமூல வரைபை தயாரிக்க அமைச்சரவை கடந்த ஆண்டு ஜுலை மாதம்  அனுமதி வழங்கியது.

இதற்கமைய நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட சட்டமூல வரைபு அண்மையில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டு நேற்றைய தினம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபில் ஜனாதிபதி, மாகாணமுதலமைச்சர்கள் , ஆளுநர்கள்,தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரச சேவையில் உயர் அதிகாரிகள் தங்களின் சொத்து விபரங்களை வருடாந்தம் உரிய தரப்பினருக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நீதியமைச்சர் உத்தேசித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/152280

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.