Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள் -- வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணும் விண்ணும் மட்டுமல்ல

மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல்.

அதை எப்படி ஆரம்பிப்பது ?

யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ?

இல்லை எடுத்துச் செல்லுங்கள்

உங்கள் அதீத கற்பனைகளை.

மதுவும் விந்தும் ஊறிய சொற்க்களை.

கனவு வரை மண் தோய அவள்

இட்ட அடிகளில் உள்ளதே கவிதை.

அவள் பி.ஏ முடிக்கவில்லை என்றார்கள்.

அவள் காட்டில் என்றார்கள்

மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள்.

நானோ அவளை

கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன்.

நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா

அல்லது அவள் மீதான மதிப்பினிலா.

கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன்

நடுங்கும் என் கால்களை.

அவள் அதே அமைதி ததும்பும் முகமும்

குருத்துச் சிரிப்புமாய்

முகவரி கேட்காதீர்கள் என்றாள்.

வாழ்வு புதிர்கள் போன்று

புத்தியால் அவிழ்க்கக் கூடியதல்லவே.

ஒரு பெண்

கண்ணகியும் பாஞ்சாலியும்போல

ஆண் கவிஞர் வடிவமைத்த படைப் பல்லவே.

காமம் தீராது எரியும் உடலுள்

எரியாத மனதின் தீயல்லவா காதல்.

ஒடுக்கப் படுகிறபோது மனசில் எரிகிறது

மற்றும் ஒரு தீ.

பல்கலைக் கழகச் சுவர்க் காட்டுள்

அவளும் அவனும் ஒரு சோடி ஆந்தைகளாய்

கண்படா திருந்த

காலங்களை நான் அறிவேன்.

அப்போதும் கூட

இன்னும் மூக்கைப் பொத்தினால்

வாய் திறக்கத் தெரியாத

அப்பாவிப் பாவமும் அபிநயமும் பூண்டு

ஒரு யாழ்ப்பாணப் பெட்டையாய்த் திரிந்தாள்.

பின்னர் நரகம் தலைமேல் இடிந்தது.

2

வெண் புறாக்களும்

வெண் புறாக்களை வரவேற்றவரும் மோதிய

88ன் குருதி மழை நாட்கள்.

முதல் குண்டு வெடித்ததுமே

நெஞ்செல்லாம் வன்புணற்ச்சி வெறியும்

உடலெல்லாம்

பெண்கள் இரத்தம் தோய்ந்த லிங்கமும்

கையில் துரு கனக்கும் றைபிளுமாய்

புறாக்கள் காக்கிக் கழுகான தெப்படி.

வரவேற்ற கரங்கள் ஏந்திய பூச்செண்டு

துப்பாக்கியானது எப்படி

மேன்மை தங்கிய பாதுசாவோ

டெல்கியில்.

அவரது கிரீடத்தை அணிந்தபடிக்கு

அவரது விதூசகன் ஒருவன் கொழும்பில்.

நமது கோபங்களை எடுத்து

விதி வனைந்து தந்த பீமனோ

கண் சிவக்க ஈச்சங் காட்டுக்குள்.

இவர்களிடை சிதறியது காலம்.

இவர்களிடை சிக்கி அழிந்தது

ஆயிரம் வருட நட்பின் வரலாறு.

3

சேறான பாதையில் சிதறியது ஒரு டாங்கி.

கீழே இரண்டு சீக்கியரின் பிணங்கள்.

தெருவில் போனவர் அடைக்கலம் புகுந்த

கோவிலுள் பாய்ந்தது துப்பாக்கி வேட்டு.

அவன் தரையில் சாய்ந்ததும்

அவள் சீக்கியன்மேலே அலறிப் பாய்ந்தும்

றைபிழைப் பற்றி முகத்தில் உமிழ்ந்ததும்

சுடடா என்னையும் என அதட்டியதும்

கண்டிலர் கண் இமைத்தவர்கள்.

என் தாய் மண்ணில் தலை குனிந்ததே

எனது கலாச்சாரத் தாயகம்.

யாருமே நம்பவில்லை.

அந்த அப்பாவிப் பெண்ணா ?

கேட்டு வாய் பிழந்தவர் எல்லாம்

கண்கள் பிழக்கக் கதறி அழுதனர்

4

விடை பெறு முன்னம்

அது அண்ணன் தம்பி சண்டை என்றாள்.

இருவரும் இளைத்தனர் தவறு என்றாள்

இருவரும் இன்னும் தவற்றை எண்ணி

மனம் வருந்தலையே என்கிறபோது

கண்ணும் மனமும் குரலும் கலங்கினாள்.

இருவரும் மீழ இணைவர் என்றாள்

தவிர்க் கொணாதது வரலாறென்றாள்.

தழைகள் அறுவதும் வரலா றென்றாள்.

பின்னர் விடைதரும்போது

கூந்தலை ஒதுக்கி நாணிச் சிரித்தாள்.

அவளைக் கண்டது மகிழ்ச்சி.

அவளுடன் பேச்சோ மேலும் மகிழ்ச்சி

பாதுகாப்பாய் விடை பெற்றதும் மகிழ்ச்சி.

அந்த இரவின் கனவும் மகிழ்ச்சி.

visjayapalan@gmail.com

அவளைக் கண்டது மகிழ்ச்சி.

அவளுடன் பேச்சோ மேலும் மகிழ்ச்சி

பாதுகாப்பாய் விடை பெற்றதும் மகிழ்ச்சி.

அந்த இரவின் கனவும் மகிழ்ச்சி.

அவள் பற்றிய கவிதை மிகவும் நன்றாக இருந்தது அந்த கவிதையை முடித்த விதம் மிகவும் சிறப்பு..............மிகவும் ஒரு நல்ல கவிதை வாசித்த மகிழ்ச்சி.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[அவள் பற்றிய கவிதை மிகவும் நன்றாக இருந்தது அந்த கவிதையை முடித்த விதம் மிகவும் சிறப்பு..............மிகவும் ஒரு நல்ல கவிதை வாசித்த மகிழ்ச்சி.... :lol:

[

நன்றி யமுனா. உண்மையான பெண்கள் சிலரின் கதைகளில் இருந்து வனைந்த கதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா, இக்கவிதையின் அழகும் பலம் உண்மைத் தன்மைதான் என்று நினைக்கிறேன். கொக்குவிலுக்கு அண்மையில் ஒரு தாக்குதலினல் இந்திய டாங்கி ஒன்று புரண்டது. சீக்கிய சிப்பாய் ஒருவன் (ஒருவன் என்றே நினைக்கிறேன்). மக்கள் கோவிலில் தஞ்சம் புகுந்திருந்தனர். கோவிலுள் இந்திய பட புகுந்து சுட்டது. யாழ் பல்கலைக் களக மாணவி ஒருத்தி தன் கணவனைச் சுட்ட சீக்கியன்மீது பாய்ந்து துப்பாக்கியை பற்றி திட்டி ஓலம் வைத்தாள். இது உண்மை நிகழ்வு. கடந்த இருபது வருடங்களாக கொழும்பில் போராளிகளைச் சந்தித்ததிருக்கிறேன் . பல்வேறு அனுபவங்களில் இருந்து அவள் கவிதை வனையப் பட்டது.

மாற்றங்களை அவிழ்த்துப் போட்டதுதான் எமது போராட்ட வரலாறு. பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பது நிதர்சனம். போராட்டக் களத்தில் மட்டுமல்ல சமூகத் தளத்திலும் மாற்றங்கள் நிறையவே. மக்கள் மனதிலும் மாற்றங்கள் நிறையவே. நல்லதொரு கவிதை. இணைத்தைமைக்கு நன்றி poet.

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா இதைக் கவிதை என்று சொல்லத்தான் தெரியுது. கதை போல இருந்திச்சு. :)

ஜமுனா, இக்கவிதையின் அழகும் பலம் உண்மைத் தன்மைதான் என்று நினைக்கிறேன். கொக்குவிலுக்கு அண்மையில் ஒரு தாக்குதலினல் இந்திய டாங்கி ஒன்று புரண்டது. சீக்கிய சிப்பாய் ஒருவன் (ஒருவன் என்றே நினைக்கிறேன்). மக்கள் கோவிலில் தஞ்சம் புகுந்திருந்தனர். கோவிலுள் இந்திய பட புகுந்து சுட்டது. யாழ் பல்கலைக் களக மாணவி ஒருத்தி தன் கணவனைச் சுட்ட சீக்கியன்மீது பாய்ந்து துப்பாக்கியை பற்றி திட்டி ஓலம் வைத்தாள். இது உண்மை நிகழ்வு. கடந்த இருபது வருடங்களாக கொழும்பில் போராளிகளைச் சந்தித்ததிருக்கிறேன் . பல்வேறு அனுபவங்களில் இருந்து அவள் கவிதை வனையப் பட்டது.

நிச்சயமாக நீங்கள் சொல்வது போல் உண்மைதன்மை தான் கவிதையை மெருகூட்டி உள்ளது என்றே சொல்லலாம்,உங்கள் அநுபவத்தை எங்களோடு பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி,இதை போல் உங்களுக்கு பல்வேறு அநுபவங்களை பெற்று இருபீர்கள் அதையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டா நன்றா இருக்கும் என்பது ஒரு அவாம்,நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்ளுங்கள் அண்ணா......... :D

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழிய ஜமுனா, நெடுக்காலபோவான், இளைஞன் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

நேரமுள்ள போதெல்லாம் என்னுடைய அனுபவங்களை யாழ்க்கள தோழமை உறவுகளோடு பகிர்ந்து கொள்வேன். உங்கள் அனைவரதும் அன்புக்கும் வரவேற்ப்புக்கும் நன்றி.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். சமாதானத்தைக் காட்ட வந்த சைன்னியம் எங்களுடைய சந்தோசத்தையே களவாடிய சைத்தான்களான விந்தைகள். ஒவ்வொருவருடைய மனதிலும் பலப் பல அனுபவ வலிகள். நன்றி போயற்.

:rolleyes::o

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம். சமாதானத்தைக் காட்ட வந்த சைன்னியம் எங்களுடைய சந்தோசத்தையே களவாடிய சைத்தான்களான விந்தைகள். ஒவ்வொருவருடைய மனதிலும் பலப் பல அனுபவ வலிகள். நன்றி போயற்.[/quo

மாவீரர்தின நல்வாழ்த்துக்களுடன் நன்றி சுவே

மேன்மை தங்கிய பாதுசாவோ

டெல்கியில்.

அவரது கிரீடத்தை அணிந்தபடிக்கு

அவரது விதூசகன் ஒருவன் கொழும்பில்.

நமது கோபங்களை எடுத்து

விதி வனைந்து தந்த பீமனோ

கண் சிவக்க ஈச்சங் காட்டுக்குள்.

இவர்களிடை சிதறியது காலம்.

இவர்களிடை சிக்கி அழிந்தது

ஆயிரம் வருட நட்பின் வரலாறு

இது யாருடைய பிழை வ.ஐ.ச ..... இது போல விதூசகன்கள் பல பேர் இப்போது கொழும்பில்....டெல்கி பாதுசா போல் பல பாதுசாக்கள்... இன்னும் இன்னும் நமது பாதையை செப்பனிடும் தளராத விக்கிரமாதித்தன்கள் ...உங்களைப் போலவும் நம்மைப் போலவும்......காலம் காத்திருந்து புதிய வரலாறு கீறிப்போகும்.... - அன்புடன் எல்லாள மஹாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

வெண்புறாக்களின் வருகைக்குப் பின்னான காலத்தில் சந்திக்கு வராத சங்கதிகள் நிறைய....... காலஓட்டம் எதையும் மூடி மறைக்கப்போவதில்லை. பேனாமுனைகள் மௌனித்துக் கிடக்கின்றன. இக்கவிதையின் மூலம் நீங்கள் அறிந்த சங்கதி பிரசவிக்கப்பட்டுள்ளது. வேர்மடியில், புலம்பெயர் விழுதுகளின் மனஉணர்வில் பலவலிகள் ஊமையாக உலாவருகின்றன காலவெளிச்சம் கட்டாயம் வெளிக் கொணரும். உங்களைப் போல் உயிர்ப்புள்ள எழுதுகோல்கள் விழிப்படைய வேண்டும் பொயிற்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்புறாக்களின் வருகைக்குப் பின்னான காலத்தில் சந்திக்கு வராத சங்கதிகள் நிறைய....... காலஓட்டம் எதையும் மூடி மறைக்கப்போவதில்லை. பேனாமுனைகள் மௌனித்துக் கிடக்கின்றன. இக்கவிதையின் மூலம் நீங்கள் அறிந்த சங்கதி பிரசவிக்கப்பட்டுள்ளது. வேர்மடியில், புலம்பெயர் விழுதுகளின் மனஉணர்வில் பலவலிகள் ஊமையாக உலாவருகின்றன காலவெளிச்சம் கட்டாயம் வெளிக் கொணரும். உங்களைப் போல் உயிர்ப்புள்ள எழுதுகோல்கள் விழிப்படைய வேண்டும் பொயிற்.

நன்றி வல்வைசாகரா, கிருசாந்தியும் தாயாரும் சகோதரரும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிக் கொலை செய்யப் பட்டமை பற்றி எழுதும்படி ஒரு வீராங்களை அண்மையில் என்னை தொடர்புகொண்டார். இதுவரை வெளிவராத குருதி மட்டுமல்ல ஆன்மாவும் உறைந்துபோகும் சேதிகள் சில அறிந்தேன். துயரம் மேலிடுகிறது. கிருசாந்தியும் அவளது சகோதரனும் கலைஞர்களதும் கவிஞர்களதும் குழந்தைகள். அவர்களது கதையைய தென்மரட்சியின் கதையாக எழுத வேண்டும். டச்சு காலதில் தான் காடளித்து தென்மரட்சியின் வயல்கள் பல திறக்கப் பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பகாலங்கள்வரை தென்மராட்சி வன்னிக் காடு போலவே இருந்திருக்கிறது. யானை கூடப் பிடிதிருக்கிறார்கள். டச்சு ராணுவத்தில் பணியாற்றிய ஒரு ஜெர்மன் போர்வீரன் சவகசேரி பகுதியால் அணி நடந்து வரும்போது தாங்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததாகவும் பெண்கள் காட்டுகளுக்குள் ஓடி விட்டதாகவும். சமையலறையில் திருடித் தின்றதுபற்றியும். பின்னர் நாயளி என்று திட்டியபடி தங்கள்மீது அம்பு எய்யப் பட்டதாகவும் எழுதியிருந்தார். வன்னியின் தலை நிலம்போலவே வீரம் செறிந்த மண்னாக விளங்கிய தாயகப் பூமி அது.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.