Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேறு கண்டத்து பிறவி....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் கவிதைக்கு இத்தனை விமர்சனங்களா? அவரது கவிதைகள் பலவற்றை எம் உறவுப்பால வானொலியில் கேட்டிருக்கிறேன்.

  • Replies 95
  • Views 10.5k
  • Created
  • Last Reply

புறம் என்பதற்கு நேரடியாக "குறை" என்ற அர்த்தம் வராது. குறையை நேரடியாகக் கூறாது, ஆள் இல்லாத நேரத்தில் புறமாகக் கூறுவதால், அதை புறங்கூறுதல் என்பார்கள். அங்கு குறை கூறுப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் புறம் என்பதற்கு அதுவல்ல அர்த்தம்.

நேரடி.. எதிரிடை.. என்று சமாளிக்காதீங்க சார். புறணி பாடாதே.. புறம் கூறாதே என்பதெல்லாம்.. அடுத்தவர் முன்னிலையில் இல்லாமல் அவரைப் பற்றி குறை பேசுதல் தான்..! அந்த வகையில்.. முன்னிலையில் இன்றி..புறம் கணிப்பு.. குறை கணித்தல்.. காணல் என்பதாகவும் அமையும்..! இப்ப புரியனும்...இல்லைன்னா என்னால புரிய வைக்க முடியாது உங்களுக்கு. சாறி...சார். :)

நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன்.

புறம் கூறுதல் என்கின்ற வார்த்தை, ஒருவருக்கு முன் நேரடியாக குறைகளைக் கூறாமல், அவர் இல்லாத நேரத்தில் புறமாகக் கூறுவது ஆகும்.

நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

புறம என்பதற்கு குறை என்று அர்த்தம் வந்தால், ஏன் நேரடியாக குறை சொல்வதை "புறம்கூறுதல்" என்று சொல்வதில்லை? ஆள் இல்லாத போது குறை சொல்வதை மட்டும் புறம்கூறுதல் என்று சொல்கிறோம்?

இங்கே புறம் என்று சொல், குறையை குறிக்கவில்லை. அதாவது சொல்லப்படுகின்ற விடயத்தை (குறையை) குறிக்கவில்லை. விடயம் சொல்லப்படுகின்ற இடத்தைத்தான் (சம்பந்தப்பட்டவர் இல்லாத இடத்தில்) குறிக்கிறது.

இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இடத்தைக் குறிக்க பயன்படுத்தும் சொல்லை, சொல்லப்படுகின்ற விடயத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

அல்லது தெரிந்தும் விவாதத்தை திசை திருப்ப நினைக்கிறீர்கள்.

வன்னி மைந்தன் கேட்டாரோ தெரியவில்லை. அவள் என்ற தலைப்பில் உள்ள கவிதை என்ற ஒன்றில் நான் தான் கேட்டேன்...??! எனது பார்வையில் அது அப்படி இருந்ததால் கேட்டேன். சம்பந்தப்பட்ட புதியவர் என்பதால் இதை positive வா எடுப்பாரோ தெரியவில்லை. அவரிடைய ஏனைய ஆக்கங்கள் அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது. :)

நீங்கள் சொன்னதை சொல்லவில்லை. :)

வன்னி மைந்தன் சபேசனின் "நாய்க் கவிதை"யின் கீழ் எழுதியிருக்கும் வரிகள்:

காளையர் பாவையர்

கவிதையை யெல்லாம்

கதை கதையெனவே

கதையாய் உரைத்தாய்...

இன்றென்ன வந்து

இங்கது உரைத்தாய்

கவிதை யென்றேன்

கவிதையை கொன்றாய்...??

இத்தோடு அது முடியவில்லை. இன்னும் தொடர்கிறது. முழுக்க முழுக்க தாக்குதல் நோக்கில். :)

அன்பின் இளைஞனுக்கு, நீங்கள் எத்தகைய கவிஞனாக இருக்கட்டும்.நான் இளைஞன்,கவிதை என்றால் ஒன்றும் விளங்காதவனகவே இருந்துவிட்டு போகட்டும்.ஆனால் என்னை விட ஒரு படி மேல் போய் ஒரு சில வரிகளை கவிதைகளாக புனைந்து (சொற்பிழை, பொருட்பிழை) புனைந்துவிட்டு ஆகா ஓகோ என்று

புகழ்வதை காட்டிலும்(தன்னை புகழாத கம்மாளன் இல்லை)

ஒரூ சிறு கவிஞர் வல்வை மைந்தன் கவிதைகள் உலாலாலாலா ..................வர வேண்டும்.இதனை பல பேர் மதிக்கவில்லை போல் தெரிகிறது.or else i have to go further. because ignorence isn't a solving problem.

நுனாவிலான் ... நான் ஏதும் தப்பா சொல்லிட்டனோ :lol: நீங்கள் சொல்ல வருவது விளங்கவில்லை.

Edited by இளைஞன்

இன்னும் திருந்தலையா???

இன்னும் திருந்தலையா???

திருந்த விடுறீங்களில்லையே. :)

சண்டை பார்க்கத்தானே ஓடோடி அவசரப்பட்டு வந்தனீங்கள் :angry: பிறகென்ன...

என்னுடைய நாய்க்கவிதை குறித்த வன்னிமைந்தன் தெரிவித்த கருத்துக்கள் தாக்குதலை நோக்கமாக கொண்டதோ, இல்லையோ, நான் அறியேன்.

ஆனால் அவர் கூறிய கருத்துக்களை ஒரு விமர்சனமாக ஏற்று, என்னுடைய பதில் கருத்தை கூறியிருக்கிறேன்.

அவர் என்னைத் தாக்கும் நோக்கில் கருத்துச் சொல்கிறார் என்று சாக்குச் சொல்லி, அவருடைய விமர்சனத்தில் இருந்து நான் தப்பியோட நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக நீங்கள் சபேசன் நீங்கள் சொல்லியும் சொல்லாவிட்டாலும் வல்வை மைந்தனுக்கு எதிராக (அவரது கவிதைக்கு எதிராக எசப்பாட்டு பாட்டு பாடுகின்றீர்கள் என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது). ஆக எந்த வகையிலும் ஒரு கவிஞரை தாக்குவதை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய பொறுப்புணர்வு எனக்கோ அல்லது என்னை போன்ற (கறுப்பி) உட்பட என்னுமொரு வார்த்தையில் கூற வேண்டுமானால் இலை மறை காயாக உள்ள கவிஞர்கள் யாழுக்கு வர வேண்டும்.எழுத வேண்டும்.தமிழில் எழுத வேண்டும் எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.பிழை விடவேண்டும்.திருந்த வேண்டும்.இறுதியில் கவிஞனாக வேண்டும்.நக்கலுக்கும் நளினத்துக்கும் இல்லை யாழ். களம் அல்லது கவிதைக் களத்துக்கு சொந்தம் கொண்டாட நினைக்கும் சில புல்லுருவிகட்கு சொல்ல நினைப்பது இளம் கலைஞர்களை உற்சாக படுத்துங்கள்.

யாராக இருந்தாலும் (அது சபேசனாக இருக்கட்டும் இல்லை இளைஞனாக இருக்கட்டும் இல்லை நெடுக்ஸ்,ஈழதிருமுகன்,விகடகவி

தமிழ்தாய் பெற்ற மைந்தர்களாகவே நான் பார்க்கிறேன்.பிழைகள் விடுவது மனித இயல்பு.திருந்த எப்பொழுதுமே இடமுண்டு.

இறுதியாக நான் சிறு கவிதையொன்று அநாதரவக விடப்பட்டுள்ளது.அதற்கான விளக்கத்தை தர முடியுமா??

மீண்டும் உங்களுடன் ..........................

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன்.

புறம் கூறுதல் என்கின்ற வார்த்தை, ஒருவருக்கு முன் நேரடியாக குறைகளைக் கூறாமல், அவர் இல்லாத நேரத்தில் புறமாகக் கூறுவது ஆகும்.

நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

புறம என்பதற்கு குறை என்று அர்த்தம் வந்தால், ஏன் நேரடியாக குறை சொல்வதை "புறம்கூறுதல்" என்று சொல்வதில்லை? ஆள் இல்லாத போது குறை சொல்வதை மட்டும் புறம்கூறுதல் என்று சொல்கிறோம்?

இங்கே புறம் என்று சொல், குறையை குறிக்கவில்லை. அதாவது சொல்லப்படுகின்ற விடயத்தை (குறையை) குறிக்கவில்லை. விடயம் சொல்லப்படுகின்ற இடத்தைத்தான் (சம்பந்தப்பட்டவர் இல்லாத இடத்தில்) குறிக்கிறது.

இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இடத்தைக் குறிக்க பயன்படுத்தும் சொல்லை, சொல்லப்படுகின்ற விடயத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

அல்லது தெரிந்தும் விவாதத்தை திசை திருப்ப நினைக்கிறீர்கள்.

நான் இங்கு ஒத்த கருத்து படிப்பிக்கவில்லை சார். புறம் கணித்தல்.. குறை பிடித்தல் என்பதாகவும் பொருள் கொள்ளப்படும் என்று தெளிவாக.. புறங்கூறாதே என்பதை உதாரணமாகக் காட்டி எழுதி இருக்கிறேன். நீங்கள் என்னடான்னா... புறம் என்பது குறையல்ல.. ஒருவருக்கு மறைவாக குறை சொல்லுதல் புறம் கூறுதல் எங்கிறீர்கள். ஒருவருக்கு மறைவாக.. அவரைப் பற்றி.. நன்மையைக் கூறினால்.. அதை எப்படிச் சொல்வது...??!

ஒருவரைப் பற்றி மறைவில் குறை கணிப்பதைத்தான் புறங்கூறல் எங்கிறார்கள். குறையைக் கணிக்காமல்.. குறை சொல்ல.. புறம் சொல்ல முடியாதுதானே சார். ஒருவரின் முதுக்குக்குப் பின்னே நன்மை சொன்னாலும் புறஞ் சொல்லுதல் என்றா சொல்லுவினம்...??!

கருத்தை அநாவசியமா நெடுக்காலபோவனில ஏதாச்சும் ஒரு குறையைப் பிடிச்சிடனும் என்ற நோக்கில்.. இழுத்துச் சொல்வது நீங்கள். உங்களின் மனத் திருப்திக்காக.. நான் அப்படித்தான் எழுதினேன். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கள் என்று யாழ் கள அப்பாவிகள் போல என்னால என் மனச்சாட்சிக்கு அநீதியா நடக்க முடியல்ல சார். :)

Edited by nedukkalapoovan

புறம் கூறுதல் என்பதற்கு நீங்கள் எந்த ஒரு தமிழாசிரியரிடமும் விளக்கம் கேட்டுப் பெறலாம்.

புறம் என்ற சொல் குறையை குறிக்கவில்லை. குறை கூறப்படுகின்ற இடத்தையே குறிக்கிறது என்பதை தெளிவாக விளங்கப்படுத்திய பின்பும் நீங்கள் அடம்பிடிப்பது அழகு அல்ல.

புறத்தோற்றம் என்றால் குறைத் தோற்றம் என்று அர்த்தமா? புறநானூறு என்றால் குறைநானூறு என்று அர்த்தமா?

புறமுதுகு என்றால் குறை முதுகு என்று அர்த்தமா?

புறம் என்ற சொல் எங்குமே குறை என்ற பொருளை தருவது இல்லை. ஆள் இல்லாத போது குறை கூறுவதை, அந்தக் குறையை நேராகக் கூறாமல், புறமாகக் கூறுவதால், அதை புறம் கூறுதல் என்பார்கள்.

புறம்கூறுதல் என்பது தருகின்ற அர்த்தம் குறை கூறுதல் என்பதுதான். ஆனால் இங்கே குறை என்ற சொல் மறைந்து, சொல்லப்படுகின்ற இடம் முன்னிலை வகிக்கிறது.

இங்கே இடவாகு பெயர் என்றெல்லாம் இலக்கணம் பேசிய நீங்கள், இதை அறியாமல் இருக்க மாட்டீர்கள்.

விவாதத்தை வன்னிமைந்தனில் இருந்து திருப்பி வன்னிமைந்தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து அவரை தப்பச் செய்வதற்கு நீங்கள் நாடுகின்ற குறுக்குவழியாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

உங்களுக்கு "புறம்" என்பது "குறை" அல்ல நன்றாகவே தெரியும். ஆகவே உங்களுடைய தந்திரத்திற்கு நான் பலியாக மாட்டேன்.

புறம்கூறுதல் என்பதற்கு இனி நான் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை என்கின்ற அளவிற்கு விளங்கப்படுத்தி விட்டேன்.

ஆகவே இனி நீங்கள் "புறம்கூறுதல்" பற்றி எழுதப் போகின்ற விதண்டாவாதக் கருத்துக்கு மேலதிக விளக்கம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன். தயவு செய்து அதைப் "புறக்கணிப்பு" என்று எடுக்க வேண்டாம்

நிச்சயமாக நீங்கள் சபேசன் நீங்கள் சொல்லியும் சொல்லாவிட்டாலும் வல்வை மைந்தனுக்கு எதிராக (அவரது கவிதைக்கு எதிராக எசப்பாட்டு பாட்டு பாடுகின்றீர்கள் என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது). ஆக எந்த வகையிலும் ஒரு கவிஞரை தாக்குவதை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய பொறுப்புணர்வு எனக்கோ அல்லது என்னை போன்ற (கறுப்பி) உட்பட என்னுமொரு வார்த்தையில் கூற வேண்டுமானால் இலை மறை காயாக உள்ள கவிஞர்கள் யாழுக்கு வர வேண்டும்.எழுத வேண்டும்.தமிழில் எழுத வேண்டும் எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.பிழை விடவேண்டும்.திருந்த வேண்டும்.இறுதியில் கவிஞனாக வேண்டும்.நக்கலுக்கும் நளினத்துக்கும் இல்லை யாழ். களம் அல்லது கவிதைக் களத்துக்கு சொந்தம் கொண்டாட நினைக்கும் சில புல்லுருவிகட்கு சொல்ல நினைப்பது இளம் கலைஞர்களை உற்சாக படுத்துங்கள்.

யாராக இருந்தாலும் (அது சபேசனாக இருக்கட்டும் இல்லை இளைஞனாக இருக்கட்டும் இல்லை நெடுக்ஸ்,ஈழதிருமுகன்,விகடகவி

தமிழ்தாய் பெற்ற மைந்தர்களாகவே நான் பார்க்கிறேன்.பிழைகள் விடுவது மனித இயல்பு.திருந்த எப்பொழுதுமே இடமுண்டு.

இறுதியாக நான் சிறு கவிதையொன்று அநாதரவக விடப்பட்டுள்ளது.அதற்கான விளக்கத்தை தர முடியுமா??

மீண்டும் உங்களுடன் ..........................

முடியல. :)

வன்னி மைந்தனை நான் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை நுனாவிலான். வன்னி மைந்தனை எந்த இடத்திலும் நான் தாக்கி எழுதவும் இல்லை. எங்காவது அப்படி நிகழ்ந்திருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தவறைத் திருத்திக் கொள்கிறேன். ஏற்கனவே இது தொடர்பா நிறைய விளக்கங்களை எழுதி மேல போட்டிருக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன், வன்னி மைந்தனின் கவி எழுதும் ஆர்வத்தை மதிக்கிறேன். அதேநேரத்தில் வன்னி மைந்தனின் கவிதைகளில் உள்ள தெளிவின்மைகளை சந்தேகங்களாகக் கேட்டேன். அவர் தான் அதற்கு பதில் சொல்லாமல் பதில் கவிதையில் தாக்கி எழுதியிருக்கிறார். நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்... பிழை விடவேண்டும் திருத்திக் கொள்ள வேண்டும் என்று. அதைத்தான் நானும் சொன்னேன். இன்னும் அது நடக்கவில்லையே நுனாவிலான்... :lol:

அப்படி நான் எழுதிய கருத்துக்கள் தனிப்பட எந்தக் கவிஞர்களையாவது புண்படுத்துவதாக அமைந்திருந்தால் அதற்காய் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துக்களத்தில் நிறையக் கவிஞர்கள் இருக்கிறார்கள். நிறையவே எழுதுகிறார்கள். பிழைகளை சுட்டிக் காட்டுகிறபோது திருத்திக் கொள்கிறார்கள். நீங்கள் சொன்னதுபோல புதியவர்கள் வரவேண்டும், கவிதை எழுதிப் பழக வேண்டும், கவிதை எழுதி மகிழ வேண்டும், கவிதைக் களத்தில் தவழ வேண்டும். :)

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

புறம் கூறுதல் என்பதற்கு நீங்கள் எந்த ஒரு தமிழாசிரியரிடமும் விளக்கம் கேட்டுப் பெறலாம்.

புறம் என்ற சொல் குறையை குறிக்கவில்லை. குறை கூறப்படுகின்ற இடத்தையே குறிக்கிறது என்பதை தெளிவாக விளங்கப்படுத்திய பின்பும் நீங்கள் அடம்பிடிப்பது அழகு அல்ல.

புறத்தோற்றம் என்றால் குறைத் தோற்றம் என்று அர்த்தமா? புறநானூறு என்றால் குறைநானூறு என்று அர்த்தமா?

புறமுதுகு என்றால் குறை முதுகு என்று அர்த்தமா?

புறம் என்ற சொல் எங்குமே குறை என்ற பொருளை தருவது இல்லை. ஆள் இல்லாத போது குறை கூறுவதை, அந்தக் குறையை நேராகக் கூறாமல், புறமாகக் கூறுவதால், அதை புறம் கூறுதல் என்பார்கள்.

புறம்கூறுதல் என்பது தருகின்ற அர்த்தம் குறை கூறுதல் என்பதுதான். ஆனால் இங்கே குறை என்ற சொல் மறைந்து, சொல்லப்படுகின்ற இடம் முன்னிலை வகிக்கிறது.

இங்கே இடவாகு பெயர் என்றெல்லாம் இலக்கணம் பேசிய நீங்கள், இதை அறியாமல் இருக்க மாட்டீர்கள்.

விவாதத்தை வன்னிமைந்தனில் இருந்து திருப்பி வன்னிமைந்தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து அவரை தப்பச் செய்வதற்கு நீங்கள் நாடுகின்ற குறுக்குவழியாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

உங்களுக்கு "புறம்" என்பது "குறை" அல்ல நன்றாகவே தெரியும். ஆகவே உங்களுடைய தந்திரத்திற்கு நான் பலியாக மாட்டேன்.

புறம்கூறுதல் என்பதற்கு இனி நான் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை என்கின்ற அளவிற்கு விளங்கப்படுத்தி விட்டேன்.

ஆகவே இனி நீங்கள் "புறம்கூறுதல்" பற்றி எழுதப் போகின்ற விதண்டாவாதக் கருத்துக்கு மேலதிக விளக்கம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன். தயவு செய்து அதைப் "புறக்கணிப்பு" என்று எடுக்க வேண்டாம்

இந்தளவு தானா உங்கள் தமிழ் அறிவு...?! என்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

புறம் என்ற சொல் எங்குமே குறை என்ற பொருளை தருவது இல்லை. ஆள் இல்லாத போது குறை கூறுவதை, அந்தக் குறையை நேராகக் கூறாமல், புறமாகக் கூறுவதால், அதை புறம் கூறுதல் என்பார்கள்.

அதேன் குறை மட்டும் நேராகக் கூறாமல் சொல்வது புறங்கூறல். நன்மையை நேராகக் கூறாமல் சொன்னால்.. ஏன் புறம் கூறல் என்று சொல்லுறதில்ல...??! ஏன் குறைக்கு மட்டும்.. அது ஆகிறது..??!

அகம் - புறம் இங்கு உள்ளே வெளியே..

வலது புறம் - இங்கு அது பக்கம்..

குடும்பத்தின் புறம் - குடும்பம் சார்பாக..

புறம் கூறல் - குறை கூறல்

புறம் பிரித்தல் - வேறாகப் பிரித்தல் ( புறம்புகாட்டுதல்)

புறம் தள்ளுவார்கள் - ஒதுக்கி வைத்தல்.

புறம் என்று பா வகைகளைக் குறியிடல்... என்று பல் நோக்கு உண்டு. புறத்துக்கு.

இப்படிப் பல பொருள் இருக்குது சார். இதில் ஒன்றைத்தான் நான் புறம் - குறை அல்லது குற்றம் கணித்தல் என்றேன். இதைவிட நாம் அறியாத பொருளும் இருக்கலாம்.

சரியா சார்..! தமிழோடு விளையாடாதேங்க. அது விளையாட்டுக் காட்டிடும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன்" என்றொரு சகோதரன் யாழ் களம் நீண்ட காலமாக தவமெடுத்த புதல்வன்.

" இளைஞன் "உங்களின் முற்போக்கு தன்மை ஒவ்வொரு இளம் கவிஞனுக்கும் தேவை.வாழ்க தமிழ். உங்களின் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள கவிஞர்களுக்கு, கீழுள்ள கவிதைக்கு விளக்கம் தாருங்கள்.

ஃஉஒடெ நமெ='னுனவிலன்' டடெ='ஸெப் 10 2007, 08:59 PM' பொச்ட்='342596']

கத்துக்கடல் நாகைக்

காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும்போதில்

அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊர் அடங்கும்;

ஓரகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

இது காளமேகப் புலவருடைய பாடல்

காளமேகப் புலவர் பசியால் சத்திரம் ஒன்றிற்கு சாப்பிடச:; சென்ற போது, சாப்பாடு வர நேரமானதால் பாடிய பாடல். இதிலே உள்ள சிலேடை நயம் பற்றி நான் சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ வாசித்திருக்கிறேன். ஆகவே இதற்கு நான் பொருள் கூறினாலும், அது நானாக கஸ்ரப்பட்டு ஆராய்ந்து கண்டுபிடித்தது அல்ல.

அதை வாசிக்காது விட்டிருந்தாலும் நான் நேரடியான அர்த்தம் கட்டாயம் கூறியிருப்பேன். அது மிகவும் இலகுவானது. ஆனால் பாராட்டு போன்று வருகின்ற அர்த்தம் நான் கூறியிருப்பேனோ தெரியாது.

இந்தப் பாடல் பற்றி தெரிந்திருப்பதால் நான் மற்றைய கவிஞர்களுக்கு வழி விடுகிறேன்.

நுணாவிலான்! நீங்கள் தமிழில் ஓரளவு வல்லமை உள்ளவர் போல் தெரிகிறது.

"புறம் கூறுதல்" என்ற சொல் பற்றி உங்கள் கருத்தையும் கூறுவீர்களா?

கருத்துக்கள உறவுகளே, தயவுசெய்து கருத்துக்கள விதிமுறைகளை கடைப்பிடியுங்கள். கருத்துக்களத்தில் உள்ள இந்தக் "கவிதைப் பூங்காடு" பிரிவு கவிதைப் பிரசவத்துக்கானது. கவிதையில் அரிச்சுவடி பழகுபவர்களும், கவிதை எழுதுவதில் நல்லாற்றல் பெற்றவரும் எந்தவிதப் பாகுபாடுமின்றி கலந்துகொள்ளும் இடம். எழுதப் பழகுபவர்களை ஊக்குவிக்கிற அதே நேரம், அவர்கள் விடுகிற பிழைகளை ஆக்கபூர்வமான முறையில் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிச் சுட்டிக்காட்டப் படுகிறபோது பிழைகளைத் திருத்திக் கொள்வதன் மூலமே நல்ல படைப்பாளியாக உருவாக முடியும். இவன் சின்னப் பயல்/இவர்களுக்கு என்ன தெரியும் என்கிற உணர்வு விமர்சகர்களுக்கும், இவர்கள் யார் எனக்குச் சொல்வதற்கு என்கிற உணர்வு படைப்பாளிகளுக்கும் இருக்கக்கூடாது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கவிதை எழுதுகிற போக்கு கருத்துக்களத்தில் தொடர்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். வெளி முரண்பாடுகளை கருத்துக்களத்திலும் தொடர்வது பண்பான செயலாக இருக்காது. அதேபோல் கருத்துக்களத்தின் ஒரு தலைப்பில் ஏற்படுகிற முரண்பாட்டை, இன்னொரு தலைப்புக்கும் கொண்டு சென்று சக கருத்துக்கள உறவுகளை தாக்கும் செயல்களையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கவிதைப் பூங்காடு பிரிவில் கவிதை எழுதும் அனைத்து இளங் கவிஞர்களுக்கும் வளர்ந்துவரும் கவிஞர்களுக்கும் யாழ் இணைய நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இங்கே யாழ் கள நிர்வாகம் தலையிட வேண்டிய பாரதூரமான நிலை எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.

ஆக்கபூர்வமான விமர்சனம் என்பது உண்மையாக விமர்சனம் செய்வதுதான்.

உண்மையை மென்மையாகச் சொன்னால் என்ன? கடுமையாகச் சொன்னால் என்ன?

"என்னை நான்கு வரிகள் பாராட்டி விட்டு அதன் பிறகு விமர்சனத்தை மென்மையாக சொன்னால் மட்டும்தான் நான் ஏற்பேன்" என்று ஒரு படைப்பாளி எதிர்பார்க்க கூடாது.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

நீங்கள் சொன்னதை சொல்லவில்லை. :lol:

வன்னி மைந்தன் சபேசனின் "நாய்க் கவிதை"யின் கீழ் எழுதியிருக்கும் வரிகள்:

இத்தோடு அது முடியவில்லை. இன்னும் தொடர்கிறது. முழுக்க முழுக்க தாக்குதல் நோக்கில். :D

நுனாவிலான் ... நான் ஏதும் தப்பா சொல்லிட்டனோ :lol: நீங்கள் சொல்ல வருவது விளங்கவில்லை.

அன்பரே வணக்கம்..

மேற்குறிப்பிடப்பட்டது எனது வரிகளே ஏன் குறிப்பிட்டேன்

எதற்கு குறிப்பிட்டேன் என்பதை விபரமாக தருகின்றேன்.

1) முன்னர் இந்த கவிதை பகுதியில் வந்து கவிதை வரைந்த இளம் தளிர்களை

சபேசன் எவ்வாறு சாடினர் என்பதை செந்தமிழ் செல்வன் நெடுக்கால போவனிடம்

கேட்டால் விபரமாக கூறுவார்.

2) ஊடகங்கள் வானொலி. தொலைகாட்சிகளில் பா படிக்கும் பாவையருடைய பாவை

ஒப்பாரியென கிண்டலடித்தவர். வளரும் இளம் தளிர்களை

அரும்பிலேயே அறுத்துவிட துடித்தவர். அதன்பின்னே என்னையும் வாரம் ஒரு பா வரையும்படியும்

சொற்களின்றி தடுமாறுவதாகவும் அதனால் வாரம் ஒன்று வரைந்தால் அது நிவர்த்தி செய்யப்படுமென எனக்கு வகுப்பு நடாத்தியவர்...

அத்தோடு தான் 14 வயதில் பா வரைய தொடங்கியவர் என்றும் இவர்களை விட தான் மேலாக வரைபவன் எனவும் முழக்கமிட்டவர்

அதன் பின்னரே இவருடைய கவிதைகளை இங்கு வைத்து சாடினேன்..அவ்வாறு எழுதினேன்..

அவற்றையெல்லாம் மறந்து இஙகென்ன உரைத்தார்..

3) மாற்றாரை மட்டம் தட்டுதல் என்ற நிலையில் இருந்து இதுவரை இவர் விலகவில்லை

தான் பகுத்தாறிவாளனென்றும் படித்தவன் என்றும் முழங்கும் இவருடைய சில மதயிழிவாதங்களை அடுத்தே நான்

இங்கு இவ்வாறு வரைய ஏற்பட்டது...

4) இங்கே பா எழுதும் பாவலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கோடு கருத்துக்கள் எழுதியவர்களைகூட

மட்டம் தட்டி பல இன்னல்களை கொடுத்தவர்....

இதன் பின்னரே நான் இந்த மதயிழிவாதிகள் மீது இவ்வாறு கருத்தை பிரதிபலித்து

நான் வரைய தொடங்கினேன்..

தொடராக இவர் இவ்வாறு சீண்டி இந்த கருத்தாடலை திசை திருப்பி தனிநபர் தாக்குல் என்ற

வட்டது;துக்குள் இழுத்து சென்று நம்மை தாக்கியழிக்கின்ற நிகழ்வுகளில் கடந்த காலங்களில் ஈடு

பட்டிருந்தார்...

அதன் பின்னரே நான் எந்தவிதமான கருத்துகளும் வழங்காது நமது இலக்கு நோக்கி நகாந்தேன் பயணயித்தேன்...

அதை பற்றி எந்தவித கருத்தையும் வழங்காது ஏதோ ஏதோ உரைக்கின்றார்...

ஆனால் நமது சேவை தொடங்கியதும் அவற்றில் இதைவிட மிகவேகமாக காட்டமான பதிலுரைகள் வழங்கப்படும்...

ஆயினும் நாம் எமது நிகழ்வுகளை நீட்சியாக தொடர்வோம்...

இவ்வாறான சில நபர்களுக்கு இவர்களும் உடைந்தையாகயிருப்பது கவலைக்குரியது...

நன்றி...

;) ;) ;) :P

  • தொடங்கியவர்

வேதாந்த மரபதை

வேரோடு பிடுங்கிட

படை கொண்டு வந்தீரா

பைத்திய காரரே....

சாண்றோர்கள் ஆக்கிய

சமய கூடத்தை

புண்டோடு கொழுத்திட

புறப்பட்டு வந்தீரோ...??

தீ மூட்டி வார்த்தைகளை

தீ கொண்டு எறிகின்றீர்

பாவம் தம்பிகளா

பரிதாப மதிலழிவீர்...

நேர் கோட்டு நெறிகளை

நெருடல்கள் செய்வீரோ...?

கூண்டு கிளிகளே- நீவீர்

கூட்டுக்குள் உறைவீரா...

பாரேறி வந்தேனோ

பார்ப்பணர் இழிக்கின்றீர்...?

கிணத்து தவளைகளே

கிண்டல்கள் புரிந்தீரா....??

ஆற்று நீரினிலே

அடிபட்டு போபவரே

நீரேறி வந்தீரா

நீந்தி கடந்தீரோ..??

புற்று கறையானே

புறப்பட்டு போவீர்

பற்றி எரியமுன்

பறந்து போவீர்...

விட்டில் புச்சிகளே

விளக்கொளியில்லையெனின்

ஆயுள் முடிவீரே

அதையேன் மறந்தீரோ....???

;) :P :P

சில எழுத்துக்கள்என்னிடமில்லை அதனால் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது

புரிவுடன் படிப்பீர்...

தனி நபர் தாக்குதலையோ மாற்றரை அவமதிக்கும்

நோக்குடனோ நான் இவற்றை வரையவில்லை..

மாறாக நாம் எமதணி கருத்துக்களை வைக்கின்றோம்...

வளரும் இளம் தளிர்களை யார் வந்தும்

அறுத்தெறிய முனைந்தால் அவருக்கு நாம் சாட்டையடி கொடுப்போம்...

Edited by vanni mainthan

தம்பி வன்னிமைந்தன்!

என்னைப் பற்றி அபாண்டமான சில கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள். அண்மையில் இணைந்த கள உறுப்பினர்கள் நீங்கள் சொல்வது உண்மை என்று நினைத்துவிடப் போகிறார்கள்.

நான் எந்த இளம்தளிரையம் சாடியதாக எனக்கு நினைவில்லை. தவறு விடுகின்ற போது சுட்டிக்காட்டி இருப்பேன். அப்படித் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற போது, உங்களைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கவிஞர்களில் நீங்கள் மட்டும்தான் என்னுடைய விமர்சனங்களை குற்றமாகப் பார்க்கிறீர்கள்.

சோகநிகழ்வுகள் நடந்தால் மட்டும் வானொலி, தொலைக்காட்சிகளின் வந்து கவிதை படிக்கும் பெண்களை கண்டித்தேன். தொடர்ந்து கவிதைகள் செய்யாமல், கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லாமல், சோகநிகழ்வுகளில் மட்டும் கவிதை வாசிப்பதை கண்டித்தேன். (என்னுடைய கண்டிப்புக்களில் கிண்டலும் சிறிது இருக்கும்). ஆனால் நீங்கள் தவறாக இங்கு எழுதியுள்ளீர்கள்

அடுத்து நான் யரையும் மட்டம் தட்டவில்லை. உயரமான இடத்தில் இருப்பவரைத்தான் மட்டம் தட்ட முடியும். மட்டத்திலேயே இருப்பவர்களை எப்படி மட்டம் தட்ட முடியும்?

நான் இங்கு கவிஞர்கள் யாருக்கும் இன்னல் கொடுக்கவில்லை. மாறாக கவிதைகளில் உள்ள அணி வகைகள் குறித்து நிறைய விடயங்கள் எழுதி, இங்கு கவிதை எழுதுகின்ற பலருக்கு உதவியிருக்கிறேன்.

வன்னிமைந்தன்

உங்களுடைய கவிதைகள் கூட ஆரம்பத்தில் சம்பந்தமில்லாத கோசங்களாக வந்தன. இன்றைக்கும் அவைகள் கோசங்களாக இருந்தாலும் எதுகைமோனையோடு வருகின்றன. இது நான் அணிகள் குறித்து எழுதியதன் பிற்பாடு ஏற்பட்ட மாற்றம் என்பதை, உங்களின் பழைய எழுத்துக்களையும் இன்றைய எழுத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்தச் சமயத்தில் கடந்த சில நாட்களாக நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இன்னும் ஒரு தவறையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

மதயிழிவாதிகள் என்று எழுதுகிறீர்கள். இவ்வாறான புணர்ச்சி தமிழில் இல்லை.

"ஐ"யுடன் "இ" இணைகின்ற போதுதான் "யி" வரும்.

உதாரணம்: கோடை - இடி : கோடையிடி

"அ"வுடன் இணைகின்ற போது "யி" வராது

மத - இழிவாதிகள்: மதவிழிவாதிகள் என்று வரவேண்டும்

நீங்கள் மத இழிவாதிகள் என்று எழுதினாலும் தவறு இல்லை. மதவிழிவாதிகள் என்று எழுதினால், அதிலே உள்ள "விழி" என்பதை தனியாகப் பிரித்து இங்குள்ளவர்கள் குழப்பம் விழைவித்துவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.