Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சியில் ஒரே இரவில் 5 வீடுகளில் கொள்ளை

Featured Replies

வடமராட்சியில் ஒரே இரவில் 5 வீடுகளில் கொள்ளை

வடமராட்சி நெல்லியடி மற்றும் வதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கொள்ளைச் சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது வாள் வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

நேற்றிரவு சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவினரும் 5 வீடுகளில் இவ்வாறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன. 15 பேரளவில் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள வீடு ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட கொள்ளைச் சம்பவம் வதிரிச் சந்தி வரை இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலாவது கொள்ளைச் சம்பவம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள ஞானசம்பந்தன் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

1. ஞானசம்பந்தனின் வீட்டினுள் புகுந்த துணை இராணுவக் குழுவினர் மனைவியை கத்தி மற்றும் வாளை காட்டி விரட்டி தாலிக்கொடி, பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஞானசம்பந்தன் கொள்ளைச் சம்பவத்தை தடுக்க முற்பட்ட பொது அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

2. நீர்ப்பாசன திணைக்களத்தில் வேலை செய்துள்ள சிவராஜா வீட்டில் அங்கிருந்த நகைகள் மற்றும் பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

3. கதிரமலை வீட்டிலும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

4. வதிரிச் சந்தியில் உள்ள கிரமசேவகர் நாகசோதிநாதன் மீது வாள் வீச்சை நடத்திவிட்டு வீட்டில் புகுந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துள்ளன.

5. பொறியியலாளர் ரவிச்சந்திரன் வீட்டில் புகுந்து இவரை வாளால் வெட்டிவிட்டு நகை மற்றும் பணத்தினைக் கொள்ளையடித்துள்ளனர்.

வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து இலக்காகிய இருவரும் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தின் போது சிறீலங்கா காவல்துறையினருக்கு தொலைபேசியில் அறிவித்த போதும் காவல்துறையினர் மற்றும் படையினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட துணை இராணுவக் குழுவிரைக் கைது செய்ய முடிவில்லை. அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு சென்ற பருத்தித்துறை நீதியாளர் அரியரட்ணம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவங்களுடன் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களும் துணை இராணுவக் குழுவான ஈபிடிபியினரே தொடர்பு பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • தொடங்கியவர்

இக்கொள்ளையர்களின் வெறியாட்டம் இரவு 8.30 மணிக்கு நடந்திருக்கிறது. இவ்வெறியாட்டம் நடைபெற்றபோது பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பிய அவலக்குரல்களால் அப்பகுதியே அதிர்ந்திருக்கிறது. கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிலர் நெல்லியடியிலுள்ள சிங்கள பொலிஸ் நிலையத்துக்கு கைத்தொலைபேசி மூலம் தகவலும் கொடுத்திருக்கிறார்கள். உடன் அங்கு செல்கிறோம் என்ற சிங்கள பொலிஸாரும் அப்பகுதிக்கு அடுத்த நாள் வரை செல்லவில்லையாம்!!!! ஆனால் கொள்ளையர்களின் வெறியாட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து கூப்பிடு தூரத்திலுள்ள சிங்கள இராணூவத்திற்கு சம்பவம் தெரியவில்லையாம்!?!?!?!?.....

நெல்லியடி ம.ம.வித்தியாலயத்துக்கும் வதிரி புளியடிச்சந்திக்கும் இடையிலுள்ள வீடுகளில் ஏறக்குறைய 30 மிருகங்கள் வாள்களுடந்தானாம் இவ்வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறார்களாம். வீடுகளின் ஓடுகளைப் பிரித்தும், கதவு/யன்னல்களைப் கொத்திப் பிரித்தும் வீடுகளுக்குள் புகுந்த இம் மிருகங்கள் நிறைமாத கற்பிணிப்பெண்கள், வயோதிபர்கள் என்று கூட பார்க்காது மிருகத்தனமாக தாக்கியிருக்கிறார்கள். பெண்களை யன்னல் கண்ணாடிகள் உடைந்த துண்டுகளின் மேலால் இழுத்து சென்றிருக்கிறார்கள்.

நகைகள், பணங்களை கொள்ளையிட்டதற்கு மேலாக அவ்வீடுகளில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் உட்பட்ட வாகனங்களையும் கொத்தி சேதப்படுத்தி விட்டுத்தான் இம்மிருகங்கள் சென்றிருக்கிறார்களாம். ஏன்???? மிக திட்டமிட்ட முறையில் இக்கொள்ளைகள் நடைபெற்றுருக்கிறது. இவைகள் கொள்ளைகள் என்பதற்கு மேலாக மக்களிடம் அச்ச உணர்வு, வெறுப்பு, விரக்திகளை ஏற்படுத்தும் விதமாகவே நடைபெற்றிருக்கிறது.

அப்பகுதியில் இக்கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வாள்கள், கோடாரிகள், கத்திகளுடன் நெல்லியடி ம.ம.வித்தியாலய வீதியெங்கும் மிருகங்கள் நின்றிருந்தார்களாம். அவலக்குரல்கள் கேட்டு அப்பகுதி வீடுகளில் மின்குமிழ்கள் எரிய விட முற்பட்டவேளை, அம்மிருகங்கள் மிரட்டி சத்தமிட்டி அவற்றை அணைத்திருக்கிறார்கள்

இக்கொள்ளையர்கள் தொடர்பாக மேலதிகமாக .... நெல்லியடியில் உள்ள ஈ.பி.டி.பி கும்பலில்லாது, மந்திகையில் நிலை கொண்டிருக்கும் ஈ.பி.டி.பி கும்பலைச் சார்ந்த சிலர் அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு அருகே இருக்கும் "திடல்" என்ற பகுதியைச் சார்ந்த சில தெருநாய்களுடன் இணைந்துதானாம் இக்கொள்ளைகளை நடத்தியதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

யாழில் முன்பு நடந்து கொண்டிருந்த இம்மாதிரியான கொள்ளைகள் சில நாட்களாக தணிந்திருந்தது. தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.

நித்தமும் மரண அவலங்களுக்குள் வாழும் யாழ் மக்கள் மீட்கப்படப் போவது எப்போது???????...................

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

கொள்ளைக் கோஷ்டியினர் பெரும் அட்டகாசம் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை நெல்லியடி வதிரி பகுதியில் சம்பவம்

வீரகேசரி நாளேடு

நெல்லியடி வதிரிப் பகுதியில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த வேளையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்த கொள்ளைக் கோஷ்டியினர் குடியிருப்பாளர்களை வெட்டியும் குத்தியும் தாக்கி பயமுறுத்தி பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இச்சம்பவத்தின்

  • கருத்துக்கள உறவுகள்

வதிரியில் முகமூடிக் கொள்ளையர் ஊரடங்கு நேரம் அட்டகாசம்! வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு, கத்திக்குத்து

நெல்லியடி வதிரிப் பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில், நேற்றுமுன்தினம் சனிக் கிழமை இரவு, பயங்கர ஆயுதங்களு டன் வீடுகளுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 30 இற்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கொள்ளைக் கோஷ்டி ஒன்று குடியிருப்பாளர்களை வெட்டியும் குத் தியும் தாக்கியது. பல லட்சம் ரூபா பெறு மதியான தங்க நகைகளைக் கொள்ளை யடித்துச் சென்றது.

இச்சம்பவத்தின்போது கொள்ளை யரை எதிர்த்து நின்ற கிராம சேவையா ளர் ஒருவர் உட்பட இருவர் பலத்த காயங்களுடன் பருத்தித்துறை அரசி னர் ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு 8.15 மணி தொடக்கம் 10 மணிவரை நெல்லியடி யிலிருந்து வதிரிவரையுள்ள சுமார் ஐந் துக்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இவ்வீதியில் உள்ள, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப மாகி வதிரிச் சந்தியைத் தாண்டி நெல் லியடி மெதடிஸ்த மிஷன் பாடசாலை வரையுள்ள பகுதிகளில் உள்ள வீடு களில் கொட்டன், கத்தி, வாள், கோடரி போன்ற வகை வகையான ஆயுதங் களுடன் அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்தவர்கள் வீடுகளையும் மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளனர்.

அதுமட்டுமன்றி வீட்டுச் சொந்தக் காரர்களையும் கூரிய ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்தியும் ஒவ்வொரு வீடுகளிலும் 50 ஆயிரம் தொடக்கம் 6 முதல் 7 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித் தும் சென்றுள்ளனர்.

வர்த்தகரை அடித்து இருத்தினர்

வதிரிச் சந்தியில் உள்ள கடை உரி மையாளரான கனகராசா ரவிச்சந்திரன் (வயது 63) என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கோஷ்டி கூரிய ஆயுதங்களால் அவரைத் தாக்கி பய முறுத்தி நிலத்தில் இருக்க வைத்துவிட்டு, அவரது மோதிரத்தையும், மகளின் சங்கிலியையும் கழற்றிக்கொண்டு சென்றுள்ளது. இவருக்கு இடது பக்க இடுப்பிலும் இடது கையிலும் வெட் டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வீட்டுக்கு அண்மையில் உள்ள புலோலி வடமேற்கு கிராம சேவையா ளர் சபாரத்தினம் நாகதீபசோதிரூபன் (வயது 50) என்பவரது வீட்டுக்குச் சென்ற கொள்ளைக் கோஷ்டி கதவை உடைத்து உள்ளே சென்றபோது கொள் ளையர்களை அவர் எதிர்த்துப் போரா டினார். அப்போது தலையிலும் இடது கை மணிக்கட்டிலும் பலத்த வெட் டுக்காயத்துக்குள்ளானார். அவ்வேளை யில் அவரது மனைவியின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

இவரது வீட்டுக்குக் கொள்ளைக் கோஷ்டியினர் மீண்டும் வந்தபோது பலத்த காயங்களுக்கு மத்தியிலும் கதவை அடைத்து எதிர்த்துப்போரா டவே கொள்ளையர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

கர்ப்பிணிப் பெண்ணிடம்

தாலிக்கொடியைப் பிடுங்கினர்

அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன் றுக்குச் சென்ற கொள்ளையர் கர்ப்பி ணிப் பெண் அணிந்திருந்த தாலிக் கொடியைத் தருமாறு மிரட்டினர். அப் பெண் கொடுக்க மறுக்கவே அவரது வயிற்றில் காலால் உதைத்தனர்; அவ ரைத் தாக்கினர். அப்போது அவரது கணவரை கத்தி முனையில் மிரட்டி வைத்திருந்தனர்.

அதனையடுத்து அப்பெண் தாலி யைக் கழற்றிக்கொண்டு கொடியைக் கொள்ளையரிடம் எறிந்தார்.

இச்சம்பவங்கள் குறித்து அறிய வந்ததும் அயலவர்கள் கரவெட்டிப் பிரதேச செயலர், பருத்தித்துறை பதில் நீதிவான் ஆகியோருக்கு தகவல் தெரி வித்தனர். இதுவிடயம் பருத்தித்துறை நீதிவான் கே.அரியநாயகத்தின் கவ னத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

பருத்தித்துறை நீதிவான் உடனடி யாக நெல்லியடிப் பொலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் பொலீ ஸார் சம்பவ இடங்களுக்கு உடன் விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். அதேவேளை, பருத் தித்துறை அரசினர் ஆதார வைத்திய சாலை, வல்வெட்டித்துறை மாவட்ட அரசினர் வைத்தியசாலைகளின் அம் புலன்ஸ் வண்டிகளும் அங்கு வந்து சேர்ந்தன. அவற்றில் படுகாயமடைந் தோர் இரவு 11.30 மணியளவில் கூட் டிச்செல்லப்பட்டு பருத்தித்துறை அர சினர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

நீதிவான் பார்வையிட்டார்

நேற்றுக்காலை சம்பவ இடத்துக் குச் சென்ற பருத்தித்துறை நீதிவான் க.அரியநாயகம் சம்பவ நடந்த வீடு களைப் பார்வையிட்டார். விசாரணை களை நடத்தினார். அப்பகுதி இராணுவ அதிகாரிகளை அழைத்து நீதிவான் கலந்துரையாடினார்.

சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிவான் அவர் களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின் படையினர் வதிரிச்சந்தி, மாலு சந்தி, முத்துமாரியம்மன் ஆலய பகுதி, டயமன் விளையாட்டுக் கழகம் ஆகிய பகுதிகளைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்தினர்.

சிலரின் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்ட படையினர் அவர் களை முகாமுக்கு வருமாறு பணித்துச் சென்றனர்.

-உதயன்

இரு தினங்களுக்கு முன் இரத்மலானை விமான நிலையத்திற்கு எனது நன்பர் ஒருவரை யாழ். அனுப்ப அவரது உறவினர்களுடன் சென்றேன். திரும்ப வரும் போது தெகிவலை பாலத்திற்கருகில் உள்ள இராணுவ பரிசோதனை நிலையத்தில் வண்டி நிற்பாட்டப்பட்டது. வண்டியை சோதித்த இராணுவ வீரன் பின்னால் இருந்த இளசுகளிடம் கதைத்தபடி 'எங்கிருந்து வாரிங்க, எங்க போரிங்க, யாபாணையில எங்க இருக்கிங்க" என்று கேட்டு விட்டு, "இனி யாப்பணைக்கு போகலம் தானே அது தானே நம்மட கருணா யாப்பனைய பாரம் எடுத்து இருக்குதானே. பயமில்லாம போகலம் தானே" என்று அலட்டினான். நானும் ஏதோ ஜோக்கடிப்பதாக நினைத்தபடி சிரித்தேன். இப்போது தானே தெரிகிறது அது உண்மைதான் என்று.

ஜானா :) : :lol:

யாழ். வடமராட்சி நெல்லியடியில் சிறிலங்கா இராணுவத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 5 வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

மேலும் வாசிக்க

ம்

யாரையும் குறைசொல்லிக் பிரயோசனமில்லை. முழுக்க முழுக்க இது எம் உறவுகளின் அட்டகாசமே. அல்வாயின் திடல் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஓட்டுக்குழுக்களினதும் கைவரிசைதான் இது. இதில் எனது உறவினர்களும் பாதிக்கபட்டுள்ளார்கள். அவர்களுடன் தொடர்புகொண்டபோது மிகமிக பயந்தவண்ணம் இருக்கின்றார்கள். பிபகல் 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இராணுவமோ காவல்துறையோ வரவில்லை. பின் நீதவானின் கட்டாய பணிப்புரையின் கீழ் காவல்துறை இராணுவ உதவியுடன் 10.30 மணியளவில் வந்ததாகவும் அதன்பின்னரே சற்று அமைதி ஏற்பட்டதாகவும் அறிய முடிந்தது. ஒரு கிராம சேவகரும் மிக மோசமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் ஒரு திட்டமிட்ட செயல். வசதியானவர்களின் வீடுகள்மீதே தாக்குதல் நடாத்துப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பலனை அனுபவிப்பார்கள். 2வருங்களின் முன்பும் இதே போல் ஓரு சம்பவம் கரவெட்டி அம்பம் ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் நடைபெற்று அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அநாதைகளாக வீதியில் சுடப்பட்டு இறந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துக

நேற்றுமுன்தினம் (09.09.2007) ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ் வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஐந்து வீடுகளில் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கத்திகள் வாள்களை பயன்படுத்தி பொது மக்களை மிரட்டி தாக்கிய பின்னர் பணம் மற்றும் பெறுமதி மிக்க பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற பகுதி படையினரின் காவலரண்களும் மினி முகாம்களும் உள்ள அதி உச்ச பாதுகாப்பான பிரதேசம் என்பதுடன் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் இரவிலும் இடம் பெறுகின்ற பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கொள்ளைச் சம்பவத்தில் படையினரும் துணை இராணுவக் குழுவினரினரான ஈ.பி.டி.பி யினரும், சமூக விரோதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சமூக விரோதிகள் எனப்படுவோர் சமூகத்தில் பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபடுபவர்கள் அல்லது ஒழுக்கக் கேடானவர்கள் தொடர்பாக பொது மக்களால் பொலீசாருக்கு முறைப்பாடு செய்யப்படும் போது அவ்வாறானவர்களை பொலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கும் போது அக்குற்றவாளிகளை அணுகும் இராணுவப் புலனாய்வுத் துறையினர் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் நீங்கள் புலிகள் பற்றியோ அல்லது புலி ஆதரவாளர்கள் பற்றியோ தகவல்களை வழங்க சம்மதித்தால் உங்களை தண்டனை இன்றி விடுவிக்க முடியும் என பேரம் பேசும் பேசுகின்றனர் இதன்போது அக்குற்றவாழிகளும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொள்ளும் நிலையில் அவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் மூலமாக தமக்குத் தேவையான உளவுத் தகவல்களை பெற்றுக் கொள்ளும் அதேவேளை சம்பந்தப்பட்ட குற்றவாழிகள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வேண்டிய பாதுகாப்பினையும் அனுமதியையும் வழங்குவதுடன் அவர்களை சாட்டாக வைத்து தாமும் கொள்ளைகளில் ஈடுபடவும் செய்கின்றனர்.

மேற்படி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொலைபேசி மூலமாக பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும் கொள்ளைச் சம்பவத்தினை தடுத்து நிறுத்தவோ கொள்ளையர்களை கைது செய்யவோ பொலீசார் எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றாக சீரழிந்துள்ளதையே இச்சம்பவம் வெளிப்படுத்துகின்றது. அங்கு நடைபெறும் இராணுவ ஆட்சியில் சிவில் நிர்வாகம் சீரழிந்து கொள்ளையர்களின் கைகளுக்கு அதிகாரம் சென்றுவிட்டதையே காட்டுகின்றது.

யாழ் குடாநாடு தமது முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறும் அரசு இக்கொலை தொடர்பாக உடன் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இல்லையேல் பொது மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பொங்கி எழும் நிலை உருவாவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாதுபோகும்.

- சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.