Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரிய உதடுகள் உன்னது.

Featured Replies

ஆரிய உதடுகள் உன்னது.

2005111517191402.jpg

தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும் இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும்

சனநாயகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில் மூன்றாவதோ, நான்காவதோ தூணான பத்திரிக்கைத் துறையின் ‘பிதாமகன்’களில் ஒருவருமான அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சந்திக்கும் பாக்கியம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ‘ஆபத்து’ வந்தபோது தமிழகத்துப் பத்திரிக்கையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது கூட. இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது.

சுற்றி வளைப்பானேன்? அவர்தான் ‘இந்து’ ராம்.

காரல்மார்க்சுக்கு அடுத்த இத்தகைய மாமேதையைக் குறித்து அண்மையில் நான் கேள்விப்பட்ட சில செய்திகள்

என்னை அதிர்ச்சியின் விளிம்புக்கே இட்டுச் சென்றன என எழுதினால் அது பொய்.

மாறாக, மனசுக்குள் போட்டு வைத்திருந்த கணக்கை சரிபார்த்துக் கொள்ளக் கிடைத்த அரியதொரு வாய்ப்பாக அமைந்தது என்பதுதான் மெய்.

அதில் ஒன்று தான்:

சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்து வருபவரும் சி.பி.எம்.முடன் காற்றுக்கூட நுழைய இடமின்றி

இறுக்கமான இணைப்பு வைத்திருப்பவரும் அதனது எஸ்.எப்.ஐயின் தந்திராலோசனைக் கூட்டங்களில் தவறாது பங்கேற்கும் தளகர்த்தரும். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளைக்கு இன்னல் நேரும்போதெல்லாம்

களத்தில் குதித்துக் கத்தியைச் சுழற்றுபவருமான ‘இந்து’ ராம் எதற்காக பலான குற்றச்சாட்டுக்களிலிருந்து

பல்வேறு குற்றச்சாட்டுகள் வரைக்கும் ஆளான விஜயேந்திரரை ஓடோடிச் சென்று தனது சொந்தக்காரில் அழைத்து வந்தார்? என்பது தான்.

இது குறித்து நமது கேள்விகளெல்லாம் வெகுவெகு எளிதானவை.

தீவிர இடதுசாரி சாதி மறுப்பாளர் மதச்சார்பின்மையின் மொத்த உருவம் என்கிற அளவிற்கு உருவகப்படுத்தப்படும் இந்த ராம் எதற்காக விஜயேந்திரரை நேரில் சந்தித்து அழைத்து வந்தார்?

அவருக்கும் இவருக்குமான உறவு வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் முகிழ்த்த உறவா? அல்லது அவரும் இவரைப் போல் SFI யின் அரசியல் வகுப்பெடுக்கும் மார்க்சிய ஆசானா?

ராம் சார்ந்திருப்பதாகச் சொல்லப்படும் அக்கட்சி இச்செயலை எவ்விதம் பார்க்கிறது? (‘இந்து’ ராம் சார்ந்திருக்கும் என்பதைவிடவும் இந்து.ராமை சார்ந்திருக்கும் என்று எழுதத்தான் ஆசை ஆனாலும் சந்திரிகாவின் இந்த இனிய நண்பர், அமைப்புரீதியாக இதில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? என்பது புரியாத எண்ணற்ற விக்ரமாதித்தியன்கள் வேதாளங்களின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நம்மைப் போலவே தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சிக்கல்).

திலீபன் மன்றத்தைத் துவக்கியதற்காகவும்

ஈழத்தில் ‘அமைதி’ப்படையின் அத்துமீறல்களுக்கு எதிராய்

மனிதச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டதற்காகவுமே

அநேகரைக் கட்சியை விட்டுக் கட்டம் கட்டிய காம்ரேடுகள்

இதில் மட்டும் மெளனம் சாதிப்பதின் பின்னணி என்னவாக இருக்கக்கூடும்?

சரி, இவை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.

நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

சுனாமியின் சோகம் இன்னும்கூட மக்களின் மனங்களைவிட்டு அகலாத சூழலில்

எத்தனை உயிர்கள் பறிபோயிற்று?

பெற்றோரைத் தொலைத்த மழலைகளின் நிலை என்ன?

அரசினது நிவாரண பணிகள் மக்களைச் சென்றடைகிறதா இல்லையா?

தமிழகக் கரையோரங்களில் ஒதுங்கிய உடல்கள் எவ்வளவு?

அரசினது உதவிகளுமின்றி ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும்

பலியானவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடுகின்றன? என்கிற கவலைகளை காட்டிலும்.

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே

என்கிற கதையாய் சிறீ லங்காவின் ‘THE ISLAND’ பத்திரிக்கை கிளப்பிய புரளியை ஆதாரமாக்கி ‘Is Prabhakaran Dead or Alive?’ என சனவரி 9ஆம் தேதியே முதல் பக்கத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

shankaracharya1.jpg

‘ஏன் இந்த அக்கறை? அதிலும் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதற்கு?’ என பராசக்தி பாணியில்தான் நாம் ராமையும் 1878லிருந்து ‘India’s National News Paper’ ஆக இருந்து கொண்டிருக்கும் ‘இந்து’ நாளிதழினையும் நோக்கி நாம் வினவவேண்டி வருகிறது. போதாக்குறைக்கு அடுத்தநாளே இதற்கென ஒரு தலையங்கம் வேறு. இப்படி எண்பதுகளின் இறுதியில் சங்கரராமனை ‘மோட்சத்திற்கு’ அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் நபர் பத்து பதினைந்து நாட்களுக்கும் மேலாய் ‘காணாமல்’ போயிருந்தபோது ‘Is Acharya dead or Alive?’ என்று கட்டம் கட்டிப்போட இவர்களுக்குத் தோன்றவில்லையே அதற்கு என்ன காரணம்?

அவரோடும் அவரது இயக்கத்தோடும் ஆயிரம் முரண்பாடுகள் அநேகருக்கு இருக்கலாம். ஆனால் தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் இறங்கினால் Freedom of Expression எனத் தொண்டை கிழியக் கத்துகிற ஒரு நாளிதழ்… புரளிகளை ஆதாரங்களாகவும் ஆதாரங்களை புரளிகளாகவும் பார்க்கிற போக்கிற்கு என்ன பெயர்?

பத்திரிகா தர்மம்?

2005011110890101.jpg

ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா செய்திகளுக்கு எங்கே போவது? என ஒருமுறை பெரியாரிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ அதையெல்லாம் தப்புன்னு எழுது எதத் தப்புன்னு போட்டிருக்கானோ அதையெல்லாம் சரின்னு எழுது’ என்றாராம்.

இந்த மெளண்ட்ரோடு மகாவிஷ்ணு விஷயத்தில் அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.

எது எப்படி இருப்பினும் நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:

அது சரி ஒரே ஊரில் எதற்காக இரண்டு இலங்கைத் தூதரகங்கள்?

இதன் மூலம் என்னிடம் இல்லை அதனை எடுத்தவுடன் பதிகின்றேன் இன்னொரு சகோதரகளத்திலே இந்த கட்டுரையை படித்தேன்

இணைப்புக்கு நன்றி ஈழவன்.

-------------------------------------------------------------------------------------

சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்து வருபவரும் சி.பி.எம்.முடன் காற்றுக்கூட நுழைய இடமின்றி

இறுக்கமான இணைப்பு வைத்திருப்பவரும் அதனது எஸ்.எப்.ஐயின் தந்திராலோசனைக் கூட்டங்களில் தவறாது பங்கேற்கும் தளகர்த்தரும். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளைக்கு இன்னல் நேரும்போதெல்லாம்

களத்தில் குதித்துக் கத்தியைச் சுழற்றுபவருமான ‘இந்து’ ராம் எதற்காக பலான குற்றச்சாட்டுக்களிலிருந்து

பல்வேறு குற்றச்சாட்டுகள் வரைக்கும் ஆளான விஜயேந்திரரை ஓடோடிச் சென்று தனது சொந்தக்காரில் அழைத்து வந்தார்? என்பது தான்.

----------------------------------------------------------------------------------------------------------

பாட்டாளி வர;க்கம் போராடுவது இந்து ராம் போன்றவர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கே. இவர்கள் பாட்டாளி மக்களுக்காக குரல் கொடுப்பது எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரு தலித்தை குப்புற விழுத்தி கழுத்தான் குத்தியில் ஏறி நின்று கொண்டு அவர்கள் விமோசனத்துக்கு குரல் கொடுப்பது ஆகும். ஒடுக்கு முறைகளையும் செய்து அதன் நிமிர்த்தம் ஒடுக்கப்படும் மக்களின் அவலக்குரல்கள் கண்ணீரையும் திருடி அவர்களுக்காக குரல் கொடுப்பது போல் ஒடுக்கப்படும் மக்கள் குரல்களை பலவீனமாக்கும் ஒரு செயலை இந்த பந்தியில் வியஜேந்திரர் ராம் கார்பவனி காட்டுகின்றது.

அது மட்டுமல்லாது சிங்களத்துடனான கூட்டு. ஈழத்தமிழர்கள்பிரச்சனையில் ஓர வஞ்சகப்போக்கு எல்லாம் அவர்களின் சுய ரூபத்தை வெளிப்படுத்துகின்றது. மனு தர்ம விதிகளை விரிவாக்குபவர்களிடம் மனித நேயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

Edited by sukan

ஈழவன் மற்றும் சுகன்,

"இந்து" பத்திரிகை ஆசிரியர் ராம் அவர்கள் விசம் போன்ற கருத்துக்களை சிறிது சிறிதாக இளம் ஊடகவியலாளர்களுக்கு "பயிற்சிப் பட்டறை" என்ற பெயரிலும் ஊட்டி வருகிறார். இதன் இணையத்தள இணைப்பை கிடைத்தவுடன் இங்கு பதிகிறேன். வருங்காலத்தில் நாம் போராடவேண்டியது தனியொருவர் சார்ந்ததல்ல. இதில் வர்க்க வேறுபாடின்றி தன் கொள்கைகளை இளயோர் மனதில் பதித்து, ஒரு பரந்துபட்ட எதிர் அலையை உருவாக்குகின்றனர். அதை முளையிலே எதிர்கொள்வதே நல்லது. அவ்வாறான ஒருவித விச நம்பிக்கையில் இளையோர் அமிழ்ந்துவிடும் சந்தர்ப்பத்தில் (இன்று சமயம் எவ்வாறு பலரையும் அமிழ்த்தி வைத்திருக்கிறதோ அவ்வாறு) அவர்களை அதினின்றும் மீட்பதென்பது இலகுவல்ல. வீணே எமது சக்தி தான் விரயமாகும். இதனை எத்தனைபேர் கவனித்திருக்கிறார்கள் என தெரியவில்லை. மிகத் தரமான தொடர்பாடல்முறைகள் எம் இளம் ஊடகவியலாளர் மத்தியில் உருவாக்கப் படுவது அவசியம்.

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கட்டுரையை பிரதிவாக்கம் செய்த ஈழவனுக்கு என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழவனுக்கு இக்கருத்தை இணைத்தற்கு.

"காரல்மார்க்சுக்கு அடுத்த இத்தகைய மாமேதையைக் குறித்து அண்மையில் நான் கேள்விப்பட்ட சில செய்திகள்

என்னை அதிர்ச்சியின் விளிம்புக்கே இட்டுச் சென்றன என எழுதினால் அது பொய்."

1989இல் (இந்திய அமைதிப்படை காலத்தில்) பிரபாகரன் இறந்துவிட்டார் என பரப்பப்பட்ட புரளியை கட்டம் கட்டி இந்து நாளிதள் வெளியிட்டது. ஆனால் அடுத்த நாளே அதே பத்திரிகை ஒன்றை வாசிக்க்கும் படத்தை புலிகள் வெளியிட்டு இந்துவினதும் தினமலரதும் முகத்தில் கரி பூசினார்கள். இதில் நகைப்புக்குரிய செய்தி என்னவென்றால் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார் என ‘விலாவாரி’ யாக எழுதியதுதான். அத்துடன் நின்றுவிடாமல் இந்திய அடிவருடி வரதராஜப்பெருமாள் தான் அச்செய்தியை உறுதிப்படுத்தியதுமட்டுமல்ல பிரபாகரனின் உடலுக்கு மரியாதை நிமித்தம் மாலை அணிவித்ததாகவும் கூறியதையும் பிரசுரித்தனர்!!!!

கார்ல்ஸ் மார்க்சின் கால்தூசுக்கும் சமனில்லை இந்த தறுதலை ராம்.பத்திரிகாதர்மம் தெரியாதவர் இந்தளவு அறிவு வைத்திருந்தென்ன விட்டென்ன?.

ஈழத்திருமகன் ACJ தானே?

http://www.asianmedia.org/

ஆமாம் குறுக்ஸ். அதுதான். B) .

இணைத்தமைக்கு நன்றி.

http://www.asianmedia.org/aboutus/mdf.asp

Edited by Eelathirumagan

http://blog.tamilsasi.com/2007_08_01_archive.html

ஹிந்து என்.ராம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தன்னுடைய பங்களிப்பினை அதிகம் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. காரணம் ராஜீவ் காந்திக்கு தவறான தகவல்களை அளித்து இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் பல இழப்புகளை ஏற்படுத்தி கொடுத்த குழுவில் ஹிந்து ராம் முக்கியமானவர். இந்தியாவின் Foriegn policy disaster என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை திட்டமிட்டு நடத்திய குழுவில் முக்கியமானவரான ஹிந்து ராம் அவரது தோல்வியை எப்படி வெளிப்படுத்திக் கொள்வார் ? நாம் தான் வெளிப்படுத்த வேண்டும்...

இங்கும் இந்து ராம் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்

அது சரி ஒரே ஊரில் எதற்காக இரண்டு இலங்கைத் தூதரகங்கள்?

அந்த கட்டுரையில் எனக்கு பிடித்த வரி இதுதான் பலாயிரம் அர்த்தங்களை இந்தவரி சொல்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.