Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிகாரர்களின் மறு பெயர்.. மது பிரியர்களாம். அதேபோல்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, temple and text

குடிகாரர்களுக்கு  தற்போது மாற்று பெயர் வைக்கப்பட்டது.
இப்படியே இனி நீங்களும் அழையுங்கள்.
மதுபிரியர்களாம்.  அதேபோல்... 

சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர்
குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர்
குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர் 
குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர்
 எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர் -மதுபங்க்கர்
குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர்
குடித்துவிட்டு பேசினதையே பேசுபவர் - மதுரம்பர்
வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர்
 உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர்  - மது சித்தர்
குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர் 
துணைக்கு ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் -  மது சங்கர்
இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் - மதுநோன்பர்
வேற ஒருத்தர வாங்கி தர சொல்லி குடிப்பவர் மதுகரம்பர்
வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் -  மதுவெம்பர்
எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் -  மதுதெம்பர்
மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர்  - மதுபம்பர் 
குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மதுதர்மர்...
😂😂😂😂

Kalaikodan Salai  · 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவற விடப்பட்ட வேறு பெயர்கள் தெரிந்தால்... பதியவும். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்தி விட்டு, அரைத்த மாவை அரைப்பவர்... மதுரையர்.
மதுவுடன் அதிக ஊறுகாயை தின்பவர்... மது ஊறர்.
வெறிக்க மட்டும் அருந்துபவர் ... மது வெறியர்.
கண்ட கறுமத்தையும் குடிப்பவர்.... மது கெலியர்.

😂 🤣 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, தமிழ் சிறி said:

தவற விடப்பட்ட வேறு பெயர்கள் தெரிந்தால்... பதியவும். 🤣

ஜக்கற்றுக்குள் பியர் ரின்னுடன் திரிபவர்???

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஜக்கற்றுக்குள் பியர் ரின்னுடன் திரிபவர்???

 

மதுஜக்கர். 😂🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

மதுஜக்கர். 😂🤣

அப்பம்  புளிக்கவென கள்ளு வாங்குபவர்? :rolling_on_the_floor_laughing:

புளி அப்பர்??? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியுடன் சேர்ந்து குடிப்பவர்.......மாதொருபாகர்......!  😂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

மனைவியுடன் சேர்ந்து குடிப்பவர்.......மாதொருபாகர்......!  😂 

மாதொருபாகரா... மதுஒருபாகரா? சுவியர்.    🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

மாதொருபாகரா... மதுஒருபாகரா? சுவியர்.    🤣

இதில் மதுவும் மாதுவும் சேர்ந்திருக்கிறது சிறியர் .........!

மாதொருபாகர் ......பெண்ணை பக்கமாய் வைத்திருப்பவர்....... மாதில் ஒரு காலை எடுத்து விட்டால் மது ஒரு பாகர்......!

மதுவைவாங்கிப் பகிர்ந்து குடிப்பவர்........மதுதானப் பிரியர்.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இதில் மதுவும் மாதுவும் சேர்ந்திருக்கிறது சிறியர் .........!

மாதொருபாகர் ......பெண்ணை பக்கமாய் வைத்திருப்பவர்....... மாதில் ஒரு காலை எடுத்து விட்டால் மது ஒரு பாகர்......!

மதுவைவாங்கிப் பகிர்ந்து குடிப்பவர்........மதுதானப் பிரியர்.......!  😂

சுவியர்... உங்களிடம், தமிழ் துள்ளி விளையாடுது. 😍 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுவியர்... உங்களிடம், தமிழ் துள்ளி விளையாடுது. 😍 👍

சே....சே.....எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது சிறியர்.......உங்களைப்போல் யாரும் புகழ்ந்தால் மட்டும் ரொம்பப் பிடிக்கும்......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people smiling and text that says 'காசு குடுத்து கள்ளச் சாராயம் குடிச்சிட்டு சாவுடான்னா.. டாஸ்மாக்ல குடுச்சிட்டு வந்து படுத்திட்டிருக்கியா.. நீ செத்தா தான்டா எனக்கு 10 லட்சம்.'

 

May be an image of 3 people and text that says 'BREAKING NEWS புதிய தலைமுறை உண்மை உறுக்குடன் தடதால் പാp SENENNG ✓ JAOLVENA கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு விழுப்புரம்: மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 15|05|2023 6:30 AM www.puthiyathalaimurai.'

கள்ளச் சாராயம் குடித்து இறந்தோர் என   அசிங்கமா பேசாதீங்க...
உயிர் நீத்த தியாகிகளுக்கு, உதவித் தொகை 10 லட்சம் ரூபா  என சொல்லி பழகுங்கள்.🚶

Jayaseelan Selvaraj

 

May be an image of 4 people and text that says 'STUDIOS STUDIS DRSWAMIJI *மது பிரியர்கள் STUDIOS'

டாஸ்மாக் சரக்கு விலை அதிகம்.
10 ரூபா எக்ஸ்ட்ரா குடுக்கணும்.
கடைசில செத்தா எவனும் திரும்பி பார்க்க மாட்டான். 
கள்ளசாராயம் விலை குறைவு. செத்தால்...10லட்சம் பணம் கிடைக்கும். 
பெயர், போட்டோ எல்லாம்  பத்திரிகையிலை  வரும் 
சொல்லு... என்ன செய்ய போற 😁😁

T Muthu

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

களவாய்க்குடிப்பவர் மதுக்கள்ளர்

குடித்து விட்டு  நாலு  காலால் நடப்பவர் மதுநாயனார்

வெறிக்காக  குடிப்பவர் மதுவெறியர்

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்கு தெரியாமல் குடிப்பவர்  அமசடக்கு குடியர்
சிறு பிள்ளைகளுக்கு தெரியாமல் குடிப்பவர் அலுமாரிக் குடியர்.
கோக் கானுக்குள் மதுவை ஊற்றிவைத்து வெளிப்படையாக   குடிப்பவர் யூஸ் குடியர்  (எதோ நம்மால   முடிஞ்சது கண்டதும் கேட்ட்தும் )😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசி பிள்ளையளுக்கு தொந்தரவில்லாமல் குடிப்பவர் ↹ அதி உத்தம,பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு குடிகாரர்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மதுவை ருசித்து குடிப்பவள் .......மதுமாமி.......!   😁 

  • கருத்துக்கள உறவுகள்

குடியை விட முடியாது இருப்பவன் விடா குடியன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'தந்தி HANTHI Thanthi TV @ThanthiTV குவாட்டர் பாட்டிலில் கிடந்த 'பல்லி'... பார்த்ததும் அதிர்ந்து போன மதுப்பிரியர் #virudhachalam #drinking #wineshop #thanthitv Translate Tweet குவாடடா பாடடிலல கடந்த பலல பார்த்ததும் அதிர்ந்து போன மதுப்பிரியர் PATS தந்தி THANTHTY'

மதுப் போத்தலில்... செத்த பல்லி இருந்ததை பார்த்து, அதிர்ந்த  மதுப்பிரியர். 🤣

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'உலக சோம்பேறிகள் தினம்..!! வாய்ல அடிங்க. வாய்ல அடிங்க.. oneindia 1 ஓய்வு பிரியர்கள் தினம்னு சொல்லுங்க!!'

உலக சோம்பேறிகள் தினம்  ----  ஓய்வு பிரியர்கள் தினம். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.