Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சிறப்பு குழந்தை
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஹேமா ராகேஷ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

"நான் 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். என் குழந்தையை கருணை கொலை செய்து விடுமாறு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். அழுது அழுதே என் வாழ்க்கை தீர்ந்து விடுமோ என பயந்திருக்கிறேன். விவாகரத்து ஆன வலியும், என் குழந்தை குறித்து மற்றவர்களின் புரிதலும் மனச்சோர்வை அதிகரித்த காலத்தில், என்னிடம் துணையிருந்தது என் நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கை மட்டுமே என் வாழ்வில் சிறு வெளிச்சத்தை தந்தது. அந்த சிறு நம்பிக்கை வாழ்வதற்கான உந்துதலை அளித்தது. அந்த நம்பிக்கை மட்டுமே இன்று எனக்கு முழு துணையாக இருக்கிறது," என கண்களில் நம்பிக்கையோடு தெளிவாக பேசுகிறார் பார்கவி.

சென்னையை சேர்ந்தவர் பார்கவி. ஆன்லைனில் நகை விற்பனை செய்யும் தொழில்முனைவோராக இருக்கிறார். பார்கவிக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை. பெயர் லாமியா. லட்டு என செல்லமாக அழைக்கிறார்கள். சிறப்பு குழந்தையாக அறியப்படும் லட்டு, பிறக்கும் போதே பேசும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்திருக்கிறார். தாயின் வயிற்றில் இருக்கும் போதே தலையில் நீர் கோர்த்துக் கொண்டு இருந்ததால் பிறக்கும் போதே தலை பெரிதாக இருந்தது.

மருத்துவ ரீதியாக இன்னும் பல பிரச்னைகள் இருந்ததால் இந்த குழந்தையை கருணை கொலை செய்து விடுமாறு உடன் இருந்தவர்கள் வலியுறுத்த அதை முற்றிலும் மறுத்திருக்கிறார் பார்கவி. கடவுள் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கிறார். அதை பார்த்துக் கொள்வது என கடமை என்று கூறி இன்று தன் பெண்தான் தன்னுடைய முழு உலகம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையை கடத்துகிறார் பார்கவி.

"நான் சமையல் கலை நிபுணராக படித்து முடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு 2007 ஆம் வருடம் 28 வயதில் திருமணம் ஆனது. 2009 ஆம் வருடத்தில் எனக்கு லட்டு பிறந்தாள். அவள் வயிற்றில் இருக்கும் போது நாங்கள் 5 வது மாதத்தில் எடுக்க வேண்டிய ஸ்கேன் எடுக்கவில்லை. எங்களுக்கு யாரும் அதை வலியுறுத்தவில்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டோம். அதனால் அவளுக்கு தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலை பெரிதான பிரச்சனை குறித்து எங்களுக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது.

அவள் பிறக்கும் போது தலை பெரிதாக இருந்ததால் சிசேரியன் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்த, அதன் பிறகு தான் அவளுக்கு தலையில் இப்படி குறையாடு இருந்தது தெரிய வந்தது. அவள் பிறந்த 15 நிமிடங்களுக்கு அழவும் இல்லை. எந்த சத்தமும் போடவில்லை. அதன் பிறகு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு மேலும் மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் இருப்பதாக சொன்னார்கள்.

சிறப்பு குழந்தை

கணவர் கைவிட்டு சென்றார்

'என் குழந்தை நீண்ட நாட்கள் உயிர் வாழாது என சொன்னார்கள். ஒரு தாயாக எனக்கு பிரசவத்தில் ஏற்பட்ட வலியை விடவும் அவர்களின் வார்த்தைகள் அதிக வலியை கொடுத்தது' என சொல்லும் போது கண்கள் கொஞ்சம் ஈரமாகி போனது.

திருமண வாழ்வில் ஒரு பெண்ணிற்கு பிரச்சனை ஏற்பட்டால் அவளுடைய கணவனும், கணவரின் வீட்டாரும் தான் பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால் பார்கவிக்கு இப்படி பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் கணவர் வீட்டிலும் பிரச்சனை தொடங்கி இருக்கிறது. அதிலும் உடன் இருந்த சில நண்பர்களும் உறவினர்களும், இந்த குழந்தையை கருணை கொலை செய்து விடுமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.ஆனால் ஒரு போதும் பார்கவி கருணைக்கொலைக்கு சம்மதிக்கவில்லை. சில கசப்பான அனுபவங்களுக்கு பிறகு அவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் போய் முடிந்திருக்கிறது.

"லாமியா இப்படி பிறந்த பிறகு என் திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. இந்த உலகில் நான் இத்தனை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு வாழ வேண்டுமா என்ற எண்ணம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. ஏனென்றால் நான் கல்லூரி காலம் தொட்டே மிகவும் மகிழ்வான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பியவள். ஆனால் அது நடக்காமல் போய், எனக்கு மட்டும் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டுருப்பதாக எண்ணினேன். இனி எதற்காக நான் வாழ வேண்டும் என நினைத்து 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் நான் காப்பாற்றப்பட்டேன். இப்போது நினைத்தால் அது விளையாட்டாக தோன்றுகிறது. நான் அப்படி செய்திருக்க கூடாது என்று தோன்றுகிறது. ஆனால் இன்று எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. என் குழந்தைக்கு என்னால் முழு ஆதரவாக இருக்க முடிகிறது," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பார்கவி.

14 வயதானாலும் மனதளவில் ஒன்றரை வயது குழந்தைதான்

பார்கவி தன்னுடைய பெண்ணை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே முழு நேர வேலைக்கு செல்லவில்லை. அவர் இப்போது ஆன்லைனில் நகைகள் விற்பனை செய்யும் தொழில் முனைவோராக செயல்படுகிறார். லட்டுவிற்கு காலை எழுவது முதல் இரவு உறங்குவது வரை யாராவது உதவி தேவைப்படுகிறது. அது போல அவர் தினமும் 3 மணி நேரம் சிறப்பு பள்ளி வகுப்புகளுக்கு செல்கிறார். அங்கு பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி என பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் குழந்தைக்கு அளிக்கப்படுகிறது.

"லட்டுவிற்கு 14 வயது ஆனாலும் அவர் மனதளவில் இன்னும் ஒன்றரை வயது குழந்தையின் வளர்ச்சியில் தான் இருக்கிறார். கடந்த வருடம் தான் அவர் பருவம் எய்தியிருக்கிறார். என் குழந்தைக்கு நேரத்திற்கு சாப்பாடு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கதைகள் சொல்வது என அனைத்தையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். 3 நாட்களுக்கு ஒரு முறை தான் அவள் அதிக நேரம் தூங்குவாள். சில நாட்களில் 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே அவள் தூங்குவாள். நானும் அவளோடு சேர்ந்தே விழித்திருப்பேன்," என்றார்.

தன் பெற்றோர் தனக்கு பெரும் உதவியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடும் அவர், "அவர்கள் தான் அப்போதில் இருந்து இப்போது வரை எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். நான் சில சமயங்களில் மனம் சோர்ந்தாலும் எல்லா நேரங்களிலும் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டுவது அவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதேபோல் இந்த நேரத்தில் என்னுடைய குடும்ப நண்பர் சங்கீதா சுந்தரம் அவர்களையும் நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன். ஏன் என்றால் எனக்கு வாழ்க்கையில் சற்று பிடிப்பு ஏற்படுவதற்கும், என்னுடைய பிரச்சனைகளை நான் உறுதியோடு கடந்து வருவதற்கும், என் வாழ்க்கை பயணத்தில் சில தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் துணை நின்றிருக்கிறார். இவர்கள் இருவரும் இல்லை என்றால் நான் இவ்வளவு தூரம் நம்பிக்கையோடு பயணிப்பேன் என்ற எண்ணம் எனக்கு வந்திருக்காது" என கூறுகிறார் பார்கவி.

சிறப்பு குழந்தை

"வாழ்வின் அனைத்து கடினங்களையும் கடந்துவிட்டேன்"

பார்கவி தன்னுடைய பெண் குழந்தையை பார்த்துக் கொள்வதில் மிகக் கவனமாக செயல்படுகிறார். காரணம் என்ன தெரியுமா? லட்டுவிற்கு தினமும் 4 முறை வலிப்பு வரும். அப்போது தலையில் கனம் கூடியது போல் இருப்பதால் அவர் தானாவே சுவரில் போய் முட்டிக்கொள்வார். முடியை பிடுங்கிக் கொள்வார். வலி அதிகமானால் தரையில் படுத்து புரண்டு அழுவார். அதனால் பார்கவி தினமும் 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார். இந்த பிரச்சனைக்கு முழுவதுமாக தீர்வு இல்லாததால் இதை தினமும் அவர் சமாளித்தாக வேண்டும்.

"நான் வாழ்நாளுக்குமான அழுகையை சில ஆண்டுகளிலேயே அழுது முடித்தவள்... ஆனால் இப்போதெல்லாம் கண்ணீர் சுரப்பது நின்றுவிட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்வின் அனைத்து கடின நிலைகளையும் நான் கடந்து விட்டதாகவே உணர்கிறேன். என் மகளுக்கு நினைவு இல்லை என்றாலும் கடந்த பல ஆண்டுகளாக கொடுத்து வரும் பயிற்சியின் மூலம் சில வார்த்தைகளை புரிந்து கொள்கிறாள். பல கேள்விகளை புரிந்து கொண்டு, சத்தம் மூலமும், செய்கை மூலமும் அவ்வப்போது பதிலும் சொல்வாள். அப்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். "

"லட்டு சிறப்பு குழந்தையாக இருந்தாலும் அவர் பெரிதாக தொந்தரவு செய்யமாட்டார். விதவிதமான வெளிச்சங்கள், சத்தங்கள், பொம்மைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். சாலைகளில் அவரை வீல் சேரில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டே சுற்றி இருக்கும் சூழல் குறித்தும், மனிதர்கள் குறித்தும் கதைகள் சொல்லிக் கொண்டே போகும் போது அவளின் பார்வை விரிவடையும். இந்த கதைகள் அவளுக்கும் எனக்கும் என்றைக்கும் சலிப்பை ஏற்படுத்தியதில்லை," என்று புன்னகைக்கிறார் பார்கவி.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே அளவுகோலை வைப்பதில்லை. அவரவருக்கு என்ன இருக்கிறதோ அதை எதிர் கொண்டு மகிழ்வான வாழ்வை வாழ்வதே நிறைவான வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது பார்கவியின் கதை.

 

https://www.bbc.com/tamil/articles/c51pd522v4ko

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஜெனரிசிஸ்ராக (geneticist).. வேலை செய்த போது.. மருத்துவ வழிகாட்டலுக்கு இணங்க.. இப்படியான பிறப்புரிமைசார் குறைப்பாடுகளோடு குழந்தை ஒன்று உருவாகி இருந்தால்.. பெற்றோருக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்படும்.

ஒன்று தொடர்ந்து குழந்தையை தங்க வைத்து பெற்றெடுத்து வளர்ப்பது. அதில் உள்ள சிக்கல்கள் விளங்கப்படுத்தப்படும்.

இரண்டு.. பெற்றோர் முழுமையாக விரும்பும் பட்சத்தில் கருக்கலைப்புச் செய்ய சொல்லப்படும். அதுவும் குறித்த காலத்துள் தான் இது சாத்தியம்.

ஆனால் ஒருபோதும் பெற்றோர் விருப்புக்கு இணங்க பிறந்த குழந்தையை அது குறைபாடோடு தான் பிறக்கும் என்று தெரிந்திருந்தும் பெற்ற பிள்ளையை கருணைக்கொலைக்கு பரிந்துரைப்பதில்லை.

கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கும் போதே பல பெற்றோர் குறிப்பாக குழந்தையை சுமக்கும் பெண்கள்.. மிகவும் துயரோடும் அழுதும்.. தமது வேதனையை வெளிப்படுத்துவதை கண்டு மனம் நொந்திருக்கிற சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இது எல்லாம் நாட்டிலும் உள்ள ஒரு பொதுப்பிரச்சனை.

ஆனால்.. இந்த பெண்ணுக்கு கட்டிய கணவர் கூட அவரைப் புரிந்து கொள்ளவில்லை என்பது.. இவர் வாழும் சமூகத்தில் உள்ள அறிவியல்.. சமூக அறிவின்மையையே இனங்காட்டுகிறது.

தமிழகம் உட்பட.. சும்மா சீரியல்களை எடுத்து சமூகத்துக்கு உதவாத விடயங்களை நாட்கணக்காகக் காட்டுவதைக் காட்டிலும் சீரியல்களை சமூக மற்றும் அறிவியல் அறிவூட்டப் பயன்படுத்துவது கூடிய சமூக விழிப்புணர்வுக்கும் அறிவூட்டலுக்கும் வாய்ப்பளிக்கும். 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nedukkalapoovan said:

இந்த பெண்ணுக்கு கட்டிய கணவர் கூட அவரைப் புரிந்து கொள்ளவில்லை என்பது.. இவர் வாழும் சமூகத்தில் உள்ள அறிவியல்.. சமூக அறிவின்மையையே இனங்காட்டுகிறது.

இவர்போன்றவர்களது கருணை உள்ளத்தினால்தானே உலகம் வாழ்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாய்ப்பாசம்.

பெற்ற தாய் இருக்கும் மட்டும் அன்பாக சீராட்டி பார்த்துக்கொள்வார். அதன் பின் அந்தப்பிள்ளை எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவிக்கப்போகின்றதோ யாருக்கு தெரியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nochchi said:

இவர்போன்றவர்களது கருணை உள்ளத்தினால்தானே உலகம் வாழ்கிறது.

 

1 hour ago, குமாரசாமி said:

தாய்ப்பாசம்.

பெற்ற தாய் இருக்கும் மட்டும் அன்பாக சீராட்டி பார்த்துக்கொள்வார். அதன் பின் அந்தப்பிள்ளை எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவிக்கப்போகின்றதோ யாருக்கு தெரியும்? 

எனக்குத் தெரிந்த ஒரு  அம்மாவுக்கு 90 வயதை நெருங்குகின்றது.
விசேட தேவை உடைய அவரின் மகளுக்கு 60 வயது.
மகள் பிறந்தநாளில் இருந்து, இன்று வரை… தினமும் கவனித்துக் கொண்டே வருகின்றார்.
மகளை கவனிப்பதற்காகவே, ஆண்டவன் இவரை இன்னும் ஓரளவு
ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதாகவே தோன்றுகின்றது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

தாய்ப்பாசம்.

பெற்ற தாய் இருக்கும் மட்டும் அன்பாக சீராட்டி பார்த்துக்கொள்வார். அதன் பின் அந்தப்பிள்ளை எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவிக்கப்போகின்றதோ யாருக்கு தெரியும்? 

இந்தக் கவலை எல்லாப் பெற்றோருக்கும் குறிப்பாக தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள முடியாத இயலாமை உடைய பிள்ளைகளை உடையோருக்கு இருக்கிறது.

2 hours ago, தமிழ் சிறி said:

 

எனக்குத் தெரிந்த ஒரு  அம்மாவுக்கு 90 வயதை நெருங்குகின்றது.
விசேட தேவை உடைய அவரின் மகளுக்கு 60 வயது.
மகள் பிறந்தநாளில் இருந்து, இன்று வரை… தினமும் கவனித்துக் கொண்டே வருகின்றார்.
மகளை கவனிப்பதற்காகவே, ஆண்டவன் இவரை இன்னும் ஓரளவு
ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதாகவே தோன்றுகின்றது.

புலர் அறக்கட்டளை உருவாக்கும் எண்ணம் பெற்றோர் இல்லாத இயலாமை உடையோரை பாதுகாக்கும் நம்பிக்கையோடு தொடங்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேறும் என நம்புகிறேன்.

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

புலர் அறக்கட்டளை உருவாக்கும் எண்ணம் பெற்றோர் இல்லாத இயலாமை உடையோரை பாதுகாக்கும் நம்பிக்கையோடு தொடங்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேறும் என நம்புகிறேன்.

ஏராளன்... மிகப் பெரிய, பொறுப்பான ஒரு திட்டம்.
வேதனையில், வருந்திக் கொண்டு இருக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கொடுக்கும்.  
சிறப்பாக அது நிறை வேற பிரார்த்திக்கின்றேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏராளம் உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.......!  💐

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.