Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, nunavilan said:

பாகிஸ்தானுக்கு இந்த சாத்து சாத்தி விட்டாங்கள் ஆப்கான் குழு. ஆனாப்பட்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வென்றவர்களுக்கு சிறிலங்காவை வெல்வது அவ்வளவு கஸ்டமில்லை.
ஆவுஸ்திரேலியா முதல் நாலு பேருக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ஆன‌

ம‌ச்சான் .  க‌ரும்பு மாப்பிளை க‌லைஞ‌ன் / ம‌ற்றும் அர்ச்சுன் ஜ‌யா

2012 அந்த‌ கால‌ப் ப‌குதியில் யாழில் எழுதினேன்  அப்கானிஸ்தான் அணிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு என்று

க‌லைஞ‌ன்  அண்ணா வ‌ந்து  ந‌க்க‌ல் அடிச்சார் பையா உவ‌ங்க‌ள் ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே😁 /

2012 உல‌க‌ கோப்பையில் பைய‌னை ந‌ம்பி அப்கானிஸ்தானை தெரிவு செய்த‌தாய் அர்ச்சுன் ஜ‌யா எழுதி இருந்தார்............2012ம் ஆண்டு இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் இங்லாந் அணிய‌ அப்கானிஸ்தான் வெல்லும் என்று க‌ணித்தேன் ஆனால் அந்த‌ ம‌ச்சில் அப்கானிஸ்தான் ப‌டு தோல்வி

11வ‌ருட‌ம் க‌ழித்து ம‌லை போல் ப‌ல‌மாய் இருந்த‌ இங்லாந்தை அப்கானிஸ்தான் வென்ற‌து பெரும் ம‌கிழ்ச்சி 🥰🙏🙈


 

  • Like 2
  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னையில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் - ஆட்ட நாயகன் பேச்சால் என்ன சர்ச்சை?

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 அக்டோபர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அசத்தலான பேட்டிங், நெருக்கடி தரும் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றால், சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான் அணி.

ஏற்கெனவே நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஷாக் அளித்த ஆப்கானிஸ்தான், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியையும் சாய்த்து மற்றொரு அதிர்ச்சியை உலக அணிகளுக்கு அளித்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடந்த அதே ஆடுகளம்தான் என்பதால், பாபர் ஆசம் யோசிக்காமல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷஃபீக், இமாம் உல் ஹக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான் 2வது ஓவரிலிருந்து சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தது.

வேகப்பந்துவீச்சில் பவுண்டரி அடித்த பாகிஸ்தான் பேட்டர்கள், சுழற்பந்துவீச்சைச் சமாளித்து ஆடுவதற்கு சிரமப்பட்டனர். அதிலும் முஜிபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய இருவரும் பாகிஸ்தான் ரன்ரேட்டை கட்டிப் போட்டனர்.

 

பவர் ப்ளேயில் முதல் சிக்ஸர்

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அஸ்மத்துல்லா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் நவீன் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த பாபர்ஆசம், ஷஃபீக்குடன் இணைந்தார்.

பவர் ப்ளே ஓவரில் 2023ம் ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் அணி சிக்ஸரே அடிக்காமல் இருந்தது. மற்ற அணிகள் இந்த ஆண்டில் இதுவரை சராசரியாக 22 போட்டிகள் வரை விளையாடி, பவர் ப்ளேயில் குறைந்தபட்சம் ஒரு சிக்ஸராவது அடித்துள்ளனர்.

ஆனால், பாகிஸ்தான் இதுவரை ஒரு சிக்ஸர் கூட அடிக்காத நிலையில் முதல்முறையாக சிக்ஸர் அடித்தது. பவர்ப்ளே முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்தது.

அஸ்மத்துல்லா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் நவீன் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பாபர்ஆசம், ஷஃபீக்குடன் இணைந்தார்.

பாபர் ஆசம் களமிறங்கும் போது ஒலித்த விக்ரம் வேதா படப் பாடல்

பாபர் ஆசம் களத்துக்குள் வந்த பின்பும் பாகிஸ்தான் ரன்ரேட் பெரிதாக உயரவில்லை. பாபர் ஆசம் மைதானத்துக்குள் நுழையும் போது, விக்ரம்-வேதா திரைப்படத்தின் பின்னணி இசை ஒலித்தது. இதை ரசிகர்களும் ரசித்து ஆரவாரம் செய்தனர், சில ரசிகர்கள் டி-ஜேவிடம் சென்று வேறு பாடல்களை இசைக்குமாறு கோரியவாறு ரசித்தனர்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சுக்கு பாபர் ஆசமும், ஷஃபீக்கும் தொடர்ந்து ரன்கள் சேர்க்க சிரமப்பட்டனர். ஷபீக் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். நூர்அகமது வீசிய 23-வது ஓவரில் அப்துல்லா ஷஃபீக் 58 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

நூர்அகமது வீசிய 25-வது ஓவரில் மற்றொரு விக்கெட் விழுந்தது. ரிஸ்வான் வந்தவேகத்தில் 8 ரன்னில் முஜிபுர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

20 முதல் 30 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்டர்களை திணறவிட்டனர். முதல் 20 ஓவர்கள் வரை சராசரியாக 55ரன்கள் சேரத்த பாகிஸ்தான், 20 முதல் 30 ஓவர்கள் வரை 39 ரன்கள்தான் சேர்த்தனர்.

குறிப்பாக இளம் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது பாகிஸ்தான் பேட்டர்களுக்கு தண்ணிகாட்டினார் என்றேதான் கூற வேண்டம். அவருடைய பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் பேட்டர்கள் திணறினர்.

 

ஆப்கானிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சு

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அரைசதம் அடித்த பாபர் ஆசமிற்கு சென்னை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆதரவைத் தெரிவித்தனர்.

பாபர் ஆசமுக்கு சென்னை ரசிகர்கள் அளித்த ஆரவாரம்

இந்த உலகக் கோப்பைத் தொடரில் நடுப்பகுதி ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகவே பந்துவீசி வருகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஆப்கானிஸ்தான் நடுப்பகுதி ஓவர்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. சராசரியாக 5.31 ரன்கள்தான் வழங்கியுள்ளது. சவுத் ஷகீல் 25 ரன்னில் முகமது நபி பந்துவீச்சில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பாபர் ஆசம் 68 பந்துகளில் அரைசதம் அடித்தார், அரைசதம் அடித்த பாபர் ஆசமிற்கு சென்னை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆதரவைத் தெரிவித்தனர். சவுத் ஷகீல் 25 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது நபி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பாபர ஆசம் 74 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

38 ஓவர்களை வீசிய சுழற்பந்துவீச்சாளர்கள்

பாகிஸ்தான் கடைசி 10 ஓவர்களில்தான் ஓரளவு ரன்களைச் சேர்த்தது. சதான் கான்(40), இப்திகார் அகமது(40) ரன்கள் சேர்த்தனர்.கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நூர் அகமது, இப்திகார், சதாப் விக்கெட்டை வீழ்த்தினார்.

50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், நவீன் உல்ஹக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குறிப்பாக முகமது நபி 10 ஓவர்கள் வீசி 31 ரன்கள்தான் வழங்கி ஒருவிக்கெட்டை வீழ்த்தினார்.

மற்ற சுழற்பந்துவீச்சாளர்களான ரஷித்கான், நூர் அகமது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சராசரியாக 4.5 ரன்களே வழங்கி பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தனர்.

38 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களே பந்துவீசினர். இதில் 114 பந்துகள் டாட்பந்துகளாகும். அதாவது 19 ஓவர்களில் ரன் ஏதும் வழங்கவில்லை. சுழற்பந்துவீச்சாளர்கள் வீசிய 38 ஓவர்களில் 19 ஓவர்களில் ரன் ஏதும் பாகிஸ்தான் பேட்டர்கள் எடுக்கவில்லை.

 

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து விளாசிய ஆப்கானிஸ்தான் அணி

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குர்பாஸ், ஜாத்ரன் இருவரும் அற்புதமான தொடக்கத்தை அளித்தனர்

283 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. குர்பாஸ், ஜாத்ரன் இருவரும் அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து விளாசிய குர்பாஸ், ஜாத்ரன் இருவரும் ரன்ரேட்டை குறையவிடாமல் 6 ரன்னில் கொண்டு சென்றனர். 8 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 50 ரன்களையும், 10 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 60 ரன்களையும் சேர்த்தது.

 

நிதானமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி பேட்டர்கள்

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குர்பாஸ் 65 ரன்கள் சேர்த்தநிலையில் அப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

ஜாத்ரன் 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய குர்பாஸ் 38 பந்துகளில் அரைசதம் விளாசினார். 15.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 100 ரன்களையும், 24.5 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டினர்.

முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்த நிலையில் குர்பாஸ், ஜாத்ரன் கூட்டணி பிரிந்தது, அருமையான அடித்தளத்தை இருவரும் அமைத்துக் கொடுத்தனர். குர்பாஸ் 65 ரன்கள் சேர்த்தநிலையில் அப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த ரஹ்மத் ஷா, ஜாத்ரனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினர். தேவைப்படும் நேரத்திலும், மோசமான பந்துகளைத் தேர்ந்தெடுத்து இருவரும் பவுண்டரிகளை விளாசினர். அதேநேரம் விக்கெட்டுகளுக்கு இடையே ஒரு ரன், 2 ரன்களைச் சேர்ப்பதிலும் இருவரும் தவறவில்லை.

 

வெற்றியை நெருங்கிய ஆப்கானிஸ்தான் அணி

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் களத்தில் வலுவாக நின்றதால், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது.

முதல் விக்கெட்டை வீழ்த்தியபின், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாத்ரன், ரஹ்மத்ஷா கூட்டணியைப் பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. ஜாத்ரன் 87 ரன்கள் சேர்த்தநிலையில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து, ஜாத்ரன், ரஹ்மத்ஷா இருவரும் பிரிந்தனர்.

அடுத்துவந்த கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி, ரஹ்மத் ஷாவுடன் சேர்ந்தார். இருவரும் இணைந்து ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றனர். 38 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களை எட்டியது. நிதானமாக பேட் செய்த ரஹ்மத் ஷா 58 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் களத்தில் வலுவாக நின்றதால், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. அழுத்தம் அதிகரிக்க, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தவறு செய்து மோசமான பந்துவீச்சை அவ்வப்போது வீசினர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பவுண்டரிகளை விளாசி ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் வெற்றியை நெருங்கினர்.

 

வெற்றியை தன்வசப்படுத்திய ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

49-வது ஓவரில் 3 ரன்கள் சேர்த்தநிலையில் ஷாகிதி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

கடைசி 5 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 30 ரன்கள்தான் தேவைப்பட்டது. விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் திருப்புமுனையை ஏற்படுத்த முடியும் என்ற கட்டாயத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

ஆனால், ரஹ்மத் ஷா, ஷாஹிதி இருவரும் பேட் செய்தவிதம் அதற்கு வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டது. உசாமா மிர் வீசிய 46-வது ஓவரில் ஷாஹிதி பவுண்டரி உள்ளிட்ட 11 ரன்கள் சேர்ததார். 47-வது ஓவரில் 8 ரன்கள் சேர்த்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது.

ஹசன் அலி வீசிய 48-வது ஓவரில் ரஹ்மத் ஷா சிக்ஸர் விளாசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். வெற்றிக்கு 12 பந்துகளில் 4 ரன்களே ஆப்கானிஸ்தானுக்குத் தேவைப்பட்டது. 49-வது ஓவரில் 3 ரன்கள் சேர்த்தநிலையில் ஷாகிதி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றனர். ரஹ்மத் ஷா 77 ரன்களிலும், ஷாகிதி 48 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 96 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

ஆப்கன் வெற்றிக்கு வழிவகுத்தது எது?

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்களும், பேட்டர்களுமே முக்கியக் காரணம். அதிலும் தொடக்க விக்கெட்டுக்கு குர்பாஸ், ஜாத்ரன் அமைத்துக் கொடுத்த அடித்தளம், 3வது விக்கெட்டுக்கு ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா சேர்த்த 96 ரன்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். ஆட்டநாயகன் விருது இப்ராஹிம் ஜாத்ரனுக்கு வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங்கில் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தினர். அதிலும் இந்த ஆட்டத்தில் 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லாவின் முடிவு துணிச்சலானது. கேப்டன் ஹஸ்மதுல்லா வைத்த நம்பிக்கையை 4 சுழற்பந்துவீச்சாளர்களும் நிறைவேற்றிக் கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியிடம் இருந்து இவ்வளவு உலகத்தரம் வாய்ந்த, நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சை பாகிஸ்தான் பேட்டர்கள் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதிலும் முகமது நபியின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸாக இருந்தது.

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிக டாட் பந்துகள்

இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே அதிகமான டாட் பந்துகள் விட்டாலும், பவுண்டரி, சிக்ஸர் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி எடுத்ததால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 114 ரன்கள் டாட் பந்துகள் விட்டனர் என்றால், ஆப்கானிஸ்தான் அணி 144 பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. சிக்ஸர் பவுண்டரிகள் மூலமே ரன்களைச் சேர்த்தனர். 3 சிக்ஸர்களையும், 28 பவுண்டரிகளையும் விளாசினர்.

பாகிஸ்தானுக்கு கைகொடுத்த 10 ஓவர்கள்

பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் இந்த ஆட்டத்தில் படுமோசமாக இருந்தது. கடைசி 10ஓவர்களில் இப்திகார், சதாப்கான் அதிரடியாக ஆடாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஸ்கோர் 220 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

பாகிஸ்தான் பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடிப் பழகியிருக்கலாம் என்றாலும், இதுபோன்ற முதல்தரமான, நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பேட் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிலும் நூர் முகமது போன்ற ரிஸ்ட் ஸ்பின்(சினா மென்) பந்துவீச்சு பாகிஸ்தான் பேட்டர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.

பீல்டிங்கில் பாகிஸ்தான் படுமோசம்

பீல்டிங் என்றாலே பாகிஸ்தானைக் கண்டு ரசிகர்கள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். அதே கதைதான் இன்றும் நடந்தது. பாகிஸ்தான் வீரர்கள் கேட்ச்சைக் கோட்டைவிட்டது, பவுண்டரி எல்லையில் பவுண்டரியை வழங்கியது, சிங்கிள் ரன்களை வழங்கியது என பீல்டிங் பயிற்சி எடுக்காமல் தெருவில் விளையாடும் சிறுவர்கள் போன்று மோசமாக பீல்டிங் செய்தனர். சர்வேத போட்டிகளில் பங்கேற்று, இப்படி கவனக்குறைவான, ரன்களை கோட்டை விடும் பீ்ல்டிங் பாகிஸ்தான் அணியின் மோசமான பலவீனம்.

குறிப்பாக பாபர் ஆசம், குனிந்து, விழுந்து பந்தைத் தடுப்பதற்கு மிகவும் யோசித்தார். பந்து அவரை கடந்து சென்றால்கூட பிடிக்க முயற்சி செய்யாமல் அடுத்த பீல்டரை நோக்கி கையை உயர்த்துவது, கோபப்படுவது என கேப்டனே மோசமான பீல்டிங்கிற்கு உதாரணமாக இருந்தார்.

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தரமில்லாத சுழற்பந்துவீச்சு

பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி சுமார் ரகமாகத்தான் இருந்தது. பாபர் ஆசம் தனிப்பட்ட முறையி்ல் சிறந்த பேட்டராக இருந்தாலும், இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் கேப்டனுக்குரிய பொறுப்புணர்வுடன் பெரிய ஸ்கோருக்கு நகர்த்த வேண்டும். ஆனால், பாபர் ஆசம் பேட்டிங் மிகுந்த மந்தமாக இருந்தது.

சென்னை ஆடுகளத்தைப் பற்றி பாபர் ஆசமிற்கு நன்கு தெரியும். இருப்பினும் கூடுதல் சுழற்பந்துவீச்சாளருடன் வராமல் வழக்கமான பந்துவீச்சாளர்களுடனே களமிறங்கினார். பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களும், சேப்பாக்கம் போன்ற ஆடுகளத்தில் பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தாமல் ஒரே மாதிரியாகப் பந்துவீசியது, ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு அல்வா சாப்பிட்டதுபோன்று இருந்தது.

சென்னையில் ரசிகர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்?

சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி என்பதால், ஆப்கானிஸ்தான் அணி 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஆட்டம் தொடங்கும்போது, 15 ஆயிரம் ரசிகர்கள் இருந்தநிலையில் மாலையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமாகியது.

சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் இருந்ததைவிட ஆப்கானிஸ்தான் வீரர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். ஆப்கானிஸ்தான் தேசியக் கொடி ஆங்காங்கே தெரிந்தது, ஆப்கானிஸ்தான் ஜெர்ஸி அணிந்த ரசிகர்களும் இருந்தனர். அதேநேரம், பாபர் ஆசம், ஹசன் அலி, ஹரிஸ் ராஃப் ஆகியோருக்கும் சென்னை ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.

சென்னை மண்ணில் வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

இதுவரை பாகிஸ்தானுடன் 7 முறை மோதிய ஆப்கானிஸ்தான் ஒருமுறை கூட வென்றதில்லை. ஆனால், 8-வது முறையாக இன்று மோதி வெற்றி பெற்று வரலாற்றை திருத்தி எழுதியது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 2வெற்றிகள், 3 தோல்விகள் என மொத்தம் 4 புள்ளிகளுடன், 6-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் சற்று மேலே பாகிஸ்தான் இருப்பதால், ஆப்கானுக்கு மேலே 5வது இடத்தில் நீடிக்கிறது. இரு அணிகளுமே நிகர ரன்ரேட்டில் மைனஸில்தான் இருக்கிறார்கள்.

ஆட்டநாயகன் ஜாத்ரன் கூறியது என்ன?

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

87 ரன்கள் சேர்த்து ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு வழிவகுத்த தொடக்க வீரர் இப்ராஹிம் ஜாத்ரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் பேசிய அவர், "பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்ட மக்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்" என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் நீடித்த உள்நாட்டுப் போரால் பாகிஸ்தானுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்த, ஆவணங்கள் இல்லாத அனைவரும் நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தான் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

அதன் பின்னணியில் ஜாட்ரனின் பரிசளிப்பு விழா பேச்சு கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவரது பேச்சை பகிர்ந்து தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cprxpp3z8zxo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆப்கானிஸ்தானுடன் தோற்ற இந்த அணியா நம்பர் ஒன்? பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கொந்தளிப்பு

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

43 நிமிடங்களுக்கு முன்னர்

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் தோல்வியடைந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த 3வது தோல்வி, அந்த அணியின் அரையிறுதி பாதையை கடினமானதாக மாற்றியிருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தோல்விகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வி, நிலைமை இன்னும் மோசமாக்கியுள்ளது.

இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நோக்கி கடுமையான கேள்வி எழுப்பப்படுகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

புள்ளிப்பட்டியலில் முந்திய ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலகக் கோப்பைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இப்போது நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து கடைசியில் உள்ளது. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானைத் தவிர, இங்கிலாந்து அணியையும் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது. இதற்கு முன், இரு அணிகளும் ஏழு முறை மோதியதில், ஆப்கானிஸ்தான் அனைத்திலும் தோல்வியடைந்திருந்தது.

ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பையில் அந்த அணி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். நடப்புத் தொடரில் பெற்ற இரண்டு வெற்றிகளை தவிர்த்து, 2015ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான்.

கோபமடைந்த ஷோயப் அக்தர்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது இந்த தோல்வி எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, என்கிறார் அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர்.

பாகிஸ்தான் அணி சீராக இல்லையென்றும், கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்ட விதம்தான் இதற்கு காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், “ஆப்கானிஸ்தான் மக்கள் எங்கள் சகோதரர்கள், நாங்கள் எங்கள் சகோதரர்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம், இப்ராஹிமின் ஆட்டத்தை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உலக கிரிக்கெட் அரங்கில் அவர் தன்னை நிரூபித்துள்ளார்,” என்றார்.

பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த நிலையை எட்டியுள்ளது என்று ஷோயப் அக்தர் கூறினார்.

“கடந்த ஐம்பது வருடங்களாக ஆப்கானிஸ்தான் மக்கள் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர். அங்கே கிரிக்கெட் விளையாடுவதற்கான முறையான உள் கட்டமைப்பு இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கிறது. இத்தனைக்கும் நடுவே அந்த அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை ஆப்கானிஸ்தான் காட்டியுள்ளது.”

நேற்றைய ஆட்டம் குறித்து தொடர்ந்து பேசிய அவர், “ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் நம்மை விட சிறப்பாகி வருகிறது. நாணயத்தின் மதிப்பு நம்மை விட மேம்பட்டு வருகிறது. இப்போது கிரிக்கெட்டும் நம்மை விட சிறப்பாகியுள்ளது. உங்கள் அணியிடம் உற்சாகம், ஆர்வம் என அனைத்தும் உள்ளது. இதில் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், சரியான நபரை சரியான இடத்தில் களமிறக்குவதுதான். அதுவே. உங்கள் வெற்றியின் ரகசியம்,” என்றார்.

பாகிஸ்தான் அணியின் இந்த நிலைக்கு கிரிக்கெட் வாரியமே பொறுப்பு என்று கூறிய ஷோயப் அக்தர், "கிரிக்கெட்டில் அனுபவமே இல்லாதவர்கள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

‘எங்கள் வீரர்கள் தலா 8 கிலோ சாப்பிடுகிறார்கள்’

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளுக்கான சர்வதேச தர வரிசையில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அணியின் தற்போதைய ஆட்டத்தை பார்க்கும் போது, ‘நம்பர் ஒன் அணி’ என்று அழைக்கக் கூடிய வகையில் பாகிஸ்தானின் செயல்பாடு இல்லை" என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு தொலைக்காட்சியான ஏ ஸ்போர்ட்ஸில், நேற்றைய போட்டிக்கு பிறகு நடந்த நிகழ்ச்சியின் போது வாசிம் அக்ரம் இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த 6-8 மாதங்களாக பாகிஸ்தான் அணியை நம்பர் ஒன் என்று கேள்விப்பட்டு வருகிறோம். இது என்ன மாதிரியான நம்பர் ஒன்? ஆப்கானிஸ்தான் அணியின் அணுகுமுறை மற்றும் திறமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர்களின் ஆட்டம் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது. இதற்கு முன்பு உலக சாம்பியனை வீழ்த்தியது. இப்போது பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ளது.”

அணியின் உடற்தகுதி குறித்த பிரச்னையை எழுப்பிய வாசிம் அக்ரம், “எங்கள் அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி தேர்வு நடக்கவில்லை. வீரர்களின் முகத்தைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் தலா 8 கிலோ சாப்பிடுவது போல இருக்கிறது. நிஹாரியை(மாமிசம் கொண்டு சமைக்கப்படும் ஓர் உணவு) அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்பது தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தியும் வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலியும் வீரர்களின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பினார்.

“அணியின் உடற்தகுதி குறித்து எந்த திட்டமிடலும் இல்லை. பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று வந்ததால் வீரர்கள் சோர்வாக காணப்படுகின்றனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

 

கிரிக்கெட் வாரியத்தை சாடிய வீரர்கள்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணியின் தற்போதைய நிலைக்கு கிரிக்கெட் வாரியமே பொறுப்பு என்று ஷோயப் மாலிக் கூறினார். அவர் கூறுகையில், “நல்ல அணிகளுடன் போட்டியிட நாங்கள் தயாராக இல்லை என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. எங்கள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் மோசமடைந்துள்ளது என்பது அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது,” என்றார்.

“நேற்றைய போட்டியின் போது ஆட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒருபுறம், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். மறுபுறம், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.” என்று அவர் கூறினார்.

“ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிங்கிள் எடுப்பதற்கு கூட கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது,” பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரமீஸ் ராஜா, “உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் தோல்வி அந்த அணிக்கு விழுந்த கடுமையான அடியாகும். இந்தத் தோல்விக்குப் பிறகு பாபர் ஆசம் நிலைகுலைந்து போனார்,” என்று தெரிவித்தார்.

“பாகிஸ்தான் அணி இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததில்லை, ஆனால் இந்த வெற்றிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதியானது. சென்னை ஆடுகளத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று. அதை ஆப்கானிஸ்தான் நிகழ்த்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் இப்படியே தொடர்ந்தால், நிச்சயம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற வாய்ப்புகள் அதிகம்.” என்று ரமீஸ் ராஜா கணித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cn085vvxjd8o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Eppothum Thamizhan

தென் ஆபிரிக்கா இந்த‌ முறை கோப்பை தூக்குவின‌மா ந‌ண்பா

எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இந்த‌ உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்காவின் விளையாட்டு மிக‌ சிற‌ப்பு

தென் ஆபிரிக்கா சிமி பின‌லுக்கு போவ‌து உறுதியாகிட்டு🥰🙏........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, பையன்26 said:

@Eppothum Thamizhan

தென் ஆபிரிக்கா இந்த‌ முறை கோப்பை தூக்குவின‌மா ந‌ண்பா

எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இந்த‌ உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்காவின் விளையாட்டு மிக‌ சிற‌ப்பு

தென் ஆபிரிக்கா சிமி பின‌லுக்கு போவ‌து உறுதியாகிட்டு🥰🙏........

எனக்கு தென்னாபிரிக்கா கடைசிவரை போய் விளையாட வேண்டும் என்றொரு ஆசை.

பொறுத்திருப்போம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனக்கு தென்னாபிரிக்கா கடைசிவரை போய் விளையாட வேண்டும் என்றொரு ஆசை.

பொறுத்திருப்போம்.

இந்த‌ முறை ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு அதை தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ள் திற‌மைய‌ வெளிக்காட்டி கோப்பைய‌ தூக்கினால் ம‌கிழ்ச்சி

இந்த‌ முறை தென் ஆபிரிக்கா வீர‌ர்களின் ப‌ந்து வீச்சு மிக‌ அருமை🥰🙏..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெதர்லாந்துடன் தோற்ற அளவில் தென் ஆபிரிகாவின் பலவீனம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. இறுதி ஆட்டத்துக்கு தென் ஆபிரிக்கா செல்லுமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிரணிகளை பேரழிவில் தள்ளும் தென் ஆப்ரிக்காவின் புதிய உத்திக்குப் பலியான வங்கதேசம்

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 24 அக்டோபர் 2023

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா கடைபிடிக்கும் எதிரணிகளை பேரழிவில் தள்ளும் புதிய உத்திக்கு வங்கதேசம் பலியாகியிருக்கிறது. தென் ஆப்ரிக்க அணி மலையென குவித்த ரன்களை விரட்டிய வங்கதேச அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தாலும் மெஹ்மத்துல்லா மட்டும் தனி ஒருவனாக போராடினார். ஆனாலும், அது தோல்வி வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. முடிவில் தென் ஆப்ரிக்க அணி 4-வது வெற்றியை ருசித்து, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

தென் ஆப்ரிக்கா கடைபிடிக்கும் புதிய உத்தி என்ன? வங்கதேசத்திற்கு எதிராக ஜொலித்த வீரர்கள் யார்? தொடக்க வீரர் டி காக் படைத்துள்ள புதிய சாதனை என்ன?

தடுமாறிய தென் ஆப்ரிக்கா

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம், மும்பை ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என்பதைப் புரிந்து கொண்டு யோசிக்காமல் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தைப் பயன்படுத்திய வங்கதேச பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு பந்துவீச்சில் நெருக்கடி அளித்தனர்.

குயின்டன் டி காக், ஹென்ட்ரிக்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினாலும் ரன் சேர்க்கத் தடுமாறினர். இஸ்லாம் வீசிய 7-வது ஓவரில் ஹென்ட்ரிஸ் 12 ரன்கள் சேர்த்த நிலையில் கிளீன்போல்டாகி வெளியேறினார். சிறிது நேரத்தில் மெஹதி ஹசன் ஓவரில் கால் காப்பில் வாங்கி வென்டர் டூசென் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

10 ஓவர் பவர் ப்ளே முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 3வது விக்கெட்டுக்கு டி காக்குடன் கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை வேகமாகச் சேர்க்க வேண்டும் என்ற பரபரப்பு இன்றி பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்தினர்.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிதானமாக ரன் சேர்ப்பு

வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீசிய மோசமானப் பந்துகளை மட்டும் சிக்ஸருக்கும் , பவுண்டரிக்கும் டி காக் விரட்டினார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. டிடீ காக் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

20 முதல் 30 ஓவர் வரை டி காக், மார்க்ரம் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தியதால் 66 ரன்கள் கிடைத்தன. கேப்டன் மார்க்ரம் 57 பந்துகளில் அரைசதம் அடித்தார். 30 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தது.

நிதானமாக பேட் செய்த மார்க்ரம் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் கிளீன்போல்டாகி பெவிலியன் திரும்பினார். 3வது விக்கெட்டுக்கு டி காக், மார்க்ரம் ஜோடி,131 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து அதிரடி வீரர் ஹென்றிக் கிளாசன் களமிறங்கி, டி காக்குடன் சேர்ந்தார். இதன்பின்புதான் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரன் ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி காக் 3வது சதம்

பொறுப்புடன் பேட் செய்த டி காக் 101 பந்துகளில் சதம் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் டி காக் அடித்த 3வது சதமாகும். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் சாதனையை(2சதம்) டீ காக் முறியடித்தார்.

கிளாசன் களத்துக்கு வந்தபின், ஓவருக்கு 10 ரன்ரேட் வீதம் ரன்கள் சேர்க்கப்பட்டதால், தென் ஆப்பிரிக்க ரன்ரேட் எகிறத் தொடங்கியது. 35.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 200 ரன்களைத் தொட்டது. 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்திருந்தது.

ராக்கெட் வேகத்தில் ரன் ரேட்

கடைசி பவர்ப்ளே 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் கிளாசன், டி காக், மில்லர் ஆகிய மூவரும் வங்கதேச பந்துவீச்சை வெளுத்துவாங்கினர். ஓவருக்கு குறைந்தபட்சம் 10 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி சேர்த்தது, குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கப்பட்டதால் ரன் ரேட் வேகமாக அதிகரித்தது.

ஷகிப் அல்ஹசன் வீசிய 43வது ஓவரில் டி காக் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்து 22 ரன்கள் சேர்த்தார் 150 ரன்களை எட்டினார். டி காக் தனது 150வது ஒருநாள் போட்டியில் களம் கண்ட நிலையில் 150 ரன்களை எட்டினார்.

ஷெரிபுல் இஸ்லாம் வீசிய 44வது ஓவரையும் டி காக், கிளாசன் நொறுக்கினர். டி காக் இரு பவுண்டரிகள், கிளாசன் ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச பந்துவீச்சை விளாசித் தள்ளிய கிளாசன் 34 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீ காக் 174 ரன்கள்(140 பந்துகள், 15 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்) சேர்த்த நிலையில் ஹசன் மெகமுத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு டி காக் - கிளாசன் ஜோடி 142 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிளாசன் ருத்ர தாண்டவம்

5-வது விக்கெட்டுக்கு வந்த மில்லர், கிளாசனுடன் சேர்ந்தார். அனுபவ பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் வீசிய 47-வது ஓவரை பதம்பார்த்த கிளாசன் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். இஸ்லாம் வீசிய 49-வது ஓவரில் மில்லர் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்தார்.

அதிரடியாக ஆடிய கிளாசன் 49 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து (2 பவுண்டரி, 8 சிக்ஸர்) ஹசன் மெகமுத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 75 ரன்கள் சேர்த்தனர். மில்லர் 34 ரன்களிலும், ஜான்சன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது.

41.5 வது ஓவரில் 250 ரன்களை எட்டிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 8 ஓவர்களில் 132 ரன்களைக் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் தென் ஆப்பிரிக்க அணி 144 ரன்கள் சேர்த்தது. கடைசி 20 ஓவர்களில் மட்டும் 238 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி சேர்த்தது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7-வது முறையாக..

தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து தொடர்ந்து 7-வது முறையாக 300 ரன்களுக்கு மேல் குவித்தது. கடந்த 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, 2019ம் ஆண்டில் இங்கிலாந்து ஆகியவை தொடர்ந்து முதலில் பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் 7 முறை குவித்திருந்தது.

பரிதாபத்தில் வங்கதேசப் பந்துவீச்சாளர்கள்

வங்கதேசப் பந்துவீச்சாளர்கள் மும்பை ஆடுகளத்தில் பந்துவீசி சிக்கி சின்னாபின்னமாயினர். வங்கதேசத்தில் மெஹதி ஹசன் மட்டுமே ஓவருக்கு 4 ரன்ரேட்டில் வழங்கினார். மற்ற பந்துவீச்சாளர்கள் சராசரியாக ஓவருக்கு 8 ரன்கள் வீதத்தில் ரன்களை வாரி வழங்கினர். ஹசன் மெகமுத் 6 ஓவர்கள் வீசி 67 ரன்களும், ஷொரிபுல் இஸ்லாம் 9 ஓவர்கள் வீசி 76 ரன்களும், முஸ்தாபிஜூர் ரஹ்மான் 76 ரன்களும் வாரி வழங்கினர்.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிரணியை “பேரழிவில்” தள்ளும் தென் ஆப்பிரிக்கா

இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி புதிய அவதாரம் எடுத்தது போல் விளையாடி வருகிறது. ஆங்கிலத்தில் “கார்னேஜ்” என்ற வார்த்தை உண்டு, மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்துதல் என்று பொருளாகும். அந்த வார்த்தைக்கு ஏற்றாற்போல், இந்த உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி எதிரணிகளை பேரழிவில் தள்ளும் புதிய உத்தியை கையாண்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதும் அணிகள், மிகப்பெரிய பள்ளத்தில் இருந்து மீண்டு வந்து, சேஸிங் செய்ய முடியாத வகையில் ஸ்கோரை அடித்துவிடுவதாகும். 300க்கும் அதிகமாக ஸ்கோர் செய்து எதிரணிகளை மிரளவைத்து, திணறடிப்பது, 350 ரன்களுக்கு மேல் சேர்த்து எதிரணிகளை சேஸிங் செய்யவிடாமல் திக்குமுக்காடச் செய்வது போன்றவற்றை தென் ஆப்பிரிக்கா உத்தியாக கையில் எடுத்துள்ளது.

எந்த அணி மோதினாலும் அந்த அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்வது, எந்த ஆடுகளத்தில் போட்டி நடந்தாலும், எந்த அணியின் பந்துவீச்சையும் நார்நாராக கிழித்து எறிந்து பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைக்கும் வேலையில் தென் ஆப்பிரிக்க அணி ஈடுபடுகிறது.

40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அடுத்த 10 ஓவர்களில் 144 ரன்களைச் சேர்த்தனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 143 ரன்கள் குவித்தது, இந்த ஆட்டத்தில் 144 ரன்கள் என மொத்தம் 287 ரன்கள் சேர்த்து எதிரணியை பேரழிவில் தள்ளி ரசிக்கும் உத்தியை கையாள்கிறது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீட்டுக்கட்டு போல் சரிந்த வங்கதேச பேட்டிங் வரிசை

382 ரன்கள் எனும் இமாலய இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியில் வங்கதேச பேட்டர்கள் களமிறங்கினர். இதுபோன்ற இமாலய ஸ்கோரை சேஸிங் செய்வது கடினம், சாத்தியமில்லை என்பது வங்கதேச பேட்டர்களின் ஆட்டத்திலேயே தெரிந்தது.

தான்சித் ஹசன் - லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் துல்லியமான லைன் அன்ட் லென்த் பந்துவீச்சில் பவுண்டரிகள் அடிக்க வங்கதேச பேட்டர்கள் திணறினர். முதல் 5 ஓவர்களில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது.

ஜான்சன் வீசிய 7வது ஓவரில் தான்சித் ஹசன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷாண்டே வந்தவேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார்.

3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் ஒரு ரன் சேர்த்தநிலையில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முஸ்தபிசுர் 8 ரன்கள் சேர்த்தநிலையில் கோட்ஸீ பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி தடுமாறியது.

நிதான பேட் செய்து வந்த லிட்டன் தாஸ் 22 ரன்கள் சேர்த்தநிலையில் ரபாடா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். மெஹதி ஹசன் 11 ரன்னில் கேசவ் மகராஜ் பந்துவீ்ச்சில் விக்கெட்டை இழந்தார். 30 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த வங்கதேசம் அணி அடுத்த 51 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேசத்திற்காக போராடிய 'தனி ஒருவன்'

விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும், நிதானமாக பேட் செய்த மஹ்மத்துல்லா 67 பந்துகளில் அரைசதம் அடித்தார். 7வது விக்கெட்டுக்கு நசும் அகமது 19 ரன்னில் கோட்ஸி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மகமத்துல்லா, நசும் அகமது இருவரும் 7வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹசன் மெகமதுவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 15 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா பந்துவீச்சி்ல் ஹசன் ஆட்டமிழந்தார்.

கடைசி வரை போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய மெகமதுல்லா 104 பந்துகளில் சதம் அடித்து, 111 ரன்களில் கோட்ஸீ பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.9வது விக்கெட்டுக்கு மெகமதுல்லா, முஸ்தபிசுர் ரஹ்மான் கூட்டணி 68 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இதுதான் வங்கதேசத்தின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.

மெகமதுல்லா ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் ரஹ்மாந் 11 ரன்களில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். 46.4 ஓவர்களில் வங்கதேசம் அணி 233 ரன்களுக்கு ஆட்டமிழந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேசம் அணி ஏன் தோற்றது?

வங்கதேசம் அணியில் மெகமத்துல்லா மட்டும் கடைசிவரை போராடி சதம் அடித்து ஆட்டமிழந்தார். எந்த ஒரு வீரரும் 22 ரன்களைத் தாண்டவில்லை. வான்ஹடே மைதானம் பேட்டிங்கிற்கு அருமையாக ஒத்துழைக்கக் கூடியது. மெகமதுல்லா சதம் அடித்த நிலையில் மற்ற பேட்டர்களால் ஏன் விளையாட முடியவில்லை. ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், லிட்டன் தாஸ், தம்ஜித் ஹசன் போன்ற பேட்டர்கள் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை கையாண்டு இருக்க வேண்டும்.

இந்த ஆடுகளத்தில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக பேட் செய்திருந்தால், போட்டி, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆட்டம்போல் மாறியிருக்கும்.

ஆனால், வங்கதேச பேட்டர்களிடம் பொறுமை இல்லை, ரன் ரேட் அழுத்தம், பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவைதான் அவர்களை தவறான ஷாட்களை ஆடத் தூண்டி விக்கெட்டை இழக்க வைத்தது.

ரன்ரேட்டை பற்றிக் கவலைப்படாமல் நிதானமாக பேட் செய்திருந்தால், ஒரு கட்டத்தில் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், பேட்டர்களின் பொறுமையின்மை, மிகப்பெரிய ஸ்கோரால் ஏற்பட்ட மன அழுத்தம், பேட்டிங் ஆடும் முன்பே தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்ட மனநிலை ஆகியவைதான் வங்கதேச அணியின் தோல்விக்கான காரணங்களாகும்.

https://www.bbc.com/tamil/articles/ce54jg43d2po

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நியாயம் said:

நெதர்லாந்துடன் தோற்ற அளவில் தென் ஆபிரிகாவின் பலவீனம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. இறுதி ஆட்டத்துக்கு தென் ஆபிரிக்கா செல்லுமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

அண்ணா ஒரு விளையாட்டை வைத்து தென் ஆபிரிக்காவை த‌ப்பு க‌ன‌க்கு போட‌ வேண்டாம்

தென் ஆபிரிக்கா வென்ற‌து எல்லாம் ப‌ல‌மான‌ அணிக‌ளை

பின‌ல் தென் ஆபிரிக்கா எதிர் இந்தியாவாய் தான் இருக்க‌ முடியும்

டேவிட் மில்ல‌ரின் விளையாட்டு தான் சிறு சுத‌ப்ப‌ல் ம‌ற்ற‌ம் ப‌டி தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ம் ந‌ல்ல‌ போமில் இருக்கின‌ம்🥰🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஜய் ஜடேஜா: பாகிஸ்தானை வீழ்த்த ஆப்கானிஸ்தானை தயார்படுத்திய இந்திய வீரர்

அஜய் ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த திங்களன்று (அக்டோபர் 23) நடந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஒரு வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

அதில், ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, “நீங்கள் இன்னும் ஆப்கானிஸ்தானை சிறிய அணி என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் பெரிய அணிகளை வீழ்த்தும் நாளில் அவர்களும் பெரிய அணியாக ஆவார்கள்,” என்று கூறுகிறார்.

அஜய் ஜடேஜாவிடம் ‘ஏன் ஆப்கானிஸ்தான் அணி பெரிய அணிகளை தோற்கடிக்க முடியவில்லை?' என்று கேட்கப்பட்டதற்கே இவ்வாறு பதிலளித்தார்.

ஆப்கானிஸ்தான் தற்போது இரண்டு பெரிய அணிகளை வீழ்த்தியுள்ளது. கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தற்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கிறது.

கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம்,AFGHANISTAN CRICKET BOARD

கடந்த 1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி, சமீப காலம் வரை ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் அணியில் முதல் இடத்திலிருந்து 11-ஆவது இடம் வரை நட்சத்திர ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் காலடி வைத்திருக்கும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் மட்டுமின்றி, அவர்களுக்கான வரவேற்பு மற்றும் மதிய-இரவு விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைககள் கூட விவாதப் பொருளாகின்றன.

 
கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம்,AFGHANISTAN CRICKET BOARD

படக்குறிப்பு,

பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என மூன்றிலும் ஆப்கானிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை விட பல மடங்கு முன்னேறியிருந்தது

ஆப்கானிஸ்தான் அணியின் ‘அற்புதமான ஆட்டம்’

மறுபுறம், அக்டோபர் 14-ஆம் தேதிவரை, உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் என்று உறுதியாகக் கருதப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் சாதனையை 'எதிர்பாராத திருப்பம்' என்று கூறிய அனைத்து நிபுணர்களும், இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றிக்குப்பின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி அணியின் 'திறமை' குறித்து பேசி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றியை 'திருப்பம்' என்று மட்டுமல்ல, போட்டியில் பாகிஸ்தானைச் சமன் செய்ய அனுமதிக்காத ஒரு அணியின் அதிசயம் என்றும் வர்ணிக்கப்படுகிறது.

பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என மூன்றிலும் ஆப்கானிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை விட பல மடங்கு முன்னேறியிருந்தது.

இந்த வெற்றியின் எதிரொலி சென்னையில் இருந்து டெல்லி, இஸ்லாமாபாத், காபூல் வரை கேட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நடனம் ஆடியபோது, காபூலிலும் மக்கள் நடனமாடினர்.

இதற்கிடையில், 'ஆப்கானிஸ்தானும் ஒரு பெரிய அணி' என்று நீண்ட காலத்திற்கு முன்பு அறிவித்த அதே அஜய் ஜடேஜாவின் பெயர் மீண்டும் விவாதங்களில் அடிபட்டது.

அஜய் ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை சூதாட்ட சர்ச்சையினால் வெகு விரைவாகவே முடிந்தது. ஆனால் இப்போது அவர் ஆப்கானிஸ்தான் அணிக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்த பெருமைக்குரியவர்.

கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம்,X/SACHIN TENDULKAR

சச்சின் டெண்டுல்கரின் பாராட்டு

இந்திய கிரிக்கெட்டில் அஜய் ஜடேஜாவின் பெயர் பிரபலமானதுதான்.

1992-ஆம் ஆண்டு இந்திய அணிக்காகத் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய ஜடேஜா, 2000-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பழக்கமான முகமாக இருந்தார். தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

கடந்த மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது வெற்றிக்குப் பிறகு, சச்சின் டெண்டுல்கர் ஜடேஜாவை X சமூக தளத்தில் பாராட்டியிருக்கிறார்.

டெண்டுல்கர், “இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் அவர்களது ஒழுக்கம், அணுகுமுறை, விக்கெட்டுகளுக்கு இடையே ரன் குவிக்க வேகமாக ஓடும் விதம் ஆகியவை அவர்களது கடின உழைப்பைப் பிரதிபலிக்கிறது. ஒருவேளை இவை அனைத்திற்கும் காரணம் திரு. அஜய் ஜடேஜாவின் தாக்கமாகக் கூட இருக்கலாம்," என்று பதிவிட்டிருகிறார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்தக் கூற்று முக்கியமானதாகப் பார்க்கப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் தற்போதைய வழிகாட்டியான அஜய் ஜடேஜாவுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டவர் டெண்டுல்கர்.

 
கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம்,AFGHANISTAN CRICKET BOARD

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக, ஜடேஜா அந்த அணியின் சிந்தனையை மாற்றியுள்ளார்

‘சேஸ் மாஸ்டர்’ அஜய் ஜடேஜா

ஜடேஜா கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்திய ஒருநாள் அணியில் இருந்தார். 1992 மற்றும் 2000-க்கு இடையில், ஜடேஜா 15 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார், ஆனால் இந்த காலகட்டத்தில், அவர் 196 ODI போட்டிகளில் இந்திய அணியின் ஆடும் 11 பேரில் ஒருவராக இருந்தார்.

மைதானத்தில் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் அஜய் ஜடேஜா, தனது சுறுசுறுப்பு மற்றும் ஆட்டத்தால் இந்திய அணியின் பிரபலமான வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ரசிகர்கள் அவரை 'மிஸ்டர் சார்மிங்' என்று அழைத்தனர்.

அப்போது, 'பல ரசிகர்கள் விளையாட்டைப் பார்க்க அல்ல ஜடேஜாவைப் பார்க்கவே மைதானத்திற்கு வருகிறார்கள்,’ என்று கூற்ப்பட்டது.

அவரது ஒப்பிடமுடியாத பேட்டிங்கினால், அவர் பல போட்டிகளின் போக்கை மாற்றினார்.

ஜடேஜா 41 போட்டிகளில் இன்னிங்ஸைத் தொடங்கினாலும் பெரும்பாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே பார்க்கப்பட்டார்.

யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியின் சகாப்தம் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அஜய் ஜடேஜா இந்திய அணியின் 'சேஸ் மாஸ்டர்' மற்றும் 'சிறந்த பினிஷர்' என்று அழைக்கப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றிக்குப் பிறகு, 1996 உலகக் கோப்பையின் இரண்டாவது காலிறுதிப் போட்டியின் வீடியோ காட்சியும் வைரலானது. இதில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் பந்தில் அஜய் ஜடேஜா சிக்ஸர் அடிப்பதைக் காணலாம்.

அந்தப் போட்டியில் ஜடேஜா 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டுவென்டி-20 வடிவத்தின் வருகைக்கு முன்னர் விளையாடப்பட்ட இந்த இன்னிங்ஸ் ஒரு 'கேம் சேஞ்சர்' என்று கருதப்பட்டது. இன்றும் பார்வையாளர்கள் அதைக் குறிப்பிட்டுச் சிலாகிக்கின்றனர்.

அஜய் ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 30 அரை சதங்கள் அடித்துள்ளார்.

 
கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவாக உச்சத்தை நோக்கி நகர்ந்தபோது, மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளால் அது பெரும் சரிவைச் சந்தித்தது

அபாரமான அணித்தலைமை

அஜய் ஜடேஜா ஒரு பயனுள்ள நடுத்தர வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பீல்டிங்கின் அடிப்படையில், அவர் பல போட்டிகளை இந்தியாவுக்குச் சாதகமாகத் திருப்பினார்.

ஜடேஜா ஒரு நல்ல கேப்டனாகவும் பார்க்கப்பட்டார். அவர் இந்திய ஒருநாள் அணிக்குக் கேப்டனாக 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றார்.

மேட்ச் ஃபிக்சிங் சர்ச்சை

ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவாக உச்சத்தை நோக்கி நகர்ந்தபோது, மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளால் அது பெரும் சரிவைச் சந்தித்தது. 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், போட்டிகளில் விளையாட அவருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு திரும்பும் அவரது கனவு சிதைந்தது. அப்போது விசாரணையின் போது அவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

இருப்பினும், ஒரு டிவிஷன் பெஞ்ச் அவரை உள்நாட்டுக் கிரிக்கெட்டில் விளையாட அனுமதித்தது. டெல்லி அணிக்குத் திரும்பி கேப்டனானார். 2005-ஆம் ஆண்டில், அவர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என இரட்டை பொறுப்பு வகித்தார்.

ஆட்டத்திலிருந்து விலகிய பிறகும், பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும் கிரிக்கெட்டுடன் அவர் தொடர்ந்து பயணித்தார்.

 
கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் அணி எந்த எதிரணிக்கும் பயப்படவில்லை என்று ஜடேஜா கூறுகிறார்

புதிய பரிமாணத்தில் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக, ஜடேஜா அந்த அணியின் சிந்தனையை மாற்றியுள்ளார். இந்த அணிக்கு வெற்றி மந்திரத்தை ஜடேஜா கற்றுக் கொடுத்திருப்பதாக அந்த அணியை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் கூறுகின்றனர்.

இப்போது ஆப்கானிஸ்தான் அணி எந்த எதிரணிக்கும் பயப்படவில்லை என்று ஜடேஜா கூறுகிறார்.

“ஆப்கான் வீரர்களின் மிகப்பெரிய சிறப்பு பயமின்மை. அவர்கள் எந்த அணிக்கும் கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும்,” என்கிறார் ஜடேஜா.

ஜடேஜாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் பார்த்துள்ளார். அவருடன் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கான பெருமையின் பெரும் பகுதி ஜடேஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என சோயிப் மாலிக் கருதுகிறார்.

ஊடக அறிக்கைகளின்படி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் வெற்றிக்குப் பிறகு, சோயப் மாலிக், “அஜய் ஜடேஜாவுடனே இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஒரு சேனலுக்காக ஜடேஜாவுடன் பணியாற்றியுள்ளேன். கிரிக்கெட் பற்றிய அவரது புரிதல் சிறப்பானது. உங்களைச் சுற்றி சரியான நபர்கள் இருந்தால் அது நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். இந்த வித்தியாசம் எவ்வளவு பெரியது என்பதை பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட முழு உலகமும் இப்போது புரிந்து கொண்டிருக்கிறது,” என்றார் மாலிக்.

https://www.bbc.com/tamil/articles/c9re2nz9w74o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Australia FlagAustralia        (40.4/50 ov) 277/5

Australia chose to bat.

Current RR: 6.81  • Last 5 ov (RR): 35/3 (7.00) forecasterLive Forecast:AUS 344

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

அண்ணா ஒரு விளையாட்டை வைத்து தென் ஆபிரிக்காவை த‌ப்பு க‌ன‌க்கு போட‌ வேண்டாம்

தென் ஆபிரிக்கா வென்ற‌து எல்லாம் ப‌ல‌மான‌ அணிக‌ளை

பின‌ல் தென் ஆபிரிக்கா எதிர் இந்தியாவாய் தான் இருக்க‌ முடியும்

டேவிட் மில்ல‌ரின் விளையாட்டு தான் சிறு சுத‌ப்ப‌ல் ம‌ற்ற‌ம் ப‌டி தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ம் ந‌ல்ல‌ போமில் இருக்கின‌ம்🥰🙏

 

சரி பார்ப்போம். இந்தியாவை வெற்றி பெறும் என்றால் தென் ஆபிரிக்கா இறுதி போட்டியில் விளையாடட்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, நியாயம் said:

 

சரி பார்ப்போம். இந்தியாவை வெற்றி பெறும் என்றால் தென் ஆபிரிக்கா இறுதி போட்டியில் விளையாடட்டும். 

தென் ஆபிரிக்கா 1999க‌ளில் விட்ட‌ பிழைய‌ மீண்டும் விடாம‌
இந்தியாவை வீழ்த்தி கோப்பைய‌ வெல்ல‌னும்..............இந்தியாட‌ ப‌ந்து வீச்சு ந‌ல்ல‌ நிலையில் இருக்கு...........அதே போல் தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சும் ஒக்கே

கோப்பைய‌ தென் ஆபிரிக்கா அல்ல‌து நியுசிலாந் வென்றால் ம‌கிழ்ச்சி🥰🙏

இந்தியா அணி வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல்லோட‌ கால‌த்தை ஓட்டினால் அதை விட‌ பெரும் ம‌கிழ்ச்சி லொல்😁🙈

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கோப்பை அரையிறுதியில் நுழையும் 4 அணிகள் எவை? சீறும் கத்துக் குட்டிகள், தடுமாறும் ஜாம்பவான்கள்

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 நிமிடங்களுக்கு முன்னர்

ஐசிசி 50 ஓவர்கள் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பெரும்பாலான அணிகள் 5 போட்டிகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாக்அவுட் சுற்றான அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கும் என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது, இந்திய அணி அடுத்து இரு வெற்றிகளைப் பெற்றாலே பாதுகாப்பாக அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். இன்னும் 4 போட்டிகள் இந்தியாவுக்கு மீதமிருந்தாலும், அதில் இரு அணிகள் வலிமையான அணிகளாக இருப்பதால் கடும் சவாலாக இருக்கும். இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதி செல்வதில் சிக்கல் இருக்காது.

ஆனால், அடுத்த 3 இடங்களைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும். இதில் எந்த 3 அணிகள் டாப்-3 இடங்களை பிடிக்கப் போகிறார்கள் என்பதுதான் ஸ்வரஸ்யமாகும்.

நியூசிலாந்து அணியும் அரையிறுதி நோக்கி நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை அளித்துவரும் நியூசிலாந்து அணியும் அரையிறுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது. நிகர ரன்ரேட் ராட்சதத் தனமாக இருப்பதால், அரையிறுதிக்குள் இந்த முறை தென் ஆப்ரிக்காவை எதிர்பார்க்கலாம்.

அரையிறுதிக்குள் செல்லும் 4வது அணி பாகிஸ்தானா, அல்லது ஆஸ்திரேலியாவா அல்லது ஆப்கானிஸ்தானா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த 10 அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்புக் குறித்து விரிவாக அலசி ஆராயலாம்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி: மீதமுள்ள போட்டி-4 (இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து, இலங்கை)

இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் மோதி, அனைத்திலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது, நிகரரன்ரேட் 1.353 என்ற அளவில் இருக்கிறது.இன்னும் இந்திய அணிக்கு 4 போட்டிகள் மீதமுள்ளன. இதில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டங்கள் மட்டும் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, நெதர்லாந்து இடையிலான ஆட்டங்களில் இந்திய அணி வென்றாலே 14 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் சென்றுவிடும் .

தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அந்த அணிக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் சொதப்பி, நம்பிக்கையிழந்து காணப்படுகிறது. அதற்காக அந்த அணி தொடரிலிருந்து வெளியேறும் என்று ஊகிக்க முடியாது. எந்த நேரத்திலும் இங்கிலாந்து அணி விஸ்வரூமெடுத்து ஆடக்கூடியது என்பதால், இந்திய அணிக்கு எந்த நேரத்திலும் ஷாக் அளிக்கும் திறமையுடையது. ஆதலால், இந்திய அணிக்கு 2 போட்டிகள் கடும் சவாலாக இருக்கும்.

இந்த இரு போட்டிகளில் இந்திய அணி தோற்காது என்றாலும், எந்த மோசமான சூழலை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக இருக்க வேண்டும், நிகர ரன் ரேட்டை இந்திய அணி குறையவிடாமல் பார்க்க வேண்டும்.

வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு கொண்டுள்ள இந்திய அணிக்கு, இலங்கை, நெதர்லாந்து அணிகளை வெல்வது பெரிய சவாலாக இருக்காது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிட்டது என்றாலும், இப்போதுள்ள சூழலில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

 

நியூசிலாந்து: மீதமுள்ள போட்டி-4 (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரி்க்கா, இலங்கை)

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து அணி தொடக்கத்தில் குட்டி அணிகளை வெளுத்து வாங்கி புள்ளிகளை எளிதாகப் பெற்றுக்கொண்டு, 2-வது இடத்தில் நீடிக்கிறது. 5 போட்டிகளில் மோதிய நியூசிலாந்து அணி 3 வெற்றிகள், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராகக் கிடைத்தவை. இனிமேல்தான் நியூசிலாந்து அணிக்கு உண்மையான சோதனையே இருக்கிறது.

இனிவரும் ஒவ்வொரு போட்டிகளும் நியூசிலாந்து அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக, எந்த முடிவையும் சந்திக்கும் துணிச்சலோடுதான் களமிறங்க வேண்டும். ஏனென்றால் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்குள் செல்ல கடுமையாக முயன்று வருவதால், வெற்றிக்காக கடுமையாக உழைக்கும். ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து காயம்பட்ட புலியாக பாகிஸ்தான் இருப்தால், அடுத்துவரும் ஆட்டங்களை எளிதாக எடுக்கமாட்டார்கள்.

தென் ஆப்பிரிக்க அணியின் ஃபார்ம் இந்தத் தொடரில் ராட்சதத் தனமாக இருப்பதால், நியூசிலாந்து எவ்வாறு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சமாளிக்கப் போகிறது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பரமவைரிகள் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் முடிவு எந்தநேரத்திலும் மாறும் ஆட்டமாக இருக்கக்கூடும். ஆதலால், நியூசிலாந்து அணிக்கு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வேண்டுமானால் வெற்றி கிட்டும் என உறுதியாகக் கூற முடியும். மற்றவகையில் 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்து வெற்றி என்பது சுவற்றின் மீது நிற்கும் பூனைபோன்றதுதான். ஆதலால் நியூசிலாந்து அணிக்கு அடுத்து 2 போட்டிகளில் வெற்றி இருந்தால்தான் நாக்அவுட் சுற்று உறுதியாகும்.

ஒருவேளை நியூசிலாந்து அணி இந்த 3 அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோற்றால், அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பையே இழக்க நேரிடும், அனைத்துக் கணிப்புகளும் மாறக்கூடும். ஆதலால், அடுத்துவரும் ஆட்டங்கள் உச்சக் கட்ட பரபரப்பை ஏற்படுத்தும்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்பிரிக்கா: மீதமுள்ள போட்டி-4 (பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான்)

தென் ஆப்பிரிக்க அணிஇந்த உலகக் கோப்பையில் புதிய அவதாரத்துடன் களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டர் விஸ்வரூமெடுத்து விளையாடி ராட்சதத் தனமான ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகிறார்கள்.

இதுவரை 5 போட்டிகளிலும் 4 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி 350 ரன்களுக்கு மேல் குவித்து எதிரணிகளை மிரளவைத்துள்ளது. எதிரணிகளுக்கு மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக வைத்து, திக்குமுக்காடச் செய்து வெற்றியை பெறும் உத்தியை தென் ஆப்பிரிக்கா பின்பற்றி வருகிறது.

தற்போது தென் ஆப்பிரிக்க அணி 5போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் அனைத்து அணிகளையும்விட வலிமையாக 2.370 என்று இருப்பது கடைசிநேரத்தில் உதவும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்துவரும் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான ஆட்டங்கள் வாழ்வா, சாவா என்றுதான் இருக்கும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் என்றாலும், அந்த வெற்றி நிச்சயம் எளிதாக இருக்காது.

ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை எளிதாக ஒப்புக்கொள்ளாது, எந்த நேரத்திலும் தென் ஆப்பிரிக்க அணிக்கே ஷாக் அளிக்கும் தன்மை கொண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய ஸ்கோரை அடித்து மிரள வைத்தால்தான் தென் ஆப்பிரிக்க வெற்றி எளிதாகும்.

வலிமையான பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு வைத்துள்ள இந்தியஅணியை வெல்வது தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதானது அல்ல. சிறிய தவறுகூட தென் ஆப்பிரிக்காவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதால், இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் முக்கியமானதாக இருக்கும்.

அதேபோலத்தான் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும். இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்த்துள்ளன. நியூசிலாந்து அணிக்கு இன்னும் 2 வெற்றிகள் இருந்தாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், வெற்றிக்காக கடுமையாகப் போராடும்.

பாகிஸ்தான் அணியும் அரையிறுதி வாய்ப்பை தவறவிடாது என்பதால், தென்ஆப்பிரிக்காவுக்கு பந்துவீச்சு, பேட்டிங்கில் கடும் சாவலாக இருக்கும். ஆதலால் அடுத்த 3 போட்டிகள் தென்ஆப்பிரிக்காவுக்கு கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் இருக்கும். ராட்சதத்தனமான ஃபார்மை வெளிப்படுத்திவரும்தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து அதேபாணியைப் பின்பற்றினால் வெற்றி எளிதாகும் இல்லாவிட்டால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியா: மீதமுள்ள போட்டி-5 (நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து)

உலகக் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலிய அணி தோல்வியுடனே தொடங்கியது. தொடர்ந்து இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரு தோல்விகளைச் சந்தித்தது. பின்னர் மீண்டு, இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளைப் பெற்றது. தற்போது 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 5 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் அரையிறுதிக்குள் வருவதற்கு கடுமையாக முயற்சிக்கும்.

காயத்திலிருந்து மீண்டு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அணிக்குத் திரும்புவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்பபை உறுதி செய்ய இன்னும் குறைந்தபட்சம் 8 புள்ளிகள் பெறுவது அவசியம். கைவசம் 5 ஆட்டங்கள் மட்டுமே உள்ளன.

இன்று நடக்கும் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வென்றுவிடும் என்றாலும்கூட, இன்னும் 3 போட்டிகளில் வெற்றி அவசியம். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடும் என்று நம்பலாம். ஆனால், இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் ஆஸ்திரேலிய அணி அடுத்துவரும் நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றி கிடைத்தாலும் அரையிறுதி செல்வது கடினம்தான். நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகப் பெறும் வெற்றிதான் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.

ஆனால், இந்த இரு அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அடுத்துவரும் அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றால், பாதுகாப்பாக அரையிறுதிக்குள் செல்லலாம். தற்போதுள்ள சூழலில் ஆஸ்திரேலிய அணியின் நிகரரன்ரேட் மைனஸில்தான் இருக்கிறது. குட்டி அணிகளுக்கு எதிராக பெரிய ஸ்கோரை அடித்து, ரன்ரேட்டை உயர்த்த முயல வேண்டும்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான்: மீதமுள்ள போட்டி-4, (தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து)

பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு என்பது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப்பின் மருகியுள்ளது. பாகிஸ்தான் தற்போது 5 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகள், 2வெற்றிகள் என 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் மைனசில் இருக்கிறது. அடுத்துவரும் 4 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும்கூட அந்த அணி அரையிறுதி செல்லுமா என்பதில் உறுதியில்லை.

அவ்வாறு அரையிறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல வேண்டுமென்றால் அது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைச் சார்ந்துதான் அமையும்.அடுத்துவரும் ஒரு போட்டிகளில் தோற்றால்கூட பாகிஸ்தான் அணி, தாயகத்துக்கு டிக்கெட் போட்டுவிட வேண்டியதுதான். ஆனால், அடுத்துவரும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை இப்போது பாகிஸ்தான் இருக்கும் ஃபார்மில் வெல்வது எளிதானது அல்ல.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் பாகிஸ்தானின் பலவீனம் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால், அடுத்து இந்த 3 அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும் முள்மீது பாகிஸ்தான் நடப்பதுபோலத்தான் இருக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல வேண்டுமென்றால், அடுத்துவரும் 4 போட்டிகளிலும் வென்று, நிகர ரன்ரேட்டையும் உயர்த்த வேண்டும் இல்லாவிட்டால், பாகிஸ்தான் லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதுதான்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து: மீதமுள்ள போட்டி-5 (இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா,நெதர்லாந்து, பாகிஸ்தான்)

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை பெரும் அதிர்ச்சியான முடிவுகளை வழங்கியுள்ளது. 4போட்டிகளில் மோதிய இங்கிலாந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நிகர ரன்ரேட்டும் படுமோசமாகச் சரிந்துள்ளது.

அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்புள்ள அணியாக இங்கிலாந்து கணிக்கப்பட்டநிலையில் அதன் செயல்பாடு படுமோசமாகியுள்ளது. அரையிறுதி வாய்ப்பும் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது. இங்கிலாந்து அணி வீறுகொண்டு எழுந்து, அடுத்துவரும் 5 ஆட்டங்களிலும் வென்றால் 12 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்குள் செல்லும்.

நெதர்லாந்து, இலங்கை அணிகளை இங்கிலாந்து எளிதாக வென்றுவிட வாய்ப்புள்ளது. ஆனால், பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்துவது கடினமான போராட்டமாக அமையும். அதிலும் இந்திய அணி தற்போதிருக்கும் ஃபார்மில் வெற்றி பெறுவது கடினமானது. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கடும்போட்டி எப்போதுமே இருக்கும் என்பதால், அந்த ஆட்டத்திலும் வெற்றி கிடைப்பது கடினம். பாகிஸ்தானும் நாக்அவுட் சுற்று செல்ல கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும். இந்த சவால்களைக் கடந்து இங்கிலாந்து வெல்ல வேண்டும்.

இங்கிலாந்து அணியின் நம்பிக்கையற்ற பந்துவீச்சு, சோர்வடைந்த பேட்டிங், சுறுசுறுப்பில்லாத பீ்ல்டிங் போன்றவை அந்த அணியை ஏற்கெனவே குழிக்குள் தள்ளிவி்ட்டது. இனிமேலும் விழிக்காவி்ட்டால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மோசமாகத் தொடரிலிருந்து வெளியேறும்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை: மீதமுள்ள போட்டி -5 (இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து)

இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல்வெற்றியைப் பெற்ற கடைசி அணியாக இலங்கை இருக்கிறது. அந்த அணியில் உள்ள முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இல்லாதது பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று, 3 போட்டிகளில் இலங்கை தோற்று, 2 புள்ளிகளுடன் உள்ளது.

நாக்அவுட் சுற்றுக்குள் செல்ல அடுத்துவரும் 5 போட்டிகளிலும் வெல்வது இலங்கைக்கு கட்டாயம். ஆனால், அது சாத்தியமில்லை. இந்தியா, நியூசிலாந்து அணிகளின் ஃபார்மிற்கு முன், நிச்சயமாக இலங்கை அணி தோல்வியைத் தழுவும். இலங்கை அணி ஒரு தோல்வி அடைந்தால்கூட தாயகம் திரும்ப வேண்டியதுதான். 8-வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி தன்னை உயர்த்திக்கொள்ள வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை வெல்லலாம்.

அதிலும் ஆப்கானிஸ்தான் ஃபார்மைப் பொறுத்தவரை இலங்கை அணியையே வீழ்த்தும் வல்லமை கொண்டதாக மாறியுள்ளது. ஆதலால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பு என்பது காகிதத்தில் மட்டுமே சாத்தியம், நிதர்சனத்தில் வார்த்தைக்கு வேண்டுமானால் கூற முடியும்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான்: மீதமுள்ள ஆட்டங்கள்-5, (இலங்கை, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா)

இந்த உலகக் கோப்பைத் தொடரில் யாரும் கணிக்க முடியாத அணியாக ஆப்கானிஸ்தான் உருவெடுத்துள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை தோற்கடித்து அதிர்ச்சி அளித்த ஆப்கான் அணி, பாகிஸ்தானையும் வீழ்த்தி மற்ற அணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் அடுத்துவரும் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானை எந்த அணியும் எளிதாக எடுக்கமாட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் அணி 3தோல்விகள், 2வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் பாகிஸ்தானுக்கு கீழே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்க எதிராக வெல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள்வரை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளை ஆப்கானிஸ்தான் அணியால் வெல்வது கடினம்தான். ஆனால், ஆப்கானிஸ்தானின் ஃபார்மிற்கு எதுவும் நடக்கலாம். ஒருவேளை இரு அணிகளில் ஒரு அணியை வீழ்த்தினாலும், புள்ளிப்பட்டியல் பரபரப்பாகச் செல்லும். அந்த இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்புக்கே ஆப்கானிஸ்தான் வேட்டுவைத்துவிடும்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேசம்: மீதமுள்ள ஆட்டம்-4 (நெதர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா)

வங்கதேச அணியின் அரையிறுதிக் கதவு ஏற்ககுறைய அடைக்கப்பட்டுவிட்டது என்று கூறலாம். வங்கதேசம் நாக்அவுட் சுற்று செல்ல, மற்ற அணிகள் வெற்றியைத் தியாகம் செய்தால்தான் சாத்தியமாகும். அது நடக்கவே நடக்காது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகள், 2 புள்ளிகளுடன் வங்கதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது. அதிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 149 ரன்களில் தோல்வி அந்த அணியை கடைசி இடத்துக்கு இழுத்துச் சென்றது.

இ்ன்னும் வங்கதேச அணிக்கு 4 ஆட்டங்கள் மீதமுள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் வங்கதேசம் வென்றால்கூட அரையிறுதி வாய்ப்புக் கிடைக்காது. வங்கதேசம் அடுத்துவரும் இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பெற முயலலாம். ஆனால், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவது எளிதல்ல. இனிவரும் போட்டிகளில் ஒரு தோல்வி அடைந்தாலும், வங்கதேசம் தொடரிலிருந்து வெளியேறும்.

 
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெதர்லாந்து: மீதமுள்ள ஆட்டங்கள்-5 (ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா)

நெதர்லாந்து அணி உலகக் கோப்பைத் தொடங்கியதில் இருந்து உயர்தரமான கிரிக்கெட்டை அனைவரும் எதிர்பார்த்ததைப் போல் வெளிப்படுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி மற்ற அணிகளை துவைத்து வரும் நிலையில் அந்த அணியையே “மண்ணைக் கவ்வவைத்தது” நெதர்லாந்து.

நெதர்லாந்து அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் இருக்கிறது. அரையிறுதி செல்லும் வாய்ப்பு நெதர்லாந்துக்கு முடிந்துவிட்டது என்றே கூற முடியும். அனைத்து ஆட்டங்களில் வென்றால் 10 புள்ளிகள் பெற்று, முடிவில் 12 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்று செல்லாம்.

ஆனால், இன்று(25ம்தேதி) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெல்வதும் நெதர்லாந்துக்கு சாத்தியமானது கிடையாது. இந்த 3 அணிகளும் மிகவும் வலுவானவை. ஆதலால், நெதர்லாந்து அணி அடுத்து ஒரு தோல்வியைச் சந்தித்தாலே ஏறக்குறைய தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

https://www.bbc.com/tamil/articles/c2x8yjnj5p4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, பையன்26 said:

@Eppothum Thamizhan

தென் ஆபிரிக்கா இந்த‌ முறை கோப்பை தூக்குவின‌மா ந‌ண்பா

எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இந்த‌ உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்காவின் விளையாட்டு மிக‌ சிற‌ப்பு

தென் ஆபிரிக்கா சிமி பின‌லுக்கு போவ‌து உறுதியாகிட்டு🥰🙏........

தென் ஆபிரிக்கா ஆரம்ப சுற்று போட்டிகளில் எந்த பிரச்சனையும் இல்லாது வெல்வார்கள். Semi Final, Final  போன்ற Knock out ஆட்டங்களில்தான் பிரச்சனை. இம்முறை Temba Bavuma இப்படியே காயப்பட்டு விளையாடாமல் இருந்தால் தென் ஆபிரிக்கா கோப்பையை வெல்ல சாத்தியக்கூறுகள் அதிகம். யார் வேண்டாலும் சரி ஹிந்தியன் வெல்லாட்டி சரிதான்.😜

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ணத்தில் மெக்ஸ்வெல் அதிவேக சதம் குவித்து சாதனை 

25 OCT, 2023 | 07:23 PM
image

(பெங்களூருவிலிருந்து நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் சாதனைகளுக்கு பெயர் பெற்ற உலகக் கிண்ணப் போட்டியாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் க்ளென் மெக்ஸ்வெல் அதிவேக சதத்தைக் குவித்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.

அவுஸ்திரேலியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் டெல்ஹி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில்  நடைபெற்றுவரும் உலகக் கிண்ண 24ஆவது லீக் போட்டியிலேயே மெக்ஸ்வெல் அதிவேக சதத்தைக் குவித்தார்.

அப் போட்டியில் 40 பந்துகளில் மெக்ஸ்வெல் சதத்தைக் குவித்து புதிய சாதனை படைத்தார்.

44 பந்துகளை எதிர்கொண்ட க்ளென் மெக்ஸ்வெல் 9 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இலங்கைக்கு எதிராக இதே விளையாட்டரங்கில் அக்டோபர் 7ஆம் திகதி நடைபெற்ற  உலகக் கிண்ணப்  போட்டியில் தென் ஆபிரிக்க வீரர் ஏய்டன் மார்க்ராம் 49 பந்துகளில் குவித்த சதமே இதற்கு முன்னர் உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட அதிவேக சதமாக இருந்தது.

நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 399 ஓட்டங்களைக் குவித்தது.

டேவிட் வோர்னர் தனது 2ஆவது தொடர்ச்சியான சதத்தைக் குவித்தார்.

அவர் 93 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களைக் குவித்தார்.

ஸ்டீவன் ஸ்மித் 71 ஓட்டங்களையும் மானுஸ் லபுஷேன் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய இன்னிங்ஸில் 3 சிறந்த இணைப்பாட்டங்களும் அடங்கியிருந்தன.

2ஆவது விக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித்துடன் 132 ஓட்டங்களைப் பகிர்ந்த டேவிட் வோர்னர், 3ஆவது விக்கெட்டில் மானுஸ் லபுஷேனுடன் மேலும் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இந்த இணைப்பாட்டங்களைவிட 7ஆவது விக்கெட் இணைப்பாட்டம் அதிரடியாக பெறப்பட்ட இணைப்பாட்டமாக அமைந்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய க்ளென் மெக்ஸ்வெல் 7ஆவது விக்கெட்டில் பெட் கமின்ஸுடன் 43 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இந்த இணைப்பாட்டத்தில் பெட் கமின்ஸின் பங்களிப்பு வெறும் 8 ஓட்டங்களாக இருந்தது.

பந்துவீச்சில் லோகன் வென் பீக் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பாஸ் டி லீட் 115 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

நெதர்லாந்து பதிலுக்கு துடுப்பெத்தாடுகிறது.

https://www.virakesari.lk/article/167750

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Eppothum Thamizhan said:

தென் ஆபிரிக்கா ஆரம்ப சுற்று போட்டிகளில் எந்த பிரச்சனையும் இல்லாது வெல்வார்கள். Semi Final, Final  போன்ற Knock out ஆட்டங்களில்தான் பிரச்சனை. இம்முறை Temba Bavuma இப்படியே காயப்பட்டு விளையாடாமல் இருந்தால் தென் ஆபிரிக்கா கோப்பையை வெல்ல சாத்தியக்கூறுகள் அதிகம். யார் வேண்டாலும் சரி ஹிந்தியன் வெல்லாட்டி சரிதான்.😜

அதே ம‌ன‌ நிலை தான் ந‌ண்பா
ஹிந்திய‌னை வீழ்த்துவ‌து க‌டின‌ம‌..........முய‌ற்ச்சி செய்தால் அவ‌ர்க‌ளை தோக்க‌டிக்க‌லாம்🥰🙏
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கில‌ன் மெக்ஸ்வெல் த‌னி ஒருவ‌னாய் அடிச்ச‌ ர‌ன்ச‌ 
நெத‌ர்லாந் அணியின் 11 வீர‌ர்க‌ளால் அடிக்க‌ முடிய‌ வில்லை

மொக்கை விளையாட்டு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியா முதலில் பட்டிங்க் செய்யாமல் நெதர்லாந்து பட்டிங்க் செய்து இருந்தால்?

நாளை இலங்கை இங்கிலாந்து போட்டி. பார்ப்போம் என்ன நடக்கின்றது என.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, நியாயம் said:

அவுஸ்திரேலியா முதலில் பட்டிங்க் செய்யாமல் நெதர்லாந்து பட்டிங்க் செய்து இருந்தால்?

நாளை இலங்கை இங்கிலாந்து போட்டி. பார்ப்போம் என்ன நடக்கின்றது என.

50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இங்லாந் தொட‌ர்ந்து இல‌ங்கையிட‌ம் தோல்வி அடையிற‌து
நாளைக்கு பாப்போம் அது மீண்டும் ந‌ட‌க்குதான்னு🥰🙏

Posted

 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மட்டுமல்ல, உலகில் நடக்கும் எல்லாப் போட்டிகளிலும் என் எதிர்ப்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான்; அது இந்தியா வெல்லக் கூடாது,

ஆனால் இம்முறை இந்தியா வென்றிடும் போல இருப்பதைக் காண சகிக்குது இல்லை.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, நிழலி said:

 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மட்டுமல்ல, உலகில் நடக்கும் எல்லாப் போட்டிகளிலும் என் எதிர்ப்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான்; அது இந்தியா வெல்லக் கூடாது,

ஆனால் இம்முறை இந்தியா வென்றிடும் போல இருப்பதைக் காண சகிக்குது இல்லை.

உண்மை தான் அவ‌ங்க‌ள் தான் அசுர‌ ப‌ல‌த்துட‌ன் நிக்கின‌ம்

ப‌ந்து வீச்சு ம‌ட்டை அடியில் திற‌ம் ப‌ட‌ செய‌ல் ப‌டின‌ம்...........

2011க‌ளில் இருந்து இவ‌ர்க‌ள் கோப்பை தூக்க‌ வில்லை
அடிச்சு பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து தோத்தா இன்னும் இன்னும் ம‌கிழ்ச்சி

என‌து விருப்ப‌ம் தென் ஆபிரிக்கா அல்ல‌து நியுசிலாந் கோப்பை தூக்க‌னும்

இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுன் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தினால் க‌ண்டிப்பாய் இந்தியாவை சிமி பின‌லில் அல்ல‌து பின‌லின் ம‌ண் க‌வ்வ‌ வைக்க‌லாம்🥰🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா மிரட்டலான ஹாட்ரிக் வெற்றி - 1999ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்புமா?

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 அக்டோபர் 2023

உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய சாதனை வெற்றியை பெற்றுள்ளது. எந்த அணியும் எட்டாத உயரத்தை ஆஸ்திரேலிய அணி எட்டியுள்ளது.

டெல்லியில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை தோற்கடித்து 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன் 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்ச ரன்களில் பெற்ற வெற்றியாக இருந்தது.அதை ஆஸ்திரேலியா முறியடித்து 309 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸி.க்கு தொடக்கமே தடுமாற்றம்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டெல்லி ஆடுகளத்தில் ஏற்கெனவே தென் ஆப்பிரி்க்க அணி வரலாற்று ஸ்கோரை பதிவு செய்த நிலையில், ஆஸ்திரேலியாவும் மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

மிட்ஷெல் மார்ஷ், வார்னர் ஆட்டத்தைத் தொடங்கினர். அதிரடியாக ஆடிய வார்னர், தத் வீசிய 4வது ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் அடித்து 16 ரன்கள் சேரத்தார். மார்ஷ் 9 ரன்கள் சேர்த்தநிலையில், வேன் பீக் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியதால் ஆஸ்திரேலிய அணி தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஸ்மித் களத்துக்கு வந்து வார்னருடன் சேர்ந்தபின் ரன்ரேட் வேறுவிதமாகத் திரும்பியது. வார்னரும், ஸ்மித்தும் பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட்டை ஓவருக்கு 6 ரன்களுக்கு குறையாமல் கொண்டு சென்றனர். வேன்பீக் வீசிய 10-வது ஓவரில் ஸ்மித் 3 பவுண்டரிகள் உள்ளிட்ட 13 ரன்கள் சேர்த்தார். 6.6 ஓவர்களில் ஆஸ்திரேலியா 50 ரன்களை எட்டி, பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் சேர்த்தது.

ஸ்மித், வார்னர் இருவரும் நிலைத்து ஆடி ரன் சேர்க்கத் தொடங்கினர். விக்ரம் ஓவரில் 2 பவுண்டரி, சிக்ஸர் உள்ளிட்ட 18 ரன்களை வார்னர் சேர்த்தார். அதிரடியாக பேட் செய்த வார்னர் 40 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்மித் முதல் அரைசதம்

17.1ஓவர்களில் 100 ரன்களை எட்டிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 126 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 53 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். டீ லீட் வீசிய 23-வது ஓவரில் ஸ்மித் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், வார்னர் இரு பவுண்டரிகளையும் விளாசி 19 ரன்கள் சேர்த்தனர்.

ஸ்மித்-வார்னர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தனர். 2017ம் ஆண்டிலிருந்து இதுவரை இருவரும் 5வது முறையாக ஒருநாள் போட்டியில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 71 ரன்கள் சேர்த்தநிலையில்(9பவுண்டரி, ஒருசிக்ஸர்) ஆர்யன் தத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வார்னர், ஸ்மித் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

லாபுஷேன் அதிரடி

அடுத்துவந்த லாபுஷேன், வார்னருடன் சேர்ந்தார். 20 ஓவர்கள் முதல் 30 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் சேர்த்தது. 30ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. 31.2 ஓவர்களில் 200 ரன்களை ஆஸ்திரேலிய அணி எட்டியது. ஓவருக்கு 6ரன்களுக்கு குறையாமல் ரன்ரேட்டை ஆஸ்திரேலிய அணியினர் கொண்டு சென்றனர்.

ஆனால், அடுத்த 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பது வேகமெடுத்தது. லாபுஷேன், வார்னர் இருவரும் நெதர்லாந்து பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினர். நிதானமாக ஆடக்கூடிய லாபுஷேன் அதிரடியாக ரன்களைக் குவித்தார். நெதர்லாந்து பந்துவீச்சாளர் வேன் டெர் மெர்வ் வீசிய 34-வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 15 ரன்கள் லாபுஷேன் சேர்த்து 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் டீ லீ்ட் பந்துவீச்சில் 62 ரன்கள் சேர்த்தநிலையில் லாபுஷேன் ஆட்டமிழந்தார். வார்னர்-லாபுஷேன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சச்சின் சாதனையை சமன் செய்த வார்னர்

அடுத்துவந்த இங்கிலிஸ், வார்னருடன் இணைந்தார். சதத்தை நோக்கி நகர்ந்த டேவிட் வார்னர் 91 பந்துகளில் சதம் அடித்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் வார்னர் அடிக்கும் 2வது சதம் மற்றும் 22வது ஒருநாள் சதத்தை நிறைவுசெய்தார். உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவகையில் சச்சினின் 6 சதங்களை வார்னர் சமன் செய்தார்.

இங்கிலிஷ் வந்த வேகத்தில் 14 ரன்கள் சேர்த்தநிலையில் லீட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சிறிதுநேரத்தில் வார்னர் 104 ரன்கள் சேர்த்தநிலையில்(11பவுண்டரி, 3 சிக்ஸர்) வேன் பீக் ஓவரில் விக்கெட்டை இழந்தார். கேமரூன் க்ரீன் நிலைக்காமல் 8 ரன்னில் ரன்அவுட் ஆகினார்.

ஆஸ்திரேலிய அணி 244 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 46 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்

40 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 10 ஓவர்கள் பவர்ப்ளே என்பதால், ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றார்போல் மேக்ஸ்வெல், கேப்டன் கம்மின்ஸ் இணைந்தனர். ஒருநாள் போட்டிகளில் டெத் ஓவர்களில் மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக்ரேட் 167 வைத்துள்ளதால், மேக்ஸ்வெல் நிலைத்தால் ஏதேனும் பெரியஸ்கோர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோன்று, மேக்ஸ்வெல் வெளுத்து வாங்கினார்.

லீட் வீசிய 41வது ஓவரில் மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 14 ரன்களை சேர்த்தார். 43.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை எட்டியது. மீக்ரன் வீசிய 46-வது ஓவரில் மேக்ஸ்வெல் சிக்ஸர், பவுண்டரி உள்ளிட்ட 13 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதன்பின் மேக்ஸ்வெல் பேட்டில் பட்ட பந்துகள் சிக்ஸர், பவுண்டரிக்கு பறந்தவாறு இருந்தது. 27 பந்துகளில் அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் அடுத்த 13 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டி 40 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.

இதில் டீ லீட் வீசிய 45 ஓவரில் மேக்ஸ்வெல் 2 சிக்ஸர்கள் உள்ளிட்ட 15 ரன்கள், வேன் பீக் வீசிய 46-வது ஓவரில் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி உள்ளிட்ட 21 ரன்கள், டீ லீட் வீசிய 49வது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர், நோபாலில் சிக்ஸர் என 40 பந்துகளில் மேக்ஸ்வெல் சதத்தை நிறைவு செய்தார்.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பையில் மேக்ஸ்வெல் சாதனை

உலகக்கோப்பைப் போட்டியில் அதிவேகமாக 40 பந்துகளில் சதம் அடித்து மேக்ஸ்வெல் புதிய வரலாற்றைப் பதிவு செய்தார். மேக்ஸ்வெல் ருத்தர தாண்டவம் ஒருபுறம் ஆட, கம்மின்ஸ் ஸ்ட்ரைக்கை மேக்ஸ்வெலிடம் அளித்து வெறும் 8 பந்துகள் மட்டுமே சந்தித்திருந்தார்.

வேன் பீக் வீசிய 50-வது ஓவரில் மேக்ஸ்வெல் 106 ரன்கள் சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார்(44 பந்துகள் 8 சிக்ஸர், 9பவுண்டரிகள்). 7-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ், மேக்ஸ்வெல் ஜோடி 103 ரன்கள் சேர்த்தனர். இந்த 103 ரன்களில் 99 சதவீதம் மேக்ஸ்வெல் மட்டும் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டியைப் பார்க்க டிக்கெட் எடுத்த வந்த ரசிகர்களுக்கு டி20 போட்டியை பார்த்த உணர்வை மேக்ஸ்வெல் ஏற்படுத்தினார். அதிலும் 40 ஓவர்களுக்கு மேல் மேக்ஸ்வெல் வெளுத்து வாங்கினார்.

கடந்த 4 போட்டிகளிலும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் டக்அவுட்டிலும், சொற் ரன்னிலும் ஆட்டமிழந்த மேக்ஸ்வெல் இந்த உலகக் கோப்பையில் முதல் சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனையான கடைசி 10 ஓவர்கள்

ஆஸ்திரேலிய அணி கடைசி 10 ஓவர்களில் 131 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு வார்னர், லாபுஷேன், மேக்ஸ்வெல் ஆகிய மூவரும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தனர். நடுப்பகுதி ஓவர்களில் 3 விக்கெட்டுகள் விரைவாக விழுந்தவுடன் ஆட்டம் நெதர்லாந்து பக்கம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

4வது அதிவேக சதம்

ஆனால், மேக்ஸ்வெல் களமிறங்கியபின் ஆட்டத்தின் போக்கு மாறியது. உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்த பெருமையை மேக்ஸ்வெல் பெற்றார். இதற்கு முன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்ததே குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையாக இருந்தது, அதை மேக்ஸ்வெல் முறியடித்தார்.

ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, அதிவேகமாக சதம் அடித்த பேட்டர்களில் மேக்ஸ்வெல் 4வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் டீ வில்லியர்ஸ் உள்ளார்.

ஆக்கர் மேன் புறக்கணிப்பு ஏன்?

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை மேக்ஸ்வெல், வார்னர், லாபுஷேன் மூவரும் சேர்ந்து துவைத்து எடுத்தனர். இதில் பாஸ் டீ லீட் 10ஓவர்கள் வீசி 115 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் அதிகமான ரன்கள் கொடுத்த வள்ளலாக மாறினார்.

மீக்ரன் 10 ஓவர்களில் 64, வேன் பீக் 10ஓவர்களில் 74 ரன்களை வாரி வழங்கினர். இந்த 3 பந்துவீச்சாளர்கள் மட்டும் 253 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். ஆர்யன் தத் தனது பங்கிற்கு 7ஓவர்களில் 59 ரன்களை கொடுத்துள்ளார். நெதர்லாந்து தரப்பில் ஆக்கர்மேன் தவிர அனைத்துப் பந்துவீச்சாளர்களும் சராசரியாக ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வழங்கினர்.

ஆனால் ஆக்கர்மேன் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அவருக்கு தொடர்ந்து ஓவர்கள் வழங்கப்படாமல் புறக்கணிப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை. கட்டுக் கோப்பாகப் பந்துவீசிய ஆக்கர்மேனுக்கு பந்துவீச வாய்ப்பு இல்லை, ஆனால், வள்ளல் டீ லீட், வேன் பீக் ஆகியோருக்கு 10 ஓவர்கள் வழங்கப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

2019ல் ரஷித் கான் நினைவிருக்கா!

2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆட்டத்தில் ரஷித் கான் பந்துவீச்சு அடித்து துவைக்கப்பட்டது. 9 ஓவர்கள் வீசிய ரஷித் கான் 110 ரன்களை வாரி வழங்கினார். அதுதான் உலகக் கோப்பையில் மோசமான பந்துவீச்சாக இருந்தது, அதையெல்லாம் பீட் செய்துவிட்டார் டீ லீட் 115 ரன்களை வழங்கியுள்ளார். ஆனால், ரஷித் கான் ஓவருக்கு 12.22 ரன்களை வழங்கிய நிலையில் டீ லீட், ஓவருக்கு 11.5 ரன்கள்தான் வழங்கியுள்ளதை நினைத்து ஆறுதல் படலாம். ஆதலால், டீ லீட் ஓவரைவிட ரஷித் கான்தான் பெரிய வள்ளல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

வார்னருக்கு 2வது வாய்ப்பு ஆபத்து

வார்னருக்கு கேட்ச் வாய்ப்பை தவறவிடும் போதெல்லாம் அந்த ஆட்டத்திஸ் விஸ்வரூமெடுக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வார்னர் கொடுத்த கேட்சை தவறவிட்டதற்கு பெரிய தண்டனை கிடைத்தது. இன்றைய ஆட்டத்தில் வார்னருக்கு கேட்சை நெதர்லாந்து தவறவிட்டதற்கு பெரிதாக வாங்கிக் கட்டிக்கொண்டது. வார்னருக்கு 2வது வாய்ப்பு வழங்குவது ஆபத்தில் முடியும்.

பவர் ப்ளேயில் 3 விக்கெட்

400 ரன்கள் இலக்கு என்பது நிச்சயமாக நெதர்லாந்து போன்ற வளர்ந்துவரும் அணிக்கு கடப்பாறையை விழுங்குவது போலத்தான். நிச்சயமாக இந்த இலக்கை எட்ட முடியாது என்பது தெரிந்துதான் தானாகவே வந்து ஆஸ்திரேலியாவிடம் சரண் அடைந்துவிட்டது.

நெதர்லாந்து அணி சேஸிங்கைத் தொடங்கியபோதே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பாதாளத்தில் சரிந்தது. விக்ரம்ஜித் அதிரடியாகத் தொடங்கினாலும் 25 ரன்களில் ரன்அவுட்டாகியது அந்த அணிக்கு இடியாக இறங்கியது, 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து தடுமாறியது.

பவர் ப்ளே விக்கெட் உத்தி

பவர்ப்ளேயில் 3 விக்கெட்டை வீழ்த்தி எதிரணிகளை கலங்கடிக்கும் உத்தியை 4 போட்டிகளில் 3வதுமுறையாக ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்திலும் செய்தது. இந்தியாவுக்கு எதிராக கடைபிடித்த உத்தியை 3வதுமுறையாக ஆஸ்திரேலியா செய்துள்ளது. இதன் மூலம் எதிரணி பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழக்கும்போது, ஸ்கோர் செய்யும் வேகம் குறையும், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி எளிதாகும்

நெதர்லாந்து அணியில் விக்ரம் சேர்த்த 25 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராகும். மற்ற பேட்டர்கள் அனைவரும், 15 ரன்களுக்குள் கீழாகவே சேர்த்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி, அடுத்த 43 ரன்களுக்குள் மீதமிருக்கும் 7 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிலும் 84 ரன்களில் இருந்து 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை நெதர்லாந்து இழந்தது தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஸம்பா 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆடம் ஸம்பா ஹாட்ரிக்

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு பேட்டர்களான வார்னர், லாபுஷேன், மேக்ஸ்வெல் சேர்த்த மிகப்பெரிய ஸ்கோர் முக்கியக் காரணம் என்றாலும், பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை விரைவாக முடிக்க வழிகாட்டினார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து 3வது முறையாக 4 விக்கெட்டுகளை ஆடம் ஸம்பா வீழ்த்தியுள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீ்ச்சாளர்களிலும் ஸம்பா(13) முதலிடத்தில் உள்ளார்.

மிட்ஷெல் ஸ்டார்க்கைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 23 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்டார்க் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தாமல் இருந்ததில்லை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் 2003 முதல் 2007 வரை உலகக் கோப்பையில் 13 ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட் எடுக்காமல்கூட இருந்ததில்லை என்ற சாதனையை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் வைத்திருந்தார்.

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலிங்கா சாதனையை சமன் செய்த ஸ்டார்க்

நெதர்லாந்து வீரர் மேக்ஸ் ஓ டோவ் விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்தியபோது, உலகக் கோப்பை தொடரில் 56 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை எட்டி, இலங்கை முன்னாள் வீரர் ரஷித் மல்லிங்காவுடன் இணைந்தார். மெக்ராத் 71 விக்கெட்டுகளையும், முத்தையா முரளிதரன்68 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

1999-ம் ஆண்டு வரலாறு திரும்புமா?

ஆஸ்திரேலிய அணியின் ரன்குவிப்புக்கு முக்கியக் காரணமாக இருந்த 40 பந்துகளில் சதம் அடித்த மேக்ஸ்வெலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மற்றொரு வீரரான டேவிட் வார்னரும் சதம் அடித்து பங்களிப்பு செய்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 3 வெற்றி,2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் நிகர ரன்ரேட் மைனசில் இருந்து பிளஸ்க்கு உயர்ந்து 1.142 என உயர்ந்துள்ளது. இதேபோன்று அடுத்துவரும் ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா விளையாடினால், அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

எதுவுமே செய்யாமல் 8-வது இடம் வந்த இங்கிலாந்து

இங்கிலாந்து அணி கடந்த 3 நாட்களாக எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல் 10-வது இடத்தில் இருந்தது. ஆனால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியால், இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திலிருந்து, 9-வது இடத்துக்கு உயர்ந்து, நெதர்லாந்து தோல்வியால் 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வங்கதேசம் சந்தித்த மாபெரும் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நெதர்லாந்தின் மோசமான தோல்விதான் இங்கிலாந்து அணியின் தரவரிசையை உயர்த்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c51jzlrr192o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றிக்கு ஏங்கும் இலங்கையின் பலவீனங்கள் என்னென்ன?

இலங்கை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஒரு நாள் போட்டியில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்த இலங்கையும் இந்த உலகக் கோப்பை தொடரில் பரிதாபமான நிலையில் இருக்கின்றன.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை பெரும் அதிர்ச்சியான முடிவுகளை வழங்கியுள்ளது. 4 போட்டிகளில் மோதிய இங்கிலாந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நிகர ரன்ரேட்டும் படுமோசமாகச் சரிந்துள்ளது.

இலங்கை அணி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று, 3 போட்டிகளில் இலங்கை தோற்று, 2 புள்ளிகளுடன் உள்ளது.

 
இலங்கை கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்கு ஏங்கும் அணிகளின் மோதல்

இப்படி நெருக்கடியான நிலைமையில் இருக்கும் இரு அணிகள் மோதுவதால், பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடைபெறும் இன்றைய போட்டி இரு அணி அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. வெற்றிக்கு ஏங்கியிருக்கும் இரு அணிகளும் முழுத் திறனையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இரு அணிகளுக்குமே பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் பலவீனமாகவே இருக்கின்றன. அதிலும் இலங்கை அணி ஒரு போட்டியில் 428 ரன்களையும் மற்றொரு போட்டியில் 345 ரன்களையும் கொடுத்தது பந்துவீச்சின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்தப் பலவீனம் இங்கிலாந்துக்கு ஒரு வகையில் சாதகமாகவே அமையப் போகிறது என்று கூறலாம்.

பெங்களூர் சின்னசாமி அரங்கம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால், இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு அது பெரும் சவாலாகவே இருக்கும்.

 
வெற்றிக்கு ஏங்கும் இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து முன்நிற்கும் சவால்கள்

அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்புள்ள அணியாக இங்கிலாந்து கணிக்கப்பட்டநிலையில் அதன் செயல்பாடு படுமோசமாகியுள்ளது. அரையிறுதி வாய்ப்பும் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது. இங்கிலாந்து அணி வீறுகொண்டு எழுந்து, அடுத்துவரும் 5 ஆட்டங்களிலும் வென்றால் 12 புள்ளிகள் பெற்று அரையிறுதிச் சுற்றுக்குள் செல்ல முடியும்.

நெதர்லாந்து, இலங்கை அணிகளை இங்கிலாந்து எளிதாக வென்றுவிட வாய்ப்புள்ளது. ஆனால், பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்துவது கடினமான போராட்டமாக அமையும்.

அதிலும் இந்திய அணி தற்போதிருக்கும் ஃபார்மில் வெற்றி பெறுவது கடினமானது. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கடும்போட்டி எப்போதுமே இருக்கும் என்பதால், அந்த ஆட்டத்திலும் வெற்றி கிடைப்பது கடினம். பாகிஸ்தானும் நாக்அவுட் சுற்று செல்ல கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும். இந்த சவால்களைக் கடந்து இங்கிலாந்து வெல்ல வேண்டும்.

இங்கிலாந்து அணியின் நம்பிக்கையற்ற பந்துவீச்சு, சோர்வடைந்த பேட்டிங், சுறுசுறுப்பில்லாத பீ்ல்டிங் போன்றவை அந்த அணியை ஏற்கெனவே பின்னுக்குத் தள்ளிவி்ட்டது. இலங்கையுடனான போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரிலிருந்து மோசமாக வெளியேறும் நிலை ஏற்படும்.

இங்கிலாந்து அணி கடந்த 4 நாட்களாக எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல் 10-வது இடத்தில் இருந்தது. ஆனால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியால், இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திலிருந்து, 9-வது இடத்துக்கு உயர்ந்து, நெதர்லாந்து தோல்வியால் 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வங்கதேசம் சந்தித்த மாபெரும் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நெதர்லாந்தின் மோசமான தோல்விதான் இங்கிலாந்து அணியின் தரவரிசையை உயர்த்தியுள்ளது.

 
பென் ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை முன் நிற்கும் சவால்கள்

இலங்கை அணி அரையிறுதிக்குச் செல்ல அடுத்துவரும் 5 போட்டிகளிலும் வெல்வது கட்டாயம். ஆனால், அது மிகவும் சவாலானது. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளின் ஃபார்மிற்கு முன் அது கேள்விக்குறிதான். இலங்கை அணி ஒரு தோல்வி அடைந்தால்கூட அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

8-வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி தன்னை உயர்த்திக்கொள்ள வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை வெல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதிலும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய ஃபார்மில் அதுவும் சிக்கலானதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆதலால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பு என்பது ஏதாவது மாயாஜாலம் நிகழந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

பலவீனமான பந்துவீச்சால் ரன்களை வாரிவழங்குவது இலங்கை அணியின் மிகப்பெரிய பலவீனம். நெதர்லாந்து அணியைத் தவிர வேறு அணிகள் எதையும் இலங்கை இதுவரை வெல்லவில்லை. காயங்கள் காரணமாக முக்கிய வீரர்கள் இல்லாததும் அந்த அந்த அணிக்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cyd1ler0797o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
England FlagEngland       (22.1/50 ov) 108/5

England chose to bat.

Current RR: 4.87   • Last 5 ov (RR): 23/0 (4.60)   Live Forecast:ENG 223




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.