Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் காணாமல் போன யுவதியின் சடலம் புதைகுழியில் கண்டுபிடிப்பு - நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை யுவதி சடலமாக மீட்பு
13 மே 2023

கம்பளை - வெலிகல்ல - எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா முனவர் என்ற யுவதி, கடந்த 7ம் தேதி காலை காணாமல் போயிருந்தார்.

பேராதனை - கெலிஓய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் இந்த யுவதி பணிப்புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், எல்பிட்டிய பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து கெலிஓய பகுதியிலுள்ள தனது வேலைத்தளத்திற்கு கடந்த 7ம் தேதி காலை குறித்த யுவதி சென்றுள்ளார்.

தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த யுவதி செல்லும் காணொளி பதிவாகியிருந்தது.

எனினும், அதனை அடுத்துள்ள எந்தவொரு சி.சி.டி.வி கமராவிலும் இந்த யுவதி பயணித்தமைக்கான ஆதாரங்கள் பதிவாகியிருக்கவில்லை.

பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், குறித்த யுவதி பயணிக்கும் தருணத்தில் அவருக்கு பின்னால் இளைஞன் ஒருவன் செல்லும் விதம் பதிவாகியிருந்தது.

அதேவேளை, அந்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் பதிவாகிய நிலையில், இந்த இளைஞன் மற்றும் முச்சக்கரவண்டி தொடர்பில் பிரதேசத்தில் சந்தேகம் நிலவியது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆடு வளர்ப்பில் ஈடுபடும் இளைஞன் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டது.

எல்பிட்டிய பகுதியானது, பெருமளவில் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியாகும்.

குறித்த யுவதிக்கு பின்னால் சென்ற இளைஞனுக்கும், யுவதிக்கும் இடையில் சுமார் 50 மீட்டர் வித்தியாசமே காணப்பட்டமையினால், இந்த யுவதி காணாமல் போனமை குறித்து ஏதோ ஒரு விடயம் இளைஞன் அறிந்திருப்பான் என்ற சந்தேகம் நிலவியது.

சரண் அடைந்த இளைஞர்

இந்த நிலையில், அன்றைய தினம் இரவு குடும்பத்தினர் கம்பளை போலீஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்திருந்தனர்.

அதையடுத்து, போலீஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியின் இரு புறத்திலும் உள்ள காட்டு பகுதிக்குள் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், எந்தவொரு தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், யுவதிக்கு பின்னால் சென்ற குறித்த இளைஞன், கம்பளை போலீஸ் நிலையத்தில் நேற்றைய தினம் சரணடைந்திருந்தார்.

இந்த யுவதியை தானே கொலை செய்து, புதைத்துள்ளதாக தெரிவித்து, குறித்த இளைஞன் சரணடைந்திருந்தார்.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த போலீஸார், சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தேடுதல்களை முன்னெடுத்திருந்தனர்.

பள்ளிவாசல் வளாகத்திலிருந்து பிரதான வீதியூடாக சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள காட்டுப் பகுதிக்குள், பிரதான வீதியிலிருந்து சுமார் 50 மீட்டரில் சடலம் புதைக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்களை போலீஸார் கண்டுபிடித்தனர்.

குழியொன்று தோண்டப்பட்டு, சடலம் புதைக்கப்பட்டமைக்கான தடயங்களை போலீஸார் நேற்றைய தினம் அவதானித்தனர்.

அதேவேளை, குறித்த யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் பாதணியொன்றும், தண்ணீர் போத்தல் ஒன்றும் அந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை யுவதி சடலமாக மீட்பு

இதையடுத்து, பிரதேசத்தில் நேற்றைய தினம் சில மணிநேரம் அமைதியின்மை நிலவியது.

சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பிரதேச மக்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும், போலீஸார் பிரதேச மக்களை சமாதானப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நீதவான் முன்னிலையில் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்டு, யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கை யுவதி சடலமாக மீட்பு

சந்தேக நபரின் வாட்ஸ்அப் தகவல்

குறித்த பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்ப்பில் ஈடுபடும் 24 வயதான இளைஞனே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சரணடைவதற்கு முன்னர் பிரதேச மக்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக, குரல் பதிவொன்றை அனுப்பியுள்ளார்.

தான் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமையே, இந்த கொலையை செய்வதற்கான காரணம் என அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''நான் நன்றாக தான் இருந்தேன். வாகனங்களுக்கு பெயின்ட் அடிப்பது தான் எனது வேலை. கடைசியில் எனது நிலைமை என்னவென்றால், நான் போதைக்கு அடிமையாகி விட்டேன். எங்க ஊரில் போதைப்பொருள் இருக்கின்றது. ஊரிலுள்ள அதிகளவானோர் போதையில் தான் இருப்பார்கள். யார் யார் என்பதை நான் சொல்லுவேன். எனது வாழ்க்கை சீரழிவதற்கு அவர்கள் தான் காரணம். அவர்கள் கொண்டு வந்ததனால் தான் அந்த அதை குடித்தேன். நான் அதை பாவித்து பாவித்து, எனது மூளை வத்தி போனது. இந்த போதைப்பொருளினால் தான் எனது வாழ்க்கை சீரழிந்தது. நான் இப்போது கொலைகாரனாகி விட்டேன்.

அன்றைக்கு என்ன நடந்தது என்றால், நான் புல் வெட்ட போயிருந்தேன். போதைப்பொருள் பயன்படுத்தியே சென்றேன். என்ன செய்தேன் என்றே விளங்கவில்லை. வீதியில் சென்ற இந்த பிள்ளையிடம் பணம் கேட்டேன். அந்த பிள்ளை கத்தினாள். அப்போது கழுத்தை பிடித்து நசுக்கினேன். கீழே வீழுந்தார். எனது முகத்தை பிச்சு எடுத்தாள். கடைசியில் எனது கையால் அந்த பிள்ளையின் உயிர் போக வேண்டிய நிலைமை வந்தது. கடைசியில் அந்த இடத்திலேயே குழியொன்றை தோண்டி, அந்த இடத்திலேயே புதைத்து விட்டேன்.

நான் செய்தது தவறு தான். அந்த போதைய பயன்படுத்தாமல் இருக்கும் போது தான் அது தெரிகின்றது. நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் தெரிகின்றது. எல்லாரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்." என சரணடைந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இலங்கை யுவதி சடலமாக மீட்பு

பட மூலாதாரம்,SRI LANKA POLICE

 
படக்குறிப்பு,

நிஹால் தல்துவ, போலீஸ் ஊடக பேச்சாளர்

போலீஸாரின் பதில்

குறித்த இளைஞன் இந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வேளையில், அதனை நிராகரித்தமையினால் இந்த கொலையை செய்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் போலீஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குறித்த யுவதியை பலவந்தமாக அருகாமையிலுள்ள காட்டுப் பகுதிக்குள் இழுத்து சென்று, அந்த இளைஞன் கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட யுவதியை, அதே இடத்தில் புதைத்துள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c51l4pnpw39o

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தீவான இலங்கைக்குள் இவ்வளவு பாதுகாப்பு நடைமுறைகளையும் தாண்டி எப்படி போதைப்பொருள் நாட்டுக்குள் வருகுது. நாட்டைப் பாதுகாக்க வேண்டியவர்களே.. அந்த தொழிலை விட்டிட்டு.. போதைப் பொருளும்.. இனவாத நடவடிக்கைகளும் செய்வதால் போலும். ஒரு பக்கம் போதைப்பொருள்.. இன்னொரு பக்கம் புத்த விகாரை. மக்களை ஒரே போதையில் வைச்சிருப்பதே இவர்களின் நோக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸ் போன்றதொரு நிலைக்கு இலங்கையை கொண்டுசெல்ல மியற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

பிலிப்பைன்ஸ் போன்றதொரு நிலைக்கு இலங்கையை கொண்டுசெல்ல மியற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. 

பிலிபைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி போதை வஸ்து வியாபாரிகள், விநியோகிப்போர் , பாவிப்போர் என அனைவரையும் சுட்டு தள்ளும்படி கூறினார். அப்படியும் செய்தார்கள். அதைத்தான் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
அப்படியான ஒரு நிலைமை இங்கு எடுக்க மாடடார்களென நினைக்கிறேன். அப்படி என்றால் முதலில் அரசியல் வாதிகளைத்தான் போட்டு தள்ள வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

நான் போதைக்கு அடிமையாகி விட்டேன். எங்க ஊரில் போதைப்பொருள் இருக்கின்றது. ஊரிலுள்ள அதிகளவானோர் போதையில் தான் இருப்பார்கள். யார் யார் என்பதை நான் சொல்லுவேன். எனது வாழ்க்கை சீரழிவதற்கு அவர்கள் தான் காரணம். அவர்கள் கொண்டு வந்ததனால் தான் அந்த அதை குடித்தேன். நான் அதை பாவித்து பாவித்து, எனது மூளை வத்தி போனது. இந்த போதைப்பொருளினால் தான் எனது வாழ்க்கை சீரழிந்தது. நான் இப்போது கொலைகாரனாகி விட்டேன்.

 

18 hours ago, ஏராளன் said:

அன்றைக்கு என்ன நடந்தது என்றால், நான் புல் வெட்ட போயிருந்தேன். போதைப்பொருள் பயன்படுத்தியே சென்றேன். என்ன செய்தேன் என்றே விளங்கவில்லை. வீதியில் சென்ற இந்த பிள்ளையிடம் பணம் கேட்டேன். அந்த பிள்ளை கத்தினாள். அப்போது கழுத்தை பிடித்து நசுக்கினேன். கீழே வீழுந்தார். எனது முகத்தை பிச்சு எடுத்தாள். கடைசியில் எனது கையால் அந்த பிள்ளையின் உயிர் போக வேண்டிய நிலைமை வந்தது. கடைசியில் அந்த இடத்திலேயே குழியொன்றை தோண்டி, அந்த இடத்திலேயே புதைத்து விட்டேன்.

 

18 hours ago, ஏராளன் said:

குறித்த இளைஞன் இந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வேளையில், அதனை நிராகரித்தமையினால் இந்த கொலையை செய்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

எவ்வளவு நிதானமாக, விளக்கமாக, தெளிவான வாக்குமூலம் அளித்திருக்கிறார். புதைப்பதற்கு, மண்வெட்டி குழி எல்லாம்......? போதையிலும் தெளிவாகத்தான் யோசித்திருக்கிறார்! கொஞ்சம் தெளிவான போதைப்பொருளாக இருக்குமோ? மனநலம் பாதிப்பு, போதைப்பொருள் பாவனை நல்ல காரணங்கள். அப்போ.... இராணுவத்தினரும் பிக்குகளும் அடாவடி பண்ணுவதற்கு இவைகள்தான் காரணமோ? இவர்களை தண்டிக்க முதல் இவைகளை தடுக்க தவறிய அதிகாரிகளை, அரசுகளை தண்டிக்கவேண்டும்! அதற்கு அவர்கள் பொறுப்பேற்று தங்கள் பதவிகளை துறக்க வேண்டும். அதுதான் முறை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

பிலிபைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி போதை வஸ்து வியாபாரிகள், விநியோகிப்போர் , பாவிப்போர் என அனைவரையும் சுட்டு தள்ளும்படி கூறினார். அப்படியும் செய்தார்கள். அதைத்தான் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
அப்படியான ஒரு நிலைமை இங்கு எடுக்க மாடடார்களென நினைக்கிறேன். அப்படி என்றால் முதலில் அரசியல் வாதிகளைத்தான் போட்டு தள்ள வேண்டி வரும்.

சாபு எனப்படும் போதைப்பொருள் பிலிப்பைன்ஸ்சைப் போட்டு ஆட்டுவித்தது. அப்படி ஒரு நிலைமை இலங்கைக்கு வெகுவிரைவில் ஏற்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த துர்ப்பாக்கிய சம்பவத்திற்கு சந்தேக நபரின் போதைபொருள் பாவனை தான் காரணம் என்று பிரச்சினையை சீக்கிரமாகவே முடித்துவிட போலீசார் முயற்சிப்பது போலுள்ளது.

இறந்த பெண் வயதில் குறைந்த ஒரு இளம் யுவதி என்பதும் அவர் மருந்தகத்தில் வேலை செய்பவர் என்பதும் தெரிந்த  குற்றவாளி அவரை குறிவைத்து பின்தொடர்ந்து சென்று அவர் தனது வழிக்கு வராததால் அவரை கொலை செய்துள்ளார்  என்பதை ஊகிக்க முடிகிறது.

மருந்தகங்களில் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும்  போதைபொருள் எதையாவது இறந்த யுவதியின் ஊடாக பெற்றுகொள்ள சந்தேக நபர் முயற்சித்தாரா என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும்.

சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டால் போதைபொருள் விற்பவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க இதுபோன்ற  சம்பவங்கள் வழிசெய்யும் என்பது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள்  சட்டத்தை... சிங்கப்பூர் மாதிரி, கடுமையாக கொண்டு வராதவரை 
இதனை கட்டுக்குள் கொண்டு வருவது சிரமம்.
ஆனால்... அரசியல்வாதிகளும், காவல் துறையும் இதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு இது வருமானத்தை தரும் அட்சய  பாத்திரம்.
நாட்டு மக்கள் தான் பாவம்.
தமிழ் நாட்டில்... அரசியல்வாதிகளே... சாராயத்தை காய்ச்சி விற்றுக் கொண்டு,
மதுவை ஒழிப்போம் என்று கோசமும் போடுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பளை கொலை வழக்கு: யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை

ஒரு வாரத்திற்கு முன்னர் பணியிடத்திற்கு செல்லும் வழியில் கொல்லப்பட்ட 22 வயதுடைய பெண் பாத்திமா முனவ்வராவின் சடலம் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

சடலம், கம்பளை சட்டத்தரணி நீதவான் ரஞ்சித் பிரேமரத்ன மற்றும் கண்டி JMO வைத்தியர் ஆர்.பி. ஜெயசூர்யா ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை (13) தோண்டி எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலை செய்ததை குறித்த நபர் ஒப்புக்கொண்டார். உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் உட்பட உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டது.

அவளது உடல் புதைக்கப்பட்டிருந்த குழி போதுமான ஆழமில்லாததால் கையால் மண்ணை அகற்றியபோது உடல் மீட்கப்பட்டது.

அவளது கைத்தொலைபேசி, மதிய உணவு, கைப்பை மற்றும் அவர் பணியாற்றிய மருந்தகத்தின் சாவிகள் குழியிலிருந்து மீட்கப்பட்டன. எனினும், சந்தேக நபர் குறித்த பெண்ணின் ஜோடி செருப்பு மற்றும் தண்ணீர் போத்தலை காட்டுக்குள் வீசியுள்ளார். காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது தரையில் விழுந்த பெண்ணின் கைக்கடிகாரம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த இளம்பெண், கெலிஓயாவுக்கு பேருந்தில் செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது, புதர் காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அஹமட் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர் மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். கம்பலவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபரை, தகவலாளர் ஒருவரிடமிருந்து பெற்ற தகவலின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அந்த இளம் பெண்ணை கற்பழிப்பதற்காக தென்னந்தோப்புக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர் தப்பிக்க முயன்றபோது கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

https://thinakkural.lk/article/253694

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vanangaamudi said:

சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டால் போதைபொருள் விற்பவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க இதுபோன்ற  சம்பவங்கள் வழிசெய்யும் என்பது நிச்சயம்.

 

On 14/5/2023 at 17:23, ஏராளன் said:

எங்க ஊரில் போதைப்பொருள் இருக்கின்றது. ஊரிலுள்ள அதிகளவானோர் போதையில் தான் இருப்பார்கள். யார் யார் என்பதை நான் சொல்லுவேன். எனது வாழ்க்கை சீரழிவதற்கு அவர்கள் தான் காரணம். அவர்கள் கொண்டு வந்ததனால் தான் அந்த அதை குடித்தேன்.

 

6 hours ago, ஏராளன் said:

பெண் பாத்திமா முனவ்வராவின் சடலம் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

 

On 14/5/2023 at 17:23, ஏராளன் said:

வீதியில் சென்ற இந்த பிள்ளையிடம் பணம் கேட்டேன். அந்த பிள்ளை கத்தினாள். அப்போது கழுத்தை பிடித்து நசுக்கினேன். கீழே வீழுந்தார். எனது முகத்தை பிச்சு எடுத்தாள். கடைசியில் எனது கையால் அந்த பிள்ளையின் உயிர் போக வேண்டிய நிலைமை வந்தது.

பலாத்காரம், கொலை, போதைப்பொருள் பாவனை போன்ற குற்றங்களை சந்திக்க நேரிடும். அரசே போதைப்பொருள் இறக்குமதியை ஊக்குவிக்கிறது. அரசியல்வாதிகளும், பாதுகாப்புப்படை, போலீசாரே விநியோகிக்கின்றனர். அப்பாவி மக்கள் சிக்கி தண்டனையையும், பாதிப்பையும் அனுபவிக்கின்றனர். முடிந்தால்! இவர் கொடுத்த குற்றவாளிகளையாவது தண்டித்துக்காட்டட்டும்.    

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அஹமட் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர் மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். கம்பலவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபரை, தகவலாளர் ஒருவரிடமிருந்து பெற்ற தகவலின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதுவே இந்தியாவில் ஒரு முஸ்லிம்பெண்ணிற்கு நடந்து குற்றவாளியாக பிற மதத்தவன் இருந்திருக்க வேண்டும். அமைதி மார்க்கத்தினர் இலங்கையிலிருந்து கல் ஏறிந்து, கடித்து குதற  ஆரம்பித்திருப்பர். 
இப்ப குற்றவாளியும் அவர்களது ஆள் என்றதும் மெதுவாக ஆள்மாறி கேரளா ஸ்டோரியை பிடிச்சுவைத்து ஹைகோர்ட் புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இதுவே இந்தியாவில் ஒரு முஸ்லிம்பெண்ணிற்கு நடந்து குற்றவாளியாக பிற மதத்தவன் இருந்திருக்க வேண்டும். அமைதி மார்க்கத்தினர் இலங்கையிலிருந்து கல் ஏறிந்து, கடித்து குதற  ஆரம்பித்திருப்பர். 

இங்கும் அப்படியே நடந்திருந்தால் ......?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.