Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியில் போட்டியிட  ரொன்  டிசான்டிஸ் விண்ணப்பம்

Published By: Sethu

25 May, 2023 | 10:14 AM
image

புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ், எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டிடுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.

இக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான பிரச்சாரங்களை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

44 வயதான ரொன் டிசான்டிஸ், புளோரிடா மாநில தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது வேட்பு மனுவை புதன்கிழமைதாக்கல்   செய்தார்.

யேல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற ரொன் டிசான்டிஸ், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அமெரிக்க கடற்படையில் 2004 ஆம் ஆண்டு இணைந்த அவர், ஈராக்கிலும் பணியாற்றினார். பின்னர் கடற்படை சீல் படைப்பிரிவின் சட்ட ஆலோசகராவும் பணியாற்றினார்.  

2013 முதல் 2018 ஆம் ஆண்டுவரை அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக பதவி வகித்த அவர்,  2019 ஜனவரி முதல் புளோரிடா மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

https://www.virakesari.lk/article/156103

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

இளைஞர்கள்....இளம் வயதினர்.  தேர்தலில் போட்டுயிடுவது   நல்லது   இவரை பற்றிய மேலதிக தகவல்களை அமெரிக்கா வாழ். யாழ் கள உறவுகளிடமிருத்து.  எதிர்பார்க்கிறேன்…

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டொனால்ட் ரம்ப் வந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kandiah57 said:

இளைஞர்கள்....இளம் வயதினர்.  தேர்தலில் போட்டுயிடுவது   நல்லது   இவரை பற்றிய மேலதிக தகவல்களை அமெரிக்கா வாழ். யாழ் கள உறவுகளிடமிருத்து.  எதிர்பார்க்கிறேன்…

இளமையாக இருப்பது மட்டும் தகுதியென்றால் இவர் வருவார், ஆனால் உலகின் முக்கியமான ஒரு நாட்டிற்கு தலைவராக வர இவருக்கு இருக்கும் தகுதிகள் காணாதென நினைக்கிறேன், ஆனால் வியற்னாம், ரஷ்யா, ஹங்கேரி, துருக்கி ஆகிய நாடுகளில் ஒன்றில் இவர் மிகப் பொருத்தமான தலைவராகப் போற்றப் படுவார்😎.

"God's waiting room" என்று செல்லமாக அழைக்கப் படும் புளோரிடா என்ற தென் கிழக்கு மாநிலத்தின் ஆளுனர் டிசான்ரிஸ். இந்த மாநிலத்தில் தான் வயதான அனேக வெள்ளையின அமெரிக்கர்கள் சென்று தம் இறுதிக் காலத்தைக் கழிப்பர் - அதனால் கடவுளின் வெயிற்றிங் றூம் என்போம்.

இவரது கொள்கைகள் ட்ரம்பினால் தீர்மானிக்கப் படுகின்றன. எப்படி? ட்ரம்ப் எட்டடி பாய்ந்தால், தான் பத்தடி முன்னால் போக வேண்டுமென நினைத்துக் கொள்கை வகுப்பார் - இதனால், சிவப்புக் கட்சியும் வலது சாரிகளும் கோலோச்சும் புளோரிடாவில் இவர் பிரபலம்.

சிவப்பிற்கும், நீலத்திற்குமிடையே நடு நிலையில் நிற்கும் "யோசிக்கும்" வாக்காளர்களைக் கவர இவரிடம் ஒன்றுமில்லை. இந்த நடு நிலை வாக்காளர்களைக் கவராமல் எந்த வேட்பாளரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாது.

6 hours ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்ப் வந்தால் நல்லது.

ட்ரம்ப் 2020 இல் தோற்கவேயில்லையே? incumbent president எப்படித் தேர்தலில் போட்டி போடுவதாம்? 😎

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றிகள் பல   .....உலகில் எந்த நாட்டிலும். ...65 வயதுக்கு மேற்பட்டவர்கள்  ..ஐனதிபதி பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்கள்......ஆக பதவி வகிக்ககூடாது.    இதற்கு ஜேர்மனி ஒரு முன்னுதாரணமான நாடு    ..தங்களகவே   ஓய்வெடுத்துக் கொள்வார்கள்....இந்த விடயத்தில் அமெரிக்கா ஆசிய போல் இருக்கிறது  ஏன்??.  தகுதியான இளைஞர்கள் இல்லையா ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kandiah57 said:

 நான் நினைக்கிறேன், இது ஒவ்வொரு நாட்டினதும் தேவையைப் பொறுத்திருக்கிறது. அமெரிக்காவிற்கு அவசியம் உள்ளக ஸ்திரத் தன்மை, அதன் மூலம் பூகோள ரீதியில் ஒரு நம்பிக்கை தரக் கூடிய தலைமையாக நிலைப்பது. இதை வழங்கக் கூடிய நபரின் வயது முக்கியமல்ல, ஆனால் வயதை விட முக்கியமான சில தகுதிகள் இருக்க வேண்டும். வயசாளியான பைடன், சீனியர் புஷ், இள வயதினரான கிளின்ரன், ஒபாமா இவர்கள் நால்வரிடமும் இருந்த பொது இயல்புகளை ஒப்பிட்டுப் பாருங்கள்: அமெரிக்காவின் பங்கை தங்கள் கட்சிக் கொள்கைகளுள் குறுக்கி விடாமல், உள்ளக அரசியலிலும், வெளியுலகிலும் நிதானம், அதே நேரம் அமெரிக்க நலன்களைக் காக்கும் உறுதி என்பன கலந்த தலைமைத்துவம் இவர்களுடையது.

இவர்களோடு, இப்போது பதவிக்கு வர நினைக்கும் டிசான்ரிஸின் இயல்புகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்: ஒரு பதவியை வெல்வதற்காக, தீவிர வலதுசாரிகள் விரும்புவதையெல்லாம் செய்வேன் என்ற ஜனத்திரள்வாதம் (populism) மட்டும் அமெரிக்காவை சிறந்ததாக மாற்றாது. இவர் இளமையாக இருந்தாலும், அமெரிக்கா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்தவராக இருக்க முடியாது, இந்த நிலையில் வயதை மட்டும் வைத்து எதுவும் செய்ய இயலாதல்லவா?

எனக்குத் தெரியும் விம்பம்: வயது, மூப்பு என்பன ஒலிம்பிக்கில் போட்டியிட்டு வெல்ல ஒரு முதன்மைக் காரணியாக இருக்கலாம். ஆனால், ஒரு அணுவாயுத வல்லரசை நிர்வகிக்க வயதும் மூப்பும் அவசியமில்லாத காரணிகள். 

  • Like 5
Posted
21 hours ago, Kandiah57 said:

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றிகள் பல   .....உலகில் எந்த நாட்டிலும். ...65 வயதுக்கு மேற்பட்டவர்கள்  ..ஐனதிபதி பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்கள்......ஆக பதவி வகிக்ககூடாது.    இதற்கு ஜேர்மனி ஒரு முன்னுதாரணமான நாடு    ..தங்களகவே   ஓய்வெடுத்துக் கொள்வார்கள்....இந்த விடயத்தில் அமெரிக்கா ஆசிய போல் இருக்கிறது  ஏன்??.  தகுதியான இளைஞர்கள் இல்லையா ??

நீங்கள் வயதெல்லை பற்றிக் குறிப்பிடுவதன் நோக்கம் ஒரு நட்டை ஆட்சி செய்பவர் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் கடுத்தில் கொள்வதாக நினைக்கிறேன். வயது போக மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறைகிறது. இத்தனை வயதில்தான் ஆற்றல் குறையும் என்று வரையறுக்க முடியாது. ஒருவேளை ஜனாதிபதியாக வருபவரின் உடல் உளவியல் ஆகியவற்றைத் தேர்தலுக்கு முன்பே பரிசோதித்திருப்பார்கள்.

2008 இல் தனது 71 ஆவது வயதில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜோன் மக்கெய்னின் பேட்டி ஒன்று பார்த்தேன். நிதானமாகவும் ஆழ்ந்த சிந்தனையுடனும் பேசுவதாகத் தெரிந்தார். 2015 இல் தற்போது நடைபெறும் உக்ரெயின் போரை எதிர்வுகூறியிருந்தார். ரஸ்ய எரிபொருளை முழுமையாக நம்பியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் மாற வேண்டும் என்றும் அப்போதே கூறியிருந்தார்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, இணையவன் said:

அப்படித் தான் நானும் விளங்கிக் கொண்டேன். நீங்கள் சொல்வது போல mental acuity என்பது (அல்சைமர், பார்கின்சன் நோய் வந்தாலொழிய) எப்போது ஒருவரில் குறையும் என ஒரு எல்லை வயதை வைக்க முடியாது. சிலர் சாதாரணமான ஞாபக மறதியை mental acuity ஓடு குழப்பிக் கொள்வதுண்டு, அது சரியல்ல என நினைக்கிறேன். வயதோடு சாதாரணமான ஞாபக மறதி எல்லாரிலும் வரும், ஆனால் சிந்தனா சக்தியை அது பாதிக்காது.

ஆய்வுகளின் படி,வாழ்க்கையில் தொடர்ந்து பணி செய்து, வாசித்து/பேசி/எழுதி ஈடுபாட்டோடு இருப்போரில் ஞாபக மறதி வருவது கூடத் தள்ளிப் போடப் படுகிறது. ஹென்றி கிசிங்கர், நோம் சோம்ஸ்கி போன்றோர் 90 தாண்டியும் இன்றும் பொது வெளிகளில் தடுமாற்றமில்லாமல் செயல்படுவதற்கு இது தான் காரணம் என நினைக்கிறேன். 

  • Like 2
  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.