Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்து ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1333029

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!

இவருக்கு பின்னால் இருக்கும், இனத் துவேசம் பிடித்த 
சரத் வீரசேகரவின் படத்தை பார்க்கும் போதே..
இவர்  எப்படிப்  பட்டவர் என்று புரிந்து விட்டது.  

"உனது நண்பனை  பார்த்து... நீ, எப்படிப் பட்டவன் என்று புரிந்து கொள்ளலாம்." 

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர, விமலை தொட பயப்பிடுகின போலுள்ளது, அல்லது பெரிய மீனைப்பிடிக்க தூண்டிலோ.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடும் தூசணத்தால் ஏசி வீடியோ போடும் பிக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, colomban said:

இவர் கடும் தூசணத்தால் ஏசி வீடியோ போடும் பிக்கு

ஓ...  தூசண  பிக்கர்.  
அதுதான்.. இவரின் உடை, இளம் மஞ்சள் நிறத்தில் வித்தியாசமாக உள்ளதோ...  😂

8 hours ago, satan said:

சரத் வீரசேகர, விமலை தொட பயப்பிடுகின போலுள்ளது, அல்லது பெரிய மீனைப்பிடிக்க தூண்டிலோ.

மற்றவர்களை வெருட்டி வைக்க, இவரை பிடித்து உள்ளே வைத்திருக்கலாம்.
ரணில்...  மனதளவில், இவர்களுக்கு அதிகம் இடம் கொடுப்பதில்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இவர் கடும் தூசணத்தால் ஏசி வீடியோ போடும் பிக்கு

கேட்டுப் படித்ததை பரப்புகிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!

இவருக்கு பின்னால் இருக்கும், இனத் துவேசம் பிடித்த 
சரத் வீரசேகரவின் படத்தை பார்க்கும் போதே..
இவர்  எப்படிப்  பட்டவர் என்று புரிந்து விட்டது.  

"உனது நண்பனை  பார்த்து... நீ, எப்படிப் பட்டவன் என்று புரிந்து கொள்ளலாம்." 

இவர் ராஜாங்கனை என்னுமிடத்தில் இருக்கும் பவுத்த பிக்கு. இனப்பிரச்சினை காலத்தில் தமிழர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இடம். அங்கு ஒரு தமிழனையும் காண முடியாது. எல்லோரையும் முடித்துவிடடார்கள். இவர் ஒரு தீவிரமான ,இனத்துவேசமான பிக்கு. சரத், விமல் வீரவன்சவின் தீவிர ஆதரவாளர். இம்முறை இவர் மாதங்களுக்கு விரோதமாக பேசியதாகத்தான் கதை. ஆனாலும் அவர் பேசும்போது வாய் அசைவுகளை பார்த்தல் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறது. என்ன பேசினார் என்பது தெளிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன – பௌத்தமதகுரு குற்றச்சாட்டு

திரைமறைவு சக்திகளின் செயற்பாடுகள் பௌத்தமதகுருவொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ரஜங்கனய சத்ஹரத்ன தேரரின் சமூக ஊடக செயற்பாடுகள் குறி;த்து சிஐடியினரிடம் முறைப்பாடு செய்த பகியங்கல அனந்த சாகர தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஜங்கனய சத்ஹரத்ன தேரரை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இனங்களிற்கு இடையில் ஐக்கியமின்மையை ஏற்படுத்தும் வகையில் ரஜங்கனய சத்ஹரத்ன தேரர் சமூக ஊடகங்களில் செயற்பட்டுவந்தார் என அனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலத்தில் பல தனிநபர்கள் மதநிந்தனையில் ஈடுபட்டு;ள்ளனர் இவர்களில் பல பௌத்தமதகுருமாரும் உள்ளனர் இவர்கள் பௌத்தசாசனத்தையும் அவமதிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் ரஜங்கனய சத்ஹரரத்னதேரர் அவர் வெறுப்புணர்வை சமூக ஊடகங்களின் மூலம் ஆபாசமான மொழி பிரயோகத்துடன் பரப்புகின்றார் எனவும் அனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட மதகுருமாருக்கு எதிராகவும் மகாநாயக்க தேரர்கள் பெண்கள் சிறுவர்களிற்கு எதிராகவும்  இவர் வெறுப்புணர்வு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் கொலைகள் சமூகத்தில் வன்முறைகளை தூண்டுதல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துவருகின்றார் எனவும் அனந்த சாகார தேரர் தெரிவித்துள்ளார்.

மதஐக்கியமின்மையை ஏற்படுத்துவதற்காக ஷரியா சட்டத்தை ஆதரித்துள்ள அவர் இதன் மூலம் மத ஐக்கியமின்மையை ஏற்படுத்த முயல்கின்றார் சிறுபான்மை மற்றும் மதகுழுக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரிப்பதற்காக அவர் கருத்துக்களை வெளியிட்ட தருணங்களும் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சமூக ஊடக நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர் நாங்கள் அவரின் பிரிவின் தலைமைக்கு இது குறித்து எச்சரித்ததுடன் சமூக ஊடகங்களில் அவரின் நடவடிக்கைகளை கண்டித்தபோதிலும் அவர் தனது நடவடிக்கைகளை திருத்திக்கொள்ள முயலவில்லை என தெரிவித்துள்ள அனந்த சாகர தேரர் இதன் காரணமாக அவரின் பின்னால் திரைமறைவு சக்திகள் இருந்து அவரை ஆட்டுவிக்கின்றன என நாங்கள் கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவரது வங்கிக்கணக்குகளிற்கு பல பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்றது எனினும் இதுவரை இது தொடர்பான எவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன – பௌத்தமதகுரு குற்றச்சாட்டு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2023 at 19:05, தமிழ் சிறி said:

ஓ...  தூசண  பிக்கர்.  

தூசணப்பிக்கர் எண்டால் எங்கண்ட மட்டக்கிளப்பார் தான். இவரிண்ட சிந்து இன்னும் கேட்காததால், பட்டத்தை மாத்தேலாது.

கேட்டு, காதுக்கு இதமா இருந்தால், இவருக்கு கொடுக்கலாம். ஒகே 👍

****

இந்த திரிக்கு சம்பந்தம் இல்லாவிடினும்,  சாமியார் கதை தான்.

இலண்டணில ஒரு சாமியார், பத்தி.... வீடீயோக்கள் திரியுது வைரலா.... தமிழ் பெண்களுக்கு எச்சரிக்கையோட... 

பக்தையோட, 'பக்திபூர்வமா' ஒன்லைனில கதைச்சு துழைத்ததை பக்தை பதிவு செய்து வெளீல விட, அது நான் இல்லை, போட்டோசொப் வேலை என்று சொல்லீட்டாராம்.

கேள்விப்பட்டீர்களே?

@பெருமாள்

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Cruso said:

இவர் ராஜாங்கனை என்னுமிடத்தில் இருக்கும் பவுத்த பிக்கு. இனப்பிரச்சினை காலத்தில் தமிழர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இடம். அங்கு ஒரு தமிழனையும் காண முடியாது. எல்லோரையும் முடித்துவிடடார்கள். இவர் ஒரு தீவிரமான ,இனத்துவேசமான பிக்கு. சரத், விமல் வீரவன்சவின் தீவிர ஆதரவாளர். இம்முறை இவர் மாதங்களுக்கு விரோதமாக பேசியதாகத்தான் கதை. ஆனாலும் அவர் பேசும்போது வாய் அசைவுகளை பார்த்தல் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறது. என்ன பேசினார் என்பது தெளிவில்லை.

1 hour ago, Nathamuni said:

தூசணப்பிக்கர் எண்டால் எங்கண்ட மட்டக்கிளப்பார் தான். இவரிண்ட சிந்து இன்னும் கேட்காததால், பட்டத்தை மாத்தேலாது.

கேட்டு, காதுக்கு இதமா இருந்தால், இவருக்கு கொடுக்கலாம். ஒகே 👍

****

இந்த திரிக்கு சம்பந்தம் இல்லாவிடினும்,  சாமியார் கதை தான்.

இலண்டணில ஒரு சாமியார், பத்தி.... வீடீயோக்கள் திரியுது வைரலா.... தமிழ் பெண்களுக்கு எச்சரிக்கையோட... 

பக்தையோட, 'பக்திபூர்வமா' ஒன்லைனில கதைச்சு துழைத்ததை பதிவு செய்து வெளீல விட, அது நான் இல்லை, போட்டோசொப் வேலை என்று சொல்லீட்டாராம்.

கேள்விப்பட்டீர்களே?

@பெருமாள்

May be an illustration

No photo description available.

இவரின் கை அசைவுகளையும்... கண் உருட்டலையும், உதட்டு கடிப்பையும்... பார்க்க,
ஆள் பயங்கர காய் போல் தெரிகிறது. 
இவர் போகின்ற போக்கில்...  மற்ற  பிக்குகளையும் வெளுத்து வாங்கிய படியால்,
அவர்கள் முறைப்பாடு செய்துதான்... இவரை கைது பண்ணியிருக்கிறார்கள்.
இல்லாவிடில்... இவர் இன்னும் தமிழனையும், முஸ்லீமையும் வெருட்டிக் கொண்டு இருந்திருப்பார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 Angry Rajanganaya Sadda Rathana Himi to Bandula Gunawardana - YouTube animiertes-rasieren-rasur-bild-0019.gif

ஆள்... தலைக்கும், முகத்துக்கும்... ஷேவ் எடுக்கிறதும் குறைவு போலுள்ளது. 😂
புஸு, புஸு  என்று... எல்லா இடமும் மயிர் முளைத்திருக்கு. 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

பக்தையோட, 'பக்திபூர்வமா' ஒன்லைனில கதைச்சு துழைத்ததை பக்தை பதிவு செய்து வெளீல விட, அது நான் இல்லை, போட்டோசொப் வேலை என்று சொல்லீட்டாராம்.

கேள்விப்பட்டீர்களே?

@பெருமாள்

யாழில் இணைக்க முடியாது அவ்வளவுக்கு மோசமான  தரமில்லாதது சொற்களை கொண்டது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.