Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார நெருக்கடி எதிரொலி யாழில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2023 at 12:16, MEERA said:

ஊரில் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் செய்வது போல் நிச்சயம் எமது பிள்ளைகள் செய்யப் போவதில்லை.

ஊரில் உள்ளவர்கள் மட்டும் அல்ல எல்லாருக்கும் தெரிய வேண்டியது. இன்னும் 10 ஆண்டுகளில் உலகம் எங்கு செல்லும் என்பதே கற்பனை செய்ய கடினமாக உள்ளது. பல விடயங்கள் பழையவர்களுடன் அழிந்துவிடும்/அற்றுப்போயிடும். 

22 hours ago, Justin said:

ஆம், அது தான் யாழின் சிறப்பம்சம், ஏதாவதொரு விடயத்தில் ஒத்த கருத்து இருக்கும், சில விடயங்களில் violent disagreement இருக்கும்!😂

மேலே நீங்கள் விரிவாக எழுதியிருக்கும் கருத்துடனும் நான் 100 வீதம் உடன்படுகிறேன். நான் படித்த பாடசாலையில் இடை நிலைப்பாடசாலையில் விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்த அந்தப் பாடசாலையில் நான் எல்லா மட்டத்திலும் தொடர்பு கொண்டும் ஒன்றும் நகரவில்லை. ஆனால், ஐரோப்பாவிலிருந்து கீரிக்கட்டு விளையாட்டிற்கு பணம் அனுப்புவோரிடம் தினசரித் தொலைபேசித் தொடர்பில் இருப்பார்களாம். இந்த நிலையில், புதிய நிர்வாகம் கடந்த மாதம் பதவிக்கு வந்து சில படங்களை இணையத்தில் போட்டிருக்கிறார்கள். விஞ்ஞான ஆய்வு கூடம் 90 இல் கோட்டை அடிபாட்டுக் காலத்தில் இருந்ததை விட கேவலமான நிலையில் இருக்கிறது. ஆனால், கீரிக்கட்டு விளையாட்டிற்குக் காசு சேர்க்கும் அலுவல் தீவிரமாகத் தொடர்கிறது. இதை எழுதி என்ன பயன்?

பாடசாலை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்பதற்காக உங்கள் சமூகப்பொறுப்பை தட்டிக்கழிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உழைக்க மறுக்கும் சமுதாயம் இதோடு சேர்ந்து சமூக சீர்கேடு இன்னும்பல உருவாகுகிறது. தங்குதடையற்ற இலத்திரனியல் பயன்பாடு, குடும்ப பிரிவு, உறவுகள் அற்ற தனித்த நிலை. இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒட்டி பல காரணங்களும் பிரச்சனைகளும் காரணிகளாகின்றன. படித்த பழைய மாணவர்கள் சிலமணித்துளிகளை இவர்களுக்கு கற்பிப்பதில் செலவிடலாம். ஆசிரியர்கள் கடுமையை கைவிட்டு நெகிழ்வுபோக்கை கடைபிடிக்கலாம். சில மாணவர் ஆசிரியரை நெருங்கவே பயப்படுகிறார்கள், சில பிள்ளைகளுக்கு விளங்கிக்கொள்வதில் பிரச்சினை உண்டு, எளிதில் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் திறனுக்கேற்ப ஆசிரியர் இறங்கி அதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் காயப்படுத்தக்கூடாது. நேரந்தாழ்த்தி வருதல், வீட்டுப்பாடம் செய்யாமல் வருதல், பாடத்தில் கவனம் செலுத்த முடியாமை அதற்கான காரணங்களை அறிந்து அதற்கு உதவல். வீட்டில் விளக்கு வசதியின்மை வீட்டுப்பாடம் செய்ய முடியாமைக்கு, காலையில் பாடசாலைக்கு நேரத்துக்கு வர போக்குவரத்துக்கு வசதியின்மை, காலையில் சாப்பிடாமலே பிள்ளைகள் பாடசாலைக்கு வருவார்கள், அவர்களால் சரியாக கவனம் செலுத்தி படிக்க முடியாது, வீட்டுவேலை இதுகளை கண்டுபிடித்து உதவி செய்து ஊக்கப்படுத்தலாம். இவை பயனளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பாடசாலை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்பதற்காக உங்கள் சமூகப்பொறுப்பை தட்டிக்கழிக்க முடியுமா?

கடமையுணர்வு, சமூகப் பொறுப்பு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று கொண்டிருக்கிறோம்! ஒரு தொழிலை வேண்டிப் பெற்று, அதில் நிலைத்திருந்து, ஓய்வூதியம் வரை செல்ல எதிர்பார்க்கும் தரப்பினரே தங்கள் கடமையை 50% கூட செய்யாமல், வெளியே இருப்பவன் "சமூகக் கடமை" செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது நகைப்பிற்குரியது!

இது போன்ற கருத்துக்களில் வெளிப்படும் மனப்பாங்கே எங்கள் கல்வி நிலையை யுத்த காலத்தை விடக் கீழே இறக்கி விட்டது என்பது என் கருத்து!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் கட்டுப்பாடுகள் இருந்தால் தான் நம்மட சனம் கடமையைச் செய்யுங்களோ என!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ஒரு தொழிலை வேண்டிப் பெற்று, அதில் நிலைத்திருந்து, ஓய்வூதியம் வரை செல்ல எதிர்பார்க்கும் தரப்பினரே தங்கள் கடமையை 50% கூட செய்யாமல், வெளியே இருப்பவன் "சமூகக் கடமை" செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது நகைப்பிற்குரியது!

மிகவும் உண்மை
நாட்டிற்கு சமூக கடமை செய்ய வேண்டும் என்பது சரி. படித்த கல்விநிலையம் யுனிக்கு சமூக கடமை செய்ய வேண்டும் என்றால் இங்கே விசித்திரமாக பார்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 10:46, Justin said:

கடமையுணர்வு, சமூகப் பொறுப்பு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று கொண்டிருக்கிறோம்! ஒரு தொழிலை வேண்டிப் பெற்று, அதில் நிலைத்திருந்து, ஓய்வூதியம் வரை செல்ல எதிர்பார்க்கும் தரப்பினரே தங்கள் கடமையை 50% கூட செய்யாமல், வெளியே இருப்பவன் "சமூகக் கடமை" செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது நகைப்பிற்குரியது!

இது போன்ற கருத்துக்களில் வெளிப்படும் மனப்பாங்கே எங்கள் கல்வி நிலையை யுத்த காலத்தை விடக் கீழே இறக்கி விட்டது என்பது என் கருத்து!

நான் நாட்டுடன் நல்ல தொடர்பில் உள்ளேன். நீங்கள் உங்கள் புள்ளிவிபரங்களை எங்கு எடுக்கின்றீர்கள் என்று சொன்னால் நானும் தரவுகளை அறிகின்றேன். 

வைத்தியர்கள் அரைவாசி வேலை நேரத்துடன் தமது தனிப்பட்ட கிளினுக்குளை செய்கின்றார்கள். இது போலவே ஆசிரியர்களின் ஒரு பகுதி தனியார் வகுப்புக்கள் மூலம் சிறிது வருமானம் தேடக்கூடும். இது போரின் பின் நடைபெறும் புதிய விடயம் அல்ல. காலங்காலமாக நடைபெறும் விடயம். 

அண்ணை கேட்பதாய் குறை விளங்க கூடாது நீங்கள் படிச்ச காலத்தில் யாராவது ஆசிரியரிடம் செவிட்டை பொத்தி வாங்கினீர்களோ. மூன்றாம் வகுப்பில் தனக்கு இறுக்கிய ஒரு ஆசிரியரை இப்போதும் கருமிக்கொண்டு எனது நண்பர் ஒருவர் உள்ளார். அதுதான் கேட்டேன். அந்த ஆசிரியர் கடைசியில் அதிபராய் வர இவர் பாருங்கோ கழுவி ஊத்திக்கொண்டு உள்ளார் மனுசனை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நியாயம், ஒரு சமூகப் பிரச்சினை பற்றிப் பேசும் போது, ஏதோ ஆசிரியரிடம் அடி வாங்கினீர்களா என்று கேட்கும் "சில்லறைப் புத்தியுடைய" நீங்கள் நாட்டுடன் மட்டுமல்ல, யாரோடு தொடர்பிலிருந்தாலும் அதனால் ஒருவருக்கும் பயனில்லை!😂

அரை வாசி நேரம் தனியார் கிளினிக்கில் செலவு செய்யும் மருத்துவரால் உயிர், உடல் அவயவ இழப்பு ஏற்படும், அது போல பள்ளிகளில் பாடத்திட்டம் முடிக்காமல் ரியுசனின் உழைக்கும் வாத்தியார் மாரும் உழைக்கலாம், தவறில்லை! ஆனால், அவர்கள் செய்யாத அரைவாசிக் கடமையை வெளி நாட்டில் இருக்கும் தமிழர் காசு கொடுத்துச் செய்ய வைக்க வேண்டுமென்று கேட்பது பிரச்சினைக்குரியது!

எனவே, "நாட்டோடு தொடர்பில் இருக்கும்" உங்கள் போன்ற ஆட்கள், முதலில் நாட்டில் இருக்கும் பிரச்சினையின் பின்னணியை புரிந்து கொண்டு இங்கே சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். அது இயலா விட்டால் பேசாமல் இருங்கள் - அமைதி நல்லது!😎

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2023 at 09:41, Justin said:

தகவல்களுக்கு நன்றி நியாயம்!

ஆனால், மீராவின் கேள்வி நியாயமானதாகத் தான் தெரிகிறது. 9 ஆம் வகுப்பில் தமிழ் பிழையின்றி வாசிக்க முடியாத தொகையான மாணவர்கள் நாம் யுத்த காலத்தில் கற்ற காலத்தில் இருக்கவில்லை. அப்படியானால், 8 ஆம் வகுப்பு வரை கற்பித்த ஆசிரியர்கள் தாம் வாங்கிய அரச சம்பளத்திற்கு உரிய வேலையைச் செய்யவில்லை அல்லது பெற்றோர் வீட்டில் பிள்ளையின் நிலையைக் கண்டு கொள்ளவில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாங்கும் ஊதியத்திற்கு உரிய கடமை செய்ய ஊக்கமில்லாத ஆசிரியர்களை வெளிநாட்டுத் தமிழர் அனுப்பும் பணம் ஊக்குவிக்குமா? 

இதை தான் வேறு விதமாக கேள்வியாக கேட்டிருந்தேன். எப்படி எழுத வாசிக்க தெரியாதவர் இத்தனை வகுப்புக்களை கடந்து வந்தார்கள். இவர்களை அனுமதித்தது ஆசிரியர்கள் தானே. அசிட்டை தெரியவில்லையோ , அ,ஆ தெரியவில்லையோ அடுத்த வகுப்புக்கு  அனுமதிக்காமல் விட்டாலே பெற்றோர், மாணவர் சமூகம் என (என்ன பிரச்சனை) ஆராய்வார்கள். முடிவெடுப்பார்கள். இதென்ன 9 ம் வகுப்பில் எழுத வாசிக்க தெரியாது எனில் 9ம் வகுப்பு ஆசிரியர் எவ்வளவு அசகாய சூரனாக இருந்தாலும் இம்மாணவர்களை வைத்து என்ன செய்ய முடியும்?
இவ்வளவு போர்க்காலத்திலும் இல்லாத மாணவரின் தரக்குறைவுக்கு காரணம் என்ன? போர்க்காலத்தில் மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை சுவிசில் மருத்துவருக்கு படிக்கும் சகோதரியை கேட்டால் சொல்வார்.
எனது நண்பன்/உறவினன் விக்டோரியா கல்லூரிக்கு தொடர்ந்து பணம் சேர்த்து  அனுப்புவர்(கனடா). போதாக்குறைக்கு கட்டடங்கள் கட்ட , இன்னோரென்ன உதவிகளுக்கு பழைய மாணவர்களிடம் சேர்த்து அனுப்புவது மட்டுமில்லாமல் பல முறை சென்று பண பிணக்குகளை தீர்க்க அங்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். அத்தோடு இரவு பகல் பாராமல் தொலைபேசி தொல்லை வேறு. இத்தனை உதவிகள் கிடைத்தாலும் அவர் அங்கு சென்று கவனித்தது அங்குள்ள மாணவர்கள் சொல்வது தான் சட்டம்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயம். நைஜீரியாவில் எம்மவர்கள் ஆசிரியர்களாக வேலை செய்ததை நினைவு படுத்தினார். இன்னும் நிறைய எழுதலாம். 
இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிந்து நின்று காசை வெளிநாடுகளில் இருந்து பெறுவதை நினைக்கும் போது எத்தகையை சமூக பொறுப்பு எம்மவரிடையே உள்ளது என்பதை அனுமானிக்கலாம். மன்னிக்கவும் விக்டோரியா கல்லூரியை உதாரணமாக எடுத்ததற்கு.
சாவகச்சேரி இந்து என்ன குறைவோ என நீங்கள் கேட் கலாம். இல்லையே. தற்போதைய அதிபரிடம் இருந்து விஞ்ஞான ஆய்வு கூடம் பெரிதாக்க புலம் பெயர்ந்த மாணவர்களிடம் உதவி கேட்டார். 
சிங்கன் ( கனடாவின் ஒரு மேயரின் வலது கை ,சா.இந்து , காட்லி மாணவர், எனது நண்பரும் கூட) ஒரு இசை நிகழ்ச்சியை இந்திய, கனடா கலைஞர்களுடன் நிகழ்ச்சியை அரங்கம் நிரம்பிய காட்சியாக (நன் கொடை உட்பட) நடாத்தினார். 
சில காலம் சென்ற பின் எனது அப்பாவிடம் கேட்டேன் ஆய்வு கூடம் என்ன மாதிரி என. அவர் சொன்னார் 2009 ல் உள்ள ஓடு தான் இப்போதும் உள்ளது என? 
இங்கும்,அங்கும் திருட்டு ********..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நியாயம், ஒரு சமூகப் பிரச்சினை பற்றிப் பேசும் போது, ஏதோ ஆசிரியரிடம் அடி வாங்கினீர்களா என்று கேட்கும் "சில்லறைப் புத்தியுடைய" நீங்கள் நாட்டுடன் மட்டுமல்ல, யாரோடு தொடர்பிலிருந்தாலும் அதனால் ஒருவருக்கும் பயனில்லை!😂

அரை வாசி நேரம் தனியார் கிளினிக்கில் செலவு செய்யும் மருத்துவரால் உயிர், உடல் அவயவ இழப்பு ஏற்படும், அது போல பள்ளிகளில் பாடத்திட்டம் முடிக்காமல் ரியுசனின் உழைக்கும் வாத்தியார் மாரும் உழைக்கலாம், தவறில்லை! ஆனால், அவர்கள் செய்யாத அரைவாசிக் கடமையை வெளி நாட்டில் இருக்கும் தமிழர் காசு கொடுத்துச் செய்ய வைக்க வேண்டுமென்று கேட்பது பிரச்சினைக்குரியது!

எனவே, "நாட்டோடு தொடர்பில் இருக்கும்" உங்கள் போன்ற ஆட்கள், முதலில் நாட்டில் இருக்கும் பிரச்சினையின் பின்னணியை புரிந்து கொண்டு இங்கே சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். அது இயலா விட்டால் பேசாமல் இருங்கள் - அமைதி நல்லது!😎

அண்ணை உங்களிடம் தரவுகள், புள்ளிவிபரம் கேட்கும்போது அமைதி காக்க சொல்கின்றீர்கள். 😃 

5 minutes ago, nunavilan said:

இதை தான் வேறு விதமாக கேள்வியாக கேட்டிருந்தேன். எப்படி எழுத வாசிக்க தெரியாதவர் இத்தனை வகுப்புக்களை கடந்து வந்தார்கள். இவர்களை அனுமதித்தது ஆசிரியர்கள் தானே. அசிட்டை தெரியவில்லையோ , அ,ஆ தெரியவில்லையோ அடுத்த வகுப்புக்கு  அனுமதிக்காமல் விட்டாலே பெற்றோர், மாணவர் சமூகம் என (என்ன பிரச்சனை) ஆராய்வார்கள். முடிவெடுப்பார்கள். இதென்ன 9 ம் வகுப்பில் எழுத வாசிக்க தெரியாது எனில் 9ம் வகுப்பு ஆசிரியர் எவ்வளவு அசகாய சூரனாக இருந்தாலும் இம்மாணவர்களை வைத்து என்ன செய்ய முடியும்?
இவ்வளவு போர்க்காலத்திலும் இல்லாத மாணவரின் தரக்குறைவுக்கு காரணம் என்ன? போர்க்காலத்தில் மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை சுவிசில் மருத்துவருக்கு படிக்கும் சகோதரியை கேட்டால் சொல்வார்.
எனது நண்பன்/உறவினன் விக்டோரியா கல்லூரிக்கு தொடர்ந்து பணம் சேர்த்து  அனுப்புவர்(கனடா). போதாக்குறைக்கு கட்டடங்கள் கட்ட , இன்னோரென்ன உதவிகளுக்கு பழைய மாணவர்களிடம் சேர்த்து அனுப்புவது மட்டுமில்லாமல் பல முறை சென்று பண பிணக்குகளை தீர்க்க அங்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். அத்தோடு இரவு பகல் பாராமல் தொலைபேசி தொல்லை வேறு. இத்தனை உதவிகள் கிடைத்தாலும் அவர் அங்கு சென்று கவனித்தது அங்குள்ள மாணவர்கள் சொல்வது தான் சட்டம்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயம். நைஜீரியாவில் எம்மவர்கள் ஆசிரியர்களாக வேலை செய்ததை நினைவு படுத்தினார். இன்னும் நிறைய எழுதலாம். 
இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிந்து நின்று காசை வெளிநாடுகளில் இருந்து பெறுவதை நினைக்கும் போது எத்தகையை சமூக பொறுப்பு எம்மவரிடையே உள்ளது என்பதை அனுமானிக்கலாம். மன்னிக்கவும் விக்டோரியா கல்லூரியை உதாரணமாக எடுத்ததற்கு.
சாவகச்சேரி இந்து என்ன குறைவோ என நீங்கள் கேட் கலாம். இல்லையே. தற்போதைய அதிபரிடம் இருந்து விஞ்ஞான ஆய்வு கூடம் பெரிதாக்க புலம் பெயர்ந்த மாணவர்களிடம் உதவி கேட்டார். 
சிங்கன் ( கனடாவின் ஒரு மேயரின் வலது கை ,சா.இந்து , காட்லி மாணவர், எனது நண்பரும் கூட) ஒரு இசை நிகழ்ச்சியை இந்திய, கனடா கலைஞர்களுடன் நிகழ்ச்சியை அரங்கம் நிரம்பிய காட்சியாக (நன் கொடை உட்பட) நடாத்தினார். 
சில காலம் சென்ற பின் எனது அப்பாவிடம் கேட்டேன் ஆய்வு கூடம் என்ன மாதிரி என. அவர் சொன்னார் 2009 ல் உள்ள ஓடு தான் இப்போதும் உள்ளது என? 
இங்கும்,அங்கும் திருட்டு ********..

எல்லாரும் சேர்ந்து கூத்து ஆடிவிட்டு கடைசியில் ஆசிரியர்கள் தலைக்கு மொட்டை அடிக்கின்றீர்கள். பழைய மாணவர் சங்கங்கள் வெளிநாடுகளில் செய்யும் அலப்பறைகள் பற்றி வண்டி வண்டியாக எழுதலாம். ஒரு வட்சப் குழுமத்தில் அட்மின் பதவிக்கே எத்தனை பிணக்குகள். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அண்ணை உங்களிடம் தரவுகள், புள்ளிவிபரம் கேட்கும்போது அமைதி காக்க சொல்கின்றீர்கள். 😃 

எல்லாரும் சேர்ந்து கூத்து ஆடிவிட்டு கடைசியில் ஆசிரியர்கள் தலைக்கு மொட்டை அடிக்கின்றீர்கள். பழைய மாணவர் சங்கங்கள் வெளிநாடுகளில் செய்யும் அலப்பறைகள் பற்றி வண்டி வண்டியாக எழுதலாம். ஒரு வட்சப் குழுமத்தில் அட்மின் பதவிக்கே எத்தனை பிணக்குகள். 

யாருக்கும் மொட்டை அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு கிடைக்கும் தரவுகளை அடிப்படையாக கொண்டே  சொல்கிறேன். மற்றும் படி எனது குடும்பமே ஆசிரிய குடும்பம். மேலும் தகவல்கள் தேவை எனில் உங்களுக்காக பெறலாம்.ஆசிரியர் என்பவர் ஒரு வண்டியின் நிறுத்தி போன்றது. தேவை எனில் பாவிக்க வேண்டும். 
ஆசிரியர்களை விட மிகுதியானவர்களையும் சாடி  உள்ளேன். ஆற அமர வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

இதை தான் வேறு விதமாக கேள்வியாக கேட்டிருந்தேன். எப்படி எழுத வாசிக்க தெரியாதவர் இத்தனை வகுப்புக்களை கடந்து வந்தார்கள். இவர்களை அனுமதித்தது ஆசிரியர்கள் தானே. அசிட்டை தெரியவில்லையோ , அ,ஆ தெரியவில்லையோ அடுத்த வகுப்புக்கு  அனுமதிக்காமல் விட்டாலே பெற்றோர், மாணவர் சமூகம் என (என்ன பிரச்சனை) ஆராய்வார்கள். முடிவெடுப்பார்கள். இதென்ன 9 ம் வகுப்பில் எழுத வாசிக்க தெரியாது எனில் 9ம் வகுப்பு ஆசிரியர் எவ்வளவு அசகாய சூரனாக இருந்தாலும் இம்மாணவர்களை வைத்து என்ன செய்ய முடியும்?
இவ்வளவு போர்க்காலத்திலும் இல்லாத மாணவரின் தரக்குறைவுக்கு காரணம் என்ன? போர்க்காலத்தில் மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை சுவிசில் மருத்துவருக்கு படிக்கும் சகோதரியை கேட்டால் சொல்வார்.
எனது நண்பன்/உறவினன் விக்டோரியா கல்லூரிக்கு தொடர்ந்து பணம் சேர்த்து  அனுப்புவர்(கனடா). போதாக்குறைக்கு கட்டடங்கள் கட்ட , இன்னோரென்ன உதவிகளுக்கு பழைய மாணவர்களிடம் சேர்த்து அனுப்புவது மட்டுமில்லாமல் பல முறை சென்று பண பிணக்குகளை தீர்க்க அங்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். அத்தோடு இரவு பகல் பாராமல் தொலைபேசி தொல்லை வேறு. இத்தனை உதவிகள் கிடைத்தாலும் அவர் அங்கு சென்று கவனித்தது அங்குள்ள மாணவர்கள் சொல்வது தான் சட்டம்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயம். நைஜீரியாவில் எம்மவர்கள் ஆசிரியர்களாக வேலை செய்ததை நினைவு படுத்தினார். இன்னும் நிறைய எழுதலாம். 
இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிந்து நின்று காசை வெளிநாடுகளில் இருந்து பெறுவதை நினைக்கும் போது எத்தகையை சமூக பொறுப்பு எம்மவரிடையே உள்ளது என்பதை அனுமானிக்கலாம். மன்னிக்கவும் விக்டோரியா கல்லூரியை உதாரணமாக எடுத்ததற்கு.
சாவகச்சேரி இந்து என்ன குறைவோ என நீங்கள் கேட் கலாம். இல்லையே. தற்போதைய அதிபரிடம் இருந்து விஞ்ஞான ஆய்வு கூடம் பெரிதாக்க புலம் பெயர்ந்த மாணவர்களிடம் உதவி கேட்டார். 
சிங்கன் ( கனடாவின் ஒரு மேயரின் வலது கை ,சா.இந்து , காட்லி மாணவர், எனது நண்பரும் கூட) ஒரு இசை நிகழ்ச்சியை இந்திய, கனடா கலைஞர்களுடன் நிகழ்ச்சியை அரங்கம் நிரம்பிய காட்சியாக (நன் கொடை உட்பட) நடாத்தினார். 
சில காலம் சென்ற பின் எனது அப்பாவிடம் கேட்டேன் ஆய்வு கூடம் என்ன மாதிரி என. அவர் சொன்னார் 2009 ல் உள்ள ஓடு தான் இப்போதும் உள்ளது என? 
இங்கும்,அங்கும் திருட்டு ********..

நுணா, இது இங்கே இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த பகிரங்க இரகசியம், ஆனால் நாட்டோடு நல்ல தொடர்பில் இருப்போர் சிலருக்கு அவர்களின் நெருக்கமான நிலை காரணமாகத் தெரிய வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்த வரை, போர்க்கால தமிழர் தாயகத்திற்கும், தற்போதைய தமிழர் தாயகத்திற்கும் கலாச்சார ரீதியான வேறுபாடுகள் உருவாகி விட்டன. இது வெறுமனே தலை முறை இடைவெளி என்று சொல்ல முடியாது. என் அவதானிப்புகள்:

1. படிப்பு, பரீட்சையில் திறமை காட்டல் என்பன முக்கியமில்லாமல் போய் விட்டன பெரும்பாலானோருக்கு.

2. பாட நூல்களுக்கு வெளியே (ஏன், பாடத்திற்குத் தேவையானவையைக் கூட) வாசிப்பு என்பது ஏறத்தாழ பூச்சியமாகி விட்டது.

3. உயர்தரத்திற்குப் போக அவசியமான விஞ்ஞானம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களில் பாடத்திற்கு வெளியேயான செயற்பாடுகள், போட்டிகள், தினக் கொண்டாட்டங்கள் என்பன அருகி விட்டன. இவை இருந்தால், சராசரி நிலையில் இருக்கும் ஒரு மாணவனுக்கும் முன்னேற ஒரு ஆர்வம் வரும், இவையில்லாமல் அந்த ஆர்வம் அருகி விடும்.

4. பெற்றோரின் நேரமின்மை, சில குடும்பங்களில் உழைப்பின் காரணம், பல மத்திய வர்க்கக் குடும்பங்களில், மிகையான பொழுது போக்குக் காரணம்.

வறுமை  இருக்கிறது, ஆனால், 80- 90 களில் வறுமையோடு யுத்தமும் இருந்தது என்பதை மறக்கக்  கூடாது. எனவே, வறுமை மட்டும் ஒரு தனிக் காரணியாக கல்வி அடைவு மட்ட வீழ்ச்சியைக் கொண்டு வந்திருக்காதென நான் நினைக்கிறேன்.

எப்படித் தீர்ப்பது? முதலில் "இது தான் பிரச்சினை" என்ற reckoning வர வேண்டும். ஆனால், கவனமாக அவதானித்து எழுதினால் , "இவர் ஆசிரியர் மேல் கடுப்பில் எழுதுகிறார்" என்று standup comedy செய்யும் ஆட்கள் ஆலோசகர்களாக இருக்கும் வரை reckoning வராது!😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

 ஆனால், அவர்கள் செய்யாத அரைவாசிக் கடமையை வெளி நாட்டில் இருக்கும் தமிழர் காசு கொடுத்துச் செய்ய வைக்க வேண்டுமென்று கேட்பது பிரச்சினைக்குரியது!

எனவே, "நாட்டோடு தொடர்பில் இருக்கும்" உங்கள் போன்ற ஆட்கள், முதலில் நாட்டில் இருக்கும் பிரச்சினையின் பின்னணியை புரிந்து கொண்டு இங்கே சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். அது இயலா விட்டால் பேசாமல் இருங்கள் - அமைதி நல்லது!😎

நீங்கள் கூறுவதுபோல ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்திருக்க வேண்டும். அவர்களும் தங்களுக்கு மாத முடிவில் சம்பளம் கிடைத்தால் போதுமென்று இருப்பதாலும், தங்களுடைய மேலதிக டியூசன் வகுப்புக்களை நாட வேண்டுமென்று எதிர்பார்ப்பதாலும் பிரச்சினைகள் உருவாகின்றதுதான்.

பெற்றோரும் வசதியற்றவர்களாக, சில வேளைகளில் படிக்காதவர்களாக இருக்கும்போது இன்னும் பிரச்சினை அதிகரிக்கின்றது. இங்குதான் உதவி தேவைப்படுகின்றது. இன்றய நிலைமைகளில் உதவி செய்வது என்பது இங்கே மிகவும் கடினம்.

யுத்த காரணங்களை காட்டி, மக்களின் இழப்புகளை காட்டி அங்கு வசதியாக (?)  வாழுபவர்கள் உதவி செய்யலாமே என்றுதான் இங்கு பேசப்படும் விடயம். எனவே முடியுமென்றால் உதவி செய்யாலாம். உதவிகள் கிடைத்தாலும் இன்னும் மக்கள் பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள். ஏதும் பிழையாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Cruso said:

நீங்கள் கூறுவதுபோல ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்திருக்க வேண்டும். அவர்களும் தங்களுக்கு மாத முடிவில் சம்பளம் கிடைத்தால் போதுமென்று இருப்பதாலும், தங்களுடைய மேலதிக டியூசன் வகுப்புக்களை நாட வேண்டுமென்று எதிர்பார்ப்பதாலும் பிரச்சினைகள் உருவாகின்றதுதான்.

இது தான் முதலும் முடிவுமான கருத்து. ஏன் தோல்வி அடைகிறார் என்பதல்ல. அதற்கான அடுத்த கட்டத்துக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளார்கள். 9ம் வகுப்பு வரை எழுத படிக்க தெரியாமல் வகுப்பு ஏத்தி விடுவது என்பது ஏற்கவே முடியாது.
ஏனைய காரணங்கள் அலசப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

திறமையற்ற மாணவர்களை கட்டாய வகுப்பேற்றம் தடுத்தி நிறுத்தி தகுதியாக்க முயற்சிக்க வேண்டும் அல்லது தொழில் கற்கை நெறிக்கு அனுப்பவேண்டும். எல்லோருக்கும் சமுதாய பொறுப்புணர்ச்சி வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

நுணா, இது இங்கே இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த பகிரங்க இரகசியம், ஆனால் நாட்டோடு நல்ல தொடர்பில் இருப்போர் சிலருக்கு அவர்களின் நெருக்கமான நிலை காரணமாகத் தெரிய வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்த வரை, போர்க்கால தமிழர் தாயகத்திற்கும், தற்போதைய தமிழர் தாயகத்திற்கும் கலாச்சார ரீதியான வேறுபாடுகள் உருவாகி விட்டன. இது வெறுமனே தலை முறை இடைவெளி என்று சொல்ல முடியாது. என் அவதானிப்புகள்:

1. படிப்பு, பரீட்சையில் திறமை காட்டல் என்பன முக்கியமில்லாமல் போய் விட்டன பெரும்பாலானோருக்கு.

2. பாட நூல்களுக்கு வெளியே (ஏன், பாடத்திற்குத் தேவையானவையைக் கூட) வாசிப்பு என்பது ஏறத்தாழ பூச்சியமாகி விட்டது.

3. உயர்தரத்திற்குப் போக அவசியமான விஞ்ஞானம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களில் பாடத்திற்கு வெளியேயான செயற்பாடுகள், போட்டிகள், தினக் கொண்டாட்டங்கள் என்பன அருகி விட்டன. இவை இருந்தால், சராசரி நிலையில் இருக்கும் ஒரு மாணவனுக்கும் முன்னேற ஒரு ஆர்வம் வரும், இவையில்லாமல் அந்த ஆர்வம் அருகி விடும்.

4. பெற்றோரின் நேரமின்மை, சில குடும்பங்களில் உழைப்பின் காரணம், பல மத்திய வர்க்கக் குடும்பங்களில், மிகையான பொழுது போக்குக் காரணம்.

வறுமை  இருக்கிறது, ஆனால், 80- 90 களில் வறுமையோடு யுத்தமும் இருந்தது என்பதை மறக்கக்  கூடாது. எனவே, வறுமை மட்டும் ஒரு தனிக் காரணியாக கல்வி அடைவு மட்ட வீழ்ச்சியைக் கொண்டு வந்திருக்காதென நான் நினைக்கிறேன்.

எப்படித் தீர்ப்பது? முதலில் "இது தான் பிரச்சினை" என்ற reckoning வர வேண்டும். ஆனால், கவனமாக அவதானித்து எழுதினால் , "இவர் ஆசிரியர் மேல் கடுப்பில் எழுதுகிறார்" என்று standup comedy செய்யும் ஆட்கள் ஆலோசகர்களாக இருக்கும் வரை reckoning வராது!😂

வளர்முகம் நோக்கிய பலரது கருத்துகள் அவதானிப்புக்குரிய அதேவேளை, யஸ்ரின் அவர்களின் அவதானிப்பும் சுட்டுதல்களும் சரியானதே. நன்றி, 

கற்றலில் இருந்து வாழ்வை வளமாக்குதல்வரையான செயற்பாடுகள் ஒரு தொடர் சங்கிலியாக நடைபெறுவன என்பதை குமுகாய ஆர்வலர் முதல் ஆசிரியர்கள்,புலம்பெயர் நன்கொடையாளர்கள், கல்விசார் மாகாண, மாவட்ட, பிரதேச, கொத்தனி வலயங்களின் அதிகாரிகள்  ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு கூட்டு முயற்சியில் இறங்குவதோடு, வட-கிழக்குக்கான ஒரு பொதுக் கல்வி அபிவிருத்திக் கட்டமைப்பை  உருவாக்க வேண்டும். அதனூடாகக் களஆய்வு, நிதிமேலாண்மை என்பவற்றைத் திட்டமிடுதலும் செயற்படுத்தலும் வேண்டும். அதேவேளை வளவாளர்களையும்,உளவியலாளர்களையும் கொண்ட குழுக்களையும் உருவாக்கி  கற்றலுக்கப்பாலான வாரஇறுதிநாள் கலந்துரையாடல்களை மேற்கோண்டு மாணவர்களின் உளவளத்தைப் பேணும் செயற்திட்டத்தையும் போட்டி,பொறாமை என்பவற்றைத் தூரவைத்துவிட்டு மேற்கொண்டால் மாற்றத்தைக் காணலாம் என்று நினைக்கின்றேன். அதேவேளை அரசியற் தலையீடுகளற்ற ஒரு பொதுத்தளமாக இருப்பதும் அவசியமாகும்
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிகளில் தலையை காட்டிவிட்டு ரியுசன் மூலம்சம்பாதிப்பதை நோக்கமாக கொண்ட ஆசிரியர்கள் அதே போன்ற அரச மருத்துவ மனையில் சரியாக கடமை செய்யாமல்  தனியார் மருத்துவ மனையில் பணம் பண்ணும் வைத்தியர்கள் இப்படியானவர்களை தங்கள் பெயருக்காக புகழுக்காக  வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து  ஊக்குவிக்க கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

பள்ளிகளில் தலையை காட்டிவிட்டு ரியுசன் மூலம்சம்பாதிப்பதை நோக்கமாக கொண்ட ஆசிரியர்கள் அதே போன்ற அரச மருத்துவ மனையில் சரியாக கடமை செய்யாமல்  தனியார் மருத்துவ மனையில் பணம் பண்ணும் வைத்தியர்கள் இப்படியானவர்களை தங்கள் பெயருக்காக புகழுக்காக  வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து  ஊக்குவிக்க கூடாது.

இந்த கருத்தில் உண்மையுள்ளது என்றாலும் இதன் மறுவளமாக சிறந்த மருத்துவர்களிடம் சேவை பெறவும், சிறந்த ஆசிரியர்களிடம் கல்வி கற்கவும் வேறு தெரிவுகள் உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2023 at 03:11, MEERA said:

வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் உதவி செய்யணும் ஊரில் உள்ளவர்கள் செய்ய கூடாதா? 

ஊரில் உள்ளவர்களும் பாடசாலை சமூகமும் பெளதீக வளர்ச்சிக்குக் காட்டும் அக்கறையும் முனைப்பும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு காட்டுவதில்லை என்பதை பல இடங்களிலும் உரையாடல்களிலும் உணர்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2023 at 11:45, MEERA said:

நான் நினைக்கிறேன் இந்த விடயத்தில் தான் நானும் ஜஸ்ரினும் முதன் முதலாக ஓர் கோட்டில் நிற்கின்றோம்

நானும் தான் :)

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Sabesh said:

ஊரில் உள்ளவர்களும் பாடசாலை சமூகமும் பெளதீக வளர்ச்சிக்குக் காட்டும் அக்கறையும் முனைப்பும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு காட்டுவதில்லை என்பதை பல இடங்களிலும் உரையாடல்களிலும் உணர்தேன்.

பிரச்சினையின் மையத்தூணைத் தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள். உண்மையில், வறுமை கல்வியைப் பாதிக்காமல் இருக்க போதிய உதவிகள் ஏற்கனவே கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன - வெளியேயிருந்தும், உள் நாட்டிலிருந்தும்.

இதற்கு மேலதிக நிதி அவசியமில்லை என நான் நினைக்கிறேன், என்னுடைய அனுபவத்தின் படி.

ஆனால், எங்கே பிரச்சினை இருக்கிறது? கல்வி அடைவு வீதத்தை உயர்த்துவதில் பள்ளி நிர்வாகங்களிடம் உண்மையான அக்கறை இல்லை. எப்படி மேற்கு நாடுகளின் சில உயர்கல்வி நிலையங்களில் மில்லியன் டொலர்கள் நன்கொடை பெறும் விளையாட்டுத் துறையைத் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்களோ, அதைப் போன்ற பெரும் நிதியை உள்வாங்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

உண்மை.  அவர்களிடம் கேள்விகளைக் கேட்டாலோ அல்லது கல்வி மேம்பட்டு தொடர்பாக கதைத்தலோ, மறைமுகமாக உங்கள் உதவிகள் தேவையில்லை என்று இன்னொரு அமைப்பை அல்லது நபரைத் தேடுவார்கள்.
பகட்டுக்கும், பேருக்கும் உதவி செய்யும் செல்வந்தர்கள் போல வாழும் பலர், புலம்பெயர் நாடுகளில் இருப்பதும் எமது சமூகத்தின் சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

சிறந்த மருத்துவர்களிடம் சேவை பெறவும், சிறந்த ஆசிரியர்களிடம் கல்வி கற்கவும் வேறு தெரிவுகள் உண்டா? 

அப்படி வேறு தெரிவுகள் இல்லாமல் இருந்தால் சிஸ்டம் மிகவும் தவறு.அதனால் தான் அப்படியானவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து ஊக்குவிக்க கூடாது என்றேன்.இலங்கையில் இது பற்றி சரியாக எனக்கு தெரியாது.அங்கே சென்ற போது டொங்கு காச்சல் வந்த ஒருவர் வெளிநாட்டவர்களுக்கான முறைபடி கட்டணத்தை தவிர வேறு பணம் கொடுக்காமல் திருப்திகரமான மருத்துவம் பெற்றதாக சொன்னார். வெளிநாட்டிலும் ரியுசன் என்றால் கட்டாய கல்வி என்று நம்பும் தமிழர்களும், செலவில்லாமல் செய்ய கூடிய மருத்துவத்தை அல்லது வேலைசெய்யும் நிறுவனத்தின் காப்புறுதியுடன் செய்ய வேண்டிய மருத்துவத்திற்கு இத்தனை டொலர் கட்டி மருத்துவமனையில் அறை புக்பண்ணி வைத்திருக்கிறேன் என்று பெருமை அடிக்கும் தமிழர்களும் உள்ளனர்.சிலர் ஒன்றையும் புரிந்து கொள்ளாமல் செய்வது. பலர் பகட்டுக்காக செய்வது. இவர்களை பார்த்து தவறாக வழிநடத்தபட்டு செய்யும் அப்பாவிகள் சிலர்.

நாதமுனி சொன்ன தகவலை கண்டிருப்பீர்கள் தகுதி அடிப்படையில் விண்ணப்பித்து கனடா வருகின்ற செலவில்லாத விசாவுக்கு ஒருவர் 65ஆயிரம் பவுண்ஸ் கொடுத்துள்ளார் என்பதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.