Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! | The Change In The Jaffna International Airport

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தற்பொழுது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுவதாகவும், இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாக துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால.டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால.டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் யாழ் விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகவும், இதற்கான கடன்வசதி கிடைத்ததும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://jvpnews.com/article/the-change-in-the-jaffna-international-airport-1685675243

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடனிலே கட்டுவதுதான் இலங்கைக்கு பெருமையாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெட்கம் இல்லாமல் சர்வதேச விமான நிலையம் என்கிறார்கள்.
கரவெட்டி தட்டிவான் நிக்கிற இடம் கூட நல்ல வடிவாய் இருக்கும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, குமாரசாமி said:

வெட்கம் இல்லாமல் சர்வதேச விமான நிலையம் என்கிறார்கள்.
கரவெட்டி தட்டிவான் நிக்கிற இடம் கூட நல்ல வடிவாய் இருக்கும்.:cool:

என்ன பகிடி விடுறியள்? 😁

உள்நாட்டு விமானம் பறக்காட்டி, பறக்கிற ஒரு விமானமும் சென்னை எண்டபடியால சர்வதேச விமான நிலையம் தானே!

அது சரி.... சிங்களவன் கைகாசைப் போட்டு தமிழனுக்கேன் கட்டப்போறான்.

5 நாளா, 7 நாளா பிரச்சணை இல்லை. நீங்களே கட்டி, நீங்களே பறவுங்கோ எண்டு சொல்லீயாச்சு.... ஓகே..

Edited by Nathamuni
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Nathamuni said:

என்ன பகிடி விடுறியள்? 😁

உள்நாட்டு விமானம் பறக்காட்டி, பறக்கிற ஒரு விமானமும் சென்னை எண்டபடியால சர்வதேச விமான நிலையம் தானே!

அது சரி.... சிங்களவன் கைகாசைப் போட்டு தமிழனுக்கேன் கட்டப்போறான்.

5 நாளா, 7 நாளா பிரச்ணணை இல்லை. நீங்களே கட்டி, நீங்களே பறவுங்கோ எண்டு சொல்லீயாச்சு.... ஓகே..

நீங்கள் சொல்லுறதை பார்த்தால் கிட்டடியிலை ஜப்னா எயார் பறக்கும் எண்டுறியள்?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை - பலாலி விமானப் பயணம் நிரம்பி வழிகின்றது. ஒரு நாளுக்கு 2/3 தடவைகள் பறந்தாலும் ஆச்சரியமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, MEERA said:

சென்னை - பலாலி விமானப் பயணம் நிரம்பி வழிகின்றது. ஒரு நாளுக்கு 2/3 தடவைகள் பறந்தாலும் ஆச்சரியமில்லை. 

நானும் சென்னை போய் யாழ் போகலாம் எண்டால் டிக்கற் இல்லை. ஏஜன்சிக்காரர் மொத்தமா புக் பண்ணி விக்கிறார்களாம். நம்பி போகேலாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, குமாரசாமி said:

வெட்கம் இல்லாமல் சர்வதேச விமான நிலையம் என்கிறார்கள்.
கரவெட்டி தட்டிவான் நிக்கிற இடம் கூட நல்ல வடிவாய் இருக்கும்.:cool:

ஐயா எங்களை குற்றம் சொல்லாதீர்கள். அங்குள்ள மக்கள் அதை சுற்றியுள்ள காணிகளை தந்தால் மிகப்பெரிய விமான நிலையமே உருவாகியிருப்போம். நாங்கள் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ததில் பின்னென்றதே இல்லை. பணம் எல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை.😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/6/2023 at 16:15, தமிழ் சிறி said:

இதற்கான கடன்வசதி கிடைத்ததும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மிச்ச சொச்ச நிலமும் பறிப்பதற்கு நல்ல யோசனை.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
    • போர்க்ளத்துக்கும் ஊர் சண்டியர்களின் கொள்ளுபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகம்கள் எங்கள் இனத்தின் சாபகேடு . கிட்ட தட்ட தமிழ் அரசியல் குரங்கு கூட்டம் பங்கு பிரிக்க வெளிக்கிட்ட கதை தான் . குறைந்தது நாலு கொலையாவது நடந்து இருந்தால் தமிழ்சனம் சந்தோசபட்டு இருக்கும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.