Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம் தெரிந்தது - வாழ்க்கையில்நான் என்ன தவறு செய்தேன் என நினைத்தேன் - தென்கொரிய விமானத்தின் கதவை திறந்தவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

09 JUN, 2023 | 11:35 AM
image
 

அவர் விமானத்தின் கதவுகளை திறந்தவேளை நான் வாழ்க்கையில் என்ன தவறுசெய்தேன் என நினைத்தேன் என கடந்த மாதம் ஏசியான விமானநிலையத்தின் அவசர நிலை கதவுகளை ஒருவர் திறந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது

lee_indiana.jpg

விமானத்தில் பயணிக்கும்போது உங்களிற்கு மோசமான ஆசனம் கிடைக்கின்றதே என நீங்கள் நினைத்துப்பார்ப்பவரா அப்படியானால்  லீ  யூன் யுன்னிற்காக ஒரு நிமிடம் அனுதாபப்படுங்கள்.

ஏசியானா எயர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணித்துக்கொண்டிருந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி விமானம் பயணித்துக்கொண்டிருக்கும்வேளை - விமானத்தின் அவசரநிலை கதவை திறந்தார்.

நான் மரணம் குறித்த பெரும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டேன் நான் மரணிக்கப்போகின்றேன் என நினைத்தேன் எனதுமரணம் நிகழப்போகின்றது என தனது அந்த நிமிடத்தை நினைவுகூர்ந்தார் லீ.

தென்கொரிய விமானத்திலேயே இது  இடம்பெற்றது.

plane-door-rt-ps-230526_1685127032829_hp

பேரழிவை காண்பிக்கும் படங்களில் விமானத்தின் கதவை திறந்தவுடன் அனைவரும் உயிரிழப்பார்கள் நான் எனது வாழ்க்கையில் என்ன தவறு செய்தேன் என நினைத்தேன்  அது ஒருவிரைவான தருணம் ஆனால் மனதில் பல எண்ணங்கள் ஓடின என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது மொபைலில் யூடியுப்பை பார்த்துக்கொண்டிருந்தவேளை அருகிலிருந்தவர்  விமானத்தின் கதவினை திறந்தார், விமானத்தின் கதவுதிறக்கப்பட்டதும் காற்று வேகமாக அடித்தது, அவரது தொப்பியும் எயர்போனும்  காற்றின் வேகத்தில் வீழ்ந்தன,சுவாசிப்பது கடினமானயிருந்தது.

நிமிர்ந்துபார்த்தபோது அவசர கதவுகள் இருக்கவேண்டிய இடத்தில்  மேகம் காணப்பட்டது,விமானம் இறங்கிக்கொண்டிருந்தது ஆனால் இன்னமும் 700 அடி உயரத்திலிருந்தது.

லீ அழிவு நிச்சயம் என நினைத்தார்.

தனக்கு அருகிலிருந்தவரை பார்த்தவரை பார்த்தவேளை அவரும் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்தமை தெரிந்தது.

நான் கீழே பார்த்தபோது அவரது கால்பாதம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது தெரிந்தது.

ஆனால் அதுவரை அவருக்கு இந்த விபரீதத்திற்கு காரணமானவர் தனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் என்பது தெரியாது.

நான் அவர் கதவை திறந்ததை பார்க்கவில்லை தொழில்நுட்ப கோளாறு என்றே நினைத்தேன் என்கின்றார் லீ.

விமானத்தின் சக்கரங்கள் தரையை தொட்டவேளை அருகிலிருந்தவர் விமானத்திலிருந்து குதிக்க முயன்றார் என்கின்றார் லீ- அவர் அச்சத்தின் காரணமாகவே இதனை செய்ய முயன்றார் என நினைத்தேன் என குறிப்பிட்டார்.

நான் உடனடியாக ஏனைய பயணிகளின் உதவியுடன் அவரை மடக்கிபிடித்தேன் விமான பணியாளர்களை உதவிக்கு அழைத்தேன் என்கின்றார் அவர்.

அதன் பின்னரே என்ன நடக்கின்றது என்பது லீக்கு தெரியவந்தது.

lee_indiana1.jpg

விமானம் தரையிறங்கியதும்  பொலிஸார் 30வயது நபர் ஒருவரை கைதுசெய்தனர்.

 கைதுசெய்யப்பட்ட நபர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்,தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் தான்விரைவாக  வெளியேற முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் விமானத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவேளை அமைதியிழந்தவராக காணப்பட்டார் என்கின்றார் லீ.

https://www.virakesari.lk/article/157332

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

கைதுசெய்யப்பட்ட நபர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்,தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் தான்விரைவாக  வெளியேற முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல குற்றங்கள் இப்படியான  சாட்டு சொல்வதால்தான் குற்றமற்றதாகி விடுகிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏசியானா எயர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணித்துக்கொண்டிருந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி விமானம் பயணித்துக்கொண்டிருக்கும்வேளை - விமானத்தின் அவசரநிலை கதவை திறந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2023 at 04:06, தனிக்காட்டு ராஜா said:
On 9/6/2023 at 03:55, ஏராளன் said:

கைதுசெய்யப்பட்ட நபர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்,தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் தான்விரைவாக  வெளியேற முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல குற்றங்கள் இப்படியான  சாட்டு சொல்வதால்தான் குற்றமற்றதாகி விடுகிறது

இங்கு மனநோயாளர் வைத்தியசாலையில் இருப்பவர்கள் அனேகமானோர் கிரிமினல்கள்.

ஒன்றில் முதலே குற்றம் செய்திருப்பார்.அல்லது

இனிமேல் செய்ய போகும் குற்றத்துக்காக திட்டமிட்டு மனநோயாளராக நடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

BJP அண்ணாமலை யின் தூரத்துச் சொந்தமாக இருப்பார். எதற்கும் ஒரு DNA test செய்தால் விடை தெரியவரும். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

BJP அண்ணாமலை யின் தூரத்துச் சொந்தமாக இருப்பார். எதற்கும் ஒரு DNA test செய்தால் விடை தெரியவரும். 

🤣

சுகாதாரத்துறை அமைச்சர்  கெகலிய ரம்புக்வெலவின் மகனும் ஒரு முறை…..
விமானத்தில் பயணிக்கும் போது, நிறை வெறியில்… கக்கூஸ் கதவு என்று நினைத்து,
அவசரகால கதவை திறந்து விட்டார். 🤣
இவ்வளவிற்கும் அந்த நேரம் இலங்கை கிரிக்கெட் அணியிலும் இருந்த பெடியன். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

சுகாதாரத்துறை அமைச்சர்  கெகலிய ரம்புக்வெலவின் மகனும் ஒரு முறை…..
விமானத்தில் பயணிக்கும் போது, நிறை வெறியில்… கக்கூஸ் கதவு என்று நினைத்து,
அவசரகால கதவை திறந்து விட்டார். 🤣
இவ்வளவிற்கும் அந்த நேரம் இலங்கை கிரிக்கெட் அணியிலும் இருந்த பெடியன். 😂

அண்ணாமலை க்குப் பக்கத்து வீடு 😁

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரில் ஒருத்தன் இருந்தவன்.. சில ஆண்டுகளுக்கு முன் பயிருக்கு அடிக்கிற மருந்து குடிச்சு செத்துப்போனான்.. ஒரு படிப்பறிவும் இல்லை.. படு முட்டாள்… மேசன் வேலை செய்யுறவன்.. ஒவ்வொரு நாளும் குடிச்சிட்டு வந்து மனிச்சிக்கு அடி.. தூசண ஏச்சு.. அவன்ர கொடும தாங்கேலாம மனிசிக்காறி நகை அடவு வச்சு கட்டாருக்கு அனுப்பி வச்சுது.. எனக்கு இதை வாசிக்க அவன்ர நாபகம்தான் வருது.. அவனெல்லாம் எப்புடி பிளைட் ஏறி போனானோ.. சத்தியமா அவன் ஏறின பிளைட்டில நான் போறாதா இருந்தா ரிக்கற் காசு வீணாப்போனாலும் பறுவாயில்லை நான் அந்த பிளைட்டில ஏறமாட்டன்.. அவன் வெத்திலை பாக்கு எல்லாம் சப்பிக்கொண்டுதான் எயாப்போட்டுக்க பிளைட் ஏறப்போனவன் எண்டு ஊரில சொன்னவை.. அவன் வெத்திலை துப்ப பிளைட் கதவை திறக்கக்கூடிய முட்டாள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.