Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதறி அழுத அமைச்சர் செந்தில் பாலாஜி; தற்போதைய நிலை என்ன?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ED Raid: Senthil Balaji-க்கு Night என்ன ஆனது? Car-ல் நெஞ்சை பிடித்து அலறித் துடித்த காட்சி

 

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜி ஒரு குழந்தை சார்... -அண்ணாமலை.-

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜி கைதின் போது நடந்தது என்ன?-சவுக்கு பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். 

உண்மையில் அமலாக்க துறையினருக்கு செந்தில் பாலாசி குடும்பதினர் நன்றி நவிலல் வேண்டும்..

ஓயாத பணி சுமை காரணமாக இதுவரை அவருக்கே தெரியாமல் இருந்த "அடைப்புகளை" அடையாளம் கண்டு சரியான நேரத்தில் சிகிச்சை பெற வைத்தமைக்கு..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி: காவேரி மருத்துவமனை அறிக்கை

16 JUN, 2023 | 02:28 PM
image
 

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்இ" அமைச்சர் செந்தில்பாலாஜி ஜூன் 15-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரை சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய சோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. இந்த சோதனையின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜிஇ ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கொண்ட குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/157850

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2023 at 18:14, ஏராளன் said:

நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” – மனித உரிமை ஆணைய உறுப்பினர் பேட்டி

 

நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் யார் என்று தெரியுமா?
தொலைக்காட்சி விவாதங்களில்…  தி.மு.க. சார்பில் கலந்து கொண்டு,
திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகளை, தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும்…
கொண்டு போய் சேர்க்கும் பணியை செய்பவர்.
அவர் தி.மு.க. விற்கு சார்பாகத்தான் பேசுவார். அதை எல்லாம் கணக்கில் எடுக்காது,
சட்டம் தன் கடமையை செய்து… பாலாஜிக்கு தகுந்த தண்டனையை கொடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு ஏன்?அமலாக்கத்துறை தரப்பு வாதம் என்ன?

senthil balaji

பட மூலாதாரம்,@V_SENTHILBALAJI/TWITTER

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கக்கூடும்?

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜூலை நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். செந்தில் பாலாஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் ஆஜரானார்.

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு அளித்ததை எதிர்த்து முதலில் துஷார் மேத்தா வாதிட்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41 ஏ-வின் கீழ் நோட்டீஸ் வழங்காமல் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதிட்டதை சுட்டிக்காட்டிய துஷார் மேத்தா, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடைசெய்யும் சட்டத்தின் கீழ் வரும் நடைமுறைகளுக்கு 41 - ஏ பிரிவு பொருந்தாது என விஜய் மதன்லால் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

   

மேலும், செந்தில் பாலாஜி தரப்பின் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றதே சட்டவிரோதமானது என்றும் துஷார் மேத்தா வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனு சரியானது என இன்னும் உத்தரவிடவில்லை என்றும் மனுவை விசாரணைக்கு ஏற்றதாலேயே, அது சரியானது என உயர்நீதிமன்றம் முடிவுசெய்ததாகாது என்றும் கூறினர். சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனு சரியானது என ஏற்று தீர்ப்பளித்ததாகக் கருதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் மேலும் சில வழக்குகளைச் சுட்டிக்காட்டி, துஷார் மேத்தா ஆட்சேபம் எழுப்பியபோது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியிருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும்போது, அங்கே இந்த வழக்குகளை அமலாக்கத் துறைச் சுட்டிக்காட்டலாம் என நீதிபதிகள் கூறினர்.

அடுத்ததாக, செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டதன் மூலம், அமலாக்கத் துறையின் காவலில் அவரை அனுப்பியதே அர்த்தமற்றதாகிவிட்டது எனக் கூறினார் துஷார் மேத்தா. கைது செய்யப்பட்டு பதினைந்து நாட்களுக்குப் பிறகு போலீஸ் காவலைக் கோர முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த நாட்கள் கழிந்த பிறகே பதினைந்து நாட்களைக் கணக்கிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்றும் கோரினார்.

இந்த விவகாரமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் ஏதாவது தவறிழைத்தால் அப்போது நாங்கள் தலையிடுகிறோம் என்று தெரிவித்தனர். மேலும், கைதுசெய்யப்பட்டவரின் உடல் நலம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க அமலாக்கத் துறைக்கு சுதந்திரம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

senthil bailaj

பட மூலாதாரம்,ANI

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை முடிவடைந்து, அதற்குப் பிந்தைய கண்காணிப்பில் இருப்பதாகக் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், "ஆட்கொணர்வு மனுவை ஏற்கலாமா, மருத்துவ சிகிச்சையில் உள்ள நாட்களை கைது செய்யப்பட்ட நாட்களாக கருதாமல் இருக்க வேண்டுமா ஆகிய விவகாரங்களை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 22ஆம் தேதி விசாரிக்கிறது. ஆகவே இந்த மனுவை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதைக் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தள்ளிவைக்கக் கோரக்கூடாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் கூறப்பட்ட விஷயங்களோ, உச்ச நீதிமன்றம் தற்போது விவாதத்தின் போது தெரிவித்த கருத்துகளோ அந்த வழக்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. தகுதியின் அடிப்படையிலேயே அந்த வழக்கை விசாரிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

 

செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,SENTHIL BALAJI/TWITTER

தமிழ்நாட்டின் மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவர் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தபோது, பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் ஜூன் 13ஆம் தேதியன்று அமலாக்கத் துறை கைதுசெய்தது.

அவர் கைதுசெய்யப்பட்ட விதத்தை எதிர்த்தும் அவரைத் தனியார் மருத்துவமனையான காவிரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்று கோரியும் அவரது குடும்பத்தினர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. ஆனால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற ஒப்புக் கொண்டது.

ஜூன் 13ஆம் தேதியன்று செந்தில் பாலாஜியின் வீடு அலுவலகங்களில் நடந்த சோதனைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாக அறிவித்தது அமலாக்கத் துறை. 2011-16ல்அ.தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் போக்குவரத்துத் துறையில் பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறைகேடுகள் இருக்கலாம் எனத் தோன்றுவதால், புதிதாக விசாரணை நடத்த கடந்த நவம்பரில் உத்தரவிட்டது. அமலாக்கத் துறையின் விசாரணைக்கும் தடை விதித்தது. இதையடுத்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைக்குத் தடை விதித்தது. ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கை விசாரிக்க அனுமதியும் அளித்தது.

செந்தில் பாலாஜியின் உடல்நிலை

அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட பிறகு தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறிய செந்தில் பாலாஜி முதலில் அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்குப் பிறகு நீதிமன்ற உத்தரவைப் பெற்று காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவரது இதயத்தில் இருந்த அடைப்புகளுக்கு இன்று காலை நான்கு மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு நான்கு வால்வுகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறுவை சிகிச்சையை மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஆர். ரகுராம் மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவரது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக என்ன?

"அறுவை சிகிச்சையை காரணம் காட்டி அவர் மேலும் சில மாதங்கள் ஓய்வைக் கோரலாம். அதற்குப் பிறகு கைதானாலும்கூட, பிணையில் வெளிவந்த பிறகு அவர் அமைச்சராகவே தொடர முடியும். அமலாக்கத் துறை வழக்குகளை நடத்தும் விதத்தைப் பார்க்கும்போது, இந்த வழக்கு அவ்வளவு சீக்கிரம் முடியாது. அதுவரை அவரது அரசியல் எதிர்காலத்திற்குப் பாதிப்பில்லை. அரசியல் ரீதியாகப் பார்த்தால், கட்சியும் மு.க. ஸ்டாலினும் அவர் பின்னால் இருக்கும்வரை, அவருக்கு பாதிப்பு இருக்காது. கட்சி தன்னை கைவிடும்வகையில் செந்தில் பாலாஜி நடந்துகொள்ளாதவரை இது நீடிக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கின் விசாரணை மீண்டும் நாளை சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெறவுள்ளது. செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்தும் அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களை கைதுசெய்யப்பட்ட நாட்களாக கருத வேண்டுமா என்பது குறித்தும் நாளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

https://www.bbc.com/tamil/articles/cl5zenkwxvgo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவு - இது சட்டப்படி சாத்தியமா?

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவு
29 ஜூன் 2023, 14:11 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஏற்பு தெரிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து அவரை அமைச்சரவையில் தொடர வைத்திருந்தது.

தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்வினை ஆற்றினார்.

இதுகுறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்,'' என்று தெரிவித்துள்ளார்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி, ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

 

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்றும், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் தற்போது பிறப்பித்துள்ள இந்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட்டதுதானா என்பது குறித்து அரசமைப்பு சட்ட அறிஞர், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ஆளுநருக்கு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்று கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் ஆளுநரின் இந்த உத்தரவு வந்துள்ளது.

பதவியில் இருந்து நீக்கியதற்கு ஆளுநர் சொல்லும் காரணம் என்ன?

தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாகக் குறிப்பிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதைத் தடுக்கிறார்.

 

தற்போது அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாகப் பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன.

இந்நிலையில் ஆளுநர், வி.செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளார்," என்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் செய்தது சட்டப்படி சரியா?

ஆளுநர் செய்தது சட்டப்படி சரியா?

பட மூலாதாரம்,R.N. RAVI

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் தற்போது பிறப்பித்துள்ள இந்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட்டதுதானா என்பது குறித்து அரசமைப்பு சட்ட அறிஞர், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ஆளுநருக்கு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்று கூறினார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், “அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை சிறைத் தண்டனைக்கு உள்ளானால் ஒழிய, ஒருவர் பெயரில் குற்ற வழக்குகள் இருப்பதாலேயே சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியானவர் இல்லையென்று ஆளுநரால் சொல்ல முடியாது.

சிறையில் இருக்கும்போது அவர் அமைச்சராகத் தொடர முடியாது என்று ஆளுநர் கருத்து தெரிவிக்கலாமே ஒழிய, பதவியிலிருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டு சுமத்தி, தண்டனை பெற்றால்தான் அமைச்சரை தகுதி நீக்கம் செய்ய முடியும்.

குற்றச்சாட்டு சுமத்தி, விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையில், அது கொலை, பாலியல் வல்லுறவு போன்ற மிக மோசமான குற்றமாக இருந்தால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய திருத்தம் கொண்டு வரவேண்டும்.

ஆகவே, இப்படிச் செய்ய முடியாது. ஆளுநருக்கு இந்த அதிகாரம் கிடையாது. அமித் ஷா மீதும் 2016இல் வழக்கு இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

இப்போது முதலமைச்சரால் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வார் என்று சொல்ல முடியும் என்று கூறும் அரிபரந்தாமன், அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே முதலமைச்சரால் அப்படிச் சொல்ல முடியாது என்கிறார்.

ஆளும் கட்சி அடுத்து என்ன செய்ய வேண்டும்?

“ஆளுநரால் இப்படிச் செய்ய முடியாது. இது அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையிலும் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதிதான்.

இதுவோர் அரசியல் பிரச்னை. அதில் என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை விசாரித்து முடிவு செய்யவேண்டிய விஷயம். இதில் ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. ஆளுநர் அவரது எல்லையைத் தாண்டிச் செல்கிறார்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான என்.ராம்.

“ஆளும் கட்சியினர் இதைக் கண்டிக்க வேண்டும். அரசியல்ரீதியாக இதை எதிர்ப்பதோடு, ஆளும் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதை சட்டரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும்,” என்று கூறும் அவர், “ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதால், அவரை இந்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு நீதிமன்றத்தின் மூலமாக கட்டாயப்படுத்த வேண்டும்,” என்றும் கூறுகிறார்.

ஆளுநர் அதிகாரம் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

ஆளுநர் அதிகாரம் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதற்கு எதிராக இரண்டு மனுக்கள் தொடரப்பட்டன. அந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது அமைச்சர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா என்று கேள்வியெழுப்பினர்.

மனுதாரர்கள் தரப்பில் அரசமைப்பு சட்டப்பிரிவு 164இன் படி, ஆளுநர் அந்த முடிவை ஆதரித்தால் மட்டுமே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர முடியும் என்று வாதிட்டனர். ஆனால், “இந்தக் குறிப்பிட்ட வழக்கில் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரக்கூடாது என்று ஆளுநர் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்தவித பரிந்துரையையும் அளிக்க ஆளுநருக்கு உரிமையுண்டு. ஆனால், “சட்டப்பிரிவு 164இன் கீழ் அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஏதாவது சட்டபூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?” என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அந்த வழக்கில், “இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிலான சிறைத் தண்டனையைப் பெற்றால் மட்டுமே ஓர் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியும். குற்ற வழக்கு இருப்பதாலேயே அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி...

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி...

முன்னதாக, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்திருந்தார். அப்போது, ஆளுநரின் முடிவை எதிர்த்து அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

அதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வசம் உள்ள துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் மாற்றும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால் குற்றவியல் வழக்குகள் இருப்பதால் தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை" என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கி இன்று தமிழ்நாடு அரசாணை பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cd1e7xvnz9go

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவு.

Image

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவு.

Image

இவருக்காகத் தானே சாட்டையைச் சேர்ந்தவரை கம்பி எண்ண வைத்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: ஆளுநர் ரவியின் நடவடிக்கை சரியா?

ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,R.N.RAVI

 
படக்குறிப்பு,

ஆளுநர் ஆர்.என்.ரவி

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி,பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. ஆளுநரின் நடவடிக்கை சரியா? அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்த நிலையில், தற்போது அவர் சென்னை காவேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமிக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

   

இந்த வழக்கை ஜூன் 26ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ள ஆளுநர், அமைச்சரை நீக்க வேண்டும் என எங்கே சொல்லியிருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஆளுநர் ஏற்கவில்லை என்பதற்கும், அவரை நீக்க உத்தரவிட்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது” என்று கருத்து தெரிவித்திருந்தது.

செந்தில்பாலாஜியை நீக்கி உத்தரவிட்ட ஆளுநர்

இந்நிலையில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில்,

  • செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
  • அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார்.
  • தற்போது அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
  • அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாக பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன.

எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,SENTHIL BALAJI/TWITTER

 
படக்குறிப்பு,

செந்தில் பாலாஜி (இடது), ஸ்டாலின் (வலது)

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- முதலமைச்சர்

ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது. நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசிய போது, “அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை,” என்றார்.

ஆளுநரின் நடவடிக்கை சரியான அணுகுமுறையா?

மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “மாநில அமைச்சர் ஆளுநரின் இசைவின்படிதான் பதவி வகிக்கிறார். செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் இசைவு தெரிவிக்கவில்லை. மாநிலங்களை பொறுத்தவரை அரசியல் சாசனத்தின் காவலர் ஆளுநர்தான். அந்தவகையில் ஆளுநர் செய்தது சரிதான்.

குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது. ஆனால், ஆளுநர்கள் செயல்படுத்துவதில்லை. கேரளாவில் இதேபோன்று அமைச்சர் கே.என்.பாலகோபல் தனது பதவியில் தொடரக்கூடாது என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது இசைவின்மையை தெரிவித்திருந்தார். எனினும், ஆரிப் முகமது கான் பதவி நீக்கம் என்ற நிலைக்கு செல்லவில்லை. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்,” என்றார்.

மசோதாக்களை நிறுத்தி வைப்பது, தமிழ்நாடு-தமிழகம் என்ற சர்ச்சையை ஏற்படுத்துவது என மாநில அரசுடன் இருந்த மோதலை இந்த நடவடிக்கை மூலம் ஆளுநர் வேறு கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளார் என்று மூத்த செய்தியாளர் ப்ரியன் கூறுகிறார்.

“எந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளார் என்பது உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. முதல்வர் பரிந்துரையின் பேரில்தான் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார். யாரையும் தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கம் செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை,” என்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி- செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

செந்தில் பாலாஜி கடந்த 15-ம் தேதி கைது செய்யப்பட்டார்

தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக நினைத்துக் கொண்டு தேவையில்லாத சர்ச்சைகளை ஆளுநர் உருவாகுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகிறார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசிய போது, “அரசியல் அமைப்பு சட்டம் 163, 164 ஆகியவற்றை படித்தால் ஆளுநர் என்றால் யார், அவருடைய இசைவு என்பது எங்கு இருக்கிறது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு எந்த இடத்திலும் தனிப்பட்ட முறையில் செயலாற்ற உரிமை இல்லை. அவர் எதை செய்தாலும் முதலமைச்சர், அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும் என்பதை பி.ஆர். அம்பேத்கர் கூறியுள்ளார். நபம் ரெபியா வழக்கில் பி.ஆர். அம்பேத்கரின் வார்த்தைகளை உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறுகிறது.

தனது உத்தரவால் எதுவும் நடக்கபோவது இல்லை என்பதும் தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதும் ஆளுநருக்கு நன்றாகவே தெரியும்.

தன்னுடைய இருப்பை எப்போதும் காண்பித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆளுநர் விளம்பர பிரியராக இருக்கிறார். தனக்கான பொறுப்பையும், அரசியலமைப்பு சட்டத்தையும் ஆளுநர் மதித்து செயல்படவில்லை,” என்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,SENTHIL BALAJI/TWITTER

 
படக்குறிப்பு,

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியே பதவியை ராஜிநாமா செய்திருக்கலாம்

இது தேவையில்லாத சர்ச்சைதான். செந்தில்பாலாஜியே தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கலாம். அவர் மீதான வழக்கு எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்று தெரியாது. அப்படி இருக்கும்போது எத்தனை ஆண்டுகளுக்கு அவர் துறை இல்லாத அமைச்சராக தொடருவார். இது அரசுக்கு செலவுதானே. மக்களின் வரிப்பணம் தானே அது? என்று கேள்வி எழுப்புகிறார் தராசு ஷ்யாம்.

செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும் என்ற கருத்தை ப்ரியனும் முன்வைக்கிறார்.

“அமைச்சர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது தனது பதவியை அவர் ராஜிநாமா செய்வதுதான் தார்மீக ரீதியாக சரியாக இருக்கும். அதுதான் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்துக்கு அழகு. ஆளுநர் செய்தது தவறுதான், அதே நேரத்தில் அரசும் உயர்ந்த நெறியை பின்பற்றி இருக்க வேண்டும். கட்சி ரீதியாக எத்தகைய உதவியை வேண்டுமானாலும் செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் செய்யலாம். ஆனால், அரசு ரீதியாக எந்த உதவியையும் செய்யக்கூடாது,” என்றார்.

பாஜக துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி பேசிய போது, “ஆளுநர்தான் மாநிலத்தின் முதல் குடிமகன். செந்தில்பாலாஜியை அமைச்சராக நியமித்ததே ஆளுநர் ஆர்.என்.ரவி தான். அவரை நீக்குவதற்கு ஆளுநருக்கு உரிமை இருக்கிறதா என்று கேட்கிறார்கள். தாராளமாக கேட்கட்டும். ஆனால், ஒரு அமைச்சர் கை நீட்டி காசு வாங்கலாமா? 'பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டேன்; வழக்கை வாபஸ் பெறலாம்' என்று கூறுவது சரியா? "

"இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பல பேர் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். குற்றவாளி அல்ல என்று நிரூபணமான பின்னர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளனர். எனவே, ஊழலுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் எதிரான நடவடிக்கையாகத் தான் ஆளுநரின் நடவடிக்கையை பார்க்க வேண்டும்,” என்றார்.

ஆளுநரின் நடவடிக்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அரசியல் ரீதியாக திமுகவுக்கு ஆளுநரின் நடவடிக்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தராசு ஷ்யாம் கூறுகிறார்.

“அரசியல் பின்னடைவு என்று இதில் எதுவும் இல்லை. ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார். மேற்கு வங்கத்தில் ஆளுநர் பஞ்சாயத்து தேர்தலில் தலையிடுகிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்ற ரீதியில் மு.க.ஸ்டாலின் இதனை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது,” என்றார்.

கே.எஸ்.அழகிரி

பட மூலாதாரம்,K.S.ALAGIRI

 
படக்குறிப்பு,

கே.எஸ். அழகிரி- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

மத்திய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வார்களா?

ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நம்மிடம் பேசிய போது, “அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் ஆளுநரின்செயல் புறம்பானது. செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே தவிர, குற்றம் நிரூபிக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். அதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியுமா?

ரஃபேல் விற்பனை மற்றும் ட்ரோன் விற்பனையில் தவறு நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துவிட முடியுமா? ஒரு அரசாங்கத்துக்கு என்னால் தொந்தரவு கொடுக்க முடியும் என்ற அதிகார மமதையில் ஆளுநர் இவ்வாறு செய்கிறார். சட்டம் இதை அனுமதிக்காது,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cpr48jr5r3ro

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

செந்தில் பாலாஜியை ஆளுநர்  ஆர்என் ரவி நேற்றுமாலை  பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில்  நள்ளிரவே குறித்த உத்தரவை அவர் மீளப்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமுலாக்கத் துறையினர், கடந்த, 14ஆம் திகதி, அமைச்சர் செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில்  கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் செந்தில் பாலாஜி அமைச்சர் அந்தஸ்து இல்லாத அமைச்சராகத்  தொடர  ஒப்புதல் அளிக்கக்  கோரி, ஆளுநருக்கு முதலமைச்சர்  ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

எனினும் செந்தில் பாலாஜியைப்பதவி  நீக்கம் செய்து, ஆளுநர் ரவி நேற்றைய தினம்  உத்தரவிட்டார். இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ‘அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளைச்  சந்தித்து வருகிறார். தன் அமைச்சர் பதவியை, அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தற்போது அவர், அமுலாக்கத் துறை விசாரிக்கும் குற்ற வழக்குகளுக்காக, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் சில குற்ற வழக்குகள், மாநிலப் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பது, சட்டப் படியான விசாரணையை பாதிக்கும். இறுதியில் அரசியலமைப்புகள் சீரழியும் நிலை ஏற்படும். இந்நிலையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  குறித்த  உத்தரவுக்கு முதலமைச்சர்  உள்ளிட்ட பல்வேறு கட்சிதலைவர்களும் தமது  எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த  உத்தரவை ஆளுநர் ரவி நேற்று நள்ளிரவு மீளப்பெற்றுள்ளதோடு அடுத்த அறிவிப்பு வரும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1336877

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சியாக இருந்த போது ; விஜயபாஸ்கரை, உடனடியாக  எடப்பாடி பழனிசாமி பதவிநீக்கம் செய்யவேண்டும். தவறினால், பொறுப்பு ஆளுநர்,  விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'
ஆளும் கட்சியான மாறிய பின்பு ; செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
மு.க.ஸ்டாலின்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தது ஏன்?

செந்தில் பாலாஜி
 
படக்குறிப்பு,

செந்தில் பாலாஜியை நீக்குவதாக வியாழக்கிழமையன்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்வதாக அறிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திடீரென அந்த முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கிறார். இடையில் என்ன நடந்தது?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது அமலாக்கத்துறை வழக்கைச் சந்தித்துவரும் செந்தில் பாலாஜியை நீக்குவதாக வியாழக்கிழமையன்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை. இதனைச் சட்டப்படி சந்திப்போம்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்து அறிவித்த முடிவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அது குறித்து அதிகாரபூர்வமாக எந்த செய்திக் குறிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்து முதலமைச்சருக்கு ஆளுநர் அனுப்பிய ஐந்து பக்கக் கடிதமும் அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக அனுப்பிய கடிதமும் ஊடகங்களுக்கு வெளியானது.

 

ஆளுநரின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக அனுப்பியிருந்த கடிதத்தில் முதலமைச்சர் மீது ஆளுநர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

"அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தர பணம் வாங்குவது, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

அரசியல்சாசன ரீதியான தார்மீக நடைமுறைகளின் அடிப்படையிலும் அவர் மீது கிரிமினல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், சட்ட நடவடிக்கைகள் சரியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தேன்.

என்னுடைய அறிவுரையை சரியான வகையில் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஜூன் 1ஆம் தேதியன்று தூண்டக்கூடிய வாசகங்களைக் கொண்ட பதில் கடிதத்தை நீங்கள் எழுதினீர்கள். என்னுடைய அறிவுரையைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக மிக மோசமான மொழியைப் பயன்படுத்தியிருந்தீர்கள். நான் என் அரசியல்சாசன வரம்புகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தீர்கள். உங்களுடைய பதில் மிக ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் அமைச்சராக தன் கடமையைச் செய்ய முடியாது என்ற காரணத்தைக் கூறி, அவரது அமைச்சரவைப் பொறுப்புகளை மாற்றியளிக்க பரிந்துரைத்து ஜூன் 15ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினீர்கள். மேலும், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் எனவும் கூறியிருந்தீர்கள்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,SENTHIL BALAJI

ஜூன் 14ஆம் தேதி அவர் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டது குறித்தும் நீதிமன்ற காவலில் மருத்துவ சிகிச்சை எடுத்துவருவது குறித்த தகவலை நீங்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் இதில் பல தகவல்கள் பொதுவெளியில் இருந்தன.

செந்தில் பாலாஜியிடம் உள்ள துறைகளை மாற்றுவதற்கான முக்கியமான காரணங்களைக் குறிப்பிடாததால், அதே நாளில் நான் உங்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினேன். ஆனால், நான் கேட்ட தகவல்களை நீங்கள் தரவில்லை. பதிலாக, அதே நாளில் நீங்கள் எழுதிய கடிதம் ஒன்று அடுத்த நாள் எனக்கு வந்து சேர்ந்தது. 15ஆம் தேதியிட்ட கடிதம் தொடர்பாக தாமதமின்றி நடவடிக்கை எடுக்கும்படி மோசமான மொழியில் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

ஜூன் 16ஆம் தேதி நான் எழுதிய கடிதத்தில், செந்தில் பாலாஜி வகித்துவந்த இரு துறைகளை மாற்றியளித்ததோடு, விசாரணை ஒழுங்காக நடக்க வேண்டுமென்பதற்காக செந்தில் பாலாஜி பதவியில் தொடரக்கூடாது என்றும் கூறியிருந்தேன். ஆனால், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படாததோடு, அவர் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்பதற்கான அரசாணையும் வெளிவந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆர் என் ரவி

பட மூலாதாரம்,R N RAVI

 
படக்குறிப்பு,

ஆர் என் ரவி

செந்தில் பாலாஜி குறித்து உச்ச நீதிமன்றம் கூறியிருந்த சில தகவல்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டியிருந்தார்.

“நியாயமான விசாரணைக்கும் நீதிக்கும் செந்தில் பாலாஜி இடையூறு ஏற்படுத்தக்கூடும் என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் நீங்கள் அவரை அமைச்சராக வைத்திருந்தது அவருக்கு மேலும் ஊக்கமளித்தது. இதனால், மத்திய புலனாய்வு அமைப்பான வருமான வரித் துறையின் பணிகளையே தடுக்கும் அளவுக்குச் சென்றார். செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையோரின் வீடு மற்றும் இடங்களில் மே 28ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டார்கள். அவர்கள் வசம் இருந்த ஆவணங்கள் பறிக்கப்பட்டன. இந்த நிலையைச் சமாளிக்க உள்ளூர் காவல்துறையினர் உதவாததால், சிஆர்பிஎஃப் படையினரின் உதவியைக் கோரும் நிலை ஏற்பட்டது.

சாதாரண சூழலில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய ஆலோசனையை மீறி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தொடரச் செய்யும் முடிவு உங்கள் பாரபட்சமான தன்மையைக் காட்டுகிறது.

செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வதென்பது சட்ட, நீதி நடைமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் என்ற நியாயமான சந்தேகங்கள் இருக்கின்றன. அம்மாதிரியான ஒரு சூழல் மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டநடைமுறை குலைவதற்கு வழிவகுக்கும்.

இம்மாதிரியான ஒரு சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளிக்கும் அதிகாரத்தின்படி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கி உத்தரவிடுகிறேன்" எனவும் கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,SENTHIL BALAJI

 
படக்குறிப்பு,

செந்தில் பாலாஜி

ஆளுநரின் இரண்டாவது கடிதத்தில் கூறப்பட்டது என்ன?

இந்தக் கடிதத்திற்குப் பிறகு இரவில் ஆளுநரிடமிருந்து முதலமைச்சருக்கு இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், முன்பு தான் எடுத்த முடிவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார்.

"செந்தில் பாலாஜி குறித்த என்னுடைய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைக் கேட்பதே சரியாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆகவே, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை நான் கேட்கவிருக்கிறேன். என்னிடமிருந்து அடுத்த தகவல் வரும்வரை, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவு நிறுத்திவைக்கப்படுகிறது" என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தது.

அமித் ஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமித் ஷா

இரவில் நடந்தது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு சில மணி நேரமே ஆன நிலையில், அந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றது ஏன் என்பதும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

"நான்கு நாள் தில்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் அங்கிருந்த சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்தார். அதற்குப் பிறகு தி.மு.கவை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படியே செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்வதாக முதல் கடிதத்தை ஆளுநர் அனுப்பினார். ஆனால், அடுத்தடுத்து அரசியல் களத்தில் நடந்த விவகாரங்களைப் பார்த்த இங்கிருந்த அரசியல் தலைவர் ஒருவர், அரசியல் சூழல் எதிர்பார்த்ததற்கு மாறாகச் செல்வதை மத்தியத் தலைமைக்குத் தெரிவித்தார். அங்கிருந்து வந்த அறிவுரையின்படி, அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. ஒட்டுமொத்த கெட்ட பெயரும் ஆளுநர் ஏற்க வேண்டியதாகிவிட்டது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமிருந்து ஆளுநருக்கு விரிவான பதில் கடிதமோ, அறிக்கையோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cl4dx8ydgvlo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் vs முதல்வர்: இருவருக்கும் நடந்த 'காட்டமான கடித பரிமாற்றம்' உணர்த்துவது என்ன?

ஆளுநர் ரவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

செந்தில்பாலாஜி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எரிச்சலூட்டும், மிதமிஞ்சிய வார்த்தைகளைக் கூறியதாக ஆளுநர் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கை சந்தித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்வதாக நேற்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியானது. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட பலரும் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து முதலமைச்சருக்கு ஆளுநர் அனுப்பிய ஐந்து பக்கக் கடிதமும் அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக அனுப்பிய கடிதமும் ஊடகங்களுக்கு வெளியானது.

   

ஆளுநர் கடிதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அனுப்பியிருந்த கடிதத்தில் முதலமைச்சர் மீது பல குற்றச்சாட்டுகளை ஆளுநர் வைத்திருந்தார்.

"அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தர பணம் வாங்குவது, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

அரசியல் சாசன ரீதியிலான தார்மீக நடைமுறைகளின் அடிப்படையிலும் அவர் மீது கிரிமினல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், சட்ட நடவடிக்கைகள் சரியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தேன்.

என்னுடைய அறிவுரையை சரியான வகையில் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஜூன் 1ஆம் தேதியன்று தூண்டக்கூடிய வாசகங்களைக் கொண்ட பதில் கடிதத்தை நீங்கள் எழுதினீர்கள். என்னுடைய அறிவுரையைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக மிக மோசமான மொழியைப் பயன்படுத்தியிருந்தீர்கள். நான் என் அரசியல் சாசன வரம்புகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுடைய பதில் மிக ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் அமைச்சராக தன் கடமையைச் செய்ய முடியாது என்ற காரணத்தைக் கூறி, அவரது அமைச்சரவை பொறுப்புகளை மாற்றியளிக்க பரிந்துரைத்து ஜூன் 15ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினீர்கள். மேலும், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் எனவும் கூறியிருந்தீர்கள்.

செந்தில்பாலாஜி

சாதாரண சூழலில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய ஆலோசனையை மீறி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தொடரச் செய்யும் முடிவு உங்கள் பாரபட்சமான தன்மையைக் காட்டுகிறது.

செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வது என்பது சட்ட, நீதி நடைமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் என்ற நியாயமான சந்தேகங்கள் இருக்கின்றன. அம்மாதிரியான ஒரு சூழல் மாநிலத்தில் அரசமைப்பு சட்ட நடைமுறை குலைவதற்கு வழிவகுக்கும்.

இந்த மாதிரியான ஒரு சூழலில் அரசமைப்பு சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளிக்கும் அதிகாரத்தின்படி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கி உத்தரவிடுகிறேன்," எனவும் கூறியிருந்தார்.

ஆளுநருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்தது என்ன?

ஆளுநருக்கு பதில் கொடுக்கும் விதமாக 6 பக்கங்களைக் கொண்ட கடிதம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ளார்.

“முதலாவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட 2 கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனை கோரப்படவில்லை. இரண்டாவதாக முதல் கடிதத்தை நீங்கள் வெளியிட்ட சில மணிநேரங்களில், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்பதற்காக அதைத் திரும்பப் பெற்றீர்கள்.

இதுபோன்ற முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் சட்ட ரீதியான கருத்தைக் கேட்கவில்லை; இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் தலையீடு உங்களை வழி நடத்தியது என்பதும், இந்திய அரசமைப்பு சட்டத்தை அலட்சியப்படுத்தி, அவசரப்பட்டு இச்செயலை செய்தீர்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கையாளும்போது ஆளுநர் போன்ற அரசமைப்பு அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்; ஆதாரமற்ற அச்சுறுத்தல்களைக் கொடுத்து அரசமைப்பு சட்டத்தை மீற வேண்டாம்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர, குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை,” என மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, 2014 உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய முதலமைச்சர், “அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாசாரத்திற்கு ஏற்ப உங்களிடம் இனிமையாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டிருக்கிறோம். அதற்காக அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான உங்கள் உத்தரவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும் என்ற அவசியமில்லை” என கடிதம் வாயிலாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

“என்னுடைய அமைச்சர்களை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. அது தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மட்டுமே உரிய தனி உரிமை. என் ஆலோசனையின்றி அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக என்னுடைய அமைச்சரைப் பதவி நீக்கம் செய்த உங்கள் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது” என ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,STALIN

ஆளுநருக்கு அவர் மொழியில் அளிக்கப்பட்ட பதில்

உங்கள் கடிதத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆளுநர் தனது கடிதத்தில் முதலமைச்சர் குறித்து குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது மொழியில்தான் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்று மூத்த செய்தியாளர் ப்ரியன் பிபிசி தமிழிடம் கூறினார்.

“ஆளுநர் இந்த விவகாரத்தில் அநாகரிகமாக நடந்துள்ளார். அரசமைப்பு சட்டம் தொடர்பாகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அட்டர்னி ஜெனரல் போன்றோரை ஆளுநர் கலந்தாலோசிக்கவில்லை.

அரசமைப்பு தொடர்பாக அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் ஆளுநர் செயல்பட்டுள்ளார். முதலமைச்சர் பரிந்துரையின்பேரில்தான் ஆளுநர் அமைச்சரை நியமிக்கவே முடியும் என்றிருக்கும்போது எப்படி தன்னிச்சையாக நீக்க முடியும். நியமிக்கும் உரிமை இருக்கிறது என்பதால் வேறு நபரை அமைச்சராகத் தன்னிச்சையாக ஆளுநரால் நியமிக்க முடியுமா?

அமைச்சரவைக்கு தலைமை தாங்கும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கும்போதுதான் 164(1) என்ற பிரிவே உயிர் பெறுகிறது. ஆளுநருக்கு சில பொறுப்புகளையும் கடமைகளையும் மட்டும்தான் அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ளது.

ஊழலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறும் ஆளுநர், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வாங்கி நிலுவையில் வைத்துள்ளார். அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடந்து 2 முன்னாள் அமைச்சர்கள் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் ஏன்?

பொறுப்பில் இருப்பவர் சட்டவிரோதமான ஒரு செயலில் செய்யும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும் ஆளுநரின் மொழியிலேயே அவருக்கு பதிலளிக்க வேண்டி இருக்கிறது. ” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c51964ylpdgo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு - இனி என்ன நடக்கும்?

செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை, திமுக

பட மூலாதாரம்,SENTHIL BALAJI

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னதாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தது.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம், அவரது கைதுக்கான காரணங்கள் சொல்லப்படவில்லை என்று கூறி அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

சட்டவிரோத காவலில் உள்ள செந்தில் பாலாஜியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

'கைது செல்லும்'

வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பரத சக்கரவரத்தி, மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

கைதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பதோ சட்டவிரோதமாக இல்லாத பட்சத்தில் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், செந்தில்பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக் காவல் கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று, (ஜூலை 15, வெளிக்கிழமை) மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

முன்னதாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் செந்தில் பாலாஜி கைது செல்லும் எனத் தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன்தான் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார்.

'மூன்றாம் நீதிபதியின் தீர்ப்பு சரியானது'

செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை, திமுக

பட மூலாதாரம்,KARPAGAVINAYAGAM

 
படக்குறிப்பு,

தற்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு சரியானது என்று கூறுகிறார் முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம்

சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இனிவரும் நாட்களில் வழக்கின் போக்கு, செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி பிபிசி தமிழ் ஒரு சட்ட வல்லுநரிடமும் ஒரு அரசியல் விமர்சகரிடமும் பேசியது.

தற்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு சரியானது என்று கூறுகிறார் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனு செல்லாது என்றார். “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக எப்படிச் சொல்லமுடியும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், இவ்வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என்றார். “இதேபோன்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா இதேபோன்ற ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு, இந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்கள் இருக்கின்றன, எனவே இந்த வழக்கு மேற்கொண்டு செல்லும், என்றார்.

செந்தில் பாலாஜிக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படலாம்?

செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை, திமுக
 
படக்குறிப்பு,

இப்போது வந்திருக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனின் தீர்ப்புக்குப் பிறகு செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வருவது நிச்சயம் என்றார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

இந்தத் தீர்ப்பின் மூலம், செந்தில் பாலாஜி சந்திக்கக்கூடிய சிக்கல்களைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், இந்த வழக்கிலிருந்து செந்தில் பாலாஜி குறுகிய காலகட்டத்தில் வெளியே வருவது கடினம் என்றார்.

இப்போது வந்திருக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனின் தீர்ப்புக்குப் பிறகு செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்ல வேண்டிய வருவது நிச்சயம் என்கிறார் குபேந்திரன்.

“இப்போது அவர் இதய அறுவை சிகிச்சைக்குப் பின் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சை முடிந்ததும் அவர் ஒரு கஸ்டடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். எப்படியும் அடுத்த 2 அல்லது 3 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டிவரும்,” என்றார்.

மேலும், அவர் ஒவ்வொருமுறை ஜாமீனுக்காக விண்ணப்பிக்கும் போதும், அமலாக்கத்துறை அவருக்கு எதிரான ஒரு புதிய ஆவணத்தை வெளியிட்டு, இந்த சாட்சிகளை அவர் கலைக்கப் பார்ப்பார் என்று வாதிட்டு, ஜாமீன் கிடைப்பதை முடக்கப் பார்க்கும், என்றார் குபேந்திரன்.

மேலும் அவரது தம்பி அசோக் குமார் இருக்கும் இடம் இன்னும் தெரியாமல் இருப்பதும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் குபேந்திரன். அவரை வைத்து இவரை வளைக்கப் பார்ப்பார்கள் என்கிறார்.

அதேபோல், ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததும் அவருக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புள்ளது, என்கிறார் குபேந்திரன்.

செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?

செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றிப் பேசிய அவர், அவர் சிறையிலிருந்து வந்த பின்னும் அவரை தி.மு.க ஆதரிக்குமா என்பது அவரைச் சுற்றியிருக்கும் பிரச்னைகள், சிக்கல்கள், அவருக்கு எதிரான ஆவணங்கள் ஆகியவற்றைப் பொருத்தது, என்றார்.

தமது கணிப்பில் செந்தில் பாலாஜி இந்தப் பிரச்னையிலிருந்து முழுதாக வெளிவர ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார்.

“அவர் எந்த சிக்கலும் இன்றி இந்த வழக்கிலிருந்து வெளியே வந்துவிட்டால், தி.மு.க.விலேயே தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.

ஆனால் அவருக்கு எதரான ஆவணங்கள், சிறைத்தண்டனை என்று மேலும் சிக்கல்கள் உருவானால் அவரது அரசியல் வாழ்க்கை தடைபடும். இருப்பினும் சிறைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு அரசியல்வாதியில் அரசியல் வாழ்க்கை தடைபடாது,” என்றும் குறிப்பிட்டார், குபேந்திரன்.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?

கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அந்த விஷயத்தில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.

முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

 
செந்தில் பாலாஜி
 
படக்குறிப்பு,

2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட விஷயத்தில் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியது.

மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே நேரம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.

https://www.bbc.com/tamil/articles/crgkr79kn5eo

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில்பாலாஜி விவகாரத்தில் தீராத சந்தேகங்கள்!

 

-சாவித்திரி கண்ணன்

 

maxresdefault-4.jpg

ஒரு விசாரணை  அனுமதிக்கே அமலாக்கத் துறைக்கு ஒருமாத நீதிமன்றப் போராட்டம் நிர்பந்திக்கப்பட்டது ஏன்? இந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட பேரங்கள் என்ன..? பழைய வழக்கிற்காக மட்டும் விசாரணையா? டாஸ்மாக் கொள்ளை விவகாரமும் உள்ளதா..? செந்தில் பாலாஜி தம்பியை விட்டுப் பிடிப்பது ஏன்?

இன்றைக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழங்கி இருக்கும் தீர்ப்பு யாரும் எதிர்பாராததல்ல. இந்த நியாயத்தை சொல்ல பெரிய திறமையோ, சட்ட அறிவோ அவசியமில்லை.

கடத்தப்பட்டு, கண் காணாத இடத்தில் வைத்திருக்கப்படும் நபரை கண்டுபிடித்துக் கொடுக்க போடப்படுவது தான் ஆட்கொணர்வு மனு. அனைவரும் அறிய மருத்துவமானியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் ஒருவருக்காக ஆட்கொணர்வு மனுவை போட்டு நீதிமன்றத்தை ஒருமாதகாலம் அலைக்கழித்தது இவர்களாகத் தான் இருக்கும்.

இதுவே, சாதாரண மனிதன் இந்த மாதிரி நீதிமன்றங்களின் நேரத்தை விரையமாக்கும் ஒரு வழக்கை போட்டிருந்தால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, கடும் எச்சரிக்கையும் தரப்பட்டிருக்கலாம்.

2020 ஆம் ஆண்டில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட ‘சிறைச்சாலை புள்ளிவிவரங்கள் இந்தியா’ அறிக்கையின்படி, இந்திய சிறைகளில் மொத்தமுள்ள 4,88,511 சிறைக் கைதிகளில் 3,71,848 பேர் விசாரணைக் கைதிகள்! அதுவும் ஆண்டுக்கணக்கில் குற்றம் நிருபிக்கபடாமல் சிறையில் வாடுபவர்கள்! இந்த தகவல் சொல்வது என்னவென்றால், இங்கு ஏழைகளுக்கு நியாயமான நீதி கிடைப்பதில்லை. அதுவே, அதிகார பலம், பணபலம் இருக்கும் ஒருவர் என்றால், எத்தகைய குற்றத்தையும் செய்துவிட்டு, காவல்துறை, விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் அனைத்தின் நேரத்தையும் வீணடிக்கலாம். மக்களில் ஒரு பிரிவை தனக்கு அனுதாபமாக பேசவும் வைக்கலாம்!

2023-07-05-288966-237c0179-3.jpg செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள்!

எல்லோருக்கும் தெரிந்த ஒரு நியாயத்தை கேள்விக்கு உள்ளாக்கி, ஒரு மாதமாக நீதிமான்களையே குழம்ப வைத்து, ஒன்றுக்கு இரண்டு நீதிபதிகளை வைத்து, அதுவும் போதாமல் மூன்றாவது நீதிபதியை நியமித்து, இதற்கிடையில் உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு.. இந்தியாவிலேயே அதிகமாக கட்டணம் வசூலிக்கும் வக்கீல்களை வைத்து கோடிக் கோடியாய் பணத்தை இறைத்து..அவர்களால் செய்ய முடிந்தது ஒருமாத காலகட்ட தாமதம். இதற்குள் செய்ய வேண்டியவை செய்யப்பட்டு இருக்கலாம். பேரங்கள் நாட்ந்து முடிந்திருக்கலாம்!

ப.சிதம்பரம் சிறைக்கு போனார். மணீஸ் சிசோடியா சிறைக்கு போனார்! இந்த இருவர் விஷயத்திலும் ஒரு உண்மையான எதிர்மறை அரசியல் உள்ளது. ஆனால்., செந்தில் பாலாஜி விவகாரத்தில் அப்படி ஒன்று இருக்கிறதா..?

பாஜகவிற்கு எதிரான அரசியலில் செந்தில் பாலாஜிக்கும், திமுகவிற்கும் ஒரு உறுதிபாடான அரசியல் இருந்திருக்குமானால் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்ல தயங்கி இருக்கமாட்டார். சிறை வாழ்க்கையை அரசியல் பயணத்தின் ஒரு அம்சமாக பாவித்திருப்பார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறையில் ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்ட போது அஞ்சவில்லை. சமீபகால உதாரணமாகச் சொல்வதென்றால், ஈழப் பிரச்சினையில் வைகோ, பழ.நெடுமாறன்.. போன்றவர்கள் சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை. இது தான் குற்றம் செய்து சிறைக்கு போகுபவர்களுக்கும், கொள்கைக்காக சிறைக்கு போகுபவர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடாகும்.

maxresdefault-2-1.jpg

செந்தில்பாலாஜி விவகாரத்தில் பாஜக அரசு சீரியசாக இருப்பதாக நான் நம்பவில்லை. சீரியசாக இருந்திருப்பார்களேயானால், இந்த இரண்டேகால் வருடத்தில் அவர் டாஸ்மாக்கில் அடித்த பகாசூரப் பகல் கொள்ளை குறித்து கண்டும், காணாமல் அமைதியாக இருக்கமாட்டார்கள்! அதுவும் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் நாட்கணக்கில் ரெய்டு நடத்தியும் இது தெரியவில்லையா..? இத்தனை ரெய்டும் அந்த வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய ஒரு சாதாரணமான குற்றத்திற்காகத் தானா..? அந்த மிகக் குறைவான தொகையை கண்டெடுக்கத் தானா அதைவிட அதிக செலவில் பெரும் படை, பட்டாளங்களுடன் சென்று ரெய்டுகள் நடந்தன! டாஸ்மாக்கிற்கு வாகன சர்வீஸ் செய்பவர் இடத்திலும் ரெய்டுகள் நடந்தனவே! என்னாச்சு?

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததில் இருந்து டாஸ்மாக் சரக்குகள் டாஸ்மாக் குடோவுனுக்கு செல்லாமல் நேரடியாக பார்களுக்கும், கடைகளுக்கும் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டு கலால்வரி அரசுக்கு செலுத்தாமல் முழுப்பணமும் ஸ்வாகா செய்யப்படுவது பற்றி இங்கு ஊடகங்கள் வேண்டுமானால் வாய் திறக்காமல் போகலாம். ஆனால், சாதாரண குடிமகனுக்கு கூட இது தெரியுமே! மேலும், டாஸ்மாக் பார்களில் கள்ளமது கரூர் கம்பெனியால் சப்ளை செய்யப்பட்டு, அதன் மூலம் ஆறு மனித உயிர்கள் பலியானது சாதாரணக் குற்றமா? அதை எல்லாம் கண்டும், காணாமல் போகுமளவுக்கு மத்திய ஆட்சியாளர்கள் பெருந்தன்மை நிறைந்தவர்களா..?

202012300529488661_Tasmac-bars-open-in-T

செந்தில் பாலாஜியை விசாரிக்க நிர்பந்திப்பவர்கள் அவர் தம்பி அசோக்குமாரை ஏன் நெருங்கவில்லை? ஏன் பிடிவாராண்டுக்கு முயற்சிக்கவில்லை? மீண்டும், மீண்டும் வாய்தா வாங்க முடிகிறதே அவரால்! அவர் டெல்லியில் பாஜக அதிகார மையங்களோடு லாபி செய்து கொண்டிருப்பதால் தானே விட்டு வைத்துள்ளனர்.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் அவர் உடல் நிலை குறித்த உண்மையை எய்ம்ஸ் மருத்துவ குழு கொண்டு பரீசோதிப்பதாகச் சொன்ன அமலாக்கத் துறை அதை நிறைவேற்றவில்லை. அதனால் தான் தற்போது தனக்கும் நெஞ்சில் அடைப்பு இருக்கிறது என்கிறார் அவர் தம்பி அசோக்குமார்.

images-3.jpg

செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறையின் டார்கெட் டாஸ்மாக்க்கில் கொள்ளையடிக்கும் பல்லாயிரம் கோடிப் பணமாக இருப்பதற்கே வாய்ப்பு உள்ளது. ஏனெனில், டெல்லியில் ஆத்மி ஆட்சியில் மதுவை வீட்டிற்கே சப்ளை செய்வது குறித்தும், 24 மணி நேர பார் குறித்துமான டெண்டர்கள் பேசப்பட்டதை வைத்தே கைது செய்தனர். இதில் தான் மணீஸ் சிசோடியா கைதானார்! இத்தனைக்கும் அது மக்கள் எதிர்ப்பால் நடைமுறைப்படுத்தப்படாமல் வாபஸ் பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் கைதாகாமல் தப்பிக்க விடப்பட்டார் தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா! அதற்கு பிரதியுபகாரமாகத் தான் சந்திரசேகரராவ் மோடியை எதிர்ப்பது போல பாவனை காட்டினாலும், மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்கள் அனைத்தையும் அப்படியே மாநிலத்தில் பாஜக அரசுக்கு நிறைவேற்றித் தருகிறார். இதனால் தான் ராகுல்காந்தி சந்திரசேகராவை இயக்கும் ரிமோட் மோடியின் கைகளில் இருக்கிறது என கிண்டல் அடித்தார்.

அது தான் இங்கும் நடக்க உள்ளது! ஏற்கனவே பாஜக அரசின் தேசியக் கல்வி கொள்கை, நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம், வாகன ஓட்டிகளுக்கு அதிக அபராதங்கள் விதிக்கும் மோட்டார் வாகன சட்டம், அதானி தமிழகத்தில் கால்பரப்பிக் கொள்வதற்கு தோதாக பழவேற்காடு துறைமுகம் தொடங்கி எட்டு வழிச்சாலை நிறைவேற்றம் வரை ஒத்துக் போகும் அணுகுமுறை… என திமுக அரசு பாஜகவிற்கு செய்யும் சேவைகள் இன்னும் அதிகரிக்கலாம்.

இவை வெளியில் தெரியாமல் இருக்க பாஜக எதிர்ப்பு நாடகங்கள் தொடர்ந்து வீரியமாக அரங்கேறலாம். இவற்றை எல்லாம் பார்த்தாலும், உணர்ந்தாலும் வெளியே சொல்லவும் முடியாமல், மென்று விழுங்கவும் முடியாமல் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் உள்ளுக்குள் மனம் புழுங்கலாம். இது தான் இன்றைய யதார்த்தம். உண்மைகளை உரைத்தேன்! மக்கள் விழிப்புணர்வு கொள்ளட்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்


https://aramonline.in/14232/senthil-balaji-court-case-ed/

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.