Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் கொண்டு செல்வோம் : ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - பௌத்த தேரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

15 JUN, 2023 | 03:45 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

தொல்லியல் என குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த கூடாது. குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி விட்டு சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களுக்கு வழங்கலாம் ஆகவே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் கொண்டு செல்வோம் என பௌத்த மத தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குருந்தூர் விகாரையின் விகாராதிபதி - கல்கமுவே சத்தபோதி தேரர்

குருந்தூர் மலை விகாரை மற்றும் காணி ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதிக்கும், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதன் பெறுபேறாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த அனுர மனதுங்க பதவி விலகியுள்ளார்.

குருந்தூர் மலைக்கு சொந்தமான காணி அதிகம் அநுராதபுரம் மகா விகாரையை காட்டிலுல் குருந்தூர் விகாரைக்கு நிலப்பரப்பு அதிகம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை நோக்கி நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மகா விகாரையின் நிலப்பரப்பு 100 ஏக்கர் கூட இல்லை அவ்வாறு இருக்கையில் குறுந்தூர் விகாரையின் காணி எவ்வாறு அதிகரிக்க கூடும் என ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மகா விகாரை புத்தசாசனத்தின் ஆரம்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் அதனை மகா விகாரை என்று குறிப்பிடுகிறோம்.

மகா விகாரைக்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பு சொந்தமாக உள்ளது. அபயகிரி விகாரை, இசுறுமுனி விகாரை மற்றும் ஆகிய புனித விகாரைகளை உள்ளடக்கியுள்ளது.

மிகிந்தலை விகாரை 500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்த காரணிகளை அடிப்படையாக கொண்டே மகா விகாரையின் நிலப்பரப்பு அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை ஜனாதிபதி,தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குருந்தூர் மலையில் தமிழர்களுக்கு சொந்தமான காணி காணப்படுமாயின் அவற்றை விடுவிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டு காலமாக தமிழர்கள் விவசாயம் செய்த காணிகளை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணி அளவிடப்பட்டு 1933 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.78 ஏக்கர் நிலப்பரப்பு வர்த்தமானி ஊடாக குறுந்தூர் விகாரைக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

குருந்தூர் மலையில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவதால் அதனை ஆயவு செய்வதற்காகவே மேலதிகமாக 223 ஏக்கர் காணி தொல்பொருள் பாதுகாப்பு பகுதியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டது.

தமிழர்களின் காணிகளை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தப்படவில்லை. வன அழிப்பு ஊடாக குருந்தூர் மலைக்கு சொந்தமான காணிகள் அழிக்கப்பட்டுள்ளன.

தமிழ் பிரிவினைவாதிகளின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

மக்கள் பேரவை –ஓமல்பே சோபித தேரர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் மரபுரிமைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட கூடாது. குருந்தூர் விகாரை மற்றும் குருந்தூர் மலையில் உள்ள பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றார்.

தேசிய வளங்களை பாதுகாக்கும்  அமைப்பின் செயலாளர் - கஸ்ஸப்ப தேரர்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலகியமை தவறானது. ஜனாதிபதியின் சட்டவிரோத கட்டளைக்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியம் இராசமாணிக்கத்தை தொல்பொருள் மற்றும் மரபுரிமைகள் அமைச்சராக நியமிக்க வேண்டும். இதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகள் பாதுகாக்கப்படும்.

குருந்தூர் மலைக்கு சொந்தமான காணிகளை அரசியல் நோக்கத்துகாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பில் வெகுவிரைவில் மகாநாயக்க தேரர்களை நாடுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/157769

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் கொண்டு செல்வோம் என பௌத்த மத தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

4 hours ago, ஏராளன் said:

மக்கள் பேரவை –ஓமல்பே சோபித தேரர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் மரபுரிமைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

அதெப்படி இவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இவ்வளவு உறுதியாக சொல்கின்றனர்? இதையே, உண்மையை சுட்டிக்காட்டும் நாடுகளுக்கும் சொல்கிறார்கள். இவர்களது வாழ்வே மக்களின் வாக்குகளிற்தான். அவர்கள் செய்வதெல்லாம் வாக்குகளுக்காகவே. தமிழரை வதைப்பதும் அடிப்பதும் வடகிழக்கில் விகாரைகளை கட்டியெழுப்புவதும் சிங்கள வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே. ஆகவே, இங்கு மாற வேண்டியது  சிங்களமக்களே! இனவாதம் மதவாதம் பேசுவோரை வீட்டுக்கு அனுப்பவேண்டும். பிக்குகளை விகாரைக்குள் அடங்கி இருக்க செய்யவேண்டும். 

4 hours ago, ஏராளன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியம் இராசமாணிக்கத்தை தொல்பொருள் மற்றும் மரபுரிமைகள் அமைச்சராக நியமிக்க வேண்டும். இதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகள் பாதுகாக்கப்படும்.

ஆமாம். வடகிழக்கிலுள்ள விகாரைகளோ, கோவில்களோ தமிழருக்குச் சொந்தமானவை. அங்கே அனுபவமிக்க தொல்பொருளாராச்சியாளர் உள்ளனர். அவர்களுக்கு அவைகளை பாதுகாக்க முடியும். பௌத்த மதம் அற்றுப்போன இடத்தில அது வேண்டாத, இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் எவையும் தேவையில்லை. மக்களுக்கு தேவையானவற்றை மட்டுமே பாதுகாக்க வேண்டும். மக்களை  தெருவில் விட்டுவிட்டு விகாரை யாருக்கு? திருட்டுக்கூட்டம். அந்தப்பிரதேசம் சம்பந்தப்பட்ட யாரும் இந்தக்குழுவில் இல்லை. ஏன் அவர்கள் சேர்க்கப்படவில்லை? காரணம்; செய்வது திருட்டு!

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜனாதிபதி மாட்டுப்பட்டிருப்பது

பணமா பாசமா.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு இப்போ ஒரு தெரிவுதான். ஒன்று; தான் சொன்னதை வாபஸ் பெற்று, தனது பதவியை ராஜினாமா செய்த அனுர மனதுங்கவை மீண்டும்  பதவியில் சேர்த்துக்கொண்டு, தமிழரின் நிலங்களை கொள்ளையடிக்க வேண்டும் அல்லது இவற்றையெல்லாம் கடந்து நடவடிக்கையில் இறங்கவேண்டும். ஏற்கெனவே, குருந்தூர் விகாரையை சுற்றியுள்ள காணிகள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை, அவற்றை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் எண்ணமில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துவிட்டது. பௌத்தரல்லாத எவரும் நாட்டின் தலைவராக முடியாத நிலையுள்ள நாட்டில், எப்படி அவர்கள் பௌத்த கொள்ளையை காட்டிக்கொடுத்து ஆட்சி செய்யமுடியும்? அதிலும் இப்போ, இராணுவ அச்சுறுத்தல் வேறை. இவைகளை கடந்து நாட்டுக்கு நல்லது ஏதும் வராது. ஜனாதிபதி வேறு, அரகலயா ஆட்களையும் அச்சுறுத்தி கலைத்து விட்ட நிலையில், பிக்குகளுக்கும் திருடருக்கும் பணிந்து போவதைவிட வேறு வழியில்லை அவருக்கு. வாக்குறுதி கொடுக்க முதல், இந்த சவால்களை சமாளிக்க முடியுமா என்பதை யோசித்து செயலில் இறங்கியிருக்க வேண்டும். இப்போ இவரின் நிலை;ஆப்பிழுத்த குரங்கின் நிலை. கொடுத்த வாக்கை வாபஸ் பெறுவாரா, வெட்டியாள்வாரா? என்னைப்பொறுத்தவரை பழைய குருடி    கதவைத்திறவாடிகதைதான். பௌத்தம் இலங்கையில் இருந்து துரத்தப்படும்வரை தமிழருக்கு இதுதான் நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஜனாதிபதி மாட்டுப்பட்டிருப்பது

பணமா பாசமா.

ஜனாதிபதி இப்போது இதட்கு ஒரு குழுவினை அமைத்து விசாரிக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். அநேகமாக இந்த குழு இவரது இந்திய விஜயத்துக்கு முன்னர் அமையுமென்று கூறப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Cruso said:

ஜனாதிபதி இப்போது இதட்கு ஒரு குழுவினை அமைத்து விசாரிக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். அநேகமாக இந்த குழு இவரது இந்திய விஜயத்துக்கு முன்னர் அமையுமென்று கூறப்படுகின்றது. 

அடுத்து வரும் தேர்தல்களை சிங்கள கட்சிகளை வழிக்கு கொண்டுவர அமெரிக்கா மேற்கு இந்தியாவென்று இருக்கிறது.

அதனால் தமிழ் கட்சிகளை தனித்து நின்று ஏமாற்றி தனக்கு சாதகமாக்க முயல்கிறார்.

வெற்றியும் அடைவார்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Cruso said:

ஜனாதிபதி இப்போது இதட்கு ஒரு குழுவினை அமைத்து விசாரிக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். அநேகமாக இந்த குழு இவரது இந்திய விஜயத்துக்கு முன்னர் அமையுமென்று கூறப்படுகின்றது. 

ஒரு பிரச்சினையை… ஆறப் போட வேண்டும் என்றால்,
ஓரு குழுவை நியமித்து காலத்தை இழுத்தடித்து அதனை புஸ்வாணமாக்குவது
சிங்கள அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை.
இப்படியான குழுக்களை கடந்த 40-50 வருடமாக அமைக்கிறார்கள்.
இதனால் தமிழன் நன்மை பெற்றதாக சரித்திரமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

ஒரு பிரச்சினையை… ஆறப் போட வேண்டும் என்றால்,
ஓரு குழுவை நியமித்து காலத்தை இழுத்தடித்து அதனை புஸ்வாணமாக்குவது
சிங்கள அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை.
இப்படியான குழுக்களை கடந்த 40-50 வருடமாக அமைக்கிறார்கள்.
இதனால் தமிழன் நன்மை பெற்றதாக சரித்திரமே இல்லை.

உண்மைதான். இப்போது இந்த விடயம் இப்போது பூதகரமாகிக்கொண்டு போகின்றது. மொடடைகளும், இனவாதிகளும் இதைத்தான் முதன்மையாகிக்கொண்டு இருக்கிறார்கள். ரணில் இப்படி கூறியது அவர்களுக்கு ஒரு பேசு பொருளாகிவிட்ட்து.

தம்புள்ள தேரர் கூறியது போல யாழ் பல்கலை கழகத்தையும் இணைத்து செயட்படடாள் ஒரு வேலை அவர்களும், தமிழர்களும் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலைமை வரலாம்.

ஏன் என்றால் கொத்தவால் நியமிக்கப்படட அந்த இனவாத குழு கலைக்கப்பட்டு விட்ட்து. எனவே அவர்களால் அந்த வேலையே தொடர்வதில் சிக்கல் உருவாக்கி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின் போது இரு கட்சிகளாக போட்டியிட்டாலும் தேர்தலின் பின் எல்லாக்கட்சிகளும் சேர்ந்து செய்யும் ஒரே வேலை, தமிழரை அழிப்பது! ஆகவே எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கு மீட்சியில்லை. ஒன்றை புறக்கணித்து மற்றொன்றை ஏற்றுக்கொள்ள முடியாது, எல்லாம் ஒன்றே. வேறு தெரிவுமில்லை. இது தமிழ்கட்சிகளுக்கும் பொருந்தும். அதனால் நாம், தெரிந்துகொள்ளும் கட்சி நேர்மையானதென்றோ, நாம் விரும்புகிறோம் என்றோ, நம்புகிறோமென்றோ இல்லை. வேறு தெரிவு நமக்கில்லை. இதனால் ஊழல்வாதிகளே மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட  உரையாடல்களை சாதாரண, படித்த சிங்கள மக்களும் கேட்க்கும்படி செய்ய வேண்டும். த. தே. கூட்டமைப்பினர் தமிழீழத்தை கேட்கின்றனர், விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்கிற பிக்குகள் இனவாதிகளின் கூச்சலை விடுத்து, உண்மையில் என்ன நடக்கிறது, அதை இவர்கள் எப்படி திரித்து பிரச்சனையை உருவாக்குகின்றனர், வன்முறைகளை கட்டவிழ்கின்றனர் என்பதை அவர்கள் அறியும் போது பிழையான பிரச்சாரங்களுக்கு எடுபடாமல் தவிர்க்க உதவியாக இருக்கும். முக நூலில் இணைத்து விடலாம். நாங்கள் சொல்வதை விட நேரடியாகவே என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.