Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு நல்லது - புதிய ஆய்வில் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு நல்லது

பட மூலாதாரம்,GETTY IMAGES

20 ஜூன் 2023, 05:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கமாக அவ்வப்போது சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு மிகவும் நல்லது என்றும், அதனால் மூளை சுருங்குவதை நீண்ட காலத்துக்கு தடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

இது போல் தூங்குபவர்களின் மூளை வழக்கமாக இருப்பதைவிட 15 கன சென்டி மீட்டர் பெரிதாக இருப்பதாகவும், இதனால் அவர்களின் வயது 3 முதல் 6 ஆண்டுகள் குறைவாகத் தோன்றுவதாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இது போல் தூங்கும் போது, அது அரைமணிநேரத்துக்குக் குறைவான தூக்கமாக இருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால், பெரும்பாலும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பகல் நேரத்தில் தூங்கும் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. நடைமுறையில் பெரும்பாலான பணிச்சூழல்கள், பணியாளர்கள் விரும்பும் வகையில் இருப்பதில்லை என்பதே இதற்குக் காரணமாக இருக்கிறது.

 

"இப்படி பகல் நேரத்தில் தூங்கும் ஒவ்வொருவருக்கும் சில நன்மைகள் இருக்கின்றன என்பதையே நாங்கள் விளக்க முயல்கிறோம்," என டாக்டர் விக்டோரியா கார்ஃபீல்ட் என்னிடம் தெரிவித்தார்.

இந்த தகவல்கள் "உண்மையில் புதிதாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையில்" இருப்பதாக அவர் கூறினார்.

நாம் குழந்தைகளாக இருக்கும் போது அடிக்கடி இப்படி தூங்குவது ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம் என ஏற்கெனவே நமக்குத் தெரியும்.

ஆனால் நாம் பெரியவர்களாகும் போது, இப்படி அடிக்கடி தூங்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. பணி ஓய்வுக்குப் பின்னர் கூட தூக்கத்துக்கு நேரம் கிடைப்பதில்லை.

65 வயதைக் கடந்த 27 சதவிகிதம் பேர் மட்டுமே பகலில் தூங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உடல் எடை குறைப்புக்காக உடற்பயிற்சி செய்ய பரிந்துரைப்பதை விட, தூங்குவது குறித்து ஆலோசனை அளிப்பது "மிகவும் எளிதானது" என டாக்டர் கார்ஃபீல்ட் கூறுகிறார்.

இயற்கையாகவே வயதாகும் போது மூளை சிறிதாகிக் கொண்டே போகிறது.

ஆனால் அல்ஜீமர் போன்ற நோய்களை தூக்கம் குறைக்குமா என்பதைக் கண்டுபிடிக்க இன்னும் கூடுதலாக ஆராய்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.

மனநலப் பிரச்சினைகளில் இருந்து ஒருவர் தப்பவேண்டும் என்றால் அவருக்கு மூளையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

தூக்கம் குறைவாக இருந்தால் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு நல்லது

பட மூலாதாரம்,GETTY IMAGES

போதுமான தூக்கமின்மை என்பது நாளடைவில் மூளையை கடுமையாகப் பாதிக்கிறது என்றும், அது மூளை அழர்ச்சியை ஏற்படுத்தி மூளையில் உள்ள உயிரணுக்களுக்கு இடையே நிலவும் தொடர்பை வெகுவாக பாதிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"இப்படி, சரியான தூக்கம் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து ஒருவரைப் பாதுகாக்கும் என்பது மட்டுமின்றி, போதுமான தூக்கம் கிடைக்காமல் தவிப்பவர்கள் சிறிது நேரம் தூங்குவதால் அதை ஈடுசெய்யமுடியும்," என ஆராய்ச்சியாளர் வேலன்டினா பாஸ் கூறினார்.

இருப்பினும், பணியிடத்தில் தூங்குவதற்கு வசதியான இடத்தைத் தேடுவதை விட வேறு வழிகளைப் பயன்படுத்துவதே சரியான செயலாக இருக்கும் என்கிறார் டாக்டர் கார்ஃபீல்ட்.

"என்னைப் பொறுத்தளவில், தூங்குவதற்கு 30 நிமிடங்கள் எனக்குக் கிடைத்தால், அந்த நேரத்தை உடற்பயிற்சியில் ஈடுபடவே பயன்படுத்துவேன். அந்த நேரத்தில் தூங்குவதற்கு எனது அம்மாவுக்கு வேண்டுமானால் அறிவுரை வழங்குவேன்."

பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு நல்லது

பட மூலாதாரம்,GETTY IMAGES

தூக்கத்தினால் ஏற்படும் நன்மைகளை எப்படிக் கண்டுபிடிப்பது?

சிறிது நேரம் தூங்கும் வழக்கத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது ஒரு சவால் நிறைந்த வேலை.

தூங்குவது உடல்நலத்தை மேம்படுத்தலாம், அதே நேரம் நீங்கள் தூங்கவேண்டிய தேவை ஏற்படும் போது அது உங்களை சோர்வடையச் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால், தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது என்பதை நிரூபிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு யுக்தியைப் பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

நாம் பிறக்கும் போதே பல்வேறு தரவுகளுடன் நமது உடலில் இருக்கும் டிஎன்ஏ குறித்த ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டனர்.

நாம் அடிக்கடி பகலில் தூங்கும் நபர்களா அல்லது எப்போதும் விழிப்புடன் இருக்கும் நபர்களா என்பதை டிஎன்ஏவில் உள்ள 97 சிறிய தகவல்கள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், 40 முதல் 69 வயதுக்குள் இருக்கும் 37,000 பேரின் தகவல்களை எடுத்து அதன் மூலம் அதிகம் தூங்குபவர்கள் மற்றும் தூங்காதவர்கள் குறித்த ஆய்வுகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட உண்மைகள், ஆரோக்கியமான தூக்கம் குறித்த ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் பார்த்தால், பகலில் தூங்குபவர்களின் மூளை 15 கன சென்டி மீட்டர் பெரிதாக இருப்பதாகவும், அவர்கள் 2.6 முதல் 6.5 ஆண்டுகள் வரை இளமையான தோற்றத்துடன் இருந்ததும் தெரியவந்தது. இந்த ஆராய்ச்சியின் போது, மூளையின் மொத்த அளவு 1,480 கன சென்டி மீட்டராக இருந்தது.

பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு நல்லது

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நான் வார இறுதி நாட்களில் சிறிதளவு தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தற்போதைய கண்டுபிடிப்பின் படி, சோம்பேறித் தனம் காரணமாகவே நான் தூங்குகிறேன் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது என்பதையும், அது என்னுடைய மூளையைப் பாதுகாக்கும் என்றே நான் கருதவேண்டும் என்றும் உணர்ந்துகொண்டேன்," என எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியரும், பிரிட்டனில் செயல்படும் நரம்பியல் அறிவியல் அமைப்பின் (British Neuroscience Association) தலைவருமான டாரா ஸ்பைர்ஸ்- ஜோன்ஸ் என்னிடம் தெரிவித்தார்.

பகலில் தூங்குவதால் மூளை பெரிதாகிறது என்ற கண்டுபிடிப்பும், சிறிதளவே என்றாலும், அது மிகவும் முக்கியமானது என்ற உண்மையும் எனக்கு பெரிதும் ஆர்வமூட்டும் தகவல்களாக இருந்தன என்கிறார் அவர்.

இருப்பினும் பகலில் அதிக நேரம் தூங்குவது குறித்து இந்த குழுவினர் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அரைமணி நேரத்துக்கு மட்டுமே தூங்கவேண்டும் என்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு வலியுறுத்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cgleenend8eo

  • கருத்துக்கள உறவுகள்

வேலை நேரத்தில் தூங்குபவர்களின் வசதிக்காக புதிய கண்டுபிடிப்பு; அசத்தும் ஜப்பான்

கோயோஜு(koyoju) நிறுவனமும், இடோகி(itoki)என்ற பர்னிச்சர் கடையும் சேர்ந்து நேப் பாக்ஸ் (Nap box) என்ற ஒரு சாதனத்தைத் தயாரித்திருக்கின்றன.

 
 
ஜப்பானிய மக்களைப் பார்த்தால், அவர்களின் இளமையான தோற்றம் மற்றும் ஆரோக்கியமான உடல், அவர்களது புதுமையான கண்டுபிடிப்புக்கள், அந்த மக்களின் சுறுசுறுப்பு என சில விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.
 
 
 

அதுமட்டுமன்றி, உலகிலேயே நீண்ட நாள்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றால் அது ஜப்பானியர்கள் தான். இந்த மக்களுக்காக பிளைவுட் சப்ளை நிறுவனமான கோயோஜு (koyoju) நிறுவனமும், இடோகி(itoki) என்ற பர்னிச்சர் கடையும் சேர்ந்து நேப் பாக்ஸ் (Nap box) என்ற ஒரு சாதனத்தைத் தயாரித்திருக்கின்றன. இதனுடைய ஸ்பெஷல் என்னன்னா, ஒருவர் நின்றபடியே தூங்கிக்கொள்ளலாம். எதற்கு அந்த நிறுவனம் இப்படி ஒரு கண்டுப்பிடிப்பைக் கண்டுபிடித்திருக்கிறது என்றால், பணி நேரத்தின்போது மனிதர்களுக்கு அவ்வப்போது தூக்கம் வருவது என்பது இயல்பான ஒன்றுதான்.

வேலை நேரத்தில் தூக்கம்
 
வேலை நேரத்தில் தூக்கம்

ஆனால் சிலர் அந்தத் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். கடுமையான வேலைப்பளுவுக்கு இடையே ஒரு நபர் சரியாக 22 நிமிடங்கள் தூங்கினால், அதன் பின்னர் அவர் செய்யக்கூடிய வேலையில் ஆற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் பணியாளர்கள், பணி நேரத்தில் தூக்கம் வந்தால் நின்றுகொண்டே தூங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த நேப் பாக்ஸ்.

 
 

இதுதொடர்பாக இடோகி நிறுவனத்தின் இயக்குநர் சீகோ கவாஷிமா பேசுகையில் (Seiko Kawashima) "ஜப்பானில் நீண்ட நேரம் பணிபுரியும் பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் அவ்வப்போது கழிவறைகளில் குட்டித் தூக்கம் போட்டுவிட்டுத் திரும்பும் பழக்கம் உண்டு. அது ஆரோக்கியமானது அல்ல என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலாகத்தான் இந்த நேப் பாக்ஸைக் கண்டுபிடித்திருக்கிறோம். இதனை ஊழியர்கள் சௌகரியமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜப்பான்
 
ஜப்பான்

இது ஜப்பானியர்களால் நிச்சயம் வரவேற்கப்படும். அதுபோல் நிறுவனங்களும் இதனை வாங்கி தங்கள் ஊழியர்களின் பயன்பாட்டுக்குத் தருவர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். அந்த நேப் பாக்ஸ்க்குள் ஒருவரின் தலை, முழங்கால்கள் மற்றும் முதுகு ஆகியவற்றை சௌகரியமாக வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பதற்கும், அந்த நபர் கீழே விழாமல் இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.vikatan.com/government-and-politics/offices-in-japan-to-install-nap-boxes-so-workers-can-sleep-standing-up

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து… ஊரில் பல பேர் அரச மரம், ஆலமரம், வேப்பமரத்துக்கு கீழ் 
பகலில் தூங்குவார்கள். அவர்களின்  மூளை வளர்ச்சியடைந்த மாதிரி தெரியவில்லை.
அவர்களின் மண்டை முழுக்க களிமண். முழு முட்டாள் பயலுகள். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

எனக்குத் தெரிந்து… ஊரில் பல பேர் அரச மரம், ஆலமரம், வேப்பமரத்துக்கு கீழ் 
பகலில் தூங்குவார்கள். அவர்களின்  மூளை வளர்ச்சியடைந்த மாதிரி தெரியவில்லை.
அவர்களின் மண்டை முழுக்க களிமண். முழு முட்டாள் பயலுகள். 😂 🤣

தூங்கியபின் எங்கு போகின்றார்கள்??? வேலைக்கா? என்ன வேலை???

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, உடையார் said:

தூங்கியபின் எங்கு போகின்றார்கள்??? வேலைக்கா? என்ன வேலை???

கள்ளு அடித்து விட்டு வந்து தூங்குவார்கள், 
பின் வெறி முறிய, திரும்ப போய் கள்ளு அடிப்பார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கள்ளு அடித்து விட்டு வந்து தூங்குவார்கள், 
பின் வெறி முறிய, திரும்ப போய் கள்ளு அடிப்பார்கள். 🤣

அடாடை......அருமையான    வாழ்க்கை      இவர்கள் போல்    புத்திமான்கள்   உலகில் எவருமில்லை  🤣

Work from home தொடங்கிய பின், ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களாவது இப்படி நித்தா கொள்வது அடியேனின் பழக்கம். அந்த 10 நிமிட நித்திரையின் பின் மனசும் மூளையும் refresh ஆகி மிகுதி வேலையை சிறப்பாக முடிக்க உதவும்.

அண்மையில் ஒரு மீட்டிங்கில் இப்படித்தான் நித்தா கொண்டு சின்ன குறட்டை வேறு வந்து, அது மற்றவர்களுக்கும் கேட்க வைத்து என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மதியம் சாப்பிட்ட பின் நேரமிருந்தால் அரைமணி நேரம் தூங்குவேன்.

இந்த குட்டித் தூக்கம் இல்லாவிட்டால் ஏதோ முகம் களுவாத மாதிரி இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.