Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போக்குவரத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் 17 வயது இளைஞன் பலி - பிரான்ஸ் தலைநகரில் கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இதனை  பயன்படுத்தி  நீங்கள் படிக்கவில்லை  என்றால்  உங்களைப்போல்  முட்டாள்கள்  எவருமில்லை என்று.

ஓம். இதை விட தெளிவாக யாரும் படிப்பின் அவசியத்தை புலத்து இளம் சந்ததிக்குச் சொல்லி விட முடியாது!

அமெரிக்காவில், கல்லூரிக்கு (பல்கலை) பணம் கட்ட வேண்டும் - இலவசம் அல்ல. அரை, கால்வாசி புலமைப் பரிசில் கிடைத்தால் கூட இதர செலவுகளுக்காக வீட்டில் இரண்டாவது கடன் எடுக்க வேண்டி வரும். அல்லது படிக்கும் பிள்ளை, தானே கடன் எடுத்துப் படிக்க வேண்டும். அப்படிக்  கடன் எடுத்துப் படிக்கும் படிப்பு நல்ல வருமானமுள்ள தொழிலைத் தரா விட்டால், நீண்ட காலத்திற்கு வட்டியோடு கடன் கட்டிக் கொண்டிருக்க வேண்டி வரும்.

இப்படியான போராட்டத்தின் மத்தியிலும், இங்கே நடுத்தர வகுப்பினர் கல்வியில் காட்டும் ஆர்வம் மெச்சத் தக்கது. பல  பிள்ளைகள், இரண்டு மூன்று வேலைகள் செய்து, பெற்றோரின் சுமையைக் குறைத்த படி கல்லூரிக்குப் போகின்றன. இத்தகைய பிள்ளைகளை அன்றாடம் பார்த்து விட்டு, தாயகத்தில் படிக்காமல் ஊர் சுற்றும்  மைனர் குஞ்சுகளைப் பற்றிக் கேள்விப் படும் போது பெருமூச்சு வரும்!

  • Replies 184
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

உண்மை  தான்

கனடாவில் 40 வயதாகியும் படிக்க  எடுத்த  கடன் கட்டிக்கொண்டிருக்கும்  மருமக்கள்  உள்ளனர்

ஆனால் இங்கு அப்படியல்ல  பிறைவேட் பாடசாலைகள் தவிர்த்து.

தாயகத்தை  பொறுத்து இந்த  வருத்தம் எனக்குமுண்டு

எனது  பிள்ளைகள் வார இறுதி  நாட்களில் மக்டொனால்ட் உட்பட  பல  இடங்களிலும் வேலை  செய்தபடியே  தான் படித்தனர்

இதனை நானும்  ஊக்கப்படுத்தினேன்

காரணம் வேலை என்று தேர்வுகளுக்கு  செல்லும்போது படிப்புடன்  வேறு  என்ன  என்றும்  பார்ப்பார்கள்

அதுவும் ஒரு  ஊக்கமாக  பார்க்கப்படும்

ஆனால்  ஊரில்...??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தவறு

அப்படியானால் எமது அடுத்த தலைமுறை எப்படி படித்தது????

நமது பிள்ளைகள் வேற. அரசு ஒரு பள்ளியில் படிப்பிக்காமல் விட்டால், பள்ளி மாறுவோம். டியூசன் போவோம்.

இந்த மக்கள் அப்படியா?

ஏதோ கணக்குக்கு 16 வயது வரை பள்ளிக்கு போவார்கள். அதில் யாராவது புட்போல் விளயாட்டில் திறமை இருந்து சரியான கண்ணில் பட்டால் மேலே வருவார்கள்.

பெரும்பான்மையான மீதி?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அப்படியானால் பிள்ளைகளை விட பெற்றோர் தானே அசட்டையாக இருக்கிறார்கள். 

எங்கேயோ ஒன்று இடிக்கிறது அல்லவா? இதற்கு அரசை குற்றம்சாட்டுதல் எந்த வகையிலும் நியாயமாகாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே பல்கலைக்கழகம்

அதனைத்தொடர்ந்து எந்த உயர்திறன் படிப்பும் (Spécialité)  இலவசம்

அது  மட்டுமல்ல செலவுக்கு  பணமும்  மாதாமாதம்  தருவார்கள்

அல்லது  படிப்பை  பொறுத்து 

அரை நாள்  வேலை அரை  நாள் படிப்பு

இதற்கு  வயதெல்லையே  கிடையாது

நான் மக்களுக்கு  அடிக்கடி  சொல்வதுண்டு

இதனை  பயன்படுத்தி  நீங்கள் படிக்கவில்லை  என்றால்  உங்களைப்போல்  முட்டாள்கள்  எவருமில்லை என்று.

ஓம் அண்ணை. ஆனால் ஒற்றை பெற்றார் குடும்பத்தில் - கஞ்சா கமகமக்க ஒரு வீட்டில் இருந்து வந்து, கஞ்சா விற்கும் பள்ளியில் படித்து - இதை எல்லாம் தாண்டி 11ம் ஆண்டு தாண்டுவதே கஸ்டம்.

Social mobility என்பார்கள். ஒவ்வொரு ஆந்தையின் தன்னை முந்தைய சந்ததியை விட ஒரு படி மேலே போதல்.

யூகேயில் பாகிஸ்தானி, வங்காளி, பிரான்சில் வட ஆபிரிக்கர், கறுப்பர், ஜேர்மனியில் துருக்கியர் இந்த ஏணியில் ஏறுவது மிக குறைவு.  இதற்கு அரசும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இங்கையும் பாகிஸ்தானி, வங்காளி அப்படியே  தான்

வீதியில்  கச்சான்  விற்கத்தான்  லாயக்கு?

ஆனால்  அரசும்  ஒரு  காரணம்  என்பது  புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2023 at 17:39, குமாரசாமி said:

சில வேளைகளில்  கொலை செய்யப்பட்ட அந்த 17 வயது இளைஞனுக்கு அவன் பெற்றோர்கள் தாம் பிரான்ஸ் அரசின் அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்புகளை சொல்லி வளர்த்திருக்கலாம்.

ஆ ஊ என்றால் .....
உடனே ஜனநாயகத்தின் உண்மை முகத்தை இப்படித்தான் 
நடு வீதியில் திறந்து காட்டணுமா ?

கொஞ்சமும் இரக்கம் வேண்டாமா? 

வாக்கனர் மோஸ்க்கோவை கொளுத்துவார் 
பார்த்து ரசிப்போம் என்று பாப்கோனும் வாங்கி வைத்துக்கொண்டு இருக்க 

வெடியை கொளுத்தி மடிக்குளேயே போட்டு விட்டார்களே? 

72 நாடுகளை பிரான்ஸ் அடாவடித்தனமாக கோலனைஸ் பண்ணி சொத்துக்களை சூறையாடி இருக்கிறது.
இவர்களை அவர்கள் வெத்திலை பாக்கு வைத்து அழைத்த மாதிரி ...
இப்போ வெளிநாட்டவர் வேண்டாம் என்கிறார்கள். 
உங்களுக்கு வந்தால் ரத்தம் 
அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா? 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

ஆனால் பிரான்சிற்கு இது பொருந்தாது. காரணம் அங்கே இருக்கும் வட ஆபிரிக்கர்கள் - கிட்டதட்ட ஒரு நூற்றாண்டாக குடியேறியுள்ள பிரான்சின் காலனிய காலத்து சீதனம்.

கூட்டிவந்து குடியமர்த்தியவர்கள் ...
சொந்த நாட்டை காட்டிக்கொடுத்து 
பிரான்சுடன் கூடி கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு என்று மிதமாக செய்த 
ஒட்டுக்குழுக்களும் அவர்கள் குடும்பங்களும் 

சொந்த நாட்டை அழித்தவனுக்கு 
அடுத்தவன் நாட்டை பாதுக்காக்கும் புத்தி எங்கிருந்து வரும்? 

அவர்களுக்கு கொம்பு சீவியவர்கள் இவர்கள்தானே ? 
இப்போ குத்துது குடையுது என்றால் ? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

ஆ ஊ என்றால் .....
உடனே ஜனநாயகத்தின் உண்மை முகத்தை இப்படித்தான் 
நடு வீதியில் திறந்து காட்டணுமா ?

கொஞ்சமும் இரக்கம் வேண்டாமா? 

வாக்கனர் மோஸ்க்கோவை கொளுத்துவார் 
பார்த்து ரசிப்போம் என்று பாப்கோனும் வாங்கி வைத்துக்கொண்டு இருக்க 

வெடியை கொளுத்தி மடிக்குளேயே போட்டு விட்டார்களே? 

72 நாடுகளை பிரான்ஸ் அடாவடித்தனமாக கோலனைஸ் பண்ணி சொத்துக்களை சூறையாடி இருக்கிறது.
இவர்களை அவர்கள் வெத்திலை பாக்கு வைத்து அழைத்த மாதிரி ...
இப்போ வெளிநாட்டவர் வேண்டாம் என்கிறார்கள். 
உங்களுக்கு வந்தால் ரத்தம் 
அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா? 

நீங்கள் "ஜனநாயகத்தில்" நம்பிக்கையில்லாத ஒருவர் என்பது புரிகிறது, அதை விடுவோம்!

ஆனால், இந்த "பிரான்ஸ் மடியில் வெடி கொழுத்தியோரால்" யாருக்கு ரத்தம் வந்திருக்கிறது என்பதை, நீங்கள் நம்பாத மேற்கு ஊடகங்கள் தவிர்த்து , உங்களுக்கு நம்பகமான ஏனைய ஊடகங்கள் சொல்லவில்லையா உங்களுக்கு?

ஏற்கனவே மூலவளம் காணாமல் இருந்த தங்கள் நகரங்களில், பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்புகள், அரச அலுவலகம் (எல்லா ஆவணங்களுக்கும் மக்கள் செல்லுமிடம்), வேலை தரும் வர்த்தக நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் - இப்படி எல்லாவற்றையும் எரித்து உடைத்து விட்டார்களாம்.

பிரெஞ்சு அரசுக்குத் தான் கடுமையான இரத்த இழப்பு, தாக்கிய வட ஆபிரிக்க அடிக் குடிகளுக்கு தக்காளி சட்னி தானாம்!😂

இது எப்படி, பிரெஞ்சுக் காலனித்துவத்திற்குப் பழிவாங்கலாகுமென நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

அப்படியானால் பிள்ளைகளை விட பெற்றோர் தானே அசட்டையாக இருக்கிறார்கள். 

எங்கேயோ ஒன்று இடிக்கிறது அல்லவா? இதற்கு அரசை குற்றம்சாட்டுதல் எந்த வகையிலும் நியாயமாகாது. 

இல்லை இவற்றை ஒரு சமூக நோயாக கருதி, ஏனைய பிரான்சியர், தமிழர், இந்தியர் போன்றோரிடம் காட்டும் அக்கறையை விட ஒரு படி அதிகம் காட்ட வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக “சோசலில்” வாழும் வெள்ளையின சுதேசிகளுக்கும் இது பொருந்தும்.

இரவு நேரப்பள்ளிகள், தரமான விளையாட்டு மைதானங்கள், இளையோரை நேரத்தை நல்ல முறையில் செலுத்த வைக்கும் டான்ஸ், ஜிம்னாஸ்டிக், லைப்ரரிகள். நல்ல நிலையில் உள்ள ஏனைய பள்ளிகள், இந்த பகுதி பள்ளிகளை தத்தெடுத்தல், இப்படியான செயல்கள்.

அதே சமயம் - மத அடிப்படையிலான இவர்களின் கடும் போக்கு, மூளைச்சலவையில் இருந்து விடுவிக்கும் முயற்சிகள் - இப்படி பலதை, அரசு அக்கறை எடுத்து செய்தால் - ஒரு தலைமுறையை வெளியில் எடுத்தால் - இந்த சங்கிலியை உடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

கூட்டிவந்து குடியமர்த்தியவர்கள் ...
சொந்த நாட்டை காட்டிக்கொடுத்து 
பிரான்சுடன் கூடி கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு என்று மிதமாக செய்த 
ஒட்டுக்குழுக்களும் அவர்கள் குடும்பங்களும் 

சொந்த நாட்டை அழித்தவனுக்கு 
அடுத்தவன் நாட்டை பாதுக்காக்கும் புத்தி எங்கிருந்து வரும்? 

அவர்களுக்கு கொம்பு சீவியவர்கள் இவர்கள்தானே ? 
இப்போ குத்துது குடையுது என்றால் ? 

ம்..மருதர், இதே தியரியை (இதற்கு ஆதாரங்கள் இல்லை) மேற்கில் வாழும் உங்கள் போன்ற ஈழத்தமிழ் குடியேறிகள், பிரிட்டனில் வாழும் ஈழத்தமிழ் குடியேறிகளுக்கும் பிரயோகிக்கலாமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நீங்கள் "ஜனநாயகத்தில்" நம்பிக்கையில்லாத ஒருவர் என்பது புரிகிறது, அதை விடுவோம்!

ஆனால், இந்த "பிரான்ஸ் மடியில் வெடி கொழுத்தியோரால்" யாருக்கு ரத்தம் வந்திருக்கிறது என்பதை, நீங்கள் நம்பாத மேற்கு ஊடகங்கள் தவிர்த்து , உங்களுக்கு நம்பகமான ஏனைய ஊடகங்கள் சொல்லவில்லையா உங்களுக்கு?

ஏற்கனவே மூலவளம் காணாமல் இருந்த தங்கள் நகரங்களில், பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்புகள், அரச அலுவலகம் (எல்லா ஆவணங்களுக்கும் மக்கள் செல்லுமிடம்), வேலை தரும் வர்த்தக நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் - இப்படி எல்லாவற்றையும் எரித்து உடைத்து விட்டார்களாம்.

பிரெஞ்சு அரசுக்குத் தான் கடுமையான இரத்த இழப்பு, தாக்கிய வட ஆபிரிக்க அடிக் குடிகளுக்கு தக்காளி சட்னி தானாம்!😂

இது எப்படி, பிரெஞ்சுக் காலனித்துவத்திற்குப் பழிவாங்கலாகுமென நினைக்கிறீர்கள்?

இதெல்லாம் பிரான்சு அரசுக்கு தெரியுமா?
பெட்ரோல் வாங்கி கொடுப்பதுக்கு பதில் 
ஏன் முண்டியடித்து நிறுத்த நிற்கிறார்கள் என்று புரியவில்லை ? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

வன்முறைகளை நிறுத்துங்கள் -பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி வேண்டுகோள்

03 JUL, 2023 | 12:07 PM
image
 
பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி தனது பேரனின் உயிரிழப்பை தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலைகளை சேதப்படுத்தவேண்டாம்,பேருந்துகளை சேதப்படுத்தவேண்டாம் தாய்மார்களே பேருந்தினை பயன்படுத்துகின்றனர் என பிரான்ஸ் தலைநகரில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் மேர்சூக்கின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

nahel1.jpg

நடியா என தன்னை அடையாளப்படுத்தியுள்ள அவர் பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜன்னல்களை பேருந்துகளை பாடசாலைகளை சேதப்படுத்தாதீர்கள் எங்களிற்கு அமைதி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது பேரனை கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து மீது தான் கடும்கோபத்தில் உள்ளதாகவும் எனினும் பொலிஸார் மீது பொதுவாக எந்த கோபமும் இல்லை என தெரிவித்துள்ள அவர் பிரான்சின் நீதிஅமைப்பின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159101

5 hours ago, nunavilan said:

//இறந்த குற்றவாளி நஹெலின் தாய்...  ஒரு பாப் நட்சத்திரம் போல் மக்களை வாழ்த்துகிறார்
அவர் 'கிளர்ச்சிக்கு' அழைப்பு விடுத்தார், இதன் விளைவாக கடுமையான கலவரம், கொள்ளை, தீ வைப்பு மற்றும் காவல்துறைக்கு எதிராக வன்முறை ஏற்பட்டது.//

👆 இறந்த பையனின்... பாட்டி, (ஒரு கிழமைக்கு கடந்த பின்)  வன்முறையை நிறுத்தச் சொல்ல 
பையனின்  தாய்க்காறி... போராட்டக் காரர்களுடன் இணைந்து, உற்சாகப் படுத்தும் விதமாக  
வாகனத்தின் மேல் அமர்ந்து... சர்க்கஸ் காட்டி செல்லும் காட்சி. 

இது நஹலின் தாய். 👆

முதலில்...ஓட்டுநர் உரிமம் இல்லாத  17 வயது   பையனிடம் காரை கொடுத்த தாயை... 
பிடித்து மறியலில் போட வேண்டும். 😡

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

கூட்டிவந்து குடியமர்த்தியவர்கள் ...
சொந்த நாட்டை காட்டிக்கொடுத்து 
பிரான்சுடன் கூடி கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு என்று மிதமாக செய்த 
ஒட்டுக்குழுக்களும் அவர்கள் குடும்பங்களும் 

சொந்த நாட்டை அழித்தவனுக்கு 
அடுத்தவன் நாட்டை பாதுக்காக்கும் புத்தி எங்கிருந்து வரும்? 

அவர்களுக்கு கொம்பு சீவியவர்கள் இவர்கள்தானே ? 
இப்போ குத்துது குடையுது என்றால் ? 

அப்படி இல்லை. பிரான்சில் உள்ள சகல வட ஆபிரிக்கரும் ஓட்டு குழுவின் சந்ததிகள் அல்ல.

அப்படி இருந்தாலும் அது பல தசாப்தம் முந்திய நிகழ்வுகள். 

மாத்தையாவின் மகன் புலியில் மாவீரர் என நினைக்கிறேன். 

ஆகவே மூதாதை போலத்தான் சந்ததி இருக்கும் என நினைப்பது நான் மேலே சொன்ன “சாதிய மன நிலை”.

“அவர்கள் அப்படித்தான், நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்”….இப்படி நாம் எமக்குள்ளும், வெளியிலும் மக்களை அணுகுவது போல.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ம்..மருதர், இதே தியரியை (இதற்கு ஆதாரங்கள் இல்லை) மேற்கில் வாழும் உங்கள் போன்ற ஈழத்தமிழ் குடியேறிகள், பிரிட்டனில் வாழும் ஈழத்தமிழ் குடியேறிகளுக்கும் பிரயோகிக்கலாமா? 😎

எதுக்கு ஆதாரம் இல்லை ?

அல்ஜிரியாவில் இருந்து பிரான்ஸ் கொண்டுவந்து குடியமர்த்தியவர்கள் யார்?

இந்திய இராணுவம் ஈழத்தை எரித்துவிட்டு கிளம்பும்போது 
கூடவே ஓடி சென்றவர்கள் யார்?

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது 
கூடவே வந்தவர்கள் யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

எதுக்கு ஆதாரம் இல்லை ?

அல்ஜிரியாவில் இருந்து பிரான்ஸ் கொண்டுவந்து குடியமர்த்தியவர்கள் யார்?

இந்திய இராணுவம் ஈழத்தை எரித்துவிட்டு கிளம்பும்போது 
கூடவே ஓடி சென்றவர்கள் யார்?

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது 
கூடவே வந்தவர்கள் யார்? 

அப்போ அமெரிகாவில் இருக்கும் சீனர்கள், வியட்நாமியர், கொரியர், எல்லாம் அமெரிக்காவை சீரழிக்க அல்லவா வேண்டும்?

இல்லையே அவர்கள்தான் அமெரிகாவின் உதாரண குடிகளாக இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

Image

Image

Mounia, mother of the French teenager killed by police, attends a memorial march for her son, Nahel, in Nanterre

The mother of the teenager who was fatally shot by a police officer in France waves a red firecracker above her head as she stands on top of a truck in a crowd of people. Photo credit: Alain Jocard/AFP— Getty Images

👆 இறந்த குற்றவாளி நஹெலின் தாய்.. 👆

நான்சென்ஸ்..... 😂 🤣

👆 உபயம்::: @goshan_che 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அப்படி இல்லை. பிரான்சில் உள்ள சகல வட ஆபிரிக்கரும் ஓட்டு குழுவின் சந்ததிகள் அல்ல.

அப்படி இருந்தாலும் அது பல தசாப்தம் முந்திய நிகழ்வுகள். 

மாத்தையாவின் மகன் புலியில் மாவீரர் என நினைக்கிறேன். 

ஆகவே மூதாதை போலத்தான் சந்ததி இருக்கும் என நினைப்பது நான் மேலே சொன்ன “சாதிய மன நிலை”.

“அவர்கள் அப்படித்தான், நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்”….இப்படி நாம் எமக்குள்ளும், வெளியிலும் மக்களை அணுகுவது போல.

நான் சொல்லவந்த கருத்தை நீங்கள் சரியாக புரியவில்லை என்று எண்ணுகிறேன் ....

சொந்தவாழ்வுக்கு கூடி இருப்பவனையே கொல் என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து 
வளர்த்தவர்கள் யார்? இந்த புத்தியை கற்று கொடுத்தது யார்? கொம்பு சீவியவர்கள் யார்? 

தவிர நீங்கள் சொல்ல வருவது ஏற்றுக்கொள்ள வேண்டியதே 

நான் சொல்ல வந்தது வேறு 
நீங்கள் சொல்வது வேறு 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இல்லை இவற்றை ஒரு சமூக நோயாக கருதி, ஏனைய பிரான்சியர், தமிழர், இந்தியர் போன்றோரிடம் காட்டும் அக்கறையை விட ஒரு படி அதிகம் காட்ட வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக “சோசலில்” வாழும் வெள்ளையின சுதேசிகளுக்கும் இது பொருந்தும்.

இரவு நேரப்பள்ளிகள், தரமான விளையாட்டு மைதானங்கள், இளையோரை நேரத்தை நல்ல முறையில் செலுத்த வைக்கும் டான்ஸ், ஜிம்னாஸ்டிக், லைப்ரரிகள். நல்ல நிலையில் உள்ள ஏனைய பள்ளிகள், இந்த பகுதி பள்ளிகளை தத்தெடுத்தல், இப்படியான செயல்கள்.

அதே சமயம் - மத அடிப்படையிலான இவர்களின் கடும் போக்கு, மூளைச்சலவையில் இருந்து விடுவிக்கும் முயற்சிகள் - இப்படி பலதை, அரசு அக்கறை எடுத்து செய்தால் - ஒரு தலைமுறையை வெளியில் எடுத்தால் - இந்த சங்கிலியை உடைக்கலாம்.

2005 பாரிஸ் கலவரத்தின் பின்னர், சில நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என அறிந்தேன். அதில், புறநகரத்தின் நலிந்த பகுதிகளில் இருக்கும் மாணவர்களை பஸ்கள் மூலம், வளமான பிரதேசங்களுக்கு அழைத்துக் கல்வி வசதிகள் கொடுப்பதும் அடங்கியிருக்கிறது என அறியக் கிடைத்தது.

எதைச் செய்தாலும், அடிப்படையான சட்டத்தை எல்லோருக்கும் ஒரே மாதிரிப் பிரயோகிக்க வேண்டுமென்பதே என் கருத்து. "அவன் நலிந்த பின்புலத்தில் இருந்து வந்தவன்" என்று சட்டத்தை லூசாக்கும் போது, இயல்பாகவே சட்டப் படி ஒழுகி, வரி கட்டிக் கொண்டிருக்கும் சாதாரண குடிமக்களுக்கு ஒரு எரிச்சல் வந்து விடும். இதுவே, அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. பொலிஸ், தாம் குற்றம் செய்தாலும், ஏனையோரை விட வித்தியாசமாக நடத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பல ஆபிரிக்க அமெரிக்கர்களிடம் இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது.

6 minutes ago, Maruthankerny said:

எதுக்கு ஆதாரம் இல்லை ?

அல்ஜிரியாவில் இருந்து பிரான்ஸ் கொண்டுவந்து குடியமர்த்தியவர்கள் யார்?

இந்திய இராணுவம் ஈழத்தை எரித்துவிட்டு கிளம்பும்போது 
கூடவே ஓடி சென்றவர்கள் யார்?

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது 
கூடவே வந்தவர்கள் யார்? 

😂மிகக் குறைந்த தரவுகளை வைத்துக் கொண்டு, மிகப் பெரிய பொதுமைப் படுத்தலைச் செய்கிறீர்களென நினைக்கிறேன்.

உதாரணமாக, ஆப்கானில், உற்றுக் கவனித்தால், தலிபான்களிடமிருந்து தப்ப நினைத்த எல்லோரும் தான் ஓடிவந்தனர் - இவர்கள் எல்லாரும் அமெரிக்கனுக்கு வேலை செய்தோர் என்பது தவறான தகவல். தலிபானுடன் அமைதியாக வாழ, தலிபான்கள் ஒன்றும் மக்கள் நலன் காக்கும் காவலர்களல்ல என்பதை செய்திகள் வாசிக்கும் எவரும் புரிந்து கொள்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

சொந்தவாழ்வுக்கு கூடி இருப்பவனையே கொல் என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து 
வளர்த்தவர்கள் யார்? இந்த புத்தியை கற்று கொடுத்தது யார்? கொம்பு சீவியவர்கள் யார்? 

சொல்லி கொடுத்தோரும் இப்போ இல்லை. அதை கேட்டோரும் இப்போ இல்லை. இருப்போர் 60 வருடத்தின் பின்னானோர்.

ஆனாலும் அந்த குணம் சந்ததி சந்ததியாக கடத்தபட்டு இப்போ சொல்லி கொடுத்தோரின் வாரிசுகளை காவு கேட்கிறது என்கிறீர்கள் நீங்கள்.

இப்படி ஒரு குணம் சந்ததி பாயும் என நான் நினைக்கவில்லை.

19 minutes ago, Maruthankerny said:

இந்திய இராணுவம் ஈழத்தை எரித்துவிட்டு கிளம்பும்போது 
கூடவே ஓடி சென்றவர்கள் யார்?

இவர்களோடு சேர்த்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த பல இலட்சம், இயக்க சம்பந்தமில்லாத ஈழத்தமிழர் அத்தனை பேரையும் - ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அப்போ அமெரிகாவில் இருக்கும் சீனர்கள், வியட்நாமியர், கொரியர், எல்லாம் அமெரிக்காவை சீரழிக்க அல்லவா வேண்டும்?

இல்லையே அவர்கள்தான் அமெரிகாவின் உதாரண குடிகளாக இருக்கிறார்கள்?

இது ஒரு முக்கியமான கேள்வி ....... ஐரோப்பியர்கள் ... ஐரோப்பிய அரசுகள் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.

சீனர்கள் .... ரஷ்யர்கள் 
பலர் இன்று அவர்கள் பூர்விக நாட்டு உளவாளிகளாக இருக்கிறார்கள் 
அது வெறும் சொற்ப எண்ணிக்கைதான் 

அமெரிக்கா எப்படி தனது நாடடை கையாள்கிறது 
ஐரோப்பிய நாடுகளை எப்படி கையாள்கிறது என்பதை 
இனியாவது ஐரோப்பியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

எல்லாமே மூளைசலவையில்தான் தங்கி இருக்கிறது 
அமெரிக்கா என்பது ஒரு நாடு என்ற கோணம் இல்லாமல் 
ஒரு வாழ்க்கை முறைமை என்ற கோணம் இங்கே கற்பிக்க படுகிறது 
நான் இங்கு வர முன்பு இரண்டு வேறு நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன் 
அங்கே என்னை வெளிநாட்டவன் வெளிநாட்டவன் என்று புறம்தள்ளியே வைத்திருந்தார்கள் 
அவர்களுக்கும் எனக்கும் ஒரு இடைவெளியை உருவாக்கி வைத்திருந்தார்கள் 

இங்கே வந்ததும் வெளிநாட்டவன் என்ற உணர்வு இன்றி அமரிக்கன் என்ற உணர்வே உருவாகியது 
அமேரிக்கா என்ற சிர்தார்ந்ததுக்கு யாரும் குறுக்கே நிற்க போவதில்லை ... அதற்கு ஒரு தேவையும் இல்லை 
எல்லோருமே குடியேறிகள் என்பதால் அப்படியொரு எண்ணத்தை  இலகுவாக அவர்களாலும் உள்வாங்க பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

சொல்லி கொடுத்தோரும் இப்போ இல்லை. அதை கேட்டோரும் இப்போ இல்லை. இருப்போர் 60 வருடத்தின் பின்னானோர்.

ஆனாலும் அந்த குணம் சந்ததி சந்ததியாக கடத்தபட்டு இப்போ சொல்லி கொடுத்தோரின் வாரிசுகளை காவு கேட்கிறது என்கிறீர்கள் நீங்கள்.

இப்படி ஒரு குணம் சந்ததி பாயும் என நான் நினைக்கவில்லை.

இவர்களோடு சேர்த்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த பல இலட்சம், இயக்க சம்பந்தமில்லாத ஈழத்தமிழர் அத்தனை பேரையும் - ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியுமா?

இது பற்றி இரண்டு வாரங்கள் முன்பு சிலருடன் ஒரு பெரிய விவாதம் செய்திருந்தேன் 

அவர்கள் எதிர்பார்ப்பு இங்கிருக்கும் கறுப்பின மக்கள் எங்களைப்போல கல்வி கற்று நல்லநிலையில் 
இருக்கவேண்டும் என்பது.

எனது கருத்து இன்னுமொரு 200 வருடங்களுக்கு அது சாத்தியம் இல்லை 
காரணம் அவர்களை அடிமைகளாக வைத்திருந்ததே. அதன் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை 
எல்லோராலும் இலகுவாக புரியமுடியாது.

 (மேலே கூட விசுகு அண்ணா மற்றும் சிலரும் எழுதி இருந்தார்கள் 
நான் எழுத வருவதை ஓரளவு உங்களால் கிரகிக்க முடியலாம் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்) 

எனது உங்களது முன்னேற்றம் என்பதை ....எங்கள் தனிப்பட்ட முன்னேற்றமாகவே பல தமிழர்கள் எண்ணுகிறார்கள் .... மிக எளிதாக கடந்த 3000 வருடமாக எமது மூதையர்கள் எம்மை எவ்வாறு செதுக்கினார்கள் கல்வி என்பது எவ்வளவு உயர்வானது என்பதை 2000 வருடமாக எமக்குள் உந்த படுவதை மறந்துவிடுகிறார்கள்.

மரபுவழி சிந்தனை பார்வை வாழ்க்கை முறைமை என்பதை எளிதாக புறக்கணிக்க முடியாது 
நீங்கள் ஒரு 2 யில் ஒன்றை  வரைந்து அமேசான் காட்டில் வாழும் குடிகளிடம் காட்டினால்   அவர்களுக்கு சில கோடுகள்தான்  தெரியும் . அந்த குடிகளுக்கு நவீன கல்வியை வழங்குவது என்பது எடுத்த எடுப்பில் முடியாதது. 

இது ஒரு நீண்ட விவாதமாக இருக்கும் .....  
முடியும்வரை முயற்சி செய்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

Image

Image

Mounia, mother of the French teenager killed by police, attends a memorial march for her son, Nahel, in Nanterre

The mother of the teenager who was fatally shot by a police officer in France waves a red firecracker above her head as she stands on top of a truck in a crowd of people. Photo credit: Alain Jocard/AFP— Getty Images

👆 இறந்த குற்றவாளி நஹெலின் தாய்.. 👆

நான்சென்ஸ்..... 😂 🤣

👆 உபயம்::: @goshan_che 🤣

இந்த முகத்தில் எங்கே பிள்ளையை இழந்த சோகம் தெரிகின்றது???😭

6 minutes ago, Maruthankerny said:

எல்லோராலும் இலகுவாக புரியமுடியாது.

 (மேலே கூட விசுகு அண்ணா மற்றும் சிலரும் எழுதி இருந்தார்கள் 
நான் எழுத வருவதை ஓரளவு உங்களால் கிரகிக்க முடியலாம் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்) 

எனது உங்களது முன்னேற்றம் என்பதை ....எங்கள் தனிப்பட்ட முன்னேற்றமாகவே பல தமிழர்கள் எண்ணுகிறார்கள் .... மிக எளிதாக கடந்த 3000 வருடமாக எமது மூதையர்கள் எம்மை எவ்வாறு செதுக்கினார்கள் கல்வி என்பது எவ்வளவு உயர்வானது என்பதை 2000 வருடமாக எமக்குள் உந்த படுவதை மறந்துவிடுகிறார்கள்.

மரபுவழி சிந்தனை பார்வை வாழ்க்கை முறைமை என்பதை எளிதாக புறக்கணிக்க முடியாது 
நீங்கள் ஒரு 2 யில் ஒன்றை  வரைந்து அமேசான் காட்டில் வாழும் குடிகளிடம் காட்டினால்   அவர்களுக்கு சில கோடுகள்தான்  தெரியும் . அந்த குடிகளுக்கு நவீன கல்வியை வழங்குவது என்பது எடுத்த எடுப்பில் முடியாதது. 

இது ஒரு நீண்ட விவாதமாக இருக்கும் .....  
முடியும்வரை முயற்சி செய்கிறேன் 

உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இந்த முகத்தில் எங்கே பிள்ளையை இழந்த சோகம் தெரிகின்றது???😭

அதுகும்... இவருக்கு இருந்தது  ஒரு பிள்ளையாம்.
மற்ற தாய்மார் என்றால்... அந்த சோகத்தில் இருந்து விடுபடவே...கனகாலம்  எடுத்திருக்கும். 
இந்த மனிசி அடுத்தநாளே... தெரிவில் நின்று, "பைலா" போட்டுக் கொண்டு நிற்குது.
அவ்வளவும்... மதம் கற்றுக் கொடுத்த வெறி. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்   இவரை பிடித்து உள்ளே   போடவேண்டும் கலவரத்தை   தூண்டினார் என்று ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.