Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-4199.jpg

தண்ணீரில் முதலை இருந்தால் அதன் கால்கள் தண்ணீருக்குள்தான் இருக்கும். ஆனால் சூப்புக்குள் இருக்கும் போது முதலையின் கால் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றது. 

சூப்புக்குள் முதலை எப்படி வந்தது என்று பார்க்கிறீர்களா?  தைவானில் அது சாத்தியமாயிற்று. 

மூங்கில் தளிர், பன்றி இறைச்சி, பேபி சோளம், கரட், காடை முட்டை, கறுப்புக் காளான், எலிமிச்சை எல்லாவற்றுடனும் முதலைக்காலும் சேர்த்துத் தரப்படும் ஒரு சூப் தைவானில் இப்பொழுது கிடைக்கிறது.

அருவருப்பாக இருக்கிறதா? அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் உணவாக அது இருக்கிறது என இந்தச் சூப்பை தயாரிக்கும் விடுதி உரிமையாளர் சொல்கிறார். “முதலை இறைச்சி கொஞ்சம் இறப்பர் தன்மை உடையது ஆனால் கோழி இறைச்சியை விட மென்மையானது. இதைத் தயாரிக்க நீண்ட நேரம் தேவைப்படுகிறது.  முதலையின் காலை நன்றாகச் சுத்தம் செய்து பின்னர் அற்கஹோல், இஞ்சி, உள்ளி, வெங்காயத்தாள் ஆகியவற்றுடன் ஊறவைக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து இரண்டு மணித்தியாலங்கள் சமைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

முதலைக்கால் சூப்பைத் தயாரிக்க அதிக நேரம் எடுப்பதாலும் முதலைக்கால் கிடைப்பது அரிதாக இருப்பதாலும்  தனது விடுதியில் நாளுக்கு இரண்டு சூப்புகள் மட்டுமே தயாரிக்க முடிகிறது என அவர் மேலும் சொல்கிறார். சூப்பின் விலை அதிகம் என்றில்லை. வெறும் 44 யூரோக்கள் மட்டுமே. தைவானுக்குப் போனால் GODZILLA RAMEN சூப் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள்.

https://www.youtube.com/watch?v=_GZiREoAwqU

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kavi arunasalam said:

🐊 முதலைக்கால் சூப் குடித்தால்….
நமது உடம்பின் எந்தப் பகுதிக்கு நல்லது? 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலை மனிதரை விழுங்கிய து அந்தக் காலம்.  மனிதர்  முதலையை பிடித்துஉணவாக்குவது  இந்தக்காலம்  கணக்கு சரி தானே ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நிலாமதி said:

முதலை மனிதரை விழுங்கிய து அந்தக் காலம்.  மனிதர்  முதலையை பிடித்துஉணவாக்குவது  இந்தக்காலம்  கணக்கு சரி தானே ? 😀

ஆனைக்கொரு காலம் வந்தால்…. பூனைக்கொரு காலம் வரும். புரிஞ்சுக்கோ…. புரிஞ்சுக்கோ…
என்று ஒரு பாடல் உள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் நகரத்தில் முதலை இறைச்சி சாப்பாடு விற்கும் உணவு விடுதி ஒன்று உள்ளது.ஆனால் நான் இன்னும் போய் சாப்பிடவில்லை.கிட்டத்தட்ட உடும்பு இறைச்சி மாதிரி இருக்குமாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

நான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் நகரத்தில் முதலை இறைச்சி சாப்பாடு விற்கும் உணவு விடுதி ஒன்று உள்ளது.ஆனால் நான் இன்னும் போய் சாப்பிடவில்லை.கிட்டத்தட்ட உடும்பு இறைச்சி மாதிரி இருக்குமாம்

நான் ஒரு முறை pie சாப்பிட்டிருக்கிறேன்..! முத்தின நாட்டுக் கோழி இறைச்சி சாப்பிடுவது போல இருக்கும்…!😀

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/7/2023 at 03:14, குமாரசாமி said:

நான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் நகரத்தில் முதலை இறைச்சி சாப்பாடு விற்கும் உணவு விடுதி ஒன்று உள்ளது.ஆனால் நான் இன்னும் போய் சாப்பிடவில்லை.கிட்டத்தட்ட உடும்பு இறைச்சி மாதிரி இருக்குமாம்

ஒரு தடவை போய் சாப்பிட்டு ருசியை சொல்லவும்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.